RSS

01/04/2020

புத்தரும், Marlboro சிகரெட்டும்...

இது கம்போடியாவின் தலைநகரத்தில் இருக்கும் ஒரு புத்தகோவில். 1327 ல் கட்டப்படது. 88.5 அடி உயரமான கோவில். அந்த நகரத்திலிருக்கும் மிக உயரமான கோவில். 

                            Board ல் எழுதியிருந்தது.

                        வாயில் முகப்பு.உயரமாக ஏறி போகனும்.

                           மேலிருந்து பார்த்தால் இப்படி இருக்கும்.


 உள்ளே புத்தர்சுவாமிகள் பல பரிவாரங்களுடன் புடை சூழ இருந்தார்.







இவருக்கும், பரிவாரங்களுக்கும் படைக்கப்பட்டிருக்கும் பொருட்கள்....பாருங்கள்.

                                            பீடா, சிகரெட்

                                 காசு,பணம், துட்டு, மணி, மணி

                    இவரை சுற்றி வெளியிலும் இதே மாதிரி இருக்கிறார்கள்...




                           சொக்லேட், காசு, தண்ணீர் போத்தல்



                             ஆனா இவைகளும் வைக்கப்பட்டிருந்தது..


                                இவர்களும் வணங்குகிறார்கள்..


                               நாளை எனும் கவலையில்லாமல்...
+++++++++++++++++++++++++++++++++++++
சின்ன செய்தி>>
சும்மாவே நான் கை அடிக்கடி கழுவும் பேர்வழி. மகனையும், கணவரையும் வெளியில் போய் வந்தவுடன் (மகன் மறந்திடுவார்)கழுவச்சொல்வேன். இப்ப இந்த கொரோனா வந்து என் வேலையை மிச்சப்படுத்திவிட்டது. என்னை ஏசுவார்கள் எப்ப பார்த்தாலும் கையை 1008 தரம் கழுவிக்கொண்டு இருக்கிறாய் என.  ஆனா யோசிச்சு பாருங்கோ வீட்டுவேலை செய்வது நான். அதுவும் க்ளீனிங் என்றா கட்டாயம் கழுவ வேண்டும்தானே. கிச்சனில் கழுவ வேண்டுமெல்லோ. எப்படி பார்த்தாலும் நிறைய தரம் கழுவவேண்டும்.   இப்ப எல்லாரும் வீட்டில் அடிக்கடி கை கழுவிக்கொள்ளுகிறார்கள்.

*******************************************************
அதிரா வீட்டு பொருட்கள் என்னிடமும்.......
என்னிடம் இருப்பது, மாமா அனுப்பினார்,  அம்மா, அண்ணா அனுப்பினவை  என  அதிரா அவாவின் ப்ளாக் ல் படம் போடுவா.  அதை பார்த்து இது என்னிடமும் இருக்கு என நான் எழுத, அதிரா என்னைபற்றி என்ன நினைப்பா சொல்லுங்கோ. ஆனா நான் என்ன செய்வதாம். அது என்கிட்டேயும் எல்லோ இருக்கு..... அதான் படம் போட்டிருக்கேன் நானும்.  படங்களை உடன் எடுத்து சேர்த்தேன்.. அதுதான் பதிவு நீளமாகிவிட்டது.

                                 புட்டு பானை, இரும்புச்சட்டி
                                         
                             மூங்கில் குழல். புட்டு அவிப்பது


இது என் அம்மா பாவித்தது. குழம்பு,சொதி, பொரியல் என இதில் செய்வார். இப்போ இது என்னிடம். கடந்த வருடம் போனபோது இரும்புசட்டி தேடியலைந்து களைத்து போனபோது அக்கா எனக்கு இதை தந்தார். அம்மாவே என்னோடு இருப்பது போன்ற உணர்வு. கைபிடி கம்பி மிஸ்ஸிங். போடனும்.
                           
                                   அரிக்கன்சட்டி, அகப்பை
   
                                        கொய்யாகாய்
                            கொய்யா,  நெல்லிக்காய், அம்பிறலங்காய்
சுளகு. இதை பாவிக்கிறனோ இல்லையோ  வாங்கி வந்தேன். ஆனாலும் மா அவித்து ஆறவிடுவேன். புட்டு குத்துவது இதில்தான். எனக்கு இது சரியான விருப்பம்.  அம்மி ஒன்றுதான் இல்லை.அதுவும் அடுத்தமுறை வந்துவிடும் என என் கணவர் சொல்கிறார். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்
                          இடியப்ப உரல்,  முறுக்கு உரல், அச்சு உரல்
                                      கித்துள்

இது ஆனைக்கோட்டை நல்லெண்ணைய். ஆனைக்கோட்டை என்பது ஒரு ஊர். இங்குதான் நல்லெண்ணைய் பிரபலம். அங்கு இன்னும் பரம்பரையா செக் கில் ஆட்டி எடுத்து எண்ணெய் விற்கிறார்கள். அவங்க கடையில் வாங்கி வந்தது. அக்கடையில் இருக்கும் ஐயா சொன்ன டிப்ஸ் நல்லெண்ணைய் கறுப்பு போத்தலில் வைத்து இருட்டில் வைக்கவேண்டுமாம். அத்துடன் ஈரம் படாமலிருந்தால் கெட்டுபோகாது, நீண்டநாள் இருக்கும் என்றார். இடது போத்தல் நான் போனபோது கொண்டு வந்தது. வலது பக்கம் இருப்பது இவ்வருடம் தை பொங்கல் அன்று வந்தது. 
   
                               இடியப்பதட்டு.




எல்லோரும் பாதுகாப்பாக, பத்திரமாக இருக்கவும்.🙏

34 comments:

  1. ஆஹா மார்ல்போரோ  தம் புத்தரா :))))))))) மக்கள் பொல்லாக்கூட்டம் :) சாக்லேட்  வச்சாங்க சரி பணம் வச்சாங்க சரி .இது அநியாயமில்லையா :) விட்டா காஜா பீடி கணேஷ் பீடிலாம் படைப்பாங்க போலிருக்கு .எல்லா   பொருட்களும் ரசித்தேன் .அம்மா பயன்படுத்திய சட்டியை அக்கா கொடுத்ததும் அக்காவுக்கு தான் நன்றி சொல்லணும் .பொதுவா பெண்கள் அம்ம்மாவின் பொருட்களை அவருக்குப்பின் தரவே யோசிப்பாங்க .கைப்பிடி ஓட்டை இருப்பதால் இரும்பு  கம்பி கட்டி கேர்புல்லாயூஸ் பண்ணுங்க .நான்லாம் கைய கழுவு தோல் கலர் போச்சுது :) படங்கள் எல்லாம் அழகு .

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு. என்ன வேணுமோ எடுங்கோ. நான் எடுத்தது ம்க குறைவு அஞ்சு. நடுவில் பெரிய புத்தருக்கு பரத்தி வைத்திருந்தாங்க. அவரை படம் எடுக்க தடை. நான் பிஞ்சு கவிஞரை பார்த்து ரகசியமா எடுத்தது பெரிய புத்தரை. அவருக்கு சிகரெட் பிடிக்குமாம் என ஒரு மூதாட்டி (வெளியில் இருந்த வரிடம் என் கணவர் கேட்டபோது சொன்னா.ஆவ்வ்வ்வ்வ்வ்) சொல்லிச்சு.
      அவாவே எனக்கு அம்மாதான் ஏன் என்றா அவாதான் என்னை வளர்த்தெடுத்தவா. நான் முதன்முதல் போட்ட சட்டை, பால்போத்தல்,செருப்பு,சாண்டில், என முதன்முதலாந்து எல்லாம் சேர்த்து வைத்திருந்தா. எல்லாம் 95 பிரச்சனையின் போது போயேபோச்சு. அவாவின் திருமண போட்டோ ஒன்றே ஒன்று மட்டும் இருக்கு.
      அப்படிபட்டவா எனக்கு கொடுத்தது. நான் வேண்டாமெனவும் தந்தவா. பூந்திகரண்டி கேட்டா. நான் அது வேண்டாம் என்றேன் பாரம் அது.

      Delete
    2. எனக்கும் இதேதான். தோலில் ஈரப்பதம் குறைந்துவிட்டது என க்ளவுஸ் தந்து பாவிக்க சொன்னார் ஸ்கின் டொக்டர். நான் பாவிக்கேல்லை. கம்போடியா போக சரியாகிட்டுது. இப்ப பழையபடி தோல் நிறம் மாறிவிட்டது. க்ரீம் போடுகிறேன்.
      மிக்க நன்றி அஞ்சு

      Delete
  2. 2018 இறுதியில் கம்போடியா சென்று வந்ததிலிருந்து அது என் மனதுக்கு மிகவும் நெருக்கமான நாடாகி விட்டது. அதனால் புகைப்படங்களை இரு மடங்காக ரசித்தேன். எல்லாமே அழகு பிரியசகி!
    இடியாப்பத்தட்டு மிக அழகு!

    ReplyDelete
    Replies
    1. வாங்க மனோ அக்கா. எங்களுக்கும் நல்லா பிடித்துவிட்டது. திரும்பவும் போகும் எண்ணம் இருக்கு.ஆனா நிலைமை எல்லோ தலைகீழ்.
      எனக்கு அங்குள்ள மக்கள், Battenbang city மிகவும் பிடித்துவிட்டது.
      அதனாலதான் நான் ரசித்த, பார்த்த, அனுபவங்களை பகுதி பகுதியா போடுகிறேன். மிக்க நன்றி அக்கா வருகை தந்து கருத்து பதிந்தமைக்கு..

      Delete
  3. வயதானவர்களுக்கு ஊரில் இருக்கும் உறவுகள் ஏதாவது வாங்கி அனுப்புவாங்க....இப்ப புரியுதா அதிராவிற்கு ஏன் ஊரில் இருந்து பொருட்கள் வருகின்றன. பெரியாவளுக்கு வாங்கி கொடுத்தால் புண்னியமாம்

    ReplyDelete
    Replies
    1. ஆஹா நீங்க இப்ப என்ன சொல்ல வாறீங்க ட்றுத். நீங்க தடி கொடுத்து அடி வாங்கியே தீருவேன் என்றா என்ன செய்ய நான். இப்ப வருவாங்க பாருங்க...
      அவ்வ்வ்வ்
      மிக்க நன்றி ட்றுத்.

      Delete
    2. ம்ஹூம்ம்.. உது இருக்கட்டும்:)).., ஆனா ட்றுத் கொரொனா பிளட் ரெஸ்ட் எடுத்தபின்.. இனி நயன் அக்க்கா திரும்பியும் பார்க்க மாட்டாவாம்ம்:)).. வட போச்சேஏஏ:)) ஹா ஹா ஹா..

      Delete
  4. ஆஆஆஆ என்னிடம் இருந்த பொருள் எல்லாம் இங்கயும் வந்திட்டுதே.... விடுங்கோ நான் இப்பவே போறேன் அம்முலு வீட்டுக்கு:).... எல்லாமே இருக்கே ... அம்பிரெல்லங்காய் உட்பட... அங்கு கிடைக்குதோ அம்முலு?
    புட்டுப்பானை நான் வாங்கவில்லை ஆனா ஸ் ரீமர் வைத்திருக்கிறேன் அதில் தான் மா, புட்டு, இடியப்பம் எல்லாமும் அவிப்பேன்.
    உங்கட புட்டுக்குழலுக்கு பிங் சட்டை போட்டிருக்கு ஹா ஹா ஹா... என்னிடம் சில்வர்தான் இருக்குது. திருவலகையும் சூப்பர்... எதுக்காம் உங்களுக்கு ரெண்டு திருவலகை:)..

    இடியப்பத் தட்டு, என்னா பெரிசூஊ...

    ReplyDelete
    Replies
    1. எப்பூடி நான் எழுதும்போது நினைப்பேன் படம் போடவேணுமென. இங்கு எல்லாமே கிடைக்குது பிஞ்சு செப். புட்டுபானை நீத்துபெட்டி எல்லாமே இருக்கு. அதில் அவித்து பாருங்கோ சூப்பரா இருக்கும்.
      ஹா..ஹா..ஹா... பிங்க் கலர் பார்த்தே வாங்கினேன். எனக்கும் பிங்க் விருப்பம். ரொபி கூட பிங்க் இருந்தால் முதலில் அதை எடுத்துவிடுவேன். பச்சை,ஓரேஞ் என இருந்தது. எனக்கு பிடிக்கேலை.
      ஹலோ எனக்கு இருந்து துருவுவதுதான் பிடிக்கும்.அதனாலதான் அது. மற்றயது கணவருக்கு...
      இடியப்பதட்டு பனைநார் நல்ல நெருக்கமா பின்னியிருக்கினம். வழமையா வாங்கும் கடை என்றபடியால் சொல்லி தந்தார். ஈசியா வரும் இடியப்பம்.

      Delete
  5. ///அதை பார்த்து இது என்னிடமும் இருக்கு என நான் எழுத, அதிரா என்னைபற்றி என்ன நினைப்பா சொல்லுங்கோ. ஆனா நான் என்ன செய்வதாம். அது என்கிட்டேயும் எல்லோ இருக்கு...///

    ஹா ஹா ஹா நீங்க ஒண்டும் யோசிக்காதீங்கோ அம்முலு, அதிரா சொல்றதைச் சொல்லுவாக்கும்:), நீங்கள் அது எதையும் கணக்கிலெடுக்கப்பிடாது:).. அதிரா சவுண்டு விடுவாதான்:), அதை நான் பார்த்துக் கொள்றேன்ன்ன்:)...

    ReplyDelete
    Replies
    1. இப்படியெல்லாம் சொல்லுவேன் நான். இல்லை அதிரா நீங்க பொடும்போது ஆ..இது எங்கிட்டே இருக்கே என நினைப்பேன். அதுதான் நான் ஜும்மா சொன்னேன்.ஹா..ஹ..ஹா..நீங்க என்ன நினைத்தாலும் பரவாயில்லை. எவ்வளவு அடித்தாலும் தாங்குவீங்களெல்லோ...ஹா..ஹா..ஹா ஓ..நீங்க பிஞ்சு செப் எல்லோ.சொறி.

      Delete
  6. உங்களிடம் இருப்பது இலங்கைச் சுளகு, என்னிடம் இருப்பது இந்தியா.
    அய்ய்ய்ய்ய் அம்முலுவிடம் மண் சட்டி இல்லைப்போலும் ஹா ஹா ஹா:)... இங்கும் சீல் பண்ணி போத்தலில் கிடைக்குது ஆனைக்கோட்டை நல்லெண்ணெய்.. அதுவும் இதயமும் தான் நாங்கள் வாங்குவோம்... ஆனா இனி எப்போ தமிழ்க்கடைப் பக்கம் போகக் கிடைக்குமோ தெரியாது:(

    ReplyDelete
    Replies
    1. ஹலோஓஓஒ...என்கிட்ட மண்சட்டி இருக்கு. அதுதான் போட்டோ மிஸ்ஸிங். நான் பாவிக்கிறதில்லை. ஏனென்றா கருகிபோகுது. அப்படியே தூக்கிக்கொண்டு போய் கார்டன் ஹவுஸில் வைத்துவிட்டேன்.
      என்னவோ அங்கி இருந்து கொண்டு வந்து எண்ணெய் சாப்பிட்ட பின் இங்கு வாங்கி சாப்பிட டேஸ்ட் இல்லை மாதிரி. நான் எப்படியும் 5லிட்டர் கொண்டு வந்துவிடுவேன். தமிழ் கடைக்கு நாங்க நேற்று போனோம். அரிசி,பருப்பு மற்ற சாமான்கள்தான் இருக்கு. காய்கறிகள் இல்லை. வரவில்லையாம். கர்ர்ர்ர்ர்.

      Delete
  7. கம்போடியாப் படங்கள் அழகு... மை பேவரிட் பீடாவும் இருக்கு:).. நான் பீடாவை எங்கு கண்டாலும் வாங்காமல் விடமாட்டேன் ஆனா வேறு நாடுகளில் நம்பி வாங்கலாமோ தெரியாது, உள்ளே ஏதும் இருக்கலாம்....
    தாமரைப் பூக்கள் அழகு.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் பிடிக்கும் பீடா. இங்கு நண்பிக்கு தெரிந்த ஒருவர் நன்றாக செய்வார்.அது சாப்பிடுவேன். மற்றபடி மலாயன் கபே பீடா பிடிக்கும். இந்தியாவில் சாப்பிட்டு தலை சுற்றி அனுபவப்பட்டபின் அங்கு சாப்பிடுவது இல்லை.
      மிக்க நன்றி பிஞ்சு செப்.

      Delete
  8. படங்கள் அனைத்தும் அழகு...

    'என்கிட்டேயும் இருக்கு' என்கிற வீராப்பு படங்களும்...!

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா..ஹா மிக்க நன்றி டிடி அண்ணா.

      Delete
  9. கம்போடியா படங்கள் எல்லாம் மிக அழகு.
    உதட்டில் லிப்சிஸ்டிக் பூசி கொண்டு நிற்பது நிஜம் என்று நினைத்தேன் கூர்ந்துப் பார்த்தால் சிலை. மிக அழகாய் செய்து இருக்கிறார்கள்.
    மலர்கள் எல்லாம் பூஜைக்கு வைத்து இருப்பது வெகு அழகு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அக்கா. நீங்களும் என்னை மாதிரியே நினைத்திருக்கிறீங்க. நானும் உள்ளே போக அப்படித்தான் நினைத்தேன். எல்லாம் அழகாக ஒழுங்குபடுத்தியிருந்தார்கள். கூடுதலாக வயதானவர்கள்தான் சுறுசுறுப்பாக செய்கிறார்கள்.

      Delete
  10. //பரிவாரங்களுக்கும் படைக்கப்பட்டிருக்கும் பொருட்கள்....பாருங்கள்.//

    தனக்கு பிடித்ததை இறைவனுக்கும் படைத்து மகிழும் மக்கள்.
    இங்கும் முனீஸ்வரனுக்கு(முனியாண்டி) சுருட்டு வைத்து வணக்கம் சொல்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அக்கா. என்ன பிடிக்குமோ அதையே வைக்கிறார்கள்.இன்னோர் இடத்தில் பன்றியை அப்படியே முழுசா சுட்டுவைத்திருக்காங்க. ந்டுவில் பெரிய புத்தருக்கு முன்னால் நிறைய இருந்தது. படம் எடுக்கமுடியல.

      Delete
  11. இவர்களும் வணங்குகிறார்கள்..//

    ஆஹா! பல் உயிர்களும் வணங்க்கிய வரலாறு இருக்கே!

    நாளை எனும் கவலையில்லாமல் விளையாடும் கம்போடியா குழந்தைகள் அழகு.

    ReplyDelete
    Replies
    1. அங்கு கோவில்களில் பூனை,நாய்,ஆடு,மாடு என செல்லபிராணிகள் அதிகம். நான் நினைக்கிறேன் அங்கு பராமரிக்க இருப்பவர்களுடையதோ தெரியல.

      Delete
  12. அதிராவிடம் இருப்பது உங்களிடம் அனைத்தும் அழகான படங்கள். சுளகு, இடியாப்ப தட்டு, புட்டு குழல், அம்மாவின் சட்டி அனைத்தும் அழகு. ஊரிலிருந்து அன்பாய் அனுப்பிய பொருட்கள் என்றால் மேலும் மகிழ்ச்சி இல்லையா?

    அம்மாவின் நினைவுகளை தாங்கி வந்து இருக்கும் பாத்திரம் .

    ReplyDelete
    Replies
    1. இவைகளை ஊரில் நான் பயன்படுத்தியது இல்லை. ஆனா இங்கு வந்தபின் அதில் விருப்பம் வந்து இவைகள் நான் போய் வரும்போது கொண்டுவந்தவை. இயலுமானவரை எல்லாமே பாவிக்கிறேன். அம்மா பாவித்த சட்டி இருப்பது கூடுதல் மகிழ்ச்சி.

      Delete
  13. //ஐயா சொன்ன டிப்ஸ் நல்லெண்ணைய் கறுப்பு போத்தலில் வைத்து இருட்டில் வைக்கவேண்டுமாம். அத்துடன் ஈரம் படாமலிருந்தால் கெட்டுபோகாது, நீண்டநாள் இருக்கும் என்றார்.//

    புது டிபஸ் . செக்கில் ஆட்டிய நல்லெண்ணைய், இதயம் நல்லெணைய் வாங்கி கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு முறையும் செல்லும்போது அவரிடமே வாங்கிவருவேன். ஊரிலும் அங்குதான் வாங்குவார்கள். அதனால் அவர் கூடுதல் அக்கறையோடு விசாரித்து இப்படி சொல்லுவார்.
      வருகை தந்து கருத்துக்கள் பதிந்தமைக்கு மிக்க நன்றிகள் அக்கா.

      Delete
  14. படங்கள் அனைத்தும் அழகு....
    சுளகு, மரத்தில்லான இடியாப்பக்கட்டை போன்றவைகள் எல்லாம் இனி வரும் தலைமுறைகள் அருங்காட்சியகத்தில் தான் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நீண்ட இஅடைவெளியின் பின் தங்கள் வரவு. மகிழ்ச்சி. உண்மைதான் இவைகள் இனிமேல் யாரும் புழங்கமாட்டார்கள்.கடைசி தலைமுறை நாங்களாதான் இருப்போம். மிக்க நன்றி வருகைக்கும்,கருத்துக்கும்.

      Delete
  15. ஒரே பதிவில் இவ்வளவு விஷயங்களா? மீண்டும் மீண்டும் படங்களையும் பதிவையும் பார்த்து ரசித்தேன். நீங்கள் புழங்கும் பல பொருட்களை இப்போதுதான் பார்க்கிறேன். ஊர் நினைவு உண்டாக்குகிறது ஒவ்வொன்றும். புத்தர் கோவில் படங்கள் அனைத்தும் பிரமாதம். ரசித்தேன் ப்ரியா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா. தனியாக போட ஆசை.ஆனா விரைவாக போடனுமே என ஒரே பதிவில் போட்டாச்சு. இப்பொருளெல்லாம் ஊரில் அம்மா ,பாட்டி பாவித்தபோது பார்த்தது. இங்கு ஆசைபட்டு வாங்கி கொண்டுவந்தவை.
      வருகை த்ந்து கருதளித்தமைக்கு மிக்க நன்றிகள் கீதா.

      Delete
  16. கம்போடியா படையல்கள் அருமை.
    உங்கள் பொருட்கள் எல்லாம் இங்கு என்னிடமும் :)
    மூங்கில் குழல் இப்பொழுது இல்லை.

    ReplyDelete
    Replies
    1. உங்க வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி மாதேவி.

      Delete

 
Copyright பிரியசகி