RSS

22/02/2020

பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

HAPPY BIRTHDAY ATHIRA. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

பூலோலியூர் பூசானந்தா,  ஆஷாபோஷ்லே கவிஅமுதம்,  மாஸ்டர் செப், இடிதாங்கி,  திலோத்தமை, இப்போ அருந்ததி என தனக்குதானே பல பட்டங்களை சூட்டிக்கொண்டும்,  என் சமையலையும் ருசியுங்கோவன்  என குழைசாதம், கத்தரிக்காய் தொக்கு, கீரைவடை, மொச்சைக்கொட்டையில் ஓரு சாப்பாடு, கொள்ளுவடை என தினுசு தினுசா செய்து எங்களையெல்லாம் தலை கிறுகிறுக்க வைக்கிற  அன்பான, பண்பான, அடக்கமான, தமிழ் எழுத்தில் பிழைவிடாமல் லகரம்,ழகரம் எழுதி டி எடுத்த  என்றும் 16 வயது (ஸ்வீட் ஸிக்டீன்) என சொல்லிதிரிபவரும், எங்களால் பூஸார், குண்டு பூனை என செல்லமாக அழைக்கப்படுபவருமான

             அதிராவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

இன்று போல் என்றும் சந்தோசமாக, நல்லாரோக்கியமாக வாழ வாழ்த்துகின்றேன்.  அனைவரும் அன்பு அதிராவை வாழ்த்துங்கள்.


இம்முறை அதிராவின் பிறந்தநாள் எனக்கு மறக்கமுடியாததாகிவிட்டது. பூஸ் கார்ட் போனவருடம் செய்யவேண்டியது. அஞ்சுவின் பக்கம் கடந்த வருடம் பி.நாள் போஸ்ட் ல் தெரிவித்திருந்தேன். ஆனா அதை தொடரமுடியவில்லை. அஞ்சு சின்னபையருக்கு செய்த யானைதான் இம்முறை அதிராவுக்கு இப்பூஸாரை செய்ய (inspiration ) தூண்டுதலாக  இருந்தது. இந்த வடிவத்தில் செய்தது இதுதான் முதல்முறை. இதில் குறைகள் இருக்கு. ஆனா இவ்வளவு தூரம் செய்யமுடிந்தது என்றா அதன் காரணகர்தா அஞ்சுதான்.  நன்றி அஞ்சு. இன்னும் முன்னேற இருக்கு. சரியா வந்ததா எனத்தெரியவில்லை. ஆனா எனக்கு மிக்க சந்தோஷம் அதிராவிற்கு செய்ததில். 



அதிராவைப்   பற்றி நாங்க கலாய்த்தாலும் உண்மையில் நாலு வார்த்தை நல்லதா சொல்ல வேண்டும். இன்று வரை அதிராவுடனான நட்பு தொடர்கிறது  என்றால் அது அவருடனான புரிந்துணர்வால் தான். எல்லாவற்றையும் டேக் இட் ஈசி என எடுத்து, எவ்வளவு கலாய்தாலும் அவரின் நகைச்சுவை எழுத்தால் எழுதி அத்தனையும் கடந்து சென்று விடுவார். அவரிடமிருந்து நான் கற்றது இதனைதான். அவர் ஒருவரிடமே பயமில்லாமல் எதனையும் எழுதுவேன். முன்னாடி என்ன நினைப்பாரோ என பயந்து கொள்வேன். மிகவும் நல்லதொரு நண்பி. அதேபோல்தான் அஞ்சுவும். அதிரா நண்பியாக கிடைத்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இப்படியே எங்கள் நட்பு தொடரவேண்டுமென ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். 🙏


கொஞ்சம் கம்போடியா அலப்பறைகள்......அதிராவிற்காக.

பாருங்க அதிரா உங்களோட பேவரிட் அவிச்ச கடலை, உப்புதூள் மாங்காய், அ.கோ.மு இவை கம்போடியாவில் மிகபிரபலம். ரோட்டோரங்களில் இவைகளை காணவில்லை என்றால் அதிசயமே. 
இவைகளை(அ.கோ.மு தவிர) நான் மார்க்கெட்டில் வாங்கினேன். நடைபாதையில் விற்கிறாங்கதான். ஆனா அங்கு இருக்கும் pollution ல் வாங்கமுடியாது. இதனை விற்ற பெண் பாதுகாப்பாக வைத்திருந்தாங்க. அத்துடன் இதனை விற்ற சிறு பெண் மிகவும் கெஞ்சியதுடன், இன்று ஒன்னுமே விற்கல சார் என சொன்னார். பாவமா இருந்தது.  சரி என வாங்கியது.




இதைபோல தான் அ.கோ.மு எங்குமே காணமுடிந்தது.  இதை பார்க்கும்போது அதிராதான் ஞாபகம் வருவா. அத்தோடு முன்பு போட்ட க்ரில் வாழைப்பழம். இன்னும் வேறு அசைவ உணவுகள் என வித்தியாசமான முறையில் வைத்திருந்தாங்க. இவைகள் எல்லாமே கஷ்டப்பட்டவங்க தம் அன்றாட தேவைக்காக விற்று பிழைக்கிறாங்க. நிறைய்ய்ய்ய கையேந்திபவன் தான் அதிகம். நான் நினைப்பேன், இப்படி முழத்துக்கு முழம் இருந்தால் சனங்கள் எங்கு போய் சாப்பிடுவது என குழப்பம் வராதா?, எல்லோருக்கும் விற்பனையாகுமா? என. ஆனாலும் விடமுடியுமா சந்தேகத்தை கேட்டே விட்டேன். ஒருநாளைக்கு 75...லிருந்து100 டொலர் வரும் எனவும் சிலவேளை வியாபாரம் நடக்காது எனவும் சொன்னாங்க.

ஊரில் நாங்க சீனியாஸ் பூ என்போம். அங்கு எங்கும் இருக்கிறது. இங்கு zinne flower. ஊரில் கலர்கலரா வளர்த்தது.


அங்கு நான் கண்ட இன்னொரு விடயம் . வீடுகளிற்கு முன்னால் அதாவது வாசலில் துளசி, திருநீற்றுபச்சிலை, கற்பூரவள்ளி வைத்திருப்பது. 


அப்பனே பிள்ளையாரப்பா இன்று அதிராவின் பிறந்தநாள் அவா எங்கேயிருந்தாலும் நல்லாயிருக்கோனும். 
உங்க மைத்துனிக்கு கொடுக்கவேண்டிய நேர்த்திக்கடன் வைரநெக்லஸை எப்படியாவது வாங்கி அவாவிடம் கொடுத்துவிடுங்கோ....

கம்போடியாவில்  பாரம்பரிய, மிக சத்தான உணவுகள் சாப்பிட்டேன்.அதன் விபரங்களை பதிவாகதான் போடோனும். ஆச்சரியமான ஆனா மிகுத்த சத்துணவு, அல்லது சிற்றுண்டி என சொல்லலாம். அந்த உணவை சாப்பிடும் போது அஞ்சுதான் ஞாபகம் வந்தா. இது அதில் ஒன்றான நான் ருசித்த மிக வித்தியாசமான மோதகம். இதன் செய்முறை ரெம்பவே வேலையானது. நல்ல ருசியாக இருந்தது. ஆனா 2,3 மேல் சாப்பிடமுடியாது. அவ்வளவு இனிப்பு. அரிசிமா, தேங்காய்பூ, பனைவெல்லம் சேர்த்து இப்படி வாழையிலையை தொன்னையாக செய்து அதில் வைத்து  உடன் தேங்காய்பூவை துருவி மேலே போட்டுத்தருவாங்க.உள்ளே பூரணமாக தேங்காய்பூ,வெல்லம்.



     

                                           கச்சான் அல்வா.

அங்கு மார்க்கெட் ல அலங்கார பொருட்கள் விற்கும் கடைகளில் இப்படியான பிள்ளையார் விதவிதமாக இருக்கார். எதை வாங்குவது, எதை விடுவது எனத்தெரியவில்லை.

ஒருவழியா மூவர் பெயரையும் கம்போடியா தீவு ஒன்றில் பதிந்துவிட்டேன். வரலாறு முக்கியம்.  இது கம்போடியாவில்  sihanoukville city லிருந்து ஒரு தீவுக்கு சென்றிருந்தோம். அங்கு கடற்கரையில் எழுதியது. ஏதோ நம்மால் முடிஞ்சது.😁😁😁

.



59 comments:

  1. //இன்று போல் என்றும் சந்தோசமாக, நல்லாரோக்கியமாக வாழ வாழ்த்துகின்றேன். அனைவரும் அன்பு அதிராவை வாழ்த்துங்கள்.//

    எனது வாழ்த்துக்களும் அதிராவுக்கு அம்மு.
    இப்போது தான் முகநூலில் அவர் பிறந்த நாளை பார்த்து அவர் தளம் சென்று வாழ்த்து தெரிவித்து விட்டு வந்தால் உங்கள் வாழ்த்து பதிவு!

    இன்று போல் எப்போதும் மகிழ்ச்சியாக எல்லோரையும் மகிழ்ச்சி படுத்துக் கொண்டு இருங்கள் உங்கள் நட்பால் அம்மு, தேவதை, அதிரா.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கோமதி அக்கா மிக்க நன்றி.

      Delete
  2. கம்போடியா நினைவுகள் அப்படியே நம் நாட்டு நினைவுகள் போலவே! நிறைய தமிழ் சொல் கம்போடியாவில் இருக்கிறது என்பார்கள். இறைவன்(பிள்ளையார்) அவருக்கு செய்யும் மோதகம் எல்லாம் இங்கிருந்து அங்கு போனவர்கள் செய்வது தான் என்று நினைக்கிறேன். தேங்காய் பூ வெள்ளையாக நீட்டமாக இருந்தவுடன் முதலில் நினைத்தேன் கொழுகட்டையும் இடியாப்பமும் என்று அப்புறம் தான் தெரிந்தது துருவி போட்ட தேங்காய் பூ என்று.

    படங்கள் அழகு.
    மிளகாய் தூவிய மாங்காய் கீற்று. அவிச்ச கடலை எல்லாம் பார்க்கும் போது பள்ளிப் பருவம் நினைவுக்கு வந்தது.

    மலர்கள் அழகு.

    படங்கள் மிக அழகு.

    கடல் மணலில் எழுதி இருக்கும் உங்கள் பெயர்களை கடல் அலைகள் பத்திரமாக எடுத்து சென்று வைத்து இருக்கும்.
    பொருட்களை வெளியே கொண்டு வந்து தள்ளும் ஆனால் உங்கள் நட்பு மிக ஆழமானது, அதை உள்ளே பத்திரபடுத்தி வைத்து இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நானும் முதலில் மோதகம் என நினைத்து, ஆ.. இங்கு மோதகம் வாங்குங்கோ என சொல்லி வாங்கி சாப்பிட்டுபார்த்தால் நல்ல டேஸ்ட், வித்தியாசமாக இருந்தது அக்கா. ஆனா பருப்பு இல்லை. சுகரா என கேட்க ,இல்லை பனை வெல்லம் என படம் காட்டினார் விற்ற பெண்மணி. அங்கு பாஷை ஒரு பிரச்சனை. இதை பற்றி பதிவில் எழுத்கிறேன்.
      உப்பு,மாங்காய் என் பேவரிட். சில சிட்டியில் தள்ளு வண்டியில் விற்பார்கள். கொஞ்சம் சுத்தமா. அது வாங்கியிருக்கேன். எனக்கு பாண்டிச்சேரியில் ஒரு முறை பீச் பக்கம் வாங்கி சாப்பிட்டு food poison வந்தபின் பயம் என்னவருக்கு. நான் அங்கு வேண்டியளவு வாங்கி சாப்பிட்டாச்சு.

      Delete
    2. கடற்கரையில் மட்டுமல்லாது, மரத்திலும் எழுதியது..எழுதிய இடத்தில் கமரா அனுமதி இல்லை. பதிவில் எழுதுகிறேன். கம்போடியா பதிவே 10,15 எபிசோட் வரும்போல.... அப்படி இருக்கு விடயங்கள்.

      Delete
    3. மிக்க நன்றி அக்கா.

      Delete
  3. பிள்ளையார் அழகு. எதை வாங்கினீர்கள்?
    நீங்கள் வாங்கிய பிள்ளையார் வரவில்லையே பதிவில்.

    ReplyDelete
    Replies
    1. ஆ.. லாஸ்ட் மினிட் டிக்கெட் ப்ளைட் எடுப்பது போல், இது லாஸ்ட் மினிட் சொப்பிங் அக்கா. நான் ஒன்னுமே வாங்கலை. படம் மட்டும்தான்.கர்ர்ர்ர்ர்ர்
      ஏற்கனவே இருக்கிறார் பிள்ளையார். விலை அதிகம். வெயிட் அதிகம் எடுத்து போகமுடியாது சிங்கப்பூருக்கு. குழப்பத்திலேயே வாங்கவில்லை. அதைவிட முக்கிய விடயம் இக்கடையில் பேரம் பேசமுடியாது. நிர்ணயித்தவிலைதான். வாங்கியிருந்தால் படம் போட்டிருப்பேனே.

      Delete
  4. அதிராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
    படங்கள் ஸூப்பர் கடைசி மணல் எழுத்துகள் அருமை...

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி.. எல்லோருக்கும் என்னை டபிளாக வாழ்த்தும் வேலையாக இருக்கிறது இன்று.. ஹா ஹா ஹா

      Delete
    2. உங்க கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அண்ணா ஜீ.

      Delete
  5. கச்சான் அல்வா கடலை மிட்டாய் பார் போலவே இருக்கே!

    ReplyDelete
    Replies
    1. இப்படித்தான் ஶ்ரீலங்காவிலும் இருக்கு. ஏதோ விதவிதமா வைத்திருந்தாங்க. இப்ப இது அதிராவுக்காக போட்டேன். கூடுதலாக பனைவெல்லம் பாவிக்கிறாங்க. வெள்ளை சீனி(சர்க்கரை) குறைவு.

      Delete
  6. அதிராவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    படங்கள் அழகு கடைசி மணல் எழுத்து படங்கள் ஸூப்பர்

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் நன்றிகள் அண்ணா ஜீ.

      Delete
  7. // வீடுகளிற்கு முன்னால் அதாவது வாசலில் துளசி, திருநீற்றுபச்சிலை, கற்பூரவள்ளி வைத்திருப்பது. //

    மருத்துவத்திற்கு பயன்படும் என்பதை தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நாங்கள் ஹோட்டல் பணியாளரிடம் கேட்டபொழுது, இவை வைத்தால் கொசு, பூச்சி வீட்டிற்கு வராதாம் எனச்சொன்னார். மருந்துக்கும் பாவிக்கலாம்.
      உங்க வாழ்த்துக்களுக்கும்,கருத்துக்களுக்கும் மிக்க நன்றி அக்கா.

      Delete
  8. இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மியாவ் :)  எல்லா நலத்தோடும் சந்தோஷத்தோடும் எங்களைஎப்பவும் ஹேப்பியா வைக்கணும்னும் நீங்களும் எப்பவும் ஹேப்பியா இருக்கணும்னும் இறைவனை பிரார்த்திக்கிறேன் :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி அஞ்சு.. நன்றி.. நீங்கள் எல்லோரும் என்ன்னோடு ஒட்டுதலாக இருக்கும்போது எனக்கென்ன கவலை..

      Delete
    2. ஆ...அஞ்சு வாங்கோ வாங்கோ. பூசார் இன்று ஓடித்திரியுறார் நேரமில்லாமல்.....

      Delete
  9. ப்ரியா சூப்பர் போஸ்ட் அண்ட் சூப்பர்ப் குயில்லிங் .கண்ணு மட்டும் கொஞ்சம் சின்ன வேரியேஷன் .அதை பிறகு சொல்லித்தரேன் .ஆஹா இப்போதான் கவனிச்சேன் நீங்க பேப்பருக்கு பதில் கூக்ளி கண்ணு வச்சிருக்கீங்க :) பேப்பரில் செஞ்சா அது சிரிக்கும் :) 
    பொறுமையா நீட்டா செஞ்சிருக்கீங்க .நானும் கிளிப்பார்ட் எடுத்து வச்சேன் டைம் கிடைக்கலை வார்லி கேட் கூட செய்ய நினைச்சேன் :) இன்னொருநாள் செஞ்சிடலாம் .மற்றவற்றிற்கு பிறகு வரேன் ..பயணத்தில் இருக்கேன் ..ஆற்றங்கரையில் பெயர்கள் சூப்பர் 

    ReplyDelete
    Replies
    1. உங்க பதில் பார்த்தபின்தான் கொஞ்ச நிம்மதி. ""குருவாக்கு அருள் வாக்கு மாதிரி."(கடவுளே இதை பூஸுக்கு மறைத்திடு) நான் உண்மையைதான் சொன்னேன். ஏன் என்றா இது ப்ர்ஸ்ட் டைம் இப்படி செய்வது. என் நிலைமை உங்களுக்கு தெரியும். ஒரு மாதிரி செஞ்சுமுடிச்சிட்டேன். அதனால் சூப்பர் என்றதும் மிக்க மகிழ்ச்சி. நன்றி அஞ்சு.
      ஆ..கண் எனக்கு சவாலா இருந்தது. அதனால் அந்த கண்ணை வைத்தேன். என்னவோ பூஸார் உருட்டி உருட்டி பார்க்ககிறமாதிரி இருக்கு.

      Delete
  10. ஆஆஆஆவ்வ்வ்வ் அம்முலூஊஊ வருகிறேன் வருகிறேன் வெளியே நிக்கிறோம்ம்ம்..... மெய் குளிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ந்திட்டேன்ன்ன்ன்.... ஒவ்வொன்றையும் ரசிக்க வருகிறேன்ன்ன்ன்ன் நன்றியோ நன்றி🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. ஆ.... பேர்த்டே பேபி..வாங்கோ வாங்கோ. ஆறுதலா வாங்கோ. நன்றி எங்களுக்குள் சொல்லவேண்டாம்.

      Delete
  11. ஆவ்வ்வ்வ் முதலில் மன்னிப்பு வேண்டும் அம்முலு, நேற்று நீங்க அஞ்சு பக்கம் சொன்னமையால், விடிய எழும்பியதும் செக் பண்ணினேன், கொமெண்ட்ஸ் போட்டு விட்டுப் போகலாம் என, ஆனா அப்போ என் கண்ணுக்குத் தெரியவில்லை.. அல்லது அதன் பின்னர்தான் போஸ்ட் வந்திருக்குதோ தெரியாது.. இப்போ ஓடி வந்தேன், இன்று சனிக்கிழமையும் என்பதால கொஞ்சம் முடியாமலே இருக்குது..

    ஒரே இன்ப அதிர்ச்சியாக்கிட்டீங்க நீங்களும் அஞ்சுவும்.. இதற்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை...

    ReplyDelete
    Replies
    1. இல்லை அதிரா. கொஞ்சம் லேட்டாகிட்டுது. மன்னிச்சு. அதனால் என்ன நீங்க நேரமிருக்கும்போது வாங்கோ. எனக்கும் சனிக்கிழமை வந்தபடியால் கொஞ்சம் சிரமம்தான். ஆனாலும் அழகான பார்ட்டி நாங்க இருவரும் கொடுத்துவிட்டோம். ஆனா அடுத்த வருடம் நான் 1 நாள் பிந்திதான் வாழ்த்து போடபோறேன். இப்பவே சொல்லீட்டன் சரியா. பேர்த்டே பேபி அங்குமிங்கும் ஓடித்திரியவேண்டாமே என்றுதான். ஹா..ஹா..ஹா..

      Delete
  12. //யசகி
    மாற்றம் ஒன்றே மாறாதது...!
    SearchRSS
    22/02/2020
    பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
    HAPPY BIRTHDAY ATHIRA. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

    பூலோலியூர் பூசானந்தா, ஆஷாபோஷ்லே , கவிஅமுதம், மாஸ்டர் செப், இடிதாங்கி, திலோத்தமை, இப்போ அருந்ததி//

    நோஓஓஓஓஒ இதை நான் ஒத்துக்கவே மாட்டேன்:) இதில குவாட்டர்:)) இது வேற குவாட்டர் பட்டங்கள்தான் இருக்குது.. மெயின் பட்டங்களைக் காணம்:))

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........... எத்தனை பட்டங்கள்தான் பறக்கவிடுவீங்கள். எல்லாம் எழுத எனக்கு ப்ளாக் பக்கம் காணாது. அதற்கு தனி பேமெண்ட் தேவைபடும். Trade markஇவைதான் கொஞ்சம் நிலைத்திருக்கு. அதுதான் எழுதினேன்.

      Delete
  13. //தினுசு தினுசா செய்து எங்களையெல்லாம் தலை கிறுகிறுக்க வைக்கிற அன்பான, பண்பான, அடக்கமான, தமிழ் எழுத்தில் பிழைவிடாமல் லகரம்,ழகரம் எழுதி டி எடுத்த என்றும் 16 வயது//

    ஹா ஹா ஹா... இன்னும் தொடரும் எதற்கும் ரெடியா இருங்கோ:))..

    //அதிராவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.//

    நன்றி அம்முலு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நாங்க எல்லாத்துக்கும் ரெடிதான். அஞ்சு இருக்க பயமேன். குல்ட், கட்டிலுக்கு கீழ போக எல்லாத்துக்கும் தயாரா இருங்கோ... ஹா..ஹா..ஹா

      Delete
  14. வாவ்வ்வ்வ்வ் பூஸ் குயிலிங் சொல்லி வேலையில்லை... என்னா அழகாக வந்திருக்குது... முதல் படத்தில் பூஸார் மீசையைக் கழட்டிப்போட்டு நிற்கிறார்ர் ஹா ஹா ஹா. நானும் பல காலமாக ஒரு பூஸ் குயிலிங் செய்ய நினைக்கிறேன்ன் ஆனா கால நேரம் கூடி வருகுதில்லை, நீங்கள் அஞ்சுவைப்போல சூப்பராக செய்திருக்கிறீங்க அம்முலு மியாவும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஹா...ஹா... எனக்கு டெய்சிபிள்ளைதான் ஞாபகம் வந்தா. இப்ப ஒரு படம் லேட்டஸ்டா போட்டிங்கள் எல்லோ. அது. மீசை வைக்கமுன் எடுத்த படம் உண்மையில் இதில் மாறி போட்டது. சரி இருக்கட்டுமே என விட்டுவிட்டேன்.ஹா...ஹா. ஆனா அதில் குயிலிங் ஆ செய்து வைத்திருக்கேன். அது எதிர்பாராமல் நடந்தது. அதுவும் வடிவா இருக்கல்லோ.. நான் வேற ஐடியாதான் இருந்தது. பின் இப்படி செய்து பார்ப்போம் என செய்தது. நன்றி அதிரா.இந்நாளில் நீங்க நல்ல சந்தோஷமாக இருந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். நன்றி.

      Delete
  15. //அதிராவுடனான நட்பு தொடர்கிறது என்றால் அது அவருடனான புரிந்துணர்வால் தான். எல்லாவற்றையும் டேக் இட் ஈசி என எடுத்து, எவ்வளவு கலாய்தாலும் அவரின் நகைச்சுவை எழுத்தால் எழுதி அத்தனையும் கடந்து சென்று விடுவார். ///

    ஆவ்வ்வ்வ்வ் என்னை எல்லோரும் அழ வைக்கிறிங்க... இருப்பினும் அம்முலுவின் தொடர் விசாரிப்புக்களால்தான், நான் காணாமல் போனாலும் தொடர்ந்து தேடிக் கண்டு பிடிக்கும் உங்களால்தான் நம் நட்பு தொடர்கிறது என நான் எப்பவும் நினைப்பதுண்டு.

    //அதிரா நண்பியாக கிடைத்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. //

    ஆவ்வ்வ்வ்வ் அஞ்சு இதைக் காணவில்லைப்போலும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அஞ்சு இந்தாங்கோ ஒரு கப் மோர்ர்.. கூலாக இருக்குது குடியுங்கோ:)) ஹா ஹா ஹா..

    ReplyDelete
    Replies
    1. நீங்க கடைசியாக போட்ட பதிவில்
      AngelWednesday, February 19, 2020 2:19:00 pm
      ஊசிகுறிப்பில் ஒன்றும் இணைக்கலாம் சிலர் நம்மிடம் பாடம் கற்கவும் வந்திருப்பார்கள்..

      சுவீட் 16 அதிரா:)Wednesday, February 19, 2020 2:36:00 pm
      அது உண்மைதான் அஞ்சு, ஆனா அப்பூடி நம்மிடம் என்னதான் இருக்கிறது மற்றவர்கள் கற்றுக்கொள்ள:)) ஹா ஹா ஹா...
      இதற்கான பதிலை நான் மேலே சொல்லியிருக்கேன் அதிரா. நான் உங்களிடம் கற்றவை. அஞ்சுவிடம் இருந்தும் கற்றிருக்கேன்.
      இதை உங்களுக்கு இதில் சுட்டிகாட்டவேண்டுமென அப்பவே நினைத்துவிட்டேன். நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சரியா.

      Delete
  16. //பாருங்க அதிரா உங்களோட பேவரிட் அவிச்ச கடலை, உப்புதூள் மாங்காய், அ.கோ.மு இவை கம்போடியாவில் மிகபிரபலம். ரோட்டோரங்களில் இவைகளை காணவில்லை என்றால் அதிசயமே. //

    ஆவ்வ்வ்வ் எனக்கு என்னமோ அம்முலு இந்த ரோட்டோரக் கடைகளில் வாங்கிச் சாப்பிடோணும் என பைத்தியமாக அலைவேன்.. இங்கு இல்லையே:(... யூ ரியூப்பிலும் street food தான் தேடிப் பார்ப்பேன்.. சூப்பராக இருக்கு பார்க்கவே..

    //இதைபோல தான் அ.கோ.மு எங்குமே காணமுடிந்தது.//

    இப்பகூட அது ஒன்று சாப்பிட்டு விட்டுத்தான் இருக்கிறேன்ன் ஹா ஹா ஹா:).. அ.முட்டையைக் கிரில் பண்ணிக் குடுக்கினமே புது ஸ்டைலாக இருக்குது.

    ReplyDelete
    Replies
    1. கம்போடியாவுக்கு போங்க அப்ப. அங்கும் ரோட்டோரக்கடைகளில் நான் வாங்கி சாப்பிட்டிருக்கேன். சிலபேர் நல்ல நீட் ஆ வைத்து விற்றுக்கொண்டிருப்பார்கள். அப்படியென்றா உடன் வாங்கிடுவேன்.சிலது சுத்தமில்லை.
      அதையேன் கேட்கிறீங்க. அ.கோ.மு வில் அந்த தடியை நுழைத்து க்ரில் செய்து விற்கிராங்க. சிலவற்றில் உள்ளே ஏதோ வைத்திருக்கிறாங்க. இதை படம் எடுக்க நான் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். பக்கத்தில் இறைச்சியை பனாட்டு மாதிரி செய்து க்ரில் செய்வாங்க. அது தாங்கமுடியாத மணமா இருக்கும். அடுத்து பாஷை பிரச்சனை. ஏதும் கேட்டால் சையால் ஏதோ சொல்வாங்க. அதனால் சிலவற்றை கேட்கமுடிவதில்லை. இவைகளை அந்நாட்டவர்கள்தான் வாங்கி சாப்பிடுகிறார்கள்.வெள்ளையளை காணமுடிவதில்லை.
      யா.. நாங்களும் இந்த street food யூ ட்யூப்பில் பார்ப்போம். சூப்பர்தான்.

      Delete
    2. ரோட்டோரம் நம்பி வாங்கிச் சாப்பிடுவது பயம் தான், ஆனா மாங்காய், பழ வகைகள் பயப்படாமல் வாங்கலாம்...
      கொழும்பில் அப்பா வாங்கியே தரமாட்டார்ர் ஆனா கணவர் அனைத்தும் வாங்கித் தந்திடுவார்ர், ரெயினில் விற்கும் வடையிலிருந்து, தள்ளு வண்டிச் சுண்டல், கோல்ஃபேஸ் கொத்துரொட்டி அனைத்தும் சாப்பிட்டிருக்கிறேன், அப்பாவுடன் எனில் அன்னபூரணியில் அல்லது இன்னொரு சைவ ஹோட்டல் அப்போ பேமசாக இருந்தது தங்கும் ஹோட்டல் வசதியோடு சைவ ரெஸ்டோரண்ட்.. அங்கும் மட்டும்தான் சாப்பிட முடியும் கர்ர்ர்ர்ர்:))..

      Delete
  17. ///.
    உங்க மைத்துனிக்கு கொடுக்கவேண்டிய நேர்த்திக்கடன் வைரநெக்லஸை எப்படியாவது வாங்கி அவாவிடம் கொடுத்துவிடுங்கோ....//

    ஹா ஹா ஹா குண்டுப்பிள்ளையாருக்கு இதுக்கெல்லாம் எங்கு நேரமிருக்கப் போகிறதோ:))

    ஓ அங்கும் துளசி, க.வள்ளி இருக்குதெனக் கேட்க அதிசயமாக இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்... நான் சொல்லியிருக்கேன் அவரிடம்.
      இந்த பிள்ளையார் நாங்க இருந்த ஹோட்டல் முகப்பை அலங்கரிக்கிறார்.
      எல்லா வீட்டு வாசலிலும் இருக்கு அதிரா. முகப்பில பாத்தி மாதிரி கட்டி வளர்த்து வாறாங்க. ஏன் ,எதற்கு என கேட்டால் பூச்சி,கொசு வராதாம். எங்க வீட்டிலும்தான் நின்றது. பின்னேரமானால் நுளம்பு சொய்ங் ந்னு வந்திடும்....
      அங்கு கறிவேப்பிலை செடி தேடுவாரற்று இருக்கு. கர்ர்ர்ர்ர்ர்ர்.

      Delete
    2. அப்போ அங்கு சைவ சமயத்தவர்கள்தான் அதிகம் போலும்.. அது சரி என் ஆஆஆஆஆஆஆஆல மரம் எங்கேஏஏஏஏஏஏஏஏஏஏஏ?:))

      Delete
    3. கெதியில் ரிலீஸ் செய்கிறேன்..

      Delete
  18. //இது கம்போடியாவில் sihanoukville city லிருந்து ஒரு தீவுக்கு சென்றிருந்தோம். அங்கு கடற்கரையில் எழுதியது. ஏதோ நம்மால் முடிஞ்சது//

    ஓ வாவ்வ்வ்வ் நான் நினைச்சேன்.. இது ஜேர்மனியில் ஸ்னோவாக்கும் ஸ்னோவில் எழுதியிருக்கிறீங்க என.. கம்போடியாவில் நின்றும் எம்மை நினைத்தமைக்கு நன்றிகள் அம்முலு...

    மீண்டும் பின்பு வாறேன்.. இப்போ முடியல்ல தலைக்கு மேல பிஸியாக இருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....... இம்முறை இன்னமும் சரியான முறையிலே வராத ஸ்னோவை ஏன் கூப்பிடுறீங்க. அதுவேறு யோசனை. கடந்தவருடம் போல அப்பிள் மரம் பூக்கத்தொடங்க கொட்டினால் என்ன செய்வது...
      சரி சரி ஆறுதலா வாங்கோ. இந்த பிசியான டைமில் வந்ததற்கு மிக்க நன்றி அதிரா. நல்லா பேர்த்டே பார்ட்டியை கொண்டாடுங்கோ,சதோஷமா இருங்கோ.

      Delete
    2. Angel22 February 2020 at 16:42
      Hair style;))))))
      அஞ்சு ஹா..ஹா..ஹா..

      Delete
    3. //
      Angel22 February 2020 at 16:42
      Hair style;))))))//

      குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
    4. இனி மேல்தானே ஸ்னோவே வரப்போகுதாம், எங்களுக்கு இங்கு காத்து மழை ஸ்னீ, ஹேல் ஸ்டோன் மாறி மாறிக் கொட்டுது, டக்குப் பக்கென சுவிஜ் போட்டு விட்டதைப்போல பயங்கர வெயிலும் அடிக்குது... “4 சீசன்ஸ் இன் வன் டே” எனச் சொல்வார்கள் இங்கு பழமொழி:)).. நாளை வெரி பாஆஆஆஆஆஅட்ட்ட் வெதராம்ம்ம்ம் சிலநேரம் ஸ்கூல் மூடுவார்களாம்ம்ம்ம்ம்ம் ஆஆஆஆஆஆஆஅவ்வ்வ் மீ வெயிட்டிங்:)

      Delete
  19. மீண்டும் ஒருமுறை இங்கு வந்து, மீண்டும் பிறந்துள்ள அதிராவுக்கு, மீண்டும் மீண்டும் என் வாழ்த்துகள். :)

    அம்முலுவின் வீட்டுக்கு நான் வந்து பல்லாண்டுகள் ஆகி விட்டன. அதுபோல அம்முலு என் வீட்டுக்கு வந்தும் பல்லாண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும் அம்முலுவின் இனிய குரல் மட்டும் என் காதுகளில் இன்னும் ஒலித்துக்கொண்டே உள்ளது. :)

    நல்லா இருக்கீங்களா அம்முலு?

    என்றும் அன்புடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. ஆ... கோபு அண்ணா வந்திருக்கிறார். வாங்கோ,வாங்கோ. உங்க வரவுக்கும், நல விசாரிப்புக்கும் மிக்க நன்றி கோபு அண்ணா. நாங்க நலம். நாடுவதும் அதுவே.
      வரவேண்டும்,வருகிறேன் கோபு அண்ணா. உங்க வாழ்த்துக்களுக்கும், வருகைக்கும் மீண்டும் நன்றிகள்.

      Delete
    2. நன்றி கோபு அண்ணன் நன்றி.

      Delete
  20. அழகிய படங்கள்...

    சகோதரிக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  21. அதிராவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....என்றும்..🍦🍡🍦🍰🎂🍰🍦🍡


    சுவையான பதிவு அம்மு...🍨🍨🍨

    உங்கள் அனைவரின் பாசம் வியப்பாக காண்கிறேன்..மிக அழகு,,💐💐💐
    .


    Qulling பூசார்... so cute..🍫🍬🍫🍬🍫

    அரிசி மா இனிப்பு பார்க்கவே அருமையா இருக்கு...😁😁😁

    மணலில் பெயர்கள்... ஆஹா😍😍😍

    ReplyDelete
    Replies
    1. வாங்க அனு. வாழ்த்துக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

      Delete
  22. ஆஆஆ !!! பதிவும் படங்களும்சூப்பர் . கம்போடிய பிள்ளையார் ஜொலிக்கிங் .அங்கும் மாங்காய் உப்பு மிளகாய் காம்போவா :) அப்போ சவுத் இந்தியா ஸ்ரீலங்காலருந்து அங்கே செட்டில் ஆனவங்களோ :) எனக்கு ரொம்ப பிடிக்கும் .அந்த மோதகம் அரிசிமாவுதானா ? என் வியட்நாமிய தோழி செய்தார் அது ஜவ்வரிசியை பந்து போலாக்கி அதில் இனிப்பு பூரணம் இருந்தது .
    சத்தான சிற்றுண்டி பதிவுக்காக வெயிட்டிங் ..பூஸ் கண்ணு செய்யும் முறை விரைவில் சொல்றேன் .ரொம்ப ஈஸி .கூக்ளி கண்ணு பெரும்பாலும் முயல் அல்லது  தேனீ போன்ற அனிமேட்டட் வகைக்கு சூட் ஆகும் இதுவும் நல்லா இருக்கு அப்படியே டெய்சி பார்க்கிறாற்போல :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அஞ்சு. அங்கு ஒரு சிட்டிக்கு போனோம்,பார்த்தால் எங்கூர் மாதிரியே இருக்கு. பனைகள்,தோட்டம், வயல் மாதிரி என இருக்கு. உடனே நான் சொன்னேன்,ஜவ்னா வந்திட்டமா என, அப்படி.
      மோதகம் சூப்பர் டேஸ்ட். அது அரிசி அரைச்சு,மாவாக்கி,பால் எடுத்து என கொஞ்ச நாள் எடுக்குமாம். frühling roll செய்ய யூஸ் பன்னுவாங்களே (எங்கட றோல் இல்லை) அந்த பேப்பர் இப்படிதான் செய்றாங்க. எல்லாமே கைவேலை. பிரமிப்பா இருந்தது அஞ்சு. நான் போடுறேன்.
      எனக்கு கண்டிப்பா இது பற்றி உள்டப்பியில் சொல்லுங்கோ. கண் நான் அவசரப்பட்டு எப்படியிருக்கும் என பார்ப்போம் என்பதற்காக வைத்தது. ஆவ்வ் நானும் டெய்சியை நினைத்தேன். குண்டு பூஸ் ஆக செய்தது.
      உங்க பிசி டைமிலும் வந்து கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க ந்ன்றி கள் அஞ்சு.

      Delete

 
Copyright பிரியசகி