RSS

29/04/2020

Quarantine வும், அடுப்படி அலப்பறைகளும்....


இந்த கொரோனாவால் எல்லாரும் வீட்டில்தான். கணவருக்கு 4 கிழமைக்கு பின் இவ்வாரமே வேலைக்கு போகிறார்..ஆனால் இங்கு லொக்டவுன் என வீட்டிலே அடைந்து இருப்பது இல்லை. எங்கள் தேவைக்கு கடைக்கு போய்வருகிறோம். கடைகளில் இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும்.
இந்த வாரம் (27ந்திகதியிலிருந்து) முதல் இங்கு கட்டாயம் மாஸ்க் (Masks) போட்டுதான் கடைகளுக்கு செல்லமுடியும்.
இந்த லொக்டவுன் காலத்தில் நான் செய்த சில உணவுகள் இப்பதிவில். எனக்கு வீட்டில் இருவராலும் சாப்பாட்டு பிரச்சனையில்லை. எதையும் சமாளிப்பார்கள். நான்தான் எதையாவது முயற்சி செய்து , இருவரையும் பரிசோதனை எலிகளாக்கி விடுவேன். ஹா...ஹா..ஹா...
மாங்காய் கிடைத்து ஊறுகாய் போட்டேன். நெல்லிக்காயிலும் போட்டாச்சு.  பூரி மாதம் 2 தரம்தான் செய்வது. அது நல்லாவே வரும். கேக் புது முயற்சி. அதுவும் சொதப்பாமல் வந்தது.

அதைவிட எங்கள் அன்பு நண்பி,  தானைத்தலைவியின் செயலாளர்,  ஏஞ்சல்கிச்சன் ஓனர்  அஞ்சுவின் குணுக்கு செய்தேன். சூப்பரா, நல்ல டேஸ்டா இருந்தது. இப்பதிவு எழுதும்வரை 2 தரம் செய்தாச்சு. தாங்க்ஸ் அஞ்சு.

ஹலோ பிஞ்சு ஞானி இப்படி தேங்காயை குட்டியா துண்டாக வெட்டிப்போட்டால் கடிபடும்தானே. அதைதான் சொன்னேன். தேங்கா கடிபடும் போது நல்ல டேஸ்டா இருக்கும் என. அத்தோடு மிளகும் சேர அப்பப்பா சொல்லமுடியாது. செஞ்சுபாருங்கோ.

பனங்கிழங்கும் கிடைத்தது, அவித்து சாப்பிட்டாயிற்று. ஆனா கிழங்கு ஊரில் சாப்பிடுமாப்போல இல்லை. ஊரில் பனங்கிழங்கு அவித்து அதை அப்பா நாரெல்லாம் எடுத்து அழகா வட்ட வட்டமா வெட்டி வைப்பார். அதோடு உப்பு, மிளகு, உள்ளி, தேங்காய்துண்டு சேர்த்து சாப்பிட என்னா ருசி. இப்பவும் நினைத்தால் வாய் ஊறும். சிலவேளை இவை எல்லாம் சேர்த்து  உரலில் போட்டு துவைத்தும் சாப்பிடுவோம். மறக்கமுடியா நினைவுகள். 
எங்கள் வீட்டில் இரண்டு நெல்லிமரமும் இருக்கு. இந்த பெரிய நெல்லிக்காய் அளவிலும் பெரிது. மரத்தில் காகம் இருந்து ஒவ்வொன்றா கொத்தி போடும். இப்பவும் இருக்கு மரம். நிறைய காய்க்கும். இதையும் உப்புமிளகாய்தூள் கலந்து தொட்டு சாப்பிடுவோம். ஆனா என்ன கொஞ்ச நேரத்துக்கு வேறு ஒன்றும் சாப்பிட இயலாது. அதன் டேஸ்ட் தெரியாது. இதுதான் டொமினேட் செய்யும்.
இங்கு கிடைத்த இந்த நெல்லிக்காயை ஊறுகாய் போட்டுவிட்டேன்.

இது என்ன தெரியுமா? பப்பாக்காய். (பப்பாளிபழத்தின் காய்). ஊரிலிருந்த வரை உண்மையில் நான் இப்படி சாப்பிடவில்லை. ஆனா அக்கா சொன்னா அம்மா சமைக்கிறவா என. ஆனா எனக்கு ஞாபகமில்லை. இங்கு முதன்முதல் எனக்கு கணவர்தான் இதை சாலட் செய்யசொல்லி சொன்னார்.  பப்பாகாயை ஸ்க்ரப் செய்து சி.வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை கொத்தமல்லி, (இவைகளை பொடியாக வெட்டி )உப்பு, கொஞ்சம் லெமன் ஜுஸ் விட்டு  நான்  மரஉரலில் துவைத்து எடுத்தேன். சூப்பரா இருந்தது. கசக்கும் என யாராவது நினைக்கவேண்டாம். மிக அருமையான சாலட், துவையல் எப்படிவேணா வைச்சுகொள்ளுங்கோ பேரை...

இது பின்பு கிடைத்த பப்பாக்காயில் பொரியல் செய்தேன். இப்போ இதில் குழம்பு, கறி, பொரியல் என செய்வது வழக்கமாகிவிட்டது. 

இது மிளகுசாதம் செய்தேன்.  இது தெரிந்திருக்கும் எல்லாருக்கும். வழமையா வதக்கும் (வெங்காயம்,ப.மிளகாய், இஞ்சி,உள்ளி) பொருட்களுடன் (க.பருப்பு, உ.பருப்பு போடாமல்) கறுவா, ஏலம், கராம்பு போட்டு வதக்கி, பின்  கஜுவும்போட்டு வதக்கியபின் சாதத்தினை(இதற்கு சாதம் குழைய வேககூடாது.) போட்டு எல்லாவற்றுடன் நன்றாக கலந்து, கடைசியாக அரைத்த மிளகுதூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, கொஞ்ச நெய் விட்டு கலந்தபின் இறக்கி சுடச்சுட சாப்பிட ஆஹா என்ன ருசி...... 

இதில் போண்டாபூரி, பன்(Bun),  அரிசி ஊறவைத்து அரைத்து குறுணல் எடுத்து கஞ்சி காய்ச்சி செய்த அப்பம், கேக், பரோட்டா இது செய்ய முன் சுற்றி வைத்த போதுதான் எடுத்தேன். வடை, 
இது இலங்கையில் பிரபல்யமான ரோஸ்ட் பாண்(Bread) & Sampol. இது மட்டும் என் கணவர் செய்தார். 
கணவர்  எங்கள் பிஞ்சு ஞானி மாதிரி.  என்ன கிடைக்குதோ போட்டு செய்து அதற்கு ஓர் பேரும் வைத்துவிடுவார். அளவு கேட்டால்.. ம்க்கும்  சொல்லீட்டாலும்.  எல்லாமே கண் பார்க்க கை செய்யோனும் என சொல்லும் ரகம். ஜேர்மன் உணவு வகைகள் பீஸா, பன், ரொட்டி,  நூடுல்ஸ் எல்லாம் செய்வார். டேஸ்ட் ஆக இருக்கும். ப்ளான் செய்து செய்வார். ஆனா அது அவரின் ஓன் ரெசிப்பியாகதான் இருக்கும். எதையும் பார்த்து செய்வதில்லை.. அப்படி பார்த்தாலும் அதை மாதிரி கடைசி வரை செய்யவே மாட்டார்.கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். நான் முதல் தரம் பார்த்து செய்து சரிவந்தால், அடுத்த முறை கொஞ்சம் மாத்தி விடுவேன். வேற ஐடியா கிடைத்துவிடும்.
வழமையாக இந்த பன் அவர்தான் செய்வார். அளவு  என்ன என கேட்க சொல்லத்தெரியலை என்றார். பின் இது youtube பார்த்து செய்தேன்.  நல்லாயிருக்கு என இருவருமே சொன்னார்கள். 



இங்கு மாங்காய் கிடைக்கும். அடிக்கடி வாங்கி ஊறுகாய் போடுவேன். ஆனா எனக்கு சும்மா உப்புமிளகாய்தூளோடு தொட்டு சாப்பிடுவதே மிகவும் விருப்பம். பள்ளிகூடம் போகும் நாட்களில் அங்கு உப்புமிளகாய்தூள் கொண்டுபோய் intervel time ல நண்பிகளோடு பக்கத்து வீட்டுக்கு தண்ணீர் குடிக்கவென போய் (அதுவும் பாடசாலைவேலிக்குள்ளார புகுந்து போவது. முன்வாசலால் போகமுடியாது) மாங்காய் பறித்து இதில் தொட்டு சாப்பிட என்னா ருசி.  மறக்கமுடியாது அந்நாட்களை.




என் வீட்டுத்தோட்டத்தில்.......
இம்மாதம் 6ந்திகதியில் இப்படி இருந்தன ரோஜா செடிகள். அப்போதான் துளிர் எல்லாம் வரத்தொடங்கியிருந்த வேளை......


இன்று இப்படி. இப்போ இங்கு மழையும், குளிருமாக இருக்கின்றது.


                                        அப்பிள் எப்படி பூத்திருக்கு 



வீடியோ கண்டிப்பாக பாருங்கோ.  சிறுமுயற்சி.
             

இதுதான் எங்கள் வீட்டின் Pear பூக்கள். ( பாருங்கோ பிஞ்சு ஞானி ) இம்முறையும் மரங்கொள்ளா அளவுக்கு பூத்திருக்கினம். அவசர அவசரமா பூப்பது இவாதான். எத்தனை காய்கள் தருகினமோ தெரியாது. இப்படித்தான் நிறைய்ய பூக்கள் பூப்பது. பின் 1 அல்லது 2,3 காய்களோடு நிறுத்திவிடுவினம். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்  இம்முறை எப்படியிருக்குமோ தெரியாது. 

எல்லோரும் பத்திரமா, பாதுகாப்பா இருங்கோ.🙏

66 comments:

  1. ஆவ்வ்வ்வ் மீதான் 1ச்ட்டூஊஊஊஊஉ:)) ஹா ஹா ஹா..

    ReplyDelete
    Replies
    1. ஆஆ..... இப்பதான் போட்டேன். நீங்க முதலாவதா வாறீங்க..வாங்க வாங்க.

      Delete
    2. அஞ்சு ரொம்ப லேட்டூஊஊஊஊஊ.. அந்த மிலகு:) ஜாதத்தை மட்டும் அவ்வைடம் குடுங்கோ:)) மீதி எனக்கே.. முக்கியமாக மாங்காய், நெல்லி, ப்.கிழங்கு.. இடிச்ச சம்பல், பாண் எல்லாம் எனக்கு:))

      Delete
    3. ஓ..தாராளமா எடுங்கோ.. ஆனா அஞ்சு வந்தாச்சு.

      Delete
  2. ஆவ்வ்வ் ரோஜாக்கள் அழகாக வளருகின்றன, நான் ஏனோ ரோஜா வீட்டில் வளர்ப்பதில் பெரிதாக நாட்டம் கொள்வதில்லை. அப்பிள் பூக்கல் யூப்பர்.. இப்படித்தான் எங்கள் பக்கத்து வீட்டிலும் பூத்துக் குலுங்குது, காயும் நிறையக் காய்க்கும், எங்கள் வீட்டில் இன்னும் பூக்கவில்லை, அதுக்குள் மழை தொடங்கி விட்டதே இங்கும்.

    வீடியோ அழகு.. காலைப்பொழுதுபோல தெரியுது ஆனாப் பாட்டு பொன்மாலைப்பொழுது என்கிறதே:)) என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊஊஊ.... கார்டினுக்கு வேலி போடாலம், மரம் வளர்த்திருக்கிறீங்க, அழகுதான் ஆனா வேலை அதிகம் எல்லோ.. வெட்டிக் கொண்டே இருக்கோணும்..

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா..ஹா அது பொன்மாலை பொழுதுதான். பின்னேரம்தான் எடுத்தது. எடுத்தது ஹஸ். நான் அவரின் வீடியோ வாங்கி ஐ மூவியில முயற்சி செய்தேன். அதில எங்கட சிட்டுக்களின் சத்தமும் கேட்குது. ஒரிஜனல் குருவி சத்தம். அண்டைக்கு புல் வெட்டினது அவர்களுக்கு ஒரே குஷி. அதுதான் ஓட்டில இருந்து எப்ப கீழ வரலாம் என பார்த்துக்கொண்டு இருந்தவை. அப்பதான் அந்த சத்தம்.

      Delete
    2. இங்கு எல்லாமே மரங்களே வேலிகளாக இருக்கும் அதிரா. அது நிறைய வேலை இல்லை. இந்த மரம் ஒரு பிரச்சனையும் இல்லை. ஒருதரம் வெட்டினால் சரி. இதுLaurus nobilis.

      Delete
  3. //இங்கு மாங்காய் கிடைக்கும். அடிக்கடி வாங்கி ஊறுகாய் போடுவேன்.//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நோஓஓஓஓஓ இதை நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன், நேற்று ஊரில் மாமா மாமியுடன் பேசும்போது சொல்லி விட்டேன், மாங்காய் கிடைச்சால் வாங்கி வத்தல் போட்டு அனுப்பச் சொல்லி.

    இங்கு தமிழ்க் கடைக்கு இடைக்கிடை வரும் ஆனா அவ்ளோ நன்றாக இருக்காது, தோல் பச்சை ஆனா உள்ளே பழுத்தது போலாகிடும்....

    ReplyDelete
    Replies
    1. அங்கு மாங்காய் இம்முறை நிறைய காய்க்குது என அக்கா சொன்னா. இங்கு கடைக்கு வருகிறது அதிரா. நீங்க சொன்ன மாதிரிதான் சிலது இருக்கும். பார்த்து வாங்கோனும். ஆனா மாம்பழம் வரேல்லை.

      Delete
  4. //இப்பதிவு எழுதும்வரை 2 தரம் செய்தாச்சு. தாங்க்ஸ் அஞ்சு.
    //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் குணுக்காம் குணுக்கு:))..

    ஹா ஹா ஹா பாகுபலியில் நாசர் இப்படித்தான் பேசுவார்:)).

    //ஹலோ பிஞ்சு ஞானி , அத்தோடு மிளகும் சேர அப்பப்பா சொல்லமுடியாது. செஞ்சுபாருங்கோ.///

    ஆஆஆஆ என் ஆசை நரம்பைத் தட்டி விட்டு விட்டீங்கள்.. விரைவில் செய்துபோட்டுச் சொல்கிறேன்:))

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு பொறாமை... செய்து பாருங்கோ தோசைக்கு போடும்பொழுது கொஞ்சமா தண்ணி அதிகம் விடாமல் அரைத்து செய்து பாருங்கோ நல்லாயிருக்கும். தேங்கா கட் பண்ணி கொஞ்சம் கூட போட்டு மிளகு இரண்டா உடைத்துதான் நான் போட்டேன். செய்து பாருங்கோ.
      கடவுளே.....இன்னுமா பாகுபலி போகேல்லை. நான் சனி பார்க்கபோறேன்.

      Delete
    2. ///நான் சனி பார்க்கபோறேன்.//

      ஆஆஆ அப்போ மீயும் வாறேன்ன் திரும்படியும் சேர்ந்தும் பார்க்கலாமே:))

      Delete
    3. ஆவ்..வாறீங்களோ.. வாங்க வாங்க. சேர்ந்து பார்க்கலாம். நான் எப்படியும் தனியாதான் பார்க்கோனும்.
      இப்ப அஞ்சு பார்த்துட்டு ஏசபோறா. நீங்களுமா என..அவ்வ்வ்வ்

      Delete
  5. //பனங்கிழங்கும் கிடைத்தது, அவித்து சாப்பிட்டாயிற்று. ஆனா கிழங்கு ஊரில் சாப்பிடுமாப்போல இல்லை//

    ஆஆஆஆஆஆங்ங்ங் நாங்கள் சாப்பிட்டது ஊர்க் கிழங்கு:)).

    நான் ஒருமுறை நெல்லிக்காய் ஊறுகாய் போட்டேன் அது எனக்குப் பிடிக்கவில்லை, எனக்கு உப்பில் ஊறப்போட்டுவிட்டுச் சாப்பிடுவதே பிடிக்குது அம்முலு.

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்... ஆலையில்லா ஊருக்கு ..என இருக்கிறம். கிடைத்ததை ஏன் விடுவான் என்ற எண்ணம் தான்.
      யா. எனக்கும் நெல்லி ஊறுகாய் அவ்வளவு பிடிப்பில்லை. மாங்காய் ஓகே.

      Delete
  6. //கசக்கும் என யாராவது நினைக்கவேண்டாம். மிக அருமையான சாலட், துவையல் எப்படிவேணா வைச்சுகொள்ளுங்கோ பேரை...//

    ஆஆஆ உண்மையாகவோ? நானும் அறிஞ்சதுண்டு ஆனா சமையலுக்குப் பாவிக்கப் பயம், இங்கு ரெஸ்கோவில் இடைக்கிடை குட்டிக் காய்கள் வருகிறது, முயற்சிக்கிறேன்... பிள்ளைகளுக்கு நல்லதோ தெரியாதே எனும் பயமாக இருந்தது...

    //இது பின்பு கிடைத்த பப்பாக்காயில் பொரியல் செய்தேன். இப்போ இதில் குழம்பு, கறி, பொரியல் என செய்வது வழக்கமாகிவிட்டது. //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்பூடியோ? உங்களுக்கு காயாக எங்கு கிடைக்கிறது?.. பார்க்க சூப்பராக இருக்குது.

    ReplyDelete
    Replies
    1. இல்லை அதிரா ஒருக்கா வாங்கி செய்துபாருங்கோ. நல்லாயிருக்கும். தமிழ்கடையிலதான் நான் வாங்கிறது. அங்க கேளுங்கோ. சாலட் செய்யும்போது நல்லா மசியவேணும். அதுதான் நான் இடித்து செய்தேன். சூப்பரா இருந்தது. அதோடு மாங்காயும் சேர்த்தால் சொல்லிவேலையில்லை. மிக்க மிக்க நன்றி அதிரா உங்க முதல் வருகைக்கும்,கருத்துக்களுக்கும்.

      Delete
  7. //இறக்கி சுடச்சுட சாப்பிட ஆஹா என்ன ருசி...... //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) சாத வகைகள் எங்கட வீட்டில் எடுபடாது:)).. உங்களுடையது பார்க்க சூப்பராக இருக்குது.

    // அப்படி பார்த்தாலும் அதை மாதிரி கடைசி வரை செய்யவே மாட்டார்.கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

    ஹா ஹா ஹா மீயும் தேன்:)).. எல்லாத்தையும் பார்த்தாலும் என் ஜொந்தக் கிட்னியைக் கொண்டே செய்வேனாக்கும்.. பன் நன்றாக வந்திருக்குது.. ரோஸ் பாண் எங்கே? அடுத்து ரோஸ் பாண் செய்யோணும் எனத்தான் முயற்சிக்கிறேன் இந்த ஹொலிடேயில்...

    அனைத்து உணவுகளும் அழகு... நல்லவேளை சாப்பிட்ட பின்பே இதனைப் பார்க்கிறேன், இல்லை எனில் பசியால துடிச்சிருப்பேன் இவற்ரைப் பார்த்து ஹா ஹா ஹா..

    ReplyDelete
  8. அஆவ் சூப்பர் ..ஏசியன் ஷாப் பக்கமே போகமாட்டேங்கிறார் கணவர் :) அங்கே மக்கள் கண்ட்ரோல் இல்லை நெருக்கி நடப்பாங்க .அதனால் மாங்கா நெல்லி எதுவும் ஒரு மாதத்துக்குமேலாச்சு பார்த்து .

    ReplyDelete
    Replies
    1. வாங்க அஞ்சு. அங்கே உங்களுக்கு மிளகு சாதம் கொடுக்கட்டாம். மிளகு உடம்புக்கு நல்லது என்பது பிஞ்சுவுக்கு தெரியாது.
      ஆ.. இங்கு பரவாயில்லை. தள்ளி தள்ளிதான் நிற்பினம். எல்லாருக்கும் இப்ப வரவர பயமா இருக்கு. இங்கும் தமிழ் ஆட்கள் 4,5 பேர் தவறிட்டார்கள் நோயினால். அதனாலும், பொலிஸ் கொன்ரோலாலும் சொல்லு கேட்கிறாங்க.

      Delete
  9. பப்பாளிக்காயில் கேபேஜ் பொரியல் செய்றதுமாதிரியே தேங்காய் போட்டு செய்யலாம் .தோரன் செம ருசி .வெஜிடபிள் ஊறுகாய் செய்யும்போதும் போடலாம் 

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தான் செய்திருக்கிறேனே. கறி,குழம்பு எனில் கொஞ்சம் பெரிதா வெட்டனும். ஆனா எனக்கு இந்த பொரியல் பிடிச்சிருக்கு.

      Delete
  10. எங்க வீட்டிலும் யெல்லோ ரோஜாவும் முந்தி வச்ச ஊதா ரோஜாவும் மொட்டு விட்டிருக்காங்க கூடவே எட்வார்ட் ரோசும் .போகும்போது மழை பெய்யக்கூடாது :)

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இன்னமும் மொட்டு வைக்கல. இப்பதான் வாறாங்க. இப்ப 2 நாட்களாக மழை. அடுத்த வெயிலுக்குதான் உங்க வடாம்,வற்றல் போடனும்.

      Delete
  11. எங்க வீட்டிலும் யெல்லோ ரோஜாவும் முந்தி வச்ச ஊதா ரோஜாவும் மொட்டு விட்டிருக்காங்க கூடவே எட்வார்ட் ரோசும் .போகும்போது மழை பெய்யக்கூடாது :)

    ReplyDelete
    Replies
    1. நான் போனமுறை ஊதாகலர் ரோஜா வைத்தேன் அஞ்சு.ஆனா பூக்கல. இம்முறை பூக்கும் என நினைக்கிறேன்.

      Delete
  12. ஹாஹா என்கணவர் சமைக்கும்போது கலர் வரலன்னு  சில்லியை அள்ளி விடுவார் :) அதனால் அதிகம் அனுமதிப்பதில்லை .ஆனா என் மேற்பார்வையில் சமைப்பார் :) அந்த பன் நல்லா இருக்கு ஆனா எனக்கு சாப்பிட முடியாதே 

    ReplyDelete
    Replies
    1. இங்கு தலைகீழ். விசயம் தெரிந்தவங்க இருந்தா கொஞ்சம் கஷ்டம். ஆனா இப்ப ஒன்றும் சொல்வதில்லை.

      Delete
  13. பறவைகள் ஒலியுடன் காணொளி அழகு .இங்கேயும் அதிகாலையில் வராங்க விதவிதமான ஒலியுடன் .எடுக்கணும் வீடியோ நானும் .எங்கே ஜெஸியும் மல்ட்டியும் கூடவே பின்வராங்க :)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா அவங்களையும் சேர்த்து எடுத்து போடுங்க அஞ்சு. உள்ளே விடமுடியாதா? மல்டி சொல்லு கேட்டாலும் ஜெசி கேட்கனுமே..

      Delete
  14. குணுக்கு அருமையா இருக்கு ப்ரியா .நானும் போண்டா செஞ்சேன் கொஞ்சூண்டு இவருக்கு மட்டுமே நம்மூர் ஸ்நேக்ஸ் பிடிக்கும் .அதில் உருளை கொஞ்சம் ஸ்வீட்டாகினதால் சுவை நல்லா வரலை .இங்கே ரெட் உருளை சிலநேரம் இனிப்பா வருது 

    ReplyDelete
    Replies
    1. எனக்கு ரெட் பிடிக்காது.ஆனா இவங்க வாங்கி வருவாங்க. இப்ப கொஞ்சநாளா பேபி பொட்டாட்டோஸ் வாங்கிறாங்க. அது கொஞ்சம் சுலபமாவும்,கெதியிலும் வேகுது. குணுக்கு இங்கன நல்லா பிடித்துவிட்டது. தோசைக்கு அரைக்கும்போது கொஞ்சமா உளுந்து எடுத்துடுவேன். அதனால் இனி அடிக்கடி செய்யலாம். இப்ப இங்கு தேங்காய் கொஞ்சம் தட்டுப்பாடு.

      Delete
  15. எங்க வீட்டில் இவருக்கு ஜூன் தான் திறப்பாங்கன்னு சொல்றாங்க அதனால் சமையல் அசிஸ்டன்ட் வேலை பிரச்சினையில்ல .

    சீக்கிரம் வற்றல் வடாமையும் ரிலீஸ் பண்ணுங்க :)

    ReplyDelete
    Replies
    1. ஆ....இங்கு என்னவருக்கு நாந்தான் அசிஸ்டண்ட். ஆனா எனக்கு யாருமில்லை. சிலவேளை மகனை கேட்டால் செய்வார். மற்றும்படி தனிகச்சேரிதான். வற்ரல் இன்னும் போடவில்லை அஞ்சு. அடுத்த வெயில் வந்ததும் போட்டுவிடுகிறேன்.
      மிக்க நன்றி அஞ்சு வருகைக்கும்,கருத்துக்கும்.

      Delete
  16. அடடா.... எத்தனை வகைகள்...

    நாங்க வரும்போது இதே போல் செய்து கொடுக்கணும்... Advance Booking

    எனக்கு பிடித்த பாடலோடு ஆகா... ஆகா... ஆகா...

    நன்றி சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா வாங்க டிடி அண்ணா. இதைவிட நல்லா செஞ்சுதாறேன்.
      இந்த பாடல் யாருக்குதான் பிடிக்காது.
      மிக்க நன்றிகள் அண்ணா வருகைக்கும்,கருத்தளித்தமைக்கும்.

      Delete
  17. குணுக்கு நன்றாக இருக்கிறது.
    பனங்கிழங்கு, நெல்லிக்காய் எல்லாம் சின்ன வயதில் நிறைய சாப்பிட்டு விட்டேன். இப்போது பனங்கிழங்கு சாப்பிடுவது இல்லை. பொங்கல் சமயம் தான் கிடைக்கும் இங்கு.

    நெல்லிக்காய் அடிக்கடி சந்தையில் வாங்கி ஊரூகாய் போடுவேன். சிறு வயதில் நெல்லிக்காய் சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடிப்பேன் இனிப்பாக இருக்கிறது என்று அம்மாவிடம் திட்டு வாங்குவேன் தொண்டைவலி வந்து கஷ்டபடுவதால்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லிக்காய் சாப்பிட்டுவிட்டு நானும் தண்ணீர் குடிப்பதுண்டு. இங்கு வரும் நெல்லிக்காய் சாப்பிட ஏனோ எனக்கு பிடிக்கவில்லை. வீட்டில் சாப்பிட்டதாலோ என்னவோ. ஆனா கொஞ்ச நேரத்துக்கு ஒன்னுமே சாப்பிடமுடிவதில்லை.

      Delete
  18. பபாளிக்காவில் அருமையான சாலட், துவையல் .
    பபாளிக்காயில் கூட்டு செய்து இருக்கிறேன், சாலட் செயதது இல்லை செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நல்லாயிருக்கும் அக்கா. செய்துபாருங்க. கூட்டும் செய்யலாம்.

      Delete
  19. //மிளகு சாதம், இதில் போண்டா, பூரி, பன்(Bun), அரிசி ஊறவைத்து அரைத்து குறுணல் எடுத்து கஞ்சி காய்ச்சி செய்த அப்பம், கேக், பரோட்டா இது செய்ய முன் சுற்றி வைத்த போதுதான் எடுத்தேன். வடை,
    இது இலங்கையில் பிரபல்யமான ரோஸ்ட் பாண்(Bread) & Sampol. இது மட்டும் என் கணவர் செய்தார்.//

    எல்லாம் அழகு. சாப்பிட தூண்டுகிறது எல்லாம்.
    கணவரும் சமையல் செய்வது கேட்க மிகவும் சந்தோஷமாய் இருக்கிறது.

    நாம் செய்வதை ரசித்து ருசித்து சாப்பிட்டால் செய்ய ஆசையாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. //நாம் செய்வதை ரசித்து ருசித்து சாப்பிட்டால் செய்ய ஆசையாக இருக்கும்// ஆஹா அக்கா எனக்கு இதுதான் பிரச்சனையே. இருவரும் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். அதனால்தான் நானும் புதுசா,தினுசா செய்துகொண்டிருக்கிறேன். எனக்கும் சமையலில் விருப்பமானதால் செய்கிறேன் விதவிதமா.
      கணவர் ரெம்ப நல்லா சமைப்பார். குடும்ப நண்பர்கள் சொவார்கள் அவர் சமையல் பற்றி.

      Delete
  20. //சும்மா உப்புமிளகாய்தூளோடு தொட்டு சாப்பிடுவதே மிகவும் விருப்பம். //

    சின்ன வயதில் கண்சிமிட்டாமல், பல் கூசாமல் சாப்பிட்ட காலங்கள் பள்ளி பருவம்.
    உங்கள் பள்ளிக் கால நினைவுகள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. அவை மறக்கமுடியாத நாட்கள். பள்ளிக்கூட வாசலில் விற்கும் தின்பண்டங்கள் வாங்க ஆசை. பழங்கள் வான்கி சாப்பிட்டு இருக்கிறேன். கடவுள் வந்து வரம் தந்தால், பள்ளி நாட்களை திரும்ப கேட்டுக்கொள்வேன்.

      Delete
  21. உங்கள் தோட்டம் மிக அழகு, காணொளி சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அக்கா.

      Delete
  22. குருவி சத்தம் இனிமை.

    ReplyDelete
    Replies
    1. அதில் பாட்டில் வரும் குருவி சத்ததோடு எங்க வீட்டு குருவிகளின் சத்தமும் இருக்கு அக்கா.
      மிக்க நன்றி அக்கா உங்க வருகைக்கும்,கருத்துக்களுக்கும்.

      Delete
  23. கொரோனா சமயத்தில் பெண்கள் கிச்சன் சூப்பர் ஸ்டாராக மாறிக் கொண்டிருக்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. அட பார்ரா ட்றுத் வந்திருக்காக...வாங்க. கொரோனா சமயத்தில் மட்டுமல்ல நாங்க எப்பவுமே சூப்பர் ஸ்டார்கள்தாம்..சமையலில் என சொல்ல வந்தேன்.
      மிக்க நன்றி ட்றுத் வருகைக்கும்,கருத்துக்கும்.

      Delete
  24. ஒரே பதிவில் எல்லாவற்றையும் சொல்லீட்டீங்க இந்த பதிவு இரண்டு அல்லது முன்று பதிவாக வந்திருக்க வேண்டியது... ஒரு பதிவு போட வேண்டியது அதற்கு அப்புறம் ஒரு வருஷ்ம் ரெஸ்ட் எடுக்க வேண்டியது.....

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்....ஹலோ ஹல்லல்லோஓஓ யாரு ஒருவருஷத்துக்கு ரெஸ்ட் எடுக்கிறது. 1 வருஷத்துக்கு 1 க்கா நீங்க என் பக்கம் வாறீங்க. பார்த்துக்கோங்க.
      இங்க சமையல் கலை வல்லுனர்கள் எல்லாம் இருக்காங்க. அதனால நான் ஒரே பதிவா போட்டென் .

      Delete
  25. விதம் விதமாக சமையல். மகிழ்ச்சி.

    காணொளி அழகு. பதிவின் வழி சொன்ன விஷயங்கள் அனைத்துமே பிடித்திருந்தன. பாராட்டுகளும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் உங்கள் வாழ்த்துக்களுக்கும், வருகைக்கும் வெங்கட் சார்.

      Delete
  26. வணக்கம் அழகான தின்பண்டங்களோடு அழகிய பூக்களும் ரசிக்க வைத்தன...

    கொரோனா உலகை விட்டு விலக பிரார்த்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் அண்ணா ஜீ.

      Delete
  27. உங்கள் தோட்டம் மிக அழகு!
    சமையல் குறிப்புகள் எல்லாம் அமர்க்களம்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க மனோக்கா. மிக்க நன்றி உங்க கருத்துக்கும்,வருகைக்கும்..

      Delete
  28. உணவுகள் அருமை. தோட்டம் மிகவும் அழகு.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மாதேவி.வருகைக்கும்,கருத்துக்கும்.

      Delete
  29. கொரோனா கொடுக்கும் அலப்பரைய விட
    நம்ம மக்கள் கொடுக்கும் அலப்பரை அதிகமே...

    ReplyDelete
  30. பிரியசகி/அம்முலு சரியா? இனி உங்களைத் தொடர்கிறோம். எப்படி இவ்வளவு நாள் விட்டோம் என்று இப்போது நினைக்கிறேன். ஏஞ்சல், அதிரா ப்ளாகில் பார்த்தும் தொடர வேண்டும் என்று நினைத்தும் விடுபட்டுவிட்டது.

    பதிவு முழுவதும் வாசித்து விட்டேன். நிறைய ஐட்டம்ஸ் இங்கு. இன்னும் பல பதிவுகளாகப் போட்டிருக்கலாமோ? ஒவ்வொரு ஐட்டமாக ..

    தோட்டம் அழகா இருக்கு...இனி தொடர்கிறோம்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளஸி அண்ணா. கீதா மிக்க மகிழ்ச்சி.
      பல பதிவுகள் இருக்கு போட அதனால் தான் இப்படி இதை ஒரே பதிவாக போட்டேன்.
      மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் உங்க வருகைக்கும்,கருத்துக்கும்.

      Delete
  31. வாவ் ...எல்லாமே நல்லா இருக்கு அம்மு ...


    நீங்க பதிவிட்ட உடனேயே படித்தேன் ...ஆன கருத்து இட ஒரு மாதம் ஆகிவிட்டது ..சாரி ...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி அனு.

      Delete

 
Copyright பிரியசகி