RSS

09/06/2015

பொழுது போக்காக....!!!


நேற்று மாலையில் வானம்..........


இன்று அதிகாலையில்..........
எங்க வீட்டுக்கு இவர்கள் வரவு அதிகரித்திருக்கிறது. வீடும் கொடுத்து, அவர்களுக்கு விருந்தோம்பல் ஒவ்வொரு நாளும்..................


அவர்களுக்கு எங்க வீடு பிடித்துவிட்டதாம்.அதனால் வீட்டில் உள்ள ட்வின்ஸ் டவரில்.....(இடதுபக்க டவரில்)
தாங்களாகவே வீடு கட்டி, குடித்தனமும் ஆரம்பித்துவிட்டார்கள்.
அதன் பலனாக இவர்களின் புதிய வரவு வர இருக்கின்றன.....!!!!
 இது எங்க ஊர் நத்தை.............
இவங்க இப்ப வரமாட்டாங்க.  கடந்த மாதம் நல்ல மழை பெய்தது. அப்போ வந்த வரை கஷ்டப்பட்டு பிடித்தது. இப்போ 2வாரங்களாக நல்ல வெயில்.
குறிப்பு:-- எங்க ஊர் வானம், சிட்டுக்குருவி, நத்தை பார்க்கனும் என விரும்பியவங்களுக்காக இப்பதிவு.......!!!
***  ***  ***  ***  ***  ***  ***  ***  ***  ***  ***  ***  *** ***
இந்த பூச்சி எங்கட ஊரில் மழை காலத்தில் வரும். பார்க்க நல்ல அழகு. தம்பலப்பூச்சி பெயர். பட்டுப்பூச்சி, கம்பளிப்பூச்சி எனவும் சொல்வார்கள். இப்போ இது குறைந்துவிட்டது.நாங்க படிக்கும் காலத்தில் கையில்,நெருப்பு பெட்டியினுள் எடுத்து வைத்து மேல் உடம்பை தொட்டு பார்த்து, அதன் பட்டுத்தன்மையை உணரும்போது அத்தனை சந்தோஷமாக இருக்கும். கூடவே ஆச்சரியமாகவும். எப்படி இப்படியென !!!!
ஊரிலிருந்து எடுத்து எனக்கு அனுப்பியிருந்தார்கள். 
பூச்சியை அல்ல........ படத்தை..!!!
   <><><><><><><><><><><><><><><><><><>
02/06/2015

அசத்தலாமே சமையலில்....3


நட்புகளின் சமையல் குறிப்பினை செய்துபார்த்து ருசித்ததை இங்கே பகிர்கின்றேன்.

இது சித்ராசுந்தரின் கைப்பக்குவம்
                                   பீர்க்கங்காய் துவையல்..
சாதத்திற்கு பருப்புத்துவையல், பீர்க்கங்காய் துவையல் இப்படி
ஏதாவது ஒன்று இருக்கனும். இத்துவையல் நன்றாக இருந்தது.  

 உமையாள் காயத்ரியின் குறிப்பிலிருந்து..........
                     வீட்டிலேயே பனீர் தயாரிக்கலாம்.
பனீர்  செய்து பார்த்திருக்கேன். சரியாகவரவில்லை. இறுக்கமாகவராமல் உதிர்த்தாற்போல் வந்தது. உமையாளின் குறிப்பின்படி பார்த்துச்செய்து நன்றாக வந்திருந்தது. பின்னர் 2,3 தடவை செய்தாயிற்று. மகனுக்கு மிக பிடித்தமான ஒன்று.
                                      பாகற்காய் பகோடா..
                                          மசால் இட்லி

                                       பீன்ஸ் பொரியல்

 மகியின் குறிப்பிலிருந்து..................
                  புழுங்கல் அரிசி with பொட்டுக்கடலை முறுக்கு
                     வெண்ணெய் முறுக்கு/ Butter Murukku
          இரண்டு விதமான முறுக்கும் செம டேஸ்ட். வித்தியாசமாகவும் இருந்தது.

சாரதா அக்காவின் குறிப்பிலிருந்து................
                                          இட்லி
     இந்த இட்லியைதான் உமையாளின் குறிப்பான மசால் இட்லி செய்திருந்தேன்.
                                   அரைத்துவிட்ட சாம்பார்.....
                       இதற்கு நான் முள்ளங்கி போட்டு சாம்பார் செய்திருந்தேன்.
                                     
                                  அவல்பாயசம்
இப்பாயசத்தில் ஜவ்வரிசி + அவல் + வெல்லம் மூன்றும் சேர்த்திருப்பது வித்தியாசமான சுவையாக இருந்தது.                                     
 *************************************************                                 
நல்ல குறிப்புகளை தந்திருக்கும்  நட்புகளுக்கு அன்பான நன்றிகள்.
*************************************************
இது நான் பயன்படுத்தும் சின்ன குறிப்பு.. Tips
வீட்டில் இப்படி டைல்ஸ் பதித்திருந்தால், இரண்டு டைல்ஸ் ஐ ஒட்டுவதற்கு ஒரு பேஸ்ட் பயன்படுத்துவார்கள். முதலில் அது நல்ல அழகாக இருக்கும். பின் நாங்கள் புழங்க அந்த இடைப்பட்ட பேஸ்ட்டில் அழுக்கு அல்லது கறுப்பாகிவிடும். அதை நீக்கமுடியும். பேக்கிங் பவுடர் Backing Powder எடுத்து ஒரு பவுலில் போட்டு கொஞ்சதண்ணீர் விட்டு கரைத்து பேஸ்ட் ஆக்கி, அதை ஒரு பிரஷினால் அந்த இடத்தில் பூசி, பிரஷ் ஆல் தேய்த்துவிட்டு பின்னர் ஒரு துணி கொண்டு துடைத்துவிட்டு மொப் செய்தால் உங்க வீட்டு டைல்ஸ் புதிதாக காட்சி தரும்.
                                     துடைக்க முன்....

                                           துடைத்தபின்.....
*******************************************************
பீர்க்கங்காய் துவையலுக்கான இணைப்பை இணைக்க முடியவில்லை.
இணையத்தளம்.:-- https://chitrasundar5.wordpress.com/2010/08/04
 *******************************************************
இந்த மெசின்தான் அழகாக புற்களை வெட்டுவது..

                              ******************************************************


 
 
Copyright பிரியசகி