RSS
Showing posts with label அறிவிப்பு. Show all posts
Showing posts with label அறிவிப்பு. Show all posts

11/01/2018

வந்தாச்சு...வரவைச்சிட்டாங்களே...





ஹாய்..அன்பு  நட்பூக்களே.. எல்லாரும் நலம்தானே..
நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை  மீண்டும் சந்திக்கின்றேன்.
எல்லாருக்கும் 2018 ம் ஆண்டு புது வருட வாழ்த்துக்கள்.
வரப்போகும் பொங்கல் (கள்) வாழ்த்துக்களையும் முன்கூட்டியே சொல்லிக்கிறேன்..

நீண்ட நாட்கள் பதிவுகள் ஏதும் எழுதாமல் எழுதுவதால் என்ன எழுதுவது என்றே தெரியவில்லை.

முதலில் என் நன்றிகளை  அன்பான நண்பிகள் அதிரா, அஞ்சுவுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். உண்மையில் நன்றி எனும் வெறும் வார்த்தையால் சொல்லிவிடமுடியாது  இவ்விருவருக்கும்...

""உறவுகளைத்தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு அளிக்கப்படவில்லை. அவர்கள் நீங்கள் பிறக்கும்போதே இறைவனால் தீர்மானிக்கப்பட்டவர்கள். ஆனால் இறைவன் உங்களுக்கு மிக முக்கியமான சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறான். நண்பர்களை அவன் உங்களுக்காகத் தேர்ந்தெடுப்பதில்லை. அந்த உரிமையை உங்களுக்கு விட்டுக்கொடுத்திருக்கான். அந்த உரிமையைப் புத்திசாலித்தனமாப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நல்ல நண்பர்கள் நல்ல பாதைகளில் நம்மை பயணிக்க வைத்து நம் வாழ்க்கையில் நன்மைகளை ஏற்படுத்துவாங்க. நல்ல காலங்களில் மகிழ்ச்சிக்கும், கஷ்டகாலங்களில் உதவிக்கும், ஆறுதலுக்கும் அவர்கள் காரணமாக இருப்பார்கள்....."" (என்.கணேசன்)

உண்மையில் இந்த வரிகள் அதிரா, அஞ்சுவுக்கு நிச்சயமாக பொருந்தும். இப்படித்தான் இவ்விருவரும் இருந்திருக்கிறாங்க. இவ்விருவருக்கும் எவ்வித குறைகளும் இல்லாமல் ,  எல்லாவித செல்வங்களும் பெற்று,  சந்தோஷமாக குடும்பத்தினருடன் நலமோடு இருக்க  இறைவனை வேண்டுகிறேன்.
                               🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பார்கள் அதுபோல அதிராவின் மிரட்டல், உருட்டல்களுக்கு பயந்து வந்திருக்கேன்.  அஞ்சு இப்படி மிரட்டவில்லையெனினும், அன்பாக சொன்னா. இனியும் தாமதித்தால் அவரும் எங்கே கையில் உருட்டு கட்டையை எடுத்துடுவாவோ என்னவோ என யோசித்து வந்துவிட்டேன். ஏனெனில் யாருக்கு செக்ரெட்டரியா  இருக்கா என உலகறிந்த விடயம்.😃
அவர்கள் இருவருடன் சேர்ந்து, தான் ப்ளாக் ல் எழுத ஆரம்பிச்சதும், இளமதியும் மிரட்டத்தொடங்கிட்டாங்க.  இனியும் தாமதித்தால் சரியாகாது என களத்தில் குதித்தாச்சு.
                     இது நான் தைச்சது....cross stich ல் ஒருவகை. மணிகள் வைத்து தைப்பது
                                                   
என் பதிவுகளை வாசித்தும்,கருத்திட்டும் ஆதரவு தரவேண்டுகிறேன். 🙏   முயற்சி செய்து இங்கு வரும் நண்பர்களின் பக்கமும் சென்று கருத்திட நினைக்கிறேன்.

 நான் செய்த பூந்தி லட்டு.. சாப்பிட்டுவிட்டுச் செ(சொ)ல்லுங்க....


11/03/2016

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி.

இளையநிலா தளத்தில்  மரபுகவிதை,வெண்பா புனைந்து குறுகிய காலத்தில் நிறைய நட்புகளின் அன்பையும், நட்பையும் சம்பாதித்தவர் இளமதி. பிரான்ஸ் பாட்டரசர் கி. பாரதிதாசன் ஐயாவின் மாணவியாவார்.

இவரின் வாழ்வில் ஏற்பட்ட பெரும் துயரம் அவரது கணவர் விபத்தொன்றில் சிக்கி கடந்த 14 வருடமாக கோமா நிலையிலிருந்தமை. இந்நிலையில் இளமதியின் கணவர் கடந்த திங்கட்கிழமை சிவராத்திரி அன்று இறையடி சேர்ந்தார். 
அன்பு நண்பி இளமதியின் கணவரது ஆன்ம சாந்திக்காகவும், நண்பி இளமதி மீளாதுயரத்தில் இருந்து விடுபட்டு மீண்டு வரவேண்டும் என  எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்...



 அன்னாரின் அஞ்சலி நிகழ்வுகள் வெள்ளி(இன்று) 11.03.16 அன்று நடைபெறுகின்றது.

07/10/2015

பதிவர் திருவிழா.. இது எங்கள் விழா...

ஊரில் கோவில் திருவிழா வருகிறதென்றால், கோவில் சுற்று வட்டாரத்திலும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும், மிக உற்சாகமாக அனைவரும் தத்தம் வீடுவாசல்களை துப்பரவாக்குவதில் ஆரம்பித்து வாழை, மாவிலை தோரணங்கள் கட்டி அலங்கரித்து ஊரே களைகட்டும். 
அந்த மாதிரி உணர்வுதான் எனக்கு, இவ்வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா பற்றிய பதிவுகள் ஆரம்பித்தலிருந்து ஊற்றெடுக்கிறது.

புதுக்கோட்டையில் நான்காவது வலைபதிவர் திருவிழா வருகின்ற 11-10- 15 அன்று வலைப்பதிவர் வரலாற்றிலே முற்றிலும் வேறுபட்டு புத்துணர்வோடு நடைபெற உள்ளது.
இதுவரை அனேகமான  வலைப்பக்கங்களில் உற்சாகம், மகிழ்ச்சி பரவசம் என இனம்புரியாத உணர்வுகளை காணக்கூடியதாக இருக்கு.  இது "எங்கள் விழா" வாக நடைபெறுவது மட்டற்ற மகிழ்ச்சி.


என்னைப்போன்று வெளிநாட்டில் வாழும் பதிவர்கள் கலந்துகொள்ளமுடியாது போகின்றதே என்ற வருத்தம் இருந்தாலும், மனம் முழுதும் அங்குதான் இருக்கின்றது.

விழா நடைபெற 3நாட்கள் இருக்கின்ற இத்ததருணத்தில் அவ்விழாவினை சிறப்பாக நடாத்த‌வேண்டும் என இரவுபகல் பாராது உழைக்கும் அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
விழா சிறப்பாக நடைபெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
இம்முறை பதிவர்விழாவில் தமிழ்வலைப்பதிவர் கையேடு2015 ஒன்றும் வெளியிட்டு விழாவுக்கு வருபவர்களுக்கு இலவசமாக (விழாவுக்கு வருபவர்களுக்கு மட்டுமே இலவசம்.) கொடுக்க இருக்கிறார்கள்.

இவ்வலைப்பதிவர் விழாவில் பதிவர்களை மேலும் உற்சாகமூட்ட போட்டிகள் இருக்கின்றன. பரிசுகளும் உண்டு. போட்டிகள் முடிவடைந்துவிட்டபோதிலும், அப்போட்டிக்கு வந்த‌ படைப்புகளை வாசித்து, உங்களுக்கு பிடித்தமானதை தர வரிசையில் தேர்வு செய்து அனுப்பி பரிசில்களை வெல்லலாம்.

9.10.2015 நாளே அனுப்பவேண்டிய இறுதிநாளாகும்.

வாசியுங்கள்.!! அனுப்புங்கள்..!! பரிசினைத் தட்டிச் செல்லுங்கள்..!!

01/07/2015

சந்தோஷப்பூக்கள்!!

இவைகள்தான் எங்கள்வீட்டில் பூத்துக்குலுங்கும் பூக்கள்.









                   இவர்கள் எல்லாருமே புதுவரவு....



இங்கு பாடசாலை கோடைகாலவிடுமுறை ஆரம்பமாகிவிட்டது. நாங்களும் சுற்று(ஊர் உ)லாவுக்கு பயணமாகின்றோம்.சிறிய இடைவேளைக்கு பின்பு உங்கள் எல்லோரையும் சந்திக்கின்றேன்.


                                      நன்றிகள்

21/06/2013

நன்றிகள்

நன்றிகள்

"இளையநிலா " இளமதி அவருடைய பிளாக்கில் அறிமுகப்
படுத்தியிருக்கிறார்கள்.

இந்த அதிர்வலைகள் நீங்க முன்னமே "சமைத்து அசத்தலாம்" ஆசியா அவர்கள் என்னை எதிர்பாராத வகையில்  "வலைச்சரத்தில்"அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் .

இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் .

                                                 

இத்தகவலை அறியத்தந்த திரு .தனபாலன் சார் அவர்கட்கும்,
ஆசியா ,கோபு அண்ணா, இளமதி ஆகியோருக்கும் என் இதயபூர்வமான நன்றிகள் .நன்றிகள்  

Thankyou from 123gifs.eu


Thankyou from 123gifs.eu
                               
 . **************************************************

 சமீபத்தில் வந்தபாடலில் எனக்கு பிடித்த பாடல் :​




                                                       

28/08/2012

நன்றிகள்

 தங்கள் இணையப்பக்க முகப்பில் எனக்கு வாழ்த்துக்கள் கூறிய
அதிராவுக்கும்,
அஞ்சுவுக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்,நன்றிகள்



                           

.

அதிராவின் ப்ளாக் (என்பக்கம்),அஞ்சுவின் ப்ளாக் (காகிதப்பூக்கள்)மற்றும் என் ப்ளாக்கிலும்  வாழ்த்துகள் கூறிய  அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.



************************************************** வாழ்த்திய அனைவருக்கும் பிடித்தமான ஸ்நாக்ஸ் எடுத்துக்கொள்ளுங்கோ.

                                       
                                          B,day அன்று செய்தவை.





இது நான் அஞ்சுவின் ரெசிப்பியான குணுக்கு பார்த்து செய்தது.
நன்றி அஞ்சு.



                                       
இந்த பாடல் அதிராவுக்காக‌............

                           



                   




                                                  
 
Copyright பிரியசகி