RSS

07/01/2020

கம்(பளி)பூச்சியா அனுபவங்கள்.

  வாழ்த்துகள் 2020
🙏பிறந்திருக்கும் புதிய 2020 ஆம் ஆண்டில் துன்பங்கள் நீங்கி ,இன்பங்கள் பு து பொலிவுடன் பெருகட்டும் 🙏 கடந்தவை கடந்ததாக இருக்கட்டும்🙏 புதிய புத்தாண்டு நம் எல்லோருக்கும் சாதனை தரும் ஆண்டாக🙏 மகிழ்ச்சி தரும் ஆண்டாக🙏 நல்லவைகளை அள்ளி தரும் ஆண்டாக 🙏 எண்ணிய செயல்கள் எல்லாம் இனிதே நிறைவேறும் ஆண்டாக🙏 இறை வழிப்பாட்டில் அதிக நம்பிக்கை தரும் ஆண்டாக அமைய 🙏ஆழ் மனதில் இருந்து இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்🙏 Wish a happy prosperous new year 2020 🙏 God bless u all 🙏வாழ்க வளமுடன் இறை ஆசியுடன்.


-----------------------------------------------------------------------------

இனி(ய) பயண அனுபவ அலப்பறைகள்........ தொடருகின்றது . 

கடந்த வருடம் வியட்நாம், மலேசியா, இலங்கை என பயணம் இருந்தது. இந்த திட்டத்தில் கம்போடியா போக இயவில்லை. இம்முறை இந்நாட்டுக்கும், சிங்கப்பூருமாக பயணம் அமைந்தது. ஊருக்கு போகமுடியல.கர்ர்ர்ர்..😟


நாங்க கம்போடியாவின் தலைநகரமான phnom  penh போய் இறங்கினோம். இது பெரிய நகரமும் கூட.

லப்பறைக்கு போக முன் இந்த நாடு பற்றி சின்ன வயது அனுபவம். எனக்கு சமூககல்வி பாடம் மிகவும் பிடிக்கும்.பொது அறிவு போட்டியில் பங்குபெறும்போது நாடுகள், நகரங்கள் எல்லாம் பாடமாக்கி வைத்திருப்பன். அதோடு சமூககல்வி மாஸ்டர் என்னைத்தான் வாசிக்க எழுப்புவார். அந்த பாடத்தில் எப்பவுமே  டி தான். அத்தோடு தமிழுக்கும் டி கிடைக்கும். (இங்கு பசும்பொன், பசுமைபுரட்சி என  பட்டங்கள் தொங்க விட்டவையின் கவனத்துக்கு)

அப்படி வாசிக்கும்போது இந்த நாட்டைப்பற்றி பாடம் வந்தது ஒருமுறை. நான் கம்போடியா என வாசிக்கவேண்டும்.  அப்ப  ஊரில கம்பளிபூச்சி (கம்பளிமசுகுட்டி) அதிகமா, அட்டகாசமா இருந்தது. எனக்கு  இந்த பூச்சி என்றா சரியான பயம். எல்லாருக்கும் ஒரு பயம் இருக்கு. ஆனா எனக்கு மரணபயம். ஏனென்றா அது என்னை அட்டாக் பண்ணாத நாளே இல்லை. எங்காவது இருந்து என் கையிலோ,கழுத்திலோ, சட்டையிலோ வந்துவிடும். தாங்கமுடியாத கடி, வீக்கம் என பாடாபடுத்தும். அப்படியான பூச்சி நான் புத்தகத்தில் பாடத்தை வாசிக்கும்போது  ஜன்னல் ஓரமா (வெளியில் செரி மரம் இருந்தது) இருந்தால் எப்படி இருக்கும். பிறகென்ன எனக்கு வாசிக்க வருமோ....ருமோ...மோ.. நான் பதட்டத்தோடு கம்போடியா என்பதற்கு பதில் கம்பிளிபூச்சியில் ...என சொல்ல எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்க எனக்கு ஒரு மாதிரியாகிட்டுது.  மாஸ்டரும் "என்ன" என ஒரு மாதிரி பார்த்தார். பின் சுதாகரித்து கம்பூச்சியாவில் என வாசிக்க, திரும்பவும் ஒரு பார்வை சிரித்துவிட்டு யார் மாஸ்டர்தான், ... என்ன ஆச்சு என்றார். நான் உடனே சுவரை காட்டினேன். அதற்கு பிறதுதான் எல்லாருக்கும் விளங்கியது.  ஓ...கம்போடியா இப்படிதான் கம்பளிபூச்சி ஆனதோ என்று அவரும் விழுந்து விழுந்து சிரித்தார். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.  கம்போடியாதான் சொல்மொழி. ஆனா அவங்க உச்சரிப்பில் கம்பூச்சியா இதுவும் சரி வழக்கத்தில் உள்ளது என்றார். ஆனா நான் பயத்தில் சொன்னது., தெரிந்துசொல்லவில்லை.  Preăh Réachéanachâkr Kâmpŭchea. போனவருடமும் ஊரில் அட்டை மாதிரி இந்த பூச்சியும் அட்டகாசம். வளவுக்குள் போகும்போது மேலே பார்த்துதான் போவேன். எங்காவது தொங்கிகொண்டு இருக்கோ என பயத்தில..ஆனா எப்படிதான் கண்ணில மண்ணை தூவிட்டு வருதோ தெரியாது. கர்ர்ர்ர்ர்ர்....
   இது சும்மா தேட வந்தது கூகுள்ல. இப்படிதான் அந்த கம்பளிபூச்சி இருந்தது. ஸ்கூல் ஜன்னல் இப்படி இல்லை. 😀

அப்போ அந்நாட்டில் இருக்கும் புகழ்பெற்ற அங்கோர்வாட் கோவில் பற்றியும் அறிந்து வியந்து இதெல்லாம் எங்க நாங்க பார்க்கிறது, பாடபுத்தகத்தில படிக்கிறதோடு சரி என நினைத்து பேசிக்கொண்டோம்.. சத்தியமா நான் கனவு கூட காணேல்லை நான் அந்த கோவிலுக்கு போவேன் என்று. போய் வந்ததில் மனத்தில் பெரிய சந்தோஷம் உலகிலேயே பெரிய கோவில் என சொல்லப்படும் அக்கோவிலை பார்த்தது. அதுவும் தமிழ் மன்னன் கட்டிய கோவில் என்பதாக வரலாறு சொல்கிறது.





இது அதிகாலை சூரியோதயம் பார்த்த பொழுது. விடிகாலையில் இங்கு சூரியோதயம் மிகப்பிரபலம். நாங்க அதற்காகவே 4 மணிக்கு எழுந்து ஆட்டோ பிடித்து வந்தோம். இக்கோவில் பார்க்க ஒருநாள் முழுவதும் தேவை. இரவு 7 மணி ஆகிவிட்டது ஹோட்டலுக்கு போக.
 நான் நின்ற இடத்துக்கு பின்னாடி பனை மரமும் நிலாவும். அப்பொழுது சூரியன் வரவில்லை. ஆனால் வெளிச்சம் வந்துவிட்டது.
இந்த படங்கள் எல்லாம் நான் எடுத்தவை. விடிகாலையில் அங்கு போய்விட்டோம். இதனைபற்றி பின்னொரு பதிவில் எழுதுகிறேன். சுவாரஸ்யமான தகவல்கள் இருக்கின்றன. 

அங்கு எனக்கு ஏற்பட்ட அனுபவத்தினை, மனதில் பட்டதை, கேள்விபட்டதை, ஆதங்கங்களை, என் தனிப்பட்ட கருத்துக்களை பகிர்கிறேன். இந்நாடு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி வருகிறது. 
இதன் வரலாறு எல்லாம் எழுதி போரடிக்காமல்,  (இப்போ கூகுளாண்டவரை தட்டினால் எல்லாம் வருகிறது. அதனால் அதில் பார்த்துக்கொள்ளுங்கள். நான் ஏதும் பிழையா எழுதினால் வரலாறு மன்னிக்காது. ஹா..ஹா..ஹா.) என் அனுபவபகிர்வை மட்டும் பகிர்கிறேன்.

அன்று மாலை இவை நாம் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து எடுத்த படங்கள். 





                                                   சூரியன் மறையும் காட்சி

எனக்கு இந்நாடு ரெம்ப பிடித்துபோய்விட்டது.எங்கட ஊர் மாதிரி இருக்கு. எங்கு பார்த்தாலும் மா,பலா,வாழை எனவும், பனைகளும் இருகின்றன. என்ன அதிக உஷ்ணம். வியர்க்கிறது குறைவு. நல்ல மனிதர்கள்.  ஒன்றுக்கும் கரைச்சல் படுத்தமாட்டார்கள். கடைக்கு போனால் அவர்கள் பாடு. ஏதாவது கேட்டால் மட்டுமே பதில். இது ஏன் என்பதை இன்னொரு பதிவில் சொல்கிறேன். அலப்பறைகள் தொடரும்...

பின்குறிப்பு:_  I need help.. நான் எழுதும் பதிவில் எழுத்தின் பின்னாடி(text backround) கலர் அடித்தமாதிரி வருகிறது.போஸ்ட் எழுதும் போது தெரியவில்லை. ப்ரீவியூ பார்க்க தெரிகிறது. எப்படி அதை நீக்குவது. உதவினால் அங்கோர்வாட் ல இருக்கும் அச்சுதன் அருள் புரிவார்.🙏

44 comments:

  1. முதலில் புத்தாண்டு வாழ்த்துகள்.
    தங்களது அனுபவம் ரசிக்கும்படி இருந்தது தொடர்ந்து வருகிறேன்....

    ReplyDelete
    Replies
    1. வாங்க அண்ணா ஜீ. உங்க வாழ்த்துக்கும்,வருகைக்கும் மிக்க நன்றி.

      Delete
  2. புதுவருட வாழ்த்துக்கள் மிக அருமை.உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்திற்கும் எங்கள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அக்கா..

      Delete
  3. பயண கட்டுரைக்கு முன் பள்ளி அனுபவம் மிக அருமை.
    நகைச்சுவையாக எழுத வருகிறது உங்களுக்கு.
    ரசித்து சிரித்து படித்தேன். கம்பிளி பூச்சியை பார்த்தாலே மேலே ஊறுவது போல் நினைவு வந்து விடும்.
    இந்தக்காலத்தில் நிறைய வரும் மரங்களில் . கவனமாய் மரத்துக்கு பக்கம் போக வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. பூவோடு சேர்ந்த நாரும் வாசம் வீசுமாம். அதுபோல அன்னை தெரசா, பசும்பொன் ஆகியோரோடு சேர்ந்தால் சுவை..நகைச்சுவை வருமெல்லோ....ஹா..ஹா..ஹா..
      நான் இதை எழுதுவமா விடுவமா என இருந்தேன்.அவ்வளவு ப...யம்.நினைத்தாலே கடிக்குமாப்போல இருக்கும். அடிக்கடி அங்கு கணவர் வேறு (ஒரு மரம் பார்க்க எங்க ஊர் பூவரசு போல இருக்க) இதை சொல்வார்
      நல்ல காலம் இங்கு இல்லை. அதனால தான் என்ன்வோ வண்ணத்துபூச்சியும் நிறைய இல்லை இங்கு.

      Delete
  4. பயணத்தில் எடுத்த படம் மிக அழகு சூரியன் மறையும் காட்சி மிக அருமை..

    ஹோட்டலிலிருந்து எடுத்த படங்களும் அழகு.

    ReplyDelete
    Replies
    1. உங்க வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அக்கா.

      Delete
  5. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பிரியஅம்முலு :)))இதே வேகத்தோடு தொடர்ந்து வாரமொரு போஸ்ட் போடணும் :) நானும் களம்  இறங்குவேன் 

    ReplyDelete
    Replies
    1. அப்பாடா... வந்துட்டீங்க. என்னா காணோம் என நினைத்தேன். இன்னும் ப்சும்பொன்னைக் காணல. உங்கள 2 வரையும் நம்பிதான் நான் களம் இரங்கியிருக்கேன். அதைவிட சுவாரஸ்யமான கதைகள் வேறு இருக்கா பதிவா போடுவோம் என இறங்கியாச்சு. நீங்களும் வாங்கோ கெதியா..

      Delete
  6. //அந்த பாடத்தில் எப்பவுமே  டி தான். அத்தோடு தமிழுக்கும் டி கிடைக்கும்.//
    அஆவ் அப்போ  ரெண்டுபேருமே டீ குடிச்சிருக்கீங்க தமிழ் சமூகவியல்ன்னு :)ஒரு மாபெரும் ரகசியத்தை சீராளன் உடைச்சார் அது அது :) d /டி சிஸ்டம் 1950 - 60 வரைதானாம் :)))))))) அப்படியா அது உண்மையா .
    மை மைன்ட் வாய்ஸ் ( இனிமே யாராச்சும்  டீ குடிப்பீங்க :)))))))))))))))))))))))))))

    ReplyDelete
    Replies
    1. இல்லை அஞ்சு 10 ம் வகுப்பில் ரிசல்ட் D,,, C..S என இருந்தது. 87 ஆண்டு வரைக்குமென நினைக்கிறேன். எதற்கும் நான் எப்போ மாறினது என கேட்டுவிட்டு எழுதுகிறேன். 70 க்கு மேல் மார்க்ஸ் எடுத்தால் டி தான். நான் படிக்கும் காலத்தில் எனக்கு டி கிடைத்திருக்கு.நாங்க நிறைய டீ குடித்தோம் இப்ப வருவா பாருங்கோ.....

      Delete
    2. 90 க்குப் பிறகுதான் மாத்தினார்கள் அம்முலு ஓ லெவல்.

      இப்போ ஏ லெவலும் 3 பாடங்களாக்கி ஏ பி சி என மாத்திட்டினமெல்லோ.

      //70 க்கு மேல் மார்க்ஸ் எடுத்தால் டி தான். //
      அப்படி இல்லை, அது அந்த அந்த வருடப் பேப்பரைப் பொறுத்து மாறுபடும், பொதுவாக 75 க்கு மேலதான் டி, ஆனா சிலசமயம் பேப்பர் மிகவும் கார்ட்டாக இருப்பின், 70 ஆக குறைப்பினம், ஈசியாக இருபின், 80 ஆகவும் கூட்டுவினம்.. இது பிக்ஸ் பண்ணப்பட்டிருக்காது. யூனிவசிட்டி கட்டவுட்டும் அப்படித்தானே, ஒவ்வொரு வருடமும் மாறிக்கொண்டிருக்கும்.

      Delete
    3. ஓ/எல் தான் டி வரும் அதிரா.நான் அதையே சொன்னேன் கர்ர்ர்ர். ஆனா டெர்ம் டெஸ்ட் ல வரும் மார்க்ஸ் எப்பவுமே 90, 95 தான்.அப்ப டி தானே.நீங்க சொன்னமாதிரிதான்,ஏனென்றா இது மாஸ்டர்ஸ்,டீச்சர் உடன் திருத்துவதால்....

      Delete
  7. மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    கம்பூச்சியா! ஹாஹா... நல்ல நகைச்சுவை.

    சிறப்பான பயணக் கட்டுரை. மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    பயணம் நல்லது - ஆதலினால் பயணம் செய்வீர்!

    ReplyDelete
    Replies
    1. உங்க வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  8. அவ்வ்வ் :) கம்பூச்சியா கம்பளிப்பூச்சியா மாறியதை ரசித்தேன் :) எங்க வீட்டில் மல்பெரி மரங்களில் படையாய் இருக்கும் .வீட்டுக்கும் வந்து அட்டகாசம் செய்யும் இவை ஊரில் .நினைக்கும்போதே நடுங்குது என்னமா எரியும் தடிப்பு தடிப்பா வீங்கிடும் 

    ReplyDelete
    Replies
    1. அதுதான் அஞ்சு மேலே கோமதி அக்காவுக்கு சொல்லியிருக்கேன். நினைத்தாலே என்னமோ செய்யும். இவர் வேற அங்கு இதை ஞாபகப்ப்டுத்தி மரங்களுக்கு கீழால போக பயமா இருந்தது.
      ஒரு கொப்பில படையா இருக்கும் அவ்வளவையும் வெட்டி எரிப்பினம். உடம்பில முடியை கொட்டிவிட்டிடும். பிறகு சாம்பல் பூசி தேய்கிறது ஆனாலும் கடி 2 நாளானாலும் போகாது. பிறகு திரும்ப கொட்டிடும்.... ஊரில இருக்கும்போது நடந்தவை மறக்கமுடியாது.

      Delete
  9. இது பேக் கிரவுண்ட் கலர் க்ளிக் பண்ணி வச்சிருக்கீங்க 
    அது இல்லாம எழுதுங்க 
    டெக்ஸ்ட் பேக்க்ரவுண்ட் பாருங்க சில நேரம் ஒரு இடத்தில இருந்து பேஸ்ட் செய்யும்போதும் இப்படி நடக்கும் 

    ReplyDelete
    Replies
    1. ஓ.......சரி சரி. நான் முதலில் டெம்பரியா எழுதி அதை இங்கு பேஸ்ட் செய்ததால தான் வந்திட்டுது போல. இனி சரி செய்கிறேன். மிக்க நன்றி அஞ்சு. அப்ப அச்சுதன் அருள் உங்களுக்கே..ஹா..ஹா..
      வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி அஞ்சு.

      Delete
    2. ஆஆஆஆஆ என் செக்:) இன் அறிவு பார்த்து மீ வியக்கேன்:)).. கொம்பியூட்டர் பற்றி எல்லாம் வில்;அக்கம் ஜொள்றா:)) ஹா ஹா ஹா..

      கரீட்டு அஞ்சு, வாசிக்கத் தொடங்கும்போதே நினைச்சேன், எங்கிருந்து கொப்பி பேஸ்ட் பண்ணியிருக்கிறா அம்முலு என, ஏன் அம்முலு என் ஏச் எம் றைட்டர் இருக்குதெல்லோ? பிறகேன் கொப்பி பேஸ்ட் பண்ணுறீங்க? நேரடியாகவே புளொக் எழுதலாமெல்லோ கர்ர்ர்:).

      Delete
    3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்..நான் ட் ராப் ஆக வேர்ட் ல எழுதி வைத்து இம்முறை போட்டேன். ஏனெனில் படங்கள் செலக்ட் செய்து போடவேணும் என்றபடியால்.. வழமையா ப்ளாக் ல தான் எழுதுவேன். அது ஸ்டக் ஆகி விடும் சில நேரம்.
      செக் பற்றி அவ்வளவுதான் செப் அறிந்துவைத்திருக்கா..நோட் திச் பொயிண்ட் அஞ்சு..

      Delete
  10. படங்கள் அழகு .பெரிய கட்டிடங்களா இருக்கு ..தொடருக்குங்க கம்பளிப்பூச்சியா அனுபவங்களை :)

    ReplyDelete
    Replies
    1. இது தலைநகரம் என்றபடியால் தான் கட்டிடங்கள். மற்ரைய சிட்டிகள் வித்தியாசம். தெடருகிறேன். நன்றி அஞ்சு.

      Delete
  11. ப்ரியசகி அட்மின் போட்ட பதிவாக இருக்குமோ? ஹலோ அட்மின் ப்ரியசகிக்கும் அவர் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை நான் சொன்னதாக சொல்லிடுங்க

    ReplyDelete
    Replies
    1. ஆ..... மிக்க நன்றி ட்றுத். உங்க வாழ்த்தை அட்மினிடம் சொல்லிவிடுகிறேன்.

      Delete
  12. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்முலு, இந்த ஆண்டு இன்னும் பல இடங்கள் போய் வந்து மகிழ்ச்சியாக புளொக் எழுதோணும் என வாழ்த்துகிறேன்.

    அதுசரி கம்..பூச்சியாவில சிவனைப் பார்த்ததும் என்னென்னமோ எல்லாம் சொல்லி வாழ்த்தியிருக்கிறீங்களே.. எனக்கொரு டவுட்டூஊஊஊ:) அந்த மிகப் பழைமை வாய்ந்த கோயிலுக்குப் போனதும் ஞானியாகிட்டீங்க போல இருக்கே:).

    இப்பூடி எனில் எனக்கு வேலை ஈசியாப்போச்சு:), இனி காசியை விட்டுப்போட்டு அஞ்சுவைக் கம்பூச்சியாவுக்குக் கூட்டிப் போகப்போறேன்:).

    ReplyDelete
    Replies
    1. கம்பூச்சியாவில விஷ்ணு....கர்ர்ர்ர்ர்ர்ர்ர். சரி நல்ல இடம் கூட்டிக்கொண்டு போனால் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் காசியை விட அதிகமா.....

      Delete
  13. கம்போடியா போனோம் எனச் சொல்லிப்போட்டு எயார்போர்ட்டிலயே இருந்துபோட்டு வந்தமாதிரி எல்லோ எயார்போர்ட் படங்களாப் போட்டிட்டீங்க?:) என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாது:), எனக்கந்த ஆலமரப் படம் வேணும்:).

    ReplyDelete
    Replies
    1. ஹலோஓஓஓ......இப்பதான் ஆரம்பம். எல்லாம் வரும் ஸ்டெப் ஆ.. ஆலமரமோ.... ஓஒ அதா வரும் வரும் பொறுமை.

      Delete
  14. // அந்த பாடத்தில் எப்பவுமே டி தான். அத்தோடு தமிழுக்கும் டி கிடைக்கும். (இங்கு பசும்பொன், பசுமைபுரட்சி என பட்டங்கள் தொங்க விட்டவையின் கவனத்துக்கு)//

    ம்ஹூம்ம்... இதில இருந்தே கண்டுபிடிச்சிட்டனே:). அதாவது டி எண்டால் ஃபைனலாத்தான் ஒரு தடவை சேர்டிபிகேட்டில வரும்:)) இது எப்பவும் டி யாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இது இவிக வேற டி ஐச் சொல்றாக:) ஆரும் நம்பிடாதீக:))..

    இங்கின டமிலுக்கு அடிராவுக்கு சே.. சே.. டங்கு ச்லிப்பாகுதே அதிராவுக்கு மட்டும்தேன் டி:)).. இது அந்த கம்பூச்சியா[எனக்கும் இப்பெயர்தான் பிடிச்சிருக்கு:)] ஆலமரத்தில இருந்து விழுந்த காய்ஞ்ச இலைமேல ஜத்தியம்:)

    ReplyDelete
    Replies
    1. நாங்க டேர்ம் டெஸ்ட் மார்க்ஸ் வந்தாலே டி, சி எனதான் பார்ப்போம். அந்த வகையில சொன்னேன். உங்களுக்கு மட்டுந்தேன் டி வேறு யாருக்குமே இல்லை.
      எனக்கும் அதுதான் பிடிச்சிருக்கு அதிரா.

      Delete
  15. மசுக்குட்டியை நினைச்சாலே நடுங்குது... இங்கும் ஒரு வித மசுக்குட்டி இருக்குது, ஒரு நாள் ஒரு பற்றையினுள் இருந்த பிளக் பெரி இலையில ஒருவரைப் பார்த்தேன், அது நம் ஊர் மசுக்குட்டி போல இல்லை, ஆனா உடம்பில கொஞ்சமா மயிர் இருந்துது.. நடுங்கிப் போயிட்டேன்:)).. நினைச்சாலே உடம்பெல்லாம் கூசுது.

    இதில வேற படத்தைப் போட்டு மிரட்டுறீங்க கர்:).

    ReplyDelete
    Replies
    1. நான் எழுதும்போதே கஷ்டப்பட்டு எழுதி கடைசில தான் படம் சேர்ப்பமா,விடுவமா என இருந்து சேர்த்தேன்.
      சிலவற்றை மறக்கமுடியாத நினைவுகள் இருக்கு. அதனால சேர் செய்தேன்.

      Delete
  16. கம்போடியா ரவுண் நல்லாத்தான், கலர்ஃபுல்லாக இருக்குது.

    இந்த முறை எயார்பொர்ர்ட்டை விட்டு வெளில வரவில்லை என ஓசிச்சேன், பின்பு ஓடிப்போய்க் ஹொட்டேலுக்குள் இருந்திட்டீங்க கர்ர்:))... ஐ வோண்ட் தட் ஆலமரம்:).

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... அந்த ஆலமரத்துக்கு ரெம்ப தூரம் போகோனும்.பொறுங்கோ கூட்டிக்கொண்டு போறேன்.

      Delete
  17. புதிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மு ...

    வாவ் கம்போடியா ...எனக்கு ரொம்ப பிடிச்ச இடம் ...முகங்களுடன் கூடிய கோபுரங்கள் இங்க தானே ...

    விடியற்காலை படங்கள் மிக அழகு ...

    கம்போடியா வை உங்கள் வழி காண காத்திருக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி அனு.

      Delete
  18. புதுவருட வாழ்த்துகள் ப்ரியா. அழகான ஆரம்பம். கம்போடியா நாட்டுடனான உங்கள் தொடர்பு பள்ளிக்காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது போலும். உங்கள் பயண அனுபவங்களை ரசிக்க தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதா வாழ்த்துக்கு..அந்த பூச்சியால்தான் நாடே ஞாபகத்தில் இருக்கு கீதா. அதனாலேயே கம்பூச்சியா என சொல்வேன்.

      Delete
  19. படங்கள் எல்லாமே நன்றாக உள்ளன.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கீதா வரவுக்கும்,கருத்துக்கும்

      Delete
  20. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும்,வருகைக்கும் மிக்க நன்றி மாதேவி.

      Delete

 
Copyright பிரியசகி