RSS

27/03/2019

மாலை பொழுதில்....

கடந்த வாரயிறுதியில் எங்கள் நகரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றோரமாக நடந்தபொழுது எடுத்த படங்கள்.  இளவேனிற்காலம் (வசந்தகாலம்) ஆரம்பித்த பின் வந்த வெயில் என்பதால் மக்கள் அதிகமா வந்திருந்தார்கள். இந்த ஆறு எங்க மாநிலத்தில் பிரபல்யமானது. இந்நாட்டில் மிக பிரபல்யமான பீர்களில் ஒன்று (Beer) எங்க நகரத்துக்கு அருகில் தயாரிக்கப்படுகிறது. அந்த பீர்க்கு இந்த ஆற்றையே விளம்பரத்துக்காக காட்டுவார்கள். பார்முலா 1(Formula 1)  பார்த்தால் தெரியும். ஆறின் பெயர் Biggesee.(பிbகேஸே) இந்த ஆற்றை சுற்றி வர 5 கி.மீ ஆகும்.  Swimming pool, Restaurant,  சிறுவர்களுக்கான Golfclub என சுற்றி வர இருக்கின்றன. இன்னும் வேறு கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

 இவர்கள் அந்த இடத்து செல்லபிள்ளைகள் & ரவுடிகள். நீங்க அவர்களை கவனித்துவிட்டுதான் செல்லவேண்டும். கவனித்து என்றால் ,அவர்களிடம் பேசியோ,தடவிகொடுத்தோ, அல்லது சாப்பிட ஏதாவது கொடுத்தோ தான் செல்லவேண்டும். உணவு எனில்  கட்டுப்பாடு இருக்கு.  அதையும் மீறி கொடுத்து பழக்கிவிட்டார்கள். அதனால் இவர்கள் ராஜ்ஜியம்தான் அந்த எரியாவில். கவனிக்காமல் போனால் தலையை நீட்டிக்கொண்டு துரத்தி வந்து கொத்துவார்கள். இந்த படம் கூட அவர்களுடன் பேசிக்கொண்டுதான் எடுத்தேன். நடக்க ஆரம்பிக்கும் இடத்தில் இருப்பார்கள். தூங்கிக்கொண்டு இருந்தால் பிரச்சனையில்லை. பேசாமல் நகர்ந்துவிடலாம்.

               இப்படிதான் தலையை நீட்டிக்கொண்டு துரத்துவார்கள்.
இவர்களும் கரையில் இருப்பார்கள். மற்றைய சின்ன வாத்துகளும் இருப்பார்கள். அன்று எல்லாரும் பிசி. ரவுடிகள் மட்டுமே கரையில் உலாத்திக்கொண்டு இருந்தார்கள்.
                                     
                                      படகு சவாரி

இந்த இருக்கையில் இரு வயதானவர்கள் வெயிலில் இயற்கையை ரசிக்கிறார்கள்.
இது இடையில் இரும்புபாலம் ஒன்று ஆற்றின் குறுக்கே போட்டிருக்கிறார்கள். இடது பக்கம் ரயில் தண்டவாளமும் இருக்கு.

ரயில் தண்டவாளம் 

 அந்நேரம் ரயிலும் வந்தது. இதுதான் எங்க நகரத்து குட்டி ரயில். 2 பெட்டிகளே இருக்கு.
 இது ஒரு உயரமான ஏற்றமிகு பாதை. இப்போ அடுத்த பக்கம் வந்தாயிற்று.
         நடந்து வந்த பக்கத்தில் புதிதாக கட்டப்படும் கட்டிடங்கள்.


இது ஒரு restaurant. அன்று இருக்க இடமில்லாமல் திரும்பி சென்றவர்கள் பலர்.


                   Swimmingpool. இது வெளிப்பகுதியில் இருப்பது 
           
                              Swimmingpool Entrance


                  நடை ஆரம்பித்த இடம்.  களைப்பில் உறக்கம்....


இது சிறிய காணொளி....
இதில் மேலே உயரமாக தெரிவது நெடுஞ்சாலை..

அப்படி சுற்றி இப்படி வந்தாச்சு.....


இந்த ஆறு குளிர்காலத்தில் கடும் குளிர் எனில் முற்றிலுமாக உறைந்துவிடும். 
                                 (tks google)


49 comments:

 1. வாவ் அட்டகாசம் ....

  ReplyDelete
  Replies
  1. வாங்க அனு. மிக்க நன்றி.

   Delete
 2. காணொளி வரலயே அம்மு ...

  ReplyDelete
  Replies
  1. கைபேசியில் எடுத்தது. வரவே இல்லையா.. எப்படி சரி செய்வது எனத்தெரியல. பார்க்கிறேன்பா.

   Delete
  2. இப்போ பார்த்தாச்சு ..சூப்பர்

   Delete
  3. ஓ..பார்த்தாச்சா. தாங்க்ஸ்

   Delete
 3. ரவுடி பேபீஸ் ...ஆஹா...ரொம்ப அழகு


  இடமெல்லாம் ரொம்ப சுத்தமா அழகா இருக்கு ...ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. அதுங்க உண்மையிலேயே ரவுடீஸ்தான்.சத்தம் போட்டாங்க என்றா காதை பொத்தவேண்டியதுதான். அந்தளவுக்கு இருக்கும். மிக்க நன்றி அனு.

   Delete
 4. இரண்டு காணொளியும் வருதே! சூப்பர்.
  படங்கள் எல்லாம் மிக அழகு.

  ரவுடிகள் மட்டுமே கரையில் உலாத்திக்கொண்டு இருந்தார்கள்.//

  கரையில் உலாத்திக் கொண்டு இருந்தவர்கள் அழகு.
  இப்படி அடிக்கடி இயற்கை காட்சிகளை பகிர வேண்டுகிறேன்.
  பார்த்து மகிழ்கிறோம் அம்மு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அக்கா. என் தவறால்தான் முதலில் காணொளி தெரியவில்லை. இப்போ சரிசெய்துவிட்டேன். ரவுடிகள் அழகாகனவர்கள்தான். ஆனா வெருட்டுவதிலும் கெட்டிக்காரர்கள்.
   இங்குதான் இயற்கைக்கு குறைவேது அக்கா. சிலவேளை லயப்பில் படம் கூட எடுக்க மறந்துவிடுவேன். இனிமேல்தான் மரங்களில் இலைகள் வந்து பச்சை பசேல் என இருக்கும்.எடுத்து பதிவிடுகிறேன். மிக்க நன்றி அக்கா.

   Delete
 5. ஆஅவ் எப்போ போஸ்ட் வந்துது :) லெட்டர் பாக்ஸை செக் பண்ணாம தூங்கிட்டேன்:)

  ReplyDelete
  Replies
  1. வாங்க வாங்க அஞ்சு. நான் லெட்டர் போட்டாச்சு.2வருக்கும்.. பரவாயில்லை தூங்குங்க. நானும் இதேதான் செய்றேன் காலைல கொஞ்சநேரம்...

   Delete
 6. அங்கேயும் வெயிலார் ஜெகஜோதியா எரியறாரே :) இங்கே நேத்து ஆகஸ்ட் அடிக்கும் வெயில் வந்தது .ஆனா இன்னிக்கு குளிரும் இருட்டும் .இப்போ கொஞ்சமா வெளிச்சம் வருது ..இன்னும் முழு வெதர் சேஞ்சுக்கு நம்மூர் தயாராகலை .

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்...... அன்று ஒருநாள் நல்லாயிருந்ததிச்சு.. சந்தோஷமா இருந்திச்சு. ஞாயிற்றுகிழமையிலிருந்து மழை..மழை இருட்டு,குளிர். இன்றுதான் பரவாயில்லை.. எங்க இடத்தில் இன்னும் மரங்கள் இலைகள் வரத்தொடங்கவில்லை.

   Delete
 7. உறைந்த ஆறு சூப்பரா இருக்கு பார்க்க .இங்கே ஒருமுறை எல்லாம் ஐஸா இருக்கு ஆற்றில் ஒரு வாத்து ஓத்தை காலில் ஐஸ் நடுவே நானும் எவ்ளோ முயன்றேன் அசையலை அப்புறம் கையில் இருந் பிஸ்கட் பாக்கெட் போட்டு வரவச்சேன் அடுத்த பக்கம் :)
  குச்சியால் குத்தி செக் பண்ணிட்டுதான் அதில் நடக்கவோ ஸ்கெட்டிங் போகவோ அனுமதிப்பாங்க இல்லையா

  ReplyDelete
  Replies
  1. இல்லை அஞ்சு விடமாட்டாங்க. குளிர் மைனஸ் 15 க்கு மேல் தொடர்ச்சியான குளிர் என்றால் விட்டிருக்காங்க. ஒருமுறை விபத்து நடந்தபடியாலும்,இது கொஞ்சம் ஆழம் உள்ளதாலும் இப்போ அந்தளவு உறைந்தபனி இல்லாததாலும் விடுவதில்லை.
   இந்நேரங்களில் வாத்துக்கள்தான் பாவமா இருக்கும். சிலது இடம் மாறிவினம். ஆனா நான் பார்த்திருக்கேன் அஞ்சு. குளிர் நேரம் அவைகள் பாலத்துக்கடியில் இருப்பதை.... ஆற்றுபக்கமா ஒரு லிடில் இருக்கு.அங்கு பொருட்கள் வாங்கப்போகும் போது பார்த்திருக்கேன்.

   Delete
 8. காணொளி சூப்பர் இதேபோல் ஒரு ஒத்தையடி பாதை இங்கே இருக்கு ஆனா இருட்டு .
  ஆமா ரெஸ்டாரண்டில் ஆட்கள் உக்கார இடம் பத்தலையா ??
  கொஞ்சம் வெயிலை பார்த்ததும் மக்கள் அலைமோதுவது ரெஸ்டாரண்ட் பக்கம்தான்

  ReplyDelete
  Replies
  1. அது சொல்லிவேலையில்லை. உங்களுக்கு தெரியும்தானே. சின்னதா வெளிச்சம் வந்தாலே போதும். இப்படி நல்ல வெயில் எனில் கேட்கவேண்டுமா. அதைவிட கொடுமை வியாழனும், சனி,ஞாயிறு விட்டு திங்களும் லீவு எனில் சனங்களை பார்க்கவேண்டுமே..ஏதோ 1 மாதத்திற்கு சுப்பர் மார்க்கெட் பூட்டு மாதிரி அலைமோதுவினம். இதனைக்கும் சனிக்கிழமை திறப்பார்கள்.
   இந்த ரெஸ்டாரண்ட் பக்கம்தான் படகுசவாரியும் இருக்கு. அதற்கு கூட போக இடமில்லை.பார்த்துக்கொள்ளுங்களேன்.

   Delete
 9. ஆற்றங்கரை மலையோர இருக்கைகள் கொஞ்சம் உயரமா அமைச்சிருப்பாங்க .கால்கள் தொங்கி ஆடும் வகையில் .அப்படி அசைவது எக்சசைஸாம் .நீங்க உயரத்தில் இருந்து எடுத்தீங்களா .என் கணவர் யாருமிருந்தா படமெடுக்க விடவே மாட்டார் :)

  ReplyDelete
  Replies
  1. எக்ஸர்சைஸ் செய்ய இடையில் வைத்திருக்காங்க. நீங்க சொன்னமாத்ரி ஏதும் இல்லை அஞ்சு. இப்ப கண்டபடி படம் கூட எடுக்க இயலாது. அந்த பென்ச் கூட அருகில் எடுக்க சென்றேன். கணவர் சொன்னார், அங்கு வேண்டாம் அவர்களின் பிரைவசி. சிலவேளை அவர்கள் எடுக்கவேண்டாம் என்பார்கள் என.. நான் வீடியோ கூட பயந்துகொண்டே எடுத்தேன். சன நடமாட்டம் அதிகம். சைக்கிள் செல்பவர்கள்,நடப்பவர்கள்,ஓடுபவர்கள் என...

   Delete
 10. படகு சவாரி படத்தில் தெரிவது பெரிய பில்டிங் வீடுகளோ ? அபார்ட்மெண்ட்ஸ் ?
  அந்த ரவுடிகள் ரெண்டும் அழகு .இங்கே ரவுடி கூட்டமே திரியறாங்க :) இப்போ அடுத்த மாதம் எல்லாம் குடும்பமா உலாவுவாங்க
  அந்த செல்லப்பிள்ளைகள் greylag geese கொஞ்சம் ஓவர் செல்ல வெரைட்டி மனிதர்களோடு பழகும் ஸ்வான்ச விட இவை டொமெஸ்டிக் வெரைட்டி

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அஞ்சு. அந்த பக்கம் road. அதில் இருப்பது வீடுகள். அருகில் மின்சாரவாரியமும் இருக்கு.
   உண்மைதான் அஞ்சு. கதை கேட்டால் அப்படியே பார்த்துக்கொண்டு இருப்பார்கள். உணவை போட்டு கெடுத்துவிட்டார்கள். ஆற்றில் இறங்கி பார்த்ததே இல்லை.. சத்தம் போட்டால் மட்டும் தாங்கேலாது...

   Delete
 11. ஆஆஆஆஆஆஆ அம்முலு போஸ்ட் போட்டிருக்கிறா என ஓடி வந்தால் அழகிய ராட்சசி போல:) அழகிய ரவுடிகளைப்போட்டுப் பயமுறுத்திட்டீங்க ஒரு சுவீட் 16 ஐ:).. என்னைச் சொன்னேன்.

  முதலில் கண்ணுக்கு தெரிவது அந்த ரவுடீஸ் அன்னம்ஸ்தான்.. அவை அன்னமோ வாத்தோ? ரொம்ப அழகாக ஒரு Poss ஆக இருக்கினம் பார்க்க, ஆனா நீங்க சொல்லும் அவர்களின் செய்கைகள் பார்த்தால் நல்ல இடத்துப் பிள்ளைகள் மாதிரி இல்லையே ஹா ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. ஓ நல்லவேளை இப்போதான் கவனிக்கிறேன் கை மாறி தட்டுப்பட்டு விட்டது மிசுரெக்கூஊஊஊஊஉ அது Posh ஆக்கும்:).

   Delete
  2. வாங்க அதிரா. அழகாக போஸ் கொடுப்பினம்.அதே நேரம் சரியான குழப்படி. நல்ல பிளைகளையும் கெடுத்துப்போடுவினம் சனங்கள். சின்னபிள்ளைகள் எனில் விருப்பம் இவர்களுக்கு. வேறு இடத்திலிருந்து வந்து இங்கு காம்பிங் போடுவாங்க. அவங்கதான் கூடுதலா உணவு போடுவாங்க. கவுன்சில் இவங்களை அப்பப்போ செக் செய்வார்கள்.

   Delete
 12. வோக் போக மிக அழகிய இடம், ஒரு சுற்றுக்கு ஐந்து கிலோமீற்ரரோ.. அப்போ எப்படியும் ஒரு மணிநேரம் எடுக்கும்.. ஒரு 7000 -8000 ஸ்ரெப்ஸ் கிடைக்கும்:).. சரியாகச் சொல்கிறேனோ...

  பார்க்க மிக அழகாக இருக்குது அம்முலு.. இங்கு இன்னமும் நடக்கும் வெதர் ஆரம்பமாகவில்லை. குளிர் இருக்கு ஆனா குறைஞ்சிருக்கு. இம்முறை கொஞ்சம் பாட் விண்டர் என்றே சொல்லோணும் இங்கு.

  ReplyDelete
  Replies
  1. ஓம் அதிரா.சுற்றி வர 5கிமி . ஆனா நோர்மலான நடை எனில் 45நிமிஷம் போதும்.ஓடினால் இது குறையும்.அந்தளவு அடிகள் வரும்.
   இங்கு வெதர் மாறிமாறி வருவதால், சரியான முறையில் இல்லை. இம்முறை பாட் விண்டர்தான்.

   Delete
 13. உங்கள் ரெயின் பார்க்க, பரிசில் ஓடும் ட்ராம் மாதிரி அழகாக இருக்கு.

  வீடியோக்களும் அழகாக இருக்கு.. அம்முலுவின் வெயிட்டைக் கண்டு பிடிச்சிட்டேஎன்ன்ன்ன் நடக்கும் ஓசையை வச்சு ஹா ஹா ஹா:).

  கடசியில் உறைஞ்சிருக்கும் ஆறு பார்க்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நடுங்குது உடம்பு.. உப்பூடி எனில் விண்டர் காலத்தில அப்பக்கம் தலை வச்ச்சும் படுக்க மாட்டேன் நான். இங்கு அப்படி எல்லாம் உறையாது...

  அனைத்தும் மிக அழகிய படங்கள்.

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்.. உண்மையை சொன்னால் நான் நடக்க போவதில்லை. அன்று நல்லாயிருந்தது வெதர். வேறு இடத்துக்கு போயிட்டு வந்தபடியால் போனோம். மற்றபடி கணவர்தான் வாரம் 3தரம் walking, 1 தரம்jogging செய்வார். உடம்பை பிட் ஆ வைத்திருக்கவேணுமென சொல்லி என்னையும் வரச்சொல்வார். குளிர் எனில் நானும் வெளிக்கிடமாட்டேன். ப்ளையரை எரித்துவிட்டு இருப்பேன்.
   மிக்க நன்றி அதிரா வருகை தந்து கருத்துரைத்தமைக்கு.

   Delete
 14. ஆஹா அழகான படங்கள். ரம்மியமான சூழல். அமைதியான இடம் எனத் தெரிகிறது.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அழகான இடம்தான். இது நடப்பதற்காக இருப்பதால் அமைதியாக இருக்கு.
   மிக்க நன்றி வருகைக்கும்,கருத்துக்கும்..

   Delete
 15. Replies
  1. ரெம்ப நன்றி டிடி அண்ணா வருகைக்கும்,கருத்துக்கும்

   Delete
 16. எங்களுக்கு இங்கே இலையுதிர் காலம்.
  அது எப்படி சகோ, உங்களுக்கு அந்த ரௌடிஸ் மிக அழகாக போஸ் கொடுக்கிறார்கள்...
  படங்கள் அனைத்தும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ. அவங்களுக்கு பயமெல்லாம் இல்லை. நல்லாவே போஸ் கொடுப்பாங்க. ஆட்களுடன் பழகிவிட்டார்கள்.
   ஆமாம் இரு நாட்டுக்கிடையில் காலநிலை ரெம்பவே வேறுபாடு.இனி எங்களுக்கு கோடைகாலம். ரெம்ப நன்றி.

   Delete
 17. ஏரிக்கரையில் ஒரு குளு குளு உலாவந்தது போல் ரெஃப்ரெஷாக இருக்கிறது. தாங்க்ஸ்டா ப்ரியசகி :)

  ReplyDelete
  Replies
  1. ரெம்ப நன்றி தேன் அக்கா உங்க வருகைக்கும்,கருத்துக்கும். மிக்க மகிழ்ச்சி.

   Delete
 18. ரசனையான இளவேனிற்கால அழகை படங்களும் எழுத்துகளும் போட்டி போட்டு மேலும் ரசனை கூட்டுகின்றன. பெரிய இடைவெளிக்குப் பிறகு வருகிறேன். மனத்தில் இதம் கூட்டுகிறது உங்கள் பதிவு. பாராட்டுகள் ப்ரியா.

  ReplyDelete
  Replies
  1. உங்க வரவுக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி கீதா. மிக்க மகிழ்ச்சி.

   Delete
 19. வணக்கம் பிரியசகி நலம் தானே! வாழ்க வளமுடன்

  ReplyDelete
  Replies
  1. நலமாக இருக்கிறோம் அக்கா. ரெம்ப நன்றிகள்.

   Delete
 20. இலங்கையில் இன்று குண்டு வெடிப்பு என்று சொல்கிறார்கள் . செய்திகள் கேட்க வருத்தமாய் இருக்கிறது.
  உங்கள் உறவுகள், நட்புகள் நலமாக இருக்கிறார்களா?
  இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான். மிக்க துயரமான சம்பவங்கள். எல்லாரும் நலமாக இருக்கிரார்கள். நன்றி அக்கா.

   Delete
 21. படங்களைப் பார்க்க அங்கு வரவேண்டும் போல் ஆசையாக இருக்கிறது. ;-)

  ReplyDelete
  Replies
  1. வரவேண்டிய்துதானே இமா. வாங்க நல்ல அழகான அமைதியான இடம் எங்கள் இடம்.

   Delete
 22. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன் பல்லாண்டு..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு..

   Delete
 23. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரியசகி அம்மு! வாழ்க வளமுடன்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அக்கா

   Delete

 
Copyright பிரியசகி