Paper Serviette பூக்கள்.
தேவையான பொருட்கள் :--
Paper Serviette
நூல்
கத்தரிக்கோல்
முதலில் ஒரு பேப்பர் சேவியட் எடுக்கவும்.
சேவியட்டில் மடிந்திருக்கும் பக்கத்தை வெட்டவும்.
வெட்டினால் இரண்டு பக்கமும் வெட்டுப்பட்ட மாதிரி இருக்கும்.
இதை சாரிக்கு பிலீட்ஸ் எடுப்பது மாதிரி மாற்றி மாற்றி மடிக்கவேண்டும். பின் அதன் நடுவில் நூலால் கட்டவும்.
கட்டியபின் இருபக்கமும் நன்றாக விரித்துவிடவும்.பார்க்க விசிறி மாதிரி இருக்கும்.இனிமேல் நீங்க கொஞ்சம் பொறுமையாக,கவனமாக ஒவ்வொரு பேப்பர்சேவியட்டையும் மேலே எடுத்து விட வேண்டும். (ஒரு பக்கத்தில் மெல்லியதா 6அடுக்குகள் ( layers) இருக்கும். மொத்தமாக 12அடுக்குகள் ( layers)
இப்படி மறுபக்கத்தையும் எடுத்துவிட்டால் அழகான பூவாக மலரும்.
<><><><><><><><><><><><><><><><><><><><><>
இதே செய்முறையில் நீங்க இரண்டு வெவ்வேறு கலர்
Paper Serviette லும் செய்யலாம்.
விரும்பிய இரு வெவ்வேறு கலர் பேப்பர்சேவியட் எடுக்கவும். மடிந்திருக்கும் பக்கத்தை வெட்டவும்.
Paper Serviette ன் சைட்டில் வெட்டினால் இப்படி 2 அடுக்குகள் வரும்.
வெட்டியபின் ஒருகலர் பேப்பர்சேவியட்டின் ஒரு layer ஐ எடுத்து, மற்றயகலர் பேப்பர்சேவியட்டின் ஒரு layer மேல் வைக்கவும் .
பின்பு முதலாவது பூவிற்கு செய்த மாதிரியே மாறி மாறி மடித்து,
நடுவில் கட்டி, பேப்பர்சேவியட்டை மேலே எடுத்து விட்டு அழகாக ஒழுங்கு செய்ய வேண்டியதுதான் .
இது செய்வது ஈC. லேC படாமல் செய்து பாருங்கோ.
********************************************************************
இது அஞ்சு வின் குறிப்பு :- தக்காளித்தோசை
இதை நானும் செய்தேன். ரெம்ப டேஸ்ட் & க்ரிஸ்பியாக இருந்தது.
குறிப்பிற்கு நன்றி அஞ்சு .
***********************************************
பிடித்த பாடல்_ :)
தேவையான பொருட்கள் :--
Paper Serviette
நூல்
கத்தரிக்கோல்
முதலில் ஒரு பேப்பர் சேவியட் எடுக்கவும்.
சேவியட்டில் மடிந்திருக்கும் பக்கத்தை வெட்டவும்.
வெட்டினால் இரண்டு பக்கமும் வெட்டுப்பட்ட மாதிரி இருக்கும்.
இதை சாரிக்கு பிலீட்ஸ் எடுப்பது மாதிரி மாற்றி மாற்றி மடிக்கவேண்டும். பின் அதன் நடுவில் நூலால் கட்டவும்.
இப்படி மறுபக்கத்தையும் எடுத்துவிட்டால் அழகான பூவாக மலரும்.
இதே செய்முறையில் நீங்க இரண்டு வெவ்வேறு கலர்
Paper Serviette லும் செய்யலாம்.
விரும்பிய இரு வெவ்வேறு கலர் பேப்பர்சேவியட் எடுக்கவும். மடிந்திருக்கும் பக்கத்தை வெட்டவும்.
வெட்டியபின் ஒருகலர் பேப்பர்சேவியட்டின் ஒரு layer ஐ எடுத்து, மற்றயகலர் பேப்பர்சேவியட்டின் ஒரு layer மேல் வைக்கவும் .
பின்பு முதலாவது பூவிற்கு செய்த மாதிரியே மாறி மாறி மடித்து,
நடுவில் கட்டி, பேப்பர்சேவியட்டை மேலே எடுத்து விட்டு அழகாக ஒழுங்கு செய்ய வேண்டியதுதான் .
********************************************************************
இது அஞ்சு வின் குறிப்பு :- தக்காளித்தோசை
இதை நானும் செய்தேன். ரெம்ப டேஸ்ட் & க்ரிஸ்பியாக இருந்தது.
குறிப்பிற்கு நன்றி அஞ்சு .
***********************************************
பிடித்த பாடல்_ :)
அம்மு... ரொம்ம்ப அழகாக இருக்கிறது காகிதப்பூ...:)
ReplyDeleteநீங்க சொன்னாத்தான் அது காகிதப்பூக்கள் என்று தெரிகிறது. சூப்பர்!!!
மிகத் துல்லியமாக அருமையாகப் பார்த்துப் பார்த்து படிமுறை விளக்கம், படத்துடன் தந்து அசத்தியிருக்கிறீங்கள்...
திறமைதான். கெட்டிக்காறி அம்மு...:)
வாங்க இளமதி. பதில் சொல்ல தாமதமாயிற்று மன்னிக்க. இது டாலியாபூக்கள் மாதிரியெல்லோ இருக்கு. செய்வதும் சுலபம்.
Delete//படிமுறை விளக்கம், படத்துடன் தந்து அசத்தியிருக்கிறீங்கள்...திறமைதான். கெட்டிக்காறி அம்மு...:)// உங்க பாராட்டுக்கு ரெம்ப நன்றி
இளமதி.
அம்மு... உங்க திறமையை பாராட்ட ஆசைப்பட்டூஊ ச்சும்மா இப்படி எழுதியிருக்கிறேன். படிச்சிட்டு பிடிக்காட்டி அழிச்சிடுங்கோ... சரியா...;)
ReplyDeleteகலை வண்ணம் காகிதத்தில் காட்டியென்னை
சிலையாக வைத்தாய் தோழி உன் திறமை
மலைபோல தோன்றுதெனக்கு அதற்கு யாராலும்
விலைகூற முடியுமோ சொல்...
பிடிக்காட்டி அழிச்சிடுங்கோ.. நீங்க எழுதிய கவிதை எப்படி பிடிக்காமல்போகும் இளமதி.மிகவும் நன்றாக இருக்கு. மிக்க நன்றிகள் இளமதி.
Deleteகற்றது கை மண் அளவு. கல்லாதது கடல் அளவு இளமதி.
//கற்றது கை மண் அளவு. கல்லாதது கடல் அளவு இளமதி//
Deleteசரியாச் சொன்னீங்க அம்மு.. நான் கைம்மண் அளவுகூட இன்னும் கற்கேலைத்தான். அதுக்குள்ள இப்பிடி...
இனிக் கொஞ்சமாவது படிச்சிட்டு எழுதுறன்.. இந்தமுறை விட்டுடுங்கோ.. சரியா...:)
//உன் திறமைமலைபோல தோன்றுதெனக்கு// இந்த வரிக்காகத்தான் அந்த பழமொழியை எனக்கு நானே சொன்னேன். உடனே மேற்கோள் காட்டியிருக்கோனும். நீங்க நிறைய எழுதுங்க கவிதையைச் சொன்னேன்.
Deleteஅந்த டபிள் கலரில் செய்த பூ கலக்கலா இருக்கு அம்மு. இந்த செய்முறையில் எனக்கு சின்னதா ஒரு சந்தேகம்...
ReplyDelete//பொறுமையாக,கவனமாக ஒவ்வொரு பேப்பர்சேவியட்டையும் மேலே எடுத்து விட வேண்டும்.//
இப்படி மேலே எடுத்துவிடும்போது அந்த ஓரங்களை சேர்த்து ஒட்டிவோணுமோ இல்லை அப்பிடியியே விடலாமோ? பிரிஞ்சு போய் இருக்கிறமாதிரி தோணாதோ...
நீங்க செய்திருப்பது ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள் அம்மு!
தொடர்ந்தும் இன்னும் இப்பிடி வேறேதாகிலும் தெரிஞ்சதை செய்து காட்டுங்கோ. பொழுது போக்குடன் பிரயோசனமாயும் இருக்கும்.
ஓ..அஞ்சு காட்டிய தோசையா? ம். நானும் செய்து பார்த்திட்டேன். நல்லா இருந்திச்சு. ஆனா சுடச்சுட சாப்பிட்டாத்தான் நல்லா இருக்கும். ஆறினால் அதன் மிருதுத்தனமை இல்லாமல் காய்ஞ்சுபோன மாதிரிவந்திடும்.
பாட்டும் சூப்பர். ரொம்ப நல்ல பாட்டு. எனக்கும் பிடிச்சிருக்கு.
நல்ல பதிவு. பகிர்வுகளுக்கு மிக்க நன்றி அம்மு...
அச்சச்சோ எழுத்துப் பிழை நிறைய வந்திருக்குஊஊ...;)
Deleteஅவசரமா எழுதினேன்... மன்னிச்சுக்கொள்ளுங்கோ...:(
இல்லை இளமதி ஒட்டத்தேவையில்லை.பேப்பர்சேவியடை எடுத்துவிடும்போது டிஷ்யூ மாதிரி இருக்கும்.இதற்கு பொறுமை அவசியம். விசிறி மடிப்பிலிருந்து பேப்பரை எடுக்கும்போது கவனமாக எடுக்கவேண்டும்.லேசில் பிரிந்து வராது.மூலை கிழிந்துவிடாமல் எடுத்து மேலேவிட்ட பின் நீங்க ஓரங்களை அழகாக செட் செய்யவேண்டும்.
Deleteநிறைய பிழைதான். பரவாயில்லை என மன்னிக்கிறேன்.
Deleteநீங்க முதல் ஆளா வருகை தந்து பாராட்டியதற்கும் , ரசித்ததற்கும்,எனக்கு கவிதை எழுதியமைக்கும் அவ்வளவு பூக்களையும் எடுத்துக்கொள்ளுங்கோ. மிக்க நன்றி இளமதி.
DeleteBeautiful! Thanks for sharing the double colour flowers! I already white flowers Ammulu..they came out nice. :) but my serviettes were lil big hence I got pretty big flowers you know! Lol!
ReplyDeleteDosa looks yum...but as Ilamathy said, they should have eaten hot! ;)
வாங்க மகி.நீங்க 2சேவியட்ல் செய்துபாருங்க.அழகாக இருக்கும்.இங்கு தோசை என்றால் சுடச்சுடதான் கொடுக்கனும்.
Deleteவந்து கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி மகி.
இது செய்வது ஈC. லேC படாமல் செய்து பாருங்கோ.
ReplyDeleteஐC செய்து பார்க்கிறோம் ...பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
வருகைக்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றி.
Deleteஆஹா சூப்பரா இருக்குது அம்முலு.. செய்து பார்க்க ஆசை வந்திட்டுது ஆனா முழுசா புரியவில்லை.. செய்யத்தொடங்கினால் புரியுமாக்கும்..
ReplyDeleteஅழகான பாடல்...
தோசை சூப்பர்.
வாங்க அதிரா. செய்துபார்த்தால் சுலபமா இருக்கும். வருகைக்கும்,கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள்.
Deleteமிகவும் அழகாகவே செய்துள்ளீர்கள்.
ReplyDeleteபாராட்டுக்கள்.
மனமார்ந்த வாழ்த்துகள்.
>>>>
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அண்ணா.
Delete//இது செய்வது ஈC. லேC படாமல் செய்து பாருங்கோ.//
ReplyDelete********************************************************************
ஆஹா, ஈஸியாச் சொல்லிட்டீங்கோ.!
//தக்காளித்தோசை இதை நானும் செய்தேன். ரெம்ப டேஸ்ட் & க்ரிஸ்பியாக இருந்தது. //
இதைக் கஷ்டப்பட்டு செய்தாலாவது வயிறு முட்ட சாப்பிட்டு மகிழலாம்.
காகிதப்பூக்கள் செய்தால் கண்ணால் பார்த்து மட்டுமே சந்தோஷப்படலாம். ;)
வருகைக்கும்,பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றிகள் அண்ணா.
Deleteகாகிதப்பூ அருமை .அழகா இருக்கு
ReplyDeleteவாங்க அஞ்சு. ரெம்ப நன்றி உங்க பாராட்டுக்கு.
Deleteதக்காளி தோசை நல்லாவே வந்திருக்கு .அதற்க்கு தெங்க சட்னி கூட நல்ல காம்பினேஷன்
ReplyDeleteவித்தியாசமான டேஸ்ட். என்ன சுடச்சுட சாப்பிடவேணும். நான் அன்றே செய்துவிட்டேன். வருகைக்கும்,கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் அஞ்சு.
Deleteஎனது தளத்தில் Passion On Plate contest வைத்திருக்கிறேன்.. உங்களால் முடிந்த சமையல் குறிப்பினை அனுப்பி போட்டியில் கலந்துக்கொள்ளும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeletehttp://www.en-iniyaillam.com/2013/02/announcing-passion-on-plate-giveaway.html
வாங்க பாயிஸா. முயற்சிக்கிறேன். மிக்க நன்றி.
Deleteஎன் பக்கம் வருகைக்கு நன்றி ப்ரியா, உங்க ப்ளாக் மிக அழகு.நல்ல பகிர்வு.
ReplyDeleteவாங்க ஆசியா உங்க வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிகள்.
Deleteமிக அழகிய கைவேலை! வாழ்த்துக்கள்!!
ReplyDeleteவாங்க மனோஅக்கா. உங்க வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கு.பாராட்டுக்கும், வருகைக்கும் மிக்க நன்றி.
Deleteவிளக்கப்படங்கள் எல்லாம் பளிச் பளிச். பாராட்டுக்கள் அம்முலு.
ReplyDeleteமுதல் ஆளாகப் பார்த்தேன். அன்று கீபோர்ட் ஸ்டக். ஒரு இடமும் எழுத்தே வர மாட்டன் என்றுவிட்டுது. கருத்துப் போட முடியேல்ல. ;(
நிறைய கலர்கலராகச் செய்திருகிறீங்கள். வடிவா இருக்கு.