RSS

08/08/2013

மாற்றம் ஒன்றே மாறாதது.

மாற்றம், மாற்றம்
கொஞ்ச நாட்கள் பதிவு போடாமல் இருந்த நாட்களில் எங்களின்  வீட்டில் சில,பல மாற்றங்கள் செய்திருந்தோம்.( இன்னும்  சிலது முடியவில்லை.)
நாங்கள் வீடுகட்டி குடி வந்து 7 வருடங்கள் ஆகிவிட்டது.
வீட்டை அழகாகவும் , சுத்தமாகவும் பராமரிப்பது என்பது மிக  முக்கியம் . இங்கு அனேகமா(னோர்)க வீட்டிற்கு  குடிவந்து 5,6 வருடங்கள் சென்றுவிட்டால் திருத்தங்கள் செய்வார்கள்.
 (மீள் அழகாக்கல் ,redecorate மொழி பெயர்ப்பு  சரியா தெரியவில்லை. மன்னிக்க  ) 
அதாவது பெயிண்ட் அடிப்பது ,பேப்பர்(wallpaper) ஓட்டுவது,  தளபாடங்கள் மாற்றுவது, என ஏதாவது அப்போதைய ட்ரென்ட் க்கு ஏற்ப மாற்றங்கள் (செய்யவேண்டுமென்றால் ) கூடுதலானவர்கள் செய்வார்கள்.
நாங்கள் வீட்டின் வெளிச்சுவருக்கு பெயிண்ட் அடித்தோம் , வீட்டின் வரவேற்பறையில் Wallpaper ஒட்டி, furniture மாற்றினோம்.
                     வரவேற்பறை (LivingRoom) .அன்று       
                                      மாற்றங்கள்      
                 மேலே பலகை அடித்து ,லைட்ஸ்(கலர் லைட்ஸ் LED) போட்டிருக்கோம்
                1வது படத்தில் இருப்பது "குளிர்காலத்து நண்பன் ".அதாங்க chimney.
 வின்டரில் விறகு போட்டு எரிப்பது. வீடு நல்ல ஹீட்(heat)ஆக இருக்கும். எங்கள்
 வீட்டில் ஹீட்டர் , gas ல்தான்  இயங்குகிறது .இதனை பாவிப்பதின்மூலம் பணம் 
 மிச்சப்படுத்த முடிகிறது. காஸ் விலை அதிகம். கூடுதலாக அநேகர் இதனையே
 வீடுகட்டும்போது சேர்த்துக்கட்டுகிறார்கள்.எங்க வீட்டு ப்ளானில் இது இல்லை.
 கடைசி   நிமிடத்தில் இதனை சேர்த்தோம். முதலில் கணவர் வேண்டாம். 
 செலவு அதிகம் என்றார். இப்ப இதன் அருமை நன்றாகத் தெரிகிறது. கடைசி 
 நிமிடத்தில் இதனை சேர்க்கச்சொன்னது ஒரு Very Importent Person.
                                        ***********************
                           வெளிச்சுவருக்கு வெள்ளை அடித்தல்
                                        *************************
                           தற்போது எங்கள் வீட்டு வரவேற்பறை 

                                                     cappuccino colour.
 குறிப்பு: sofa மட்டும் மாற்றம்செய்யவில்லை. அவை கூடிய விலை கொடுத்து 
 வாங்கப்பட்டவை, அத்துடன் அவை genuine leather sofa. ஒரு பக்கம் திரைச்சீலை இன்னும்   மாற்றவில்லை.பொருத்தமானது தேடுகிறோம்.
 என் கணவரின் நண்பர் வீடு கட்டும் கம்பனியில் வேலை செய்வதால் உள்வீட்டு வேலைகளை என் கணவரும் ,அவரும் செய்து முடித்தார்கள். இங்கு அநேகமானோர் நண்பர்கள் ,உறவுகள் உதவியுடன் வீட்டின் உள்வேலைகள்(wallpaper ஓட்டுவது ,paintingஅடிப்பது furnitureமாற்றுவது ) செய்து முடிப்பார்கள். பெரிய வேலைகள் என்றால் மட்டுமே பணம் கொடுத்து செய்வார்கள். பணம் உள்ளவர்கள்,உதவி இல்லாதவர்கள் பணம் கொடுத்து செய்விப்பார்கள். 
                             ******************************
 வீட்டுத்தோட்டம்:_ 
                                           அறுவடைக்கு முன் புதினா    
                                                              பின் 


 
bouganvilla
Dahlia

 
 மிளகாய் 

           
அந்த வி.ஐ.பி வேறு யாருமில்லை.நான்தாங்க. ஹி .ஹி
*****************************
அமரர் கவிஞர் வாலி எழுதிய பாடல் வரிகளில் பிடித்தபாடலில் ஒன்று .:--
 
**********************************

28 comments:

 1. அன்புள்ள அம்முலு,

  தாங்கள் வீட்டினைப்புதிப்பித்துள்ளது மிகவும் அழகாக உள்ளது.

  பாராட்டுக்கள்.

  >>>>>

  ReplyDelete
 2. //அந்த வி.ஐ.பி வேறு யாருமில்லை.நான்தாங்க. ஹி .ஹி//

  நான் படித்துவரும் போதே நினைத்தேன். அந்த VIP நம் அம்முலுவைத்தவிர வேறு யாராக இருக்க முடியும் என்று.

  சபாஷ் !

  >>>>>

  ReplyDelete
 3. வரவேற்பு அறையும், தோட்டமும், செடிகளும் ரொம்ப அழகா இருக்கு அம்முலு.

  மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

  ooooo அன்புடன் கோபு அண்ணா ooooo

  ReplyDelete
  Replies
  1. வருகை தந்து,அனைதையும் ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றிகள் அண்ணா.

   Delete
 4. அந்த வி.ஐ.பி வேறு யாருமில்லை.நான்தாங்க.

  வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள்.

   Delete
 5. அடடா... மாற்றம் மாற்றம் என்றது இதுதானா... :)

  அழகியல் மாற்றம். அருமை. உண்மையில் உங்கள் வீடு பளிச் என்றிருக்கின்றது அம்மு! வாழ்த்துக்கள்!

  மிகமிக ரசனையுடன் பார்த்துப் பார்த்து அழகியல் வேலைப்பாடுகள் செய்துள்ளீர்கள். ஆங்காங்கே காணப்படும் கொடி டிசைன் மனதையும் கண்களையும் கவருகின்றது.

  தோட்டத்தில் மிளகாய், புதினா டேலியாப்பூக்கள் அத்தனையும் சூப்பர்!

  பாடல் தெரிவும் சூப்பர்! ரசித்தேன்!

  வி.ஐ.பிக்கும் பாராட்டுக்கள்! மினக்கெட்டு இவ்வளவு கஷ்டப்பட்டு வீட்டை அழகு படுத்திய உங்கள் துணைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்தினைச் சொல்லிவிடுங்கள் அம்மு!

  ReplyDelete
  Replies
  1. ஆகா வந்துட்டாங்க இளமதீஈஈஈஈ.வாங்க. வந்து ரசித்து,ரசித்து எழுதியிருக் கிறீங்க. முதலில் நாங்க வாங்கியது வேறு tappeten.ஆனா அது ஹாலை சின்னதாககாட்டியதுமல்லாது இருட்டாக இருந்தது.பின்புதான் இதை மாற்றினோம்.முன்பைவிட இப்ப ஹால் வித்தியாசமாக இருக்கு.wohnzimmer möbil பூட்டியது கணவர், உதவி மகன்.கண்டிப்பாக சொல்கிறேன்.
   மிக்க மிக்க நன்றிகள் இளமதி ரசனையான பாராட்டுக்கு.

   Delete
 6. ஆஆஆஆஆஆஆ மீ வந்துட்டேன்ன்.

  அனைத்தும் அழகு. உண்மைதான், ஒரு மேசையை இடம் மாற்றி வைத்தாலே மனதுக்கு பெரிய மாற்றம் கிடைக்கும்... அதுபோல வீட்டின் அழகையும் அடிக்கடி மாற்றவேணும். நாங்கள் போன சமர் இதேபோல அனைத்தும் மாற்றினோம்.

  ReplyDelete
 7. வாங்கோ அதிரா. நீங்க வந்ததும் மகிழ்ச்சியே. வந்து கருத்து பதிவு செய்த்மைக்கு மிக்க் நன்றி
  அதிரா.

  ReplyDelete
 8. அம்முலு, சூப்பராக இருக்கு உங்க வீடு! என்னவரிடமும் படங்களைக் காட்டினேன், ரொம்ப நல்லா இருக்கு என சொன்னார். :) பெயிண்ட் கலர், வால் பேப்பர், பர்னிச்சர் எல்லாம் அழகு! டிவி கீழே இருக்கும் அந்த ஸ்டாண்ட் போலதான் பெங்களூரில் எங்க அபார்ட்மெண்டிலும் இருக்கு. அங்கே பார்த்துப் பார்த்து வுட் வொர்க்ஸ் பண்ண வைத்தார். நாலு மாதம் இருந்துட்டு இங்க வந்துட்டோம்! வாடகை வீட்டில் இத்தனை ரீடெகரேட் செய்ய முடியாது, ஆனாலும் அப்பப்ப எதையாவது மாத்தி எங்கேயாவது போட்டு வைப்பார்! :))))

  டேலியா பூக்கள் இங்கே பார்த்த வகைக்கு வித்யாசமாக இருக்கு. ஜெர்மன் ஸ்பெஷல்!! ஜெர்மனியின் செந்தேன் மலரே..-பாட்டு நினைவுவருது! ;) தோட்டம், மலர்கள் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு. படங்களை கொஞ்சம் பெரிதாகப் போட்டீங்கன்னா ரசிப்பதற்கு இன்னும் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க மகி. பதில் தர தாமத்திற்கு மன்னிக்கவும். நீங்க பாராட்டி எழுதியமைக்கு
   மிக்க நன்றிகள்.இன்னும் செய்ய விருப்பம்.அடுத்தவருடம் என சொல்லியாச்சு.
   உண்மைதான் மகி வாடகை வீட்டில் செய்ததில்லை நாங்களும். சொந்தமென்றதால்
   பார்த்துபார்த்து செய்கிறோம்.டேலியா இன்னும் பூக்கின்றது. படங்களை பெரிதாக‌
   போடமுயற்சிக்கிறேன். வந்து கருத்திட்டமைக்கு ரெம்ப நன்றி.

   Delete
 9. நீங்க வி ஐ பி எண்டதும் நான் மனதில் ஒருகணம் இமாவைத்தான் நினைத்தேன்:), இப்படியான வேர்க்குகளுக்கு அவதானே றீச்சர்..

  மிளகாய் சூப்பராக வந்திருக்கு. நான் வெங்காயம் நட்டுவிட்டுப் போனேன், இப்போ வந்து பிடுங்கினேன், ஓரளவு நன்றாகவே விளைஞ்சிருக்கு:).

  ReplyDelete
  Replies
  1. நாங்கள் காணி பார்க்கும்போது பக்கத்து வீடுகளில் ஊரில் புகைபோக்கி இருக்குமல்லோ அதிரா,அதுபோல் இங்கும் வீடுகளுக்கு மேல் இருந்ததைப்பார்த்துவிட்டு கேட்டேன். பின் மனதில் வைத்திருந்து கண்டிப்பா சொன்னேன்.முதலில் மறுத்து,பின் சம்மதித்தது, இப்ப பிரயோசனப்படுது.
   மிளகாய் வந்துதான் பறித்து சமைத்தேன்.பதில் தாமதத்திற்குமன்னிக்க.நன்றி அதிரா.

   Delete
 10. வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க சீராளன்.உங்க வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

   Delete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. [im]http://3.bp.blogspot.com/-1VwqcmUrfWY/Uho5_K0CAiI/AAAAAAAAAvI/LZ5mKOSNs5U/s1600/HBday1.jpg[im]

   [co="red"]இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மு![/co]

   [co="DeepPink"]நிறைந்த நற்சுகமுடன் நீண்ட ஆயுளும் சகல நலன்களும் கிடைக்கப் பெற்று நீடூழி வாழ உளமார வாழ்த்துகிறேன்!

   வாழ்க வளமுடன்![/co]

   Delete
  2. உங்க‌ வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள் இளமதி.

   Delete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. [im]http://2.bp.blogspot.com/-OLRNP0w0RiI/UhtWDSpD_7I/AAAAAAAAFhg/iDiT8YR8e6M/s320/20130823_085418+-+Copy.jpg[/im]

  ReplyDelete
  Replies
  1. அழகான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள் அதிரா.

   Delete
 14. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்முலு!

  ReplyDelete
  Replies
  1. வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தமைக்கு ரெம்பநன்றிகள் மகி.

   Delete
 15. என்னெனவோ நடக்குது. ;) உங்கட இடுகை எதுவும் எனக்கு டாஷ்போட்ல வரேல்ல அம்முலு. ஒரு மாசம் இருந்திருக்கு. நான் இப்பதான் கண்டு இருக்கிறன்.

  வடிவா பளிச்சென்று இருக்கு வீடு. ஸ்டென்சிலிங் சுப்பர்ப். இன்னும் கொஞ்சம் க்ளோசப்பில் படங்கள் எடுத்திருக்கலாம். ஆனால்... அவை வேலை செய்யேக்க நடுவில போனால் என்ன ரியாக்க்ஷன் வரும் என்று தெரியும். ;))

  வாழ்த்துக்கள். @}->--

  ReplyDelete
  Replies
  1. இதுதான் பிரச்சனையா.சரி மன்னித்தேன். புகைப்படகருவி புதிது.இன்னும் பிடிபடவில்லை.விளக்கப்படுத்த, செயல்முறைப்படுத்த Mannனுக்கு நேரமில்லை. என் சுயபரிசோதனைதான்.கெதியில் சரிவரும்!!.வந்து கருத்திட்டதற்கு Danke,Danke.

   Delete
 16. பூக்களால் சிரிக்கும் தோட்டமும், அன்பாக அலங்கரித்த வீடும் கண்ணை கவர்கிறது. பளிச்சென்று வீட்டை வைத்து இருக்கிறீர்கள். ஒவ்வொரு பதிவையும் பார்க்க ஆவலாக உள்ளேன். பார்த்த பின் கருத்து இடுகிறேன்.உங்கள் தோட்டத்தை பார்க்கும் போது ஊரில் வீடும்,தோட்டமும் ஞாபகம் வருகிறது. நேசம் என்ற தலைப்பில் என் தோட்ட அனுபவத்தை எழுதி இருக்கிறேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. உங்க வருகையும்,பாராட்டுக்களும் ரெம்ப மகிழ்வைத்தருகிறது.ரெம்ப ரெம்ப நன்றிகள்.

   Delete

 
Copyright பிரியசகி