RSS

04/12/2019

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

அன்பான நண்பி, Quilling teacher அஞ்சு என அழைக்கப்படும் ஏஞ்சலின் க்கு
                             இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
நோய்நொடியின்றி, நீண்ட ஆரோக்கியத்துடன் என்றென்றும் புன்னகையுடன், அன்னை தெரசாவாக மகிழ்வுடன் மனதுக்கு பிடித்த சேவையை நன்றாக செய்து சகலசெளபாக்கியங்களும் பெற்று, குடும்பத்தினருடன் மகிழ்வாக வாழ வாழ்த்துகின்றேன்.

இது  நான் அச்சில் செய்து எடுத்த பூக்கள்,இலை கொண்டு செய்வோம் என செய்தால் அச்சில் சரியான முறையில் வெட்டுபட்டு வரவில்லை.  அளவில் சின்னதா வருகிறது. பின் அந்த அச்சில் வந்த 1 இலை, 1 பூவின் அச்சினை எடுத்து  கொஞ்சம் பெரிதாக பேப்பரில் வரைந்து,  வெட்டி வைத்து பின் இக்கலர்பேப்பேரில் வெட்டி எடுத்து செய்திருக்கேன். அவசரமான கைவேலைதான். குட்டிகுட்டி பிழை இருக்கு. 2சைட் ஷேடட் கார்ட் ல் ஒட்டியிருக்கேன். அஞ்சு சொல்லிதந்ததை இன்னும் கொஞ்சம் விடாமல் இப்படி தெரிந்தவர்களுக்கு செய்கிறேன். தொடர்ந்து செய்தால் நல்லது. இடையில் தானும் நண்பர்களுக்கு செய்வதில் மகிழ்ச்சியே. மிக்க நன்றி அஞ்சு.💕



அஞ்சுவுக்கு பிடிக்குமென நினைக்கிறேன்.
Candied almonds (Gebrannte Mandeln)
ஒவ்வொரு க்றிஸ்மஸ் வரும்போதும் இங்கு நவம்பரில் க்றிஸ்மஸ் மார்க்கெட் போடுவாங்க. நான் முன்பும் ஒரு பதிவு போட்டிருக்கேன். அங்கு இந்த பாதாமை சீனிபாகில் வறுத்து நல்ல க்ரிஸ்பா விற்பாங்க. கொஞ்சம் விலையாக இருக்கும்.அதனால் இப்போ நானே செய்கிறேன். செய்முறை இன்னொரு பதிவில் போடுகிறேன். இது அஞ்சுவுக்காக.....கார்த்திகைபிறைக்கு அல்ல,அல்ல,அல்ல

*****************************************************

இப்போ இங்கு குளிர்கால ஆரம்பத்தில் இருக்கிறோம். டிசம்பர் ல குளிர்காலம் ஆரம்பம். மார்ச் வரை தொடரும். இன்னும் பனிமழை வரவில்லை. ஆனால் மழை,காற்றுடன் குளிர்ர்ர்ர்ர்ர். இங்கு இக்காலப்பகுதியில்தான் நடப்பது, ஓடுவது என உடம்பை கவனிப்பார்கள். ஓரளவு குளிருடன் இருக்கும் காலநிலையில் இவை இங்கு சாத்தியம். பின் மைனஸ் ல் வந்தால் வீட்டுக்குள் தான் முடங்கவேண்டும். சிலவேளை நல்ல பனிபொழிவு இருந்து வெயில் எறித்தால் அனேகமானோர் நடப்பார்கள். வாரயிறுதியில் நடந்தபோது எடுத்தவை.......






******************************************************

ஆ....இது கார்த்திகைபிறைக்காக..... நான் சொன்னேன் இல்லையா இடிதாங்கி. குரக்கன் சமபோசா என. அதுதான் இது. நல்ல ருசீஈஈஈஈஈ. கிடைத்தால் வாங்கி ருசிக்கவும்.




*******************************************************
ஊருலா செல்கின்றேன். எல்லோரையும் அடுத்த வருடம் சந்திக்கின்றேன். அன்பும்,நன்றியும்
நேரம் கிடைக்கும்போது பதில்கள் தருகிறேன்.

43 comments:

  1. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அஞ்சு ....


    கார்டு ரொம்ப அழகா இருக்கு அம்மு..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா அனு :) 

      Delete
  2. Candied almonds (Gebrannte Mandeln)...சாப்பிடனும் போல இருக்கே ...வாவ்

    குளிர் கால காட்சிகள் ...என்றுமே அழகு தான் ...

    சமபோசா உருண்டையும் சூப்பர் ...இது போல சத்து மாவில் உருண்டை தான் போன வாரம் நானும் செய்தேன் ...

    உங்க ஊருலா சிறப்பா அமைய வாழ்த்துக்கள் அம்மு ..

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்தியமைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.அனு

      Delete
  3. மீ first ஊஊஊஊ...

    ReplyDelete
    Replies
    1. நீங்கதான் first ஊஊ.
      அன்னக்கிளி லேட்டூடூடூ

      Delete
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எவ்ளோ ஸ்பீட்டா ஓடி வந்தேன் தெரியுமோ:)), ஜஸ்ட்டூ மிஸ்ட்டூ:))

      Delete
  4. //நோய்நொடியின்றி, நீண்ட ஆரோக்கியத்துடன் என்றென்றும் புன்னகையுடன், அன்னை தெரசாவாக மகிழ்வுடன் மனதுக்கு பிடித்த சேவையை நன்றாக செய்து சகலசெளபாக்கியங்களும் பெற்று, குடும்பத்தினருடன் மகிழ்வாக வாழ வாழ்த்துகின்றேன்.//

    அழகான வாழ்த்து அட்டையுடன் பிறந்தாள் வாழ்த்து அஞ்சுக்கு.
    நானும் உங்களுடன் சேர்ந்து வாழ்த்துகிறேன்.
    ஏஞ்சல் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், வாழ்க வ்ளமுடன்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அக்கா

      Delete
    2. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கோமதி அக்கா :)

      Delete
  5. பாதாமை சீனிபாகில் வறுத்து நல்ல க்ரிஸ்பா நல்லா இருக்கிறது பார்க்கவே நான் வறுத்த பாதாம் சாப்பிட்டு இருக்கிறேன் சீனீபாகில் போட்டதை சாப்பிட்டு பார்த்தது இல்லை. நன்றாக இருக்கிறது பார்க்க ருசிக்கவும் நன்றாக இருக்கும்.

    குரக்கன் சமபோசா நிலக்கடலை, எள் வெல்லம் போட்ட உருண்டை போல் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. இங்கு கறிஸ்மஸ் டைமில் மிகப்பிரபலம் அக்கா.
      நல்ல டேஸ்டா இருக்கும்.

      Delete
  6. நடைபயிற்சியின் போது பார்த்த இயற்கை காட்சிகள் அழகு.
    பதிவு மிக அருமை.
    விடுமுறைய இன்பமாய் கழித்து வாருங்கள்.
    வாழ்த்துக்கள். கிறித்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி அக்கா.

      Delete
  7. ஏஞ்சலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அண்ணா ஜீ

      Delete
    2. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ :)

      Delete
  8. ஆஆவ்வ்வ்வ்வ் அஞ்சுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... வயசைச் சொல்லாமல் விட்டிட்டீங்களே அம்முலு:)..
    மிகுதிக்கு கொஞ்சம் லேட்டாத்தான் வருவேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆறுதலா வாங்கோ. நானும் லேட்டாதான் இனி வருவேன்.

      Delete
    2. ஹலோ அன்னக்கோழி :) இப்போ வயசா முக்கியம் ..பாருங்க ப்ரியா எனக்கு பிடிச்ச ஆல்மண்ட்ஸ் தந்திருக்காங்க :)ஒருத்தர் என் பெர்த்டேக்கு என்  கிச்சனில் சுட்டு அதை போட்டாங்க ஹாஹாஆ 

      Delete
    3. முழு அல்மண்ட் ஐயும் அப்பூடியே சாப்பிட்டு முடிச்சிடொணும் ஜொள்ளிட்டேன்ன்:)) அம்முலு ஒன்றுகூட மிச்சம் வைக்காமல் தீத்தி விட்டிடுங்கோ:)).. ஒரு கிழமைக்கு போர்த்துக்கொண்டு படுக்கப் போறா ஹா ஹா ஹா அன்னக்கிளிக்கு[என்னைச் சொன்னேன்:))] ஜாலியோ ஜாலி ஹா ஹா ஹா:))

      Delete
  9. மிக்க நன்றி ப்ரியா :)) வாழ்த்தியோருக்கும் வாழ்த்தவிருப்போருக்கும் நன்றீஸ் .:) ஈவ்னிங் அனைவருக்கும் ரிப்லைஸ் தரேன்   

    ReplyDelete
    Replies
    1. டைம் கிடைக்கும்போது வாங்க அஞ்சு. அன்னக்கிளி வீட்டிலும் விருந்து எல்லோ.

      Delete
  10. வாழ்த்து அட்டை சூப்பரப்பா ..கலர்ஸ் செம செலக்க்ஷன் 

    ReplyDelete
    Replies
    1. எனக்கு உங்க பிறந்தநாளில் போது வாழ்த்த கிடைப்பதேயில்லை. இம்முறை பி.தினத்தன்றே பயணமும் அமைந்துவிட்டது. எப்படியாவது வாழ்த்வேண்டுமென கங்கணம் கட்டி அட்டையை கூட அவசரமாக செய்து வாழ்த்தி போட்டேன். . என்க்கு மகிழ்ச்சியே. நல்லா பி.நாளை என்ஜாய் செய்யுங்க அஞ்சு.

      Delete
  11. ஏஞ்சலினுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!
    அழகான வாழ்த்தித‌ழ்களும் மனம் நிறைந்த வாழ்த்துக்களுமாய் சினேகிதிக்கு வாழ்த்து சொன்ன உங்களின் நல்ல மனதுக்கு மனமார்ந்த இனிய பாராட்டுக்கள் பிரிய சகி!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மனோ அக்கா :)

      Delete
    2. வருகை தந்து வாழ்த்தியமைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி மனோக்கா.

      Delete
  12. சகோதரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி டிடி அண்ணா

      Delete
  13. வாழ்த்துக்களுக்கு மிக நன்றி சகோ டிடி :)

    ReplyDelete
  14. ப்ரியா இயற்கை காட்சிகள் படங்கள் அழகு .இங்கும் குளிர்ர்ர்ர்ர் ..எனக்கு அந்த ஸ்வீட் ஆல்மண்ட்ஸ் பிடிக்கும் கூடவே கஸ்தானியன் //செஸ்ட்நட்ஸும்தான் 
    மிக்க நன்றி அழகான கார்ட் செய்திருக்கிங்க கலர் காம்பினேஷன் செம ..கையால் வெட்டி செய்வதும் மிக அழகு ..எஸ் இந்த ரெடிமேட் பஞ்சிங் மெஷினில் சிலசமயம் குட்டியா வரும் ..நீங்கஅழகா செஞ்சிருக்கீங்க .தொடர்ந்து கிராப்ட் செய்யுங்க என் பிறந்தநாளை சிறப்பாக்கியமைக்கு மிக்க நன்றீஸ் 

    ReplyDelete
    Replies
    1. ரோஸ்ட்டட் ஆல்மண்ட் பிடிக்காதவங்களே இல்லை அஞ்சு. மிக்க நன்றி அஞ்சு

      Delete
  15. ஏஞ்சலினுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளும் இணையட்டும். வாழ்த்தட்டை மிக அழகு.

    பாதாமை சீனிப்பாகில் வறுப்பதா.. செய்முறை சொல்லுங்க நானும் செய்துபார்க்கிறேன். வீட்டில் நிறைய பாதாம் இருக்கு.

    ஊருக்கு நல்லபடியாக போய்வாங்க.. புத்தாண்டு இனிதாய் அமையட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா.கண்டிப்பா செய்முறை போடுகிறேன். வந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி கீதா.

      Delete
  16. குயிலிங் கார்ட் மிக அழகு அம்முலு...

    //இது அஞ்சுவுக்காக.....கார்த்திகைபிறைக்கு அல்ல,அல்ல,அல்ல///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. எனக்கு இனிப்புப் பிடிக்காது உது வாணாம்ம்:)), எனக்கு நல்ல உறைப்பு மிளகாய் போட்டுப் பிரட்டித் தாங்கோ:))

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்....வடிவா பாருங்கோ. குயிலிங் கார்ட்டோ..
      பாதாமை உறைப்பு போட்டும் செய்யலாம் என நினைக்கிறேன். ஆனா எனக்கு அது தெரியாது.
      இல்லாவிட்டால் தந்துவிடுவேன்..

      Delete
  17. ஆவ்வ்வ் மிக அழகிய இயற்கை, அழகாகப் படமெடுத்திருக்கிறீங்க அம்முலு, ஃபிரேம் பண்ணலாம் போல இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. தாங்க்யூ.. இது முன்புபோட்ட பதிவின் இடங்கள்தான்.(அன்னம் பதிவு) இப்ப எல்லா இலையும் காய்ந்த பின் நடக்க போனபோது சும்மா க்ளிக் செய்தேன்.

      Delete
  18. ///ஆ....இது கார்த்திகைபிறைக்காக..... நான் சொன்னேன் இல்லையா இடிதாங்கி//

    ஸ்ஸ்ஸ்ஸ் இப்போ அன்னக்கிளி.. அன்னக்கிளி:))..

    ஓ தமிழ்க்கடையில் தேடிப்பார்க்கிறேன் கிடைக்கக்கூடும், என்ன ஒன்று குரக்கனில் அலர்ஜி இருக்கு, அடுத்து சாப்பிட்டால் மூக்கெல்லாம் கடிக்கும் கர்ர்ர்ர்ர்:))..

    இனிதே சுற்றுலாவை முடிச்சுக்கொண்டு வர வாழ்த்துக்கள். நான் சொன்ன அந்த ஆலமரம்... ஆலமரம்:)).. படமெடுத்து வரோணும்:))

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இந்த இடிதாங்கி பிடித்திருக்கு...ஹா..ஹா..ஹா
      இது முழுக்க குரக்கன் இல்லை. அதன் பெயரே தவிர.வேறு தானியங்கள் இருக்கு..
      வருகைக்கும், வாழ்த்தியமைக்கும மிக்க நன்றி இடிதாங்கிஈஈ

      Delete
    2. அங்கன ஆலமரம் இருக்கனுமேஏஏஏ.

      Delete
    3. என்னாதூஊஊ ஆலமரத்தைப் பிடுங்கிட்டாங்களோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete

 
Copyright பிரியசகி