RSS

26/02/2020

2020ம் ஆண்டிக்கானது வந்தாச்சு.....

"இப்ப வருமோ..எப்ப வருமோ" என பாட்டின் வரியை பாடாத குறைதான். இன்று இப்ப வந்தே   விட்டது இவ்வாண்டிற்கான பனிமழை Snow. எங்க நாட்டில், வீட்டில ஸ்னோ கொட்டுகின்றது.
 (மேலே எழுதிய பாடல் வரி இடம்பெற்ற படம்..உழைப்பாளி, பாடல்..ஒரு கோலக்கிளி சோடி தன்னை. சிலவேளை அதிராவுக்கு உதவும்.😃😃😃)

இயற்கை இப்ப வரவர மோசம். அது கூட அந்தந்த நேர்த்தில் செய்யவேண்டியதை ஒழுங்கா செய்யுதில்லை. அல்லது செய்யவிடாமல் மனிதர் செய்துவிடுகிறார்கள். சூழல் மாசடைவதாலோ என்னவோ  இப்ப அதிக வெப்பம் என டிவி சானல்களில் வானிலை ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். ஸ்னோ வந்தாலும் பிரச்சனை,  வராவிட்டாலும் பிரச்சனை இங்கு உள்ளவர்களுக்கு.
நான் இங்கு வந்த புதிதில் வரும் ஸ்னோவுக்கும், இப்ப வருவதற்கும் எவ்வளவு வித்தியாசம். முன்பு கார்த்திகை, டிசம்பரில் கொட்ட ஆரம்பித்துவிடும், தை ,மாசி மோசமா இருக்கும்.  வைட் க்றிஸ்மஸ் (White Chiristmas) ஆக இருக்கும். இப்ப அது இல்லை. கனவருடமாச்சு வைட் க்றிஸ்மஸ் வந்து. இப்ப இம்முறை மாசிமாத இறுதியில் இருக்கிறோம். இன்றுதான்தான் கடுமையாக கொட்டுகிறது. அடுத்த மாதம் வசந்தகாலம் ஆரம்பம். சில பூக்கள் இப்பவே பூத்துவிட்டது. என் வீட்டில் டிலிப் மலர்கள் பூமிக்கு வெளியே தலைகாட்டத்தொடங்கீட்டினம். இனி எல்லாமே குளிருக்கு வாடிவிடும்.  இது இப்ப பதிவுக்காக சுடச்சுட பனிமழை (Snow) படங்கள்.  ஸ்னோவை ஒதுக்கும் போது......
பாருங்கள், ரசியுங்கள்.

22/02/2020

பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

HAPPY BIRTHDAY ATHIRA. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

பூலோலியூர் பூசானந்தா,  ஆஷாபோஷ்லே கவிஅமுதம்,  மாஸ்டர் செப், இடிதாங்கி,  திலோத்தமை, இப்போ அருந்ததி என தனக்குதானே பல பட்டங்களை சூட்டிக்கொண்டும்,  என் சமையலையும் ருசியுங்கோவன்  என குழைசாதம், கத்தரிக்காய் தொக்கு, கீரைவடை, மொச்சைக்கொட்டையில் ஓரு சாப்பாடு, கொள்ளுவடை என தினுசு தினுசா செய்து எங்களையெல்லாம் தலை கிறுகிறுக்க வைக்கிற  அன்பான, பண்பான, அடக்கமான, தமிழ் எழுத்தில் பிழைவிடாமல் லகரம்,ழகரம் எழுதி டி எடுத்த  என்றும் 16 வயது (ஸ்வீட் ஸிக்டீன்) என சொல்லிதிரிபவரும், எங்களால் பூஸார், குண்டு பூனை என செல்லமாக அழைக்கப்படுபவருமான

             அதிராவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

இன்று போல் என்றும் சந்தோசமாக, நல்லாரோக்கியமாக வாழ வாழ்த்துகின்றேன்.  அனைவரும் அன்பு அதிராவை வாழ்த்துங்கள்.


இம்முறை அதிராவின் பிறந்தநாள் எனக்கு மறக்கமுடியாததாகிவிட்டது. பூஸ் கார்ட் போனவருடம் செய்யவேண்டியது. அஞ்சுவின் பக்கம் கடந்த வருடம் பி.நாள் போஸ்ட் ல் தெரிவித்திருந்தேன். ஆனா அதை தொடரமுடியவில்லை. அஞ்சு சின்னபையருக்கு செய்த யானைதான் இம்முறை அதிராவுக்கு இப்பூஸாரை செய்ய (inspiration ) தூண்டுதலாக  இருந்தது. இந்த வடிவத்தில் செய்தது இதுதான் முதல்முறை. இதில் குறைகள் இருக்கு. ஆனா இவ்வளவு தூரம் செய்யமுடிந்தது என்றா அதன் காரணகர்தா அஞ்சுதான்.  நன்றி அஞ்சு. இன்னும் முன்னேற இருக்கு. சரியா வந்ததா எனத்தெரியவில்லை. ஆனா எனக்கு மிக்க சந்தோஷம் அதிராவிற்கு செய்ததில். அதிராவைப்   பற்றி நாங்க கலாய்த்தாலும் உண்மையில் நாலு வார்த்தை நல்லதா சொல்ல வேண்டும். இன்று வரை அதிராவுடனான நட்பு தொடர்கிறது  என்றால் அது அவருடனான புரிந்துணர்வால் தான். எல்லாவற்றையும் டேக் இட் ஈசி என எடுத்து, எவ்வளவு கலாய்தாலும் அவரின் நகைச்சுவை எழுத்தால் எழுதி அத்தனையும் கடந்து சென்று விடுவார். அவரிடமிருந்து நான் கற்றது இதனைதான். அவர் ஒருவரிடமே பயமில்லாமல் எதனையும் எழுதுவேன். முன்னாடி என்ன நினைப்பாரோ என பயந்து கொள்வேன். மிகவும் நல்லதொரு நண்பி. அதேபோல்தான் அஞ்சுவும். அதிரா நண்பியாக கிடைத்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இப்படியே எங்கள் நட்பு தொடரவேண்டுமென ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். 🙏


கொஞ்சம் கம்போடியா அலப்பறைகள்......அதிராவிற்காக.

பாருங்க அதிரா உங்களோட பேவரிட் அவிச்ச கடலை, உப்புதூள் மாங்காய், அ.கோ.மு இவை கம்போடியாவில் மிகபிரபலம். ரோட்டோரங்களில் இவைகளை காணவில்லை என்றால் அதிசயமே. 
இவைகளை(அ.கோ.மு தவிர) நான் மார்க்கெட்டில் வாங்கினேன். நடைபாதையில் விற்கிறாங்கதான். ஆனா அங்கு இருக்கும் pollution ல் வாங்கமுடியாது. இதனை விற்ற பெண் பாதுகாப்பாக வைத்திருந்தாங்க. அத்துடன் இதனை விற்ற சிறு பெண் மிகவும் கெஞ்சியதுடன், இன்று ஒன்னுமே விற்கல சார் என சொன்னார். பாவமா இருந்தது.  சரி என வாங்கியது.
இதைபோல தான் அ.கோ.மு எங்குமே காணமுடிந்தது.  இதை பார்க்கும்போது அதிராதான் ஞாபகம் வருவா. அத்தோடு முன்பு போட்ட க்ரில் வாழைப்பழம். இன்னும் வேறு அசைவ உணவுகள் என வித்தியாசமான முறையில் வைத்திருந்தாங்க. இவைகள் எல்லாமே கஷ்டப்பட்டவங்க தம் அன்றாட தேவைக்காக விற்று பிழைக்கிறாங்க. நிறைய்ய்ய்ய கையேந்திபவன் தான் அதிகம். நான் நினைப்பேன், இப்படி முழத்துக்கு முழம் இருந்தால் சனங்கள் எங்கு போய் சாப்பிடுவது என குழப்பம் வராதா?, எல்லோருக்கும் விற்பனையாகுமா? என. ஆனாலும் விடமுடியுமா சந்தேகத்தை கேட்டே விட்டேன். ஒருநாளைக்கு 75...லிருந்து100 டொலர் வரும் எனவும் சிலவேளை வியாபாரம் நடக்காது எனவும் சொன்னாங்க.

ஊரில் நாங்க சீனியாஸ் பூ என்போம். அங்கு எங்கும் இருக்கிறது. இங்கு zinne flower. ஊரில் கலர்கலரா வளர்த்தது.


அங்கு நான் கண்ட இன்னொரு விடயம் . வீடுகளிற்கு முன்னால் அதாவது வாசலில் துளசி, திருநீற்றுபச்சிலை, கற்பூரவள்ளி வைத்திருப்பது. 


அப்பனே பிள்ளையாரப்பா இன்று அதிராவின் பிறந்தநாள் அவா எங்கேயிருந்தாலும் நல்லாயிருக்கோனும். 
உங்க மைத்துனிக்கு கொடுக்கவேண்டிய நேர்த்திக்கடன் வைரநெக்லஸை எப்படியாவது வாங்கி அவாவிடம் கொடுத்துவிடுங்கோ....

கம்போடியாவில்  பாரம்பரிய, மிக சத்தான உணவுகள் சாப்பிட்டேன்.அதன் விபரங்களை பதிவாகதான் போடோனும். ஆச்சரியமான ஆனா மிகுத்த சத்துணவு, அல்லது சிற்றுண்டி என சொல்லலாம். அந்த உணவை சாப்பிடும் போது அஞ்சுதான் ஞாபகம் வந்தா. இது அதில் ஒன்றான நான் ருசித்த மிக வித்தியாசமான மோதகம். இதன் செய்முறை ரெம்பவே வேலையானது. நல்ல ருசியாக இருந்தது. ஆனா 2,3 மேல் சாப்பிடமுடியாது. அவ்வளவு இனிப்பு. அரிசிமா, தேங்காய்பூ, பனைவெல்லம் சேர்த்து இப்படி வாழையிலையை தொன்னையாக செய்து அதில் வைத்து  உடன் தேங்காய்பூவை துருவி மேலே போட்டுத்தருவாங்க.உள்ளே பூரணமாக தேங்காய்பூ,வெல்லம்.     

                                           கச்சான் அல்வா.

அங்கு மார்க்கெட் ல அலங்கார பொருட்கள் விற்கும் கடைகளில் இப்படியான பிள்ளையார் விதவிதமாக இருக்கார். எதை வாங்குவது, எதை விடுவது எனத்தெரியவில்லை.

ஒருவழியா மூவர் பெயரையும் கம்போடியா தீவு ஒன்றில் பதிந்துவிட்டேன். வரலாறு முக்கியம்.  இது கம்போடியாவில்  sihanoukville city லிருந்து ஒரு தீவுக்கு சென்றிருந்தோம். அங்கு கடற்கரையில் எழுதியது. ஏதோ நம்மால் முடிஞ்சது.😁😁😁

. 
Copyright பிரியசகி