RSS

30/10/2012

ஸ் ...ஸ்னோ


ஸ்....ஸ்னோ... ஸ் ...ஸ்னோ
இந்த வருடத்துக்கான முதல் ஸ்னோ வெள்ளிக்கிழமை(26.10.12) கொட்டியது. இரவு நேரம் என்றதால் படம் க்ளியரா இல்லை.

                                        
                            
    அடுத்த நாள் (27.10.12) நல்ல வெயில். அன்று எடுத்த படங்களை பாருங்கள்.ஸ்னோ கொட்டிய இடம் மாதிரியா தெரியுது. (வீட்டருகில் கமராவை  கொண்டு போனபோது சுட்டவை. 4, 8வது படத்தில் இருப்பது ,வயல் மாதிரி இருக்கும். இப்போ உழுத மாதிரி செய்திருக்கிறார்கள்.நிறைய ஸ்னோ கொட்டினால் நிலத்திற்கு  நல்லதாம். பயிர்கள் நன்றாக வளரும். அதற்காக
வேறு இடத்தில் இருந்து எடுத்து கொட்டுவதில்லை.அங்கே விழுவதுதான் நல்லதாம் )
                                        
 ****************************************************
*****************************************************

16/10/2012

சுகந்தி "பூ"

                                                  
                                                  
             herzlichen-glueckwunsch-0034.gif from 123gifs.eu Download & Greeting Card இளமதிக்கு  என் இனிய பிறந்ததின நல்வாழ்த்துக்கள்.
 நோய் நொடியின்றி  தேகாரோக்கியத்துடனும் , நீண்ட ஆயுளுடனும் ,சந்தோஷமாக வாழ   வாழ்த்துக்கள். 
(தகவல் தெரிவித்த அதிராவுக்கு என் நன்றிகள்.)
***************************************************
சுகந்தி "பூ"

  பூக்களை விரும்பாத ஆட்களே இல்லை.ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருபூக்களோ,பலபூக்களோ பிடிக்கும்.அம்மாதிரித்தான் எனக்கும் எல்லாப்பூக்களும்பிடிக்கும்.அதில் ரோஜா, செவ்வரத்தை மல்லிகை ரெம்ப பிடிக்கும்.நித்தியகல்யாணிப்பூவில் மாலை கட்ட அழகாக(வரும்)இருக்கும்.
                                      tks.gg
    
   சின்ன வயதில் புத்தகம் ஒன்றில் நான் முதன் முதலாக சூரியகாந்திப்பூவைப்பார்த்தேன். அதில் இருந்து  எனக்கு அந்தபூவில் விருப்பமாக  இருந்தது.. எங்க  ஊரில நான் பார்த்த ஞாபகம்  இல்லை. அங்கு இருந்திருக்கலாம். ஆனா எனக்கு தெரியாது. எனக்கு அந்தப்பூவ ரெம்ப பிடிக்கும். பெரிய பூ . கண்கவரும் மஞ்சள் நிறத்தில் நடுவில் மண்ணிறத்தில் மகரந்தங்கள் பார்க்க அழகா இருக்கும்.

     இங்கு  வந்து எனக்கு அம்மரம் வைக்கவேணும் என்று  ஆசை. முதல் நாங்கள் இருந்த இடத்தில் வைக்கமுடியவில்லை . கடைகளில் மரமாகவும், விதைகளை  பாக்கெட்டுகளிலும் வைத்து விற்றிருப்பதை கண்டிருக்கிறேன் . வீடு மாறுவது என்ற நிலை வந்தபோது ஒரு பாக்கெட் வாங்கிவிட்டேன்.

                                           tks.gg
    நாங்க  வீடு குடிவந்த புதிதில்  வாங்கிய, விதைப்பாக்கெட்டை பொருட்கள் அடுக்குவதில் எங்கேயோ கை மாறிப்போச்சு. பின் தேடியதில் காணவில்லை. நானும் அதை மறந்துவிட்டேன். ஆனால் என்கணவருக்கு வாங்கியது  ஞாபகம் இருக்கு. கடைகளில் புதிசா வாங்கப்போனால்,உடனே சொல்வார், ""பழையதை தேடி எடுங்கோ. இல்லையென்றால் பிறகு வாங்கலாம்"" என்று.  நானும் தலையாட்டிவிட்டு வருவேன். பிறகு எதையாவது தேடும் போது, அதை ஞாபகம் வைத்து தேடுவேன். கிடைக்காது.விட்டுவிடுவேன். எனக்கும் சூரியகாந்திப்பூவுக்கும் பொருத்தமில்லைப்போலும். பின் நானும் தற்காலிகமாக அதை மறந்தேபோனேன்.

    இம்முறை நான் ஊருக்கு போயிருந்தபோது, சூரிய‌காந்திப்பூவை கண்டதும்  எனக்கு பழையபடி வேதாளம் சூரியகாந்தி மரத்தில ஏறிட்டுது. நான் உடனேயே முடிவெடுத்துதான் இங்கு வந்தேன். போனதும் முதல்வேலையா இந்தபூமரம் வைக்கிறது என்று. அங்கிருந்தே இவரிடம் விசயத்தையும் சொல்லியாச்சு. அவரிடமிருந்து ஒரு பதிலும் இல்லை. மெளனம் சம்மதமே என நானே எடுத்துக்கொண்டேன்.
    அதோடு சூரியகாந்தி மரம் நடுவதென்றால் ஏப்ரல்,மே தான் நடவேண்டுமாம். இங்கு நான் வந்ததும் எனக்கு வைரஸ் காய்ச்சல் பிடித்துக்கொள்ள,அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட் என்று நாட்களும் போய்விட, பின் மகனுக்கும் சிறுவிபத்து நடந்து, அந்த   ஜுன் நடுப்பகுதி வந்துவிட்டது. எனக்கு இம்முறையும் பலனில்லை என விட்டுவிட்டேன்.

      பின் ஒருநாளில் கார்டனில் துப்பரவாக்கும் சமயம் ஒரு மரம் வளர்வதைக்கண்டு நான் இவரிடம் சொன்னேன், அவர் அதை பிடுங்கி எறியுங்கோ எனச்சொல்ல, எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஏனென்றால் என் உள்ளுணர்வு சொல்லிச்சு. இது சூரியகாந்திமரம்தான் என்று. ஆனால் இவருக்கு அந்த மரம் வளர்ந்த இடத்தில் ஒன்றும் வளரக்(க)கூடாது.   என்னிடம்   நீங்க ஏதாவது seeds போட்டீங்களா? என்று கேட்டார். நான் சொன்னேன். "இல்லையே" என்று. அப்ப நீங்க நினைக்கிறமாதிரி அந்த மரமில்லை பிடுங்கி எறியுங்கோ என்று.  நான் உடனேயே சொன்னேன்."கொஞ்சநாள் விட்டுப்பார்ப்போம் சூரியகாந்திமரம் இல்லையென்றால் பிடுங்கி எறிகிறேன் என்று. ஒருமாதிரி அதை காப்பாற்றி வந்தேன். என்னுடைய நம்பிக்கையில‌, என்ன மரம் என்றுதான் பார்ப்போமே என்ற எண்ணம் பின் இவருக்கும் வந்துவிட்டது.
     எனக்கோ ஒரே வியப்பு. மனம் சொல்லுது. அது நீ ஆசைப்பட்ட‌ சூரியகாந்திப்பூமரம்தான் என்று. ஆனால் இது எப்படி இங்கு? அதுவும் இவ்வளவு இடம் இருக்கேக்கை.ஒரு ஓரமா? அதுவும் நல்லதுக்குதான் நடுவில வளர்ந்திருந்தா கட்டாயம் இவர் புல் வெட்டேக்கை பிடுங்கி எறிந்திருப்பார். எல்லாம் நன்மைக்கே என நினைத்து, அந்தமரம் என்னவென்று தெரியாமல் உரம்(ஒரு உள்ளுணர்வைக்கொண்டு) போட்டு வளர்த்து விட்டேன்.
    நான் சூரியகாந்திப்பூவை பார்த்திருக்கிறேன். மரத்தை இப்போதுதான் பார்க்கிறேன். இது அந்த மரம்தானா என்பதை அடுத்ததெருவில் ஒரு  வீட்டில் வளர்ந்த சூரியகாந்தி மரத்தின் இலையை பிடுங்கி வந்து இந்த இலையோடு பொருத்தி பார்த்து , இது அந்த மரம்தான்  என்று,கணவரைக் கூப்பிட்டுக்காட்டினேன்.அதன் பின் ஒப்புக்கொண்டார்.

     பின்பு மரம்  பெருசா வளர எனக்கு சந்தோஷத்துடன் கூடிய அதிர்ச்சி. எப்படி இது வந்தது ? இன்னமும் தெரியவில்லை. ஆனா  அந்த க்ரில் கல்லில் பறவைகள் வந்து இருப்பார்கள். ஒருவேளை அவர்களால் இந்த மரம் கிடைத்திருக்கிற‌து போலும்." நான் அவர்களுக்கு சாப்பாடு போடுவதற்கு நன்றிக்கடனா இவ்வுதவி செய்தார்கள்", என கணவர் சொல்கிறார்.!! எது எப்படியோ
    இப்ப அந்த மரம் வளர்ந்து, என் ஆசையை நிறைவேற்றிவைத்து. பூக்கள் பூத்துவிட்டன.
                             இந்த பதிவின்போது நிறைய பூக்கள்  பூத்துவிட்டது 

   சின்னதில் சூரியகாந்தி என சொல்லவராமல் "சுகந்தி"ப்பூ  என்று சொன்னது  என் மகன்.
_____________________________________________________
_____________________________________________________

                                                       tks.net 
------------------------------------------------------------------- 
இளமதிக்கு இப்பாடல் 

                      
----------------------------------------------------------------------                                              

01/10/2012

வேலியும், மரங்களும்

                                                   
        ரில வீட்டுக்கு வீடு வாசற்படி இருக்கோ இல்லியோ,வேலிகள்,மதில்கள் கட்டாயம் இருக்கும். பக்கத்து வீட்டுக்கோ, அல்லது காணிகளுக்கோ  எல்லையாக போட்டிருப்பார்கள் .

      ல்லை வைத்து கட்டி மதில் ( சுவர்) எழுப்பியிருப்பார்கள் . அல்லது  தென்னோலை (இதை கிடுகுவேலி என்றும் சொல்வோம்.), பனையோலை, அல்லது தென்னமட்டை,  பனை மட்டை அல்லது தகரம் இப்படியான பொருட்களை  வைத்து வேலி கட்டியிருப்பார்கள்.
ஊரில் எல்லையில்  வேலிபோடுவதில் , கதியால் போடுவதில் சில இடங்களில்  எல்லைச்சண்டை  அநே(அமோ)கமாக நடந்திருக்கு.  வெட்டு,குத்து கூட    நடந்திருக்கு. 

                       1. செங்கற்கள் ,2 சிமெந்து ,3.தென்னோலை,4.பனைமட்டை 
  


                                          இது ஊரில் எங்க வீட்டு வேலி
                        
       நான் இருக்கும் நாடானா ஜேர்மனி யில்  சில இடங்களில் கற்களால்,கம்பிகளால்,பலகையால் ஆன வேலி மாதிரி  மறைப்புகள்  உண்டு.   ஆனால்  கூடுதலாக மரங்களையே  எல்லைகளில் வைத்து (வேலியாக) வளர்க்க விரும்புவர். இங்கு இரண்டு காலநிலை இருப்பதால் அதற்கேற்றவாறு மரங்கள் இருக்கின்றன.குளிர்காலத்திலும்   இலைகள் பச்சையாகவே இருக்கும் மரங்கள்  இருக்கின்றன.  கூடுதலான குளிர் என்றால் பாதிப்பு வரத்தான் செய்யும். 

      ங்களுக்கும் இந்த எல்லையில் மரம் வளர்க்கவேண்டிய சூழ்நிலை வரும்  என நினைத்திருக்கவில்லை.

     ங்கள் வீட்டுக்கு  2 பக்க‌த்தில் மட்டுமே வீடுகள். மற்றைய 2 பக்கமும் வீதி.(road).  அதனால் எங்களுக்கு 2 பக்கம்தான் (corner land) மரங்களை எல்லைகளில்   வளர்க்க வேண்டியிருந்தது .   இங்கு பல வகை மரங்கள் இருக்கு.  நாங்கள் தெரிவுசெய்தது  3 மரங்கள்தான்.  அவை குளிர்காலத்திலும் பச்சையாக இருக்கும்.

                1.lebens baum(tree of life)  2.buche(beech tree)  
                 3.buchsbaum(boxwood)  4.lorbeer.(laurel)                                                                                                                

**இரண்டாவது படத்தில் இருக்கும் மரத்தின் இலைகள்  வின்டருக்கு   கொட்டிவிடும். அது பக்கத்துவீட்டுக்காரர் வைத்தது.  

**1,வது 3,வது 4 வது படத்தில் இருக்கும் மரங்கள்  இருகாலத்திலும் பச்சையாகவே  இருக்கும்.

                                                   
                               இந்த  மரம் மட்டும் சிவப்பாகவே எப்பவும் இருக்கிறது. 
இங்கு Buchsbaum(boxwood)  ஐ  (3 வது  படம் ) வளர்த்து சில பேர்  
டிசைனாக வெட்டி விடுவார்கள்.

                                         அழகான பூஸ் 
                                                   
                      அந்த மரத்தில்  வெட்டப்பட்ட சில டிசைன்கள்  
                                                              
                               tks,gg
                   
                நாங்கள் வீட்டின் முன் பக்கம் நட்டவை LEBENS BAUM 

                                     இதுதான்  எங்கள்  வீட்டின் முன் வாசல் 
                                                               
       ங்கு வீட்டில்(காணியில்) இருக்கும் மரமென்றாலும், வெளியில்  இருக்கும் மரம்  என்றாலும்  வெட்டுவதாயின்  அனுமதி பெறவேண்டும்.(வீட்டினுள் சின்னதாக இருக்கும்  மரங்களிற்கு இல்லை.)  இங்கு கூடுதலாக  மரங்களை வளர்த்து, தங்கள் வீட்டை  அழகாக வைத்திருப்பார்கள் . மரங்கள் வளர்ப்பது  அழகாக இருக்கும். இங்கு மரத்தை வைத்துவிட்டு  அப்படியே விடமாட்டார்கள். அதற்கு தேவையான உரங்கள், மருந்து வாங்கி போட்டு பராமரிப்பார்கள். இதனால உழைக்கும் காசில ஒரு பகுதியை இதற்கு செலவழிப்பதற்கே வைத்திருப்பார்கள். அந்தந்த மரங்களுக்கென கார்டன் இருக்கு. supermarket லும் வாங்கலாம்.  

    னி ஒக்டோபர் மாதத்தில் வரும்  autumn (herbst) லீவில், காணியில் இருக்கும் மரங்கள் கொட்டுகிற  இலைகள்,சருகுகளை  கூட்டி துப்பரவாக்குவார்கள். பின்பு மறுபடியும் ஏப்ரல் மாதத்தில் அல்லது மே மாதத்தில்  செய்வார்கள். இது இம்மாதங்களில்  இருக்கும் குளிரைப் பார்த்து செய்வார்கள். அத்துடன்  மரங்கள் இருப்பதால்  நிறைய பறவைகள் வரும் . சிலர் பறவைகள் வரவேண்டும் என்பதற்காக அவைகளுக்காக விற்கப்படும்
சாப்பாட்டுவகைகளை  வாங்கி வைப்பார்கள். விண்டர்காலத்தில்தான் கூடுதலாக உணவுவகைகளை வைப்பார்கள்.  இவைகளுக்கெல்லாம் நானும் விதிவிலக்கல்ல. 

                              நான் வாங்கி வைத்திருக்கும்  குருவிக்கான சாப்பாடு 

    னிவரும்  மாதங்களில்  இந்த பச்சைக்கலரைப்பார்க்க முடியாது.  அதற்கு அடுத்த ஆண்டு ஏப்ரல்,மே  வரை காத்திருக்க வேண்டியதுதான்.  குளிர் கொஞ்சம் ஆரம்பிக்கிறது. இலைகள்  மஞ்சள்,சிவப்பாக  வரத்தொடங்கிட்டுது.

*****************************************************
இதில் வீட்டின் முன் பக்கம் நட்ட மரங்களில்  2 மிஞ்சிவிட்டது (மிகுதி).  கணவர்  என்ன செய்வது என கேட்டார் . நான் கராஜின்  பின்பக்கத்தில்   வைக்கலாம் என்று சொல்லி, மரத்தை நட்டுவிட்டோம். அவை இப்ப இப்படி வளர்ந்து  நிற்கினம். இவைகளிற்கு நான் வைத்த பெயர் TWIN TOWERS.

 

                   இதுதான் எங்க வீட்டு TWIN TOWERS
                                             கராஜ் பின்பக்கம்.
            பச்சைக்கலர்ல இருப்பது மழை நீரை சேகரிக்க ஒரு Tank
****************************************************

        “ஏம்பா காலையில வர்ற பேப்பரை
         சாயங்காலம் வாங்கறே?”


        “சூடான செய்திகள்னு போட்டிருந்தாங்க.
         அதான் ஆறட்டுமேன்னு...”€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€
   "ஒரு பிரச்சனையைத் தீர்க்கமுடியாவிட்டால்,              
     பிரச்சனையை    சமாளிக்கக்கற்றுக்கொள்ளுங்கள் "
 €€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€                              நீங்களும் இப்பாட்டைக்கேளுங்க 

 
Copyright பிரியசகி