RSS

22/02/2018

வாழ்த்துக்கள் ஆஷாபோஷ்லே அதிரா

எங்கள் அன்பு நண்பி, அன்புடன் செல்லமாய் பூஸார் என அழைக்கப்படுபவரும்,  புலாலியூர்  பூசானந்தா,  ஆஷாபோஷ்லே அதிராகீரைவடை,  கத்தரிகாய் தொக்கு புகழ்  மாஸ்டர் செப் அதிரா  என இன்னும் பல பட்டப்பெயர் சூட்டிக்கொண்டும்,  பல  வருடமாக தேம்ஸ் ல் பாய்கிறேன், குதிக்கிறேன் என அடிக்கடி சொல்லி பயமுறுத்தி, பயப்படுத்தி (எங்களை) வெருட்டிக்கொண்டு இருப்பவரும், முருகனுக்கு, வள்ளிக்கு, வைரவருக்கு என கடவுளாரையும் விட்டுவைக்காமல் வைர அட்டிகை, வைரமாலை, பச்சை கல் மோதிரம் தாறேன் என நேர்த்தி வைத்து இன்னும் அதை அவங்களுக்கு கொடுக்காமல் ஏமாற்றி கனடா, நியூயோர்க் என ஓடி ஒளிந்துகொண்டு  அட்டகாசம் செய்யும் அழகான (இன்றுவரை ஸ்வீட் ஸிக்ஸ்டீன் என சொல்பவர்) அதிரா வுக்கு இன்று பிறந்தநாள்.       .
       🎈🎉அன்பு அதிராவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் .🎂 🎉  

என்றும் மகிழ்ச்சியுடனும், நல்லாரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகின்றோம்
   



  
இந்த குட்டிபாப்பாவை தைத்து முடித்ததும் எனக்கு அதிரா அடிக்கடி சொல்லும் பேபி அதிராதான் ஞாபகம் வந்தா. இது நான் முதலே தைத்தது. 2நாளில் தைத்து முடித்து விட்டேன்.

இந்த மாதிரியான காட் card செய்வது இதுதான் முதல் தடவை. பழைய பி.நாள் card ல் வந்த டெடியை வெட்டி ஓட்டினேன். நன்றி அஞ்சு. (முன்னோடி அஞ்சுதான்.)

*******************************************************
 நானும் இப்படித்தான் செய்வேன் அதிரா மியாவ்....

*******************************************************

11/01/2018

வந்தாச்சு...வரவைச்சிட்டாங்களே...





ஹாய்..அன்பு  நட்பூக்களே.. எல்லாரும் நலம்தானே..
நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை  மீண்டும் சந்திக்கின்றேன்.
எல்லாருக்கும் 2018 ம் ஆண்டு புது வருட வாழ்த்துக்கள்.
வரப்போகும் பொங்கல் (கள்) வாழ்த்துக்களையும் முன்கூட்டியே சொல்லிக்கிறேன்..

நீண்ட நாட்கள் பதிவுகள் ஏதும் எழுதாமல் எழுதுவதால் என்ன எழுதுவது என்றே தெரியவில்லை.

முதலில் என் நன்றிகளை  அன்பான நண்பிகள் அதிரா, அஞ்சுவுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். உண்மையில் நன்றி எனும் வெறும் வார்த்தையால் சொல்லிவிடமுடியாது  இவ்விருவருக்கும்...

""உறவுகளைத்தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு அளிக்கப்படவில்லை. அவர்கள் நீங்கள் பிறக்கும்போதே இறைவனால் தீர்மானிக்கப்பட்டவர்கள். ஆனால் இறைவன் உங்களுக்கு மிக முக்கியமான சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறான். நண்பர்களை அவன் உங்களுக்காகத் தேர்ந்தெடுப்பதில்லை. அந்த உரிமையை உங்களுக்கு விட்டுக்கொடுத்திருக்கான். அந்த உரிமையைப் புத்திசாலித்தனமாப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நல்ல நண்பர்கள் நல்ல பாதைகளில் நம்மை பயணிக்க வைத்து நம் வாழ்க்கையில் நன்மைகளை ஏற்படுத்துவாங்க. நல்ல காலங்களில் மகிழ்ச்சிக்கும், கஷ்டகாலங்களில் உதவிக்கும், ஆறுதலுக்கும் அவர்கள் காரணமாக இருப்பார்கள்....."" (என்.கணேசன்)

உண்மையில் இந்த வரிகள் அதிரா, அஞ்சுவுக்கு நிச்சயமாக பொருந்தும். இப்படித்தான் இவ்விருவரும் இருந்திருக்கிறாங்க. இவ்விருவருக்கும் எவ்வித குறைகளும் இல்லாமல் ,  எல்லாவித செல்வங்களும் பெற்று,  சந்தோஷமாக குடும்பத்தினருடன் நலமோடு இருக்க  இறைவனை வேண்டுகிறேன்.
                               🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பார்கள் அதுபோல அதிராவின் மிரட்டல், உருட்டல்களுக்கு பயந்து வந்திருக்கேன்.  அஞ்சு இப்படி மிரட்டவில்லையெனினும், அன்பாக சொன்னா. இனியும் தாமதித்தால் அவரும் எங்கே கையில் உருட்டு கட்டையை எடுத்துடுவாவோ என்னவோ என யோசித்து வந்துவிட்டேன். ஏனெனில் யாருக்கு செக்ரெட்டரியா  இருக்கா என உலகறிந்த விடயம்.😃
அவர்கள் இருவருடன் சேர்ந்து, தான் ப்ளாக் ல் எழுத ஆரம்பிச்சதும், இளமதியும் மிரட்டத்தொடங்கிட்டாங்க.  இனியும் தாமதித்தால் சரியாகாது என களத்தில் குதித்தாச்சு.
                     இது நான் தைச்சது....cross stich ல் ஒருவகை. மணிகள் வைத்து தைப்பது
                                                   
என் பதிவுகளை வாசித்தும்,கருத்திட்டும் ஆதரவு தரவேண்டுகிறேன். 🙏   முயற்சி செய்து இங்கு வரும் நண்பர்களின் பக்கமும் சென்று கருத்திட நினைக்கிறேன்.

 நான் செய்த பூந்தி லட்டு.. சாப்பிட்டுவிட்டுச் செ(சொ)ல்லுங்க....


 
Copyright பிரியசகி