RSS

28/08/2012

நன்றிகள்

 தங்கள் இணையப்பக்க முகப்பில் எனக்கு வாழ்த்துக்கள் கூறிய
அதிராவுக்கும்,
அஞ்சுவுக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்,நன்றிகள்                           

.

அதிராவின் ப்ளாக் (என்பக்கம்),அஞ்சுவின் ப்ளாக் (காகிதப்பூக்கள்)மற்றும் என் ப்ளாக்கிலும்  வாழ்த்துகள் கூறிய  அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.************************************************** வாழ்த்திய அனைவருக்கும் பிடித்தமான ஸ்நாக்ஸ் எடுத்துக்கொள்ளுங்கோ.

                                       
                                          B,day அன்று செய்தவை.

இது நான் அஞ்சுவின் ரெசிப்பியான குணுக்கு பார்த்து செய்தது.
நன்றி அஞ்சு.                                       
இந்த பாடல் அதிராவுக்காக‌............

                                              
                                                  

09/08/2012

மஞ்சள்பூ மகி"மை

 மகியின் பூஜாடியை முயற்சி செய்துபார்த்தேன்.அந்த முயற்சியில் இந்த   பூஜாடி வந்திருக்கிறது.

 

                                        

              இது எங்கள் பூஸ்குட்டிக்காக செய்துஅனுப்பியது.                                 
                                        

இவைகளை நான் அனுப்பிய போது(தனித்தனியே)ப்ளாக்கிடலாமே என பூஸ்குட்டியார் சொன்னார். அதை அஞ்சு collage   முறையில் செய்துதந்தார்கள்.
மிக்க நன்றி அஞ்சு.

மகிக்கு என்னோட நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.இன்னும் வரும் மகி"மை.    

OCக்குறிப்பு;_ யாராவது டீச்சரைக்கண்டனீங்களோ.?

எனது all time favorit song:

                             
                                       

02/08/2012

கதையல்ல நிஜம்...

என் ப்ளாக் ஆரம்பிக்க போடப்பட்ட பிள்ளையார் சுழிதான் கதையல்ல நிஜம்.என்னையும், இளமதியையும் சுற்றி பின்னப்பட்ட வலை(த்தளம்)ப்பின்னல்கள் தாம் இவை.அந்த பின்னல்களைத்தொகுத்திருக்கிறேன். இதற்குள் மாட்டிய மீன் அம்முலுவாகிய நான். மறைந்தது நிலா. ஆனாலும் அந்த நிலா ஒருநாள் வெளிச்சம் காட்டும்.

                       

             "என் பக்கத்தில் வந்த வாழ்க்கையிலே                     

               ஏற்பட்ட தென்றல்கள் தாம் இவை."

 

இமா சொன்னது;_
// வேண்டாம். நல்ல வடிவா இருக்கு இளமதி. எனக்கு பெரிதாக்கிப் பார்க்க   ஆசையாக இருந்துது, முடியேல்ல. நீங்கள் ஏன் ஒரு வலைப்பூ தொடங்கக் கூடாது! உங்கட வேலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கோ. கனக்க எழுத வேணும் என்று இல்ல. சின்னதாக நான்கு வரி கூடப் போதும். எங்கட பக்கம் எல்லாம் வரவேண்டும் என்று கட்டாயம் எதுவும் இல்லை. நாங்கள் பிழையாக எடுக்க மாட்டோம். ஆனால்... இவ்வளவு வடிவாச் செய்துபோட்டு ஒருவருக்கும் காட்டாமல் இருக்கப்படாது. :) நாலு பேர் பார்த்து நல்லா இருக்கு என்று சொன்னால் இன்னும் உற்சாகம் வரும். விரைவில் எதிர்பார்க்கிறேன்.
இளமதி கூறியது;_
 ஏன் இப்பிடி செஞ்சா என்ன? நல்ல ஒரு யோசனை.
சொன்னா என்னை யாரும் அடிக்கப்பிடாது.
அது என்னெண்டால்......உங்கள் யாருடைய புளொக்கிலாவதுஉஉஉ எனக்கும் ஓரமாஆஆஆ ஒரு இட.....ம்ம்ம்ம்ம்ம் தாங்..................


 இமாவின் பதில்;_
ஆனால்... எனக்கு ஒரு சின்னக் கருத்து இருக்கு இதுபற்றி, நீங்கள் தனிய ஆரம்பிக்கிறதுதான் உங்களுக்கு நல்லது. அஞ்சுவோ நானோ எங்கட வலைப்பூவில ஓரமாப் போட... வாற ஆட்கள் அவசரத்தில, ஒழுங்காக வாசிக்காமல், கண் படம் பார்க்க மனம் கதை சொல்ல, எங்கட வேலை என்று நினைச்சுக் கருத்துச் சொல்லிப்போட்டுப் போறது நிச்சயம் நடக்கும். 'இது நான் செய்ய இல்லை,' என்று குறிப்புப் போட்டு இருந்தும் கூட பல முறை இப்பிடிப் பதில் வந்து இருக்கு எனக்கு. ;)
உங்கட ஆக்கங்களுக்கு 100% உங்களுக்கு மட்டும் பாராட்டுக் கிடைக்க வேண்டும் என்கிறது என் எண்ணம்.

angelin said...
 இளமதி :)) புரிகிறது .நான் தரேன்.


இமா said...
மூன்று பேர்ல யாரைத் தெரிஞ்சாலும் எங்கட சப்போட் உங்களுக்கு இருக்கும். நம்பி எலெக்க்ஷன்ல நிற்கலாம். ;))

athira said...
    நோஒ.. நோஒ..நோஒ.. நான் தான் தருவேன்ன்ன்.. யங்மூன்... உங்களுக்கு நான் முருங்கைக்கொப்பில் இடம் தருவேன்ன்... என்னிடம் வாங்கோ.
athira said..
உங்களையும் அம்முலுவையும் புளொக் திறக்க வைக்க வேண்டுமென எனக்கு நீண்ட நாள் ஆஆஆஆஆசை.... ஒருவரும் வந்து பின்னூட்டம் போடாவிட்டாலும் பறவாயில்லை, அது உங்கள் பொக்கிஷமாக, ஒரு சேமிப்பாக இருக்கட்டுமே.. நான்கூட அப்படி நினைத்துத்தான் இதை ஆரம்பித்தேன்ன்ன்.. இப்பூடி ஆச்சு:))

இமா said... 
ம்... அதீஸ்... அம்முலுவைக் கேட்டுக் கேட்டுக் களைச்சுப் போனன் நான். ;) 
 ammulu said..
    அதிரா ரெம்ப நன்றீஈஈஈ.
    இமா உங்களுக்கும் நன்றி.(ப்ளேன் ரீ குடியுங்கோ இமா.)
    அஞ்சுவுக்கும் ரெம்ப நன்றி.
    (அதிரா அஞ்சு(இ)மா)
    உங்க ஆசை நிறைவேற இறைவனைப்பிரார்த்திக்கின்றேன்.
    அதிரா கூப்பிடும் திருச்செந்தூர்முருகா என்னையும் காப்பாத்துங்கோஓஓஓஇளமதி said..
அம்முலு அதிரா இமா அஞ்சு யோசனைப்படி ஒரு ப்ளொக் ஆரம்பியுங்களேன். எனக்குத்தான் முடியலை. நீங்களாவது அவர்களின் ஆசையை நிறைவேற்றுங்களேன்.//நிறைவேற்றியாச்சே

 athira said..
யங்மூன்”இளையநிலா” என ஒரு புளொக் ஓபின் பண்ணித் தரப்போறேன் okay தானே?:)) 


athira said..
அம்முலு நீங்க ரெடிதானே? புளொக் ஆரம்பிப்போமா?
இமா said..
/”இளையநிலா”// m... நல்ல அலைவரிசை... ;))
அடுத்த ஆளுக்கு!!! வேணாம், நான் எதையாவது சொல்ல, பெரியம்மா மாதிரி இருக்கிற என் இமேஜ் டாமேஜாப் போயிரும். ;)))) 


 angelin said...
அடுத்த ஆளுக்கு!!! //
பிரியங்களுடன் /பிரிய சகி /பிரியமானவளே
ஓகேவா இமா :)))


 இமா said..

    பிரியசகி... இதுதான் முதல் நினைச்சனான். ஆனால், அறுசுவைல அந்தப் பேர்ல எனக்கு ஒரு நல்ல கவிஞரைத் தெரியுமே.

    பிரியமானவளே என்றால்.... நாங்கள் கூப்பிடுற மாதிரி இருக்கு. முதலாவது ஓகே. இன்னும் யோசிச்சுப் பாருங்கோ.

    நான் நினைச்சது.... ;)))) ஒரு படத்திட பேர், த்ரிஷா, ப்ரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா நடிச்ச ஒரு படத்துக்கு தலைப்பாக வரும். ;))))///அபியும் நானும்

    அம்முலு அவங்கட வீட்டில சொன்ன நேரம் கேட்கேல்ல. நாங்கள் திரத்தினால் கொஞ்சம் சரிவருவா.

 இமா said..
//பின்பு விரும்பினால் அவர்கள் பெயரை மாற்றிக்கொள்ளலாம், மெயில் ஐடி, புளொக் ஐடி மட்டும்தானே மாற்ற முடியாது// ஹை!! ம்.. //ரெடி.. ஸ்ரெடி ஸ்ராட்ட்ட்ட் மூசிக்க்க்க்க்க்க்க்// :))))athira said..
அம்முலுவின் அட்ரஸையே காணேல்லை.
தடவி தடவிச் சொல்லியாச்சு, மிரட்டியும் சொல்லியாச்சு.. இனி இறுதி ஆயுத்தத்தைப் பாவிக்க வேண்டியதுதான்ன்ன்.. பூஸ் ஒன்று புறப்படுதே:)) இமா said.

ஹையா!!! //கொஞ்சம் தேர் அசைந்திட்டுது.//
//மிச்சத்திற்கு// ஓடி வாங்கோ மக்கள்ஸ்.... ;) இனி எல்லாருமா ஒரு கை இழுத்தால் முழுசா நகர்ந்துரும்


ammulu said...
   அம்முலுவின் அட்ரஸையே காணேல்லை..//இதைத்தான் நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
  
ammulu said...
    ஐயோ இமா நித்திரைக்கு போகாமலென்ன இது.ம்ம்ம் ஒரு வழி காணாமல்விடமாட்டாங்க போல.
 athira said... 
   இமா said...
    ஹா! ஹா! ;)
    ஹையா!!! //கொஞ்சம் தேர் அசைந்திட்டுது.//
    //மிச்சத்திற்கு// ஓடி வாங்கோ மக்கள்ஸ்.... ;) இனி எல்லாருமா ஒரு கை இழுத்தால் முழுசா நகர்ந்துரும்///

    அவ்வ்வ்வ்வ் அம்மன் கோயில் தேரோ?:)) ஹா..ஹா..ஹா... அது காத்தில ஆடிட்டே இருக்குது இப்போ கொஞ்சக்காலமா... கிட்டத்தட்ட டிஷம்பரில் இருந்து,:)) எல்லோருமாச் சேர்ந்து இழுத்து எங்காவது ஈபிள் டவர் தூணில கட்டினால்ல்ல்.. பின்பு ஒழுங்கா ஓடும்.... ரெடீஈஈஈ ஸ்ராட் மூசிக்க்க்க்க்.. சிங்குசா.. சிங்குசா... இளையநிலா சிங்குசா.... பிரியசகி சிங்குசா.. சிங்குசா சிங்குசா:)))))...
 (நன்றி கூகுள்)
*************************************************
 இன்னும் என்னென்ன எங்கெல்லாம் பேசியிருந்தார்களோ தெரியாது.இந்தப்பேச்சால் ஆரம்பித்ததுதான்.அதிலும் இன்டசிட்டி ரெயினை விட(ப்ளேனைப்பற்றி நான் சொல்லேல்ல.பீலிங்ஸ் ஆகிவிடுவார் பூஸார்) வேகமாக பூஸார் போயிட்டார்.அதனால தான் எப்படி(யோ) இருந்த நான் இப்படி (ப்ளாக்)ஆ(ரம்பித்து)கிவிட்டேன்.  சரி வாசித்து களைத்திருப்பீங்க.
வெயிலுக்கு  இதமா பலூடா குடியுங்க. என் சொந்த  தயாரிப்பு.

 
இப்படி ஆரம்பித்துதான் (ப்ளாக்) கதையல்ல நிஜம். 

      "" நீங்கள் நேற்று செய்ததை இன்று  யோசித்துக்கொண்டிருந்தால்,
       இன்று  ஒன்றும் செய்யவில்லை என்று புரிந்து கொள்ளுங்கள்"".


 
Copyright பிரியசகி