RSS

22/02/2018

வாழ்த்துக்கள் ஆஷாபோஷ்லே அதிரா

எங்கள் அன்பு நண்பி, அன்புடன் செல்லமாய் பூஸார் என அழைக்கப்படுபவரும்,  புலாலியூர்  பூசானந்தா,  ஆஷாபோஷ்லே அதிராகீரைவடை,  கத்தரிகாய் தொக்கு புகழ்  மாஸ்டர் செப் அதிரா  என இன்னும் பல பட்டப்பெயர் சூட்டிக்கொண்டும்,  பல  வருடமாக தேம்ஸ் ல் பாய்கிறேன், குதிக்கிறேன் என அடிக்கடி சொல்லி பயமுறுத்தி, பயப்படுத்தி (எங்களை) வெருட்டிக்கொண்டு இருப்பவரும், முருகனுக்கு, வள்ளிக்கு, வைரவருக்கு என கடவுளாரையும் விட்டுவைக்காமல் வைர அட்டிகை, வைரமாலை, பச்சை கல் மோதிரம் தாறேன் என நேர்த்தி வைத்து இன்னும் அதை அவங்களுக்கு கொடுக்காமல் ஏமாற்றி கனடா, நியூயோர்க் என ஓடி ஒளிந்துகொண்டு  அட்டகாசம் செய்யும் அழகான (இன்றுவரை ஸ்வீட் ஸிக்ஸ்டீன் என சொல்பவர்) அதிரா வுக்கு இன்று பிறந்தநாள்.       .
       🎈🎉அன்பு அதிராவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் .🎂 🎉  

என்றும் மகிழ்ச்சியுடனும், நல்லாரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகின்றோம்
   



  
இந்த குட்டிபாப்பாவை தைத்து முடித்ததும் எனக்கு அதிரா அடிக்கடி சொல்லும் பேபி அதிராதான் ஞாபகம் வந்தா. இது நான் முதலே தைத்தது. 2நாளில் தைத்து முடித்து விட்டேன்.

இந்த மாதிரியான காட் card செய்வது இதுதான் முதல் தடவை. பழைய பி.நாள் card ல் வந்த டெடியை வெட்டி ஓட்டினேன். நன்றி அஞ்சு. (முன்னோடி அஞ்சுதான்.)

*******************************************************
 நானும் இப்படித்தான் செய்வேன் அதிரா மியாவ்....

*******************************************************

57 comments:

  1. நான்தான் firstttttt

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்.. நீங்கதான் பர்ஸ்ட் டூஊ. வாங்க.

      Delete
    2. ஹலோ மிஸ்டர்:) 1ஸ்ட்டூ இருக்கட்டும் என் கிஃப்ட்ட்டூ எங்கே?:)

      Delete
  2. /ஏமாற்றி கனடா, நியூயோர்க் என ஓடி ஒளிந்துகொண்டு//அப்புறம் அவங்க முன்வீட்டு 6 அடி மரம் :) அதிலும் பூஸ் அடிக்கடி ஒளியரங்களாம்

    ReplyDelete
  3. cross stitched card செம கியூட்டா இருக்கு ப்ரியா .எனக்கும் ஆசை முந்தி வாங்கி வச்சது செய்யணும் .நீங்க இதை frame போலவும் செய்யலாம் அழகா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அஞ்சு. நான் இது ரெம்ப விரும்பி தைத்தேன். அதில சைட்டில போடர் தைக்கனும்.இன்னும் இல்லை. அப்படியே வைத்திருக்கேன். உங்க ஐடியாவும் நல்ல இருக்கு.செய்து பார்க்கிறேன். நன்றி

      Delete
  4. ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ் இங்கும் வாழ்த்தோ மீ பெஇண்டிங்ங்ங்ங்:) எனக்கு ஆராவது சுட்டாறிய தண்ணி தெளிச்சு எழுப்புங்கோ:)....
    ஹா ஹா ஹா மிக்க நன்றி அம்முலு நன்றி... கொஞ்சத்தால வருகிறேன்ன்ன்..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பர்த்டே பேபி. நீங்க ஆறுதலா மயக்கம் தெளிஞ்சு வாங்க. ஹா..ஹா.

      Delete
  5. தொடக்கம் வாழ்த்துவதுபோல் இருக்கத்தான் செய்கிறது இருப்பினும் இதில் ஏதும் உள்குத்து இல்லை என்று நம்புவோமாக....

    எனது இனிய வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. அட நீங்க வேற . அது அவங்கட குணாதிசயங்களை சொல்லி வாழ்த்தினேன். மன்னரை பற்றி சொல்லி வாழ்த்தி கவிஞர்மார் பொற்கிழி வேண்டுவினமெல்லோ. அது மாதிரி வாழ்த்தியிருக்கேன். அவ்வளவுதான்..

      மிக்க நன்றி வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் அண்ணா ஜீ.

      Delete
    2. என்னாது உள்குத்தோ?:) ஹையோ கில்லர்ஜி திரியைக் கொழுத்திப் போட்டிட்டார்ர்:).. இதைக் அக்ண்டு பிடிக்காமல் இந்தப் புயல் ஓயாதூஊஊஉ:))

      Delete
  6. வாவ் !! அழகா இருக்கு reused டெடி :)
    இன்னொரு குட்டி ஐடியா .டெடியை வெட்டிட்டு அதன் ஓரத்தை டிம் ஹோல்ட்ஸ் tim holtz ஸ்டாம்பால் பஞ்சு வச்சி லேசா துடைச்சா வெட்டுன அடையாளமே தெரியாது இதை distressing னு சொல்வாங்க .சூப்பரா அழகா இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஓ..அப்படியா. இது எனக்கு தெரியாதே. வெட்டினது அவ்வளவு நீட் ஆ இல்லைதான். நான் பழைய கார்ட்ஸ் இருந்தது.என்ன செய்வது என தெரியாமல் முன்பக்கம் அழகா இருப்பதை வெட்டி எடுத்து வைத்திருக்கேன். இனி இப்படி செய்கிறேன் அஞ்சு. நன்றி.

      Delete
    2. அஞ்சு சொன்னது போல டெடி கார்ட் ரொம்பவே அழகா இருக்கு பிரியா! அந்தப் பூக்கள் வ்வ்வாவ்... அதன் இதழ்கள் நல்ல வடிவாய் இருக்கு. வெட்டுவதற்குக் கருவி வைத்திருக்கிறீங்களோ? ஒரே அளவாய் நேர்த்தியாய் இருக்கு.
      உங்களிடமும் கைவேலைச் சாமர்த்தியம் நிறையவே இருக்கு.
      சகலகலா வல்லிதான் நீங்கள். வாழ்த்துக்கள் பிரியா!

      Delete
    3. ம்க்கும்...நான் வெட்டப்பட்டபாடு எனக்குதான் தெரியும்.பொறுமையாய் வெட்டினதே போதும் என்றாகிவிட்டது. 2,3 பேப்பர் வீணாகிவிட்டது.
      மிக்க நன்றி இளமதி மீள்வருகைக்கும்,கருத்துக்கும்.

      Delete
  7. வெஜ் ரோல்ஸ் நல்லா இருக்கு ப்ரியா .ஆனா நான் தோசை சுடறதில் தான் தப்பு விடறேன் .fillings வச்சதும் லேசா உடையது .உங்க தோசை நீட்டா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. ஓ.. அது நீங்க கரைக்கும்போது மிடிலா மா இருக்கனும். எனக்கும் ஆரம்பத்தில் இப்படித்தான். கொஞ்சமா கறி வைச்சால் நல்லது. நான் இது சோயாமீற், லீக்ஸ்,காரட்,வெங்காயம்,ப,மிளகாய் 2 அவித்த உருளை. இவ்வளவும்தான். சோயாமீற் சின்னதா கட் செய்து பொரித்தெடுத்து கறி வைங்க.
      மிக்க நன்றி அஞ்சு வருகைக்கும், டிப்ஸூக்கும்,வாழ்த்துக்கும்.

      Delete
    2. பிறந்தநாள் பார்ட்டிக்குள்ள யார்ராது தோசையை வைத்தது

      Delete
    3. அப்பூடிக் கேளுங்கோ மேஜரே:) ஆங்ங்ங் அதானே? பிரியாஆஆஆஆஆணி:) எங்கேஏஏஏஏஏ?:)

      Delete
    4. பார்ட்டிக்குள்ள இதெல்லாம் சகஜம் சீராளன். ஏனென்றா அங்கு போய் வைத்திருக்கும் ஸ்நாக்ஸ் யார் செய்தது என கேட்டு,ரெசிப்பியெல்லாம் கேட்கப்படும். ஹா..ஹா..

      Delete
  8. வணக்கம் பிரியா!.. அடடா... விழித்த கண் மூட முடியவில்லை. வியப்பிலாழ்த்திவிட்டீர்கள்!
    இருங்கோ அதிராவை வாழ்த்தீட்டு வாறன்...🤗

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாழ்த்துங்கோ இளமதி இன்றைக்கு அதிரா வானத்தில்..பறக்கிறா..

      Delete
  9. அன்பு அதிரா!..

    ஊரே திரண்டு உமைவாழ்த்தி நிற்கிறதே!
    சீரோடு வாழ்க சிறந்து!💐

    இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அதிரா!

    உள்ளம் மலர உவகை பெருக்கெடுக்கத்
    துள்ளி மகிழ்வீர் தொடர்ந்து!😊

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ் இளமதி உண்மையில் இன்று மடைதிறந்த வெள்ளம்போலாகிட்டுது மனசு.... மிக்க.. மிக்க நன்றி.

      Delete
  10. அன்புப் பிரியா அளித்த பதிவினை
    என்னென்பேன்! எல்லாம் இனிது!👌

    அதிராக்கு வாழ்த்திட்டு அத்தோடு சேர்த்த
    புதியகைவே லை,சிறப் பு!....👍

    பிரியா!..அசத்தீட்டீங்க அழகான பதிவிட்டு.
    தையல் வேலை உங்களின் பொறுமைக்கு நல்ல சான்று!
    வாழ்த்து அட்டை பற்றிச் சொல்ல வார்த்தையில்லையே....:)
    சிறந்த நண்பியின் பிறந்தநாளுடன் சேர்த்த நல்ல பதிவு மிக அழகு!

    உங்களோடு சேர்ந்து அதிராவுக்கு இன்னொரு வாழ்த்து....

    யாவர்க்கும் நல்லாள், இனியாள்! பதிவுலகில்

    யாவரும் போற்றும் குணத்தாள்! - அவனியில்
    யாவையும் கற்றாள்! அதிரா வலையுலகின்
    தேவதைதான்! வாழ்த்துகிறேன் சேர்ந்து!

    நன்றியுடன் வாழ்த்துக்கள் பிரியா!

    ReplyDelete
    Replies
    1. ///அதிராவுக்கு இன்னொரு வாழ்த்து....

      யாவர்க்கும் நல்லாள், இனியாள்! பதிவுலகில்

      யாவரும் போற்றும் குணத்தாள்! - அவனியில்
      யாவையும் கற்றாள்! அதிரா வலையுலகின்
      தேவதைதான்! வாழ்த்துகிறேன் சேர்ந்து!///

      ஹையோ மீ ஃபிரீஸ் ஆகிட்டேன்ன்ன்ன்ன்:)).. சே..சே.. இதை என் செக்:) படிக்காமல் போயிட்டாவே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. திரும்ப திரும்ப நன்றி சொன்னாலும் போதாது மிக்க நன்றி இளமதி...

      Delete
    2. மிக்க நன்றி இளமதி என்னையும் வாழ்த்தி சிறுகவியும் கூடவே..
      நீங்க கவிவரியில் அதிராபற்றி சொன்னது எல்லாமே உண்மையே.
      அதிராவைப்பார்த்து கற்கவேண்டும். மிக்க நன்றி இளமதி.

      Delete

  11. அதிரா உங்களுக்கு 61 வயது ஆனாலும் இன்னும் பதினாறாக நினைத்து வாழும் உங்களை இன்று போல என்றும் வாழ்க என வாழ்த்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. இவருக்கு டிமென்ஷியா ஸ்ராட் ஆகிட்டுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எப்பவுமே குரான்போல படிக்கிறார் ஹையோ ஹையோ..

      ஹா ஹா ஹா மிக்க நன்றி ட்றுத்.. இனிமேலாவது இடமிருந்து வலமாகப் படிச்சுப் பழகவும்:)) ஹையோ ஹையோ:)..

      Delete
    2. வாங்கோ ட்றுத். உங்க வாழ்த்துக்கும்,வருகைக்கும் மிக்க நன்றி.

      Delete
  12. ஹையோ நான் இங்கு வர லேட்டாகிட்டுதே.. குறை நினைச்சிடாதீங்க.. எங்கள்புளொக்குக்கு இன்று இரவுக்குள் பதில் போட்டிட வேணும் என்பதால் முதலில் அதனை முடிச்சேன்.... இப்போதான் லாஅண்டட் ஆகிறேன்ன் வழி விடுங்கோ வழி விடுங்கோ அதாரது குண்டா குறுக்கே நிக்கிறது:))

    ReplyDelete
    Replies
    1. ஹலோவ் மியாவ் :) யாரும் குறுக்க வரலை அது நீங்கதான் ..ட்ரெஸ்ஸிங் டேபிள் முன்னாடி நின்னுகிட்டு உங்களையே அடையாளம் தெர்லயா :))))

      Delete
    2. இன்றைக்கு மட்டும் உங்களை மன்னிச்சு. ப்ர்த்டே பேபியெல்லோ.

      Delete
  13. ///அன்புடன் செல்லமாய் பூஸார் என அழைக்கப்படுபவரும், புலாலியூர் பூசானந்தா, ஆஷாபோஷ்லே அதிரா, கீரைவடை, கத்தரிகாய் தொக்கு புகழ் மாஸ்டர் செப் அதிரா என இன்னும் பல பட்டப்பெயர் சூட்டிக்கொண்டும், பல வருடமாக தேம்ஸ் ல் பாய்கிறேன், குதிக்கிறேன் என அடிக்கடி சொல்லி பயமுறுத்தி, பயப்படுத்தி (எங்களை) வெருட்டிக்கொண்டு இருப்பவரும், முருகனுக்கு, வள்ளிக்கு, வைரவருக்கு என கடவுளாரையும் விட்டுவைக்காமல் வைர அட்டிகை, வைரமாலை, பச்சை கல் மோதிரம் தாறேன் என நேர்த்தி வைத்து இன்னும் அதை அவங்களுக்கு கொடுக்காமல் ஏமாற்றி கனடா, நியூயோர்க் என ஓடி ஒளிந்துகொண்டு அட்டகாசம் செய்யும் அழகான (இன்றுவரை ஸ்வீட் ஸிக்ஸ்டீன் என சொல்பவர்) அதிரா வுக்கு இன்று பிறந்தநாள். ///

    ஹா ஹா ஹா இதில் எதை விடுவது எனத் தெரியாமல் ஒட்டு மொத்தமா கொப்பி பண்ணிட்டேன்ன்:)).. ஆஹா ஆஹா.. இவற்றை நான் மறந்தாலும் நீங்க எல்லோரும் மறவாமல் நினைவு படுத்தி என்னை பப்பா மரத்தில ஏற வச்சிடுவீங்க:)) ஹா ஹா ஹா இந்த அன்புக்கு நன்றி அம்முலு...

    ReplyDelete
    Replies
    1. எதை மறப்பது.. அறுசுவையில் ஆரம்பித்து இத்தனை வருடமா பழகி, படிச்சு வைச்சிருக்கிறமல்லோ. ஹா..ஹா...

      Delete
  14. அதிராவிற்கு முதலில் இனிய பிறந்த நாள் வாழ்த்தை இங்கும் சொல்லிக்கிறேன். வாழ்க வளமுடன்!

    அம்மு நீங்கள் செய்த பாப்பா அழகான குட்டிபாப்பா. நானும் கண்மேட்டி பின்னுவேன். நிறைய டிசைன் வரைந்து இருக்கிறேன்.

    பிறந்த நாள் அட்டை அழகு. கைவேலை அருமை.
    உணவு வகைகள் மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ் மிக்க மிக்க நன்றிகள் கோமதி அக்கா.

      Delete
    2. வாங்க அக்கா..ஓ.. நீங்களும் தைப்பீங்களா. கண்மேட்டி இது புது பெயரா இருக்கு. தமிழ் சொல்லா..?
      மிக்க நன்றி அக்கா வருகைக்கும்,வாழ்த்துக்கும்.

      Delete
  15. யாவர்க்கும் நல்லாள், இனியாள்! பதிவுலகில்

    யாவரும் போற்றும் குணத்தாள்! - அவனியில்
    யாவையும் கற்றாள்! அதிரா வலையுலகின்
    தேவதைதான்! வாழ்த்துகிறேன் சேர்ந்து!//

    இளமதி, அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அக்கா.

      Delete
    2. உங்கள் ரசனையையும் வாழ்த்தினையும் கண்டு உள்ளம் சிலிர்க்கிறது அக்கா!... மிக்க மிக்க நன்றி!

      Delete
  16. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அதிரா என்றும் 16 ஆக இருந்து பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் வாழ்க நலம் !

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் மேஜரே... உங்கள் அன்பு நெகிழ வைக்குது..

      Delete
    2. மிக்க நன்றி சீராளன் வருகைக்கும்,வாழ்த்துக்கும்.

      Delete
  17. //இந்த குட்டிபாப்பாவை தைத்து முடித்ததும் எனக்கு அதிரா அடிக்கடி சொல்லும் பேபி அதிராதான் ஞாபகம் வந்தா///

    ஆவ்வ்வ்வ் உண்மையில் மிக அழகு.. எப்படி கலர் பண்ணிட்டு தைப்பீங்களோ? அவுட்லைன் போட்டு விட்டா ஆரம்பிப்பீங்க?

    நான் அது ஓல்ட் லேடி என நினைச்சேன் அவசரத்தில:) ஹா ஹா ஹா.. பிரித்தானிய ஓல்ட் லேடீஸ் இப்படித்தானே மெக்கப் போட்டு வெளிகிடுவினம் நம் குயின் அம்மம்மாவைப்போல:)..

    ReplyDelete
    Replies
    1. அவுட்லைன் போடுவதில்லை. சதுரங்கள் கணக்கு எடுத்து தைக்கவேண்டும்.
      கர்கர்கர்கர்........ அது குட்டியான முகம். உங்களுக்கு அப்படி தெரிகிறது.
      ஒருவேளை அஞ்சு சொல்லுமாப்போல உங்களுக்கு வயதாகிட்டு போல..ஹா..ஹா....

      Delete
  18. கார்ட் மிக அருமையாக செய்திருக்கிறீங்க. ரோல்ஸ் கொஞ்சம் இன்னும் நீட்டா சுத்தியிருக்கலாம்.. உருளைக்கிழங்கு நன்கு மசிபடாட்டிலும் அங்கங்கு மா வீங்கிடும்... ஓரங்கள் கொஞ்சம் இறுக்கமாக மடிக்கோணும்... பட் ஓல் ஓவர் எல்லாமே மிக அருமை.... மிக்க மிக்க நன்றிகள் அம்முலு... எல்லோரும் சேர்ந்து என் பிறந்தநாளை மிகச் சிறப்படைய வச்சிட்டீங்க மிக்க நன்றிகள்..

    ReplyDelete
    Replies
    1. கர்கர்கர்கர்.... நான் செய்தது சோயாமீற் என சொல்லியிருக்கேன் அஞ்சுவுக்கு.. சோயாவை மசிக்கமுடியாது. உருளைக்கிழங்கு செய்தால் இங்கு பிடிக்காது. சும்மா சாட்டுக்கு ஒன்றை அவித்து நல்லா மசித்து போட்டிருக்கேன். இது மா கொஞ்சம் தண்ணியாகிவிட்டது.
      மிக்க நன்றிகள் அதிரா. உங்க பிறந்தநாள் பார்ட்டிகளில் பிசியாகி அங்குமிங்கும் ஓடிஓடி களைத்து இங்கும் வந்து கொமண்ட் போட்டமைக்கு மீண்டும் நன்றிகள்.

      Delete
  19. ஆஹா அருமை...மீண்டும் ஒரு வாழ்த்துக்கள் அதிரா பேபிக்கு...

    card ம்,cross stitch ம் சூப்பரா இருக்கு...

    ரோல் வாவ்..இன்னும் நான் இதுபோல் தோசை சுட்டு ரோல் செஞ்சது இல்ல ...செஞ்சு பாக்கணும் ..

    அதிரா குறிப்புகளை பத்திரமா சேர்த்து வச்சிருக்கேன்..



    ReplyDelete
    Replies
    1. வாங்க அனு. செஞ்சு பாருங்க சீக்கிரமா.. நல்லாயிருக்கும்.
      வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அனு.

      Delete
    2. ஆஆஆவ்வ்வ் மிக்க நன்றிகள் அனு.. என்னது என் குறிபுக்களை சேர்த்து வச்சிருக்கிறீங்களோ:) செய்யும்போது சொல்லிடுங்கோ:) மீ அவசரமா அமெரிக்கா போகோணும்:)) ஹா ஹா ஹா.

      Delete
  20. இப்ப போய், 'ஹப்பி பேத்டே,' என்றால் பூஸ் கடிக்க வரப் போறார். ;)

    காட் வடிவா இருக்கு. வெட்டுக் குத்துத் தையலும் நல்ல வடிவா இருக்கு ப்ரியா.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ இமா.. மிக்க நன்றி.

      Delete
  21. பிரியசகிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றி மனோக்கா.

      Delete

 
Copyright பிரியசகி