RSS

22/02/2019

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அதிரா

எங்கள் அன்பு நண்பி, அன்புடன் செல்லமாய் பூஸார் என அழைக்கப்படுபவரும்,  புலாலியூர்  பூசானந்தா,  ஆஷாபோஷ்லே அதிரா, கவிஅமுதம்மாஸ்டர் செப் அதிரா  என இன்னும் பல பட்டப்பெயர்களை தனக்குத்தானே சூட்டிக்கொண்டு உலாவரும் நண்பி (இன்றுவரை ஸ்வீட் ஸிக்ஸ்டீன் என சொல்பவர்) அதிரா வுக்கு இன்று பிறந்தநாள்.  
                                 
                                        
                இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அதிரா




   
             எப்பவும் சந்தோஷமாக கலகலப்பாக இருக்கவேண்டும் அதிரா.  எல்லாம் வல்ல உங்க பேவரிட் சந்நிதியானையும்,ஆஞ்சநேயரையும் வேண்டிக்கொள்கிறேன்.

-----------------------------------------------------------------------------

               பூஸ் பிறந்தநாளின்போது பூஸ் பற்றிய தகவல்கள்





இவரைப்பார்த்தால் அச்சுஅசல்  எங்க வீட்டில் நின்ற ரோஸி மாதிரி 



இப்பூஸ் களின் படங்கள் கடந்த வருடம் துருக்கி போனபோது எடுத்தவை. அங்கு நாம் இருந்த ஹோட்டல் கடற்கரை சாலையில் இருந்தார்கள். இப்படி நிறைய பேர் அநாதரவாக இருந்தார்கள். எனக்கு அஞ்சு ஞாபகம் வந்து என கணவரிடம் சொன்னேன். "இவர்களை அஞ்சு கண்டால் வீட்டுக்கே அழைத்துபோய்விடுவா" என

அங்குள்ளவர்கள் இப்படி விட்டுவிட்டு போய்விடுவார்கள் என ஹோட்டல் சிப்பந்தி சொன்னார். என்ன இவர்களுக்கு வெயில் காலங்களில் நிறைய உணவு கிடைக்கும். அங்கு அவர்களின் பேவரைட் உணவு மீன் நன்றாக கிடைக்கும்.மற்றைய  நேரங்களில் அங்குவரும் சுற்றுலாபயணிகள் போடும் உணவுதான். அவர்கள் பல்கிபெருகி குடும்பமாக நிறைய பூஸ்கள் இருக்கிறார்கள். எல்லாரிடமும் ஓடிவருகிறார்கள். 4,5 பப்பீஸ்ம் இருக்கிறார்கள். அவர்களும் கொண்டுவந்து அநாதரவாக விடப்பட்டவர்கள். எனக்கு பார்க்கவே பாவமா இருந்தது.  கண்டதும் ஓடி வந்து காலை சுற்றுவதும், முகம் பார்த்து கத்துவதுமாக இருந்தார்கள்.ஆனா மொழுக்,மொழுக் என குண்டாக இருந்தாங்க எல்லாரும்.  அங்குள்ள பப்பிஸ் ம்  பூஸ் ம் நல்ல ஒற்றுமையா இருக்காங்க.




................................................................................................


இந்த க்விலிங் நான் இம்முறை ஊருக்கு போயிருந்த போது செய்தது. அங்கு மிக மெலிதான பேப்பர்தான் கிடைக்கும் கடந்த வருடம் போனபோதும் இதேநிலமைதான். இம்முறையும் பெரியபேப்பர் கிடைக்குமா என தேடிப்பார்த்து கிடைக்காமல் போகவே இதையே வாங்கினேன். அஞ்சு இந்த மாதிரி மெல்லிய பேப்பரில் மிக அழகாக செய்வா. நானும் இம்முறை முயற்சி செய்துபார்த்தேன். அங்கு ரெயின்போ கலரில் பேப்பர் கிடைத்தது. அதனால் கலர்புல்லாக மலர்கள் செய்தேன். எனக்கு தை ,மாசியில் பிறந்ததினம் வருவதால் எப்படியும் காட் செய்யவேண்டும். அத்துடன் க்ராஸ்ஸ்டிச் பொருட்களும் வாங்கினேன். என் ப்ரென்ட் ஒருத்தரும் இதனை தைக்கிறாங்க.(செய்யிறனோ இல்லையோ வாங்கி வைத்துவிடவேண்டியதுதான்.)
 
Copyright பிரியசகி