RSS

07/06/2020

சமைத்து அசத்தலாமே...

சமையல்ராணிகளின் உணவுகுறிப்புகள்...

பிஞ்சு கமக்கார அதிரா செய்து பார்த்து நல்ல ருசியா இருந்ததென சொல்லி அவரின் ப்ளாக் ல் பதிவிட்டிருந்தா சொக்லேட்மாபிள் கேக்.  நானும் செய்துபார்த்தேன் சூப்பரா இருந்தது. உண்மையில் மிகவும் மென்மையா பஞ்சுமாதிரி soft ஆ இருந்தது. நான் எண்ணெய் சேர்க்காமல் பட்டர் butter தான் சேர்த்தேன். அத்துடன் பனானா பிரட் கேக்கினையும் செய்தேன்.  

என் வோட்(Vote) Chocolate marble cake கிற்கே. ஏனெனில் என் கணவர் கேக் ஒருபோதும்  விரும்பி சாப்பிடமாட்டார். பொதுவா இனிப்புவகைகளை விரும்பி உண்பவர் இல்லை. அதற்காக சாப்பிடுறதே இல்லை எனவும் சொல்லவில்லை.  ஆனா இந்த மாபிள் கேக்கின் அட்ராக்‌ஷனோ என்னவோ தெரியாது, நான் கொடுக்க, சாப்பிட்டுவிட்டு நல்லாயிருக்கு என்று வேறு சொல்லி, இரவு உணவுக்கு பின்னரும் ஒரு பீஸ் சாப்பிட்டார். ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.  நானும் ,மகனும் ஷாக் ஆயிட்டோம். ஆனா காட்டிக்கொள்ளவில்லை. ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்தோம்.

இதோ பிஞ்சு கமக்கார அதிராவின் குறிப்பிலிருந்து.......











இது Banana Bread Cake. இதுவும் நன்றாகவே இருந்தது. வனிலா எசன்ஸ் சேர்த்தேன். வாழைப்பழம் + Vanilla essence இரண்டினதும்  flavour super combination. இரண்டும் அருமையா இருந்தது.நன்றி அதிரா.





*******************************************************
தேவதையின் சமையல்......

இனி அஞ்சுவின் தட்டு தோசை.  இது  மிகவும் நன்றாக இருந்தது.. எங்க வீட்டில் தோசை என்றால் 3 நேரம் கொடுத்தாலும் சாப்பிடுவார்கள். நான் தோசைக்கல்லிலேயே வார்த்தேன்.
சம்மந்தி சட்னியும் கூடவே செய்து சாப்பிட்டாச்சு. ஆனா சட்னி என்பதை விட எனக்கு அதை பார்க்க இடி சம்பல் மாதிரி இருந்தது. நல்ல ருசியாக இருக்கு. உளுந்து, க.பருப்பு வாசனையுடன் தேங்காயும் சேர்த்தரைத்தது சூப்பர்.





இந்த மாவில் இட்லி சுட்டால் என்ன என எண்ணம் வரவே உடனே இட்லியும் சுட்டாச்சு.. வாவ்... சூப்பரா பஞ்சு போன்ற இட்லி வந்தது. இந்த ரெசிபியிலும் இட்லி செய்யலாம். தாங்ஸ் அஞ்சு.



*************************************************
இதுதான் நான் இம்முறை வெயிலின் போது வைத்தது. மோர்மிளகாய். அத்துடன் சிவப்பு பழமிளகாயும் கிடைக்க அதையும் காயவைத்தாயிற்று.




***************************************************

நாங்கள் கடந்த டிசம்பரில் சிங்கப்பூருக்கு போயிருந்தபோது  இந்த அகர் அகர் எனப்படும் கடல்பாசியை வாங்கி வந்தேன். ஒருநாளும் இதில் இப்படி செய்து பார்த்ததில்லை. வெயில் நேரம் இப்படி கடந்த வாரம் செய்து சாப்பிட சூப்பரோ சூப்பர். செய்வதும் ஈசி.  நிறைய குறிப்புகள் யூடியூப்பில் இருக்கு. இது என் மச்சாள் சொன்னதை கேட்டு செய்தேன். அனேக முறைகள் ஒரேவிதம்தான்.

1. முதலில் கடல்பாசியை தண்ணீரில் 2தரம் சுத்தம் செய்து அரைமணித்தியாலம் தண்ணீரில் ஊறவிடவேண்டும். பின் கடாயை அடுப்பில் வைத்து தண்ணீர் கொதிக்கவைத்து (10 கிராம் எனில் 2 கப் தண்ணீர்) அகரை போட்டு நன்றாக கரையும் வரை காய்ச்சவும்.

2.அகர் கரைந்தபின் 1லிட்டர் பாலை விட்டு கொதிக்கவிடவும். அதனுள் வனிலா எசன்ஸ்(விரும்பினால்) விட்டு பின் கொதித்து வர அடுப்பை சிம் ல் வைத்து, அதில் பாதியை எடுத்து ஒரு கிண்ணத்தில் விட்டு விரும்பிய கலரை விட்டு கலந்து ப்ரீஸரில் 10 நிமிடம் வைக்கவும்.  அது செட் ஆகும்வரை மற்றைய மிகுதி அடுப்பிலேயே சூட்டில் இருக்கனும்.

3. 10 நிமிடத்திற்கு பின் செட் ஆனதை எடுத்து வைத்து, பின் மிகுதி இருக்கும் அகரை விரும்பினால் வேறு கலரை சேர்த்து, செட் ஆகிய அகரின் மேல் ஒரு கரண்டிபிடித்து அக்கரண்டியின்மேலேயே ஊற்றவேண்டும். எல்லாம் விட்டபின் இதனை சாதாரண ப்ரிட்ஜில் 4,5 மணித்தியாலம் வைத்து எடுக்கவும். விரும்பிய வடிவில் வெட்டி சாப்பிடவேண்டியதுதான்.

பின்குறிப்பு>> 3கலர் சேர்ப்பதாயின் 2வது கலர் சேர்த்தபின் முதல் தரம் மாதிரியே இதையும் ப்ரீஸரில் 10 நிமிடம் வைத்து எடுக்கவேண்டும். 3வது கலர் சேர்த்தபின் நோர்மல் ப்ரிட்ஜில் வைக்கவேண்டும்.

இந்த அகர் அகர் இங்கு எங்க supermarket ல் கிடைக்கிறது.




இதில் ரோஸ்மில்க் அகர், ப்ளெயின் அகர் 


இந்த மூவர்ண அகரில் சின்னச்சின்ன பபிள்ஸ் வந்திருக்கு. அப்படி வரக்கூடாதாம்.  அப்படி வந்தால் இரண்டும் சேராமல் பிரிந்து தனித்தனியாக வந்துவிடும். ஆனா எனக்கு எல்லாக்கலரும் நன்றாக பொருந்திபோயிருந்தன.. நான் முதலில் ரோஸ்மில்க் அகர்,  பின் ப்ளெயின் அகர், பின் க்ரீன் கலர் அகர் என சேர்த்தேன்.



****************************************************
இங்கு மரவள்ளிகிழங்கு நல்ல கிழங்காக கிடைப்பது அரிது. அதனால் நான் வாங்குவதேயில்லை. நீண்டகாலத்தின் பின் கிடைத்த கிழங்கினை  டுபாய் பூசணியோடு காரக்கறி வைத்தேன்.
இந்த  பூசணி என் மகனுக்கு சின்னனில் இருந்து சரியான விருப்பம். வெட்டிக்கொண்டிருக்கும்போதே கண்டார் எனில் சும்மாவே எடுத்து  சாப்பிடுவார். அவருக்கு அப்போ பெயர் சரியா சொல்லவராது.  சுபாபூசணி என்றே சொல்வார். கறி வைத்த சமயம் இதனை சொல்லிசிரித்தேன்.(சூரியகாந்தியை சுகந்தி பூ என சொல்வார்)





புதினாவும், வெந்தய கீரையும். புதினாவை இப்போ நிலத்திலும் நட்டிருக்கிறேன்.   





இன்னமும் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபடவில்லை. இங்கு 15ந்திகதியிலிருந்து  பாடசாலை ஆரம்பம். பின் 3 கிழமையால் கோடைகால விடுமுறை ஆரம்பம்.
................................................................................................









51 comments:

  1. ஆஹா.... சுவையான சமையல் குறிப்புகள். அகர் அகர் பயன்பாடு எங்கள் வீட்டிலும் உண்டு. சுவைத்திருக்கிறேன்.

    சமையல் முயற்சிகள் தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட்! ஆதியும் நல்லா சமைப்பாங்க. இது முதல்முறையாக செய்துபார்த்தேன்.
      மிக்க நன்றி உங்க வருகைக்கும்,கருத்துக்கும்.

      Delete
  2. ஆஹா படங்கள் அட்டகாசமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா ஜீ உங்க கருத்துக்கும்,வருகைக்கும்

      Delete
  3. மிகவும் அருமையாக செய்துள்ளீர்கள்...

    பிஞ்சு - பிஞ்சு என்பதை நிரூபித்து விட்டீர்களே...! ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா..ஹா.. டிடி அண்ணா. மிக்க நன்றிகள் உங்க கருத்துக்கும்,வருகைக்கும்

      Delete
  4. பஞ்சுமாதிரி soft ஆ//

    ஆஆஆஆஆஅ இந்த பிஞ்சு பிஞ்சு என்று பார்த்து பஞ்சுவை பிஞ்சு என்று வாசித்து அப்புறம் நீங்களே அர்த்தம் செஞ்சுக்கங்க ஹா ஹா ஹா அம்முலு!!!!!!! எனும் பிரியசகி...ஹா ஹா ஹா ஹா

    கேக் இரண்டும் மிக மிக நன்றாக வந்துள்ளது.

    அகர் அகர் புட்டிங்க் ரொம்பவே நல்லா வந்திருக்கு

    கேக்கின் மேல் போடப்படும் ஃபாண்டன்ட் செய்ய (முட்டையில்லாமல்) அகர் அகர் யூஸ் செஞ்சு செய்தால் ரொம்ப நல்லா வரும்.

    எல்லாமே நல்லா வந்திருக்கு

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா..ஹா கீதா. எங்கட பிஞ்சு பஞ்சு போன்ற மென்மையானவா.. தெரியாதா உங்களுக்கு. ஓகே மாத்தி வாசிச்சாலும் பொருந்தும் பிஞ்சுவுக்கு.
      நான் கேக் செய்வது மிக குறைவு. இனி கேக் செய்தால் நீங்க சொன்ன மாதிரி அகரில் செய்து போட்டு பார்க்கிறேன்.
      மிக்க நன்றி கீதா உங்க வருகைக்கும்,கருத்துக்கும்.

      Delete
    2. ஹையோ நானே வாய் விட்டு சொல்லிவிட்டேனோ....பிஞ்சுவுக்கு இன்று ஒரே கொண்டாட்டம் தான் போங்க...

      கீதா

      Delete
    3. அவங்க பாஷையில் சொன்னால்..பொயிண்ட் ஆக போறாங்க. ஹா..ஹா (மயங்கிட போறாஙக) சுட்டாறின தண்ணி வேணும் இப்போ... தெளிக்க. ஹா..ஹா..

      Delete
  5. வெந்தயக் கீரை புதினா ரொம்ப நல்லா வந்திருக்கு...

    இட்லி செமையா இருக்கு சாப்பிடணும் போல

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இம்முறைதான் வெந்தயகீரை இப்படி வந்திருக்கு. நான் இது 2முறை வெட்டி பாவித்துவிட்டேன். வெந்தய கீரை போட்டு சப்பாத்தி செய்தேன். இது புதிதாக வந்திருக்கு. புதினா இங்கு நன்றாக வரும். விண்டரில் இருக்காது. பின் சம்மரில் தானாக வரும்.
      உண்மையில் இட்லி செம சாப்ட். எனக்கும் இட்லிக்கும் வெகுதூரம் ஏதாவது பிழை வந்துவிடும். ஆனா இந்த மாவில் செய்தது எல்லாமே சரியாக இருந்தது. இதுவும் பிஞ்சு மாதிரி..சொறி பஞ்சு மாதிரி இருந்திச்சு.
      மிக்க நன்றி கீதா.

      Delete
  6. அம்மு அனைத்தும் அருமை. மிக அட்டகாசம்.
    சிறிது நேரம் கழித்து வருகிறேன் மீண்டும்.
    படங்கள் கண்ணை கவருகிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அக்கா.நீங்க ஆறுதலா வாங்க.

      Delete
  7. அம்மு பிஞ்சுவுக்கு முன்னாடியே வந்துவிட்டேன் பாருங்க ஹெ ஹெ ஹெ ஹெ

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆ..அதுதான். அவங்க இனி வருவாங்க பாருங்க புயல் வேகத்தில..

      Delete
    2. //அம்மு பிஞ்சுவுக்கு முன்னாடியே வந்துவிட்டேன் பாருங்க///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). ஞாயிறு என்பதால இப்பூடி ஆச்சு :)) இல்லை எனில் மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊ:))

      Delete
  8. அதிரா,ஏஞ்ச்ல் செய்த சமையல் குறிப்புகளை வைத்து அழகாய் செய்து விட்டீர்கள்.
    உங்கள் கணவருக்கு கேக் பிடித்து இருப்பது மகிழ்ச்சி.

    ரோஸ்மில்க் அகர், ப்ளெயின் அகர், க்ரீன் கலர் அகர் என எல்லாம் அருமை.

    இடலியும், தட்டு தோசையும், துவையலும் (இடி சம்பல்தான்)

    தேங்காய் பொடி அருமை.

    புதினா, வெந்தய கீரை அழகு.

    நன்றாக செய்ய வேண்டும் என்ற எண்ணம், ஆர்வம், உழைப்பு எல்லாம் என்றும் வெற்றிதரும்.



    ReplyDelete
    Replies
    1. வாங்க அக்கா.. கணவர் பெரிதும் விரும்புவதில்லை. உங்க ரெசிப்பியும் விரைவில் வரும்.நான் மறக்கவில்லை. இதில் பதிவு அதிகமாகி விட்டது. சிலது நான் ட் ராப்டில் வைத்திருந்தது. அதனால் சேர்க்கவில்லை.
      உண்மையில் புதிதாக சமைக்கும்போது மனம் நீங்க சொன்னதுபோல்தான் எண்ணும். விரும்பி சாப்பிடனுமே என்பது வரும். மிக்க நன்றி அக்கா உங்க வருகைக்கும்,கருத்துக்கும்.

      Delete
  9. ஆவ்வ்வ்வ் பொதுவா சனி ஞாயிறுகளில் நான் புளொக் திறப்பதில்லை, அல்லது இரவில் மட்டும் நினைவு வந்தால் திறந்து பார்ப்பது வழக்கம்.. இன்று, இப்போதான் கொஞ்சம் ஃபிறீ ஆனேன்.. நித்திரை வரவில்லை அதனால சரி புளொக்கை எட்டிப் பார்க்கலாமே என வந்தால்ல்ல்..

    வாவ் மிக அழகாக செய்து அசத்திட்டீங்க அம்முலு.. சூப்பராக இருக்குது.. ஒருவர் செய்து போட்டதை, நாம் செய்து பார்க்கும்போது, அதிலிருநுக்கும் பிழைகளை திருத்தி, இன்னும் நன்றாகச் செய்ய முடிகிறது...

    இந்த வகைக் கேக்குகளில் சுவையில் குறை சொல்ல முடியாது...

    பனானா கேக்கும் சூப்பராக இருக்குது, இன்னும் கொஞ்சம் வேக விட்டுத்தானே எடுத்திருப்பீங்க.. கலர் இன்னும் சரியாக வராததுபோல இருக்கு...

    நன்றி அம்முலு.. ஆனா எனக்கு இன்னும் ஃபீஸ் வந்து சேரவில்லை:)).. இன்று சண்டே.. விடிஞ்சதும் அனுப்பி வைக்கவும்:))

    ReplyDelete
    Replies
    1. ஆ...வாங்கோ பிஞ்சு கமக்காரி.. எனக்கும் சனி , ஞாயிறு பதிவு பண்ண நேரம் இருக்காது. இது கேக் செய்தாச்சு, தோசையும் செய்திட்டேன். லேட்டாக்க வேண்டாமே என போஸ்டை பதிவு செய்திட்டேன். இனி உங்களுக்கும் சந்தோஷமா இருக்குமெல்லோ.

      Delete
    2. பனானா கேக் நன்றாக வந்தது அதிரா. அதில் லைட் காணாது. மேலே நல்ல ப்ரவ்ன் ஆக வந்திருக்கு. உள்ளுக்குள் உதிராக இருந்தது .படத்தில் அப்படி இருக்கு. நான் வெட்டியபின் எடுக்க மறந்திட்டன். அத்துடன் மகனார் அரைவாசியை வேலைக்கு எடுத்துக்கொண்டுபோயிட்டார்.
      ஓகே நான் அனுப்பி வைக்கிறேன்..

      Delete
  10. //இனி அஞ்சுவின் தட்டு தோசை.//

    ஆவ்வ்வ்வ் நானும் இது செய்யோணும்.. எப்ப செய்வேனோ தெரியவில்லை...

    //எங்க வீட்டில் தோசை என்றால் 3 நேரம் கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்//
    இப்படி எனில் நான் அடிக்கடி செய்வேனே.. இது எங்கள் விட்டில்.. தோசை எனச் சொன்னவுடன்.. பதில் வரும்.. தோஓஓஓஒ...சை... யா?:)) என ஹா ஹா ஹா பிடிக்காது பெரிசாக, அதனாலதான் நான் செய்யப்போவதில்லை.

    இடிச்ச சம்பலும் செய்திருக்கிறீங்க.. எனக்கு இப்பவே வேணும்....

    ReplyDelete
    Replies
    1. நல்ல டேஸ்ட் ஒருக்காவேணும் செய்துபாருங்கோ. இந்த தோசையில் மேலே சீஸ் தூவி கொடுத்தாலும் சாப்பிடமாட்டினமா?
      இங்கு மகன் நுட்டெல்லா பூசி பின் அதற்கு மேல் கொஞ்சமா பொடி தூவி இனிப்பும் உறைப்புமா ஏதோ மாதிரி சாப்பிடுவார் நல்ல டேஸ்ட் என்று.கர்ர்ர்ர்ர்ர்ர்.
      அது மிக்ஸியில் அரைத்தது. ஆனா இடி சம்பல் மாதிரியே இருக்கு. டேஸ்ட் சொல்லிவேலையில்லை. தேங்காயும் வறுத்ததால் உதிரா வந்திருக்கு. செம.

      Delete
  11. ஓ அதே மாவில் இட்லியுமோ.. ஹா ஹா ஹா சூப்பர்.

    ஆவ்வ் என் மோர் மிளகாய் இப்போதால் போத்தலில் ஊறுகிறது.. இன்று எங்களுக்கு வெயிலோ வெயில்... இனிக் காயப்போடோணும்..

    பழமிளகாய் எதுக்குக் காயப் போட்டிருக்கிறீங்க? அது மினக்கெட்ட வேலை இல்லையோ? செத்தல் மிளகாய்தான் தாராளமாகக் கிடைக்குதே...

    ReplyDelete
    Replies
    1. ஓ.. 2இன் 1.. இது அஞ்சுவுக்கு தெரியுமோ தெரியாது.ஆனா நான் செய்தேன். என்னவென்றால் மா பொங்கீட்டுது. தோசை சுடும்போதுதான் இந்த ஐடியா வந்தது. நான் நீர்க்க கரைக்கேல்லை. அதனால இட்லியும் வார்த்தேன். சூப்பரா அதுவும் மென்மையா இருந்தது.
      பழமிளகாய் இப்படி காயவைத்து நான் தனித்தூள் அரைச்சு எடுப்பேன். ஏதாவது தாளிக்க எடுக்கலாம். நல்லாயிருக்கும். மெனக்கெட்டவேலையில்லை. வெயிலில் காயவைப்பதுதானே. அம்மா இப்படி செய்வா. ப்ரிட்ஜில் வைத்து எடுப்பதை விட இது நல்லது இருக்கும்.

      Delete
    2. உருளாது :) நான் வேலைக்குபோனா கணவருக்கு வசதி தோசை வார்க்க அதனால நான் பெரும்பாலும் தோசை மட்டுமே செய்வேன் .இந்த இட்லிபேரு தட்டுக்கடை இட்லி :)

      Delete
    3. ஆவ் பாதி கமெண்ட் கட்டாகி :) தெரியும் தெரியும் இதே மாவில் தோசை இட்லி ரெண்டும் வரும் ஆனா எங்க வீட்ல இட்லி உருளாது :)

      Delete
  12. //இந்த அகர் அகர் எனப்படும் கடல்பாசியை வாங்கி வந்தேன்.//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    நான் இப்போதான் அமேசனில் அகர் அகர் பவுடர் ஓடர் குடுத்திருக்கிறேன்..திங்கள் செவ்வாயில் வருமாம்.. வந்ததும் கலக்கப்போறேன்ன் பாருங்கோ ...

    அகர் அகர் சூப்பராக செய்திருக்கிறீங்கள்.. இதேபோல நான் ஜெலி செய்திருக்கிறேன், இந்த கிழமை அல்ல:) பின்பு வெளிவரும்.

    துண்டுகளைப் படமெடுக்கும்போது நீங்கள் அடுக்கிய விதம் தப்பு அம்முலு, சைட் பக்கம் மேலே தெரியும்படி அடுக்க வேண்டும், அப்பொழுதுதான் அதன் லேயேர்ஸ் தெரியும், இது மேற்பகுதி மட்டும்தான் தெரியுது கர்ர்ர்ர்ர்:))..

    இருப்பினும், நீங்களும் அகரகர் செய்து என் வயிற்றெரிச்சலைக் கூட்டி விட்டீங்கள் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. என் அகர் அகர் வரட்டும்.. இம்முறை கட்டி கட்டியாக வெட்டாமல் விடமாட்டேன்ன்.. அகரகரைத்தான் ஹா ஹா ஹா..

    ReplyDelete
    Replies
    1. சூப்பரா வந்ததுமில்லாமல் சூப்பரான டேஸ்ட்.
      இந்த படம் எடுத்து அதை பிரசண்டேஷன் செய்வதில் நீங்கள் கெட்டிக்காரி. அழகா செய்வீங்க. நான் இனிமேல் உங்களை கொப்பிகேட் பண்ணாவேணும்.
      இப்ப பாருங்கோ ஒரு படம் சேர்த்து விட்டேன். இதைதான் சொல்லியிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.
      நீங்க இதை விட சூப்பரா செய்வீங்க. செய்து பதிவு பண்ணுங்க. அப்ப எரிச்சல் நிக்கும். ஹா..ஹா..ஹா

      Delete
    2. ஆஆ கொமெண்ட் பார்த்ததாலேயே மேலே படம் பார்த்தேன், இப்பூடி வச்சால்தானே அதன் அழகு தெரியும் கர்ர்ர்:))

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. அகர் அகர் ,அதிரா  இங்கே படம் அட்டாச் வசந்தி :) இல்லை ஹையோ ஹையோ :)

      Delete
  13. இங்கு மரவள்ளி, நான் ஃபுரொஸின் கிழங்குதான் வாங்குவேன், நம்பிச் சமைக்கலாம், நல்ல மைபோல வரும்.. எந்தக் குறையுமில்லை, அத்தோடு ஃபிரீசரில் வைத்துப் பாவிக்கலாம்.. ட்றை பண்ணிப் பாருங்கோ இனிமேல்.

    ஃபிரெஸ் கிழங்கு வாங்கி அடிக்கடி நொந்து போய்த்தான் இப்போ இப்படி வாங்குகிறேன்.

    ஆஹா புதினா, வெந்தயக்கீரை சூப்பர்.. நானும் வெந்தயக்கீரை.. அறுவடை ஒருதடவை இப்போ முடித்தேன்.. மீண்டும் போட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. இங்கும் என்னிடம் ஃபுரொஸின் கிழங்கு இருக்கு பிஞ்சு. ஆனா ப்ரெஷ் ஆ வாங்கி சமைப்பது போல் வருமோ. அதான் ஒருகால் பிள்ளையாரை கும்பிட்டு போட்டு இந்த கிழங்கினை எடுத்து வந்தேன். ஆனால் சூப்பரான கிழங்கு. ஒரு பழுதுமில்லை. அதிர்ஷ்டம் ஒருமுறைதான் கதவை தட்டுமாம். அப்படி அமைஞ்சதுதான் இது.
      அதையேன் கேட்கிறீங்க. வெயிலுக்கு வெட்ட வெட்ட தலைக்குது புதினா. வெந்தயகீரையும் அப்படித்தான். புசுபுசுவென வளருது.
      மிக்க நன்றி அதிரா எல்லாவற்றிக்கும்...

      Delete
  14. வாவ் ப்ரியா கேக்கில் டிசைன் மண்டலா டிசைன் மாதிரி அழகா போட்டிருக்கிங்க சூப்பரா இருக்கு ரெண்டு கேக்கும் .
    அந்த தட்டு தோசையும் தட்டுக்கடை இட்லியும் ஆஹா ஓஹோ சூப்பர் .நல்லா வந்திருக்கு .அன்னிக்கு சொல்ல மறந்துட்டேன் அதே மாவில் இட்லியும் செய்யலாம் ..ஆனா எங்க வீட்ல இட்லிக்கு வரவேற்பில்லை :) குண்டு குண்டா பிஞ்சு மாதிரியே வரும் இட்லீ :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க அஞ்சு. கேக் எல்லாம் இங்கு பெரிதா சாப்பிடாயினம். ஆனா இட்லி,தோசை என்றால் ஓகே. ஆனா ஆரம்பத்தில் தோசை (1,2)நல்லாயில்லை. போக போக நல்லா வந்திச்சி.நிறைய கண் கூட வரல்ல. பிறகு நல்லாவந்தது. இட்லி இனி இந்த ரெசிபிதான்.

      Delete
  15. அந்த     அகரகர் பார்த்தா சிப்பு  சிப்பா வருது :) இதை பார்த்ததும் உங்களுக்கு ஒருத்தர் செஞ்ச அகரகர் நினைவுக்கு வரணுமே :))))அந்த பிஞ்ச அகரகர் :)

    ReplyDelete
    Replies
    1. அதையேன் கேட்கிறீங்க நான் நினைத்துக்கொண்டே செய்தேன். மறக்கமுடியாது.இரவுதான் செட் ஆச்சு. படமும் அதுதான் ஒருமாதிரி இருக்கு.நான் பக்கவாட்டில் எடுக்கவும் மறந்திட்டேன். பிஞ்சு சொல்லி பின் எடுத்து இணைத்தேன்.

      Delete
  16. ஹாஹாஹா :) ப்ரியா ரெண்டாவது அகர் அகர் தட்டு படத்தில் அந்த பச்சை அகர் அகர் துண்டு மேலே பூஸ் பாதம் பட்டிருக்கு :)) 

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்.. நான் அதை கவனிக்கல். ஆமால்ல. அப்படியேதான் இருக்கு. உண்மையில் பபிள்ஸ் வரக்கூடாது.அதுதான் அந்த பூஸ் காலாக மாறி இருக்கு.

      Delete
  17. //(சூரியகாந்தியை சுகந்தி பூ என சொல்வார்)/எஸ் எஸ் நினைவிருக்கு :) தானா வளர்ந்த ஒரு சூர்யகாந்திப்பூ செடி பதிவில் சொன்னீங்க :)

    ReplyDelete
    Replies
    1. ஒம் அஞ்சு. அவர் சின்னனில சொல்லும்போது ஆசையா இருக்கும். ஸ்டார்ட்டில் சுபாசினி என சொல்லி பின் பூ ஒருமாதிரி வந்தது. நான் இருத்தி வைத்து சொல்லிக்கொடுப்பேன்.தமிழ் நல்லா கதைக்க தொடங்கீட்டார்.

      Delete
    2. பிசியான டைமிலும் வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி அஞ்சு.

      Delete
  18. [im]http://3.bp.blogspot.com/-Bt6kL0yOLuw/UEtmxtGVAHI/AAAAAAAACMU/6qnU_6cX4X0/s400/DSC01096.JPG[/im]

    ReplyDelete
  19. அனைத்தும் அருமை. புதினா வெந்தயக்கீரை நன்றாக இருக்கிறது. நான் பொன்னாங்கண்ணி,பசளைக்கீரை இனங்கள்,கற்பூரவள்ளி நாட்டியுள்ளேன்
    பால்கனி தொட்டியில்தான் பலன் கிடைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதேவி. கற்பூரவள்ளி என்னிடமும் இருக்கு. பொன்னாங்கண்ணி வைத்தால் வர்மோ தெரியாது. நான் வைக்கல. இவை ஈசியா வரும்.
      வருகை தந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி மாதேவி.

      Delete
  20. மோர் மிள்காய் சூப்பர் ஊசி பச்சை மிள்காய் போல இருக்கே! காரமாக இருக்குமா?
    மிளகாய் பழம் காய வைத்து எடுத்து இருப்பதும் நல்லதுதான்.

    ReplyDelete
    Replies
    1. மிளகாய் காரமான மிளகாய்தான் அக்கா. அதில்தான் மோர் மிளகாய் போட்டிருக்கிறேன். நிறைய பழ மிளகாய் என்ன செய்வது என நினைத்து கொஞ்சத்தை காயவைத்து எடுத்தேன்.
      மீள் வருகை தந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றிகள் அக்கா.

      Delete
  21. சூப்பர் அம்மு...

    நாலஞ்சு முறை இங்கு வந்தும் கருத்துரை இட வில்லை ....

    இங்கு பார்த்து , அதிரா பதிவும் பார்த்து ஆசை பட்டு இந்த marble cake போன வாரம் பையனின் பிறந்த நாளைக்கு செய்தேன் ...வாவ் ரொம்ப நல்லா வந்தது ...டேஸ்ட் ம் செம்மயா இருந்தது ...


    bannana cake அடிக்கடி செய்றது உண்டு ...


    இட்லி பஞ்சு போல இருக்கு ...சம்பல் சூப்பர் ...


    அகார் அகார் இருக்கு ஆனா செஞ்சது இல்ல உங்க குறிப்பை குறித்துக் கொண்டேன் ...இந்த வாரம் செய்யணும் ...

    புதினாவும், வெந்தய கீரையும்....வாவ்

    ReplyDelete
    Replies
    1. வாங்க அனு. ஓ.நீங்களும் செய்தீங்களா. உண்மையில் சூப்பரா இருந்தது கேக். அகர் அகர் செய்து சாப்பிடுங்க.
      நேரமிருக்கும்போது வந்து பாருங்க. மிக்க நன்றி அனு கருத்துக்கும்,வருகைக்கும்.

      Delete

 
Copyright பிரியசகி