ஏதாவது காய்கறி பயிரிடவேண்டுமென விருப்பம் மனதின் ஓரத்தில் இருந்தது. ஆனா செயல்படுத்த கொஞ்சம் யோசனையா இருந்தது. சரிவர செய்ய வேண்டுமே என்று. ஆனா தோட்டம் சிவா வின் பதிவினை பார்த்ததும் நம்பிக்கை வர, அந்த ஆலோசனைகளுடன் செயலில் இறங்கியாகிவிட்டது. நான் பயிரிட்டவை மிளகாய், முள்ளங்கி , பீட்ரூட், Kohlrabi,
Zucchini. ரெம்ப நன்றி சகோ .சிவா.
பயிரிட்டவை இவைதாம்...........
மிளகாய்
முள்ளங்கி
பீட்ரூட்
KOHLRABI
ZUCCINI
இம்முறை அல்டி aldi என்கிற supermarket ல் தேங்காய் நார் தூள் (Coirpith) வந்திருந்தது.
Compost
*****************************************************
புதினா புதிய இலைகளுடன்
செம்பருத்தி பூக்களுடன்
கற்றாழை
புதியவரவு..
இது என்ன பூ தெரியுமா?
ஆப்பிள் பூ Apple Flower.
****************************************************
வாழ்த்துஅட்டை
___()___
Zucchini. ரெம்ப நன்றி சகோ .சிவா.
பயிரிட்டவை இவைதாம்...........
மிளகாய்
முள்ளங்கி
பீட்ரூட்
KOHLRABI
ZUCCINI
இம்முறை அல்டி aldi என்கிற supermarket ல் தேங்காய் நார் தூள் (Coirpith) வந்திருந்தது.
Compost
புதினா புதிய இலைகளுடன்
செம்பருத்தி பூக்களுடன்
கற்றாழை
புதியவரவு..
இது என்ன பூ தெரியுமா?
ஆப்பிள் பூ Apple Flower.
****************************************************
வாழ்த்துஅட்டை
___()___
அம்முலுவின் தோட்டம் மிக
ReplyDeleteஅழகாக உள்ளது .....
அசத்தலாக உள்ளது ....
அற்புதமாக உள்ளது
அருமையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.
அன்புடன் கோபு அண்ணா
உங்களின் முதல் வருகையும், கவித்துவமான கருத்தும் மகிழ்ச்சியளிக்கின்றன. ரெம்ப நன்றிகள் கோபு அண்ணா.
Deleteவாழ்த்து அட்டையும் படா ..... ஜோர் !
ReplyDeleteஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
ஜேர்மன் நண்பியின் பி.நாளுக்காக செய்தது. வாழ்த்துக்களுக்கும்,கருத்து பகிர்விற்கும் நன்றிகள் அண்ணா.
Deleteரொம்ப அழகா இருக்கு குட்டி குட்டி செடிங்க :)
ReplyDeleteநான் போன முறை தக்காளியை தரைய்ல் போட்டு வளர்த்தேன் .பெரிசா வளர்ந்து காஇபழுக்கும் நேரத்தில் குளிர் வந்து விட்டது
அதனால் இம்முறை கன்டெய்னர் முறைதான் ..ஒரு அரிசி பை கூட விடாம எல்லாத்திலையும் காரட் தக்காளி ,உருளை
கொண்ட கடலை எல்லாம் போட்டாச்சு .
வாங்க அஞ்சு. இது முதல்முறை. எங்க வீட்டுல தரையில போடமுடியாது. அதனால் கணவரே நீள் சதுர பெட்டி செய்து தந்தார். அதில சீட் விரித்து,கலவை மண் போட்டு விதைத்திருக்கேன். சில தவறு இருக்கு. ப்ர்ஸ்ட் டைம். ஆனபடியா நெக்ஸ்ட் டைம் திருத்திக்கனும். இங்கும் இப்ப குளிர்தான் அஞ்சு. ஆரம்பத்தில் நல்ல வெயில்.மேமாதம் இப்படிகுளிர். இரவில சீட் ஆல் மூடி காப்பாற்றி வருகிறேன்.
Deleteநான் அறுவடைக்கு பின் போடலாம் என இருந்தேன். ஆனா பச்சைபசேல் ஆ இருக்க பதிவு போட்டாச்சு. ஒவ்வென்றிலும் 2வது படம் உடன் எடுத்தது. நீங்களும் உங்க கார்டினிங் ஐ போடலாமே. எங்கிட்ட ப்ளாஸ்டிக் வாளிகள் இருக்கு. அதில் துளையிட்டு நட்டு வைத்திருக்கேன். தக்காளி, காரட்,பூசணி இருக்கு.இடமில்லாததால் போட வில்லை.
Deleteப்ரியா நீங்க quilling கார்ட் செய்றதில் எக்ஸ்பெர்ட் ஆகிட்டீங்க :) ரொம்ப அற்புதமா இருக்கு .
ReplyDeleteஉங்க அளவுக்கெல்லாம் இல்லை. வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் ரெம்ப நன்றி அஞ்சு.
Delete"கற்றது கைமண் அளவு,கல்லாதது உலகளவு".
அப்புறம் ..சுண்டக்காய் கூட காயவச்சி விதை போட்டிருக்கேன் ..வளர்ந்தா விதைகள் ஒருவருக்கு அனுப்பப்படும் ..இது ரகசியம் யார்கிட்டயும் சொல்லாதீங்க :)
ReplyDeleteஅவ்வ்வ்.............. சுண்டங்காயா, நானும் காயவைச்சிருக்கேன். ஆனா டவுட் தான். பார்ப்போம். ரகசியம்ன்னு பப்ளிக்கா சொன்னா???
Deleteஆங் இதை சொல்லாட்டி தலை வெடிச்சிடும் எனக்கு ..எங்க வீட்ல மீண்டும் மணத்தக்காளி வளர்ந்திருக்கு ப்ரியா
ReplyDeleteவெந்தயக்கீரையும் வளருது :)
மணத்தக்காளிதான் அடுத்த என் இலக்கு. வெந்தயக்கீரை எனக்கு இலைகள் சின்னதா வருகிறது. சரியாய் வரவில்லை. திரும்ப முயற்சிக்கனும்.
Deleteஉங்க வருகைக்கும்,கருத்துக்களுக்கும் ரெம்ப நன்றிகள் அஞ்சு.
ஆகா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் அண்ணா.
Deleteஅம்முலு, சேம் பின்ச்!! :))) உங்க வீட்டுக்குப் புது வரவாக வந்திருக்கும் அதே பூங்கொடி எங்க வீட்டுக்கும் வந்திருக்கே! ஒரு நட்பூ சனிக்கிழமை இந்தப் பூங்கொடி & இன்னொரு பூச்செடியுடனும் வந்தாங்க! படமெடுத்து வைச்சிருக்கேன், இங்க பார்த்தா நீங்களும் போட்டிருக்கீங்க.
ReplyDeleteமற்ற செடிகள் எல்லாம் அருமை. பீட்ரூட். முள்ளங்கி எல்லாம் அறுவடை ஆனதும் படம் போடுங்க. எனக்கு காய்ச்செடிகள் பெரிய சந்தோஷம் தருவதில்லை, அதனால் பூக்களுடனே நிறைவடைந்து கொண்டிருக்கேன். அவை என்னை ஏமாற்றாமல் அழகாகப் பூத்துக்கொண்டிருக்கின்றன.
ஹேப்பி கார்டனிங்! அழகான படங்கள்!
ஆவ்வ்வ்........... எனக்கும் என் நண்பிதான் கொடுத்தா. ஹால் முழுக்க நல்ல வாசம். அதற்கு செண்டிமெண்ட் வேறு. காப்பாற்றனும்.
Deleteஎனக்கும் இது ப்ர்ஸ்ட் டைம். இம்முறை மேமாதம் வழக்கத்துக்கு மாறா பகலில் வெயில். இரவில் குளிர்.
இம்முறை நான் தொங்கும் Pelargonien, டாலியா பூக்கள்தான் வாங்கி வைத்திருக்கேன்.
busy time ல வந்து கருத்திட்டமைக்கு ரெம்ப நன்றி மகி.
//ஒரு நட்பூ சனிக்கிழமை இந்தப் பூங்கொடி// :-) அந்த ஊர்ல இருந்து வந்தா பூங்கொடிதான் கொண்டு வருவாங்க மகி. :)
Deleteஆஹா எல்லாம் பச்சை பசேல்லுன்னு அழகாக விளைவித்து இருக்கீங்க.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteதங்களின் தோட்டத்திற்குப் பச்சைக் கம்பளம் விரித்து அழகாக அலங்கரித்து வரவேற்கும் செடிகளைப் பார்ப்பதற்கே மகிழ்ச்சியாய் இருக்கிறது. இவைகள் அனைத்தும் நன்கு வளர்ந்து காய்கனிகளையும் பூக்களையும் பரிசாக தர வேண்டும் அதை நீங்கள் பதிவாக தர வேண்டும் என்பது ஆசை. இயற்கையை நேசிக்கும் உங்கள் நற்குணத்திற்கு பாராட்டுகளும் நன்றிகளும். தொடருங்கள் சகோதரி. நன்றி.
வாங்க சகோ. நிச்சயமா பலன் கிடைத்தால்!!!! படங்கள் எடுத்து பதிவாக தருகிறேன். பாராட்டுக்கும் கருத்துக் களுக்கும் ரெம்ப நன்றி சகோதரா.
Deleteபசுமையான செடிகள் ..அழகான பகிர்வுகள்..
ReplyDeleteஉங்க வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி ராஜேஸ்வரியக்கா.
Deleteகார்ட் வெகு அழகு ப்ரியா. இதமான நிறங்கள் பயன்படுத்தியிருக்கிறீர்கள்.
ReplyDeleteமல்லிகை.... உங்கள் வெகுகாலக் கனவு அல்லவா! :) உங்களோடான ஆரம்ப கால உரையாடல்களை நினைவுக்குக் கொண்டுவருகிறது அந்தப் படம்.
ம்ம்.ம் நான் மற்ற மல்லிகை வாங்கனும் என இருந்தேன். இது எனக்கு சர்ப்ரைஸ் ஆக கிடைத்தது. ஞாபகம் இருக்காஆ.
Deleteயெல்லோ பிடிக்குமென்பாங்க. யோசிச்சு செய்யல. அந்நேரம் வந்த ஐடியாவை செய்தேன். வருகை+கருத்துக்களுக்கு மிக்க நன்றி இமா.
ல்லா செடிகளின் பசுமையைப்பார்க்க பார்க்க மனசே பூத்துக்குலுங்கின மாதிரி ஆகி விட்டது! அருமையான தோடம்! இனிய வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாங்க மனோ அக்கா .மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு உங்க கருத்துகள். வருகை தந்து ,உங்க மனமகிழ்ச்சியை தெரிவித்தமைக்கு ரெம்ப நன்றிகள்.
ReplyDeleteஆவ்வ்வ்வ்வ் சூப்பர் அம்முலு... உங்களுக்கு குளிர் போயிட்டுதோ?.. கார்டின் அருமையா இருக்கு. இங்கும் கன்றுகள் வாங்கி வீட்டுக்குள் வைத்திருக்கிறேன், குளிர் போனதும் வெளியே நடலாம் என.
ReplyDeleteஆ..ஆ.ஆ.கொஞ்சம் இருங்கோ எனக்கு என்னையே நம்பமுடியல்லை.ஆவ்வ்வ்வ்வ் அதிரா வந்திருக்காக. வாங்க அதிரா. அய்ய் நீங்க வருவீங்கன்னுதான் இன்றைக்கு கொஞ்சம் வெயில் வந்திருக்கார். குளிர் போய்விட்டு திரும்ப வந்திட்டுதெல்லோ.நேற்று நாங்க ப்ளையர் எரிச்சனாங்கள். அப்படி குளிர். ஆனா செடிகளை மூடி வைச்சு பாதுகாக்கிறேன். நான் நாற்று நடும்போது நல்ல வெயில்.எதிர்பாராமல் மாறி நடக்குது
Deleteமண் கலவையால் கொசு வந்திடும்.அதனால் எல்லாமே வெளியில்.மல்லிகை,கற்றாளை,செம்பருத்தி இப்ப உள்ளே.
கத்தாளை சூப்பர். செம்பரத்தம்பூ சூப்பரோ சூப்பர்... பேர்த்டே கார்ட் அதைவிட சூப்பர்.
ReplyDeleteஎங்களுக்கும் கொஞ்சம் பக்கத்தில் அல்டி இருக்கே:).
அல்டியில் குவாலிட்டியா இருக்கும். ஆனா வந்தவுடனே எல்லாம் விற்றுதீர்ந்திடும். காலையில் போகவேணும். போயிருக்காவிட்டால் ஒருதரம் போய் பாருங்க.
Deleteமிக்க,மிக்க மகிழ்ச்சி உங்களை காண அதிரா. வந்து கருத்திட்டு,பாராட்டியதற்கு நன்றிகள் அதிராஆஆ
அனைத்தும் மிக அருமை.எப்படி இந்த பகிர்வை நான் பார்க்காமல் விட்டேன்.என்னவொரு அழகு, அத்தனையும் சூப்பர்,அந்த முல்லை மலர்க் கொடி என் மனதை மிகவும் கொள்ளை கொண்டு விட்டது.
ReplyDeleteபுதினா,கற்றாழை,செம்பருத்தி மற்றும் பயிரிட்ட அனைத்தும் மிக பயனுள்ளவை.மிக அருமை,என் மனதை தொட்ட பகிர்வு அம்மு.
வாங்க ஆசியா. உங்களை காணவில்லையே என நினைத்தேன். வீட்டில் நல்ல வாசம் இந்த முல்லையால். எல்லாப்பயிர்களையும் காப்பாற்ற வேண்டும்.ஏனெனில் மேமாதத்தில் குளிர். உங்களின் மனதை கவர்ந்ததில் எனக்கு மகிழ்ச்சி ஆசியா.
Deleteவருகை தந்து கருத்திட்டு,பாராட்டியமைக்கு மிக்க நன்றிகள்.
ஹாய் ப்ரியா. செடிகள் அனைத்தும் அருமையாய் வந்திருக்கிறது. பார்க்கவே ரொம்ப ஆரோக்கியமாக தெரிகிறது. அழகாக படமும் எடுத்திருக்கிறீர்கள். அருமை.
ReplyDeleteசெடிகள் ரொம்பவே நெருக்கமாக இருக்கிறது (மிளகாய், பீட்ரூட், முள்ளங்கி). கொஞ்சம் செடிகளை பிடுங்கி விட்டு ஒரு கூட்டத்தில் ஒரே ஒரு செடியை மட்டும் விட்டு வையுங்கள். கீழே ஒரு கிழங்கு வைக்கும் அளவுக்கு இடம் இருக்க வேண்டும்.
Quilling Work அருமை. நானும் கூட செய்வதுண்டு. :-)
வாங்க சிவா. செடிகளை வைப்பதில்தான் தப்பு நடந்துவிட்டது. நீங்க சொன்னபடி செய்கிறேன். க்விலிங் நீங்களும் செய்வீர்களா.சூப்பர். நீங்க வந்து ஆலோசனை தந்தமைக்கும், ஊக்கத்துக்கும் ரெம்ப நன்றிகள்.
Deleteரெம்ப சிரத்தையுடன்அழகா...காய் தோட்டம் போட்டு இருக்கிறீர்கள். பசுமையாய்,பூக்கள் பூத்துக் குழுங்குவது கண்களைக் கவருகிறது. எதையும் நீங்கள் நேர்த்தியுடன் செய்கிறீர்கள் பிரியசகி. அறுவடைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகை தந்து பழைய பதிவுகளை படித்து கருத்துக்களிட்டமைக்கு ரெம்ப நன்றிகள்.
Deleteவலைச்சரத்தில் சகோதரர் பாண்டியன் அறிமுகம் செய்ததால் உங்கள் தளம் அறிந்து கொண்டேன். வாழ்த்துக்கள்..
ReplyDeleteவாங்க கிரேஸ். மகிழ்ச்சி. உங்க வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் ரெம்ப நன்றி.
Deleteதோட்டம் வசீகரித்தது, எனக்கு கூட இதே போல் தோட்டம் வைக்கும் ஆவலை தூண்டியிருக்கிறது.. வலைச்சரம் மூலம் அறிமுகம் கொடுத்த அ.பாண்டியன் அவர்களுக்கு நன்றிகள்...
ReplyDeletehttp://pandianinpakkangal.blogspot.com
வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி சகோதரரே.
Deleteஉங்க வீட்டுத் தோட்டம் அழகா இருக்குங்க. கற்றாழையெல்லாம் வச்சிருக்கீங்க. செம்பருத்தியின் நிறமும், ஜாதிமல்லியின் வாசமும் கொள்ளைகொள்கிறது.
ReplyDeleteவாங்க சித்ரா. ரெம்ப மகிழ்ச்சி. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிங்க.
Deleteவருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி ஐயா.
ReplyDeleteஅன்பின் அருந்தகையீர்!
ReplyDeleteவணக்கம்!
இன்றைய...
வலைச் சரத்திற்கு,
தங்களது
தகுதி வாய்ந்த பதிவு
சிறப்பு செய்துள்ளது!
வருக!
வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
கருத்தினை தருக!
நட்புடன்,
புதுவை வேலு
அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்.
Deleteஇன்றைய 21.03.2015 வலைச்சர அறிமுகத்திற்க்கு வாழ்த்துகள் சகோ.
ReplyDeleteதகவலுக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்.
Deleteஉங்கள் தோட்டப் படங்களைப் பார்த்தபோது, தம்பி சிவாவின் நினைவு வந்தது. நீங்களும் நன்றி கூறியுள்ளீர்கள்.
ReplyDeleteஆரம்பமே அசத்துறீர்கள். உங்களுக்கு நிலம் உள்ளது. அதைப் பயன்படுத்தலாம். மனதுக்கு இதமாக இருக்கும்.
உங்கள் பெயர்தெரியாச் பூங்கொடி - இலங்கையில் ஊசி மல்லிகை, முல்லை என்போம்.
இதைக் குளிர்நாடுகளிலும் வெளியே வைக்கலாம். உறை குளிரையும் தாங்குகிறது. இம்மாதக் கடைசியில் பொருத்தமான நிலத்தில் வைத்து விடவும். அது செப்டம்பருக்குள் நன்கு வேர் பாச்சிவிடும். முதல் 2 வருடம் குளிர்காலத் தொடக்கத்தில் பிளாஸ்டிக்(ஒளி ஊடுருவக் கூடிய) உறையால் மூடி விடவும். எனைய வருடங்களில் இலைகள் கருகினாலும், கொடியும் ,அடியும், வேரும் வெய்யிலைக் கண்டதும் துளிர் விடும். என் சொந்த அனுபவம்.
பாரிசிலும், லண்டனிலும் வெளியில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் உள்ளது. என் மரம் இப்போ நிறைந்த மொட்டுக்களுடன் மாடத்தில் பூக்கத் தயாராகவுள்ளது.
தோட்ட வேலி ஓரத்துடன் செவ்வந்தி,begonias,lis,narcisses,dahlia பூ நடலாமே!
வாங்க யோகன் அண்ணா. தாமதமான பதிலுக்கு மன்னிக்க. நல்ல யோசனை சொல்லியிருக்கிறீங்க.செய்து பார்க்கிறேன்.உங்க வருகைக்கும், யோசனைகளுக்கும்
Deleteமிக்க நன்றிகள்.
செம்பருத்தி, கத்தாழை, புதினா என களைகட்டுது உங்கட வீட்டுத் தோட்டம். இவ்ளோ பூக்களோட இருந்த ஜாதிமல்லியைக் காணோம்னா எவ்ளோ கஷ்டம் ! இச்செடிகள் எல்லாம் கோடையில் மட்டும்தானா அல்லது குளிர் காலத்திலும் நீடிக்குமா ?
ReplyDeleteமேலே சொன்ன 3ம் இன்றுவரை நிக்குது. அவைகளை குளி நேரம் வீட்டினுள் வைத்துவிடுவேன். ப்ளையர் ஹீட்டால் அப்படியே இருக்கும். தோட்டப்பயிர்கள் மழையினால் பாழாயிட்டுது. அதனால் பெரிதா பலனில்லை. ரெம்ப கஷ்டமாயிட்டுது மல்லிகையால் சித்ரா. நன்றி.
Deleteஅன்புடையீர்! வணக்கம்!
ReplyDeleteஇந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (12/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
வலைச்சர இணைப்பு:
http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE
தகவல் தெரிவித்தமைக்கும்,வாழ்த்துக்களுக்கும் ரெம்ப நன்றிகள் சகோ.
Deleteஅன்புடையீர்,
ReplyDeleteவணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://blogintamil.blogspot.in/2015/06/12.html
தகவல் தெரிவித்தமைக்கும்,வாழ்த்துக்களுக்கும் ரெம்ப நன்றிகள்.!
Deleteவலைச்சரம் கோபு சார் அறிமுகம் கண்டு உங்கள் தளம் வந்தேன். படங்கள் அழகு! கண்ணுக்கும் குளு குளு! எனக்கும் தோட்டம் என்றால் மிகவும் பிடிக்கும். வலைச்சர அறிமுகத்துக்குப் பாராட்டுக்கள் அம்முலு!
ReplyDeleteமுதல் வருகைக்கும், தங்கள் பாராட்டுக்களுக்கும் ரெம்ப நன்றிகள் கலையரசி
Delete