RSS

13/10/2013

ஆயுதபூஜை,விஜயதசமி நல்வாழ்த்துக்கள்


அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்
          ----------------------------------------------------------------------               
             இன்று வீட்டில் சரஸ்வதி பூஜைக்காக செய்த பிரசாதங்கள் 
                             
 ************************************************************
வழமையான பொங்கலுடன் அதிரா செய்த குஸ்குஸ்  பொங்கலையும் சேர்த்து செய்து விட்டேன் .
நல்ல  டேஸ்டாக இருந்தது. கொஞ்சம் குழைந்து விட்டது. நன்றி அதிரா.
               *********************************************

எனக்கு இப்பாடலை கேட்கும்போது பாடசாலை நாட்களில் பக்திப் படங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். சரஸ்வதி சபதம் படம் பார்க்கபோகும் போது எனக்கு நல்ல தடிமன்,காய்ச்சல்.ஒருமாதிரி அழுது பார்க்க போய் விட்டேன் . எனக்கு தடிமனால் கண்ணீர் வர.சிரிக்கவேண்டிய காட்சிக்கும் அழுதபடி பார்த்த ஓரே ஆள் என்று பஸ்ஸில் கிண்டலடித்தார்கள்.  இப்பாடலைக்கேட்கும்போது பாடசாலை ஞாபகம் வரும்.
              ****************************************************

 
                                         

 

18 comments:

  1. இனிய சரஸ்வதி பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள். வருகை தந்து வாழ்த்தியமைக்கு ரெம்ப நன்றி.

      Delete
  2. இனிய சரஸ்வதி பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் சகோதரரே. வருகை தந்து வாழ்த்தியமைக்கு ரெம்ப நன்றி.

      Delete
  3. அம்மு...:)

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய சரஸ்வதி பூஜை, விஜயதசமி நல் வாழ்த்துக்கள்!!!...

    பிரசாதங்கள் அசத்தல்!.. கூடவே குஸ்குஸ் பொங்கலுமோ...:)

    அதென்ன பிறவுண் சுண்டல்.. என்ன பெயர் அதற்கு..:)

    எல்லாம் சூப்பர்! நானும் கொஞ்சம் கொஞ்சம் கிள்ளிக் கொண்டேன்..;).

    அசத்திட்டீங்க... வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ இளமதி.உங்களுக்கும் என் இனிய நல்வாழ்த்துக்கள். ரெம்ப நன்றி இளமதி.அந்தச்சுண்டலைத்தெரியாதா.அதுதான் கெளபி. இங்கு கிடைத்தது வாங்கி செய்தேன்.அதுவும் metro வில விற்கிறார்கள். ஏசியன் கடைகளிலும் கிடைக்குமே. கொஞ்சமா கிள்ளிக் கொண்டதற்கும், வாழ்த்தியமை க்கும் நன்றிகள்.

      Delete
    2. ஓ இது சிவப்பு கெளபி போல. இங்கு அதிகம் வெள்ளையாகத்தான் இருக்கு. பிளாக் ஐட் பீன்ஸ் ...

      நான் நினைத்தேன் கிட்னி பீன்ஸ்ஸாக்கும் என. அதுவும் சுப்பர்.. உடம்புக்கும் மிக மிக நல்லது, அதிகம் ஃபைபர் இருக்கு அதில். ஆனா கொஞ்சம் பெரிதாக இருக்கும்.

      பாடல் அருமை... படம் தொட்டு தொட்டு பார்த்ததுண்டு.. தொடர்ச்சியாக இருந்து பார்த்து முடிக்கவில்லை :(.

      Delete
  4. ஆயுத பூஜை- சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள். வருகை தந்து வாழ்த்தியமைக்கு ரெம்ப நன்றிகள்.

      Delete
  5. அன்புள்ள அம்முலு, வணக்கம்மா.

    பிரஸாதங்கள் அனைத்தையும் கொஞ்சூண்டு டேஸ்ட் பார்த்தேன்.

    ருசியோ ருசியாக இருந்தன. நன்றி.

    ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை - விஜயதஸமி நல்வாழ்த்துக்கள்.

    அன்புடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. வாங்க அண்ணா. உங்களுக்கும் என் இனிய நல்வாழ்த்துக்கள்.ருசியா இருந்தனவா.மிக்க நன்றிகள்.

      Delete
  6. ஆஹா..ஹா... இனிய சரஸ்வது பூஜை வாழ்த்துக்கள். சூப்பரா கலக்கிட்டீங்க பூஜை வச்சு.. அது சரி அது என்னாது 4 வடை???? எனக்கு இப்போ உண்மை தெரிஞ்சாகோணும் சாமீஈஈஈஈஈ:)

    ReplyDelete
    Replies
    1. வாங்க அதிரா.நன்றி வாழ்த்துக்கு.//அது சரி அது என்னாது 4 வடை???? எனக்கு இப்போ உண்மை தெரிஞ்சாகோணும் சாமீஈஈஈஈஈ:)உண்மைதானே தெரியனும்.அது எங்கட வீட்டில‌4பேர்தான் அதுதான் 4 வடை.நான் சாமீஈஈஈஈஈ:)ச்சொன்னேன்.

      Delete
  7. நாங்கட :) வீட்டில இதே வடை:), இதே கொண்டக்கடலை சுண்டல், இதே அவல்:) இவை மூன்றும்தான் செய்தேன். நான் 8 நாளும் எட்டு விதமான படையல் செய்தேன். ஊரில் சொல்லுவினம், அந்த எட்டோடு இன்னும் ஒன்று சேர்த்து ஒன்பது வகை செய்து வைக்கோணும் கடசி நாளில் என... குவாட்டேஷில் இருந்தபோது, முன்பு அப்படி செய்வேன்.. நம்மவர்கள் இருந்தார்கள் கொடுப்பேன். இப்போ அப்படி செய்தால் மிஞ்சிவிடும்... பக்கத்து வீட்டு வெள்ளை அங்கிள் ஆன்ரிக்கு மட்டும் கொடுத்தோம்.

    ReplyDelete
    Replies
    1. நான் ஒவ்வொரு நாளும் இந்த முறை செய்யேல்லை.பத்தாம் நாள்தான் இவ்வளவும் செய்தேன்.நீங்கசொன்னது சரிதான்.இங்கு இதையே கொஞ்சமாதான் செய்தேன்.ஆனால் மிஞ்சாது. மகனுக்கு பிடிக்கும்.அவர் விரும்பி சாப்பிடுவார்.நானும் பக்கத்து வீட்டினருக்கும்(கொஞ்சம் உறைப்பு சாப்பிடுவார்கள்.) ஜேர்மன் அம்மாவிற்கும் கொடுத்தேன்.(பொங்கல் மட்டும் இவருக்கு)

      Delete
  8. அவ்வ்வ்வ் குஸ்குஸ் பொங்கல் செய்தீங்களோ? அது குழையாது இலகுவில்.. வறுத்துதானே செய்தீங்க? ஆனா குழைந்தால் இன்னும் டேஸ்ட்டாக இருக்கும் என நினைக்கிறேன். நான் பிஸ்கட் பெட்டியில் வரும் அச்சில் போட்டு எடுத்தேன், சூப்பர் கேக் துண்டுகள்போல விதம் விதமான டிஷைனில் வந்துது.

    ReplyDelete
    Replies
    1. வறுத்து செய்ததுதான் இது.எனக்கு ஏதோ அவியவில்லையோ என நினைத்து நான் பால் கொஞ்சம் அதிகமா விட்டிட்டன். ஆனா நல்ல டேஸ்டா இருந்திச்சு அதிரா.
      வருகை தந்து கருத்தளித்தமைக்கு ரெம்ப நன்றி அதிரா.

      Delete
  9. அட! இதை மிஸ் பண்ணி இருக்கிறன். ம். எனக்கு இதையெல்லாம் பார்க்க ஊரில ஸ்கூல்ல சரஸ்வதி பூசைக்கு நடக்கிற ஆரவாரங்கள் எல்லாம் நினைவு வருது. மிஸ் பண்ணுறன். பெரிய அண்டாவில தான் எல்லாம் செய்யுறது. இருக்கிற அத்தனை பிள்ளைகளுக்கும் கொடுக்க வேணும். பிறகு எல்லாம் குட்டி பாக்ல போட்டு, பெரிய பாக்ல போட்டு, ++++ சின்னவங்கள் வேட்டியோட வருவினம். :-) ஹாஃப் சாரி, பூ எல்லாம் பார்க்க வடிவா இருக்கும். ஸ்கூலே கோயில் போல ஆகி இருக்கும். திருவிழாக் காட்சிதான்.

    ReplyDelete

 
Copyright பிரியசகி