RSS

04/12/2019

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

அன்பான நண்பி, Quilling teacher அஞ்சு என அழைக்கப்படும் ஏஞ்சலின் க்கு
                             இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
நோய்நொடியின்றி, நீண்ட ஆரோக்கியத்துடன் என்றென்றும் புன்னகையுடன், அன்னை தெரசாவாக மகிழ்வுடன் மனதுக்கு பிடித்த சேவையை நன்றாக செய்து சகலசெளபாக்கியங்களும் பெற்று, குடும்பத்தினருடன் மகிழ்வாக வாழ வாழ்த்துகின்றேன்.

இது  நான் அச்சில் செய்து எடுத்த பூக்கள்,இலை கொண்டு செய்வோம் என செய்தால் அச்சில் சரியான முறையில் வெட்டுபட்டு வரவில்லை.  அளவில் சின்னதா வருகிறது. பின் அந்த அச்சில் வந்த 1 இலை, 1 பூவின் அச்சினை எடுத்து  கொஞ்சம் பெரிதாக பேப்பரில் வரைந்து,  வெட்டி வைத்து பின் இக்கலர்பேப்பேரில் வெட்டி எடுத்து செய்திருக்கேன். அவசரமான கைவேலைதான். குட்டிகுட்டி பிழை இருக்கு. 2சைட் ஷேடட் கார்ட் ல் ஒட்டியிருக்கேன். அஞ்சு சொல்லிதந்ததை இன்னும் கொஞ்சம் விடாமல் இப்படி தெரிந்தவர்களுக்கு செய்கிறேன். தொடர்ந்து செய்தால் நல்லது. இடையில் தானும் நண்பர்களுக்கு செய்வதில் மகிழ்ச்சியே. மிக்க நன்றி அஞ்சு.💕



அஞ்சுவுக்கு பிடிக்குமென நினைக்கிறேன்.
Candied almonds (Gebrannte Mandeln)
ஒவ்வொரு க்றிஸ்மஸ் வரும்போதும் இங்கு நவம்பரில் க்றிஸ்மஸ் மார்க்கெட் போடுவாங்க. நான் முன்பும் ஒரு பதிவு போட்டிருக்கேன். அங்கு இந்த பாதாமை சீனிபாகில் வறுத்து நல்ல க்ரிஸ்பா விற்பாங்க. கொஞ்சம் விலையாக இருக்கும்.அதனால் இப்போ நானே செய்கிறேன். செய்முறை இன்னொரு பதிவில் போடுகிறேன். இது அஞ்சுவுக்காக.....கார்த்திகைபிறைக்கு அல்ல,அல்ல,அல்ல

*****************************************************

இப்போ இங்கு குளிர்கால ஆரம்பத்தில் இருக்கிறோம். டிசம்பர் ல குளிர்காலம் ஆரம்பம். மார்ச் வரை தொடரும். இன்னும் பனிமழை வரவில்லை. ஆனால் மழை,காற்றுடன் குளிர்ர்ர்ர்ர்ர். இங்கு இக்காலப்பகுதியில்தான் நடப்பது, ஓடுவது என உடம்பை கவனிப்பார்கள். ஓரளவு குளிருடன் இருக்கும் காலநிலையில் இவை இங்கு சாத்தியம். பின் மைனஸ் ல் வந்தால் வீட்டுக்குள் தான் முடங்கவேண்டும். சிலவேளை நல்ல பனிபொழிவு இருந்து வெயில் எறித்தால் அனேகமானோர் நடப்பார்கள். வாரயிறுதியில் நடந்தபோது எடுத்தவை.......






******************************************************

ஆ....இது கார்த்திகைபிறைக்காக..... நான் சொன்னேன் இல்லையா இடிதாங்கி. குரக்கன் சமபோசா என. அதுதான் இது. நல்ல ருசீஈஈஈஈஈ. கிடைத்தால் வாங்கி ருசிக்கவும்.




*******************************************************
ஊருலா செல்கின்றேன். எல்லோரையும் அடுத்த வருடம் சந்திக்கின்றேன். அன்பும்,நன்றியும்
நேரம் கிடைக்கும்போது பதில்கள் தருகிறேன்.
 
Copyright பிரியசகி