ஊரில வீட்டுக்கு வீடு வாசற்படி இருக்கோ இல்லியோ,வேலிகள்,மதில்கள் கட்டாயம் இருக்கும். பக்கத்து வீட்டுக்கோ, அல்லது காணிகளுக்கோ எல்லையாக போட்டிருப்பார்கள் .
கல்லை வைத்து கட்டி மதில் ( சுவர்) எழுப்பியிருப்பார்கள் . அல்லது தென்னோலை (இதை கிடுகுவேலி என்றும் சொல்வோம்.), பனையோலை, அல்லது தென்னமட்டை, பனை மட்டை அல்லது தகரம் இப்படியான பொருட்களை வைத்து வேலி கட்டியிருப்பார்கள்.
ஊரில் எல்லையில் வேலிபோடுவதில் , கதியால் போடுவதில் சில இடங்களில் எல்லைச்சண்டை அநே(அமோ)கமாக நடந்திருக்கு. வெட்டு,குத்து கூட நடந்திருக்கு.
இது ஊரில் எங்க வீட்டு வேலி
நான் இருக்கும் நாடானா ஜேர்மனி யில் சில இடங்களில் கற்களால்,கம்பிகளால்,பலகையால் ஆன வேலி மாதிரி மறைப்புகள் உண்டு. ஆனால் கூடுதலாக மரங்களையே எல்லைகளில் வைத்து (வேலியாக) வளர்க்க விரும்புவர். இங்கு இரண்டு காலநிலை இருப்பதால் அதற்கேற்றவாறு மரங்கள் இருக்கின்றன.குளிர்காலத்திலும் இலைகள் பச்சையாகவே இருக்கும் மரங்கள் இருக்கின்றன. கூடுதலான குளிர் என்றால் பாதிப்பு வரத்தான் செய்யும்.
நான் இருக்கும் நாடானா ஜேர்மனி யில் சில இடங்களில் கற்களால்,கம்பிகளால்,பலகையால் ஆன வேலி மாதிரி மறைப்புகள் உண்டு. ஆனால் கூடுதலாக மரங்களையே எல்லைகளில் வைத்து (வேலியாக) வளர்க்க விரும்புவர். இங்கு இரண்டு காலநிலை இருப்பதால் அதற்கேற்றவாறு மரங்கள் இருக்கின்றன.குளிர்காலத்திலும் இலைகள் பச்சையாகவே இருக்கும் மரங்கள் இருக்கின்றன. கூடுதலான குளிர் என்றால் பாதிப்பு வரத்தான் செய்யும்.
எங்களுக்கும் இந்த எல்லையில் மரம் வளர்க்கவேண்டிய சூழ்நிலை வரும் என நினைத்திருக்கவில்லை.
எங்கள் வீட்டுக்கு 2 பக்கத்தில் மட்டுமே வீடுகள். மற்றைய 2 பக்கமும் வீதி.(road). அதனால் எங்களுக்கு 2 பக்கம்தான் (corner land) மரங்களை எல்லைகளில் வளர்க்க வேண்டியிருந்தது . இங்கு பல வகை மரங்கள் இருக்கு. நாங்கள் தெரிவுசெய்தது 3 மரங்கள்தான். அவை குளிர்காலத்திலும் பச்சையாக இருக்கும்.
3.buchsbaum(boxwood) 4.lorbeer.(laurel)
**இரண்டாவது படத்தில் இருக்கும் மரத்தின் இலைகள் வின்டருக்கு கொட்டிவிடும். அது பக்கத்துவீட்டுக்காரர் வைத்தது.
**1,வது 3,வது 4 வது படத்தில் இருக்கும் மரங்கள் இருகாலத்திலும் பச்சையாகவே இருக்கும்.
இந்த மரம் மட்டும் சிவப்பாகவே எப்பவும் இருக்கிறது.
இங்கு Buchsbaum(boxwood) ஐ (3 வது படம் ) வளர்த்து சில பேர்
டிசைனாக வெட்டி விடுவார்கள்.
அழகான பூஸ்
அந்த மரத்தில் வெட்டப்பட்ட சில டிசைன்கள்
tks,gg
நாங்கள் வீட்டின் முன் பக்கம் நட்டவை LEBENS BAUM
இங்கு வீட்டில்(காணியில்) இருக்கும் மரமென்றாலும், வெளியில் இருக்கும் மரம் என்றாலும் வெட்டுவதாயின் அனுமதி பெறவேண்டும்.(வீட்டினுள் சின்னதாக இருக்கும் மரங்களிற்கு இல்லை.) இங்கு கூடுதலாக மரங்களை வளர்த்து, தங்கள் வீட்டை அழகாக வைத்திருப்பார்கள் . மரங்கள் வளர்ப்பது அழகாக இருக்கும். இங்கு மரத்தை வைத்துவிட்டு அப்படியே விடமாட்டார்கள். அதற்கு தேவையான உரங்கள், மருந்து வாங்கி போட்டு பராமரிப்பார்கள். இதனால உழைக்கும் காசில ஒரு பகுதியை இதற்கு செலவழிப்பதற்கே வைத்திருப்பார்கள். அந்தந்த மரங்களுக்கென கார்டன் இருக்கு. supermarket லும் வாங்கலாம்.
இனி ஒக்டோபர் மாதத்தில் வரும் autumn (herbst) லீவில், காணியில் இருக்கும் மரங்கள் கொட்டுகிற இலைகள்,சருகுகளை கூட்டி துப்பரவாக்குவார்கள். பின்பு மறுபடியும் ஏப்ரல் மாதத்தில் அல்லது மே மாதத்தில் செய்வார்கள். இது இம்மாதங்களில் இருக்கும் குளிரைப் பார்த்து செய்வார்கள். அத்துடன் மரங்கள் இருப்பதால் நிறைய பறவைகள் வரும் . சிலர் பறவைகள் வரவேண்டும் என்பதற்காக அவைகளுக்காக விற்கப்படும்
சாப்பாட்டுவகைகளை வாங்கி வைப்பார்கள். விண்டர்காலத்தில்தான் கூடுதலாக உணவுவகைகளை வைப்பார்கள். இவைகளுக்கெல்லாம் நானும் விதிவிலக்கல்ல.
நான் வாங்கி வைத்திருக்கும் குருவிக்கான சாப்பாடு
இனிவரும் மாதங்களில் இந்த பச்சைக்கலரைப்பார்க்க முடியாது. அதற்கு அடுத்த ஆண்டு ஏப்ரல்,மே வரை காத்திருக்க வேண்டியதுதான். குளிர் கொஞ்சம் ஆரம்பிக்கிறது. இலைகள் மஞ்சள்,சிவப்பாக வரத்தொடங்கிட்டுது.
*****************************************************
இதில் வீட்டின் முன் பக்கம் நட்ட மரங்களில் 2 மிஞ்சிவிட்டது (மிகுதி). கணவர் என்ன செய்வது என கேட்டார் . நான் கராஜின் பின்பக்கத்தில் வைக்கலாம் என்று சொல்லி, மரத்தை நட்டுவிட்டோம். அவை இப்ப இப்படி வளர்ந்து நிற்கினம். இவைகளிற்கு நான் வைத்த பெயர் TWIN TOWERS.
இதுதான் எங்க வீட்டு TWIN TOWERS
கராஜ் பின்பக்கம்.
பச்சைக்கலர்ல இருப்பது மழை நீரை சேகரிக்க ஒரு Tank
****************************************************
“ஏம்பா காலையில வர்ற பேப்பரை
சாயங்காலம் வாங்கறே?”
“சூடான செய்திகள்னு போட்டிருந்தாங்க.
அதான் ஆறட்டுமேன்னு...”
€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€
"ஒரு பிரச்சனையைத் தீர்க்கமுடியாவிட்டால், பிரச்சனையை சமாளிக்கக்கற்றுக்கொள்ளுங்கள் "
€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€
நீங்களும் இப்பாட்டைக்கேளுங்க
ஆஅ நான் தான் முதல் பறவை
ReplyDeleteவாங்க அஞ்சு.நீங்கதான் முதல் பறவை.
Delete// ஆஅ நான் தான் முதல் பறவை//
Deleteஅஞ்சு நீங்க மீன் தானே. எப்ப பறவையானீங்க????
ஓ! உங்களை மீன்கொத்திப்பறவை கொத்தி தூக்கீட்டு பறக்கிறப்போ ஹை! உயரத்தில பறக்கிறனே அப்படீன்னா நான் பறவைன்னு நினைச்சுட்டீங்களோ?
ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ:)))))
இளமதி said..
Delete//அஞ்சு நீங்க மீன் தானே. எப்ப பறவையானீங்க????
ஓ! உங்களை மீன்கொத்திப்பறவை கொத்தி தூக்கீட்டு பறக்கிறப்போ ஹை! உயரத்தில பறக்கிறனே அப்படீன்னா நான் பறவைன்னு நினைச்சுட்டீங்களோ?//
என் அன்புத்தங்க்ச்சி நிர்மலாவை யாரும் வம்பு செய்ய வேண்டாம் எனக்கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் ஓர் தேவதை [ஏஞ்சலின் என்றால் தேவதை தானே]. அவர்களுக்கு எல்லாப்பறவைகளை விடவும் அதிகமாக பறக்கும் சக்தி உண்டு தான். அதனால் அவங்க தான் முதல் பறவை.
மேகக்கூட்டங்கள் இங்குமங்கும் நகர்வதால் ஏதோ யங்மூன் [அதாங்க இள்மதி] நகர்வது போலவும், பறப்பது போலவும் ஒரு மாயத்தோற்றம் தெரிகிறது. அதனால் அதை நாங்க்ள் முதல் பறவைன்னு ஏற்றுக்கவே முடியாது.
ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ:)))))
[எதற்கும் நீங்கள் அதிரடியாக அதிராவிடம் ஆதரவு தேடி அப்பீல் செய்துகொள்ளலாம்.]
குட்டியூண்டு அதிரஸம் தங்களுக்குத் தரலாம் என என்னிடம் பரிந்துரைத்திரைந்தார்கள், அன்புள்ள அதிரா.
நல்ல மனசு அவங்களுக்கு. அவங்களிடமே சூப்பர் அதிரஸம் இருக்குன்னும் சொன்னாங்க. எனக்கு அதுவே தித்திப்பா அதிரஸம் சாப்பிட்டது போல இருந்தது.
கடைசியில் பார்த்தால் அவங்க பெயரிலேயே ’அதி’ என்ற ஆரம்பம் அதிரஸத்தின் முதல் இரண்டு எழுத்துக்களைக் குறிப்பதாகச்சொல்லி என்னை மகிழ்வித்தார்கள்.
அதைவிட தமாஷ் என்னென்னா அவங்க அதாவது அதிராவின் பதிவிலே ஓர் கேள்வி நான் கேட்டிருந்தேன்.
புளியம்பழத்தை அடிக்கடி சாப்பிடுவாங்களாம். ஆனால் அது உடம்புக்கு ஆகாதாம். அதனால் யாருக்கும் தெரியாமல் ஒளித்து சாப்பிடுவாங்களாம்.
எங்கே ஒளித்து வைப்பீங்க? அந்த இடமே புளிக்குமே? என நான் என் டவுட்டை கேட்டிருந்தேன். அதற்கு அவங்க ஒரு பதில் கொடுத்திருக்காங்க. அதைப்படிச்சுட்டு இரண்டு நாளா சிரிச்சுக்கிட்டே இருக்கேன் ... போய்ப்பாருங்க.
பதுங்குக்குழியிலே தான் என்று பட்டுன்னு சொல்லிட்டாங்க. நீங்களே போய்ப் பாருங்க. அவங்க பதுங்குக்குழியை இல்லை. பதிலை மட்டும். ;))))))
ஒவ்வொரு இடத்திலும் விதவிதமான வேலிகள்..
ReplyDeleteவேலி காத்தான் செடி வேலி கைகால் எல்லாம் பதம் பாத்திருக்கு எனக்கு ..
எனக்கு மிகவும் பிடித்தது ஊரில் போட்டுள்ள வேலி..
அது என்ன. வேலி காத்தான் செடி??? ஊரில நான் போவதற்கு கொஞ்சநாள் முன்புதான் போட்டிருந்தார்கள்.தகரத்தினால அடைத்திருக்கிறார்கள்.முதல் கிடுகு வேலிதான் இருந்தது.
Deleteட்வின் டவர்ஸ் சூப்பர் :)) எங்க தோட்டத்தில் ஒரே ஒரு டவர் வளருது
ReplyDeleteஅதற்கும் இப்ப ஆப்பு வருது போல. இடம் மாற்றவேண்டும் என்று சொல்கிறார்.
DeleteBuchsbaum பூசாருக்கு ரெண்டு கண்ணு நா;லஞ்சு மீசை வச்சு பக்கத்தில் ஒரு எலியும் வச்சிருப்பேன் நானாயிருந்தா :)))))))
ReplyDeleteதடியை எடுத்துக் கொடுத்து அடிவாங்கிறீங்க.
Deleteசோபாவில் இருக்கும் செடி மனிதர்கள் சூப்பர் ..இங்கே அத்லெடிக் மனிதர்கள் முளைதிருக்காங்க( ஒலிம்பிக் )
ReplyDeleteஇந்தப்படம் கூகுளில்தான் எடுத்தேன்.ஆனால் HANNOVER(germany ல்) சிட்டியில் ஒரு கார்டனில் இப்படி செய்திருக்கிறார்கள். அடுத்தமுறை போனால் படம் எடுத்துவரவேண்டும்.
Deleteநானும் BIRD உணவு வச்சேன் ..இங்கே நிறைய பூஸ் அட்டகாசம் அதனால் BIRDS பயப்படர்ரங்க :))
ReplyDeleteGARR FOR MIYAAV:)
SONG SELECTION SUPERB ...மின்மினி பாடிய பாடல்தானே அது
இங்க எனக்கு நிறைய வருகினம். வின்டருக்குத்தான் அதிகமா வருவார்கள்.சாப்பாடு கிடைக்காதுதானே.அதனால நான் இப்பவே வாங்கிவைத்துவிட்டேன்.வீடு பற்றி சொல்ல.
Deleteசித்ரா பாடியது.
அம்முலூஊஊ....... அம்மூஊஊஊ.......
ReplyDeleteநான் இங்கை.... உங்கட வேலிப்பக்கம் நிக்குறன். ஆ.அ இங்கை தகரவேலி பொட்டுக்காலை(துவாரத்துக்குள்ளாலை) நீங்க தென்னைமரத்தடில நிக்குறது எனக்கு நல்லா தெரியுது. வேலிக்குக் கீழால பாருங்கோ, என்ர கால் தெரியும் . ஆ....அ.. கண்டிட்டியளே! அப்பா முருகா! படலையை துறந்து கொண்டு வருவமெண்டா அதிலை உங்கடை நாய் நிண்டுகொண்டு என்னைப்பாத்து உறுமுது. பிடிச்சுக் கட்டுங்கோ நான் உள்ளை வர;))))))
நான் தேடினால், நீங்க இங்க வேலிக்கு பக்கம் நிற்கிறியள்..கால் நல்லா தெரியுது.நாயை கட்டிப்போட்டன் உள்ள வாங்க. அப்பாடி நீங்களாவது பொட்டுக்குள்ளால வந்தியளே.
Deleteஇன்னும் எழுதலாம் என்று நினைத்தேன்.இதற்கே 3 வீக் ஆயிடுச்சு.
எங்கட வீட்டுக்கு பக்கத்துவீடுகள் இல்லை.4 பக்கமும் வீதிதான். என்னுடைய ப்ரென்ட் அவா ஒருநாளும் பக்கத்துவீட்டுக்கு வாசலால் போகமாட்டா.இப்படி வேலியால்தான் போவா.
உண்மையாகவே நீங்க எழுதியபடி அதில தென்னை நிக்குது. அந்த தென்னை நான் வைத்தது.அக்கா அதை படம் எடுக்கவிடவில்லை.இன்று வரை ஏன் எனத்தெரியாது.
// இன்னும் எழுதலாம் என்று நினைத்தேன்.இதற்கே 3 வீக் ஆயிடுச்சு.//
Deleteஒருக்கா வீக் ஆனாலே தேறுறது கஷ்டம். நீங்க 3 வீக் ஆகியிருக்கீங்க:( அம்முலு! கொஞ்சம் தெம்பா ஏதும் சாப்பிட்டு உடம்பைத் தேத்திக்கொண்டு வாங்கோ. அவசரமொண்டுமில்லை.;)))))))))))
ஐயோ! நான் பொட்டுக்காலை வந்து கருக்கு கீறிப்போடுது. அவ்வ்வ்வ்வ்.:)
// அந்த தென்னை நான் வைத்தது.அக்கா அதை படம் எடுக்கவிடவில்லை.இன்று வரை ஏன் எனத்தெரியாது.//
ஏனெண்டு சொல்லட்டோஓஓ! தென்னையை படம் எடுத்து போட்டா எல்லாரும் பார்த்து ஓ பெரிய்ய தென்னை, நிறைய காய்ச்சிருக்கு அப்பிடி இப்பிடின்னு கண்ணூறு படுத்திப்போடுவினம் எண்டுத்தான்.
ஹா.. ஹா.. ஹா...
அக்காட்டையே கேளுங்கோவன்...
நானும் ஓயாமல் கேட்கிறன் சொல்லமாட்டாவாம்.நானும் பிறகு கஷ்டப்படுத்தேல்ல.இஷ்டப்பட்டால் சொல்லட்டும்.
Deleteம்..வேலிவகைகள்: செங்கற்கள், சிமெந்து, தென்னோலை, பனைமட்டை பனைமட்டையை வரிச்சுமட்டை எண்டும் சொல்ற நாங்கள் எல்லோ:)
ReplyDeleteவரிச்சு மட்டை எண்டவுடனே சில விஷயங்கள் ஞாபகம் வருகுது.
ஊரில முத்தாத இளம் பனைமட்டையை நார் உரிச்சு வைச்சிருப்பினம். சவுக்கு மரக் கொப்பு போல வெட்டினால் ஒழிய அறாது. கயிறுமாதிரி அதாலையே வேலிகட்டுவினம். ஆரும் பிள்ளைகள் பிரளி பண்ணினால் அதாலை நல்ல சாத்து:( அதுவும் நடக்கும்.
வரிச்சுமட்டையின் விளிம்பு கருக்கு, நல்ல அரிவாள் போல. அவ்வளவு கூர். பனைமட்டை(வரிச்சுமட்டை)யாலை வேலி அடைச்சா நாய் பூனை கூட அதுக்குள்ளால இங்காலஅங்கால போகமாட்டினம்:)))
இங்கத்தைய வேலிகளும் அழகுதான். வடிவா பராமரிப்பினம்.
ஆனால், சொர்க்கமே எண்டாலும் அது நம்மூரு போல வருமா:))))))))
அங்கத்தை வேலிகளும் வளவுகளும் மரங்களும் கொடி, செடிகளும் அழகோ அழகுதான். பறவைகளும்தான். சிட்டுக்குருவி, தேன்குருவி, செண்பகம், மைனா, அரிசிக்காக்கா, அண்டங்காக்கா;))))))))
நல்ல பதிவு அம்முலு. பகிர்வுக்கு மிக்க நன்றி!!!
//சொர்க்கமே எண்டாலும் அது நம்மூரு போல வருமா:))))))))
Deleteஅங்கத்தை வேலிகளும் வளவுகளும் மரங்களும் கொடி, செடிகளும் அழகோ அழகுதான். பறவைகளும்தான். சிட்டுக்குருவி, தேன்குருவி, செண்பகம், மைனா, அரிசிக்காக்கா, அண்டங்காக்கா;))))))))//
என்னென்னமோ பெயர்கள் பறவைகள் எல்லாம் சொல்றீங்க இளமதி ..இதையெல்லாம் படம் எடுத்து ப்ளாக் ஆரம்பிச்சு ஒரு பதிவா போட்டா நாங்களும் தெரிஞ்சிக்கு .......வோம் ..
(அதீஸ் நீங்க சொல்லி கொடுத்தமாதிரியே எழுதிட்டேன் .)
இதை எழுதும்போதே எனக்கு நிறைய ஞாபகம் வந்தது.ஒரு தடவை இதை எழுதலாமா,வேண்டாமா எனக்கூட யோசித்தேன் இளமதி.
Deleteநீங்க சொன்னமாதிரி அந்த கருக்கு எத்தனைதரம் வெட்டியிருக்கும். அந்த பனைமட்டைக்கு கறையான் அரிக்காமல் இருக்க தார் பூசுவார்கள்.
நீங்க சொன்னமாதிரித்தான் இளமதி, "சொர்க்கமே என்றாலும் நம்ம ஊர்,நம்ம ஊர்தான். என்னசெய்வது இருக்குமிடத்தையே எங்க இடமாக நினைத்து வாழ பழகிக்கொள்ளவேண்டியதுதான்.
என்னோட பேவரிட் செண்பகம்,மைனா,சிட்டுக்குருவி. காக்கா இங்க வீட்டுக்கு ஒவ்வொருநாளும் வருவினம்.
நீங்களும் திரும்ப சில ஞாபகங்கங்களை மீட்டமைக்கும்,வருகைக்கும் ரெம்ப நன்றி இளமதி
ஹாஆஆ அஞ்சூ. நீங்களுமா:(
Deleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்
அஞ்சு! இளமதி இப்படியாவது வருகிறாவே. பிறகு வராமல் போயிடுவா. எல்லாம் புலாலியூர் பூசானந்தா பார்த்துக்குவார்.
Deleteநீங்க சொல்லுறதும் சரிதான் அம்முலு.
Deleteஇருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி.......
இருக்கிற இடத்திலையே சந்தோஷிப்போம்.
அதிக நேரம் நிண்டால்(கால் வலிக்கும்):)))
அடுத்த ஆள் வந்து என்னை கலாய்க்க முன் நான் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....
அம்முலுன்னா அம்முலுதான். ரொம்ப தாங்ஸ்;)
Deleteஎன்ன இளமதி இதற்கெல்லாம் பயந்து ஓடக்கூடாது நில்லுங்கோ.அட ஏன் ஓடுறியள்
Deleteநன்றிக்கு நன்றி
அதிக நேரம் நிண்டால்(கால் வலிக்கும்):)))//
Deleteநான் வேணும்னா ஒரு சேர் ரெடி பண்ணட்டுமா :))
அமர்ந்து எழுதினா கால்,வலிக்காது :)))))
அம்முலுன்னா அம்முலுதான். ரொம்ப தாங்ஸ்;)//
Deletegarrrrr ....
அம்முலுன்னா அம்முலுதான்.
ஆமாம்>> எனக்கும் ஒன்னும் வித்யாசம் தெரியல்லையே :)))))))))
ஆருக்கு?:)
DeleteangelinOctober 1, 2012 8:47 PM
Delete//
என்னென்னமோ பெயர்கள் பறவைகள் எல்லாம் சொல்றீங்க இளமதி ..இதையெல்லாம் படம் எடுத்து ப்ளாக் ஆரம்பிச்சு ஒரு பதிவா போட்டா நாங்களும் தெரிஞ்சிக்கு .......வோம் ..
(அதீஸ் நீங்க சொல்லி கொடுத்தமாதிரியே எழுதிட்டேன் .)///
அடுத்ததையும் முடிச்சிடுவோம்.. நான் சொல்லிக்கொடுத்த மாதிரியீ:)) அஞ்சு டீல்?:)).. ஆஆஆ யங்மூன் ஓடுறா:)).. விடமாட்டமில்ல.
யங்மூனை பிடியுங்கோ பார்ப்பம்.??
Deleteஎன்ன இளமதி நில்லுங்கோ.அட ஏன் ஓடுறியள்//
ReplyDeleteஅவங்க சொன்ன குருவி அண்டங்காக்கா படங்களை ப்ளாக் போஸ்ட் போட தான் :)))))
நீங்க குருவிக்கி வாங்கி வைத்திருக்கும் சாப்பாடு.., என் கண்ணுக்கு பர்கர் மாதிரியே தெரியிது! :) :)
ReplyDeleteவாங்க வரலாற்றுத்தம்பி. பர்கர்மாதிரித்தான்.ஆனா தடிப்பமான பேப்பரால் சுற்றப்பட்டிருக்கு.வந்து கருத்திட்டதற்கு மிக்க நன்றி.
ReplyDeleteஅழகான வெகு அழகான பசுமையான பதிவு.
ReplyDeleteஅற்புதமான படங்கள்.
அட்டகாசமான விளக்கங்கள்.
அனைவரும் வந்து சிறப்பித்து பின்னூட்டங்கள்.
நான் தான் தாமதமாக இன்று,
இப்போத்தானே மெயிலில் லிங்க் அனுப்பினாள் என் அன்புத்தங்கை அம்முலு .... மறந்தே போய் இருப்பாள்.
மீண்டும் அனைவரின் பின்னூட்டங்களையும் ஆசையுடன் ப்டித்துப் பார்ப்பேன். பிறகு மெதுவாக வந்து மேலும் சில கருத்துக்கள் கொடுப்பேன். இப்போ நான் கொஞ்சம் பிஸியாக்கும்.
அன்புள்ள
கோபு அண்ணா
கருத்துக்களுக்கு ரெம்ப நன்றியண்ணா. //மறந்தே போய் இருப்பாள்// உண்மையும் அதுதான்.
ReplyDelete//angelinOctober 1, 2012 8:47 PM
ReplyDelete//சொர்க்கமே எண்டாலும் அது நம்மூரு போல வருமா:))))))))
அங்கத்தை வேலிகளும் வளவுகளும் மரங்களும் கொடி, செடிகளும் அழகோ அழகுதான். பறவைகளும்தான். சிட்டுக்குருவி, தேன்குருவி, செண்பகம், மைனா, அரிசிக்காக்கா, அண்டங்காக்கா;))))))))//
என்னென்னமோ பெயர்கள் பறவைகள் எல்லாம் சொல்றீங்க இளமதி ..இதையெல்லாம் படம் எடுத்து ப்ளாக் ஆரம்பிச்சு ஒரு பதிவா போட்டா நாங்களும் தெரிஞ்சிக்கு .......வோம் ..//
நல்லா எடுத்துச்சொல்லுங்க, நிர்மலா. நானும் சொல்லிச்சொல்லி அலுத்துப்போய் விட்டுட்டேன்.
-=-=-=-=-=-=-
//angelin October 1, 2012 9:52 PM
என்ன இளமதி நில்லுங்கோ.அட ஏன் ஓடுறியள்//
அவங்க சொன்ன குருவி அண்டங்காக்கா படங்களை ப்ளாக் போஸ்ட் போட தான் :)))))//
சூப்பர், அதே அதே அதே அதே !
ஹா :)))) அண்ணா சரியா சொன்னீங்க
Delete”அந்த மரத்தில் வெட்டப்பட்ட சில டிசைன்கள்”
ReplyDeleteஎன்பதற்குக் கீழே காட்டப்பட்டுள்ள மூன்று படங்களும் சூபரோ சூப்பர் அம்முலு.
அதுவும் அந்த இரண்டாவது படம் கேட்கவே வேண்டாம். யாரோ ஒருத்தி நீர்த்தொட்டியில் படுத்துக் குளிக்கிறாளோ? ஒரே பச்சைப்பச்சையா ஜோராக இருக்குதுங்க. [பட்டு] “பச்சை வண்ண ரோஜாவாம் பார்த்தக்கண்ணு நீங்காதாம்னு பாட்டை மாற்றிப்பாடலாம்” போல உள்ளது.
எல்லாமே ஒரே பச்சைப்புற்களால் அழகாகச் செய்துள்ளார்களே! முதல் படத்தில் இருவர் சோஃபாவில் அமர்ந்திருக்கிறார்களோ? அதுவும்
நல்லாவே இருக்குதுங்க.
மூன்றாவது படத்தில் அந்தக்கோலம் போன்ற டிஸன் அழகோ அழகு தாங்க.
பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
அன்புடன்
கோபு
ரெம்ப நன்றி அண்ணா வந்து வாழ்த்தியமைக்கும்,கருத்துக்கள் கூறியமைக்கும்
Deleteangelin October 1, 2012 8:47 PM
ReplyDeleteஎன்னென்னமோ பெயர்கள் பறவைகள் எல்லாம் சொல்றீங்க இளமதி ..இதையெல்லாம் படம் எடுத்து ப்ளாக் ஆரம்பிச்சு ஒரு பதிவா போட்டா நாங்களும் தெரிஞ்சிக்கு .......வோம் ..
(அதீஸ் நீங்க சொல்லி கொடுத்தமாதிரியே எழுதிட்டேன் .)
ஆமாம். இந்த அதீஸ் யாருங்க?
நிர்மலாவோ, அம்முலுவோ, இளமதியோ இதைப்பத்தி கொஞ்சம் விலாவரியாகச் சொல்லுங்களேன்.
இல்லாட்டி எனக்கு மண்டை வெடிச்சுடும்போல இருக்கே! ;(
அன்புள்ள
கோபு அண்ணா
வை.கோபாலகிருஷ்ணன்October 2, 2012 7:25 PM
Deleteangelin October 1, 2012 8:47 PM
என்னென்னமோ பெயர்கள் பறவைகள் எல்லாம் சொல்றீங்க இளமதி ..இதையெல்லாம் படம் எடுத்து ப்ளாக் ஆரம்பிச்சு ஒரு பதிவா போட்டா நாங்களும் தெரிஞ்சிக்கு .......வோம் ..
(அதீஸ் நீங்க சொல்லி கொடுத்தமாதிரியே எழுதிட்டேன் .)
ஆமாம். இந்த அதீஸ் யாருங்க?//
என்ன கோபு அண்ணன் இப்பூடிக் கேட்டு இமேஜை டமேஜ் ஆக்கிட்டீங்க:)).. பிரித்தானிய குயினிண்ட பேத்தி:).. தேம்ஸ்கரையில குடி இருக்கிறவ:).
தங்களின் அன்பான விரைவான விளக்கத்திற்கு நன்றிகள், மேடம். நான் அதீஸ் என்றதும் யாரோ எவனோ ஆம்பிளைப் பையனோன்னு நினைச்சுட்டேன். இப்போதான் என் சந்தேகம் தீர்ந்த்து. ;))))))
Delete// இந்த மரம் மட்டும் சிவப்பாகவே எப்பவும் இருக்கிறது.
ReplyDelete//
இந்த மரத்தை இங்கு பார்க்கும்போதெல்லாம் எனக்கு அம்முலு நினைவே வருது.... முன்பு என் பக்கத்தில் இதுபற்றி கதைச்சது நினைவிருக்கும்தானே?
அதை மறக்கமுடியுமா அதிரா.இதைப்பார்க்கும்போது நீங்க எழுதியதுதான் எனக்கு நியாபகம் வரும்.
DeleteathiraOctober 2, 2012 7:32 PM
Delete// இந்த மரம் மட்டும் சிவப்பாகவே எப்பவும் இருக்கிறது.
//
இந்த மரத்தை இங்கு பார்க்கும்போதெல்லாம் எனக்கு அம்முலு நினைவே வருது.... //
ஆஹா! அம்முலு அவ்வளவு சிவப்பா? கேட்கவே மகிழ்ச்சியா இருக்குதுங்க. அம்முலுவுக்கு மன்ம் நிறைந்த வாழ்த்துகள். ;))))))))))))))))))
ஆனாக்க ஒண்ணுங்க.. எல்லோர் உடம்புலேயு ஓடும் ஒரு திரவம் [அதாங்க இரத்தம்] ஒரே மாதிரி சிவப்பாத்தான் இருக்குமாம்.
//முன்பு என் பக்கத்தில் இதுபற்றி கதைச்சது நினைவிருக்கும்தானே?//
என்ன கதைச்சாங்களோ????? அடிக்கடி என் தலையை வெடிக்க வைச்சிடுறாங்கப்பா ... இவங்க. ஒரே மர்மமா இருக்கு ... ஒண்ணுமே புரியலே உலகத்திலே .... எனவோ நடக்குது ..... பாட வேண்டியது தான். ;(
அதுசரி அம்முலு பூஸுக்கு ஏன் முன்பக்கத்தில வால் வச்சிருக்கு?:).
ReplyDeleteபூஸ் இருக்கும்போது வாலை சுருட்டி முன்பக்கம்தானே வைத்திருக்கும் அதிரா. நல்லாஆ ஓசித்துப்பாருங்க. எங்க வீட்டில ரோஸி என்று பெயர்.அவா இப்படித்தான் அடக்க ஒடுக்கமா,கிச்சன் வாசலில் இருக்காம, வாலை அழகா மடிச்சுக்கொண்டு சுவரோடு ஒட்டிக்கொண்டு இருப்பா.இப்ப பக்கத்துவீட்டில ஒரு பூஸ் இருக்கிறா.அச்சு அசல் எங்க ரோஸிமாதிரி.படம் எடுத்துவைத்திருக்கிறேன்.வேறு சந்தர்ப்பத்தில் போடுகிறேன்.
Deleteஊர்வேலி பனைவேலி எல்லாமே அழகு. உங்கட விடும் அழகு.
ReplyDeleteஅதெதுக்கு மழைநீர் சேகரிக்கிறீங்க? என்ன செய்வீங்க? அதென்ன ஜேர்மன் சட்டமோ அப்படி? மழைநீரில் பூச்சி, நுளம்பு உருவாகாதோ? விளக்கம் பிளீஸ்.
// அதெதுக்கு மழைநீர் சேகரிக்கிறீங்க? என்ன செய்வீங்க? அதென்ன ஜேர்மன் சட்டமோ அப்படி? மழைநீரில் பூச்சி, நுளம்பு உருவாகாதோ? விளக்கம் பிளீஸ்.//
Deleteஹையோ ஹையோ அந்த மழை நீரில்தான் சமைக்கிறவை. தெரியாதோ:)))
சட்டம் ஒண்டும் இல்லை விருப்பம்ம்ம்ம்ம்ம்.
மழை நீரில் பூச்சியோஓஓஓ.....வடிவா பாருங்கோ கண்ணாடியை போட்டுக்கொண்டு, அட போட்டிருக்கிறீங்கள் இருந்தும் கண் தெரியேலை. டொக்டரிட்டை காட்டுங்கோ. பவர் குறையுது:)))
வாளிக்கு மூடி போட்டிருக்கு. தெரியேலையோ? கிக்...கிக்..கீஈஈஈஈ;)))
யங்மூன் :))) ஜெர்மனில நல்ல வின்டரில் சாப்பாட்டை சட்டியுடன் பால்கனில வைப்பாங்களே ..ப்ரிட்ஜ் இல் வைக்காம அதையும் சொல்லுங்க .....
Deleteஇங்கும் அந்த மழை நீரை சேகரித்து குளிக்க மற்றும் சமைக்க பயன்படுத்துவாங்க மியாவ்
பதில் சொன்ன இளமதி,அஞ்சு 2பேருக்கும் தாங்க்ஸ். இங்கே இப்படி மழைநீரை சேமிக்கிற பழக்கம் இருக்கு அதிரா. நாங்க பூமரங்களுக்கு விடுவதற்குத்தான் எடுக்கிறது.சிலவேளை இவர் கார் கழுவுவார். மழைத்தண்ணிதான் பூக்கண்டுகளுக்கு நல்லதாம்.நீங்களும் வசதி இருந்தால்,ஒரு சின்ன கன்டெய்னர் வைச்சு சேமியுங்கோ.சம்மருக்கு பூமரத்துக்கு விடலாம்.தண்ணீர்க்காசு மிச்சம்.எப்படியெல்லாம் சேமி(சமாளி)க்கவேண்டி இருக்கு.
Deleteபடங்கள் அனைத்தும் அழகு. உந்தப் பாடல்தான் நேற்று என்னவோ கண்ணில பட்டுது, நல்லவேளை பிறகு அதைப்போடாமல் பூஸ் போட்டேன், இதைக் காணவில்லை.
ReplyDeleteஆனா உங்கட சைக்கிள் பூஸ் நல்லா இருக்கு. மிக்க நன்றி அதிரா.
Delete//athira October 2, 2012 7:33 PM
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன்October 2, 2012 7:25 PM
angelin October 1, 2012 8:47 PM
என்னென்னமோ பெயர்கள் பறவைகள் எல்லாம் சொல்றீங்க இளமதி ..இதையெல்லாம் படம் எடுத்து ப்ளாக் ஆரம்பிச்சு ஒரு பதிவா போட்டா நாங்களும் தெரிஞ்சிக்கு .......வோம் ..
(அதீஸ் நீங்க சொல்லி கொடுத்தமாதிரியே எழுதிட்டேன் .)
****ஆமாம். இந்த அதீஸ் யாருங்க?****
//என்ன கோபு அண்ணன் இப்பூடிக் கேட்டு இமேஜை டமேஜ் ஆக்கிட்டீங்க:)).. பிரித்தானிய குயினிண்ட பேத்தி:).. தேம்ஸ்கரையில குடி இருக்கிறவ:).//
அடடா! வெரி வெரி சாரிங்க, அதிரா மேடம்.
நான் ஏதோ ”அதீஸ்” என்றதும் ஆண்பிள்ளை பெயர் போல இருக்கே, அது யாராக இருக்கும்னு நினைத்தேன். நல்ல வேளையாக என் மண்டை வெடிப்பதற்குள் உங்களிடமிருந்து உண்மை வந்து விட்டது. மிக்க நன்றி, மேடம்.
அப்புறம் அதிரா மேடம் .... இன்றைய வலைச்சரத்திற்கு வருகை தந்து பின்னூட்டங்களால் ஒரு கலக்குக்கலக்கி விட்டுப்போங்கோளேன், ப்ளீஸ்.
இணைப்பு இதோ:
http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html
அன்புடன்
கோபு
அதிரா மேடம்,
ReplyDeleteயார் யாரோ வந்து வலைச்சரத்தில் பின்னூட்டம் இட்டுச் சென்றார்கள். என்னதான் யார் யாரோ வந்திருந்தாலும் V.V.I.P. யான பிரித்தானிய குயினிண்ட பேத்தி:).. தேம்ஸ்கரையில குடி இருக்கிறவ:) வந்து ஏதாவது ஒரு கலக்கலா கருத்துச்சொல்லிப்போன ஒரு கெத்தாக இருக்குமோல்யோ!
http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html
அஞ்சு, அம்முலு, இளமதி எல்லோரும் வந்துட்டாங்க. அதீஸ் மட்டும் தான் அங்கு காணோம். உடனே புறப்பட்டு வாங்க..... ;)))))
அன்புடன் VGK [GOPU]
பூஸ் ஒன்று.. புயலாகிப் புறப்படுதே:)))... கோபு அண்ணன்.. மெதுவாச் சொல்லுங்கோ:)) ஊரெல்லாம் ஒரே புகை மண்டலமாக இருக்கு:).
Deleteathira October 2, 2012 11:20 PM
Deleteபூஸ் ஒன்று.. புயலாகிப் புறப்படுதே:)))... //
ஹஹ்ஹாஹஹ்ஹா.
புயல் இன்னும் கரையைக் கடந்து 02.10.2012 தெதியிட்ட வலைச்சரப் பின்னூட்டப்பக்கம் வந்து சேரவில்லையே.
நடுவில் ஃப்யூஸ் ஆகி [வலுவிழந்து] போய் இருக்குமோன்னு ஒரே கவலையாக இருக்குதே.
//கோபு அண்ணன்.. மெதுவாச் சொல்லுங்கோ:)) ஊரெல்லாம் ஒரே புகை மண்டலமாக இருக்கு:).//
ஏன் .... யாராவது இதில் SMOKING HABIT உள்ளவர்களா?
சரி ..... காதோடு தான் நான் பேசுவேன் ...
மெதுவாகவே சொல்லுகிறேன்..
காதைக் கொடுங்கோ ...
[கிசுகிசுக்குரலில் கோபு பேசுகிறான் இப்போது] ...
கவனமாகக் கேட்டுக்கோங்கோ
“தயவுசெய்து கீழேயுள்ள லிங்குக்கு
[கீழேயுள்ள லிங்கத்திற்கு என காதில் வாங்கிக்கக்கூடாது] போய் பின்னூட்டம் கொடுங்கோ ...
ஒரு கலக்குக் கலக்குங்கோ ப்ளீஸ்
http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html
அன்புடன்
VGK
அதிரா மேடம் மிக்க நன்றி.
Deleteதங்களில் இரு பின்னூட்டங்களை இப்போது தான் வலைச்சரத்தில் கண்டேன். மகிழ்ச்சி கொண்டேன்.
தங்களைத் தட்டி விட்டு அனுப்பி வைத்த என் அன்புத்தங்கை நிர்மலாவுக்கும் [அதவது உங்கள் பாக்ஷையில் அஞ்சுவுக்கும்] என் நன்றிகள்.
மஞ்சுவின் எழுத்துக்களால் நான் மயங்கி விழுந்து விட்டது முதல் ...... ஊசிக்குறிப்பு வரை அனைத்தையும் படித்து மகிழ்ந்தேன். நன்றியோ நன்றிகள்.
பின்குறிப்பு = PINகுறிப்பு = ஊசிக்குறிப்பு ;)))))) ரஸித்தேன்.
அன்புடன்
கோபு [VGK]
இதெல்லாம் அதீஸ்ஸ்டைல் அண்ணா. மிக்க நன்றி.
Deleteஹா..ஹா..ஹா.. கோபு அண்ணனின் பதிகளை இப்போதான் படித்தேன்ன்ன்.. சுவாரஸ்யம்... சபாபதே!!!!
Delete[ma]பகிர்வுக்கு நன்றி சகோ.![/ma]
ReplyDeleteரெம்ப நன்றி சகோ.
Deleteஅம்முலூஊஊஊ:))
ReplyDeleteநல்ல அழகா இருக்கு உங்க வலைப்பூ!
நல்ல கத்தரிப்பூக் கலர். கண்ணுக்கு இதமா குளிர்ச்சியா இருக்கு.
சந்தோஷம். வாழ்த்துக்கள்!!! தொடர்ந்து கலக்குங்கோ;-))
ரெம்ப நன்றி இளமதி
Delete[im]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQo7Gzx9JAVPsEPJz-dVCZdlqa47x0sTtrz3OtI99Ft9TUs8U_i[/im]
ReplyDeleteTemplate Superb!!!
வாவ்.என்னோட பேவரிட் பேர்ட்ஸ்.படத்துக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி அஞ்சு.
Delete[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTwzX1elruDjYGsUkgmtF7ib9gOwK0EqaUEhMHofcLd2lc9FN4FkA[/im]
ReplyDeleteரெம்லெட் மாத்தியாச்சு. கெதியா அடுத்த புதுப்பதிவை போடுங்கோ.
அதுக்குத்தான் இந்த ரோஸ்:)
நிச்சயமா. அழகான ரோஜா கொடுத்ததிற்கு நன்றி இளமதி.
Deleteஒரு பின்னூட்டம் அன்றே போடென், அதைக் காணல்ல.. சரியாப் போடுப்படவில்லையோ.. சூப்பரா இருக்குது அம்முலு புளொக்.. அதைத்தான் அன்று வந்து சொல்லியிருந்தேன் காணாமல் போயிட்டுது..
ReplyDelete[im]http://cvcl.mit.edu/hybrid/cat2.jpg[/im]
ரெம்ப நன்றி அதிரா. உங்க கொமன்ட் காணல.ஒருவேளை என் ப்ளாக் மீளமைப்பின்போது(திரும்பவும் சரி செய்தேன்.) காணாமல் போயிருக்கலாம்.
Deleteஅதுக்காக இப்படி முறைக்ககூடாது.
அருமை, படங்களுடன் இணைந்த கருத்துகளும் அழகு...
ReplyDeleteஉங்க கமண்டுகளும் அழகாகவே உள்ளது...
வாங்க இரவின் புன்னகை.உங்க கருத்துக்கும்,வரவுக்கும் ரெம்ப நன்றி
Delete