RSS

25/12/2012

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

கிறிஸ்மஸ் திருநாளைக்கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் என்  இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்.
http://www.graphicsgrotto.com/
                           
 bild::danke google  
 ****************************************************

                       என் இனிய நத்தார்தின நல்வாழ்த்துக்கள்

                                          நான் செய்த chrismas quilled

 _()_ _()_ _()_ _()_ _()_ _()_ _()_ _()_ _()_ _()_ _()_ _()_ _()_


                        

 _()_ _()_ _()_ _()_ _()_ _()_ _()_ _()_ _()_ _()_ _()_ _()_ _()_


22/12/2012

Doughnut (snacks)

       டோநட்  (DONUT)
   இந்த மேக்கர் LIDL supermarket ல் வந்தபோது  வாங்கி வைத்துவிட்டேன். நான் வாங்கியது வேறு காரணத்துக்கு. அது ஏலாமல் போக அப்படியே வைத்துவிட்டேன்.

    பின்பு  ஒரு நாள் இந்த டோநட் ஐ  அந்த புக்கில் கொடுத்த ரெசிப்பியின்படி செய்துபார்த்தேன் .நன்றாக வந்தது.  ஆனால் ப்லேய்னா தான் செய்தேன். பின்  மகனின் ப்ரெண்ட்ஸ் வந்தபோது , இது ஞாபகம் வந்தது. செய்யும்போது கொஞ்சம் அலங்காரம் செய்து கொடுத்தேன்.கொஞ்சநேரத்தில் எல்லாம் காலி.

      இது  இங்கு  பேக்கரியில்  விற்பார்கள். அது கொஞ்சம் பெரிதாக இருக்கும்.
இது  செய்வது  ஈசி. ஆனால் இந்த மேக்கர் வேண்டும்.


செய்தபின் இப்படி வரும்.நீங்க அலங்கரித்து கொடுக்கலாம்.
                  plain Donut                        decorat Donut
   
டோநட்  மேலே  frosting செய்துவிட்டு sugar sprinkles தூவினால் அழகாக இருக்கும்.


 தேவையான பொருட்கள்:--
260 g _  மா (flour)
130 g _  சுகர் (sugar) ,
150 ml _  பால்,(milk)
100 ml _  wipped cream,
3 tbs._  பட்டர் அல்லது மாஜரின்,(butter)
1 பக்கெட்_  வனிலா சுகர் ,(vanilla sugar)
1 பக்கெட்_ பேக்கிங் பவுடர்.(baking powder) .

செய்முறை :_
எல்லாம் ஒன்றாக சேர்த்து கலந்து இந்த மேக்கரில் விட்டு பேக் செய்ய வேண்டியதுதான். 50 டோநட் செய்யலாம். எல்லாம் செய்து முடிக்க  15 நிமிடம் போதும்.
(இந்த அளவுக்கு 3 முட்டை சேர்க்கவேண்டும். இதில் சேர்க்காமல் செய்த டோநட்)

<><><><><><><><><><><><><><><><><><><><><><>

**** மகியின்  குறிப்பிலிருந்து ருசித்தவை ****.

    வெஜ் பேஸ்ரி  வீல்ஸ் 


<><><><><><><><><><><><><><><><><><><><><>

 தேங்காய்பால் கடல்பாசி (china grass with coconut milk)
இது 3,4 தரம் செய்தாச்சு.


 <><><><><><><><><><><><><><><><><><><><><>
             நாம் விரும்புவதையெல்லாம் பெற முடியாததால், 
      நாம் பெற முடிந்ததில் திருப்தி கொள்வோம்
                               - ஸ்பெயின் நாட்டுப் பழமொழி
   <><><><><><><><><><><><><><><><><><><><><>


எனக்கு பிடித்த பாடல்:._                                  
                

<><><><><><><><><><><><><><><><><><><><><>
           
            .    

12/12/2012

Chrismas Market

WEIHNACHTSMARKT(CHRISMAS MARKET)

     ஒவ்வொருவருடமும் கிறிஸ்மஸூக்கு  இங்கு  போடப்படும் MARKET. இங்கு  இது  பிரபலமானதொன்றாகும். 
அங்கு போனபோது  எடுத்த சில போட்டோக்கள்  ஐ உங்களுடன் பகிர்கிறேன்.

  முதலில்  இருப்பது இங்கு செய்யப்படும் ஸ்வீட்  குழிப்பணியாரம் போன்றது.   நடுவில் இருப்பது இங்கு மிகவும் பேமஸ்.Rosted Almonds.
  
இவைகள் கிறிஸ்மஸ் காலத்தில்  செய்யப்படும்  சொக்லேட்ஸ்.
  
 Chrismas Tree  அலங்காரங்கள்.  அதற்கான பொருட்களும். 
                                            
                SANTA CLAUS


*****************************************************
இது ஒரு பேர்த்டேக்கு மேசை அலங்காரத்திற்காக  செய்து கொடுத்த Serviette Flowers. செய்வது ஈசி.   
 link
*****************************************************

 
 12.12.12. இன்று ரஜனிகாந்த் பி.தினம்.
****************************************************
03/12/2012

ஸ்..ஸ் ..ஸ்னோ

                                                   
                                     
                                         Birthday from 123gifs.eu
அஞ்சுவிற்கு இனிய பிறந்ததினவாழ்த்துக்கள்.
நோய் நொடியின்றி தேகாரோக்கியத்துடனும்,நீண்ட ஆயுளுடனும் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்
.
(தகவல் தெரிவித்த அதிராவுக்கு என் நன்றிகள்.)

 4.12.12.
 ****************************************************   
  ஸ்..ஸ் ..ஸ்னோ முன்தினம் இரவிலிருந்து நேற்றுவரை இங்கு ஸ்னோ  தொடர்ந்து கொட்டிக்கொண்டேயிருக்கிறது.
                             இது முன்தினம் இரவு கொட்டும்போது எடுத்தது.

                 
 
                                  நேற்று விடிய காலை 7மணியளவில் எடுத்தவை.  

*******************************************************************
                                                 இவை இன்று எடுத்தது.
இங்கு இப்ப எல்லா இடமும் ஒரே வெள்ளை வெளேர் என இருக்கு. பார்க்க அழகாக இருக்கு. 
  
*****************************************************
*****************************************************

  
                     
 

                                              

13/11/2012

தீபாவளி வாழ்த்துக்கள்

  அனைத்து நட்பு உள்ளங்களுக்கும்                                   இனிய  தீபாவளி   நல்வாழ்த்துக்கள்.

                                
  
****************************************************
  வாங்க  எடுங்க ,கொண்டாடுங்க 
       இது நான் தீபாவளிக்கு  அதிரா தந்த   குறிப்பில் செய்த முறுக்கு
        
     இது சோயாமாவில் செய்த மைசூர் பாகு                                                                           
                                      பற்றிஸ் (சோமாஸ் )
 எல்லாரும் இனிதாக தீபாவளியைக்கொண்டாடுங்கள்.
**************************************************
**************************************************
  இங்கு தீபாவளி பெரிதாக இல்லை. ஊரில்தான் கொண்டாட்டாங்கள்.இங்கு கிறிஸ்மஸ் & நியூ இயர் கொண்டாட்டங்களின் ஆயத்தங்கள் அமர்களமாக ஆரம்பித்துவிட்டது. இங்கு இம்முறை நவம்பரிலேயே கிறிஸ்மஸ் களைகட்டத்தொடங்கிவிட்டது.
**************************************************
****************************************************30/10/2012

ஸ் ...ஸ்னோ


ஸ்....ஸ்னோ... ஸ் ...ஸ்னோ
இந்த வருடத்துக்கான முதல் ஸ்னோ வெள்ளிக்கிழமை(26.10.12) கொட்டியது. இரவு நேரம் என்றதால் படம் க்ளியரா இல்லை.

                                        
                            
    அடுத்த நாள் (27.10.12) நல்ல வெயில். அன்று எடுத்த படங்களை பாருங்கள்.ஸ்னோ கொட்டிய இடம் மாதிரியா தெரியுது. (வீட்டருகில் கமராவை  கொண்டு போனபோது சுட்டவை. 4, 8வது படத்தில் இருப்பது ,வயல் மாதிரி இருக்கும். இப்போ உழுத மாதிரி செய்திருக்கிறார்கள்.நிறைய ஸ்னோ கொட்டினால் நிலத்திற்கு  நல்லதாம். பயிர்கள் நன்றாக வளரும். அதற்காக
வேறு இடத்தில் இருந்து எடுத்து கொட்டுவதில்லை.அங்கே விழுவதுதான் நல்லதாம் )
                                        
 ****************************************************
*****************************************************

16/10/2012

சுகந்தி "பூ"

                                                  
                                                  
             herzlichen-glueckwunsch-0034.gif from 123gifs.eu Download & Greeting Card இளமதிக்கு  என் இனிய பிறந்ததின நல்வாழ்த்துக்கள்.
 நோய் நொடியின்றி  தேகாரோக்கியத்துடனும் , நீண்ட ஆயுளுடனும் ,சந்தோஷமாக வாழ   வாழ்த்துக்கள். 
(தகவல் தெரிவித்த அதிராவுக்கு என் நன்றிகள்.)
***************************************************
சுகந்தி "பூ"

  பூக்களை விரும்பாத ஆட்களே இல்லை.ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருபூக்களோ,பலபூக்களோ பிடிக்கும்.அம்மாதிரித்தான் எனக்கும் எல்லாப்பூக்களும்பிடிக்கும்.அதில் ரோஜா, செவ்வரத்தை மல்லிகை ரெம்ப பிடிக்கும்.நித்தியகல்யாணிப்பூவில் மாலை கட்ட அழகாக(வரும்)இருக்கும்.
                                      tks.gg
    
   சின்ன வயதில் புத்தகம் ஒன்றில் நான் முதன் முதலாக சூரியகாந்திப்பூவைப்பார்த்தேன். அதில் இருந்து  எனக்கு அந்தபூவில் விருப்பமாக  இருந்தது.. எங்க  ஊரில நான் பார்த்த ஞாபகம்  இல்லை. அங்கு இருந்திருக்கலாம். ஆனா எனக்கு தெரியாது. எனக்கு அந்தப்பூவ ரெம்ப பிடிக்கும். பெரிய பூ . கண்கவரும் மஞ்சள் நிறத்தில் நடுவில் மண்ணிறத்தில் மகரந்தங்கள் பார்க்க அழகா இருக்கும்.

     இங்கு  வந்து எனக்கு அம்மரம் வைக்கவேணும் என்று  ஆசை. முதல் நாங்கள் இருந்த இடத்தில் வைக்கமுடியவில்லை . கடைகளில் மரமாகவும், விதைகளை  பாக்கெட்டுகளிலும் வைத்து விற்றிருப்பதை கண்டிருக்கிறேன் . வீடு மாறுவது என்ற நிலை வந்தபோது ஒரு பாக்கெட் வாங்கிவிட்டேன்.

                                           tks.gg
    நாங்க  வீடு குடிவந்த புதிதில்  வாங்கிய, விதைப்பாக்கெட்டை பொருட்கள் அடுக்குவதில் எங்கேயோ கை மாறிப்போச்சு. பின் தேடியதில் காணவில்லை. நானும் அதை மறந்துவிட்டேன். ஆனால் என்கணவருக்கு வாங்கியது  ஞாபகம் இருக்கு. கடைகளில் புதிசா வாங்கப்போனால்,உடனே சொல்வார், ""பழையதை தேடி எடுங்கோ. இல்லையென்றால் பிறகு வாங்கலாம்"" என்று.  நானும் தலையாட்டிவிட்டு வருவேன். பிறகு எதையாவது தேடும் போது, அதை ஞாபகம் வைத்து தேடுவேன். கிடைக்காது.விட்டுவிடுவேன். எனக்கும் சூரியகாந்திப்பூவுக்கும் பொருத்தமில்லைப்போலும். பின் நானும் தற்காலிகமாக அதை மறந்தேபோனேன்.

    இம்முறை நான் ஊருக்கு போயிருந்தபோது, சூரிய‌காந்திப்பூவை கண்டதும்  எனக்கு பழையபடி வேதாளம் சூரியகாந்தி மரத்தில ஏறிட்டுது. நான் உடனேயே முடிவெடுத்துதான் இங்கு வந்தேன். போனதும் முதல்வேலையா இந்தபூமரம் வைக்கிறது என்று. அங்கிருந்தே இவரிடம் விசயத்தையும் சொல்லியாச்சு. அவரிடமிருந்து ஒரு பதிலும் இல்லை. மெளனம் சம்மதமே என நானே எடுத்துக்கொண்டேன்.
    அதோடு சூரியகாந்தி மரம் நடுவதென்றால் ஏப்ரல்,மே தான் நடவேண்டுமாம். இங்கு நான் வந்ததும் எனக்கு வைரஸ் காய்ச்சல் பிடித்துக்கொள்ள,அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட் என்று நாட்களும் போய்விட, பின் மகனுக்கும் சிறுவிபத்து நடந்து, அந்த   ஜுன் நடுப்பகுதி வந்துவிட்டது. எனக்கு இம்முறையும் பலனில்லை என விட்டுவிட்டேன்.

      பின் ஒருநாளில் கார்டனில் துப்பரவாக்கும் சமயம் ஒரு மரம் வளர்வதைக்கண்டு நான் இவரிடம் சொன்னேன், அவர் அதை பிடுங்கி எறியுங்கோ எனச்சொல்ல, எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஏனென்றால் என் உள்ளுணர்வு சொல்லிச்சு. இது சூரியகாந்திமரம்தான் என்று. ஆனால் இவருக்கு அந்த மரம் வளர்ந்த இடத்தில் ஒன்றும் வளரக்(க)கூடாது.   என்னிடம்   நீங்க ஏதாவது seeds போட்டீங்களா? என்று கேட்டார். நான் சொன்னேன். "இல்லையே" என்று. அப்ப நீங்க நினைக்கிறமாதிரி அந்த மரமில்லை பிடுங்கி எறியுங்கோ என்று.  நான் உடனேயே சொன்னேன்."கொஞ்சநாள் விட்டுப்பார்ப்போம் சூரியகாந்திமரம் இல்லையென்றால் பிடுங்கி எறிகிறேன் என்று. ஒருமாதிரி அதை காப்பாற்றி வந்தேன். என்னுடைய நம்பிக்கையில‌, என்ன மரம் என்றுதான் பார்ப்போமே என்ற எண்ணம் பின் இவருக்கும் வந்துவிட்டது.
     எனக்கோ ஒரே வியப்பு. மனம் சொல்லுது. அது நீ ஆசைப்பட்ட‌ சூரியகாந்திப்பூமரம்தான் என்று. ஆனால் இது எப்படி இங்கு? அதுவும் இவ்வளவு இடம் இருக்கேக்கை.ஒரு ஓரமா? அதுவும் நல்லதுக்குதான் நடுவில வளர்ந்திருந்தா கட்டாயம் இவர் புல் வெட்டேக்கை பிடுங்கி எறிந்திருப்பார். எல்லாம் நன்மைக்கே என நினைத்து, அந்தமரம் என்னவென்று தெரியாமல் உரம்(ஒரு உள்ளுணர்வைக்கொண்டு) போட்டு வளர்த்து விட்டேன்.
    நான் சூரியகாந்திப்பூவை பார்த்திருக்கிறேன். மரத்தை இப்போதுதான் பார்க்கிறேன். இது அந்த மரம்தானா என்பதை அடுத்ததெருவில் ஒரு  வீட்டில் வளர்ந்த சூரியகாந்தி மரத்தின் இலையை பிடுங்கி வந்து இந்த இலையோடு பொருத்தி பார்த்து , இது அந்த மரம்தான்  என்று,கணவரைக் கூப்பிட்டுக்காட்டினேன்.அதன் பின் ஒப்புக்கொண்டார்.

     பின்பு மரம்  பெருசா வளர எனக்கு சந்தோஷத்துடன் கூடிய அதிர்ச்சி. எப்படி இது வந்தது ? இன்னமும் தெரியவில்லை. ஆனா  அந்த க்ரில் கல்லில் பறவைகள் வந்து இருப்பார்கள். ஒருவேளை அவர்களால் இந்த மரம் கிடைத்திருக்கிற‌து போலும்." நான் அவர்களுக்கு சாப்பாடு போடுவதற்கு நன்றிக்கடனா இவ்வுதவி செய்தார்கள்", என கணவர் சொல்கிறார்.!! எது எப்படியோ
    இப்ப அந்த மரம் வளர்ந்து, என் ஆசையை நிறைவேற்றிவைத்து. பூக்கள் பூத்துவிட்டன.
                             இந்த பதிவின்போது நிறைய பூக்கள்  பூத்துவிட்டது 

   சின்னதில் சூரியகாந்தி என சொல்லவராமல் "சுகந்தி"ப்பூ  என்று சொன்னது  என் மகன்.
_____________________________________________________
_____________________________________________________

                                                       tks.net 
------------------------------------------------------------------- 
இளமதிக்கு இப்பாடல் 

                      
----------------------------------------------------------------------                                              
 
Copyright பிரியசகி