RSS

07/06/2020

சமைத்து அசத்தலாமே...

சமையல்ராணிகளின் உணவுகுறிப்புகள்...

பிஞ்சு கமக்கார அதிரா செய்து பார்த்து நல்ல ருசியா இருந்ததென சொல்லி அவரின் ப்ளாக் ல் பதிவிட்டிருந்தா சொக்லேட்மாபிள் கேக்.  நானும் செய்துபார்த்தேன் சூப்பரா இருந்தது. உண்மையில் மிகவும் மென்மையா பஞ்சுமாதிரி soft ஆ இருந்தது. நான் எண்ணெய் சேர்க்காமல் பட்டர் butter தான் சேர்த்தேன். அத்துடன் பனானா பிரட் கேக்கினையும் செய்தேன்.  

என் வோட்(Vote) Chocolate marble cake கிற்கே. ஏனெனில் என் கணவர் கேக் ஒருபோதும்  விரும்பி சாப்பிடமாட்டார். பொதுவா இனிப்புவகைகளை விரும்பி உண்பவர் இல்லை. அதற்காக சாப்பிடுறதே இல்லை எனவும் சொல்லவில்லை.  ஆனா இந்த மாபிள் கேக்கின் அட்ராக்‌ஷனோ என்னவோ தெரியாது, நான் கொடுக்க, சாப்பிட்டுவிட்டு நல்லாயிருக்கு என்று வேறு சொல்லி, இரவு உணவுக்கு பின்னரும் ஒரு பீஸ் சாப்பிட்டார். ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.  நானும் ,மகனும் ஷாக் ஆயிட்டோம். ஆனா காட்டிக்கொள்ளவில்லை. ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்தோம்.

இதோ பிஞ்சு கமக்கார அதிராவின் குறிப்பிலிருந்து.......











இது Banana Bread Cake. இதுவும் நன்றாகவே இருந்தது. வனிலா எசன்ஸ் சேர்த்தேன். வாழைப்பழம் + Vanilla essence இரண்டினதும்  flavour super combination. இரண்டும் அருமையா இருந்தது.நன்றி அதிரா.





*******************************************************
தேவதையின் சமையல்......

இனி அஞ்சுவின் தட்டு தோசை.  இது  மிகவும் நன்றாக இருந்தது.. எங்க வீட்டில் தோசை என்றால் 3 நேரம் கொடுத்தாலும் சாப்பிடுவார்கள். நான் தோசைக்கல்லிலேயே வார்த்தேன்.
சம்மந்தி சட்னியும் கூடவே செய்து சாப்பிட்டாச்சு. ஆனா சட்னி என்பதை விட எனக்கு அதை பார்க்க இடி சம்பல் மாதிரி இருந்தது. நல்ல ருசியாக இருக்கு. உளுந்து, க.பருப்பு வாசனையுடன் தேங்காயும் சேர்த்தரைத்தது சூப்பர்.





இந்த மாவில் இட்லி சுட்டால் என்ன என எண்ணம் வரவே உடனே இட்லியும் சுட்டாச்சு.. வாவ்... சூப்பரா பஞ்சு போன்ற இட்லி வந்தது. இந்த ரெசிபியிலும் இட்லி செய்யலாம். தாங்ஸ் அஞ்சு.



*************************************************
இதுதான் நான் இம்முறை வெயிலின் போது வைத்தது. மோர்மிளகாய். அத்துடன் சிவப்பு பழமிளகாயும் கிடைக்க அதையும் காயவைத்தாயிற்று.




***************************************************

நாங்கள் கடந்த டிசம்பரில் சிங்கப்பூருக்கு போயிருந்தபோது  இந்த அகர் அகர் எனப்படும் கடல்பாசியை வாங்கி வந்தேன். ஒருநாளும் இதில் இப்படி செய்து பார்த்ததில்லை. வெயில் நேரம் இப்படி கடந்த வாரம் செய்து சாப்பிட சூப்பரோ சூப்பர். செய்வதும் ஈசி.  நிறைய குறிப்புகள் யூடியூப்பில் இருக்கு. இது என் மச்சாள் சொன்னதை கேட்டு செய்தேன். அனேக முறைகள் ஒரேவிதம்தான்.

1. முதலில் கடல்பாசியை தண்ணீரில் 2தரம் சுத்தம் செய்து அரைமணித்தியாலம் தண்ணீரில் ஊறவிடவேண்டும். பின் கடாயை அடுப்பில் வைத்து தண்ணீர் கொதிக்கவைத்து (10 கிராம் எனில் 2 கப் தண்ணீர்) அகரை போட்டு நன்றாக கரையும் வரை காய்ச்சவும்.

2.அகர் கரைந்தபின் 1லிட்டர் பாலை விட்டு கொதிக்கவிடவும். அதனுள் வனிலா எசன்ஸ்(விரும்பினால்) விட்டு பின் கொதித்து வர அடுப்பை சிம் ல் வைத்து, அதில் பாதியை எடுத்து ஒரு கிண்ணத்தில் விட்டு விரும்பிய கலரை விட்டு கலந்து ப்ரீஸரில் 10 நிமிடம் வைக்கவும்.  அது செட் ஆகும்வரை மற்றைய மிகுதி அடுப்பிலேயே சூட்டில் இருக்கனும்.

3. 10 நிமிடத்திற்கு பின் செட் ஆனதை எடுத்து வைத்து, பின் மிகுதி இருக்கும் அகரை விரும்பினால் வேறு கலரை சேர்த்து, செட் ஆகிய அகரின் மேல் ஒரு கரண்டிபிடித்து அக்கரண்டியின்மேலேயே ஊற்றவேண்டும். எல்லாம் விட்டபின் இதனை சாதாரண ப்ரிட்ஜில் 4,5 மணித்தியாலம் வைத்து எடுக்கவும். விரும்பிய வடிவில் வெட்டி சாப்பிடவேண்டியதுதான்.

பின்குறிப்பு>> 3கலர் சேர்ப்பதாயின் 2வது கலர் சேர்த்தபின் முதல் தரம் மாதிரியே இதையும் ப்ரீஸரில் 10 நிமிடம் வைத்து எடுக்கவேண்டும். 3வது கலர் சேர்த்தபின் நோர்மல் ப்ரிட்ஜில் வைக்கவேண்டும்.

இந்த அகர் அகர் இங்கு எங்க supermarket ல் கிடைக்கிறது.




இதில் ரோஸ்மில்க் அகர், ப்ளெயின் அகர் 


இந்த மூவர்ண அகரில் சின்னச்சின்ன பபிள்ஸ் வந்திருக்கு. அப்படி வரக்கூடாதாம்.  அப்படி வந்தால் இரண்டும் சேராமல் பிரிந்து தனித்தனியாக வந்துவிடும். ஆனா எனக்கு எல்லாக்கலரும் நன்றாக பொருந்திபோயிருந்தன.. நான் முதலில் ரோஸ்மில்க் அகர்,  பின் ப்ளெயின் அகர், பின் க்ரீன் கலர் அகர் என சேர்த்தேன்.



****************************************************
இங்கு மரவள்ளிகிழங்கு நல்ல கிழங்காக கிடைப்பது அரிது. அதனால் நான் வாங்குவதேயில்லை. நீண்டகாலத்தின் பின் கிடைத்த கிழங்கினை  டுபாய் பூசணியோடு காரக்கறி வைத்தேன்.
இந்த  பூசணி என் மகனுக்கு சின்னனில் இருந்து சரியான விருப்பம். வெட்டிக்கொண்டிருக்கும்போதே கண்டார் எனில் சும்மாவே எடுத்து  சாப்பிடுவார். அவருக்கு அப்போ பெயர் சரியா சொல்லவராது.  சுபாபூசணி என்றே சொல்வார். கறி வைத்த சமயம் இதனை சொல்லிசிரித்தேன்.(சூரியகாந்தியை சுகந்தி பூ என சொல்வார்)





புதினாவும், வெந்தய கீரையும். புதினாவை இப்போ நிலத்திலும் நட்டிருக்கிறேன்.   





இன்னமும் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபடவில்லை. இங்கு 15ந்திகதியிலிருந்து  பாடசாலை ஆரம்பம். பின் 3 கிழமையால் கோடைகால விடுமுறை ஆரம்பம்.
................................................................................................









 
Copyright பிரியசகி