RSS

22/02/2013

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

என்றென்றும் 16

எல்லோராலும்  அன்பாக பூஸார் என அழைக்கும் எங்கள்  அன்பு நண்பி  அதிராவுக்கு (22.02.13)   இன்று பிறந்த தினம் .அவருக்கு என்னுடைய      

        இனிய  பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 


அவர்   நல்லாரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளுடனும், இன்று போல்   என்றும்  சந்தோஷமாகவும் வாழ வேண்டுமென வாழ்த்துகின்றேன்.

அவரின் நல்ல நகைச்சுவையுணர்வும்,  உதவிசெய்யும் மனப்பான்மையும்,  எல்லோருடனும்  அன்பாக பழகும் நற்குணமும் உள்ள ஒரு நண்பி. அவர்  எழுதும்பாணியில் தனக்கென்றோர் இடத்தை தக்கவைத்து, மற்றவர்களை அவரின் (என்) பக்கத்தில் கவர்ந்துள்ளார். 

                     ******  ******  ******  ******  ******
 
 

*********************** 

 

06/02/2013

காகிதப்பூக்கள்

Paper Serviette   பூக்கள்.
தேவையான பொருட்கள் :--
Paper Serviette 
நூல் 
கத்தரிக்கோல் 
 முதலில் ஒரு  பேப்பர் சேவியட்  எடுக்கவும்.
 சேவியட்டில் மடிந்திருக்கும் பக்கத்தை வெட்டவும்.
வெட்டினால் இரண்டு பக்கமும் வெட்டுப்பட்ட மாதிரி  இருக்கும்.
இதை  சாரிக்கு பிலீட்ஸ் எடுப்பது மாதிரி மாற்றி மாற்றி   மடிக்கவேண்டும்.    பின் அதன் நடுவில் நூலால் கட்டவும்.
கட்டியபின் இருபக்கமும் நன்றாக விரித்துவிடவும்.பார்க்க விசிறி மாதிரி இருக்கும்.இனிமேல் நீங்க கொஞ்சம் பொறுமையாக,கவனமாக  ஒவ்வொரு பேப்பர்சேவியட்டையும்  மேலே எடுத்து விட வேண்டும். (ஒரு பக்கத்தில் மெல்லியதா 6அடுக்குகள்  ( layers)  இருக்கும். மொத்தமாக 12அடுக்குகள் ( layers)
 

இப்படி மறுபக்கத்தையும் எடுத்துவிட்டால் அழகான பூவாக மலரும்.                
               <><><><><><><><><><><><><><><><><><><><><>
     இதே செய்முறையில் நீங்க இரண்டு வெவ்வேறு கலர்   
     Paper Serviette லும் செய்யலாம். 
விரும்பிய இரு வெவ்வேறு  கலர் பேப்பர்சேவியட் எடுக்கவும். மடிந்திருக்கும்  பக்கத்தை  வெட்டவும்.   
                   Paper Serviette ன்  சைட்டில் வெட்டினால் இப்படி 2 அடுக்குகள்  வரும். 
வெட்டியபின் ஒருகலர் பேப்பர்சேவியட்டின்  ஒரு layer ஐ எடுத்து, மற்றயகலர் பேப்பர்சேவியட்டின்  ஒரு layer மேல்  வைக்கவும் .
பின்பு  முதலாவது  பூவிற்கு  செய்த மாதிரியே மாறி மாறி மடித்து, 
நடுவில் கட்டி, பேப்பர்சேவியட்டை  மேலே எடுத்து விட்டு அழகாக  ஒழுங்கு செய்ய வேண்டியதுதான் .
   இது செய்வது ஈC. லேC படாமல் செய்து பாருங்கோ.
   ********************************************************************

 இது அஞ்சு வின் குறிப்பு :- தக்காளித்தோசை 
இதை நானும் செய்தேன். ரெம்ப டேஸ்ட் & க்ரிஸ்பியாக இருந்தது. 
குறிப்பிற்கு நன்றி அஞ்சு .
 ***********************************************

 பிடித்த பாடல்_ :)

 
 
Copyright பிரியசகி