RSS

25/11/2019

நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரர்!!

இந்த பதிவை வாசிக்க முன் கண்டிப்பா இந்த videoவை பார்த்தபின் தான் வாசிக்க செல்லவேண்டும்.



ஊரில வீட்டு வளவுக்குள் 2,3 மரம் வைச்சிருக்கிற நிலையில...........
இங்கு கறிவேப்பிலை காண கண்கோடி வேண்டும். அரிதான ஒன்றாகிவிட்டது. இடைக்கிடை கிடைக்கும். ஆனா முடிந்துவிடும்.  நாங்க ஏசியன் கடைக்கு போகவே 1 மணித்தியாலம் வேணும். அதைவிட அதன் விலைக்கு 3 பால் பாக்கெட், 2 மா பாக்கெட் வாங்கிடலாம். அப்படியான ஒன்றாகிவிட்டது.  இங்கு இறக்குமதி செய்தவர்கள்தான். ஆனால் அதில் பூச்சிகள் இருந்ததை பார்த்து அதை தடை செய்துவிட்டார்கள்.  திருட்டுதனமா தரைவழிபாதையாக வருகிறது என்கிறார்கள்.  இருக்கிறது, ஆனா விலை.  நாங்கதான் ஒன்றுக்கு அடிமையானால் விடமாட்டோமே.. அப்படியானதுதான் இந்த கறிவேப்பிலை விடயம்.  அதை குழம்பில் காணவில்லை எனில் (அதை சாப்பிடுகிறோமோ, இல்லையோ அது வேறு விடயம்) கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லமுடியாது. இங்கு 15கி  1 யூரோ 85 சென்ட்.  

இப்படி நிலமை இருக்க ஆபத்பாந்தவனாக எங்களுக்கு தெரிந்த அக்கா ஒருவர் சின்னதா கறிவேப்பிலை செடி தந்தா. ஆ....சந்தோஷமோ சொல்லமுடியாது வார்த்தைகளால்.  அதன் பின்புதான் எனக்கு செடி பராமரிப்பு தேடல் ஆரம்பம் ஆனது.
அதற்கிடையில் ஊருக்கும் போகவேண்டி வந்தது. அப்போ இந்தமாதிரி ஒரு முன்னேற்பாடு செய்துவிட்டு  சென்றேன். (எனது நண்பி வந்து தண்ணீர் ஊற்றுவதாக சொன்னா. அவாவிடம் தண்ணீர் பார்த்து விடச்சொன்னேன்.)  அப்போ இவா வீட்டிற்கு வந்த புதிதில்.. (ஹா..ஹா.. செடியை மரியாதையாக சொல்வதுதான் என் வழமை. அப்படியே வீட்டினருக்கும் பழக்கிவிட்டேன். )


இதுதான் அந்த கறிவேப்பிலை செடி. இது  கொஞ்சம் வளர்ந்தபின் எடுத்தது.

வீட்டில 3K நிற்கிறார்கள். (கற்பூரவள்ளி,கற்றாழை,கறிவேப்பிலை. பிறகு பிறை வந்து கேள்வி கேட்பா. முன் எச்சரிக்கையா எழுதியாச்சு)


ஊருக்கு போயிட்டு வந்தபின் ஒரு 4,5 மாதத்தின் பின்  என் கறிவேப்பிலை செடி நோய்வாய்ப்பட்டு இந்த நிலமைக்கு வந்துவிட்டது. உண்மையில் எனக்கு சரியான கவலை. என்னவெல்லாமோ செய்து, யாரையோ கேட்டு, வீடியோ பார்த்து செய்தால் அவா பட்டுபோய்விட்டா. ஏன் எனத்தெரியவில்லை. சொல்லமுடியாகவலையெனக்கு.😢😢😢


ஊருக்கு போயிட்டு வரும்போது சில செடிகள், விதைகள் கொண்டு வந்தேன். அதில் நான் சின்னபிழை விட்டுவிட்டேன். என்ன விதை என எழுதாமல் விட்டது. சரி போட்டுபார்ப்போம், வந்தபின் தெரியும்தானே என விட்டுவிட்டேன்.
அதில் எங்க வீட்டு கறிவேப்பிலை மரத்திலிருந்து ( பெரியமரமா நிற்கிறா. இம்மரம் நான் சின்னபிள்ளையாக இருந்தபோது இருந்த மரத்தின் மகள்மரம்.) சில விதைகளை எடுத்துக்கொண்டு வந்தேன். இங்கு சிறு தொட்டியில்  சிலதை போட்டு வைத்தேன். என்ன விதை எனத்தெரியாமலே கறிவேப்பிலை விதையை  கனகாம்பர செடியின் தொட்டியில் விதைத்தேன்.  பின் மறந்தும் போனேன். கனகாம்பரம் சிலநாளில் பட்டுவிட்டது. பின் தொட்டியை எடுக்கச்சொல்லி கணவர் சொல்ல, நான் பார்த்தபோது  ஏதோ சின்னதா துளிர் இருக்க,  அதுவே என் மனதிலும்... மனம் படபடத்தது. என்னவா இருக்கும் என ஆர்வத்தோடு சில நாட்கள் பொறுமையை கடைபிடித்தேன்.  கொஞ்சம் வளர்ந்திருந்து 2 இலைகள் வர ஆர்வக்கோளாறால் தொட்டு பார்க்க. நல்ல வாசம்.  ஆவ்..... ..கறிவேப்பிலை.
வா..வ் எனக்கு பயங்கர சந்தோஷம். எங்க வீட்டுச்செடி இப்போ இங்கு என் வீட்டில்..

இது கடந்த வருடம் ஊருக்குபோனபோது (முதல் செய்தமாதிரி) பிளாஸ்டிக் கானில் (Plastic can) தண்ணீர் விட்டு அதற்குள் கயிறு (நான் நூல் கயிறு அதாவது ஸ்கிப்பிங் skipping rope பயன்படும் கயிறு) விட்டு, மற்றைய நுனியை செடியினுள் வைத்தால் தண்ணீர் அளவாக சொட்டும். கானில் தண்ணீர் மட்டும் பார்த்து நிரப்பினால் போதும்.  இந்த ஏற்பாட்டை செய்தேன். பின் மகனார் பார்த்து தண்ணீர் விட்டு விட்டார்.  வீட்டினுள் இருந்த எல்லா செடிகளுக்கும் இந்த முறையை பாவித்தேன்.

இந்த  வருடம் இன்னும் சில விடயங்களை செய்து, இப்போ நன்றாக வளர்ந்து அவாவும் 2 குட்டிசெடிகளை  தந்துவிட்டா. இப்போ வீட்டில் கணவர் பிடுங்க விடுவதேயில்லை.  அது இன்னும் கொஞ்சம் வளரட்டும் என்பதால்.. .அதை சும்மா தொட்டாலே நல்ல வாசம். அதைவிட எங்க வீட்டு செடி என்ற செண்டிமெண்ட் வேறு. ஆனா நான் பச்சடி, சாலட் க்கு போட அதில் ஆய்ந்து போடுவேன். நன்றாக இருக்கும். கறிவேப்பிலை வளர நீண்டநாட்கள் எடுக்கும். ஊரில் மரத்தின் கீழ் நிறைய செடிகள் இருக்கு. காகம் அதன் பழங்களை கொத்தி கீழே போட அவை வளருகிறது.
 
                      
                 இப்ப உடனே எடுத்த போட்டோ. வெயில் இல்லாததால் இப்படி.3 கிளைகளுடன்..

நல்ல பராமரிப்பு இருந்தால் இந்நாட்டிலும் வளர்க்கலாம். இங்கு எங்க நாட்டு செடிகள் வளர்ப்பதென்பது சவாலான விடயம். எங்க ஊர் வெப்பநிலை இங்கில்லை. அதை விட 5, 6 மணித்தியாலங்கள் வெயில் கண்டிப்பா தேவை. இப்ப பாருங்கோ இங்கு 4 மணி எனில் இருள் சூழ ஆரம்பித்துவிடும். 4 மாதம் கொஞ்சம் சிரமம். முயர்சி செய்து வளர்த்து வருகிறேன். மேலும் சில செடிகள் இருக்கு.அவை பின்னர் வரும். பிறகு கார்த்திகைபிறை பொயின்ட் ஆயிடுவா.
அதற்காக நீங்க கோடீஸ்வரியோ? எனக்கேட்ககூடாது. இங்கு இவா வீட்டில் நின்றாலே இப்போதைக்கு கோடீஸ்வரிதான்.
*******************************************************





35 comments:

  1. எப்படியோ தடை(க்)களை கடந்து கருவேப்பிள்ளை வளர்த்து கோடீஸ்வரி ஆவதற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆ.. எனக்கு தெருகோடியே வேண்டாம். அதுதான் கடைசியில் சொல்லியிருக்கேனே. இவா நின்றாளே கோடீஸ்வரிதான். நன்றி அண்ணா ஜீ

      Delete
    2. //தெருகோடியே//

      தெருக்கோடி எண்டால் வீட்டின் கொல்லைப்புறமெல்லோ??:) ஹா ஹா ஹா

      Delete
    3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... பூஷ் பாசையில் கொல்லைபுறமோ தெரியாது. தெருகோடி தெரியாம தமிழ் ல டி என பெருமை. இலக்கிய செம்மல் என பட்டம் வேறு.

      Delete
  2. ஆஆஆஆவ்வ்வ்வ் வாறேன் வாறேன்ன்ன் வெளியில நிக்கிறேன்ன்ன்ன்

    ReplyDelete
    Replies
    1. ஆ...வாங்கோ வாங்கோஓஒ..

      Delete
  3. //இந்த பதிவை வாசிக்க முன் கண்டிப்பா இந்த videoவை பார்த்தபின் தான் வாசிக்க செல்லவேண்டும்.//

    ஹா ஹா ஹா கர்ர்ர்:)), வீடியோப் பார்த்தால் என் எக்கவுண்டில எவ்வளவு போடுவீங்க எனச் சொல்லுங்கோ பார்க்கிறேன்ன்:)) பின்ன நானும் கோடீஸ்வரர் ஆக வேண்டாமோ?:)

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா...ஹா... வேணுமெண்டால் குட்டி ஆளை தந்து உங்களையும் கோடீஸ்வரி ஆக்கட்டோ... ..
      இந்த பதிவை எழுதீட்டு இந்த வீடியோவுக்காக வெயிட்டிங். ஏனென்றா வாட்ஸப் ல வந்ததை அழிச்சுபோட்டேன். பின் ஒருமாதிரி எடுத்து போட நாளாச்சு.

      Delete
  4. //இங்கு கறிவேப்பிலை காண கண்கோடி வேண்டும். //

    ஹா ஹா ஹா உண்மைதான், இப்போதான் எங்கள் தமிழ்க்கடைக்கு வருது, 3 நெட்டுக்கள் மட்டும் 1.25 பவுண்டுகள்.. அதை வாங்கி என்ன செய்ய முடியும்... குக்கருக்குப் பக்கத்தில் வச்சுப்போட்டுக் கறி சமைக்கோணும்:))..

    நான் எப்பவும் கனடாவில் இருந்தே எடுத்து வருவேன், அங்கு பெரீஈஈஈய கட்டு வன் டொலருக்கு கிடைக்கும். நிறைய வாங்கி, உருவி கழுவி பாக்கில் போட்டு எடுத்து வந்து அப்படியே ஃபிரீசரில் போட்டு விடுவேன்.. அப்படியே பச்சையாக 3 மாதங்களாவது இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அதுதான் அதிரா. அதிலும் சிலவேளை நல்லது இல்லை. சரி வந்ததை பாதுகாக்கலாம் என்றால் 2,3 நாட்கள் மட்டுமே. இதனால நான் ஊருல இருந்து வரும்போது நிறைய கறிவேப்பிலையை கொஞ்ச எண்ணெயில பொரித்து அக்கா தந்தவா. அதோடு பொடியும் செய்து தந்தா.. அப்படியே பொரித்ததை ப்ரீசரில் போட்டாச்சு. இடையிடையே எடுப்பேன். பொடி முடிஞ்சுபோச்சு. வாசமும் இருக்கும் பொரித்ததில் நல்லா பொரிக்கிறதில்லை. ஓரளவு.
      நீங்க செய்ததும் நல்ல விடயம்தான். நான் ஆரம்பத்தில் அப்படித்தான் செய்தேன். இப்ப இல்லை ஒன்னும் செய்யமுடியாது.

      Delete
  5. //இதுதான் அந்த கறிவேப்பிலை செடி. இது கொஞ்சம் வளர்ந்தபின் எடுத்தது.
    //
    வாவ்வ்வ்வ்வ்வ் சொல்லி வேலையில்லை எவ்ளோ அழகாக வளர்ந்திருக்கு.. பொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராமையா வருது எனக்கு.

    ஹீட்டருக்கு பக்கத்தில் வைத்தால் நன்கு வரும் என்கின்றனர், ஆனா எனக்கு இது கிடைக்கவில்லை, என்ன ஒரு அழகாக வளர்ந்திருக்கே... பச்சையாக டெய்லி 2 இஅலி காலை மாலை சாப்பிட்டால் அயன் பிரசனைகளிலிருந்தும், வாய்வுத்தொல்லைகளிலிருந்தும் விடுபடலாம் என்கின்றனர்... வீட்டுக்குள் எப்பவும் கறிவேப்பிலை வாசம் வீசுமே?

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..நான் கஷ்டப்பட்டு வளர்த்திருக்கேன். ஹீட்டருக்கு பக்கத்தில் வைக்ககூடாது. நல்ல வெளிச்சம் வேணும். வெயில்தான் முக்கியம்.
      ஒன்லைனில் விதை கிடைக்கும் என கேள்விபட்டேன். ஆனா தெரியவில்லை.
      இதுவும் எனக்கு நினையாபிரகாரம் வந்தது அதீஸ் நான் எதிர்பார்க்கவே இல்லை. மணத்தக்காளியோ என நினைத்தேன். அதுவும்,துளசி விதை, இன்னும் ஒன்று அக்கா தந்தவா. க.வே.விதை நான் காகம் மரத்திலிருந்து கொத்தி போட எடுத்து கழுவி வைத்து விட்டு கொண்டு வந்தேன். செடிகள் இருக்கு .ஆனா கொண்டு வரவில்லை.
      கர்ர்ர் இங்கன பிடிங்கவே விடுயினம் இல்லை. வாசத்தில கண்டுபிடிக்கினம்.
      கிட்ட போனால் வாசம் இருக்கு.

      Delete
  6. //இதுதான் அந்த கறிவேப்பிலை செடி. இது கொஞ்சம் வளர்ந்தபின் எடுத்தது.
    //

    ஆஆஆஆஆஆஅ நீங்க ஏதோ காசுக்கணக்கைப் பாஸ்வேர்ட் போட்டுச் சொல்றீங்க என நினைச்சுட்டேன் கர்ர்:))..

    கற்பூரவல்லி முன்பு எங்கள் வீட்டிலும் இருந்துதே:).. கத்தாளையும் வளருதோ அவ்வ்வ்வ்.

    4,5 மாதங்கள் முன்பு, எங்கள் வீட்டுக்குள் இருக்கும் செடிகளையும் படமெடுத்தேன் புளொக்கில் போட, ஆனா புதுசு புதுசா எழுத வந்து, இப்படி ஆயத்தப் படுத்திய போஸ்ட் எல்லாம் பெண்டிங்கில் நிக்குது:)..

    ReplyDelete
    Replies
    1. //ஆஆஆஆஆஆஅ நீங்க ஏதோ காசுக்கணக்கைப் பாஸ்வேர்ட் போட்டுச் சொல்றீங்க என நினைச்சுட்டேன் கர்ர்:)).//
      என்ன சொறீங்க. விளங்கவே இல்லை.
      கற்றாளை வளருதோ அதன் வளர்த்தி பார்த்து எனக்கே பயம் வந்திட்டுது. பின் வெட்டி கேட்காத ஆட்களுக்கு கூட கொடுத்தேன். இங்கு குட்டியா ஒரு கன்று சரியான விலை. ஜெல் கூட எடுத்து முகத்துக்கு பூசுவேன். இப்ப வேறு ஒரு தொட்டியில் நட்டுவைத்திருக்கேன். இங்கன வந்தால் உங்களுக்கு தாறேன்.
      ப்ளாக் போடுங்கோ.

      Delete
  7. ///பிறகு பிறை வந்து கேள்வி கேட்பா. முன் எச்சரிக்கையா எழுதியாச்சு)
    ///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வெறும் பிறை அல்ல:), கார்த்திகைப் பிறையாக்கும்:)) ப்ன்பு தேய்பிறையோ என நினைச்சிடப்போகினம்:))

    ஓ பார்க்கவே கவலையாக இருக்கு மரத்தை, இவ்ளோ பெரிசா வளர்ந்து பட்டுவிட்டதேஎ, வேருக்கு ஓவர் தண்ணி போய்த் தேங்கினாலும் பட்டுவிடும் அம்முலு...

    ReplyDelete
    Replies
    1. மூன்றாம்பிறை அதை விட்டுடீங்களே :) அடிதாங்கி 

      Delete
    2. ஓம் அதிரா தண்ணீர் கூடிவிட்டதுதான் திடீரென இலைகள் வாடி கொட்டத்தொடங்கிவிட்டது. சரியான கவலை எனக்கு. கணவர் வேறு கோபித்தார்.சரியா கவனிக்கல என்று. ஆனா பிறகுதான் தெரிந்தது.போதிய வெளிச்சமும் காணாது என..
      பிறை என்றால் ஒன்றுதான். ஆனபடியால் நீங்க என்று தெரியும்.

      Delete
  8. //வா..வ் எனக்கு பயங்கர சந்தோஷம். எங்க வீட்டுச்செடி இப்போ இங்கு என் வீட்டில்..//

    ஹா ஹா ஹா உண்மைதான் சில விசயங்கள் நமக்கு ஓவர் மகிழ்ச்சியைக் குடுக்கும். ஆனா நாங்க இதுவரை கன்றாக வாங்கித்தான் நட்டதுண்டு ஊரில். இப்படி முளைத்திருக்கே அதுவும் விதையில்..

    நாம் பயணம் செல்கையில், சாடிக்கு கீழே வைக்கும் தட்டு முட்ட தண்ணியை விட்டு விடுவேன், எங்களுக்கும் நண்பர் குடும்பம் வந்து பார்ப்பார்கள் ஆனா செடிக்கு தண்ணி ஊத்தச் சொல்லிச் சொல்வதில்லை, ஒரு மாதிரி இருக்கும் ஸ்கொட்டிஸ் நண்பர்கள் எல்லோ...

    சின்ன சாடிகள் எனில், ஒரு பெரிய பிளாஸ்ரிக் பெட்டியில் தண்ண்ணி நிரப்பி, அதனுள் சாடியை தூக்கி வச்சுவிடுவோம், அப்போ கீழிருக்கும் துவாரம் மூலம் தண்ணி உறிஞ்சுமோ என்னமோ படாது செடிகள்.

    //மேலும் சில செடிகள் இருக்கு.அவை பின்னர் வரும். பிறகு கார்த்திகைபிறை பொயின்ட் ஆயிடுவா.//

    இந்த ஒருமரம் பார்த்து, பார்த்த உடனேயே பெயிண்ட் ஆகிட்டேன்ன் எனக்கு நஷ்ட ஈடு தேவை:)).. அப்போ ஜேர்மன் காரர் எல்லாம் கறிவேப்பிலைக்கோடீஸ்வரர் போல இருக்கே ஹா ஹா ஹா.

    ReplyDelete
    Replies
    1. //அப்போ ஜேர்மன் காரர் எல்லாம் கறிவேப்பிலைக்கோடீஸ்வரர் போல இருக்கே ஹா ஹா // கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....ஜேர்மன்காரர் எல்லாரும்
      இல்லை. இங்கு எனக்கு தெரிந்து அந்த அக்காவீட்டில் அதுவும் அவா மிகவும் தூரத்தில் இருக்கிறா. என்னிடம் மட்டுமே இருக்கு. வேறு யார் வீட்டில் இருக்கோ தெரியாது. இது கொஞ்சம் வளர லேட்டாகும். பொறுமையா இருக்கோனும். நீங்க கிடைச்சால் வையுங்கோ நான் சில டிப்ஸ் சொல்லுறன். வளர்ந்திட்டால் பிறகு பிரச்சனை இல்லை.
      இந்த மாதிரி தண்ணீர் செட் பண்ணினாலும் ஓகே. 3,4 கிழமைக்கு மேல் எனில் கஷ்டம். எனக்கும் இப்போ மகன் நிற்கிறபடியால் பரவாயில்லை. 3பேரும் வெளிக்கிட்டால் கஷ்டம்.ஆனாலும் அதுவும் கஷ்டம்தான் கூடக்குறைய ஊற்றினால் பிரச்சனை. இன்னொரு செடிக்கும் இதே பிரச்சனை வந்து மீட்டெடுத்தது தனிக்கதை.
      செடிகள் வைத்தால் அதோடு பேசவேணும் அதிரா. கட் செய்யவேணுமெண்டால், பிடுங்கவேணுமெண்டால் சொறி சொல்லிதான் செய்வேன். இப்படி நிறைய விடயங்கள்.

      Delete
    2. மிக்க நன்றி அதிரா வந்து கருத்திட்டமைக்கு.

      Delete
  9. ஆஆஆஆ !!! கறிவேப்பிலை செடியா !!!! ஊரில் சென்னையில் மழை பெய்து ஒரு வாராதில் தோட்டமெல்லாம் பெரிய செடியின் விதைகள் பரவி குட்டி செடிகள் முளைச்சிடும் ..ஹ்ம்ம் அதெல்லாம் நினைக்கவே ஏக்கமா இருக்கு .
    நீங்க கோடீஸ்வரி இல்ல அதுக்கும் மேலே :) பின்னே இலங்கை செடியை இங்கே ஜேர்மனிய வளர்ப்பது என்பது சும்மாவா !!!! 
      நல்லா  இருக்கட்டும் கருவேப்பிலை கண்ணுகள்   //குழந்தைகள் .
    உங்கள் கணவர் சொல்வது உண்மைதான் இப்படி ஆசையுடன் வளருவதை அதுவும் பரம்பரை உறவான சொத்தாச்சே :) நிச்சயம் பிரிக்க பறிக்க மனமே வராது .
    மூணு குழந்தைகளும் அதான் k :) களும் அழகா இருக்காங்க .எனக்கொரு நட்பு கஷ்டப்பட்டு கனகாம்பரமும் கற்றாழையும் போஸ்டில் அனுப்பி வைத்தார் நானும் வீட்டில் உள் கற்றாழையை நட்டு பத்திரமா வளர்த்து வந்தேன் ..பெரிய பிசினஸ் எல்லாம் கண் முன் வந்து போச்சு  பின்னே இங்கே ஒரு முழங்கையளவு கற்றாழை விலை 6.99 பவுண்ட்ஸாச்சே .கறிவேப்பிலையும் 15 கிராம் அளவு பாக்கெட் 1.99 பவுண்ட்ஸ் ..ஊருக்கு போகும் உறவினர்கள் கொத்தா எடுத்து வருவாங்க அதை நியூஸ் பேப்பரில் சுற்றி ப்ரீசரில் வைப்பேன் ..ஆங் அந்த கற்றாழையும் கனகாம்பரமும் அழகா வளர்த்தாங்க அப்போ வீட்டுக்கு ஒரு புது வரவு நாலு கால் வால் குட்டி ஜெசி :) அதை விளையாட்டு பொருள்னு நினைச்சி கிளரி  எடுக்கும் அதுவும் நாங்க வெளியில் போயிருக்கும் டைம் பார்த்து செய்யும் :)4/5 முறை கற்றாழையை உயிர்ப்பித்தேன் அதுக்குமேல முடியலை :( அதுவும் எவ்ளோதான் தாங்கும் ....போச்சு அப்புறம் ஒரு மஞ்சள் கிழங்கு அதுக்கும் இதே நிலை அதனால் வீட்டுக்குள் செடி வளர்பதில்லைன்னு முடிவெடுத்தாச்சு 

    ReplyDelete
    Replies
    1. வாங்க அஞ்சு. மகிழ்ச்சி ஒரு புறம் என்றாலும் பாதுகாக்கவேணுமே என்ற பயம் வேறு. கடைசி 2மாதமும் ஆரம்பம் 2மாதமும் கஷ்டமா இருக்கு. அதுவும் நான் இல்லையென்றா இன்னும் கஷ்டம்.
      ஆனாலும் நல்ல சந்தோஷம்தான். வாங்கவேமுடியுதில்லை. நானும் அலுமியபாயில் சுற்றி பாக்ஸ் ல் போட்டு டைட்டா மூடி வைச்சால் கொஞ்சநாள் இருக்கும். அல்லது ப்ரீசர் ல வைக்கலாம்.
      ஆவ்வ்வ் கற்றாழை இல்லையா. ஓ...ஜெசியின் குழப்படி. உயரத்தில் வைத்தாலும் கஷ்டமா? இங்கு எனக்கு தாராளமா வளருது. இன்னொரு தொட்டியிலும் வைத்திருக்கேன்.
      நான் மகனுக்கும் சொல்லியிருக்கேன் இதன் அருமைகளை. அதனால அவர் யாராவது வருகிறார்கள் என்றால் ஸ்டோர் ரூமில் வைத்துவிடுவார்.அவ்வ்வ்வ்வ்
      பெரிய தொட்டி வேற. அப்படி அவாவுக்கு டிமாண்ட்

      Delete
  10. ஹாஹாஆ காணொளி ரசித்தேன் :) கறிவேப்பிலையால்  மில்லியனர் ஆகிட்டார் :) இங்கே வாழை மரம் கூட லண்டனில் வளர்க்கிறாங்க ..ஒரு சிட்டியில் வாழை தோட்டம் வெறும் தொட்டியில் வாழை  மரங்களை நட்டு வளர்த்திர்க்கார்  ஜெர்மனியில் இருந்து இங்கிலாந்து வந்தவர் :) வாழை மரம் இலையெல்லாம் பார்க்கா ஆசையா இருந்தது .இங்குள்ள லண்டன் வாழ் பங்களாதேஷியர் இப்படி வாழை கறிவேப்பிலை எல்லாம் வீட்டில் கன்சர்வேட்டரி யில் வளர்க்கிறாங்க 

    ReplyDelete
    Replies
    1. ல்ண்டனில் வாழை வைத்திருப்பது தெரியும்.ப்ரெண்ட் வீட்டிலும் நிற்கிறது. வீடியோ ஒன்று லண்டன்காரர் போட்டிருந்தார்கள்.பார்த்தேன்.
      இங்கும் வைத்திருக்கிறார்கள் வீட்டிற்குள். சில்ர் விண்டர்கார்டின் செய்து அதற்குள் வளர்க்கிறார்கள்.

      Delete
  11. எங்க வீட்டில் மணத்தக்காளி மட்டும் வருடந்தோறும் வளரும் அக்டொபர் வரை பறித்து பின்னே செடியுடன் சில பழங்களை விட்டுடுவேன் அது அடுத்த வருஷம் வரை தூங்கி மீண்டும் மார்ச் ஏப்ரலில் வளரும் 

    ReplyDelete
    Replies
    1. நானும் மணத்தக்காளி,துளசிவிதை,கீரை என கொண்டு வந்து போட்டு ஒன்னுமே வரல்லை. கர்ர்ர்ர். இப்ப திரும்ப அனுப்பியிருக்கினம் .இனி மார்ச் வந்தபிந்தான் எல்லாமே.. அதுவரை இண்டர்வெல்.

      Delete
  12. கறிவேப்பிலையை வாசம் வீடெல்லாம் வருதா ?? இவரை நல்லா வளர விட்டு   இதிலிருந்து பூ விதை வரும் அதையும் சேமித்து வேற தொட்டியில் நடுங்க .உங்க கறிவேப்பிலை விசா இல்லாம    ஜெர்மனி வந்து இப்போ deutsch சிட்டிசன் ஆகிடுச்சு :))

    ReplyDelete
    Replies
    1. ஓம் அஞ்சு நல்ல வாசம். ஆனா அவா நிற்கும் இடம் மட்டும் .இன்னொரு செடிதான் வீடு முழுக்க வாசம். அது பின்னர் வரும்.
      உண்மைதான் அஞ்சு. விசாஇல்லாமல் வந்து என்னை ஆச்சரியமான சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறா.

      தரமுடிந்தால் உங்களுக்கும்,அதிராவுக்கும் கன்றுகளை தந்துவிடுவேன்.

      எனக்கு அந்த கன்றில் கூட டவுட். எப்படி அவை வந்திருக்கும். பூ,பழம்,காய் வரல்லையே. நான் ஏதாவது திரும்ப விதை போட்ட ஞாபகமும் இல்லை. ஆனா வந்திருக்கினம். பார்ப்போம்.

      Delete
    2. மிக்க நன்றி அஞ்சு வந்து கருத்திட்டமைக்கு.

      Delete
  13. அம்மு வாழ்க வளமுடன்.

    காணொளி பார்த்தேன். அருமை. கருவேப்பிலையின் அருமை அறிய வெளினாடு போக வேண்டும்.

    //இங்கு இவா வீட்டில் நின்றாலே இப்போதைக்கு கோடீஸ்வரிதான்.//

    நீங்கள் கோடீஸ்வரிதான்.

    வாசம் உள்ள கருவேப்பிலை என்றால் கூடுதல் மகிழ்ச்சி.
    மருமகளும், மகளும் கருவேப்பிலையை கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு வளர்க்கிறார்கள்.

    ஊருக்கு போகும் போது செடிகளூக்கு தண்ணீர் சொட்ட செய்த முறை அருமை.

    நம் வீட்டு கருவேப்பிலை கொஞ்சம் போட்டாலே மனதுக்கு மகிழ்ச்சி.
    படங்கள் எல்லாம் அழகு.
    இன்று அம்மாவின் நினைவு நாள் அமாவாசை பிறகு வருகிறேன் அனைவரின் கருத்தை படிக்க.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அக்கா. ஆமா அக்கா. இதன் அருமை இங்குள்ளவங்களுக்கு மட்டுமே தெரியும். ஊர்ல மேலதிகமா இருக்கு.
      எங்க குடும்ப நண்பருக்கு தெரியும் அவர் இப்படிதான் அழைப்பார்.
      மிக்க நன்றி அக்கா வந்து கருத்திட்டமைக்கு.

      Delete
  14. காணொளி பார்த்தேன் ...நல்லா இருந்தது அம்மு

    கருவேப்பிலை இங்கு முன்ன free கேட்டா தர மாட்டாங்க 5 ரூபா தந்து வாங்குவேன் ...ஆன இப்போ புதுசா ஆரம்பித்த காய்கறி கடைகளில் தராங்க என்னமோ அதுக்கே அவ்வொலோ சந்தோசம் ..

    உங்க செடி படம் எல்லாம் பசுமையா , அருமையா, அழகா இருக்கு அம்மு ...வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நீங்க தொட்டியில் வளர்க்கலாமே அனு. இங்கு கிடைப்பதே அரிதாக இருக்கு. மிக்க நன்றி அனு.

      Delete
  15. Replies
    1. மிக்க நன்றி அண்ணா.

      Delete

 
Copyright பிரியசகி