RSS

26/08/2014

பிரமிட் தேசத்தில்...

இந்தவருட கோடைவிடுமுறைக்கு நாங்கள் எகிப்தில் Hurghada எனும் இடத்திற்கு சென்றுவந்தோம். இது செங்கடல் பகுதியாகும்.  பாடப்புத்தகத்தில் எகிப்தைப்பற்றி படித்ததுதான். அங்கு போவது என்பது ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியாக இருந்தது. என்னவருக்கு புது இடங்கள் பார்க்கபோவது என்பது மிகப்பிடிக்கும். இம்முறை இவ்விடத்தினை தெரிவு செய்து புறப்பட்டோம்.
 வீட்டிலிருந்து புறப்பட்டு....
                           இதில் Ausfahrt என்பது Exit
 விமான நிலையத்தில்...
நாங்க சென்ற விமானம்..
 விமானம் ஏறியபோது. அழகு!!!!(ஜேர்மனி)
    விமானம் இறங்கியபோது.. Hurghada
                   ஹோட்டல்..
எனக்கு விமானத்தைவிட்டு இறங்கியதும், என்னடா இது சூரிய
மண்டலத்திற்கா வந்தோம் என நினைக்குமளவு வெய்யில், சூடு. நாங்க வெளிக்கிடும்போது ஜேர்மனியில் மழை. அதற்கு நேர்மாறா hurghada இருந்தது. தங்கிய ஹோட்டல் மிகப்பெரியதாக இருந்தது.  உள்ளே மிக நன்றாக
பராமரிக்கிறார்கள். 3 நீச்சல் குளம் இருக்கின்றது. ஓரே ஆறுதல் பக்கத்திலே செங்கடல். பகலில் வெளியில் செல்லமுடியாதளவு வெய்யில். மாலை வேளைதான் சுற்றிவரமுடிந்தது. வானத்தில் ஒரு சின்ன புள்ளியா கூட முகில் இல்லை. அப்போதான் எனக்கு ஸ்னோ கொட்டினால் என்ன என்று இருந்திச்சி.
ம்.ம்ம் அக்கரைக்கு இக்கரை..... 

செங்கடல் (Redsea). தண்ணீரில் உப்பு மிகமிக அதிகம். அவ்வூர் வெயில் மாதிரி.
            ஹோட்டல் உள்ளே...
இப்படித்தான் எங்கு காணினும் பேரீச்சைமரங்கள். கடைகளில் காணக் கிடைக்கவில்லை. ஆனால் ஹோட்டல்வளாகத்தில் நிறைய காயிலிருந்து பழம் வரை. இங்கு ரமலான் நேரம் மஞ்சள் நிறகாய்கள் வரும். 
 நான் ஸ்டெப் பை ஸ்டெப் போட்டோ எடுத்திருக்கேன்.பாருங்க.
இங்கு அரளிப்பூ,நொச்சிப்பூ,போகன்வில்லா அதிகமாக கண்டேன்.அதைவிட விபூதிப்பச்சை மரம் வீதியில் கண்டபடி வளர்ந்திருக்கு. இதைமட்டும் போட்டோ எடுக்காம மிஸ் பண்ணிட்டேன்.!!!!!!
இவைகள் அங்கு உள்ள கடைகள்..
அங்கு நாங்க முக்கியமான  எகிப்தின் பண்டைய வரலாற்று புகழ் மிக்க கர்னாக் கோவில் (KarnakTemple),  Mortuary Temple of Hatshepsut  சென்று பார்த்தோம். கர்னாக் கோவில் லுக்ஸோர் (Luxor) எனுமிடத்தில் இருக்கிறது. அங்கு இன்னும் வெயில்.ஆனாலும் அந்த வெயில் கூட ஒரு அழகு. ஏனென்றால் 2நாளில பழகிவிட்டது. போகும் பாதையெல்லாம் ஓரே பாறை. பச்சை பசேல்களை காணமுடியவில்லை. அருகில் சின்னதா கூட ஊர்களில்லை. இப்பவும் அப்பாதையை நினைத்தால்..???ஆக்ஸிடெண்ட் ஆகி ஒரு வாகனம் கூட நின்றிருந்தது. அவ்வழியால் சென்ற வாகனங்கள் நிற்ககூட இல்லை. எங்க பஸ் உட்பட. பொலிஸார் வர 3,4 மணிநேரமாகும் என்றார் சுற்றுலா வழிகாட்டி.(guide).
 அப்பாடா ஒருவழியா ஊரையும், பச்சைபசேல்களையும் காணமுடிந்தது.
நைல்நதி. இதில் 2மணித்தியாலம் பிரயாணம் செய்தோம். உலகின் நீளமான நதியில் பயணம்.நைல் நதி ஓடும் பக்கம் பசுமைதான்.அதனையும் தாண்டி பார்த்தால் பாறைகள். இங்கு மாம்பழம்,வெண்டிக்காய்,பீன்ஸ் அதிகமாக கண்டவை. வாழைப்பழம் எனக்கு என்னவோ நம்மூர் இதரை வாழைப்பழத்தின் ருசியை ஞாபகப்படுத்தியது.
இதுதான் வரலாற்று புகழ்மிக்க கர்னாக் கோவில்.
இந்த இடத்தில் இன்னும் தாங்கமுடியாத வெயில். தண்ணீர், தண்ணீர்தான். பஸ்ஸில் தாராளமாக தண்ணீர் பாட்டில் கொடுத்திருந்தார்கள். ஆளாளுக்கு 3,4 என்று எடுத்து வந்ததுதான். 
இதில் எகிப்திய பண்டைய எழுத்துக்கள் இருக்கின்றன. hieroglyphic என்று அதனை கூறுவார்கள். 


ஒவ்வொரு எழுத்துருவங்களும் ஒவ்வொரு பொருளையும் குறிகின்றன, இவை பிக்டோகிராம் (pictogram) என அழைக்கப்படும். பல பிக்டோகிராம்கள் சேர்ந்து ஒவ்வொரு ஒலிகளை ஏற்படுத்துகின்றன, ஒவ்வொரு ஒலிகளின் கூட்டங்களும் போனோகிராம் (phonograms)என அழைக்கப்படுகின்றன. இப் போனோகிராம்களே ஒவ்வொரு புதிய பலபல சொற்களையும் உருவாக்க மூலாதாரமாய் அமைகின்றன. 
சுற்றுலா வழிகாட்டி என் பெயரை ஒரு காகிதத்தில் எழுதிவிட்டு,என்னிடம் தரமுன்னமே காற்றில் பறக்கவிட்டிட்டார். உண்மையில் நல்ல வழிகாட்டி.ஜேர்மன் நன்றாக பேசினார். ஒரு பட்டதாரியும் கூட. இம்முறை நான் சிறுநோட்டில் குறிப்புகளாக எடுத்தும்,புரியாததை என்னவரிடம் கேட்டும் எழுதிவைத்ததனால் இங்கு எழுதுவதற்கு பயன்படுகிறது.
 இங்குள்ள சதுரத் தூபி(obelisk) ராணி (Queen )Hatshepsut கட்டியதாகும்.    இது பண்டைய உலகின் மிக உயரமான(97 அடிகள்) ஒற்றைக் கல்லிலான சதுரத் தூபி.
                மேலும் சில படங்கள்.
போகும் வழியில் இவற்றையும் பார்த்தோம். இது அங்கு பாறைக்கல்லிலிருந்து உருவாக்கி விற்கிறார்கள்.
அடுத்து நான் பார்த்த அழகான கோவில்.இதற்கு என்னவரும்,மகனும் வரவே மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். இங்கு அதிக வெயில்.இதுவும் ஒருவரலாறு மிக்க இடம். Deir el-Bahri Temple Complex வளாகமாகும். இந்தக்கோயில் ராணி (Queen) Hatshepsut கட்டியதாகும்.  இந்தகோயில், நைல் நதியின் மேற்கு பகுதியில் உள்ள  ஒரு அரைவட்ட மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
இக்கோவிலுக்கு பஸ் நின்ற இடத்திலிருந்து கொஞ்ச தூரம் போகனும். இப்படி ஒரு வண்டியில்தான் இப்பதையில் பயணித்தேன். காற்று அனலாக......
அங்கு இறங்கியவுடன் படிகளில்!!!!! ஏறி போகனும். வெயிலில் அத்தனை படிகளில் ஏறி, திரும்பி வரும்போது என் அழகான தொப்பியை காற்றில் பறக்கவிட்டு மறக்கமுடியாத வரலாற்று அனுபவமாயிற்று.
 காலையில் 4.30 க்கு ஆரம்பித்த பயணம் எல்லாம் பார்வையிட்டு ஹோட்டலை  வந்தடைய இரவு 9-9.30 ஆயிற்று.
இது Hurghada city ல் பார்த்த அழகான பள்ளிவாசல்.அருகில் கடற்கரை.
இங்கு நான் பார்த்து மனது கஷ்டப்பட்ட விடயம். ஒட்டக சவாரி. எங்களுக்கு துளியும் விருப்பமில்லை. மகன் பார்த்ததும் சொல்லிவிட்டார். இதில் சவாரி செய்ய வேண்டாம் என்று. அந்த ஒட்டகத்தை வைத்து பிழைப்பு நடத்தும் இளைஞருக்கு பணம் கொடுத்தோம். அவர் அவ்வளவுத்தூரம் எங்களை கெஞ்சினார். குறிப்பா பணம் கொடுத்தபின்னரே படம் எடுக்க விட்டார்!!!!

சுற்றுலா இடமென்பதால் நிறைய பயணிகள்.அதிலும் குறிப்பா ஜேர்மனி,ரஷ்யா நாட்டவர்கள் அதிகம். இங்கு வந்ததும் நான் முதலில் திகைத்துவிட்டேன்.ஏனெனில் ஜேர்மன் சுப்பர்மார்க்கெட் பெயர்களில் கடைகள். அல்டி(Aldi), லிடில்(Lidl), Kaufland என்று. அனேக ஆட்களுக்கு டொச்,ஆங்கிலம்,ருஷ்ய பாஷைகள் தெரியும். இரவு நேர shopping தான் அதிகம். நான் பெண்களை காணவேயில்லை.!!!!! அப்படியும் கண்டு எடுத்தவர்கள் இவர்களே. நேரிலே போட்டோ எடுக்க விடமாட்டார்கள். பணம் கொடுத்தால்தான் எடுக்கவிடுவார்கள். அல்லது அவர்கள் விற்கும் பொருளை வாங்க வேண்டுமாம். இது கடையினுள் இருந்து ஒளித்து எடுத்தது.


இதில் எனக்கு சிறிதான மனக்குறை. பிரமிட்டை பார்க்கவில்லையே என.அங்கு இப்போ போவதற்கு தடை.அதனால் போகமுடியவில்லை. ஆனால் ஆரம்பகாலத்தில் மம்மிக்கள் வைத்திருந்த இடத்தை பார்வையிட்டோம். அங்கு படங்கள் எடுக்க தடை.
இங்குள்ள டாக்ஸி இதுதான்..
 மாலை வேளையில்....
ஒருவாறு விடுமுறை இவ்வருடம் இனிதாக கழிந்தது. இவை வரும்போது விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்கள். இது Hurghada.
இவை ஜேர்மனி வந்ததும்....கொள்ளை அழகு மேலிருந்து பார்க்கும்போது. நாங்க திரும்பி வந்தபோது நல்ல காலநிலை.
                         *************************
படங்கள் அதிகம். நான் கொலாஜில் போட்ட படங்கள் அதில் தெளிவாக இருக்கோ தெரியவில்லை. பொறுத்தருள்க. மிகப்பொறுமையாக வாசித்த அனைவருக்கும் நன்றிகள்.
                                         _()_ _()_ _()_ 

 

64 comments:

 1. வணக்கம்
  பதிவை படித்த போது நானும் சென்றுவந்த ஒரு உணர்வு வந்தது. படங்கள் எல்லாம் மிகஅழகாக உள்ளதுபகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. முன் வருகைக்கும், அன்பான கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் சகோ.

   Delete
 2. ரசித்து வாசித்தோம்..
  அருமையான பயணப்பகிர்வுகள்..
  படங்கள் பதிவுக்கு சிறப்புசேர்க்கின்றன..
  பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க அக்கா. உங்க வருகை மகிழ்ச்சியளிக்கின்றது. அன்பான கருத்துக்கு ரெம்ப நன்றிகள்.

   Delete
 3. கண்டேன் ஹர்கதாவை... உங்கள் மூலம்....!!!

  புகைப்படங்கள் அழகு...!!!

  பாலைவன தேசம் அல்லவா...!!!
  பசுமை காணக் குறைவுதான்...!!!

  இனிமேல் தான் அவ்விடம் காண வேண்டும்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மிக அழகான கோவில் இரண்டுமே உமையாள். எனக்கு நைல் நதி ஓடும் பக்கம் பசுமையாக இருக்கு. மாக்காடி எனும் ஊரும் கொஞ்சம் பரவாயில்லை. நிறைய கட்டிடங்கள் அரைகுறையாக இருக்கு. கண்டிப்பா போய் பாருங்க. நன்றி உமையாள்.

   Delete
 4. படத்தை காணும்போதே கொதி சூடா இருக்கு வெயில் ..உங்களுக்கு அங்கே எப்படி இருந்திருக்கும்னு யூகிக்க முடிகிறது அனைத்தும் அழகான படங்கள் .இரண்டு பதிவாக போட்டிருக்கலாமோன்னு தோணுது .ஒட்டக சவாரி ..ம்ம் உண்மைதான் எந்த விலங்கையும் துன்புறுத்த கூடாது .என் மகள் இப்போ சமீபத்தில் பீச் சென்றப்போ குதிரைக்கு பணம் கொடுத்து தடவி விட்டு வந்தா :) பிள்ளைங்க மனது வித்தியாசம் தான் உயரிய குணம் .

  அப்புறம் இப்போ இங்கே வெயில் போயி போச்சு ..மழை மழை :(

  அடடா அவ்ளோ தொலைவு போய் பிரமிட் பார்க்க முடியாம போச்சே .next time ponga :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க அஞ்சு. உங்களுக்கு என் அன்பான நன்றிகள் முதலில் வாழ்த்து தெரிவித்தமைக்கு. இரண்டு பதிவா போடத்தான் நானும் நினைத்தேன். தாமதமானாலும் என்று சேர்த்துபோட்டுவிட்டேன். ஆனா ஏதோ ப்ளாக் ல் பிரச்சனை. இடைவெளி இங்கு அதிகமாக வருகிறது. நான் படங்கள் க்ளியரா போடனும் என்பதற்காக தனியே போட்டேன். அதனால் பெரிதோ தெரியவில்லை. ம்.ம்ம்.பிள்ளைகள் நிறைய சிந்திக்கிறார்கள்.மாறுபட்ட கோணத்தில்.
   உங்களுக்கு மட்டுமா மழை. இங்கும் அடைமழை. அத்துடன் குளிரும்..இனிமேல் வெயில்??????
   அட..நீங்கவேற.. பிரமிட்டை ஞாபகப்படுத்திறீங்க. கைய்ரோ பிரச்சனையால் டூரிஸ்ட் ஐ அந்த இடம் போகவிடமாட்டார்களாம். அடுத்த தடவை போனால் பார்ப்போம் என இருக்கேன்.
   ரெம்ப நன்றி அஞ்சு எல்லாவற்றுக்கு.

   Delete
 5. ஹப்பி பேர்த்டே அம்முலூ... பார்த்தீங்களோ அஞ்சுவுக்கு இதெல்லாம் நினைவில்லை :) அதிராதான் ஒழுங்கா வாழ்த்துறேன்ன்ன் :) மீ இஸ் எ குட் கேள் இல்லையா?? :) :)

  ReplyDelete
  Replies
  1. ஆவ்வ்வ் இதைப் படிச்சதும் கிழிச்சிடுங்கோ அம்முலூஊஊஊஊஉ.. ஃபிஸ் பார்க்க முன் :)

   Delete
  2. யெஸ். யூ ஆர் குட்கேர்ள். தாங்க்யூ அதிரா. அஞ்சுவுக்கு நிறைய வேலை.அதுதான் மறந்திட்டா. சரி கிழிச்சாச்சு.

   Delete
  3. garrrrrrrrrrrrrrr .for athirav :) .i did not forget :)

   Delete
 6. ஆஹா நேசறிப் பிள்ளை மாதிரி.. ஆரம்பம் முதல் முடிவு வரை அழகா ஒப்புவிச்சிட்டீங்க... அருமையான சுற்றுலா... அதுசரி “மம்மி” பார்க்கல்லயோ? :))

  இமா இருக்கிறாபோல.. படமெடுத்து வந்திருக்கிறீங்க.... :) நான் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ... மையைச் சொல்லல்ல :).

  ReplyDelete
  Replies
  1. அப்படிச்சொன்னாதான் நீங்களும் போய் பார்ப்பீங்க இன்ரெஸ்ட் வருமெல்லோ. மம்மீஸ் தான் பார்க்கமுடியேல்லை. சில இடங்களில் படம் எடுக்க தடை. கமரா,மெபைல் வாங்கிவிடுவார்கள். அடடா நீங்க இமாவைச்சொன்னீங்களோஓஓஓ. சரி.சரி. டீச்சர் வருவாவோ தெரியாது. ரெம்ப சந்தோஷம் அதிரா. நீங்க வந்தது கருத்து பகிர்ந்தமைக்கு. நன்றியும் கூடவே.

   Delete
 7. வணக்கம் சகோதரி
  தங்கள் பயணக்குறிப்பைப் படங்களோடு பதிவிட்டு எங்களையும் அழைத்துச் சென்றமைக்கு நன்றி. ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் சும்மா அசத்தீட்டீங்க போங்க.... இது பயணக்குறிப்பு மட்டுமல்ல வரலாற்றுச் செய்திகளையும் தாங்கியிருப்பது மிகச்சிறப்பு. அனைவரும் அறிய பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல சகோதரி. சந்திப்போம்..

  ReplyDelete
  Replies
  1. ஆ..கா .பிஸியான ஆட்களெல்லாம் வந்திருக்கிறாங்க. வாங்க சகோ. வந்து கருத்துபகிர்ந்தமைக்கு ரெம்ப நன்றிகள்.

   Delete
 8. [im]http://4.bp.blogspot.com/-qexT6ZYqyBk/U_ziqB631vI/AAAAAAAABRo/KGoy7MaOVwQ/s1600/AMMU.jpg[/im]

  இங்கும் மீண்டும் ஒருதரம் இனிய நல் வாழ்த்துக்கள் அம்மு!

  ReplyDelete
  Replies
  1. நன்றி, நன்றி ,நன்றி.......இளமதி.

   Delete
 9. எகிப்துக்குப் போகக் கிட்டாவிடினும்
  இப்படியாயினும் உங்களால் பார்க்க முடிந்தது
  மட்டற்ற மகிழ்ச்சி அம்மு!

  படங்கள் மிகத் துல்லியமாக அருமையாக
  இருக்கின்றன. இப்போது இங்கு தொடங்கியுள்ள
  குளிருக்கு அங்குள்ள கால நிலைப் படங்கள்
  மிக அழகாக அற்புதமாக இருக்கின்றன.

  இன்னும் பொறுமையாகப் பார்த்துக் கருத்தெழுத வேண்டும்.
  பின்னர் வருகிறேன்!...:)

  பகிர்விற்கு மிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும் அம்மு!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் இளமதி. இங்கு இப்பவே குளிர். இப்போ அவ்வெயில் நினைவு. மிக மகிழ்ச்சி. மிக்க நன்றி இளமதி.ஆறுதலா வாங்கோ.

   Delete
  2. நான் வந்து பார்த்து எழுதுறேன்னு போனதுதான் வரவே நேரம் கிடைக்கேலை...:) நான் கேட்க நினைச்சதை ஏனையோர் கேட்க நீங்களும் பதில் சொல்லியாச்சு... !

   பிரமிட் பார்க்கக் கிடைக்காதது உண்மையிலேயே மன வருத்தமான விடயம்தான் அம்மு!
   பிரமிட்டுகள் அலை பாயும் எங்கள் மனநிலையைக் கட்டுப்படுத்தும் தன்மை வாய்ந்தமையாமே... :)
   அதற்காகவேனும் ஒருமுறை அங்கு போகணும்..:)

   இங்கிருந்து எகிப்து போக எத்தனை மணித்தியாலங்கள் எடுத்தது அம்மு?..
   படங்கள் உண்மையில் நினைவுச் சின்னங்களாக பாதுகாக்கவேண்டியவை.
   அருமையாக இருக்கு அனைத்தும்!

   Delete
 10. Trying to post a comment for the 3rd time....avvvv!

  Nice pictures, hope you had a nice trip.

  Checked the internet just today, and glad that I found your post. Wish you a very happy birthday Ammulu! :)

  ReplyDelete
  Replies
  1. வா..வ் மகி. ரெம்ப மகிழ்ச்சி நீங்க வந்தது. வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் ரெம்ப நன்றிகள் மகி.

   Delete
 11. ஒரு டூர் போன உணர்வு! உங்க போட்டோ பகிர்வுகள் எனக்கு எப்பவுமே பிடிக்கும்!! இந்த முறையும் போட்டோவும் விளக்கமும் அருமை தோழி! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க தோழி.ரெம்ப நன்றிகள் உங்க வாழ்த்துக்களுக்கும் ,கருத்துக்கும்.

   Delete
 12. is very interesting...நானும் எகிப்து போன feeling...

  and i show your photos to my son he is so happy to see this ..because in his social he had that the lessons...thanks for sharing...

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகையும், மகிழ்ச்சியளிக்கிறது. கருத்துக்களுக்கும் ரெம்ப நன்றிகள்.

   Delete
 13. வணக்கம் அம்மு !

  அடடா அடடா ...இவ்வளவு அழகான இடத்துக்கா போய் வந்தீங்க நாங்களும் போய்வந்தது போல் ஓர் உணர்வு வந்தது படங்களைப் பார்த்தவுடன் எல்லாம் சரி பிரமிட் மிஸ்ஸிங் இல்லையா !

  எல்லாமே அருமை வாழ்த்துக்கள் அம்முலு வாழ்க வளமுடன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க சீராளன். இப்போ அங்கு விடமாட்டார்கள் பிரமிட்டை பார்க்க. ரெம்ப நன்றி உங்க வருகைக்கும்,கருத்துக்கும்.

   Delete
 14. ஐயோ அம்முவுக்கு பிறந்தநாளா எப்போ சொல்லவில்லை கவனிக்கவில்லை பொறுத்தருள்க !

  ஏழுலகும் பூக்கும் எழில்மலர்கள் வாசனையாய்
  வாழ்க இனிதே வளர்ந்து !

  என்றும் இனிதே வாழ்ந்திருக்க வாழ்த்துகிறேன்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாழ்த்துக்களுக்கு ரெம்ப நன்றிகள் சீராளன்.

   Delete
 15. தெளிவான குறிப்புக்களும், புகைப்படங்களும் அருமை.

  நேரில் பார்த்தவுணர்வு.

  நன்றி

  http://mayilirahu.blogspot.com/ என்னுடைய வலையகம்.

  ReplyDelete
  Replies
  1. உங்க வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றிகள் தோழி.

   Delete
 16. ப்ரியசகி,

  மிகமிக வித்தியாசமான சுற்றுலாதான் போயிருக்கீங்க. இங்குள்ள பப்ளிக் சானலில் பிரமிட், மம்மி இவற்றைப் பற்றி போடும்போது கொஞ்சம் பயம் கலந்த ஆர்வத்துடன் பார்ப்பேன்.

  படங்களுடன் பகிர்வு மனதைக் கவர்ந்தது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சித்ரா. ம்..ம் மிக வித்தியாசமான சுற்றுலாதான். பிரமிட் பார்க்கும் ஆவலில் போன எனக்கு அவைகளை பார்க்க கிடைக்கவில்லை என்ற கவலைதான்.ஆனாலும் பார்த்தவை எல்லாமே வரலாற்றுபுகழ் மிக்கவைதான்.
   ரெம்ப நன்றி சித்ரா வருகைக்கும்,கருத்துக்கும்.

   Delete
 17. அருமையான படங்களும் பதிவும் போக வேண்டும் எனும் எண்ணம், ஆவல் பெருகுகிறது. ம்..ம் ..ம்... பார்க்கலாம். ரசித்தேன்! போய் வந்த உணர்வே எனக்கு நன்றி வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
  Replies
  1. வாங்க தோழி இனியா. பார்க்க வேண்டிய நாடு. நிறைய வரலாற்று இடங்கள் இருக்கு. வெயில்தான் அதிகம்.2 நாள் சென்றால் பழகிவிடும்.
   ரெம்ப நன்றிகள் தோழி, உங்க முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும்.

   Delete
 18. புகைப்படங்கள், விளக்கங்கள் யாவும் மிக மிக அழகு பிரியசகி! உண்மையில் நானும் உங்களுடன் டூர் வந்தது போல இருந்தது. பாலைவனத்தில் தான் நானும் பல வருடங்களாக வசிப்பதால் இந்த கடுமையான வெய்யில், பேரீச்சை, மசூதிகள் என்று எல்லாம் நம் ஊர் போலவே பழகி விட்டது எனக்கு!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க அக்கா, உண்மைதான் 2நாட்கள்தான் பின்னர் எனக்கும் அவ்வூர் வெயில் பழகிவிட்டது.
   உங்க வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றிகள் மனோ
   அக்கா.

   Delete
 19. வணக்கம் சகோதரி
  உங்கள் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டவன் என்ற முறையில் ஒரு விருதினைத் தங்களோடு பகிர்ந்திருக்கிறேன். அன்போடு பார்க்க அழைக்கிறேன் http://pandianpandi.blogspot.com/2014/09/the-versatile-blogger-award.html

  ReplyDelete
 20. வணக்கம் அம்மு!

  எனது வலைப்பூவில் விருது ஒன்றை உங்களுக்குப் பகிர்ந்துள்ளேன்!

  இணைப்பு http://ilayanila16.blogspot.de/2014/09/blog-post_16.html

  வந்து பெற்றுக் கொள்ளுங்கள்! மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் இளமதி.

   Delete
 21. மிக அருமையான படங்கள், கட்டுரை பகிர்வுக்கு மகிழ்ச்சி.நன்றி. நாங்களும் உங்களுடன் பயணித்த உணர்வு.தோழி தாமதத்திற்கு பொறுத்துக் கொள்ளவும்.கிடைக்கும் சிறிது நேரத்தை ஃபேஸ்புக்கில் செலவிடுவதோடு சரி.எப்பவாவது வலைப்பூ பக்கம் விசிட்.அவ்வளவே ! இனி அடிக்கடி வர முயற்சி செய்வேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஆசியா.பரவாயில்லை,நீங்க நேரம் கிடைக்கும்போது வாங்க. வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி.

   Delete
 22. ஆஹா உங்களுடனே பயணம் செய்த உணர்வு ...நன்றி

  ReplyDelete
  Replies
  1. வாங்க தோழி. உங்க வருகை மகிழ்ச்சியளிக்கிறது. ரெம்ப நன்றிகள்.

   Delete
 23. இன்றைக்குத்தான் உங்கள் வலைப்பூ வந்தேன். எகிப்து சுற்றுலா படங்களுடன் நன்றாக விளக்கியிருக்கிறீர்கள். பிரமிட் பார்க்கலாம் என்று தான் நானும் படிக்க ஆரம்பித்தேன். நீங்கள் மிஸ் பண்ணிவிட்டீர்கள் என்று தெரிய வந்தது. நீங்கள் சென்ற இடத்திலிருந்து பிரமிட் ரொம்பவும் தொலைவோ? பரவாயில்லை, அடுத்தமுறை பார்த்துவிட்டு வந்துவிடுங்கள். நானும் அதுவரை காத்திருக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க அம்மா! உங்க வருகை ரெம்ப மகிழ்ச்சியை தருகிறது. நாங்க சென்ற இடத்திலிருந்து தூரம்தான்.ஆனாலும் அதைவிட அங்கு செல்லமுடியாமல் தடை செய்திருக்கிறார்கள் பிரச்சனை காரணமா. அடுத்த முறை செல்வோம் என நினைக்கிறேன் அம்மா.கணவரும் சொல்லியிருக்கிறார். சென்றால் கண்டிப்பாக பிரமிட் பார்த்துவிட்டு பதிவு எழுதுகிறேன். ரெம்ப நன்றி அம்மா தங்கள் கருத்துக்கும், வருகைக்கும்.

   Delete

 24. அன்புமிகு வலைப் பூ தோழி.
  நல்வணக்கம்!
  திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
  "வலை - வழி - கைகுலுக்கல் - 1"

  இன்றைய வலைச் சரத்தின்
  சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
  வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

  வாழ்த்துகளுடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  http://youtu.be/KBsMu1m2xaE

  (எனது இன்றைய பதிவு
  ("கவி ஒளி" அருட்பெருஞ்சோதி வள்ளலார் / "தென்னகத்து தென்றல்" கண்டு இன்புற்று
  படித்தது கருத்திட வேண்டுகிறேன் வேண்டுகிறேன். நன்றி!)

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு ரெம்ப நன்றி.மன்னிக்க தற்போதுதான் பார்த்தேன்.

   Delete
 25. அருமையான புகைப்படங்கள். கொலாஜில் போடாமல் பெரியதாக போட்டிருந்தால் நாங்களும் பதிவிறக்கி மகிழ்வோம் இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. ரெம்ப நன்றி வருகைக்கும்,கருத்துக்கும்.

   Delete
 26. புகைப்படங்கள் அனைத்தும் அருமை குறிப்புகள் எடுத்துக்கொண்டேன் ஹி ஹி ஹி ...எஜிப்த் போகத்தான்......

  ReplyDelete
  Replies
  1. ஆவ்வ்...போய் பார்க்கவேண்டிய இடம்.. கண்டிப்பா போய் பாருங்க. அப்படியே உங்க ஊர்காரங்களையும்....
   நன்றி வருகைக்கும்,கருத்துக்கும் சகோ

   Delete
 27. சகோதரி
  நல்வணக்கம்!
  தங்களது இந்த பதிவு இன்றைய
  "வலைச்சரம்" பகுதியில்
  சகோதரி மேனகா சத்யா அவர்களால்,
  சிறந்த பதிவு என சிறப்பு தேர்வாகி உள்ளது.
  வாழ்த்துக்கள்

  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  ( நண்பரே! "குழலின்னிசை" உறுப்பினராக இணைய வேண்டுகிறேன். நன்றி)

  ReplyDelete
  Replies
  1. ரெம்ப நன்றி தகவலுக்கு.

   Delete
 28. படங்களும் பதிவும் மிக அருமை. மிகவும் ரசித்து படித்தேன் பிரியசகி.

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப்படித்தமைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா.

   Delete
 29. அழகான பயணக் கட்டுரை
  அதிகமான படங்களுடன்...
  அருமை!

  (திரு. வை. கோ. அவர்களின் வலைச்சர அறிமுகம் மூலமாக வந்தேன்.)

  ReplyDelete
  Replies
  1. தாங்களின் முதல்வருகைக்கும்,பாராட்டுக்கும் ரெம்பநன்றிகள்.

   Delete

 
Copyright பிரியசகி