ஹாய்..அன்பு நட்பூக்களே.. எல்லாரும் நலம்தானே..
நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை மீண்டும் சந்திக்கின்றேன்.
எல்லாருக்கும் 2018 ம் ஆண்டு புது வருட வாழ்த்துக்கள்.
வரப்போகும் பொங்கல் (கள்) வாழ்த்துக்களையும் முன்கூட்டியே சொல்லிக்கிறேன்..
நீண்ட நாட்கள் பதிவுகள் ஏதும் எழுதாமல் எழுதுவதால் என்ன எழுதுவது என்றே தெரியவில்லை.
முதலில் என் நன்றிகளை அன்பான நண்பிகள் அதிரா, அஞ்சுவுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். உண்மையில் நன்றி எனும் வெறும் வார்த்தையால் சொல்லிவிடமுடியாது இவ்விருவருக்கும்...
""உறவுகளைத்தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு அளிக்கப்படவில்லை. அவர்கள் நீங்கள் பிறக்கும்போதே இறைவனால் தீர்மானிக்கப்பட்டவர்கள். ஆனால் இறைவன் உங்களுக்கு மிக முக்கியமான சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறான். நண்பர்களை அவன் உங்களுக்காகத் தேர்ந்தெடுப்பதில்லை. அந்த உரிமையை உங்களுக்கு விட்டுக்கொடுத்திருக்கான். அந்த உரிமையைப் புத்திசாலித்தனமாப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நல்ல நண்பர்கள் நல்ல பாதைகளில் நம்மை பயணிக்க வைத்து நம் வாழ்க்கையில் நன்மைகளை ஏற்படுத்துவாங்க. நல்ல காலங்களில் மகிழ்ச்சிக்கும், கஷ்டகாலங்களில் உதவிக்கும், ஆறுதலுக்கும் அவர்கள் காரணமாக இருப்பார்கள்....."" (என்.கணேசன்)
உண்மையில் இந்த வரிகள் அதிரா, அஞ்சுவுக்கு நிச்சயமாக பொருந்தும். இப்படித்தான் இவ்விருவரும் இருந்திருக்கிறாங்க. இவ்விருவருக்கும் எவ்வித குறைகளும் இல்லாமல் , எல்லாவித செல்வங்களும் பெற்று, சந்தோஷமாக குடும்பத்தினருடன் நலமோடு இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பார்கள் அதுபோல அதிராவின் மிரட்டல், உருட்டல்களுக்கு பயந்து வந்திருக்கேன். அஞ்சு இப்படி மிரட்டவில்லையெனினும், அன்பாக சொன்னா. இனியும் தாமதித்தால் அவரும் எங்கே கையில் உருட்டு கட்டையை எடுத்துடுவாவோ என்னவோ என யோசித்து வந்துவிட்டேன். ஏனெனில் யாருக்கு செக்ரெட்டரியா இருக்கா என உலகறிந்த விடயம்.😃
அவர்கள் இருவருடன் சேர்ந்து, தான் ப்ளாக் ல் எழுத ஆரம்பிச்சதும், இளமதியும் மிரட்டத்தொடங்கிட்டாங்க. இனியும் தாமதித்தால் சரியாகாது என களத்தில் குதித்தாச்சு.
இது நான் தைச்சது....cross stich ல் ஒருவகை. மணிகள் வைத்து தைப்பது
என் பதிவுகளை வாசித்தும்,கருத்திட்டும் ஆதரவு தரவேண்டுகிறேன். 🙏 முயற்சி செய்து இங்கு வரும் நண்பர்களின் பக்கமும் சென்று கருத்திட நினைக்கிறேன்.
நான் செய்த பூந்தி லட்டு.. சாப்பிட்டுவிட்டுச் செ(சொ)ல்லுங்க....
ஆஆவ் !!! இனிய ஆச்சர்யம் வருக வருக என வரவேற்று தேம்ஸ் கரையில் எனக்கு கிடைத்த பச்சைக்கல் நெக்லஸை உங்களுக்கு பரிசளித்து மகிழ்கிறேன்
ReplyDeleteஆ..அஞ்சு முதலாவதா வந்திருக்கிறீங்க உங்களுக்குதான் அந்த பூந்தி லட்டூஊஊ...
Deleteதாங்குயூ நெக்லஸுக்கு. இது தெரிஞ்சா ஒரு ஆள் நேரா தேம்ஸ்தான்..
கணேசன் அவர்களின் பதிவுகளை நானும் அவ்வப்போது வாசிப்பதுண்டு மனசுக்கு அமைதியும் சந்தோஷமும் தரும் அவர் பதிவுகள் .
ReplyDeleteமிக நன்றி பிரியா :) இறைவனுக்கு நன்றி சொல்லணும் நல்ல உள்ளங்களை எங்களுக்கு அடையாளம் காட்டியதற்க்கு
ஆமாம் அஞ்சு இப்பதான் சமீபமா அவரின் புக்ஸ் வாங்கி இருக்கிறேன். படிக்கனும்..
Deleteநன்றிக்கு நன்றியா..ஹா..ஹா..
ஹாஹாஹா :) கட்டையெடுக்காமலே வர வைச்சிட்டேன் :)
ReplyDeleteக்ரோஸ் ஸ்டிட்ச் இல் இப்போ மணிகளும் வந்தாச்சா !!மிகவும் அழகா இருக்கு நான் ஊசி மட்டும் தொட மாட்டேன் :) ஊசினாலே பயம்
நீங்க செய்ததா பூந்தி லட்டு !! வாவ் சூப்பரா ஈரத்தன்மையோட இருக்கே எனக்கு இந்த அளவுளாம் அழகா செய்ய வராது எதுக்கும் ரெசிப்பி போடுங்க முயல்கிறேன் :)
ஆமாம் அஞ்சு. இது வேர்க் சொப் ல செய்த்தது. எனக்கு இது அவ்வளவா பிடிக்க்கேலை. சரியான கஷ்டமா போச்சு. கண் கூட சரியான வலி. நூலில் மணிகள் கோர்த்து தைக்கவேணும். கர்ர்ர்.. அதைவிட க்விலிங் ஈசி.
Deleteநான் செய்ததுதான். தீபாவளிக்கு செய்தது பிழையாகிவிட்டது. இது இப்ப க்றிஸ்மஸ் லீவில செய்தது. சூட்டோடு பிடிக்கனும். எனக்கு கையெல்லாம் சிவந்தேவிட்டது. நோர்மலா செய்வதுதான். அடுத்தமுறை செய்யும் போது படத்தோடு ரெசிப்பி போடுறேன்.
மிக்க சந்தோஷம் ப்ரியா நீங்க மீண்டும் பதிவுகள் எழுத துவங்கியது ..தொடர்ந்து எழுதுங்க quilling என்னாச்சு ? அதுவும் செய்றீங்க தானே அதையும் பகிருங்கள் .ஸ்டார்ட் தி மியூசிக் :) வாரம் இரண்டு பதிவாவது வரணும் சொல்லிட்டேன்
ReplyDeleteம்.. குவிலிங் செய்கிறேன் இடையிடையே...
Deleteஓகே அஞ்சு. முயற்சி செய்து போடப்பார்க்கிறேன். மீண்டும் நன்றிகள் அஞ்சு.
வருக வருக என அன்புடன் அழைக்கிறோம்
ReplyDeleteநீங்க அழைத்ததற்கு நன்றி. ஆனா நாந்தான் உங்களை வரவேற்கவேணும். எதிர்பார்க்கவில்லை. அதிரா சொல்லுறமாதிரி சொல்லி வைப்பம்.... லெக்கும் ஓடல.. ஹாண்ட் டும் ஆடல (கொஞ்ச நாளைக்கு எல்லாமே வலது கொப்பிதான்.)
Deleteவாங்க வாங்க சகோ..ம.தமிழன். 🤗
உங்களது வருகைக்காக அதிரா தனது வைர நெக்லஸை அன்பு பரிசாக தருவார்கள் அதை மறக்காமல் கேட்டு வாங்கி கொள்ளவும்
ReplyDeleteம்க்கும்...அங்கன அவா வள்ளிக்கு நேர்ந்த நெக்லஸையே கொடுக்க காணமாம்.. எனக்கு இப்ப தரமாட்டா. இப்ப அஞ்சு தந்த பச்சைகல் நெக்லஸை நான் எங்கின ஒளிப்பேனேஏஏஎன் 🙁
Deleteஒழுங்கா பதிவு போட்டா தந்தாலும் தரலாம்...... 😃
Delete//Avargal Unmaigal///
Deleteஹையோ என் நெக்லெஸ் ஐ ஆசைக்கு நானே பார்க்க முடியாதபடி பண்ணிட்டினமே எல்லோரும்:) பயத்தில ஒளிச்செல்லோ வச்சிருக்கிறேன்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...
///ஒழுங்கா பதிவு போட்டா தந்தாலும் தரலாம்...... ///
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என்னா ஒரு ஆசை:))
ReplyDeleteநீங்கள் செய்த லட்டுவை சாப்பிட்டு பார்த்து சொல்ல முடியாது பார்த்து ரசித்துதான் சொல்ல முடியும் பார்க்க லட்டு மிக அழகாக இருக்கிறது ஆனால் ஒன்று நிச்சயம் இது சாப்பிட நல்லாவே இருக்காது... உவ்வே உவ்வே..(மைண்ட் வாய்ஸ் இதை படிச்சுவிட்டு ரோசம் வந்து நமக்கு பார்சல் அனுப்புவாங்களா அல்லது ஏஞ்சல் அதிரா மாதிரி ரோசம் இல்லாதா மதிரி சிரிச்சிட்டு போய்டுவாங்களா? )
கர்ர்ர்ர்ர்ர்...... 😫
Delete/மிக அழகாக இருக்கிறது // இதோட நிறுத்தியிருந்தா, பார்சல் அனுப்பியிருப்பேன்.. 😁 😁
ஹலோ மீக்கு ரோசம் மானம் வெய்க்கம் சூடு சொரணை கடம்னை நேர்மை எருமை அத்தனையும் இருக்காக்கும்:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
Deleteஅதற்க்காக நீங்கள் செய்த களியை எனக்கு அனுப்பி வைக்க வேண்டாம். உண்மையிலே ரோசம் இருந்தால் வைர நெக்லஸை அனுப்புங்க
Deleteயாரைச்சொல்றாரு இவரு...... 🤔
Deleteவணக்கம் பிரியா!…
ReplyDeleteவாங்கோ! வாங்கோ!.. கண்டதும் மகிழ்ச்சி தாங்க முடியலையே!..
களைகட்டுது வலையுலகு..:))
என்னை எழுத இழுத்துவிட்டிட்டு இருட்டில் மறையும் எண்ணத்தோடு இருந்தீங்களாக்கும்…:)
அதான் கலைத்தேன்.. :)) வந்ததே சந்தோஷம்!
என். கணேசனின் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் வரிகள் அற்புதம் பிரியா!
அதிலுள்ளபடியே உங்களின் தேர்வும் என்னுடைய தேர்வும் அமைந்திருக்கிறது.
காலத்திற்கும் என்னாலும் மறக்க முடியாதவர்கள் இவர்கள்!
தான் பெற்ற இன்பம் பெறுக... என்பதற்கேற்ப என்னையும் இழுத்துவிட்டீங்க அ.அ கூட்டணியோட சேர்ந்து 😁
Deleteநன்றி இளமதி.
ஆமாம் இளம்தி அவரின் புக்ஸ் எடுத்து இப்ப வாசிக்கிறேன். இவை ப்ளாக் ல் எழுதியதை எடுத்து வைத்திருக்கேன். ..நன்றி மறப்பது நன்றன்று..
வலையுலகு வந்தீரே! வாழ்த்தினேன் உம்மை!
ReplyDeleteகலையழகு கண்டேன் களித்து!
வரும்போது வெறுங்கையோடு வரக்கூடாதெண்டு பூந்தி லட்டு செய்து கொண்டந்திருக்கிறீங்கள்..:)
எனக்கும் ஒன்று தாங்கோ!
அஞ்சுவுக்கு தட்டோடு குடுக்கேலைதானே..:))
பார்க்கவே ஆசையைத் தூண்டுது!. அழகாய் இருக்கு.
இப்பிடி ஒரே அளவாய் எப்பிடித்தான் உருட்டினியளோ?… சூப்பர்!
க்ரொஸ் தையலும் நல்லாயிருக்கு. மணிகளோ பலூனில்.. ரொம்ம்ப அழகு!
சரி தொடருங்கோ! .. சந்தோஷமுடன் நல் வாழ்த்துக்கள் பிரியா!
கர்ர்ர்ர்ர்ர்..எழுதியதுதான் எழுதினீங்க இன்னும் 4 வரி கூட சேர்த்து எழுதப்படாதோஓஒ... நான் கவிதையைச்சொன்னேன்.
Deleteதட்டோட எடுங்கோ ந்னு சொல்லலை. நீங்களும் எடுத்ங்கோ..
அளவா உருட்டுறது பழக்கதோஷம்.. க்ரொஸ் ஸ்டிச் கஷ்டம். இது ஒன்றுதான் செய்தனான்.
ரெம்ப நன்றி இளமதி..
வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீ த 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊ :)...
ReplyDeleteஎன்னாதூஊஊஊ மீ... இங்கின 1ஸ்ட்டூ இல்லயோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இண்டைக்கு அஞ்சுட கால்ல கல்லுக் கட்டிட்டுத் தேம்ஸ்ல தள்ளாமல் விட மாட்டேன்ன்ன்ன்ன்ன்ன்... :)...
வாழ்த்துக்கள் அம்முலு... அதிரா இப்போ ரெயினில இருக்கிறேன் வீட்டுக்குப் போய்த்தான் மிகுதி:)..
ஆமாம் அதிரா முதியோரில் நீங்கள்தான் பர்ஸ்டுடுடுடு
Delete
Deleteஅதிரா ட்ரெயின் அல்லது ரயில் இருக்கிறேன் என்று சொல்லனும் அதைவிட்டுவிட்டு ரெயினில் என்றால் மழையில் இருப்பதாக அர்த்தம் நான் படித்தது கவர்மெண்ட் ஸ்கூலில் என்றாலும் எனக்கு ஒரிரு ஆங்கில வார்த்தைகள் தெரியும்
நீங்க ஆறுதலா வாங்க அதிரா..
Deleteஆனா இங்கன ஒருவர் வந்து உங்களை ஏதோ சொல்கிறார்...
நான் பெரிய மனசு பண்ணி பேசாமல் போகிறேன் அம்முலு:) ஏனெனில் ஏற்கனவே பூரிக்கட்டையால் நொந்து நூடில்ஸ் ஆகிப்போயிருக்கிறார்:)).. நான் செத்த பாம்பை எல்லாம் அடிக்க மாட்டேனாக்கும்.. ஹா ஹா ஹா ...
Deleteஇவோ ஏன் ரெயின் க்கு மேல ஏறி இருக்குறா .முப்பாட்டன் முருகன பாத்து பழகியிருப்பா போல அதான் ஏறி நிக்கிறா
DeleteWelcome back priyasaki! A very happy new year to you!!
ReplyDeleteவாங்கோ மனோக்கா. ரெம்ப நன்றிகள் வரவுக்கும்,வாழ்த்துக்கும்.
Deleteவாங்க வாங்க....ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு நீங்க எழுத ஆரம்பிச்சதுக்கு..
ReplyDeleteநிறைய பகிருங்க ..காத்து இருக்கிறோம்...
அஞ்சு, அதிரா, இளமதி...எல்லாருக்கும் வாழ்த்துக்கள் அம்முவை அழைத்து வந்ததற்கு...
கிராஸ் ஸ்டிச் teady பலூன்களோடு அழகா இருக்கு...
லட்டும் சூப்பர்...
வாழ்த்துக்கள் அம்மு..
வாங்க அனு. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்களுக்கும்,வரவுக்குக்கு நன்றி அனு.
Deleteஹலோ அம்முலு அந்த ... நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் எண்டெல்லாம் பெருமை பேசாதீங்க:) இப்பவே ஜொள்ளிட்டேன்ன்ன்.. மீ அப்பப்ப காலை வாரி விட்டிடுவேன்:) நீங்கதான் ஸ்ரெடியா நிக்கோணும்:)..
ReplyDeleteஅடி உதவுவதுபோல அண்ணன் தம்பி உதவாயினம்:)).. இதை நான் இளமதி விசயத்தில கண்டு பிடிச்சேன் 100 வீதம் உண்மை என:)).. அவவுக்கு ஆறுதல் சொல்லி தடவிட்டு இருந்தா.. அவவும் அப்பூடியே தொடர்ந்து அழுதிட்டே இருக்கிறா:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. மிரட்டோ மிரட்டென மிரட்டினா.. எழும்பி ஓடி வந்து உசாரா வேர்க் பண்ணுறா ஹா ஹா ஹா...
நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி.. இனிமேல் ஆரும் அழுதா ... கூட சேர்ந்து அழாதீங்கோஓஓஓஓஓ:))..
சரி வந்தவுடனே வெருட்டக்கூடாது. நீங்களும் கொஞ்சநாள் இடைவெளி விட்டீங்கல்லோ. அதுமாதிரி இதுவும் என நினையுங்கோ. தொடர்ந்து அழக்கூடாது. இடையிடையே அழுதால் நல்லதாம். 😀
Deleteஅந்த குரொஸ் ஸ்ரிச் சொல்லி வேலையில்லை அம்முலு.. மிக அருமை.. எவ்ளோ கஸ்டப்பட்டிருப்பீங்க என தெரியுது.. அவ்ளோ குட்டி மணிகள் நான் கண்டதில்லை.
ReplyDeleteநானும் குரொஸ் ஸ்ரிச் செய்ய வாண்டி:) வச்சிருக்கிறேன் பொருட்கள்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் விரைவில செய்யோணும்:))
இது ஸ் ரிச் காட்டிதருவதற்கு வேர்க்சொப் நடந்தது அதிலதான் தைச்சனான். கண்வலி கூடவே. பயிற்சி எடுத்தா தைக்கலாம். நான் சாதாரணமானதுதான் தைக்க ஆசை. எல்லாத்திலும் அரைகுறையா நிக்குது..ஹி..ஹி.. பொறுமை,நேரம் வேணும். 😀 செய்யுங்கோ கெதியில..
Deleteஅஞ்சு கடையிலே வாங்கி, அதே பிளாஸ்டிக் டப்பாவுடன் படம் எடுத்துப் போட்டு ... மீ அச்சப்பம் சுட்ட்டேன்ன்ன்ன்ன் என, என்னை நித்திரை கொள்ள விடாமல் நடுச்சாமம் காலை 6 மணிக்கு கூவியதைப்போல:))...
ReplyDeleteநீங்களும் கடையில வாங்கி:), அழகா தட்டில் அடுக்கி வச்சிருக்கும் லட்டூஊஊஊஊஉ ஜூப்பரோ ஜூப்பர்ர்:)).. பின்ன ஸ்டெப் பை ஸ்டெப்(எப்பூடி என் டமில்:)) படங்கள் போட்டால்தான் நம்புவேன்:))..
எனக்க்கு கேசரி செய்யும் பக்குவம் சொல்லித்தந்த அதே பிள்ளைதான், இந்த லட்டும் செய்முறை சொல்லித்தந்தா... எனக்கு இனிப்பு பிடிக்காது.. வீட்டில் சிலநேரம் சாப்பிடுவினம் சிலநேரம் தொடமாட்டினம்.. அப்போ செய்திட்ட பாவத்துக்காக நானே சாப்பிட வேண்டி வந்திடும் என்பதனால் றிஸ்க் எடுக்க விரும்புவதில்லை:))..
உங்களுடையது மிக சூப்பர்.. நீங்களும் சகலகலா வல்லியாகிட்டீங்க.. :)
ஹலோ யார்கிட்ட :) எங்காத்துக்காரர் பக்கத்தில் இருக்கார் வந்து சொல்ல வைப்பேனாக்கும் :)
Delete/என்னை நித்திரை கொள்ள விடாமல் நடுச்சாமம் காலை 6 மணிக்கு கூவியதைப்போல:))...//
Deleteஓஹோ அப்படின்னா பொங்கலுக்கு 100 அச்சப்பம் சுட வைக்கிறேன் :)
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...... நாங்க(நான்+anju) எவ்வளவு கஷ்டப்பட்டு செய்து,கையெல்லாம் சூடு வாங்கி போட்டால்..... கடையில வாங்கினதோஓஓஒ......அதுதான் நான் கையில வைச்சு உருட்டுற படமும் போட்டிருக்கேன். பாருங்க சிவந்துபோச்சு கை.... கர்ர்ர்ர்ர்
Deleteஇங்கினயும் ஸ்வீட் அவ்வளவு இறங்காது. உறைப்பான ஸ்நாக்ஸ் என்றா காணக்கிடைக்காது....
மிக்க நன்றிகள் அதிரா .
அஞ்சுவும் அச்சப்பம் கஷ்டப்பட்டு செய்திருக்கா. அதனால அவாவை ஆதரவுக்கு சேர்த்து சொன்னேன்..
Delete@அஞ்சு... ஹலோ மிஸ்டர்... நீங்க மிரட்டினா:) அவர் வந்து ஜாட்ஜி சொல்லிடுவார்:)... இதை நான் நம்புவனாக்கும்...:) கர்ர்ர்ர்:)..
Deleteஅம்முலு ஜொன்ன பொறகுதானே:) அந்தக் கையே என் கண்ணில பட்டுது:) கர்ர்ர்ர்ர்:)...
நீங்க வேற, மேலே ஒருவர் சொன்னது மெய்யாகிடும் போல.....
Deleteவணக்கம் !
ReplyDeleteபங்கயம் பூத்துக் கங்கை
....பசுமையும் கொள்ளல் போல!
மங்கலம் பெருகி மக்கள்
....மகிழ்வினால் நிறைந்து துள்ள !
எங்கிலும் அமைதி வேண்டி
...இறைஞ்சிடும் எல்லோர் வாழ்வும்
பொங்கலாம் இந்நாள் தொட்டுப்
...பொலிவுற வாழ்த்து கின்றேன் !
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் !
ரெம்ப நன்றி சீராளன். உங்களுக்கும், குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்
Deleteவணக்கம் பிரியா!
ReplyDeleteஅன்பும் அருளும் அகத்துக்குள் பொங்கட்டும்!
இன்பத் தமிழ்போல் இனித்து!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், சுற்றம், நண்பர்கள் அனைவருக்கும்
இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்!
நன்றி இளமதி. உங்களுக்கும் வாழ்த்துக்கள் மீண்டும்.
Deleteஆ...மகி வாங்கோ. நீங்களும் டீச்சரின்ர ஸ்டைலோ..நன்றி.
ReplyDeleteந
வணக்கம் தாமதமான புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துகள் சகோ......
ReplyDeleteதங்களை மீண்டும் பதிவுலகம் வர வைத்தவர்களுக்கு நன்றி தொடர்ந்து எழுதுங்கள்.
லட்டு இனிப்பு பார்க்க இயலவில்லை காரணம் COPY எடுத்தாலும் சுவைத்து பார்க்க முடியவில்லையே.... ஆகவே பார்த்து இரசித்''தேன்''
உங்க வருகைக்கும், வாழ்த்துக்கும் ரெம்ப மகிழ்ச்சியும் நன்றிகளும்.
Deleteமுயற்சி செய்து எழுதுகிறேன். நன்றிகள் மீண்டும்.
சகியே சகியே
ReplyDeleteவந்தாச்சா வாழ்த்துக்கள் எழுதுறதை அங்கேயும் ஒருக்கா ஷேர் பண்ணி விடுங்கோ என்னைப்போல சோம்பேறிகளுக்கு அந்த பஸ்லயே ஏறி இங்க வந்து வாசிக்க உதவியா இருக்கும் .
ஆஹா ..வாங்கோ சுரே. ஓகே தெரியப்படுத்துறன். மிக்க நன்றி சுரே வந்தமைக்கும்,கருத்துக்கும்...
Deleteபிரியசகி நலாமா....
ReplyDeleteஎல்லோரையும் பார்த்து எனக்கும் ரொம்ப நாள் ஆச்சு...இன்னைக்கு வந்தா உங்கள் வரவு...தொடருங்கள்....சகோ
என் கண்ணையே நம்பமுடியல...உமையாள்.!! நீங்க நலமா.நான் நலம். நீண்ட நாட்களாக காணவில்லை. மிக்க மகிழ்ச்சி உங்க வரவு கண்டு. நன்றி வருகைக்கும்,கருத்துக்கும்.
Deleteஅம்மு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
ReplyDeleteஇப்போது தான் பார்த்தேன் பதிவை அனைத்தும் அருமை. தொடர்ந்து எழுதுங்கள்.
நட்பை பற்றி கணேசன் சொன்னது அருமை
. பகிர்வுக்கு நன்றி.
வாங்க அக்கா. மிக்க மகிழ்ச்சி வருகைக்கு.நன்றிகள்.
Deleteலட்டு அருமை
ReplyDeleteநன்றி அக்கா.
Deleteவந்தாச்சு எண்டுபோட்டு வராமல் விட்டிருக்கிற மாதிரி இருக்கே பிரியா! வாங்கோ திரும்ப. :-)
ReplyDeleteமுழுக்க முழுக்க சீட்பீட்ஸ் வைச்சுத் தைச்சிருக்கிறீங்கள். எனக்கும் ஆசையா இருக்கு, பார்ப்போம். :-)
ReplyDelete