நேற்று மாலையில் வானம்..........
இன்று அதிகாலையில்..........
எங்க வீட்டுக்கு இவர்கள் வரவு அதிகரித்திருக்கிறது. வீடும் கொடுத்து, அவர்களுக்கு விருந்தோம்பல் ஒவ்வொரு நாளும்..................
அவர்களுக்கு எங்க வீடு பிடித்துவிட்டதாம்.அதனால் வீட்டில் உள்ள ட்வின்ஸ் டவரில்.....(இடதுபக்க டவரில்)
தாங்களாகவே வீடு கட்டி, குடித்தனமும் ஆரம்பித்துவிட்டார்கள்.
அதன் பலனாக இவர்களின் புதிய வரவு வர இருக்கின்றன.....!!!!
இது எங்க ஊர் நத்தை.............
இவங்க இப்ப வரமாட்டாங்க. கடந்த மாதம் நல்ல மழை பெய்தது. அப்போ வந்த வரை கஷ்டப்பட்டு பிடித்தது. இப்போ 2வாரங்களாக நல்ல வெயில்.
குறிப்பு:-- எங்க ஊர் வானம், சிட்டுக்குருவி, நத்தை பார்க்கனும் என விரும்பியவங்களுக்காக இப்பதிவு.......!!!
*** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** ***
ஊரிலிருந்து எடுத்து எனக்கு அனுப்பியிருந்தார்கள்.
பூச்சியை அல்ல........ படத்தை..!!!
<><><><><><><><><><><><><><><><><><>
அனைத்தும் அழகோ அழகு. :) பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeletebusy time லும் வந்து என் பதிவினை வாசித்து கருத்தளித்தமைக்கு ரெம்ப நன்றிகள் அண்ணா.
Deleteரசித்தேன்...
ReplyDeleteரெம்ப நன்றிகள் டிடி அண்ணா.
Deleteவானம் என்றுமே அழகு தான் இல்ல...
ReplyDeleteசிட்டுக்குரிவியார் அழகு...என்னமா வீடு கட்டி இருக்கிறார். நீங்கள் அமைத்த வீட்டை விட்டு மரத்தில் கட்டிக் கொண்டார் போலும்.
ஆனாலும் மேலே போய் கூட்டை விடாது படம் எடுத்து இருக்கிறீர்கள். புது விருந்தினர்கள் விரைவில் வந்து விடுவார்கள். உங்களுடன் கதைக்க...
நத்தையாரை...அழகா பிடித்து இருக்கிறீர்கள்...புகைப்படமாக..
இந்தப் பூச்சியை நாங்கள் வெல்வெட் பூச்சி என்போம். ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு விதமாக...இல்ல..மென்மையாக இருக்கும். பள்ளி நாட்களில் விளையாடியது. நைஸ் பிரியசகி
எனக்கு வானம் பார்க்கிறது என்றால் மிக விருப்பம். நேரம் போவதே தெரியாது உமையாள்.
Deleteகுருவியாரின் வீடுதான் ரெம்ப பிடித்திருக்கு. என்னா ஒரு அழகு. அதைப்பார்த்து வியந்துபோகிறேன். அடிக்கடி அந்த மரத்தை சுத்திசுத்தி வந்தவை. சந்தேகப்பட்டுதான் பார்த்தேன். பார்த்தால் இப்படி...!!
இந்த பூச்சிக்கு ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பெயர். ஆனா இப்ப அருகிவிட்டது அங்கும்.
ரெம்ப நன்றி உமையாள் விரிவான கருத்துக்கு.
அனைத்து படங்களும் அருமை புதிய வரவு வந்தவுடன் சோக்லேட் அனுப்பி வைக்கவும்.
ReplyDeleteசொக்லேட்டாஆஆ..அனுப்பிவைக்கிறேன்.ரெம்ப நன்றிகள் சகோ உங்க கருத்துக்கு.
Deleteவானம், சிட்டுக்குருவி, நத்தை ஊரிலுள்ள பட்டுப்பூச்சி எல்லாம் மிகவும் அழகா இருக்கு. Superb !
ReplyDeleteரெம்ப நன்றியக்கா வருகைக்கும்,கருத்துக்கும்.
Deleteவானம், சிட்டுக்குருவி, பட்டுப்பூச்சி எல்லாமே மிக மிக அழகு!
ReplyDeleteரெம்ப நன்றி மனோ அக்கா வருகைக்கும்,கருத்துக்கும்.
Deleteம் ம் ஜெர்மன் வானமா !! சூப்பரா இருக்கு. மாடி வீடுகளையேக் காணோமே. எனக்கும் இப்படித்தான் பிடிக்கும்.
ReplyDelete13_வது படத்துல யாரோ காமிராவுடன் பின்னோக்கி ஓடுவதுபோல் தெரியுதே :) குருவிங்கள வீட்டுக்குள்ள இருந்து எடுத்தீங்களா அல்லது புல் தரையில நின்னா ?
உணவை மூட்டை மூட்டையா வாங்கி அடுக்கி வையுங்க, மேலும் ஐந்து விருந்தாளிகள் வந்துட்டே இருக்காங்க.
இங்கு மாடி வீடுகள் கிடையாது சித்ரா. எல்லாமே தனித்தனி வீடுகள் ஊர் மாதிரி. ஏனெனில் இது ஒரு மலைக்கிராமம்.
Deleteஅவ்வ்.. யாரது ஓடுவது... அப்படி யாரும் இல்லை. நீங்க சொன்ன படம் மட்டும் வீட்டினுள் இருந்து ஸும் செய்து எடுத்தது.மற்றவை எல்லாம் வெளியில் இவர்களுக்காக காத்திருந்து எடுத்தது. நான் அவங்களுக்கு உணவு வைத்து கெடுக்கிறேன் என இங்கு ஏச்சு. ஏனெனில் பொதுவா இங்கு விண்டருக்குதான் உணவு வைப்பாங்க சித்ரா. சம்மருக்கு அவங்களா தேடி சாப்பிடுவாங்க. சோம்பேறியாக்கிட்டேன்னு ஓரே சத்தம் இங்கு.அவ்வ்வ்வ்வ்.
இதை நாங்க அட்டைனு சொல்லுவோம். கறுப்பு நிறத்தில் கொஞ்சம் பெருசா இருக்கும். பார்க்க மாட்டேன், அவ்ளோ பயம். இங்கும் இது கறுப்பு நிறத்தில், குளிர் காலத்தில் நிறைய மேயும்.
ReplyDeleteஇன்னொன்னு எங்க ஊரிலும் பட்டுப் பூச்சின்னுதான் சொல்லுவோம். பசங்க தொட்டுத்தொட்டுப் பார்ப்பாங்க. இதை யார் யாரெல்லாம் ஒரு சின்ன கண்ணாடி டப்பாக்குள்ள வச்சிட்டு சுத்தினாங்கன்னு நினைத்துநினைத்து சிரிப்புதான் வருகிறது.
எனக்கும் இப்போ நல்லா பொழுதுபோச்சு ப்ரியா ! விரைவில் ஸ்வீட் தட்டோட வருவீங்க என்ற நம்பிக்கையுடன் ...... !
அட்டை வேறு. இது இங்குஇருக்கும் நந்தை. ஓட்டோடும் இருக்கு.ஆனா அது குறைவு.இவங்க இலை சாப்பிடும் போது பார்க்கனுமே. சரியாஆஆஆஆஆன ஸ்லோ.
Deleteஸ்கூல் செல்லும்போது யார் அதிகம் பிடிக்கிறது என போட்டியே நடக்கும்.நான் பிடிக்கமாட்டன்.யாராவது பிடித்தால் தொட்டுப்பார்ப்பேன்.தம்பிதான் அட்டகாசம் கண்டால் விடவேமாட்டான்.
ஆவ்வ்வ் ஸ்வீட் ஆஆ.. எத்தனை நாளாகுமோ..... I m waiting...!!!
ரெம்ப நன்றி சித்ரா வருகைக்கும், நீண்ண்ட கருத்துக்கும்.
எல்லாம் மிக அழகு.
ReplyDeleteரெம்ப நன்றி ஆசியா.
Deleteநலமா ப்ரியா? வெயில் தலைக்காட்டிய மகிழ்ச்சி உங்கள் பதிவுகளில் தெரிகிறது. அந்தி வானமும் சிட்டுக்குருவிகளுமாய் அழகுப் படங்கள். தம்பலப்பூச்சி இப்போதுதான் கேள்விப்படறேன், பார்க்கிறேன்பா.
ReplyDeleteநலம் கீதா. வாரம் நல்ல காலநிலைதான். இங்கு வெயிலைக்கண்டால்தான் மக்கள் உற்சாகமாக இருக்கின்றார்கள். உங்களுக்கு தெரியாதா. இது கண்டால் படிக்கும்காலத்தில் மகிழ்ச்சி. துன்புறுத்துவதில்லை. சும்மா பார்க்க அழகாக இருக்குமென்பதால் பிடித்து பார்த்துவிட்டு விட்டுவிடுவோம். ரெம்ப நன்றி கீதா.
Deleteஅன்புள்ள சகோதரி அம்முலு அவர்களுக்கு வணக்கம்! இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அய்யா அவர்கள், தங்களின் வலைத்தளத்தினை இன்றைய (12.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஇது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.
வலைச்சர இணைப்பு இதோ:
வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள்
http://blogintamil.blogspot.in/2015/06/12.html
வணக்கம் ஐயா! தாங்கள் வந்து தகவல் தெரிவித்தமைக்கும்
Deleteவாழ்த்துக்களுக்கும் ரெம்ப நன்றிகள்!!
தகவல் வந்து தெரிவித்தமைக்கும்,வாழ்த்துக்களுக்கும் ரெம்ப நன்றிகள் சகோ.
ReplyDeleteஉங்கள் ஊர் அழகை விருந்தினர்களை படம் பிடித்து பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteரெம்ப நன்றிகள் வருகைக்கும்,கருத்துக்களுக்கும்.
Deleteவணக்கம் அம்மு !
ReplyDeleteஅத்தனையும் அழகு பகிர்வுக்கு நன்றி
வாழ்க வளமுடன்
அழகான படங்கள். பட்டுபூச்சி நினைவுகளை பின்னோக்கி போக வைத்து விட்டது. நானும் தீபெட்டி பெட்டியில் எடுத்து வைத்து அதற்கு பசுமையான புற்களை வெட்டிப்போட்டது நினைவுக்கு வருகிறது. அதனை எல்லோருக்கும் நிறந்து காட்டி மகிழ்ந்த காலங்கள் இனி மீண்டும் திரும்பி வராது. மீண்டும் பட்டுபூச்சியைப் பார்த்ததும் மனது பழைய நினைவுகளுக்கு சென்று விட்டது.
ReplyDelete