RSS

03/12/2012

ஸ்..ஸ் ..ஸ்னோ

                                                   
                                     
                                         Birthday from 123gifs.eu
அஞ்சுவிற்கு இனிய பிறந்ததினவாழ்த்துக்கள்.
நோய் நொடியின்றி தேகாரோக்கியத்துடனும்,நீண்ட ஆயுளுடனும் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்
.
(தகவல் தெரிவித்த அதிராவுக்கு என் நன்றிகள்.)

 4.12.12.
 ****************************************************   
  ஸ்..ஸ் ..ஸ்னோ முன்தினம் இரவிலிருந்து நேற்றுவரை இங்கு ஸ்னோ  தொடர்ந்து கொட்டிக்கொண்டேயிருக்கிறது.
                             இது முன்தினம் இரவு கொட்டும்போது எடுத்தது.

                 
 
                                  நேற்று விடிய காலை 7மணியளவில் எடுத்தவை.  

*******************************************************************
                                                 இவை இன்று எடுத்தது.
இங்கு இப்ப எல்லா இடமும் ஒரே வெள்ளை வெளேர் என இருக்கு. பார்க்க அழகாக இருக்கு. 
  
*****************************************************
*****************************************************

  
                     
 

                                              

22 comments:

 1. ஹையோ...ஸ்.ஸ் ஸ்நோஓஓ....
  ஓஓ.நோ..நோ...:))

  அழகா இருக்கு படங்கள் எல்லாம். கொஞ்சம் பிஸி. முடிச்சிட்டு வாறேன்ன்ன்ன்ன்.....;)))

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ யங்மூன்.உங்களுக்கும் ஸ்னோதானே.அப்ப மகிக்கு கொடுப்போம்:)ஸ்னோவைத்தான்
   உங்க வேலையை முடித்திட்டு வாங்க.

   Delete
 2. Nice photos..it's too good to take photos from house, but commuting in snow is vey difficult..:)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மகி.நீங்க சொன்னது உண்மைதான்.இன்று நான் இரு தடவை வாசல்பக்கம் உள்ளதை அப்புறப்படுத்தியாச்சு.(அப்பத்தான் காரை கராஜினுள் விடலாம்.) திரும்ப அதேஅளவு வந்திட்டுது. என்ன கைகுளிர்ந்து விட்டால் தான் ரெம்ப அவஸ்தை.என்னதான் கைக்கு கிளவுஸ்போட்டாலும் எனக்கு குளிர்ந்திடும்.மிக்க நன்றி மகி.

   Delete
 3. பார்க்க அழகாக இருக்கு. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி இராஜேஸ்வரியம்மா

   Delete
 4. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ப்ரியா ,
  எனக்கு இன்னும் நெட்வொர்க் சரியாகல்லை ,,லைப்ரரி வந்தேன்
  ஸ்னோ ...நோ நோ ..பார்க்க அழகா இருந்தாலும் காலையில்காரையும் ரோடையும்க்லீன் செய்ய வேணாம்னு போய்விடும் ..இங்கேயும்மைனஸ் ,,ரொம்ப குளிர் ..
  பணிவிலும் மலர்வனம் பாட்டு ரொம்ப famous நாங்க பள்ளி படிக்கும்போது

  ReplyDelete
  Replies
  1. வாங்க அஞ்சு. சந்தோஷமாக பிறந்தநாளை கொண்டாடியிருப்பீங்க.
   இங்கு வெதர் தெரியும்தானே.இனிமேல் ஸ்னோதான். க்ளீனிங் இல்லை யென்றால் சந்தோஷம்.
   மிக்க நன்றி வரவுக்கும்,கருத்துக்கும்.

   Delete
 5. ஆஹா.. அஞ்சுவுக்கு வாழ்த்துக்கள்.

  ஸ்நோ சூப்பர்.. எங்களுக்கு நேற்றுத்தான் முன்ன முன்னம் வந்துது.... ஒருகால் கொட்டிப்போட்டுப் போயிட்டார்:))..

  உங்கட ஏரியா சூப்பரா இருக்கு... குளிர் எப்படி?

  ReplyDelete
  Replies
  1. வாங்க அதிரா.இன்று மிக நன்றாக அஞ்சுவின் பிறந்தநாளைக் கொண்டாடினீங்கள். அழகாக இருக்கு உங்க கார்ட்.
   இங்கு ஸ்னோ கொட்டினால் அவ்வளவு குளிரா இருக்காது. இந்நேரத்தில்தான் வெளியில் நடக்கவேண்டுமென்பார்கள் இங்குள்ளவர்கள். அப்பத்தான் வருத்தம் வராதாம்.

   Delete
 6. படங்களுக்கேற்ப அழகான பாடல்.

  ReplyDelete
  Replies
  1. இதில் எனக்குபிடித்தபாடல்களை போடுகிறேன். இப்பாடலும்தான். மிக்க நன்றி அதிரா பிசியான நேரத்தில் வருகை தந்து கருத்திட்டதற்கு.

   Delete
 7. போடோஸ் எல்லாம் அருமையாக இருக்கு ப்ரியசகி.. என் கணவர் கூட ஒரு வாரம் ஆபீஸ் ட்ரிப் ஜெர்மன் போயிட்டு ரெண்டு நாள் முன்னாடி தான் வந்தார்.... இந்த பனில நான் இருந்தா அப்படியே ஓரஞ்சு போய்டுவேன்....

  இந்த பாடல் எனக்கும் ரொம்ப புடிச்ச பாடல்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க ப்ரியாராம்.ஸ்னோவை க்ளீன் செய்யும்போது மட்டும் கஷ்டமா இருக்கும்.மற்றபடி பார்க்க அழகாக இருக்கும்.எல்லா இடமும் வைட்டா இருக்க அழகு.
   இந்த போட்டோஸ் என் வீட்டைச்சுற்றி எடுத்தது. மிக்க நன்றி ப்ரியாராம்.

   Delete
 8. அட! அட! எல்லா இடமும் பனிவிழுதா! எனக்குத்தான் கிடைக்கேல்ல பார்க்க. படம் எல்லாமே வடிவா இருக்கு ப்ரியா.

  பனி விஉம் மலர்வனம் மிகவும் பிடிக்கும். ஆனால்... பாடல் எடுத்து இருக்கும் விதம் இப்போ பார்க்க சப்பென்று இருக்கு.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் அனுப்பவா? ஸ்னோவை. இப்பவும் கொட்டிக்கொண்டிருக்கு.படம் பார்க்காமல் பாட்டைமட்டும் கேளுங்க. ரெம்ப நன்றி இமா எல்லாத்துக்கும்.

   Delete
 9. அம்மு....உங்களிட்டை அண்டைக்கு வந்திட்டு திரும்ப வாறன் எண்டிட்டு போனதுதான்...திரும்ப வர ஏலாமல் இடைவழியில பனியில அப்படியே உறைஞ்சு போனன்....:)
  என்ன செய்ய வேலை கூடிப்போச்சு..குறை நினைச்சிருக்க மாட்டீங்கள்தானே..:)

  நீங்கள் போட்டிருக்கிற படங்களைப் பாத்தா அங்கை நல்ல கொட்டு கொட்டும்போல இருக்கு. நான் இருக்கிற பக்கம் கொஞ்சம் குறைவுதான். இங்கை இண்டைக்குத்தான் ஆரம்பிச்சிருக்கு. பார்க்க வடிவுதான்...ஆனால் ஒவ்வொரு வருஷமும் வேண்டுதல் போல றோட்டில விழுந்தெழும்புறதே எனக்கு பலன்....;) அதால ஸ்நோ கொட்டத்தொடங்கீட்டெண்டா... நான் வீட்டுக்குள்ளதான்...:)

  ReplyDelete
  Replies
  1. பிறகு வருகிறேன் என்று லேட்டா வந்து லேட்டஸ்டா போஸ்ட் (நிறைய எழுதியிருக்கிறீங்க.)நான் குறை நினைக்கமாட்டன்.டைம் கிடைக்கும்போது கொமன்ட் எழுதுங்க.
   இதெல்லாம் ஜோக் இல்லை. கவன‌ம் ஸ்னோக்குள்ளே நடக்கிறது.இன்று இங்கு ‍மைனஸ் 10.கொட்டிய ஸ்னோ உறைந்துவிட்டது.

   Delete
 10. படங்கள் எல்லாமே சூப்பரா இருக்கு...

  ஆகா என்ன பொருத்தம்...ஸ்நோவுக்கு பாட்டு நல்ல பொருத்தம்.....:)))

  பகிர்வுக்கு நன்றி அம்மு..:)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி இளமதி வந்து கருத்திட்டதற்கு.

   Delete
 11. வணக்கம்...

  அருமையான இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கும்,விபரத்தினை அறியத்தந்தமைக்கும் மனமார்ந்த நன்றிகள் தனபாலன் சார்.

   Delete

 
Copyright பிரியசகி