RSS

22/12/2012

Doughnut (snacks)

       டோநட்  (DONUT)
   இந்த மேக்கர் LIDL supermarket ல் வந்தபோது  வாங்கி வைத்துவிட்டேன். நான் வாங்கியது வேறு காரணத்துக்கு. அது ஏலாமல் போக அப்படியே வைத்துவிட்டேன்.

    பின்பு  ஒரு நாள் இந்த டோநட் ஐ  அந்த புக்கில் கொடுத்த ரெசிப்பியின்படி செய்துபார்த்தேன் .நன்றாக வந்தது.  ஆனால் ப்லேய்னா தான் செய்தேன். பின்  மகனின் ப்ரெண்ட்ஸ் வந்தபோது , இது ஞாபகம் வந்தது. செய்யும்போது கொஞ்சம் அலங்காரம் செய்து கொடுத்தேன்.கொஞ்சநேரத்தில் எல்லாம் காலி.

      இது  இங்கு  பேக்கரியில்  விற்பார்கள். அது கொஞ்சம் பெரிதாக இருக்கும்.
இது  செய்வது  ஈசி. ஆனால் இந்த மேக்கர் வேண்டும்.


செய்தபின் இப்படி வரும்.நீங்க அலங்கரித்து கொடுக்கலாம்.
                  plain Donut                        decorat Donut
   
டோநட்  மேலே  frosting செய்துவிட்டு sugar sprinkles தூவினால் அழகாக இருக்கும்.


 தேவையான பொருட்கள்:--
260 g _  மா (flour)
130 g _  சுகர் (sugar) ,
150 ml _  பால்,(milk)
100 ml _  wipped cream,
3 tbs._  பட்டர் அல்லது மாஜரின்,(butter)
1 பக்கெட்_  வனிலா சுகர் ,(vanilla sugar)
1 பக்கெட்_ பேக்கிங் பவுடர்.(baking powder) .

செய்முறை :_
எல்லாம் ஒன்றாக சேர்த்து கலந்து இந்த மேக்கரில் விட்டு பேக் செய்ய வேண்டியதுதான். 50 டோநட் செய்யலாம். எல்லாம் செய்து முடிக்க  15 நிமிடம் போதும்.
(இந்த அளவுக்கு 3 முட்டை சேர்க்கவேண்டும். இதில் சேர்க்காமல் செய்த டோநட்)

<><><><><><><><><><><><><><><><><><><><><><>

**** மகியின்  குறிப்பிலிருந்து ருசித்தவை ****.

    வெஜ் பேஸ்ரி  வீல்ஸ் 


<><><><><><><><><><><><><><><><><><><><><>

 தேங்காய்பால் கடல்பாசி (china grass with coconut milk)
இது 3,4 தரம் செய்தாச்சு.


 <><><><><><><><><><><><><><><><><><><><><>
             நாம் விரும்புவதையெல்லாம் பெற முடியாததால், 
      நாம் பெற முடிந்ததில் திருப்தி கொள்வோம்
                               - ஸ்பெயின் நாட்டுப் பழமொழி
   <><><><><><><><><><><><><><><><><><><><><>


எனக்கு பிடித்த பாடல்:._                                  
                

<><><><><><><><><><><><><><><><><><><><><>
           
            .



    

27 comments:

  1. அம்முலு! :)))) சூப்பர் க்யூட் டோநட்! நானும் இந்த மேக்கர் வாங்கவேண்டும் என நினைத்ததுண்டு, ஆனா சரியா வருமோ வராதோ என்ற சந்தேகம், ஆடிக்கொருநாள் அமாவாசைக்கொருநாள் செய்ய இது வேறு வாங்கணுமா என்ற நினைப்பும் கூட! :))) குட்டீஸ்களுக்கு இப்படி செய்துகுடுத்தால் ரொம்ப பிடிக்கும்.

    பேஸ்ட்ரி வீல்-தே.பா.க.பா:) இரண்டும் செய்து பார்த்ததுக்கு மிக்க நன்றிகள்! உங்களுக்குப் பிடித்ததில் ரொம்ப சந்தோஷம். படங்கள் அழகா இருக்கு.

    இந்தப் பாட்டு வைரமுத்துவின் கவிதைக்காகவே எல்லா வரிகளும் மனப்பாடமாக வைத்திருந்தேன், அது ஒரு கனாக்காலம்! :)))
    நல்ல பகிர்வு! சனிக்கிழமை காலை படிக்க மனசுக்கு சந்தோஷமா இருக்கு! ஹேப்பி வீகென்ட்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க மகி.ரெம்ப சந்தோஷம் நீங்க எழுதியது. இந்த டோநட் பிடிக்காதவங்களே இல்லை எனலாம். ஆனா பக்கத்து ஜேர்மன்காரி சொன்னா எக் சேர்த்தால்தான் இன்னும் நல்லா இருக்கும் என்று. நான் சேர்க்காமல் செய்து பார்த்தேன் நல்லா வந்தது. நிறைய தடவை செய்தாச்சு.
      உங்களுக்கு useful என்றால் வாங்கலாம்.

      Delete
    2. உங்க ரெசிப்பி இன்னும் இருக்கு போடுவதற்கு.உங்களுக்குதான் நன்றி சொல்லனும்.

      Delete
    3. இந்தப்பாட்டு,இதேமாதிரி இன்னும் நிறைய பாடல்கள் இருக்கு.கேட்டுட்டே இருக்கலாம். பாடல்கள் மனதை லேசாக்கும்.
      ரெம்ப நன்றி மகி வருகைக்கும்,கருத்துப்பகிர்விற்கும், உங்களுக்கும் ஹேப்பி வீகென்ட்

      Delete
  2. அன்புள்ள அம்முலு,

    எல்லாப்படங்களும் அழ்கோ அழகு. பாராட்டுக்கள்.

    செய்முறையும் எளிதோ எளிது ... நன்றிகள்.

    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. வாங்க அண்ணா.உங்க பாராட்டுக்கு நன்றிகள். செய்முறை எளிது.ஆனால் இந்த மேக்கர் வேணும்.


      Delete
  3. DONUT என்ற தலைப்பு தான் என்னவென்றே புரியவில்லை.

    DO NOT DO IT என்பது போல உள்ளது.

    இன்னும் கொஞ்சம் விளக்குங்கோ....
    அது என்ன வென்று.....

    முந்திரி, பாதாம் முதலிய கொட்டைகள் பற்றி தெரியும்.

    இது என்ன புதுக்கொட்டையாக உள்ளது?

    நான் இதுவரை கேட்டறியாத ஒன்றாக உள்ளது.

    >>>>>>>

    ReplyDelete
    Replies
    1. இது இங்கு பேக்கரியில் விற்பார்கள். ஆங்கிலத்தில் Doughnut என சொல்வார்கள். ஒருவகை பன். இது நட்ஸ் இல்லை. சின்னப்பிள்ளைகளுக்கு
      ரெம்ப பிடிக்கும்.

      Delete
    2. அன்புள்ள அம்முலு, NUTS அல்ல BUN என்ற தங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றிம்மா. VGK

      Delete
  4. //நாம் விரும்புவதையெல்லாம் பெற முடியாததால்,
    நாம் பெற முடிந்ததில் திருப்தி கொள்வோம் //

    நல்லதொரு பழமொழி. அதுபோலவே தான் நினைத்து நாம் திருப்தி கொள்ள வேண்டியுள்ளது.

    >>>>>>>

    ReplyDelete
    Replies
    1. பிடித்திருந்தது இந்தவாசகம்.அதனால் எழுதியிருந்தேன்.

      Delete
  5. உங்களுக்குப்பிடித்ததோர் அருமையான பாடல் பகிர்வுக்கு நன்றி. எனக்கும் பிடித்துள்ளது, அம்முலு.

    புதுப்பதிவுகள் வெளியிட்டால் எனக்கு மெயில் மூலம் லிங்க் அனுப்பி வைக்க வேண்டும். ப்ளீஸ்..அம்முலு

    என் Mail ID: valambal@gmail.com

    அன்புடன்
    கோபு அண்ணா

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும்பாடல் பிடித்திருந்த‌தையிட்டு சந்தோஷம். வருகைதந்து கருத்திட்டதற்கு மிக்க‌ நன்றிகள்.

      Delete
  6. ஆகா...அம்மு..இன்னிக்குத்தான் எனக்கு இங்கால வர நேரம் கைகூடியிருக்கு...:)

    வண்ணமயமாக கண்ணையும் மனசையும் பறிக்கிற பதிவு.
    சூப்பர்..டோனட் எனக்கு அவ்வளவா விருப்பம் குறைவு..காரணம் இனிப்பு...:)
    ஆனால் நீங்க செய்திருக்கிறதைப் பார்க்க ரொம்ப அழகாக இருக்கே...;)

    எனக்கும் டோனட் மேக்கர் வாங்கிச் செய்யோணும் போல எண்ணம் வருகுது... யோசிப்பம்...:)

    ReplyDelete
    Replies
    1. வாங்க இளமதி என்ன நீங்களும் கிறிஸ்மஸ் பிசி போல. காணேல்ல என யோசித்தேன்.எனக்கு விருப்பம்.மேக்கரை வாங்கி செய்தேன்.நல்லா வந்தது.நான் பின் glasur வாங்கி, zukerstreusel லும் வாங்கிச் செய்தேன். சின்னப்பிள்ளைகள் யாராவது வந்தால் உடன் செய்துகொடுக்கலாம்.

      Delete
  7. வெஜ் பேஸ்ரி வீல்ஸ் அது விருப்பமானதே...:) அதிலும் பேக் பண்ணுறதென்றால் டபிள் ok...:)

    கடல்பாசி கலர் கலரா ம்..கண்ணைப் பிடுங்குது கலர்...:) சூப்பரா வந்திருக்கு..இந்தக் கடல்பாசி இங்கின எங்கை வாங்கினீங்கள்?..
    வாங்கிச் செய்து பார்க்கோணும்...

    வரவர சமையலில் நீங்களும் கொடிகட்டிப்பறக்கிறீங்க...:) வாழ்த்துக்கள் அம்மு...:)))

    ReplyDelete
    Replies
    1. கொடிகட்டிப்பறக்கிறீங்க...:)//
      ஐய்யையோ இந்த வசனத்தை வாபஸ் வாங்குங்கோ இளமதி. இதுதான் முதல் குறிப்பு(டோனட்).மகியின் குறிப்பு செய்துபோட்டு அதிராவின் புண்ணியத்தில் இப்பத்தான் ப்ளாக்கில் போடுகிறேன். இப்பத்தான் மற்ற ப்ளாக் போய் பார்த்துசெய்து வைத்திருக்கிறேன். இனிமேல்தான் போடவேணும்.இந்த blätterteig எல்லா supermarket கிடைக்கும்.நான் அதை ப்லெய்னா டிசைன் செய்துovenl வைத்து ஜாம் வைத்துச்சாப்பிடுவோம்.
      கடல்பாசி சைனா அல்லது தாய்லாந்துக்கடையில் இருக்கு இளமதி.

      Delete
  8. நல்ல பழமொழி...

    நாங்கள் சொல்லுறதுக்கு தலை ஆட்டிகள் இருந்தால் சந்தோஷம் தான்ன்ன்ன்...:) நான் உங்க பாடல் தெரிவைச் சொன்னன்...:)))

    எனக்கும் பிடித்த பாடல்தான்...
    மிக்க நன்றி அம்மு பகிர்வுக்கு!!!

    ReplyDelete
    Replies
    1. இந்தப்பாட்டு உங்களுக்கும் பிடித்திருக்கு என்றது எனக்குச்சந்தோஷம். பிசியான டைமில் வந்து கருத்து பகிர்ந்ததற்கு மிக்க நன்றி இளமதி.

      Delete
  9. ஆஹா சூப்பர் கடையில் வாங்குவதுபோலவே மிக அழகாக இருக்கு. நீங்களும் “சமையல் ராணி” தான் அம்முலு...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அதிரா.என்ன சோர்ந்து போனீங்களோ. கவலைப் படாதேங்கோ.உங்களுக்குத்தான் முதல் பரிசு.

      உங்களை விடவாஆஆ. அந்தப்பட்டம் உங்களுக்குதான் பொருந்தும். பார்த்துக்கொண்டு இருங்கோ.நிச்சயம் .

      நான் இதில் cinnamon poweder,யோர்க்கட் சேர்த்தும் செய்தேன்.ஆனால் படம் எடுக்கமுடியவில்லை.

      Delete
  10. வெஜ் பேஸ்ட்டியும் செய்திட்டீங்களோ? நானும் செய்யோணும்..

    உங்களுக்குப் பிடித்தபாடல் எனக்கும் பிடிக்குமே...

    ReplyDelete
    Replies
    1. நீங்க கேபேஜ் வைத்திருக்கிறமாதிரி, என்னிடம் இந்த பேஸ்ரிசீட் இருக்கும்.
      உங்க குறிப்பும் வர இருக்கு. உங்களுக்கும் பாடல் பிடித்திருப்பதில் மிக்க சந்தோஷம்.மிக்க நன்றி அதிரா.

      Delete
  11. லாஸ்ட்ல ஃபர்ஸ்ட் :))))

    டோனட்ஸ் எங்க வீட்ல ரெண்டு பேருக்கு ரொம்ப பிடிக்கும்

    செய்திடறேன் சீக்கிரமே .
    கடல்பாசி ஆஆஆ ஃப்ரிட்ஜில் கோகோனட் வாடர் இருக்கு மறந்திட்டேன் நாளைக்கு மீண்டும் செய்யபோறேன்


    இந்த நிலாவே வா படம் நாங்க திருமணம் முடிந்ததும் பார்க்க போனோம் ...:))))))) மாமனார் குடும்பத்தினருடன


    பெரிசு சிறிசு என பதினைந்து பேர் கொண்ட மெகா கூட்டத்துடன் சினிமா பாக்க போனதை நினைச்சா இப்பவும் சிரிப்பா வருது ...

    ReplyDelete
    Replies
    1. இங்கிருந்தவங்களுக்கு இந்த டோனட் பிடிக்காதவங்களே இல்லை எனலாம்
      அஞ்சு.ஊரிலிருந்து வந்தவங்க இந்த மேக்கரை வாங்கிட்டு போயிருக்கிறாங்
      க.அந்தளவுக்கு இது டேஸ்ட்.இன்னுமொன்னு இருக்கு கிட்டதட்ட ஜாங்கிரி மாதிரி இருக்கும்.கொஞ்சம் சுகர் அதிகம்.அதுவும் பிடித்திருந்தது.
      இப்பாட்டு பழையஞாபகத்தை வரவைச்சிட்டுதா. எனக்கு கேட்டுகேட்டு மனப்பாடமே ஆயிடுச்சு. ரெம்ப நன்றி அஞ்சு. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கிறீங்க.

      Delete
  12. டோநட் - அழகா செய்து இருக்கிறீர்கள். இதுவரை சுவைத்தது இல்லை. இங்கு கிடைக்குமா ? என பார்க்கிறேன்.

    வெஜ் வீல்ஸ், தேங்காய் பால் கடல்பாசி என எல்லாம் இந்த சாயங்கால வேளையில் பார்க்கும் போது சாப்பிட்டுக்கிட்டே....கமண்ட் போட்டால் எப்படி இருக்கும்...இல்ல..? என தோன்றுகிறது. நன்றி.

    ReplyDelete
  13. வாங்க உமையாள் பழைய பதிவுகளெல்லாம் தேடி படித்து கருத்துக்கள் இடுவது மனம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிக்க நன்றிகள் உங்களுக்கு.

    ReplyDelete

 
Copyright பிரியசகி