RSS

08/08/2013

மாற்றம் ஒன்றே மாறாதது.

மாற்றம், மாற்றம்
கொஞ்ச நாட்கள் பதிவு போடாமல் இருந்த நாட்களில் எங்களின்  வீட்டில் சில,பல மாற்றங்கள் செய்திருந்தோம்.( இன்னும்  சிலது முடியவில்லை.)
நாங்கள் வீடுகட்டி குடி வந்து 7 வருடங்கள் ஆகிவிட்டது.
வீட்டை அழகாகவும் , சுத்தமாகவும் பராமரிப்பது என்பது மிக  முக்கியம் . இங்கு அனேகமா(னோர்)க வீட்டிற்கு  குடிவந்து 5,6 வருடங்கள் சென்றுவிட்டால் திருத்தங்கள் செய்வார்கள்.
 (மீள் அழகாக்கல் ,redecorate மொழி பெயர்ப்பு  சரியா தெரியவில்லை. மன்னிக்க  ) 
அதாவது பெயிண்ட் அடிப்பது ,பேப்பர்(wallpaper) ஓட்டுவது,  தளபாடங்கள் மாற்றுவது, என ஏதாவது அப்போதைய ட்ரென்ட் க்கு ஏற்ப மாற்றங்கள் (செய்யவேண்டுமென்றால் ) கூடுதலானவர்கள் செய்வார்கள்.
நாங்கள் வீட்டின் வெளிச்சுவருக்கு பெயிண்ட் அடித்தோம் , வீட்டின் வரவேற்பறையில் Wallpaper ஒட்டி, furniture மாற்றினோம்.
                     வரவேற்பறை (LivingRoom) .அன்று       
                                      மாற்றங்கள்      
                 மேலே பலகை அடித்து ,லைட்ஸ்(கலர் லைட்ஸ் LED) போட்டிருக்கோம்
                1வது படத்தில் இருப்பது "குளிர்காலத்து நண்பன் ".அதாங்க chimney.
 வின்டரில் விறகு போட்டு எரிப்பது. வீடு நல்ல ஹீட்(heat)ஆக இருக்கும். எங்கள்
 வீட்டில் ஹீட்டர் , gas ல்தான்  இயங்குகிறது .இதனை பாவிப்பதின்மூலம் பணம் 
 மிச்சப்படுத்த முடிகிறது. காஸ் விலை அதிகம். கூடுதலாக அநேகர் இதனையே
 வீடுகட்டும்போது சேர்த்துக்கட்டுகிறார்கள்.எங்க வீட்டு ப்ளானில் இது இல்லை.
 கடைசி   நிமிடத்தில் இதனை சேர்த்தோம். முதலில் கணவர் வேண்டாம். 
 செலவு அதிகம் என்றார். இப்ப இதன் அருமை நன்றாகத் தெரிகிறது. கடைசி 
 நிமிடத்தில் இதனை சேர்க்கச்சொன்னது ஒரு Very Importent Person.
                                        ***********************
                           வெளிச்சுவருக்கு வெள்ளை அடித்தல்
                                        *************************
                           தற்போது எங்கள் வீட்டு வரவேற்பறை 

                                                     cappuccino colour.
 குறிப்பு: sofa மட்டும் மாற்றம்செய்யவில்லை. அவை கூடிய விலை கொடுத்து 
 வாங்கப்பட்டவை, அத்துடன் அவை genuine leather sofa. ஒரு பக்கம் திரைச்சீலை இன்னும்   மாற்றவில்லை.பொருத்தமானது தேடுகிறோம்.
 என் கணவரின் நண்பர் வீடு கட்டும் கம்பனியில் வேலை செய்வதால் உள்வீட்டு வேலைகளை என் கணவரும் ,அவரும் செய்து முடித்தார்கள். இங்கு அநேகமானோர் நண்பர்கள் ,உறவுகள் உதவியுடன் வீட்டின் உள்வேலைகள்(wallpaper ஓட்டுவது ,paintingஅடிப்பது furnitureமாற்றுவது ) செய்து முடிப்பார்கள். பெரிய வேலைகள் என்றால் மட்டுமே பணம் கொடுத்து செய்வார்கள். பணம் உள்ளவர்கள்,உதவி இல்லாதவர்கள் பணம் கொடுத்து செய்விப்பார்கள். 
                             ******************************
 வீட்டுத்தோட்டம்:_ 
                                           அறுவடைக்கு முன் புதினா    
                                                              பின் 


 
bouganvilla
Dahlia

 
 மிளகாய் 

           
அந்த வி.ஐ.பி வேறு யாருமில்லை.நான்தாங்க. ஹி .ஹி
*****************************
அமரர் கவிஞர் வாலி எழுதிய பாடல் வரிகளில் பிடித்தபாடலில் ஒன்று .:--
 
**********************************

02/08/2013

நடுவுல கொஞ்சம் பதிவைக் காணோம்.

 உங்க பக்கத்தில புதுப்பதிவைக்காணேலை, நேரமில்லையோ??
தோட்டத்தில புதுசா பயிர் நடவில்லையோ? ஏன் இன்னும் தூசு தட்டேலை , வெள்ளை அடிக்கேலை, கெதியா அடியுங்கோ!!? என்று 
இப்படி கேட்டவர்களுக்கும், ஊக்குவித்த(கர்)வர்களுக்கும் நன்றி,நன்றி . 
  ***************************** 
26.7.13  அன்று என் வலைப்பக்கம் மீண்டும் வலைச்சரத்தில் 
அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப்படுத்திய பதிவர் அம்பாள்அடியாள்.  அவருக்கு என் மனமார்ந்த நன்றியினை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
                                              
நான் தமிழெழுத்தில் செய்து பார்க்கவேண்டுமென்ற ஆர்வத்தில்  ரோஜா பூ  ,இலை 
உட்பட செய்த கார்ட். எடுத்துக்கொண்ட  நேரம்! 30 நிமிடம்.இப்படி செய்தது 
முதல்முறை. இன்னும் டெகரேட் செய்திருக்கவேணும். பதிவில் போடுவதற்காக,
உடனேயே  படம் எடுத்து போட்டுவிட்டேன்.
         ******************************************************************** 
   ஒன்றா.. இரண்டா.. பிரச்சனை எல்லாம் சொல்லவே
   (முடியுமா) ஓர் பதிவு போதுமா ?
 எல்லோருக்கும் வரும் பிரச்சனைகள்தான்  எனக்கும். ஆனால் நீண்ட நாட்களாகிவிட்டது. இதிலிருந்து நான் கற்றபாடம் எங்களுக்கு என்று  ஒரு ப்ளாக்  ஆரம்பித்தால் அதில தீயா வேலை செய்யனும்.....?  
சரி ஒரு பதிவு  நேரம் ஒதுக்கி எழுதுவோம் என நினைத்தால்...... 
நினைத்ததெல்லாம் நடக்குதா . இல்லையே. அதே தான் எனக்கும். 
                     <><><><><><><><><><>
 மிக முக்கியமான நபருக்கு வைரஸ் காய்ச்சல். எல்லா கடவுளிடமும் நேர்த்திதான். உசிரு இருக்க வேணுமே என்று. பின்பு  எல்லா உறுப்புகளும் இயங்கவும் வேண்டும் . ஆளைப்  பார்த்து ,செக் செய்து , ஆன்டிபயோடிக் மருந்து கொடுத்து, ஆளை உருப்படியா எடுக்க, என் வீட்டுல இருக்கிற டாக்டருக்கு (அய்யய்யோ அவரு அந்த நபருக்கு மாத்திரம்தான் டாக்டர் ) நேரமில்லை.  அந்த விஐபி  வேறு யாருமில்லை என் லப்டொப்தான். 
                                                                
                                               pic: gg

இது இல்லாட்டில் கையும் ஆடாது, காலும் ஓடாது  என்று  நல்லாவே என் நண்பிக்கு தெரியும். அவர்  தான் தன்னுடைய  லேப்டாப் ஐ  தந்திருந்தா. இந்த இடத்தில அவருக்கு நன்றி சொல்லவேணும். இன்னொருவருக்கும் கூட நன்றி. அது வேறு யாருமில்லை. என்னவர் தான்.  செய்த உதவியை மறக்க கூடாது "என்று அதிராட அம்மம்மா சொன்னவாவாம்,:)  அதிராவுக்கு. அதை அதிரா தனது ப்ளாக்கில் எழுதியிருக்கிறா.  இதை போல தனபாலன் சாரும் அவரோட பக்கத்தில வள்ளுவர் தாத்தா சொன்னதை எழுதியிருக்கிறார். தாத்தா, அம்மம்மா சொல்லை நானும் கேட்கிறன்.) 
என் மகனைப்பற்றி இதில் சொல்லவேண்டும்.(இங்கு வீட்டில்) அவருக்கு  நான் என்ன கொடுத்தாலும், (உணவு உட்பட) எது செய்தாலும் சிறுவயதிலிருந்தே உடனே  நன்றி சொல்லி விடுவார். நானோ ,கணவரோ சொல்ல மறந்தாலும் நினைவு படுத்துவார். சொல்லுமட்டும் விடமாட்டார். சொல்லவில்லையென அழுதும் இருக்கிறார். எங்களுக்குள் சொல்லத் தேவை யில்லை என்றால் விடமாட்டார். நன்றி சொல்வது நல்ல பழக்கம் தானே என்பார் . அவர்  மட்டுமில்லை. கணவரோ, நானோ ஒருவருக்கு ஒருவர் சொல்லிக்கொள்ள வேண்டும். நல்ல பழக்கவழக்கங்களை குழந்தைகளிடமிருந்தும் கற்றுக்கொள்ளலாம்  .
    பின்பு  வீட்டில் சில திருத்தங்கள், மாற்றங்கள் செய்தோம். இன்னும் செய்ய வேண்டியிருக்கு சில வேலைகள். மகனின் அறையில் வால்பேப்பர்(wallpaper) ஓட்டுவது முதற்கொண்டு , mobil changes என இன்னும் வேலைகள் இருக்கு. அவரின் அறையில் இன்னமும் மாற்றங்கள் செய்ய வில்லை.  பழையன கழித்தலும், புதியன புகுதலும். இதுவும் கடந்து போகும்.
இப்படி சிலபல காரணங்கள்.  நடுவுல கொஞ்சம் பதிவைக் காணோம் . இப்ப லப்டொப்பையும் ஏதோ  தில்லுமுல்லு செய்து, திருத்தி தந்திருக்கிறார் . இனியும் எழுதாமல் இருக்கவேண்டாமே என்று 
இப்படியாக??? ஒரு கோலத்தை  போட்டு விட்டிருக்கிறேன். 
            (அதுக்காக கோலத்தைக் காணேல்லை எனச் சொல்லக்கூடாது 
இது ஆசியா என்னை வலைச்சரத்தில்  அறிமுகப்படுத்தியபோது வேறு வடிவில் 
எழுதிய பதிவு. சில தடைகளால் பதிவிடமுடியவில்லை. ஆனாலும் பதியாமல் 
விட்டு விட மனமில்லை.அதனால் ஒரு சில திருத்தங்களுடன்.   
                          =^=^=^=^=^=^=^=^=^=^=^=^=
பதிவை வாசித்த பொறுமையின் சிகரங்களுக்கு (நன்றி)                 
                     ன் வீட்டு தோட்டத்து ரோஜாக்கள்  
 
                                             டாலியா
 பூக்கள் பூத்துமுடிந்து,இப்ப திரும்ப பூக்கத்தொடங்கியிருக்கு. 
 இங்கு (ஜேர்மனி )ஒருமாதமாக (இடையிடையே மழையுடன்) கடும் வெயில் 
 சுட்டெரிக்கிறது. பாடசாலை விடுமுறை விட்டாசு .இனி செப்டெம்பரில்தான் 
 புதிய வகுப்புகள் ஆரம்பம்.
                         ********************************************** 

எனக்குப் பிடித்த பாடல்:_    
      இப்பாடல் இடம்பெற்ற  திரைப்படம்  தில்லுமுல்லு  இப்படத்தை மீண்டும் 
     எடுத்திருக்கிறார்கள். ரீமேக் செய்த படத்தில் இப்பாடலைப் பாடியிருப்பவர் 
     பாடகர் கார்த்திக் .
                                   என்ன இருந்தாலும் ஓல்ட் ஈஸ்ட் கோல்ட்
     ஆனாலும் இப்ப இருக்கும் பாடகர்களில் கார்த்திக் பாடிய பாடல்கள் எல்லாம் 
     எனக்கு பிடிக்கும் . அந்த வகையில் இதுவும் பிடித்திருக்கிறது.
     காட்சியும், கானமும் அன்று பெஸ்ட் . இன்று கானம் மட்டுமே பெஸ்ட். 
       (இது என் கருத்து )
                                 அன்று

                                   இன்று
                          <><><><><><><><><><>
   
 
                                
   
                               
 
                            
 
Copyright பிரியசகி