RSS

07/03/2019

ஊரோடு உறவாடி.....

 நன்றிகள் 😍 😍
பதிவுக்குள் போவதற்கு முன் அன்பு அதிரா, அன்பான அஞ்சு, அன்பு கோமதிஅக்கா, அன்பான அனு ஆகியோருக்கு என் அன்பான நன்றிகள். அதிரா ப்ளாக்கில் எழுதுங்கோ என சொல்லி களைச்சு போனா. கூடவே அஞ்சுவும். இம்முறை அதிராவின் பிறந்தநாள் பதிவில் கோமதி அக்காவும் அனுவும் இவர்களுடன் சேர்ந்து கூட்டணி அமைத்துவிட்டார்கள்.  இவர்களுக்கு நன்றிகளை 🙏🙏🙏சொல்லிக்கொண்டு எனது உரையை..சே..என் பதிவினை பதிகிறேன்.

ஆரம்பமாக இனிப்பான  Dates Cake (பேரீச்சம்பழ முட்டையில்லா கேக்) எடுத்துக்கொள்ளுங்கோ.
இது  தீர்க்கதரிசி அதிராவின் குறிப்பு என்பதனை பதிவு செய்கிறேன். வார இறுதியில் மகனார் என்னிடம் ஸ்நாக்ஸ் ஏதாவது செய்யுங்கோ என்றார். எனக்கு கேக் பொதுவா சரியாக வருவதில்லை. இன்னைக்கு இதையே செய்வோம் என எண்ணிய எனக்கு அதிரா செய்தது நினைவு வர செய்துபார்த்தேன். முதல் தடவையிலேயே நல்ல மென்மையாக, ருசியாக வந்தது. கேக் சாப்பிடாத கணவர் கூட சாப்பிட்டார்.

-----------------------------------------------------------------------------
சரி இப்போ  பதிவுக்கு வருகிறேன். நாங்க வருடம் ஏதாவது ஒரு நாட்டுக்கு  போவது அல்லது ஊருக்கு போவது என எங்க விடுமுறை அமையும். நான் எப்படியாவது எங்க ஊருக்கு வருடம் ஒரு முறை போய்விடுவேன்.  அதிரா  அந்தாட்டிக்கா போவதுபோல....
அதே போல் இம்முறை இரட்டிப்பு பயணம். அதாவது ஒரு நாட்டுக்கும் , ஊருக்கும் போனோம். வியட் நாம் , மலேசியா, இலங்கை என பயணமானோம்.   மலேசியா ஏற்கனவே போயிருப்பதால் அங்கு பெரிதாக வெளியிடங்களுக்கு செல்லவில்லை. கணவரின் சகோதரர் இருப்பதால் அங்கு சென்றது மட்டுமே. வியட்நாம் புது நாடு சொல்லவிடயங்கள் இருப்பதால் பின் அதனை எழுதுகிறேன்.( ஒரு பதிவும் எழுதலாமெல்லோ)

இது மலேசியாவில் ஒரு மாலை பொழுதில் சூரியன் மறையும் காட்சி....... 



இம்முறை ஊரில் அதிக நாட்கள் நின்றாகிவிட்டது. ஒவ்வொரு முறையும் சென்று திரும்பிவர மனமில்லாமல்தான் வருவது வழக்கம். வரவர இவ்வெண்ணம் அதிகமாகிக் கொண்டே போகிறது.
நீண்ட வருடங்கள் கழித்து இம்முறை பொங்கலை அங்கு கொண்டாடினேன். ஊரிலிருந்தபோது  சாணியால் முற்றம் மெழுகியது. நீண்டகாலமாகிவிட்டதால் நான் மெழுக ஆரம்பித்து  கொஞ்சம்  கஷ்டப்பட்டுப்போனேன்.  இம்முறை நிறைய அட்டைகள் வேறு. எல்லாவற்றையும் சமாளித்து, மெழுகி,  பொங்கலை கொண்டாடியாகிவிட்டது .

                                  அக்கா வீட்டின் வாயில்.

இதுதான் பொங்கல் வைத்த இடம்.  வேலிக்கு அப்பால் வயல்வெளி. இதுதான் கிழக்கு பக்கம். முன்னுக்கு முற்றம் இல்லை. பின்பக்கமே இடம் இருக்கு.

                               இது நான்  மெழுகியது .

                           பொங்கல் பானை வைத்தாகிவிட்டது .

                                        அடுப்பு பற்றவைத்தாச்சு

    சூரியனார் வந்துவிட்டார். இந்நேரம் கொஞ்சம் குளிர் இருந்தது.

உண்மையில் சூரியன் வர பாலும் பொங்கியது. சுற்றவர பொங்கியது, மிக சந்தோஷமா இருந்தது.


                            சூடான  வெயிலா வந்துவிட்டது

பொங்கல் முடிந்து சூரிய பகவானுக்கு படைத்தாயிற்று.  த(அட் )டைகளை  தாண்டி பொங்க வேண்டியதாகி போச்சு.  புது துணி (புடைவை) அணிந்து ,பொங்கி பின் கோவில் சென்று சாமி தரிசனம் முடித்து வந்து, சாப்பிட்டு அக்கா வீட்டில் பொங்கல் கொண்டாடியது  இவ்வருடம் மறக்கமுடியாதவொன்று.
......................................................................

வேம்படி போகிறார் 
 
இவர்கள்தான் அந்த தடைகள். இம்முறை அதிகளவில் பல்கிபெருகிவிட்டார்கள். இவர்கள் டபுள்டெக்கர் மாதிரி ஒன்றின் மேல்  ஒன்றாக ஏறி சவாரி செய்வார்கள். நாங்க இவர்களை செட்டி அட்டை என்போம் சில இடங்களில் சரக்கட்டை என்பார்கள். காலிற்கிடையில் மிதிப்படுவதே இவர்களது வேலை. நல்ல ஸ்பீடா ஏதோ "கிணற்றுக்கட்டில் வைத்த குழந்தையை எடுக்க ஓடுமா போல "போவார்கள். வேறு ரகத்திலும் இருக்கிறார்கள். இவர்களை code word ஆக  "வேம்படி" எனவும் சொல்வோம்.
அது ஒண்ணுமில்லை இலங்கையில் பாடசாலைகள்  எல்லாம்  யூனிபோர்ம் அணியவேண்டும். uniform)ஆண்கள் பெண்கள் என பாடசாலைக்கு யூனிபார்ம் தான். பெண்கள் white frock ம் , ஆண்கள் வெள்ளை சேர்ட், நீல நிறத்தில் காற்சட்டை அணியவேண்டும். 11ம்,12ம் வகுப்பு படிக்கும் ஆண்கள் நீளகாற்சட்டை ப்ளூ கலரில் அணியவேண்டும்.  பாடசாலைகளை  பிரித்து காட்டுவது tie தான். டை பார்த்து இது எந்த பாடசாலை என இனம் காணலாம்.  இது  யாழில்  இயங்கும் மிகவும் பிரபலமான பெண்கள் பாடசாலையின் "டை  tie". அது கறுப்பு மஞ்சளில் உள்ளது. இவ்வட்டையும் கறுப்பு மஞ்சளிலேயே  இருப்பதால் அந்த பெயர். 
                                  இதுதான் அப்பாடசாலையின்  tie 

இன்னொரு அட்டை  இருக்கு சிவப்பு கறுப்பில். அதுக்கும் ஒரு பாடசாலை பெயர் இருக்கு. ஹா ..ஹா..ஹா  

******************************************************




70 comments:

  1. ஆஹா வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க நான் போனமாதமே வந்தாச்சு. நீங்க தான் இப்ப வாறீங்க 😀

      Delete
    2. நோஓஓஓஓஓஓஓஒ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) 4 ட்றுத்:) அவசரமா ஓடி வந்தேன்ன் மீ த 1ஸ்ட்ட் சொல்ல:))

      Delete
  2. //எனக்கு கேக் பொதுவா சரியாக வருவதில்லை//

    அதிராவின் பெஸ்ட் தோழி என்பதை நிறுபிக்க இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இம்முறை வந்திட்டுதாம் ட்றுத்:) வடிவாப் படியுங்கோ:).

      Delete
    2. கண்ணாடியை போட்டு படியுங்கோ ட்றுத்.

      Delete
  3. என்னது சாணியை கரைத்து மெழுகினீங்களா?

    உவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வே

    ReplyDelete
    Replies
    1. ஏன் சாணி என்றா அவ்வளவு அருவருப்பா.. .. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்
      நான் சாணி கரைத்துதான் மெழுகினேன். முன்னாடி ஊரிலிருந்தப்போ செய்தது.கொஞ்ச காலமா இங்கு வந்தபின் அதனை மறந்தாச்சு. இம்முறை சந்தர்ப்பம் கிடைத்தது.

      Delete
    2. வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி ட்றுத்.

      Delete
  4. ஆவ்வ்வ் நான் வந்திட்டேன் எனக்கு முன்னாடி வந்தவங்களுக்கு :) கர்ர்ர்ர்ர்

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க அஞ்சு

      Delete
  5. ஹாஹா நானும் தீர்க்கதரிசியின் கேக்கை அவங்க ரெசிப்பி போட்டப்போவே செஞ்சேன் அப்புறம் தானே தெரிஞ்சது :) அது என்னை மயக்கம்போட வைக்க கொடுத்த ரெசிப்பினு :)
    இதே மாதிரிதான் வந்தது ..ஆனா சும்மா சொல்லக்கூடாது செம டேஸ்ட் .நானும் வஞ்சகமில்லாம சாப்பிட்டு அப்புறமா தெரியும்தானே என்னாச்சுன்னு :) என் கணவருக்கு ரொம்ப பிடிக்கும் மகள் என்னைப்போல நோ ஸ்வீட்ஸ்

    ReplyDelete
    Replies
    1. /சும்மா சொல்லக்கூடாது செம டேஸ்ட் .நானும் வஞ்சகமில்லாம சாப்பிட்டு//
      இங்கனயும் அதே கதைதான். நல்லகாலம் எனக்கு ஒன்னும் ஆகல. ஸ்வீட் கணவர் விரும்பிற ஆள் கிடையாது. நானும் மகனும்தான் சாப்பிடுவது. இக்கேக் செய்த மாயம் கணவர் சாப்பிட்டது.

      Delete
  6. மாலைப்பொழுதில் சூரியன் ஒளியும் காட்சி வாவ் செம அழகு எப்படி ஜொலிக்கிறார் சூர்யா பாருங்க :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அஞ்சு. மாலை நேர்த்தை வீட்டு ஹாலில் இருந்து ரசித்துக்கொண்டிருக்கலாம். நல்ல அழகா இருக்கும். கமராவில் சுட்டிருந்தா நல்லாயிருந்திருக்கும். மொபைல் சட்டென்று எடுத்தது.

      Delete
  7. வாவ் வியட்நாமுக்கும் போனீங்களா சூப்பர் :) விரைவில் கடகடன்னு அடுத்த போஸ்ட்டையும் போடுங்க :)

    ReplyDelete
    Replies
    1. ம்...போடனும் அஞ்சு. என்ன படங்களை கலெக்ட் செய்து எழுதனும். ஊர் போஸ்ட் இன்னும் இருக்கு அது முடிய போடனும்.

      Delete
  8. அக்கா வீட்டு வாயில் அப்படியே நிஜ கிராமிய சூழல் ..பொங்கல் பார்க்க ஆசையா இருக்கு ..
    அங்கே பாய் போட்டு தூங்கலாம் காத்து ஜில்லுனு வரும்

    ReplyDelete
    Replies
    1. சொல்லாதீங்க. எனக்கு வரவே மனமில்லை. அவங்க வீட்டுக்கு பின்பக்கம் வயல். முன்னாடி பெரிய மாமரம். பின்பக்கம் எல்லா மரம் செடிகளும் இருக்கு. மா,பலா வாழை,புளி,கொய்யா,எலுமிச்சை,மாதுளை,அகத்தி, வயலுக்கும் வீட்டுக்கும் இடையில் நிறைய தென்னை மரங்கள் இருக்கு. இதனால் அங்கு கடும் வெயிலானும் இங்கு நின்ரால் நல்ல குளுகுளுன்னு இருக்கும்.

      Delete
  9. சாணி போட்டு மெழுகினீங்களா வாவ் சூப்பர் .இங்கே ஸ்கொட்லான்ட் பூசாரிக்கு அதெல்லாம் தெரியாதது கொஞ்சம் தலைல குட்டி சொல்லிகுடுங்க :) ஹாஹாஹா ..அதெல்லாம் ஊரோட போயாச்சு எங்க வீட்லயே செர்வண்ட் லேடி செய்வார் ..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அஞ்சு. முதலில் கொஞ்சம் தயக்கம் ஏனென்றா அட்டைகளால்.. கனகாலமாகிவிட்டதுதானே. எங்களுக்கு ஆள் இருக்கார். ஆனா அன்று வரவில்லை. ஆள் செய்தாலும் நான் இதனை விரும்பி செய்வதுண்டு.
      ஹா..ஹா..ஹா... பூசார் ஓடியே போய்விடுவார்.
      எனக்கு ஒரு ஞாபகம் வருது எங்க வீட்டு ரோஸி (பூஸ்)க்கு எங்க வீட்டு செல்வி (அம்பா) நல்ல ப்ரெண்ட். செல்வி கட்டியிருக்கும் இடத்துக்கு விசிட் செய்து செல்வியை நக்கி கொடுப்பா. அவாவும் பேசாமல் இருப்பா. (அதுதான் சொன்னாங்க போலும் "பசு சாதுவான மிருகம் என." அநியாயத்துக்கு எங்க செல்வி சாது. ஆனா எங்க வீட்டினரை தவிர யாரும் கிட்ட நெருங்க முடியாது.)
      ஆனா ரோஸி சாணி கரைத்து தெளித்தாலோ,மெழுகினாலோ அந்த இடத்துக்கு வரமாட்டா. ஹா..ஹா..ஹா.

      Delete
  10. ரெயில் பூச்சிக்கு வேம்படி பெயர் செம பொருத்தம்தான் :)
    சென்னை வீட்டிலும் இருக்கும் ஆனா அப்பாவிங்க அப்படியே போகும் வரும் .
    இந்த கம்பளி பூச்சிங்க தான் எங்கவீட்டு மல்பெரி மரத்தில் கொத்துகொத்தா இருக்கும் பொல்லாததுங்க

    ReplyDelete
    Replies
    1. அது அந்த கலர் சேர்க்கை. கம்பளி பூச்சின்னா நான் நினைக்கிறேன் நாங்க சொல்லும் மசுகுட்டியோ தெரியாது. இதுவும் இருக்கு எங்க ஊர்ல .உடம்பில் பட்டால் சுனைக்கும்.அதாவது கடிக்கும். பின் வீக்கமாகும். சாம்பல் பூசிகொள்வோம்.2 ரகம் இருக்கு. கூடுதலா முள்முருங்கையில் கல்யாண முருங்கைன்னு சொல்வாங்க அதிலும்,முருங்கை மரத்திலும் இருக்கும். அம்மாடி எனக்கும் பயம் இதுக்கு..

      Delete
    2. வருகைக்கும் உங்க அன்புக்கும் மிக்க நன்றி அஞ்சு.

      Delete
  11. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அம்முலு ஒரு கப் வீவா ஊத்தி தாந்தாங்கோ.. ச்ச்ச்சோ ரயேட்டாகிட்டேன் எங்கள்புளொக்கில் கும்மி அடிச்சு:)) இனித்தான் இங்கு படிக்கப் போகிறேன்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க தீர்க்கதரிசி அதிராமியாவ்...

      Delete
  12. //இன்னைக்கு இதையே செய்வோம் என எண்ணிய எனக்கு அதிரா செய்தது நினைவு வர செய்துபார்த்தேன். முதல் தடவையிலேயே நல்ல மென்மையாக, ருசியாக வந்தது. கேக் சாப்பிடாத கணவர் கூட சாப்பிட்டார்.//

    ஆவ்வ்வ்வ் இதன் சுவையே தனி அம்முலு, சத்தியமா இப்பவும் எல்லாம் எடுத்து ரெடி பண்ணிட்டு, டேட்ஸ் ல செய்வோமா இல்ல பட்டர் கேக் செய்வோமா எனும் குழப்பத்தில இருக்கிறேன்ன்.. ஒரு கேக் அண்ட் வெங்கட் ஆதியின் புடிங் இரண்டுமே செய்ய ஆசையா இருக்கு நைட்டுக்கு.

    ReplyDelete
    Replies
    1. செய்திட்டீங்களா. நாந்தான் பதில் தர லேட்டாயிட்டுது. போஸ்ட் போட்டு வெளியில் போயிட்டு வர லேட்.. மொபைலில் பதில் எழுதமுடியவில்லை. கொமண்ட் பப்ளிஷ் செய்ய கூடியதா இருக்கு.
      சூப்பரா இருந்தது அதிரா. நன்றி உங்களுக்கு.

      Delete
  13. ஹா ஹா ஹா அதிராவின் ரெசிப்பிகளில், செய்ய வேண்டியவற்றை நோட் பண்ணிட்டீங்களோ? அப்போ என் குழை சாதம்? ஒடியல்கூழ்?:))

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்.. அஞ்சு மாதிரி எடுக்க ஈசியா ஒரு தளம் இருந்தா எடுக்கலாம். இது உங்க பக்கம் சல்லடை போட்டு எடுக்கனும்.அதனால நான் உடனேயே செய்யக்கூடிய ரெசிப்பியை எழுதி வைப்பேன். இதுவும் டேட் தெரியல மறந்திட்டன் எழுத.. ஒருமாதிரி தேடி எடுத்தாச்சு. எபி யில் போட்டது இவைகளும் செய்யனும். ஒடியல் கூழ் எங்கன போட்டீக..?:))

      Delete
  14. //நான் எப்படியாவது எங்க ஊருக்கு வருடம் ஒரு முறை போய்விடுவேன். அதிரா அந்தாட்டிக்கா போவதுபோல....//

    ஹா ஹா ஹா இம்முறையும் அந்தாட்டிக்கா பயணம் இருக்கு:).

    ஓ அப்போ நீங்க மலேசியா முருகன் கோயிலும் பார்த்திருப்பீங்க..

    என்னாதூஉ மலேசியாச் சூரியன் ஏன் சிவப்பா இருக்கிறார்ர்?:) அவ்ளோ கோபமோ?:)

    ReplyDelete
    Replies
    1. அன்னைக்கு இப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கலை அதிரா. ஏனென்றா அன்று நல்ல மழை. மதியத்துக்கு பின்னாடி நல்ல வெயில் இப்படி வரும்ன்னு நினைக்கல. ஒருவேளை தன்னை முந்தி வருணன் வந்ததால் இருக்குமோஓ...

      Delete
  15. நானும் சின்ன வயதில் ஊரில் சணி மெழுகியிருக்கிறேனே.. ஆனா இப்போ நினைக்க அய்ய்ய்ய்ய்ய்ய் என இருக்கு:) ஹா ஹா ஹா.

    உங்கட அக்கா வீடு நல்ல சோலையா அழகா இருக்கு.. இப்போ ஊரில் அனைத்து வீடுகளும் சோலைதானாம்ம்ம்..

    ஊரில் பொங்கல் .. பார்க்க எவ்ளோ மகிச்சியாக இருக்கு.

    அவ்வ்வ் செட்டி அட்டை.. இப்போகூட இதை நினைச்சுப் பயத்திலதான் அம்மாவை அடிக்கடி கேபேன் இப்பவும் இருக்கோ என.. மழை வந்தால் வந்துவிடும் என்றா.. இதுகூடப் பறவாயில்லை அம்முலு.. எனக்கு அந்த சிவப்பு அட்டை மற்றும் பேனை அட்டைதான் கண்ணில காட்டக்கூடாது..

    இது பூச்சிபோல திரியும், ஆனா ஏனையவை புழுப்போல ஊரும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    ஓ எவடம் எவடம்? புளியடி வேம்படி?:) ஹா ஹா ஹா அந்த வேம்படியோ அட்டைக்கும் பெயர்?:).

    ReplyDelete
    Replies
    1. //உங்கட அக்கா வீடு நல்ல சோலையா அழகா இருக்கு.. இப்போ ஊரில் அனைத்து வீடுகளும் சோலைதானாம்ம்ம்// கர்ர்ர்ர்.. நீங்க போய் ஒருக்கா பாருங்க. எல்லா வீட்டிலும் மா,வேம்பு,பலா என மரங்களும் பூகண்டுகளும் என வைத்திருக்கிறாங்க. கூடவே ஊருக்கு ஊர் garden cender. பூச்செடிகள்,அழக்கு வளர்க்கும் குரொட்டன்ஸ் விதவிதமா, அத்துடன் மலைநாட்டில் வளரும் பூக்கண்டுகள் என cender ல் விற்கிறாங்க. பூங்கனி சோலை தான் பெரிய கார்டன்செண்டர். அதைவிட சின்ன van களில் மக்கள் கூடும் இடத்தில் தற்காலிகமாக கொண்டு வந்து விற்பாங்க. எங்க அக்கா வீட்டுக்கு முன்னாலும் ஒரு செண்டர். அவ்வ்வ்வ்
      அப்ப இப்படி வித்தால் அங்குள்ள வீடுகள் சோலையாக இருக்கும்தானே.

      //எனக்கு அந்த சிவப்பு அட்டை மற்றும் பேனை அட்டைதான் கண்ணில காட்டக்கூடாது..///ஆஹா.. எனக்கும் தான். நல்ல காலம் அக்கா ஊரில் இவங்க 2பேரும் குறைவு. ஆனா மாமி ஊர்ல இவங்க அட்டகாசமாம். மாமி சொன்னா. அவங்க கடற்கரை நகரம்..
      ஆவ்வ்வ்வ் வேம்படி தெரியாதோஓஓ....உங்களுக்கு. இந்த டை யை கண்டால் அட்டை பெயர் சொல்வாங்க அதிரா.ஹா..ஹா..

      Delete
  16. ஹா ஹா ஓ வேம்படி.. இப்போதான் படிச்சேன்.. நான் முழுக்க படிக்காமல் கொமெண்ட்ஸ் போடுவதால், விடை தாமதமாகக் கிடைக்குது:)..

    நல்லவிசயம் தொடர்ந்து போடுங்கோ அம்முலு.. சில சமயம் எனக்கு எங்கும் போக முடியாமல் இருக்கும்.. அப்படி எனில் 2 நாள் கழிச்சாவது வருவேன்ன்.. அதனால் ஏதும் குறையில்லாமல்.. நீங்கள் போஸ்ட் போடுங்கோ.. தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் ப்திவு எழுத விருப்பம்தான் அதிரா. நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்.உங்களுக்கு எப்ப டைமிருக்கோ அப்ப வந்து வாசியுங்கோ.
      உங்க எல்லாரது தூண்டுதலால்தான் இது சாத்தியம். மீண்டும் உங்களுக்கு மிக்க நன்றிகள் அதிரா.

      Delete
  17. சந்தோஷமாக பொங்கலை கொண்டாடியதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அண்ணா ஜீ. வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

      Delete
  18. அம்மு வாழ்த்துக்கள்.
    அழகான பதிவு.
    இப்படி அடிக்கடி எழுதுங்கள்.
    படிக்க பார்க்க எல்லாம் அருமை.

    //அதிராவின் பிறந்தநாள் பதிவில் கோமதி அக்காவும் அனுவும் இவர்களுடன் சேர்ந்து கூட்டணி அமைத்துவிட்டார்கள்.//

    கூட்டணிக்கு கிடைத்த வெற்றி. தேர்தல் கூட்டணி இல்லை, அன்பால அமைந்த கூட்டணி.

    நாளை மீண்டும் வருகிறேன் அம்மு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அக்கா.
      //கூட்டணிக்கு கிடைத்த வெற்றி. தேர்தல் கூட்டணி இல்லை, அன்பால அமைந்த கூட்டணி.// ஹா..ஹா.. உண்மைதான் அன்பு சூழ் உலகு.

      Delete
  19. //முதல் தடவையிலேயே நல்ல மென்மையாக, ருசியாக வந்தது. கேக் சாப்பிடாத கணவர் கூட சாப்பிட்டார்.//

    அதிராவின் செய்முறை, அப்புறம் அம்முவின் அன்பில் குழைத்து செய்யப்பட்டது நன்றாக இல்லாமல் எப்படி போகும்!

    ReplyDelete
    Replies
    1. அதிராவின் ரெசிப்பி ஊர் செய்முறையை ஒத்து இருக்கும் எனக்கும் அது ஈசியாக இருக்கும். மகன் சின்னவயதில் 2தடவை பி.நாளுக்கு செய்தது. பின்னர் செய்யவில்லை. கனகாலமாகிவிட்டது. சரியா வருமோ எனும் டவுட்ல்தான் செய்தேன். இன்னும் அரியதரம் இருக்கு அதுவும் செய்யனும். பின்பு அஞ்சுவின் ரெசிப்பியும் இருக்கு.செய்யனும் ஒவ்வொன்றா.
      அதிசயம் ஆனால் உண்மை கணவர் சாப்பிட்டது..ஆவ்வ்வ்வ்

      Delete
  20. மாயவரத்தில் மழை காலத்தில் வந்து விடும் இந்த அட்டைப் பூச்சிகள். நாங்கள் மாடியில் இருந்ததால் வீட்டுக்குள் வராது.

    மழைகாலம் கீழ் வீட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் கஷ்டமாய் இருக்கும், எல்லாம் வீட்டுக்குள் படை எடுக்கும்.

    கறுப்பும், மஞ்ச்சளும் உள்ள அட்டை பூச்சி, சிவப்பு கலர் ரயில் அட்டை பூச்சி, எருமை தோல் போல் இருக்கும் இரத்தம் உறியும் அட்டை பூச்சி எல்லாம் பார்க்கவே உடம்பை ஏதோ செய்யும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அக்கா. பார்க்க அருவருப்பா இருக்கும். ஊரிலிருந்த போது மழைக்காலத்தில் ஓட்டு கூரை வீடு எங்க வீடு. வீடருகில் மரம் இருக்கு. இவை அதில் ஏறி வீட்டுக்கூரையில் உள்பக்கம் வந்துவிடும். இரவு படுக்க போகும்போது கூரை எல்லாம் செக் செய்து பார்த்துவிட்டே படுக்கனும். இல்லையென்றா கீழே படுக்கையில் விழும். அதுவும் சிவப்பு அட்டைதான் படுமோசம். என்ன செய்வது எல்லாமே ஆண்டவன் படைப்பு..

      Delete
  21. வேம்படி விவரம் அருமை.

    ReplyDelete
  22. படங்கள் எல்லாம் அழகு. பொங்கல் பண்டிகையை உறவோடு, ஊரோடு கொண்டாடியது மகிழ்ச்சி அளிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. இனிமேல் இப்படி வாய்ப்பு கிட்டுமா தெரியல. அந்நினைவுகள் இருக்கு. எனக்கும்,என் அக்காக்களுக்கும் மகிழ்ச்சி நான் இம்முறை ஊரில் நின்றது.
      மிக்க நன்றி அக்கா உக்க வருகைக்கும்,அன்பான கருத்துக்களுக்கும்.

      Delete
  23. பதிவைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி...

    தொடர்ந்து எழுதுங்கள்...

    வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா உங்க வருகைக்கும்,வாழ்த்துக்கும்

      Delete
  24. ஆஹா, 2017-ம் ஆண்டு முழுவதும், பதிவு ஏதும் தராமல் காணாமல் போனவர்கள் லிஸ்டில் இருந்த அம்முலுவை எப்படியோ கஷ்டப்பட்டுத் தேடிக் கண்டுபிடித்து, 2018-இல் இரண்டு பதிவுகளும், 2019-இல் இரண்டு பதிவுகளும் கொடுக்க ஊக்கமும் உற்சாகமும் அளித்துத் தூண்டிவிட்டுள்ள அதிரடி அதிரா & Co., வுக்கு அடியேனின் மனம் நிறைந்த நன்றிகள்.

    அம்முலுவின் இப்படியான திடீர் வருகையால் வலைத்தளமே ‘சும்மா அதிருதில்ல.....’ :)

    >>>>>

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... இது என்ன என் தளமே ஆடுது என பார்த்தால்...கோபு அண்ணா வந்திருக்காக. என் கண்ணையே நம்பமுடியல. வாங்க அண்ணா. வாங்க மிக்க மகிழ்ச்சி வருகைக்கு. அதிரடி அதிராவுக்கு நன்றிகடன் பட்டிருக்கேன்.

      Delete

  25. மிக மகிழ்ச்சி அம்மு ...

    இனி நாங்களும் இங்க வந்து ஊர் சுத்தி பார்க்கலாம் ...
    Dates Cake ..அட்டகாசமா இருக்கே

    பொங்கல் கொண்டாட்ட படங்கள் எல்லாம் மிக அழகு, எங்கிருந்தாலும் நம் ஊர் செல்லும் போது வரும் மகிழ்வுக்கு அளவேது ..

    ReplyDelete
    Replies
    1. வாங்க அனு. நீங்களும் சேர்ந்துகொண்டீங்க. ஊர்களை காட்டலாமென இருக்கேன். உங்க பக்கமும் செய்ய ரெசிப்பிகள் இருக்கு. அதனையும் செய்து பதிவிடனும். நல்ல ரெசிப்பி கொடுத்திருக்கிறீங்க.
      ஆமாம் அனு. அதுதான் பாட்டே இருக்கு. சொர்க்கமே என்றாலும் நம்நாடு போலவருமான்னு... அவ்வளவு மகிழ்ச்சி,சந்தோஷம். இப்ப விட்டாலும் ஊருக்கு ஓடிடுவேன்.ஹா..ஹா..
      மிக்க நன்றி அனு வருகைக்கும்,உங்க கருத்துக்கும்.

      Delete
  26. தட்டிக் ‘கேக்’க நெல்லைத்தமிழன் போன்ற ஆள் இல்லாததால்,

    ‘கேக்’ செய்ததாக, அதுவும் அதிரா பாணியில் செய்ததாகச் சொல்லி ஒருவாறு தப்பித்துள்ளீர்கள். :)))))

    ’கேக்’ செய்த கையோடு ...... பொங்கலிட ......

    அடுப்பையும், சுற்றியுள்ள இடங்களையும் சாணியால் மொழுகியது மிகவும் பாரம்பர்யமான மிகச் சிறந்த செயலாகும்.

    பசுஞ்சாணி தானே ? பசுஞ்சாணி நல்லதொரு கிருமி நாசினியாகும்.

    சாணியைத்தட்டி ரெளண்டாக சுவற்றில் காயவைத்து விடுவார்கள். அதுவும் வெயிலில் காய்ந்து கேக் போல ஆகிவிடும். அதனை வராட்டி என்று சொல்லுவார்கள். இந்த வராட்டிகளை ஹோமங்களுக்கு எரிபொருளாகப் பயன் படுத்துவார்கள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. /தட்டிக் ‘கேக்’க நெல்லைத்தமிழன் போன்ற ஆள் இல்லாததால்,

      ‘கேக்’ செய்ததாக, அதுவும் அதிரா பாணியில் செய்ததாகச் சொல்லி ஒருவாறு தப்பித்துள்ளீர்கள். :)))))// ஆவ்வ்வ்வ் அதிரா இங்க ஓடி வாங்கோ. வந்ததும்,வராததுமா கோபு அண்ணா என்ன சொல்லுறார் என்று பாருங்கோ...
      பசுஞ்சாணியேதான்.அதுவும் எங்க வீட்டு கோமாதாவின் சாணியேதான். ஆமாம் அண்ணா நல்ல கிருமிநாசினி. வரட்டி எங்க ஊர்களிலும் செய்வார்கள். கோவில்களில் கண்டிருக்கேன்.

      Delete
    2. ஆனா சகோ.மதுரை தமிழனுக்கு அருவருப்பா இருக்காம்..உவ்வ்வ்வே என சொல்லியிருக்கார்..

      Delete
  27. அட்டைகள் மற்றும் வேம்படி என்ற பெயர்கள் புதுமையாக உள்ளன. இருப்பினும் வேம்படிக்கான பெயர் காரணம் பொருத்தமாகத்தான் உள்ளது.

    மழைக்காலங்களில் தென்படும் இதனை நாங்கள் ’இரயில் பூச்சி’ அல்லது ’மரவட்டை’ என்றுதான் அழைப்பதுண்டு.

    என் சிறுகதைகளில் ஒன்றில்கூட இவை இடம் பெற்றுள்ளன. அதற்கான தலைப்பு: ‘அமுதைப் பொழியும் நிலவே’ இணைப்பு: http://gopu1949.blogspot.com/2014/03/vgk-08.html

    காணாமல் போனவர்கள் லிஸ்ட்டில் உள்ள மற்றொரு பிரபலமான ‘யங் மூன்’ அவர்களையும் யாராவது தேடிக்கண்டு பிடித்து வெளிக்கொணர்ந்தால் பதிவுலகுக்கு நன்மையாக இருக்கும்.

    அன்புடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி அண்ணா மறக்காமல் வந்தமைக்கு. உங்க கருத்துக்களுக்கும்,வருகைக்கும் மிக்க நன்றிகள்.
      உங்க இணைப்பை வாசிக்கின்றேன்.

      Delete
  28. வணக்கம் அம்மு !

    என்னைப்போல் நீங்களும் அடிக்கடி காணாமல் போவது வழக்கமாய் விட்டது ஹாஹாஹா
    ஆமா எப்போதிருந்து பூசார் தீர்க்கதரிசாயாப் போனார் ? ம்ம்ம்ம் இருக்கட்டும்

    இனிய மகளிர்தின நல்வாழ்த்துகள் அம்மு
    வாழ்க நலம்

    ReplyDelete
    Replies
    1. வாங்க கவிஞரே. நீங்களும் காணாமல் போகாமல் ஒரு கவிதையாவது எழுதி போடுங்கோ. வாழ்த்துக்கும்,வருகைக்கும் நன்றி சீராளன்.

      Delete
    2. மிக்க நன்றி அம்மு !

      வழமைபோல ஒரு ஒப்பாரிப் பாட்டு பதிவிட்டு இருக்கிறேன் விரைவில் சமூகக் கவிதை பதிவிடுவேன் இன்னும் ஓரிரு தினங்களில்

      மிக்க நன்றி அம்மு வாழ்க நலம் !

      Delete
  29. இங்கு நிறைய இடத்தில என் பெயர் அடிபடுதே....:) விடமாட்டேன் :)...


    https://goo.gl/images/5jHb1B

    ReplyDelete
  30. Nice to see you back priya..pongal pictures are very nice..we call this insect as "ரயில் பூச்சி"!! :) No idea why...i am so scared of these..i mean பயம் இல்ல, அருவறுப்பு!!! ஹிஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. thanks mahi. யா எனக்கும் அருவருப்பு . இது கொஞ்சம் பரவாயில்லை. மற்றவைகள் என்றால் தூரமா நிற்பேன். ஹா..ஹா...

      Delete
  31. அதிரா/ப்ரியா..டேட்ஸ் கேக் ரெசிப்பி ஒரு முறை சொன்னா நானும் செய்து பார்ப்பேன். தேங்க்யூ!! படத்தில பாதிதான் தெரியுது...;)

    ReplyDelete
    Replies
    1. ஓ..கண்டிப்பா தருகிறேன். நான் கொலாஜ் ல் போட்டதால் தெரியல்.
      ரெம்ப நன்றி மகி வருகைக்கும்,கருத்துக்கும்.

      Delete
  32. சிறப்பான பகிர்வு.

    தமிழகத்தில் இந்தப் பூச்சிக்கு இரயில் பூச்சி, மறவட்டை என்ற பெயர்கள் உண்டு. நெய்வேலியில் கருப்பு வண்ணத்தில் உள்ளவை தான் அதிகம். சிவப்பு அவ்வளவாக தென்படாது...

    கேக் நானும் எடுத்துச் சுவைத்தேன்! நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட் சார் வருகைக்கு ரெம்ப நன்றி. ஒவ்வொரு ஊரிலும் வித்தியாசமன பெயர்கள்.
      மீண்டும் நன்றி உங்க கருத்துக்கும்,வருகைக்கும்..

      Delete
  33. பொங்கல் நன்றாக சந்தோஷமாகக் கொண்டாடியிருக்கிறீஈங்கள்.

    அட்டையின் பெயர்க் காரணம் சுவாரசியமாக இருக்கிறதே! எனக்கும் கேக் ரெசிபி வேணும். தேடச் சோம்பலா இருக்கு.

    ReplyDelete

 
Copyright பிரியசகி