RSS

16/10/2013

குளிர்காலத்து நண்பன்

 வாழ்த்துக்கள்:
 இன்றகலைக்கவியரி இளமதியின் பிறந்த நாள்.
 இளமதி இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். நோய்நொடியின்றி,
 நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடனும் சந்தோஷமாக வாழ  வாழ்த்துகிறேன்.

                         
                                 Birthday from 123gifs.eu

 *******************************************************
இங்கு குளிர்காலம் தொடங்கி, இருட்டு சீக்கிரமாக வரத் தொடங்கிவிட்டது. மரங்களில் இலைகள் மஞ்சள் நிறமாகி உதிரத்தொடங்கிவிட்டன.
 பெட்டியில் வைத்திருந்த (புதிதாக வேறு வாங்கினது உட்பட) விண்டர் உடுப்புகள்(dresses) வெளியில் எடுத்தாகிவிட்டது. இது வழமையாக நடக்கும் நிகழ்வுதான். வெயிலைச் சமாளித்தாலும்,குளிரை சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம். ஸ்னோ பார்க்க அழகாயிருக்கும். ஆனால் ஆபத்துக்கள் இருக்கின்றன. குளிர்காலமாதலால் இங்கு இனி ஹீட்டர் போடவேண்டும்.
 ஹீட்டர்கள்  இங்கு காஸ்,எண்ணெய்மூலம் இயங்குபவை.
எங்கள் வீட்டில்இயங்கும் ஹீட்டர் காஸினால் இயங்குகின்றது.
வருடத்தில் இரு தடவை டாங்கில் காஸ் நிரப்பிவிடுவார்கள்.
                                             Gas Tank
ஆனால் காஸ்,எண்ணெயால் இயங்கும் ஹீட்டர்கள் அதிக செலவானது என நாங்கள் வீடுகட்டும் போது அறிந்தமையால், முன்னேற்பாடாக சிமினியைக் (Chimney) கட்டிவிட்டோம். அனேகமாக புதிதாக கட்டப்படும் வீடுகளில் இவை இப்போ கட்டுகிறார்கள். இதனால ஏற்படும் செலவு குறைவாக இருக்கிறது. அதற்கு வேண்டியவை விறகு மட்டுமே.குளிர் ஆரம்பித்தவுடன் இதை எரித்தால் வீட்டின் எல்லா இடமும் நல்ல ஹீட்டாக இருக்கும். காலையில் ஜன்னலையோ அல்லது கதவையோ 5நிமிடங்கள் நன்றாக திறந்து வைத்திருந்து பின் மூடினால் நல்லது . வருடத்தில் 2 தடவை வந்து க்ளீனிங்(cleaning) கொன்ரோல்(control) செய்வார்கள். எனக்கு விண்டரில்கூட தோசை,இட்லி மா பொங்கிவரும்.
    ******************************************
                     இதுதான் எங்கள் Garden Haus
இதில் வெயில்காலங்களில் விறகுகளை வாங்கி அடுக்கி விடுவோம். வெளியில் மூடியிருப்பது வெட்டப்படாத சின்ன மரங்கள்.
         
சிமினியினுள் வைக்கும் அளவுகளில் வெட்டிய விறகுகளை வாங்கி   அடுக்கியிருக்கிறோம்.
ஆரம்பத்தில் விறகை எரிக்க பயன்படுத்தும் கற்பூரம்
                                         மரத்தூள்
கவுன்சிலில் அனுமதி பெற்றால் நாங்களே காடுகளில்
வெட்டுவதற்காக கவுன்சிலால் முத்திரை குத்தப்பட்ட மரங்களை
வெட்டி எடுத்து வரலாம்.கீழ் படத்தில் விற்பனைக்கும்,சொந்த
தேவைக்குமாக பக்கத்துக்காணியில் காடுகளில் வெட்டி எடுத்து வரப்பட்ட மரங்களை  அடுக்கி வைத்திருக்கிறார்கள்.
                                 Chimney or Fireplace
இப்படித்தான் எரியும். தேவையான விறகுகளை  எடுத்து வந்துஅருகில் வைத்து இருக்கிறோம். வலது பக்கம் இருப்பது அதனை சுத்தப்படுத்தும் ஆயுதங்கள். இதனை ஜேர்மன் மொழியில் கமின் என்பர்.(der kamin)
                       ******************************************* 
எங்கட வீட்டுக்கு கடந்த ஞாயிறு அன்று வந்த விருந்தாளி.
முள்ளெலி(க்குட்டி)
"லேட்டஸ்ட் தகவல் இவர் முள்ளெலி(hedgehog ) என்று எங்கள் டீச்சரும்,நண்பியுமான "இமா" கூறியிருக்கிறார். எனக்கு இப்பிராணியைத் தெரியாது. நான் முள்ளம்பன்றி என நினைத்து எழுதியிருந்தேன்.
                                   *****************************************
எனக்குப் பிடித்த பாடல்:_
இப்பாடலையும் கேட்டுவிட்டுச் செல்லுங்கள்.


                                     <><><><><><><><><><><><><><><><><>



 






72 comments:

  1. மிகச்சிறந்த கவிதாயினியான ’திருமதி இளமதி’ அவர்களுக்கு என் இனிய அன்பான மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.


    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வாங்க அண்ணா வாழ்த்துக்களுக்கு நன்றி.

      Delete
    2. உங்கள் அன்பான வாழ்த்திற்கு மிக்க மிக்க நன்றி ஐயா!

      Delete
  2. நம் வலைச்சர நிர்வாகக்குழுத்தலவர் அன்பின் திரு சீனா ஐயா அவர்களுக்கும் இன்று தான் பிறந்த நாள்.

    என் மீது அளவுக்கதிகமான அன்பினை முன்பெல்லாம் பொழிந்தவர்களுக்கும் / இப்போதும் பொழிந்து வருபவர்களுக்கும் இன்று தான் பிறந்த நாளாக இருக்கும் போலிருக்கு.

    இந்த இனிய தகவலை அளித்த தங்களுக்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள், அம்முலு.

    5 ஸ்டார் சாக்லேட் பார் + மில்க் மெயிட் சாக்லேட் பார் இரண்டும் நிறைய வாங்கி வந்துள்ளேன். நானே, நீங்க கொடுத்ததா நினைத்து சாப்பிடுகிறேன்.

    >>>>>

    ReplyDelete
  3. // வாழ்த்துக்கள்:
    இன்று கலைக்கவியரசி இளமதியின் பிறந்த நாள்.
    இளமதி இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். நோய்நொடியின்றி, நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடனும் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன்.//

    அம்முலு, நானும் உங்களுடன் சேர்ந்து வாழ்த்தி மகிழ்கிறேன்.

    >>>>>

    ReplyDelete
  4. HAPPY BIRTHDAY ANIMATION படமும் CAKE க்கும் ஜோராக இருக்கிறது. பகிர்வுக்கு ஸ்பெஷல் நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete
  5. //எங்கட வீட்டுக்கு கடந்த ஞாயிறு அன்று வந்த விருந்தாளி.
    முள்ளம்பன்றி(க்குட்டி)//

    ஆஹா, நல்ல நகைச்சுவை தந்த விருந்தாளி.

    முள்ளம்பன்றியின் முள், கர்ப்பிணிப்பெண்களின் முதல் பிரஸவத்திற்கு முன் செய்யப்படும் வளைகாப்பு + ஸீமந்த நிகழ்ச்சியில், பெண்ணின் தலை வகிட்டில் வைத்து ஏதேதோ மந்திரங்கள் சொல்லப் பயன்படுத்துகிறார்கள்.

    அதில் ஏதோ அவ்வளவு விசேஷம் உள்ளதாம்.

    >>>>>

    ReplyDelete
  6. //இங்கு குளிர்காலம் தொடங்கி, இருட்டு சீக்கிரமாக வரத் தொடங்கிவிட்டது. மரங்களில் இலைகள் மஞ்சள் நிறமாகி உதிரத்தொடங்கிவிட்டன.//

    இங்கு ஐப்பசி மாதம் அடை மழை என்று பெயர் தான். ஆனால் வெயில் சுட்டெறிக்கிறது.

    புறப்பட்டு அங்கு வந்து விடலாமா என்று பார்க்கிறேன், அம்முலு. ;)))))

    >>>>>

    ReplyDelete
  7. //வெயிலைச் சமாளித்தாலும்,குளிரை சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம். ஸ்னோ பார்க்க அழகாயிருக்கும். //

    பார்க்க அழகாய் இருப்பதெல்லாம் அவஸ்தை கொடுக்கும் என்பது உண்மையே.

    >>>>>

    ReplyDelete
  8. //இதுதான் எங்கள் Garden Haus
    இதில் வெயில்காலங்களில் விறகுகளை வாங்கி அடுக்கி விடுவோம். வெளியில் மூடியிருப்பது வெட்டப்படாத சின்ன மரங்கள். //

    இன்னும் விறகு அடுப்பு தானா? GAS CYLINDER + GAS CONNECTION அடுப்புகள் கிடையாதா?

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. இங்கு விறகு அடுப்பு என்பது இல்லை. இங்கு எல்லாமே கரன்ட்,காஸ் அடுப்புத்தான்.இந்த விறகுகள் குளிர்காலத்தில் மட்டும் இந்த chimney எரிப்பதற்காக.குறைந்தது 6மாதத்திற்காகவேணும் தேவை.

      Delete
  9. நலம் நலமறிய பாடல் உள்பட அனைத்தும் அழகோ அழகு. பகிர்வுக்குப்பாராட்டுக்கள், நன்றிகள். வாழ்த்துகள்.

    பிரியமுள்ள கோபு

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்துக்களுக்கும், அனைத்து கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் கோபு அண்ணா.

      Delete
  10. திருமதி இளமதி அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க மிக்க நன்றி உங்கள் வாழ்த்திற்கும் சகோ!

      Delete
    2. வருகை தந்து இளமதியை வாழ்த்தியமைக்கு நன்றிகள்
      தனபாலன் சார்.

      Delete
  11. இளமதி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். நோய்நொடியின்றி, நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடனும் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறோம்..!

    ReplyDelete
    Replies
    1. அன்புச் சகோதரி இராஜராஜேஸ்வரி... அன்பான உங்கள் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி!

      Delete
    2. வந்து இளமதியை வாழ்த்தியமைக்கு நன்றிகள் இராஜராஜேஸ்வரி அக்கா.

      Delete
  12. [co="red"]வணக்கம் அம்மு!... ஹையோ!... அவ்வ்வ்வ்வ்...:0.
    இதென்னதிது... நீங்களுமா...:) கடவுளேஏஏஏ.....:0.

    பதிவோடு என் பிறந்தநாளையும் சேர்த்து வாழ்த்தி அசத்திட்டீங்களே...:)

    நான் இப்படிச் செய்வீங்கன்னு நினைக்கவே இல்லை...:)

    மிக்க மிக்க நன்றி அம்மு!..

    எனக்கிங்கே என்ன எழுதுவதுன்னே தெரியேலை...கர்ர்ர்ர்ர்...:))

    உங்க அன்பில் நெகிழ்ந்து போனேன் அம்மு!..
    அன்பான இந்த வாழ்த்திற்கும் இனிய நல்ல கேக்கிற்கும்.!


    [im]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSXaB91WtbanGzgVAeECLNMny5co7BzJpjDflxTl3Sh0aQryUD-Yw.[/im]

    மீண்டும் மீண்டும் மனமார்ந்த நன்றி அம்மு!.[/co]

    ReplyDelete
    Replies
    1. [im]https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQAjx6C1DO4zhG4BbVGftOb7xpwZYzS8QaMn5_vrUarmkF12jKecQ[/im]

      முதலும் படம் ஒன்று சேர்த்தேன்.. வரவில்லை.. அதனால் மீண்டும்...:)

      Delete
    2. வந்து வாழ்த்துக்கள் சொல்லிய அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்தோடு என் பதிவிற்கு கருத்துக்கள் சொல்லி,பாராட்டியமைக்கு நன்றிகள்.

      Delete
  13. அம்மு!... இங்கத்தை வின்ரர் கால வாழ்க்கையை அழகாக படமும் பதிவுமாக பகிர்ந்துள்ளீர்கள்!
    அருமை! படங்கள் எல்லாமே அழகு!..:)

    அது கற்பூரக்கட்டியோ... கர்ர்ர்..:)
    இல்லை!.. அது.. மண்ணெண்ணைக் கட்டியெல்லோ..:)
    நெருப்பு எரிய உதவுறதுக்கு, சட்டெனப் பற்ற வைப்பதற்கு உபயோகப்படுத்துவினம்..

    ReplyDelete
    Replies
    1. என்ன இது இளமதி இப்படி பப்ளிக்கில சத்தமா சொல்லாதேங்கோ.அது ம.எ.கட்டிதான்.கற்பூரமென்று ஈசியா எழுதலாமென்றால் விடுறீங்களே.

      Delete
  14. என்னாதூஊ... முள்ளம் பன்றி வந்திச்சோ...:0. அச்சோ...!
    கவனம்.. எங்காலும்ம் இருந்து குத்தித் தொலைக்கப் போகுது...:))

    பாடல் பகிர்வும் அசத்தல். எனக்கும் பிடித்த பாடலே..

    நல்ல பதிவும் பகிர்வும்! வாழ்த்துக்கள் அம்மு!

    ReplyDelete
    Replies
    1. இப்படி வந்தது முதல்முறை. பக்கத்து காட்டிலிருந்து வந்திருக்கலாம். ஊரைப்பார்க்க வந்திருக்கு போல.
      எனக்கு மிகவும் பிடித்த,மறக்கமுடியாத பாடல்.
      உங்க க்ருத்துப்பகிர்விற்கு மிக்க நன்றி இளமதி.

      Delete
  15. முதலில் இளமதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :)

    ஜெர்மனி குளிர் பற்றிய சுவாரசியமான தகவல்களுக்கு நன்றி அம்முலு! படங்கள் எல்லாம் அழகா இருக்கு. முள்ளம்பன்றி வருதா வீட்டுக்கு? இன்ரஸ்டிங்!! ;) ஜாக்கிரதையா இருங்க!!

    பாடல் கேட்கும் நேரம் இன்னும் வரலையே, பிறகு வாரேன்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க மகி. இப்ப முதல்முறையாக வந்துள்ளது. ம்..ம்ம்
      ஜாக்கிரதையாக இருக்கோனுமிங்கு எல்லாத்துக்கும்.
      வருகை தந்து இளமதியை வாழ்த்தியமைக்கும்,கருத்துப்
      பகிர்விற்கும் நன்றி மகி.

      Delete
    2. மிக்க நன்றி மகி! உங்கள் அன்பான வாழ்த்திற்கு..:)

      Delete
  16. பாட்டு கேட்டாச்சு...நல்ல பாடல்! இந்த படம் வந்த காலங்களை நினைவு படுத்துகிறது..ஹ்ம்ம்...ஐ யம் ஃபீலிங் நாஸ்டால்ஜிக்! :)))

    ReplyDelete
    Replies
    1. ஆவ் மகி நன்றி நன்றி. பாடலைக்கேட்டமைக்கு. எனக்கு மிகவும் பிடித்த ஸ்பெஷல் பாடல்.

      Delete
  17. நீ பிறந்த நாள் நாள் என்று
    நினைவுக்குள் வரவில்லை
    வான்மகளே இளமதியே
    மறந்துவிட்டேன் அறியாமல்..!

    புகழ்மாலை சூடும்
    புலவர்கள் நடுவினிலே
    பாமாலை நான் எழுத
    பண்தேடி அலைகின்றேன் ..!

    கவியோடு கைவினையும்
    கனிவான நற்பண்பும்
    கலந்து தரும் வலைப்பூவில்
    கண்டுகொண்டேன் இந்நாளை...!

    மங்காத புகழ்கொண்டு
    மன்னுலகம் உள்ளவரை
    மகிழ்வாய் நெகிழ்வாய்
    மனமுவந்து வாழ்த்துகிறேன்..!

    எந்நாளும் உன்னுள்ளம்
    ஏகாந்தம் இன்றிருக்க
    இறையன்பு தழுவட்டும்
    என்னுறவே உன்னோடு...!

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோ
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ்... சீராளா.. இங்கையுமா...:)

      ம் ம் அழகிய கவிதை வாழ்த்து கவிஞரே!..

      ஏற்கனவே இங்கு குளிர் தொடங்கீட்டுது..
      நீங்க இன்னும் வைக்கிறீங்க ஐஸ்...:))

      அன்பு வாழ்த்திற்கு மிக்க மிக்க நன்றி சீராளன்.!.

      Delete
    2. ஹி ஹி ஹி

      நெஞ்சம் பூக்கும் பூக்களிலே
      நெருந்தி முட்கள் தைப்பதில்லை
      பஞ்சம் இன்றி பாடுதற்கு
      பண்ணும் தந்தது உன்னுறவே...!

      ஆதலால் இது ஐஸ் இல்லை நைஸ் ..அவ்வ்

      Delete
    3. வருகை தந்து அழகிய கவியால் இளமதியை வாழ்த்தியமைக்கு நன்றிகள்.

      Delete
  18. குளிர்கால நினைவுகளும்
    கூதல்போக்கும் ஏற்பாடும்
    நலமறிய ஆவலுடன்
    நல்லபாடல் கேட்டேன் ..!

    அகமகிழ வாழ்த்தும்
    அன்புநிறை பண்பும்
    அழகிய பதிவுகளும்
    ஆழ்மனதில் ஊடுருவ
    அடியேனும் இணைந்தேன்
    ஆயுள்வரை பின்தொடர...!


    அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    ( ஒரு டவுட்டு விருந்தாளியா வந்த முள்ளம் பன்றி விருந்தாகியதா இல்லை விட்டுவிட்டீங்களா )



    ReplyDelete
    Replies
    1. வாங்க சீராளன். உங்க வரவு நல்வரவாகட்டும். என் தளத்தில் இணைந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள். கவிதையிலேயே கருத்துச்சொல்லி இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்துவிட்டீங்க. வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு விருந்து கொடுத்து,வில்லங்கமில்லாமல் விரட்டியாச்சு.
      மிகவும் நன்றி சீராளன்.

      Delete
    2. விரட்டிவிட்டீங்களா.....ம்ம் நல்லது வாழ்த்துக்கள்...

      Delete
  19. ஆ.. கவிதாயினி கவிக்குயிலுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. //ஆ.. கவிதாயினி கவிக்குயிலுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். //

      கர்ர்ர்ர்ர்... :)))) இதென்னதிது... இளமதின்னு என் பெயரை ஆளாளுக்கு மாத்துறீங்க...:)

      ம். ம். நன்றி அதிரா... நன்றி!

      Delete
    2. வந்து இளமதியை வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிகள் அதிரா.

      Delete
  20. இம்முறை எனக்குப் பிடிச்ச விஷயம் பற்றி வெளியிட்டிருக்கிறீங்க. அதாவது காஸ் பாவிப்பது. இங்கெல்லாம் காஸ் பைப்பில்தான் வரும்.. கரண்ட் வருவதுபோல, அதனால பில் வரும்போதுதான் அளவு கணக்கு தெரியும்.
    எங்கள் வீட்டில் சிம்னி இருக்கு, ஆனா நாங்க வீடு வாங்கும்போது.. ஃபயர் பிளேசை, காஸ் பிளேசாக மாற்றி விட்டார்கள். அதனால காஸ் போட்டு கட்டுதில்லை. எப்படிப்போட்டாலும் வீடு குளிர்தான்.

    இப்போ திரும்பவும் அதை எடுத்துவிட்டு, விறகு எரிக்கும் படியாக மாற்றினால் என்ன என யோசிக்கிறோம். ஆனா அது பெரிதாக மிச்சமோ அதிக சூடோ இல்லை, கிட்டத்தட்ட காஸ் ஹீட்டர் பாவிப்பதுபோலதான் என்கிறார்கள்... உங்கள் அனுபவ விளக்கம் பிளீஸ்ஸ்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க அதிரா. மகிழ்ச்சி. என் கருத்தைக்கேட்டால், இது தான் பெஸ்ட் என்பேன். இது இருப்பதால் எங்களுக்கு காஸ் செலவு குறைவு. சிம்னி பாவனைக்கு பின் காஸூக்கு மேலதிக காசு கட்டவில்லை. நாங்களும் இதை முதலில் கட்டிவிட்டோம்.ஆனால் 2 வருடத்திற்கு பிறகுதான் பாவிக்கத்தொடங்கினோம். நல்லமுறையில் எரித்தீர்களேயானால்(விறகும் நல்ல விறகானால்) வீடு நல்ல ஹீட்டாக இருக்கும்.எனக்கு ஹீட்டருக்கு தலைவலிக்கும். இதனால் ஒன்றுமில்லை. என்னைக் கேட்டால் நீங்க சிம்னிக்கு மாறுவது நல்லதென்பேன்.

      Delete
  21. எங்களிடமும் ஒரு முள்ளம்பண்டிக் குட்டியார் வந்து அகப் பட்டார்ர்.. பிடித்து ஒரு பரலில் விட்டோம்ம்.. சுருண்டு இருந்தவர்.. எப்படியோ ஏறிப் பாய்ந்து ஓடிவிட்டார்ர்:)

    ReplyDelete
    Replies
    1. ஆவ்..என்ன உங்கட வீட்ட வந்தவரை பிடித்தனீங்களோ.
      நான் எப்படி படம் எடுத்தனான் என்றே தெரியவில்லை .பயமா இருந்தது. நீங்க பிடித்து பரலில் விட்டிட்டீங்க.
      கெட்டித்தனம்தான்.ம்ம்.ம்

      Delete
  22. பாடல் மிக மிக பாடமான பாடல் என்பதால்ல்.. கேட்காமல் செல்கிறேனாக்கும்... மறக்கமுடியுமா அப் பாடலை.. அந்தப் படம் வெளிவந்தபோது, எங்கிருந்து, எந்தக் கதிரையில், எப்படி இருந்து பார்த்தேன் என்பதுவரை அக்குவெறு ஆணிவேறாக :) நினைவிலிருக்கு.:).

    ReplyDelete
    Replies
    1. ஆ..உங்களுக்கும் மறக்கமுடியாத பாடலோ.மகிழ்ச்சி அதிரா. வருகை தந்து, கருத்தைப்பகிர்ந்தமைக்கு மிக்க
      நன்றிகள் அதிரா.

      Delete
  23. ஜேர்மன் வாழ்வியலை அப்படியே எதார்த்தமாய் பதிவிட்டிருக்கிரீர்கள்.. பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாசகனும் உங்களுடன் அந்த வீட்டில் விருதினாராய் இருப்பது போன்றே உணர்வான் ... பதிவுகள் தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. உங்களோட முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் ரெம்ப நன்றி .

      Delete
  24. என்றும் இளமதியாகவே இருக்க என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. உங்க வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.

      Delete
    2. ஓ.. அம்மு!.... இன்னும் இங்கே வாழ்த்துகள் தொடருகிறதோ... அவ்வ்வ்வ்வ்....:)

      உங்கள் அன்பு வாழ்த்திற்கு மிக்க நன்றி சகோ தங்கம் பழனி!...

      Delete
  25. லேட்டா வந்து வாழ்த்துறன். இளமதியின் பிறந்தநாள் அவ்ர்கள் விரும்பியது போல அமைந்திருக்கும் என நம்புகிறேன்.

    இங்க ஜேர்மனி அளவுக்கு குளிர் இல்லை. எங்களுக்கு oil heater & electrict blanket போதுமாக இருக்கிறது. போதாவிட்டால் கொஞ்சம் அதிகமாக போர்த்துக் கொள்ளலாம். செலவு என்றாலும் கூட, 'எனக்கு' இதுதான் ஆரோக்கியமாகத் தெரிகிறது. அயல் வீடுகளில் கணப்புகள் இருக்கின்றன. அவர்கள் எரிக்கும் சமயம் நான் வீட்டினுள் அடைந்து கொள்ள வேண்டி இருக்கிறது. புகை & விறகு எரியும் வாசனை ஆகவில்லை.

    அவர்... முள்ளம்பன்றி இல்லை அம்முலு. முள்ளெலி. hedgehog. தொட்டால் சுருண்டுவிடுவார். பாண் வைங்க. சாப்பிடுவார். முள்ளம்பன்றி... பெரிதாக இருக்கும். முள்ளை விசிறிவிடும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ இமா.நலம்தானே. உங்கள் ஊர் குளிர் எங்களுக்கு இந்த குளிருடன் ஒப்பிடுகையில் பெரிதாக இல்லை. உங்களுக்கு இதெல்லாம் அங்கு தேவையில்லை.

      அவ்வ்வ்..என்ன நீங்க புதுப்பிராணியின் பெயர் சொல்லுறீங்க. நான் கேள்விப்படவில்லை. பார்க்கும் போது முள்ளு முள்ளா இருந்தபடியால் நான் நினைத்தேன் அவர்தான் என்று. அதனால் மு.பன்றி என எழுதிவிட்டேன். தகவல்களுக்கு மிக்க நன்றி.
      கூடவே வருகைக்கும்.
      பி.கு. நான் திருத்தி எழுதிவிட்டேன்.

      Delete
    2. இமா... அதான் நானும் லேட்டா வந்து நன்றி சொல்லுறனாக்கும்...:)
      லேட்டா வந்து நன்றி சொல்லுறதுக்கும் எனக்கும் ஒரு காரணம் கிடைச்சிட்டு...:)))

      மிக்க நன்றி இமா உங்கள் வாழ்த்திற்கும்!...;)

      Delete
  26. பிரியசகியின் வலைப்பக்கம் திறந்து பார்த்து ரொம்பநாள் ஆனதால் பார்க்காமல் இருந்துவிட்டேன்..திடீரென்று இன்று ஏதாவது பதிவு எழுதியிருக்கிறாரா என்று பார்ப்போம் என்று பார்ப்போம் என்று எதார்த்தாமாகப் பார்த்தேன்...அன்புத்தோழி இளமதிக்கு தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க கலியபெருமாள். உங்கள் வருகைக்கும், வாழ்த்து க்களுக்கும் மிக்க நன்றிகள்.

      Delete
    2. மிக்க நன்றி உங்கள் வாழ்த்திற்கும் சகோ கலியப்பெருமாள்!..

      Delete
  27. //hedgehog. தொட்டால் சுருண்டுவிடுவார்.// கரீட்டூ... இமா சொன்னதுபோல எம்மிடம் வந்தவரும் ஹெஜ்கொக் தான்... அம்மாதான் வெளியே நின்றவ.. அப்போ ஒரு தடியால் தொட்டாவாம் சுருண்டு விட்டாராம்ம்.. உடனே அங்கிருந்த ஒரு குட்டி பரலை சரிச்சு.. இவரை உள்ளே உருட்டி விட்டு, எம்மைக் கூப்பிட்டுக் காட்டினா.... நாம் பார்த்தபோது ஒரு பந்துதான் தெரிஞ்சுது:))... சற்று நேரத்தால் போய்ப் பார்த்தோம்ம் ஆள் இல்லை:))

    ReplyDelete
    Replies
    1. இரவா போயிட்டுது. எனக்கும் மகன் பந்தை எறிந்திட்டாரே
      என நினைத்து எடுக்கப்போனனான். கிட்டப் போனாப் பிறகு தான் தெரிந்தது. இனிவந்தா கவனிக்கவேணும்.

      Delete
  28. வணக்கம் சகோதரி
    தாமதமான வருகை காரணமாக இளமதி சகோதரிக்கு தாமதமான எனது அன்பு வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன்.தங்கள் பக்கத்திற்கு முதல் வருகை. இனி கட்டாயம் தொடர்வேன். நல்லதொரு படைப்புக்கு நன்றீங்க சகோதரி. தங்களது வலைப்பக்கம் மிக அழகாக உள்ளது. தொடர்வோம். நன்றீங்க..

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ. மிக்க மகிழ்ச்சி உங்க முதல் வருகை. இளமதியை வாழ்த்தியமைக்கு நன்றி. உங்க பாராட்டுக்கும், தொடர்வதர்கும் மிக்க நன்றிகள்.

      Delete
    2. ஆஹா... சகோ பாண்டியனும் இங்கேயா... சந்தோஷம்...:).

      உங்கள் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
  29. யதேச்சையாக உங்கள் பக்கம் கண்ணில் பட்டது வந்தேன்... ஆஹா.. இங்க வேலூர்னா அடுப்பு மேலய உட்கார்ந்திட்டிருக்கிற அளவுக்கு வெப்பத்தில் வறண்ட ஊர்.... உங்க ஊர்( நாடு) குளிரை கேள்விப்படும் போது எங்களுக்கு 'சில்லு' ன்னுதான் இருக்கு... ம்..ம்...

    நலம் ... நலமறிய ஆவல்... பிடித்த பாடல்.

    ReplyDelete
  30. வாங்க உஷாமேடம்.உங்க முதல்வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.
    உங்க ஊர் வெயிலை இங்க கொஞ்சம் அனுப்பிடுங்களேன்.
    இப்பொழுது மழை. சில்லு ன்னு இருக்கு. இங்கு காலநிலை என்பது இங்கு பிரதானமாக இருக்கு.
    பாடல் உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.
    உங்க வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  31. முள்ளெலி ஒன்று கண்ணில் பட்டது, பகிர்கிறேன். ;)

    http://www.arusuvai.com/tamil/node/23576

    ReplyDelete
  32. மிக அருமையான பகிர்வு. பகிர்வு உங்கள் குளிர்காலத்தை கண் முன்னாடி கொண்டு வந்து விட்டது.எனக்கு பிடித்த பாடல்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஆசியா உங்க வரவுக்கும்,கருத்துக்கும்.

      Delete
  33. பதிவுகள் அருமையோ அருமை ...நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் ..பதிவுக்கு மிக்க நன்றி ...

    ReplyDelete
  34. இவ்வளவு மரத்துண்டுகளைப் பார்த்த பிறகு ஜெர்மன் குளிர் எப்படிப்பட்டதென்று தெரிகிறது. இவ்வளவு குளிர் இருக்கும்போது வெயிலும் அடிஅடின்னு அடிக்கும்தானே !

    ReplyDelete
    Replies
    1. குளிர் வருவதை வைத்தே அதாவது ஸ்னோ நிறைய கொட்டினா அந்த வருடம் நல்ல சம்மர் என சொல்வாங்க. இந்த விறகு சேர்த்து வைச்சிருக்கு.அதனால் உங்களுக்கு இவ்வளவு எரிப்பது போல தெரிகிறதா சித்ரா. எங்க இடத்தைவிட அதிக குளிர் உள்ள இடங்கள் இருக்கு ஆல்ப்ஸ் மலைபக்கமாக இருக்கு மியூனிச் எனும் இடம். நன்றி சித்ரா.

      Delete

 
Copyright பிரியசகி