தலைவர் தேர்தல்: Chancellor Election.
*******************************
ஜேர்மனியில் வரும் 22ந்திகதி(22.9.13) அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யப்போகும் தலைவர் யார்? என்பதற்கான தேர்தல் நடைபெற இருக்கின்றது. இத்தலைவர் பதவிக்கு
*******************************
ஜேர்மனியில் வரும் 22ந்திகதி(22.9.13) அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யப்போகும் தலைவர் யார்? என்பதற்கான தேர்தல் நடைபெற இருக்கின்றது. இத்தலைவர் பதவிக்கு
ஜேர்மனியின் தற்போதைய Chancellor ம்,கிறிஸ்தவ ஜனநாயக்கட்சியின் தலைவியுமான (Christian Democratic Union. CDU) அங்கேலா மார்க்கல்Angela Merkel (Angie ) அம்மையாரும்,
எதிர்கட்சியான சமூக ஜனநாயக்கட்சியின் (Sozialdemokratische Partei Deutschlands SPD) வேட்பாளராக Peer Steinbrück பீர் ஸ்டைன்புறுக் ம் போட்டியிடுகிறார்கள்.
_____________________________________________________
அதற்கான பிரச்சாரவேலைகள் ஆரம்பித்துவிட்டன.
நகரங்கள், கிராமங்கள் தோறும் சென்று, தங்கள் கட்சியையும், தலைவர் பதவிக்காக, தங்கள் கட்சியின் வேட்பாளரையும் வெற்றி பெறச் செய்வதற்கான பிரச்சாரங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அங்கேலா மார்கலின் (CDU) கட்சியே நாங்க இருக்கும் இடத்தில் ஆட்சியில்
இருக்கிறது. அந்த கட்சி ஆதரவாளர் இங்கு அதிகம். தனது பிரச்சாரத்தினை நடாத்த கடந்த வெள்ளியன்று எங்கள் இடத்துக்கு அங்கேலா மார்க்கல் வந்திருந்தார். நீண்டகாலத்தின் பின் எங்கட ஊருக்கு வரும் தலைவர். நாங்களும் அப்பிரச்சாரக் கூட்டத்துக்கு போயிருந்தோம் . நகரங்கள், கிராமங்கள் தோறும் சென்று, தங்கள் கட்சியையும், தலைவர் பதவிக்காக, தங்கள் கட்சியின் வேட்பாளரையும் வெற்றி பெறச் செய்வதற்கான பிரச்சாரங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அமெரிக்க அதிபர் ஒபாமா , பிரான்ஸ் நாட்டு தலைவர் François Hollande பிரித்தானியாவின் தலைவர் டேவிட் கமரூன் இப்படி பல நாட்டு தலைவர்களது கைகளை, குலுக்கிய கைகள் என் கையையும் குலுக்கியது .
நான் அங்கேலா மார்க்கலைப்பார்க்கும் ஆவலில்தான் சென்றேன். கை குலுக்குவேன் எனஎதிர்பார்க்கவேயில்லை. அவர் மேடைக்குச் செல்லாது மக்கள் நின்ற பக்கமாக வந்து, எல்லாருக்கு கைகொடுத்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். என் கையையும் பிடித்துக் குலுக்கினார்.
அங்கு நின்றவர்கள் படம் எடுக்க கேட்டதற்கு,நேரம் போதாது, மன்னிக்கவும் என்று சொல்ல.பாதுகாப்பு அதிகாரிகள் அவரை விரைவாக மேடைக்கு அழைத்து சென்று விட்டனர்.
கணவர், மகன் பின்புறமாக நின்றனர்.அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எனக்கு அவரை அறிந்த காலத்திலிருந்தே பிடிக்கும். அவர் இது 3ம் முறை தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.2முறையும் நான் அவருக்கே வாக்களித்திருந்தேன். இம்முறையும் அவருக்கே என் வாக்கு. ஐரோப்பாவின் "STRONG WOMAN " என வர்ணிக்கப்படுபவர் .
எங்க இடத்தில் நடந்த பிரச்சாரக்கூட்டம்
2 கிழமைக்கு முன்னர்தான் விடுமுறைக்கு போலந்துநாட்டுக்கு Poland போய்விட்டு வரும் வழியில் பேர்லின்(BERLIN) சென்று, நான்கு நாட்கள் தங்கி, சுற்றிப்பார்த்து விட்டு வந்தோம். எனது நீண்ட நாள் விருப்பம் தலைநகரை பார்க்கவேண்டும் என்பது . அப்போது பாராளுமன்றத்தை பார்க்கும் போது நான் என் கணவரிடம் சொன்னேன்."ஒருதரமேனும் அங்கேலாவை பார்க்கவேணும் என்று". ஆனா இவ்வளவு சீக்கிரம் அது நிறைவேறுமென கனவு கூட காணவில்லை. என்னைப் பொறுத்தவரை "இது மறக்கமுடியாத,மகிழ்ச்சிக்குரிய விடயமாக கருதுகிறேன் .
ஜேர்மனி பாராளுமன்றம்
******************************************************
******************************************************
இங்கு வாக்களிக்கும் இயந்திரம் இல்லை .வாக்குச்சீட்டில் புள்ளடி × தான் இடவேண்டும்.
tks:google
அந்தந்த இடத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு உடனேயே கணனியூடாக அனுப்பிவைப்பார்கள். மாலை 6 மணிக்கு ஓரளவு யார் வெற்றி பெறக்கூடும் என்பது தேர்தல் கணிப்பின் மூலம் (Wahl Prognose) தெரியவரும். தனித்து ஆட்சியா, கூட்டணியா, போன்ற எல்லா விபரங்களும் அன்றிரவே அறிவித்து விடுவார்கள். 22 ந்திகதி வரை பொறுத்திருக்க வேண்டும்.
***************************************
tks:google
அந்தந்த இடத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு உடனேயே கணனியூடாக அனுப்பிவைப்பார்கள். மாலை 6 மணிக்கு ஓரளவு யார் வெற்றி பெறக்கூடும் என்பது தேர்தல் கணிப்பின் மூலம் (Wahl Prognose) தெரியவரும். தனித்து ஆட்சியா, கூட்டணியா, போன்ற எல்லா விபரங்களும் அன்றிரவே அறிவித்து விடுவார்கள். 22 ந்திகதி வரை பொறுத்திருக்க வேண்டும்.
***************************************
//அமெரிக்க அதிபர் ஒபாமா , பிரான்ஸ் நாட்டு தலைவர் François Hollande பிரித்தானியாவின் தலைவர் டேவிட் கமரூன் இப்படி பல நாட்டு தலைவர்களது கைகளை, குலுக்கிய கைகள் என் கையையும் குலுக்கியது . //
ReplyDeleteமனமார்ந்த பாராட்டுக்கள் அம்முலு.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
யாருக்குமே கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு மட்டும் கிடைத்துள்ளதில், உங்களை விட எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.
அம்முலுவின் கைராசியே காரணம். மகிழ்ச்சி.
அன்புடன் கோபு
வாங்க கோபு அண்ணா.எனக்கே இன்னும் நம்பமுடியாமல் இருக்கு.உங்க பாராட்டுக்கும்,மகிழ்ச்சிக்கும் மிக்க நன்றி.
Deleteஅடடா.... குலுக்கிட்டீங்களா? குலுக்கிட்டீங்களா? அதிபராகப்போகும்(எனக்கும் அவவைத்தான் பிடிச்சிருக்கு:)) அங்கோலாவின் கையைக் குலுக்கிட்டீங்களோ?.. ஆவ்வ்வ்வ் வாழ்த்துக்கள்.. அவ வென்றாலும் அது அம்முலுவின் கை குலுக்கியதால்தான் எனச் சொல்லுவோம்ம்.. அவ தோற்றாலும்... அப்பூடியே சொல்லுவோம்ம்?:)))
ReplyDeleteஅடடாஆஆ இப்படி ஒன்று இருக்கா.இருக்காது.எப்படியும் அஞ்சலாதான் வெல்லுவா. நான் நல்லா ஒரு நேர்த்தி வைச்சிருக்கன் அதிரா.உங்களுக்கும் அவாவைப்பிடிக்கும் என்டிட்டீங்க.ஆனபடியால் அஞ்சலாதான் வருவா.தேரடி வைரவா அதிராட்ட சொல்லிட்டன் என்னைக் காப்பாத்தப்பா.
Deleteஅமெரிக்க அதிபர் ஒபாமா , பிரான்ஸ் நாட்டு தலைவர் François Hollande பிரித்தானியாவின் தலைவர் டேவிட் கமரூன் இப்படி பல நாட்டு தலைவர்களது கைகளை, குலுக்கிய கைகள் என் கையையும் குலுக்கியது . ///
ReplyDeleteபிறகென்ன இப்போ அம்முலு அதிரராவின் கையையும் குலுக்கிட்டா:)) ஏனெனில் மீதான் ஒபாமாவின் செகரட்டறி ஆயிட்டே:)).. [ஹையோ இதை நானே சொல்லவேண்டியதா இருக்கே:)]
நீங்க சொன்னது அஞ்சலாவுக்கே தெரியும். யோசிக்காதேங்கோ.//அம்முலு அதிரராவின் கையையும் குலுக்கிட்டா:))//உண்மைதான். நான் எழுதுவம் என்றுதான் இருந்தன்.இப்பூடி பப்ளிக்கில சொன்னாஆ நீங்க பிறகு ஷை ஆயிடுவீங்களெல்லோ அதுதான் சொல்லேல்லை.
Deleteஅதிரரா::பெயர் மாத்திட்டீங்களோஓஓ
அதிரா நீங்க வந்து இப்படி கலகலப்பா கருத்திட்டமைக்கும்,வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றிகள்.
Deleteஅட அப்புறமென்ன.. அம்முலு எங்கேஏஏஏயோ இருக்க வேண்டிய ஆள்...:)
ReplyDeleteஇனி இன்னும் நான் உங்களுக்கு மேலும் மரியாதையோடை கொஞ்சம் நல்லா இடைவெளி விட்டே நடக்கோணும்...;)
எந்தப் பெரீய ஆளாகிட்டீங்க இப்போ..:))
ம்.. மிக்க மகிழ்ச்சிதான் அம்மு! உண்மையில் இப்படி உலகப் பெருந்தலைவர்களைக் காண்பதே அருமை. அதிலும் உங்கள் கைபிடித்துக் குலுக்கி மகிழ்ச்சியைத் தெரிவித்தமை... மிகமிகச் சிறப்புத்தான்! அதிஷ்டகாரிதான்...;)
உங்கள் மகிழ்ச்சியை எம்முடனும் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் அம்மு!
இங்க இன்றைக்கு நல்ல வெயில் எல்லோ இளமதி நீங்க வைச்ச ஐஸ் உருகிட்டு.
Delete//இனி இன்னும் நான் உங்களுக்கு மேலும் மரியாதையோடை கொஞ்சம் நல்லா இடைவெளி விட்டே நடக்கோணும்...;)
எந்தப் பெரீய ஆளாகிட்டீங்க இப்போ..:))// இது உங்களுக்கே அதிகமா தெரியேலை. நான் இடைவெளியைச் சொன்னேன்.
எனக்கும் ஆச்சரியம்தான்.சரியா 2கிழமைக்கு முன் தான் சொன்னேன்.ஆனா எனக்கு எங்க இடத்துக்கு வரப்போவதும் தெரியாது.கணவர்தான் மனதில் இதைவைத்துச்சொன்னார் "நாளை அங்கேலா இங்க வாறா என்று.எனக்கு அப்பவே ஓரே சிந்தனை கைகொடுப்பாவா என்று.அங்கேயும் போய் நின்று ஓரே படபடப்புதான்.அதிர்ஷ்டமோ என்னமோ.ஆனா அதற்கு பின் மகன் சொன்னதுதான் எனக்கு ஓரே சிரிப்பு. "அம்மா இனி 2நாளைக்கு கைகழுவமாட்டா என்று.
என்னமா ஜோக்"கடி"க்கிறார்கள்.
வருகை தந்து கருத்திட்டமைக்கும்,வாழ்த்துக்கள் சொன்னமைக்கும் மிக்க நன்றிகள் இளமதி.
Delete:)) யப்பாடி என்னா சந்தோசம் அம்முலுவுக்கு :)) கை குலுக்கினது இங்கே ஆனந்தம் கரை புரண்டு ஓடுது :))
ReplyDeleteஎனக்கும் angela தான் விருப்பம் ..நோட் திஸ் பாயிண்ட் அதிஸ் ..என்னையும் அங்கே அனைவரும் angela என்றுதான் அழைப்பார்கள் :))பிக்காஸ் அவங்க pronounce பண்ணும்போது ஜி ..கெ என்றுதான் வரும் :))..
ஒரு குறை அம்முலு ஒரு படம் கைமட்டுமாவது எடுத்திருக்கணும் ..
நானும் மிக பெரிய சான்சை மிஸ் செய்தேன் ..2007 இல் .இளவரசர் சார்ல்ஸ் பார்க்கும்போது ..
எனிவே குளிக்கிய கைகளுக்கு வாழ்த்துக்கள்
ஹா..ஹா..ஹ...ஹா.. றீஈஈஈஈஈஈஈச்சர் ஓடி வாங்கோஓஓஓஓஓஓஒ அஞ்சு மிசுரேக் விட்டிட்டா.... //“குளிக்கிய கைகளுக்காம்ம்ம்ம்ம்////எங்கிட்டயேவா? :) நாங்க தமிழ்ல டி எடுத்த ஆட்களாக்கும்:) விடமாட்டமில்ல:)..
Deleteஆவ்வ்வ் கோடி புண்ணியம் அங்கிள் கிடைப்பார்ர்ர்ர்ர்ர் என்னைக் காட்டிக் கொடுத்திடாதைங்கோஓஓஓ:)).. அங்கேலாவாம்ம்ம்.. இங்கிலீஷிலயாம்ம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
[im]http://www.maniacworld.com/kitten-hiding-in-the-couch.jpg[/im]
என்ன இது எறிக்கிற வெயிலுக்கு ஒரு வெனிலா ஐஸ் குடிக்கலாம் என்று போய்விட்டு வந்தா அதிரா ஏன் இப்படி தலையை சோபாவிக்குள்ள புதைச்சுக்கொண்டு??? எழும்புங்கோ அதிரா நான் சொல்லிறதை கேளுங்கோ
Deleteஅது டொச்சில அங்கேலா. நான் டொச்சில எழுதிட்டன். அஞ்சலா இங்கிலீசில.சரியோ.
அஞ்சுவுக்கு வேணுமென்டா டீச்சர் வரட்டும்.
garrrrrrrrrrrrrrrrrrrrrrr:))அதைதானே நானும் சொன்னேன் எதோ //குலுக்கிய் //அவசரமா டைப்பினதில் மிஸ்டேக் ஆகிடுச்சி :)அதில எனாஆஆஆஆஆஆஅ சந்தோசம் பூசாருக்கு
Deleteஅஞ்சு அது "அங்க" நீங்க சொல்லிட்டீங்களெல்லோ. அதுதான் போல
Deleteவாங்க அஞ்சு. முதல்ல நன்றி.அதிராவுக்கு புரியவைத்ததற்கு.
Deleteஇதை சொல்லி முடியேல்லை இன்னும். பக்கத்துவீட்டுக்காரர் கூட வந்திருந்தார்.அவரே சொல்லி முடியேல்லை." நீ கை குலுக்கிட்டாய்.எனக்கு வாய்ப்பு கிடைக்கேல்லை என்று.அவர் ஜேர்மன்காரர். நான் ஆறுமணி கூட்டத்துக்குநாலு மணிக்கே போய்விட்டேன்.அவசரத்தில கமராவை எடுக்க மறந்திட்டன்.என்னவர்தான் கொண்டுவந்து படங்கள் எடுத்தார்.ஆனாலும் நான் இருந்த எக்ஸைட்மென்ட்டுக்கு படம் ஒழுங்கா எடுத்திருப்பேனோ தெரியாது.லோக்கல் டிவியில் காட்டினார்கள்.அதை ஒரு தமிழ் ஆள் பார்த்து சிட்டி முழுக்க அறிவிக்க,எனக்கு போனில கேட்டபடி. நீங்களும் அங்கேலாவுக்கு கை கொடுத்தீங்களாம்," என்று.
நீங்க வந்து வாழ்த்தி,கருத்திட்டமைக்கு ரெம்பரெம்ப நன்றி அஞ்சு.
//அஞ்சு மிசுரேக் விட்டிட்டா.....// ;)))
ReplyDeleteI have read ur post. Will came with the comments later Priya. No tamil today. ;(((
ஆவ்வ்வ்வ்வ்வ் ஆருக்கு கேட்காட்டிலும் , மீ கூப்பிட்டால் றீச்சருக்கு கேட்கும்.. அது எங்கட ராசி அப்பூடி:)).. ஏன் மற்ற இடமெல்லாம் புகையுதூஊஊஊஊஊஊ:)
Deleteஆவ்வ்வ் ..... ரீச்சர். சரீ சரீ நீங்க கூப்பிட்டும் வராமல் இருப்பாவோ. அதிராவா கொக்கா.
Deleteநன்றி ரீச்சர்.
;))))
Deleteஇன்ப அதிர்ச்சி அடைந்திருக்கீங்கன்னு சொல்லுங்க! நிஜமாலுமே இப்படிப்பட்ட பிரபலங்களை அருகில் பார்க்கையில் பரவசம்தான்! லோக்கல் டிவியிலும் வந்துட்டீங்களோ..சூப்பர்! அப்ப வி.ஐ.பி. அம்முலு-ந்னு சொல்லிக்கலாம் இனி! :) வாழ்த்துக்கள்! :)
ReplyDeleteஉங்கள் தலைவி வெற்றி பெறவும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் அம்முலு!
வாங்க மகி.இன்ப அதிர்ச்சியேதான்.சின்னதான சிட்டிதான் எங்களது.தலைவர் என்று வாறது குறைவு. நிறைய வருடங்களின் பின் வந்தவர் என்றபடியால் நிறைய சனங்கள்,சின்னதான திறந்தவெளி அரங்கு.சனத்தோடு படம் எடுக்கும் போது அதில் அகப்பட்டதுதான்.உங்க வாழ்த்துக்கள் பலிக்கட்டும். நன்றி.
Deleteவருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி மகி.
//குலுக்கிய கைகள் என் கையையும் குலுக்கியது// ஆஹா! மற்ற இரண்டு பேருக்கும் கிடைக்காத அதிஷ்டம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. மனசுக்குள்ள திருவிழாவாக இருந்திருக்குமே. ;)
ReplyDelete//அவருக்கே என் வாக்கு// ம்.. அப்ப அங்கேலாட பெரிய ரசிகை ப்ரியா. அவவுக்கே வெற்றி கிடைக்க என் வாழ்த்துக்கள்.
//அந்தந்த இடத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு உடனேயே கணனியூடாக அனுப்பிவைப்பார்கள்.// போன முறை இங்க நானும் போனனான் எலெக்க்ஷன் டியூட்டிக்கு. நாங்கள் எண்ணிப் போட்டு போன் பண்ணிச் சொன்னோம்.
எனக்கு பெரிய திருவிழாதான்.ஆனா இங்க உள்ளவங்க பெரிதா அலட்டிக்கேல்ல இமா.அஞ்சலா நான் நிற்குமிடம் வரத்தேவையில்லை.ஏனென்றால் மேடைக்கு போகும் பாதையிலிருந்து கொஞ்சம்தள்ளி நின்றேன். சின்ன இடம்,நிறைய சனங்கள்.அவர் நான் நின்ற இடம் வந்து அதில் நின்றவர்களுக்கும் கை கொடுத்தா.அதில் நானும் ஒருஆளா இருந்துவிட்டேன்.எனக்கு அவா எதிர்கட்சியில் ஆரம்பத்தில் இருக்கும்போதே பிடிக்கும்.வாக்குரிமை வந்ததும் இவர் முதல்முறை போட்டியிட்டா.என் வோட் அவருக்கு போட்டேன்.
Delete//நாங்கள் எண்ணிப் போட்டு போன் பண்ணிச் சொன்னோம்.// இடத்துக்கு இடம் வித்தியாசம்தான்.
மிக்க நன்றி இமா வருகைக்கும்,கருத்துக்கும்.
//அம்மா இனி 2நாளைக்கு கைகழுவமாட்டா// ;)))
ReplyDelete:)
Deleteநித்திரைக் கலக்கத்தில தட்டிப் போட்டுப் போறன். பிழை இருந்தால் தயவு செய்து... டீச்சரைக் கூப்பிடுங்கோ. ;))))))
ReplyDeleteஐரோப்பாவின் ஸ்ட்ரோங் வுமனின் கைகளைக் குலுக்கினீர்களா? வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ் வாழ்த்துக்கள்! கொடுத்து வைத்தவர் நீங்கள். இதைப் படிக்கும் எங்களுகே இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றால், உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்!!!
ReplyDeleteஇனிமேல் எந்த முக்கிய இடத்துக்குப் போனாலும், கணவரிடமோ, மகனிடமோ கமெராவை ஓன் செய்துவிட்டு, வைத்திருக்கச் சொல்லுங்கள்! இன்னொருமுறை இப்படி ஒரு சான்ஸ் கிடைத்தால் மிஸ்பண்ணவே கூடாது !!!
ஆகா ஓனர் வந்திருக்கிறார்.வாங்க ஜீவன்.மகிழ்சியான வாழ்த்துக்களுக்கு மிக்க மிக்க நன்றிகள்.
Delete//இனிமேல் எந்த முக்கிய இடத்துக்குப் போனாலும், கணவரிடமோ, மகனிடமோ கமெராவை ஓன் செய்துவிட்டு,வைத்திருக்கச் சொல்லுங்கள்!// முதல் நாளே சார்ஜ் எல்லாம் ஏத்தி ரெடியா இருந்தது.எனக்கு அவாவை சந்திப்பேனா, பார்ப்பேனா என்ற டென்ஷன்.அதனாலேயே முன்னமே இவயளை விட்டிட்டு போய்விட்டேன். கூட்டம் நடக்குமிடத்தில் 2மணி தொடக்கமே சனங்கள் வந்து நிற்கினமாம்.முன்னமே ஈமெயில் மூலம் முன்பதிவு செய்திருந்தா முன்னுக்கு
இருந்து போட்டோவும் எடுத்திருக்கலாம்.தெரியாமல் போயிட்டுது.
//இன்னொருமுறை இப்படி ஒரு சான்ஸ் கிடைத்தால் மிஸ்பண்ணவே கூடாது !!!// கண்டிப்பா ஜீவன். இனி மிஸ் பண்ணக்கூடாதுதான்.
அங்கேலா மார்க்கல்Angela Merkel (Angie ) /// இவரைப் பற்றி நிறையப் பேர் நல்லவிதமாக சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். வரும் தேர்தலிலும் இவர் வெற்றியடைய வாழ்த்துக்கள்!!!!
ReplyDeleteஇம்முறை போட்டி அதிகம்தான்.ஆனாலும் அவாதான் வெற்றிபெறவேண்டும் என்பது கூடுதலானவர்கள் எண்ணம். உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
Deleteஅமெரிக்க அதிபர் ஒபாமா , பிரான்ஸ் நாட்டு தலைவர் François Hollande பிரித்தானியாவின் தலைவர் டேவிட் கமரூன் இப்படி பல நாட்டு தலைவர்களது கைகளை, குலுக்கிய கைகள் என் கையையும் குலுக்கியது . ////
ReplyDeleteஹா ஹா நடுவில் நமது நாட்டையும் சேர்த்துக் கொண்டமைக்கு நன்றிகள்.
//ஹா ஹா நடுவில் நமது நாட்டையும் சேர்த்துக் கொண்டமைக்கு// உங்கள் நாட்டை சேர்க்காமல்விட்டால் ஜேர்மன்காரர்கள் அடிப்பார்கள்.உங்களுக்கு தெரியாதா ஜேர்மனியின் நட்புறவு நாடு பிரான்ஸ் என்பது.
Deleteஆனா இவ்வளவு சீக்கிரம் அது நிறைவேறுமென கனவு கூட காணவில்லை. என்னைப் பொறுத்தவரை "இது மறக்கமுடியாத,மகிழ்ச்சிக்குரிய விடயமாக கருதுகிறேன் ///
ReplyDeleteபின்ன இல்லையா? நிச்சயமாக இது ஒரு மறக்க முடியாத அனுபவம் தான். இனி நீங்கள் மறந்தாலும் நாங்கள் மறக்க மாட்டோம்!
//பின்ன இல்லையா? நிச்சயமாக இது ஒரு மறக்க முடியாத அனுபவம் தான். இனி நீங்கள் மறந்தாலும் நாங்கள் மறக்க மாட்டோம்!// மிக்க நன்றி ஜீவன்.இப்படி சொன்னதே எனக்குமகிழ்ச்சியாக இருக்கு.என்னோட மகிழ்ச்சியையும்
Deleteபகிரவேணுமென்பதே என் அவா.இப்பதிவைக்கூட தனியாக பதிந்து வைத்திருக்கிறேன்.உங்க வேலைகளுக்கிடையே இங்கு வந்து கருத்தளித்தமைக்கும், வாழ்த்தியதற்கும்
மிக்க நன்றிகள் ஜீவன்.
ReplyDeleteஆனா இவ்வளவு சீக்கிரம் அது நிறைவேறுமென கனவு கூட காணவில்லை.
ஆழ்மனத்தின் ஆசைகள்
கூட ஒரு தவம்தான்
கண்டிப்பாய் வரம் கிடைக்கும்....
வாழ்த்துக்கள்
வாங்க சீராளன். வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும்
ReplyDeleteரெம்ப நன்றி.
அடடா,நீங்க கைகுலுக்கிய செய்தியை இன்று தானே அறிந்தேன்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாங்க ஆசியா. வருகைக்கும் ,வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்.
Deleteமறக்கமுடியாத,மகிழ்ச்சிக்குரிய விடயங்களைப்
ReplyDeleteபகிர்ந்தமை சந்தோஷமளிக்கிறது..
வாங்க இராஜேஸ்வரியக்கா.உங்க வருகை மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கு. வருகை தந்து, அழகாக கருத்துரைத்தமைக்கு நன்றிகள்.
Deleteவிஜய தசமி நல்வாழ்த்துக்கள்
ReplyDelete