எங்கள் அன்பு நண்பி, அன்புடன் செல்லமாய் பூஸார் என அழைக்கப்படுபவரும், புலாலியூர் பூசானந்தா, ஆஷாபோஷ்லே அதிரா, கவிஅமுதம், மாஸ்டர் செப் அதிரா என இன்னும் பல பட்டப்பெயர்களை தனக்குத்தானே சூட்டிக்கொண்டு உலாவரும் நண்பி (இன்றுவரை ஸ்வீட் ஸிக்ஸ்டீன் என சொல்பவர்) அதிரா வுக்கு இன்று பிறந்தநாள்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அதிரா
எப்பவும் சந்தோஷமாக கலகலப்பாக இருக்கவேண்டும் அதிரா. எல்லாம் வல்ல உங்க பேவரிட் சந்நிதியானையும்,ஆஞ்சநேயரையும் வேண்டிக்கொள்கிறேன்.
-----------------------------------------------------------------------------
பூஸ் பிறந்தநாளின்போது பூஸ் பற்றிய தகவல்கள்
இவரைப்பார்த்தால் அச்சுஅசல் எங்க வீட்டில் நின்ற ரோஸி மாதிரி
இப்பூஸ் களின் படங்கள் கடந்த வருடம் துருக்கி போனபோது எடுத்தவை. அங்கு நாம் இருந்த ஹோட்டல் கடற்கரை சாலையில் இருந்தார்கள். இப்படி நிறைய பேர் அநாதரவாக இருந்தார்கள். எனக்கு அஞ்சு ஞாபகம் வந்து என கணவரிடம் சொன்னேன். "இவர்களை அஞ்சு கண்டால் வீட்டுக்கே அழைத்துபோய்விடுவா" என.
அங்குள்ளவர்கள் இப்படி விட்டுவிட்டு போய்விடுவார்கள் என ஹோட்டல் சிப்பந்தி சொன்னார். என்ன இவர்களுக்கு வெயில் காலங்களில் நிறைய உணவு கிடைக்கும். அங்கு அவர்களின் பேவரைட் உணவு மீன் நன்றாக கிடைக்கும்.மற்றைய நேரங்களில் அங்குவரும் சுற்றுலாபயணிகள் போடும் உணவுதான். அவர்கள் பல்கிபெருகி குடும்பமாக நிறைய பூஸ்கள் இருக்கிறார்கள். எல்லாரிடமும் ஓடிவருகிறார்கள். 4,5 பப்பீஸ்ம் இருக்கிறார்கள். அவர்களும் கொண்டுவந்து அநாதரவாக விடப்பட்டவர்கள். எனக்கு பார்க்கவே பாவமா இருந்தது. கண்டதும் ஓடி வந்து காலை சுற்றுவதும், முகம் பார்த்து கத்துவதுமாக இருந்தார்கள்.ஆனா மொழுக்,மொழுக் என குண்டாக இருந்தாங்க எல்லாரும். அங்குள்ள பப்பிஸ் ம் பூஸ் ம் நல்ல ஒற்றுமையா இருக்காங்க.
................................................................................................
இந்த க்விலிங் நான் இம்முறை ஊருக்கு போயிருந்த போது செய்தது. அங்கு மிக மெலிதான பேப்பர்தான் கிடைக்கும் கடந்த வருடம் போனபோதும் இதேநிலமைதான். இம்முறையும் பெரியபேப்பர் கிடைக்குமா என தேடிப்பார்த்து கிடைக்காமல் போகவே இதையே வாங்கினேன். அஞ்சு இந்த மாதிரி மெல்லிய பேப்பரில் மிக அழகாக செய்வா. நானும் இம்முறை முயற்சி செய்துபார்த்தேன். அங்கு ரெயின்போ கலரில் பேப்பர் கிடைத்தது. அதனால் கலர்புல்லாக மலர்கள் செய்தேன். எனக்கு தை ,மாசியில் பிறந்ததினம் வருவதால் எப்படியும் காட் செய்யவேண்டும். அத்துடன் க்ராஸ்ஸ்டிச் பொருட்களும் வாங்கினேன். என் ப்ரென்ட் ஒருத்தரும் இதனை தைக்கிறாங்க.(செய்யிறனோ இல்லையோ வாங்கி வைத்துவிடவேண்டியதுதான்.)
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அதிரா
எப்பவும் சந்தோஷமாக கலகலப்பாக இருக்கவேண்டும் அதிரா. எல்லாம் வல்ல உங்க பேவரிட் சந்நிதியானையும்,ஆஞ்சநேயரையும் வேண்டிக்கொள்கிறேன்.
-----------------------------------------------------------------------------
பூஸ் பிறந்தநாளின்போது பூஸ் பற்றிய தகவல்கள்
இவரைப்பார்த்தால் அச்சுஅசல் எங்க வீட்டில் நின்ற ரோஸி மாதிரி
இப்பூஸ் களின் படங்கள் கடந்த வருடம் துருக்கி போனபோது எடுத்தவை. அங்கு நாம் இருந்த ஹோட்டல் கடற்கரை சாலையில் இருந்தார்கள். இப்படி நிறைய பேர் அநாதரவாக இருந்தார்கள். எனக்கு அஞ்சு ஞாபகம் வந்து என கணவரிடம் சொன்னேன். "இவர்களை அஞ்சு கண்டால் வீட்டுக்கே அழைத்துபோய்விடுவா" என.
அங்குள்ளவர்கள் இப்படி விட்டுவிட்டு போய்விடுவார்கள் என ஹோட்டல் சிப்பந்தி சொன்னார். என்ன இவர்களுக்கு வெயில் காலங்களில் நிறைய உணவு கிடைக்கும். அங்கு அவர்களின் பேவரைட் உணவு மீன் நன்றாக கிடைக்கும்.மற்றைய நேரங்களில் அங்குவரும் சுற்றுலாபயணிகள் போடும் உணவுதான். அவர்கள் பல்கிபெருகி குடும்பமாக நிறைய பூஸ்கள் இருக்கிறார்கள். எல்லாரிடமும் ஓடிவருகிறார்கள். 4,5 பப்பீஸ்ம் இருக்கிறார்கள். அவர்களும் கொண்டுவந்து அநாதரவாக விடப்பட்டவர்கள். எனக்கு பார்க்கவே பாவமா இருந்தது. கண்டதும் ஓடி வந்து காலை சுற்றுவதும், முகம் பார்த்து கத்துவதுமாக இருந்தார்கள்.ஆனா மொழுக்,மொழுக் என குண்டாக இருந்தாங்க எல்லாரும். அங்குள்ள பப்பிஸ் ம் பூஸ் ம் நல்ல ஒற்றுமையா இருக்காங்க.
இந்த க்விலிங் நான் இம்முறை ஊருக்கு போயிருந்த போது செய்தது. அங்கு மிக மெலிதான பேப்பர்தான் கிடைக்கும் கடந்த வருடம் போனபோதும் இதேநிலமைதான். இம்முறையும் பெரியபேப்பர் கிடைக்குமா என தேடிப்பார்த்து கிடைக்காமல் போகவே இதையே வாங்கினேன். அஞ்சு இந்த மாதிரி மெல்லிய பேப்பரில் மிக அழகாக செய்வா. நானும் இம்முறை முயற்சி செய்துபார்த்தேன். அங்கு ரெயின்போ கலரில் பேப்பர் கிடைத்தது. அதனால் கலர்புல்லாக மலர்கள் செய்தேன். எனக்கு தை ,மாசியில் பிறந்ததினம் வருவதால் எப்படியும் காட் செய்யவேண்டும். அத்துடன் க்ராஸ்ஸ்டிச் பொருட்களும் வாங்கினேன். என் ப்ரென்ட் ஒருத்தரும் இதனை தைக்கிறாங்க.(செய்யிறனோ இல்லையோ வாங்கி வைத்துவிடவேண்டியதுதான்.)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பூஸாருக்கு :)
ReplyDeleteவாங்க அஞ்சு. முதல் வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் ரெம்ப நன்றி.
Deleteஆவ்வ்வ்வ் மிக்க நன்றிகள் அஞ்சு...
Deleteபூஸார் பிறந்தநாளில் பிளாக்கை திறக்க வச்சுட்டோம் :)) ஹாஹா .ப்ரியா இப்படியே தொடருங்க வாரம் ஒரு பதிவு வரணும் சொல்லிட்டேன் :)
ReplyDeleteஎனக்கும் எழுத ஆசை. முயற்சித்து எழுதுகிறேன். படங்கள் கலெக்ட் செய்து போட கொஞ்சம் கஷ்டமா இருக்கு. ஆனாலும் முயற்சிக்கிறேன். எழுத விடயங்கள் இருக்கு-
Deleteஅதிராவும் சொல்லிக்கொண்டு இருக்கிறா. அவாவின் பி.நாளின்போதாவது நிறைவேறட்டும் என எழுதினேன்.
நானும் ஏஞ்சல் போல் ஆசைபடுகிறேன் அம்மு
Deleteமிக்க நன்றிகள் அக்கா.
Deleteநானும் ..
Deleteமிக்க நன்றி அனு.
Deleteசகோதரி அதிரா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...
ReplyDeleteவாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் ரெம்ப நன்றி அண்ணா
Deleteமிக்க நன்றி டிடி.
Deleteஆஆஆவ்வ்வ்வ் வெளியே நிற்கிறேன் வாறேன் வாறேன்ன்ன்ன்ன் நான் மெர்சலாகிட்டேஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன் நான் மெர்சலாகிட்டேன்ன்ன்ன்ன்ன்:)... நன்றி நன்றி
ReplyDeleteவாங்க,வாங்க நிதானமா வாங்க.
Deletequilling பாஸ்கெட் மிக அழகா இருக்கு ப்ரியா .இந்தியா ஸ்ரீலங்கால மெலிசான பேப்பர்ஸ் விற்கிறாங்க .விதவிதமானா வெரைட்டிஸ் கிடைக்குது .நீங்க நிறைய எடுத்திட்டு வந்திங்களா
ReplyDeleteநிறைய வெரைட்டி கிடைக்குது அஞ்சு. ஆனா நான் ஓரளவுக்குதான் வாங்கினேன். கொழும்பில்தான் விதவிதமாக கிடைக்குது. ஆனா பெரிதான பேப்பர் வாங்க பெற்றா (petta)போகனும் எனக்கு டைமில்லாததால் போகல. ஆனா அக்காவிடம் சொல்லி,காட்டிவிட்டு வந்தேன். வாங்கினால் அனுப்பிவிடுவா. எனக்கு இந்த டபுள் கலர் பேப்பர் பிடித்திருந்தது. thanks anju
Deleteஅதிரா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் ரெம்ப நன்றி அண்ணா
Deleteமிக்க நன்றிகள் சகோ சொக்கன்.
Deleteபூஸார்கள் எல்லாரும் அழகு ப்ரியா.உணவு கிடைப்பது மகிழ்ச்சி அவங்களுக்கு ..எல்லாம் கொழுக் மொழுக்னு அதிரா மாதிரியே இருக்காங்க ஹாஹா :)
ReplyDeleteஆமாம் அஞ்சு. உணவு கிடைக்கிறது. குளிர் காலங்களில் அங்குள்ள ஹோட்டல்காரங்க போடுறாங்க. சிலவேளை கிடைக்காமலும் விடும் என்கிறாங்க. இன்னும் வின்டர் நேரங்களில் அவைகள் பாதுகாப்பாக இருக்க கஷ்டப்படுறாங்க என்றும் சொன்னார்கள். இங்கு மாதிரி குளிர் இல்லையென்றாலும் குளிர் இருக்கதானே செய்கிறது.
Deleteஹா..ஹா..ஹா நான் நினைத்தேன் அதிரா மாதிரி என எழுதுவமா என. பாவமின்று பி.நாளும் அதுவுமா அவங்களை கலாய்க்கவேண்டாமே என விட்டுவிட்டேன்.ஆனா நீங்க எழுதுவீங்க என தெரியும்.
//அதிரா மாதிரி என எழுதுவமா என. பாவமின்று பி.நாளும் அதுவுமா அவங்களை கலாய்க்கவேண்டாமே//
Deleteநோ நோ தயங்காம கலாய்க்கணும் சொல்லிட்டேன் :) நான் பாருங்க அவங்க வண்டியோட்டற ஸ்டைல் படத்தையே போட்டிருக்கேன் என்னா குண்டூ :) முன் ரெண்டு சீட்டையும் அடைச்ச மாதிரி :)))))))))))
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் இதை இப்போதானே கவனிக்கிறேன்:)).. என்னை வச்சு என்னா பேச்ச்சு நடக்குது.. சரி சரி இந்தச் சலசலப்புக்கெல்லாம் மீ பயப்புட மாட்டேன்ன்ன்.. ஆனா என் என்வலப்பை வாங்காமல் போக மாட்டேனாக்கும்:))
Deleteஅந்த அனுமார் கோயில் இலங்கையிலா ? எவ்ளோ பெரிய சூப்பர் சிலை .அழகா இருக்கு
ReplyDeleteஅனுமார் கோவில் யாழ்ப்பாணத்தில் மருதனாமடம் எனும் ஊரில் இருக்கிறது. அங்கே எடுத்தது. இலங்கையில் இன்னுமோர் அனுமார் (பெரிய சிலை) கோவில் கண்டி போகும் வழியில் ரம்பொட எனும் ஊரில் இருக்கிறது. இக்கோயிலுக்கும் போனேன். ஆனா அங்கு உள்ளே மூலவராக இருக்கும் அனுமார்தான் பெரிய்ய்ய்ய அனுமார். நன்றி அஞ்சு
Deleteஅதிராம்பட்டணம், அதிரடி அதிரா வாழ்க வளமுடன் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றிகள் கில்லர்ஜி.
Deleteமிக்க நன்றி வருகைக்கும்,வாழ்த்துக்கும் அண்ணா ஜீ
Deleteஆஆஆஆ இங்கும் பலர் வந்திட்டினம்.. மீதான் பார்ட்டிக்கு லேட் போல..
ReplyDeleteமுதலில் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியல்ல அம்முலு.. எனக்கு பேர்த்டே போஸ்ட் போடுவதற்காகவே ஒரு புளொக் திறந்து வசிருப்பதுபோல ஃபீல் ஆகுது:).
போன வருடம் என் பேர்த்டே போஸ்ட் க்குப் பின்பு, இன்று போட்டிருக்கிறீங்க.. மிக்க மிக்க நன்றிகள்.. மகிழ்ச்சி.. இதுகு மேla என்ன சொல்வதெனத் தெரியவில்லை. இனியாவது தொடர்ந்து போஸ்ட் போடுங்கோ பிளீஸ்ஸ்...
//இனியாவது தொடர்ந்து போஸ்ட் போடுங்கோ பிளீஸ்ஸ்...//
Deleteஅதுதான் என் விருப்பமும் அம்மு.
வாங்கோ அதிரா. சரி இதற்காகவாவது எழுதுறேனே என நான் சந்தோஷப்படுறேன் அதிரா. இனி எழுத முயற்சிக்கிறேன். உங்களை மாதிரி,அஞ்சு மாதிரி எழுதமுடியாது.ஆனா உங்க எழுத்து என்னை நிறையவே பீலாக்கும். உங்களோடு என் கெமிஸ்ரி ஓத்துபோகும். நான் நினைப்பதை நீங்க எழுதுவதால்.. ஓரே நாடு என்பதாலோ என்னவோ....
Deleteநன்றி அக்கா. முயற்சித்து போடுகிறேன்.
Delete//புலாலியூர் பூசானந்தா, ஆஷாபோஷ்லே அதிரா, கவிஅமுதம், மாஸ்டர் செப் அதிரா என இன்னும் பல பட்டப்பெயர்களை//
ReplyDelete//// தனக்குத்தானே சூட்டிக்கொண்டு உலாவரும்//
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதனாலதான் அங்கு அஞ்சு... பட்டமளிப்பு விழாப் படத்தோடு போட்டிருக்கிறா:) இனியாவது நம்போணும் சொல்லிட்டேன்ன்:).
சரி சரி நாங்க இனி நம்புறோம் நம்பிட்டோம்...ஹா..ஹா..ஹா....
Deleteமிக அழகிய குயிலிங் கும், உங்கள் கையெழுத்தில் கடிதமும்.. இது சூப்பர் ஐடியாவாக இருக்கே.. இனி நானும் இப்படிக் கடிதம் எழுதப்போறேன்.. புளொக் கடிதம்:)).. கார்ட் சூப்பராக இருக்குது அம்முலு.. நீங்க ஓடருக்கு செய்து விக்கலாம், எனக்கு இவ்ளோ நீட்டாக வருகுதில்லை..
ReplyDelete16 வயசு பூஸார், நெட்டில் எடுத்ததோ, இல்ல உங்களோடதோ.. ரொம்ப நல்ல பொண்ணாக இருக்கிறார் அப்படியே அதிராவைப்போல:) ஹா ஹா ஹா.
மிக்க நன்றி அதிரா. இது ஜனவரி,பெப்ரவரியில் மட்டுமே செய்வதுதான் இனிமேல் செய்யனும் அதிரா.ஆனா சின்ன பேப்பர் பெரிய சவாலா இருக்கும்.
Deleteகைக்குள் அகப்படாது. நான் செழ்ழும் போது போட்டோ எடுக்கமுடியல. ப்ரென்ட் வீட்டில் செய்தது. அவாவுக்கு இது தெரியும். ஆனாலும் சொதப்பல் இருக்கு. எழுத்து கொஞ்சம் அழகில்லாமல் இருக்கு.ஆனாலும் மாற்றாமல் போட்டிருக்கேன்.
16 வயசு பூசார் தெரியல. என்கிட்ட இருந்தது. நெட்டில் எடுத்தேனோ தெரியல. ஆமா உங்களை மாதிரியேஏஏ
இது சூப்பர் ஐடியாவாக இருக்கே.. இனி நானும் இப்படிக் கடிதம் எழுதப்போறேன்.. புளொக் கடிதம்:))....
Deleteசூப்பர் சூப்பர் ..எனக்கும் ஆசை வருதே ப்ளாக் கடிதம் எழுத
//எல்லாம் வல்ல உங்க பேவரிட் சந்நிதியானையும்,ஆஞ்சநேயரையும் வேண்டிக்கொள்கிறேன்.//
ReplyDeleteஓ அது செல்லச்சந்நிதிப் படமோ?.. ஆஞ்சநேயர் எங்கட மருதனார்மட ஆஞ்சனேயரோ? அவ்வ்வ்வ்.. கட்ட்டும்போது போனேன்ன்.. படமும் எடுத்தேன்... அல்லது இது வேறு படமோ?
ஓம் அதிரா இது சந்நிதி முருகந்தான். (நான் எடுத்ததை காணல. அதுதான் நெட் ல எடுத்து போட்டேன்..) ஆஞ்சநேயர் மருதனாமடம் ஆஞ்சநேயரேதான். இப்ப அது பெரிய கோவில் நிறைய சனங்கள் வருகினம். நல்லா நடக்குது.
Deleteஆஆஆ துருக்கி பூஸ், பப்பீஸ் ரொம்ப ஒற்றுமையானவர்களாக இருக்கிறார்கள், ரொம்ப அழகாகவும் இருக்கினம்...
ReplyDeleteஉணவை பகிர்ந்து உண்ணுகிறாங்க. ஆனா தங்களுக்குள்ளே சண்டை. ஒரு பப்பி பிஸ்கட் எடுத்து ஓடி ஓரு பூசாருக்கு கொடுக்கிற அளவு ஒற்றுமை பாருங்கோவன்.
Deleteஇதே குயிலிங் பேப்பர் என்னிடமும் இருக்குது அம்முலு.. ஒன்லைனில் வாங்கினேன், ஆனா அது ரொம்ப குட்டியாகவும், மெல்லிய பேப்பராகவும் இருப்பதால், எனக்கு சுற்றுவது கஸ்டமாக இருக்கு, பிள்ளையாருக்கு, அப்பேப்பரை யூஸ் பண்ண வெளிக்கிட்டு, முடியாமல், என்னிடம் இருந்த பேப்பரை ஸ்ரெட் பண்ணி செய்தேன்.
ReplyDeleteஇதே நூல்கள், தையல் சாமான் எல்லாம் இங்கேயே வாங்கி சேமிப்பில் வைத்திருக்கிறேன், கொஞ்சம் பூப்போட்டதோடு அப்படியே நிக்குது. செய்யுங்கோ.. ஆரம்பிச்சால் முடித்திடலாம், ஆரம்பிப்பதுதான் கஸ்டம்.
எனக்கும் சுற்றுவது கஷ்டமாதான் இருக்கும்.அதனால் இப்பேப்பரை அவ்வளவா பிடிக்கல. ஆனா செய்துபோட்டு பாருங்கோ நல்ல அழகா இருக்கும். அதனால்தான் கொஞ்சமா வாங்கினேன்.
Deleteதைக்க வேணும் அதிரா. ஆனா சோம்பல் பட்டு விட்டுவிடுகிறேன். நீங்க சொன்னதுதான் ஆரம்பித்தால் கடகடவென செய்து முடித்துவிடலாம்..
மிக்க நன்றிகள் அம்முலு.. சந்தோச உஞ்சலில் ஆடுகிறேன்ன்..
ReplyDeletehttp://www.picturesanimations.com/c/cats/169.gif
இந்தாங்கோ அம்முலு இது உங்களுக்கே.. அட்டியல் அல்ல:) கர்ர்ர்:) ரோஜாவைச் சொன்னேன்.. ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் அம்முலு... நீங்களும் அஞ்சுவும் என்னை மிகவும் சந்தோச மழையில் நனைத்து விட்டீங்க..._()_.
https://lh5.ggpht.com/_58idaQNXn74/SUDzWXorRnI/AAAAAAAAAhU/CrD5lRqf3bY/s800/99.png
மிக்க நன்றி அதிரா. சந்தோஷமாக பிறந்தநாளை கொண்டாடுங்கோ.
Deleteஅழகான அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மு.
ReplyDeleteசுவீட் 16- அதிராவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் அதிரா.
வாங்க அக்கா. வருகை தந்து வாழ்த்துக்கள் சொன்னமைக்கு மிக்க நன்றிகள் அக்கா.
Deleteமிக்க நன்றி கோமதி அக்கா.
Deleteகலர்புல்லாக மலர்கள் செய்தேன்.///
ReplyDeleteமலர்கள் அழகு.
படங்கள் எல்லாம் அழகு.
கோவில், அனுமன் எல்லாம் மிக அழகு.
மிக்க நன்றிகள் அக்கா.
Delete/ (செய்யிறனோ இல்லையோ வாங்கி வைத்துவிடவேண்டியதுதான்.)//
ReplyDeleteஹாங் ஹா அதேதான் :) நான் எக்கச்சக்கமா சேர்த்து வச்சிருக்கேன் அப்பப்போ எடுத்து பார்த்து அதுங்க கூட அன்பா பேசிட்டு வச்சிடுவேன்
நீங்க சேர்த்ததோட விட்டீங்களோ.. என்னையும் சேர் சேர் எனச் சொன்னதால பிறீமார்க் பாக்கூட எறியாமல் சேர்த்து, சமீபத்தில எறிஞ்சேன் கர்ர்:)) ஹா ஹா ஹா.. கொஞ்சம் கொஞ்சமாக இனி சேர்த்ததை எறியோணும்.. இதுதான் தொழிலாகிடக்கு ஹா ஹா ஹா...
Deleteநானும் பிரிமார்க் bagசேர்த்துவைத்திருந்து எல்லாம் எறிந்தாச்சு.இப்ப தேவையான க்விலிங் பேப்பர்தான் சேர்ந்து இருக்கு. 2,3 box இருக்கு. எடுத்து அடிக்கடி பார்த்துவிட்டு வைப்பேன். ஹா..ஹா..
Deleteபிறந்த வாழ்த்துக்கள் அதிரா (இங்கும் )..
ReplyDeleteஎன்றும் தங்கள் மனம் போல மிக மகிழ்வுடன் , சிறப்புடன் உங்கள் நாட்கள் , வருடங்கள் அமையட்டும் ..
அழகான பதிவு அம்மு ..தொடரட்டும் உங்கள் பதிவுகள் ..
காண வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறேன் ..
வாங்க அனு. முயற்சித்து உங்க எல்லோரது விருப்பத்தினை நிறைவேற்றுக்றேன். வருகைக்கும்,வாழ்த்துக்கும்,அன்புக்கும் நன்றிகள்.
Deleteமிக்க நன்றிகள் அனு.
DeleteNice to see Ms.Myaav's birthday posts..good one Ammulu!
ReplyDeleteவாங்க மகி. மிக்க நன்றி மகி
Deleteவாங்கிச் சேர்க்கிற வேலையை இப்போதுதான் விட்டிருக்கிறேன்.
ReplyDelete