RSS

07/10/2015

பதிவர் திருவிழா.. இது எங்கள் விழா...

ஊரில் கோவில் திருவிழா வருகிறதென்றால், கோவில் சுற்று வட்டாரத்திலும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும், மிக உற்சாகமாக அனைவரும் தத்தம் வீடுவாசல்களை துப்பரவாக்குவதில் ஆரம்பித்து வாழை, மாவிலை தோரணங்கள் கட்டி அலங்கரித்து ஊரே களைகட்டும். 
அந்த மாதிரி உணர்வுதான் எனக்கு, இவ்வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா பற்றிய பதிவுகள் ஆரம்பித்தலிருந்து ஊற்றெடுக்கிறது.

புதுக்கோட்டையில் நான்காவது வலைபதிவர் திருவிழா வருகின்ற 11-10- 15 அன்று வலைப்பதிவர் வரலாற்றிலே முற்றிலும் வேறுபட்டு புத்துணர்வோடு நடைபெற உள்ளது.
இதுவரை அனேகமான  வலைப்பக்கங்களில் உற்சாகம், மகிழ்ச்சி பரவசம் என இனம்புரியாத உணர்வுகளை காணக்கூடியதாக இருக்கு.  இது "எங்கள் விழா" வாக நடைபெறுவது மட்டற்ற மகிழ்ச்சி.


என்னைப்போன்று வெளிநாட்டில் வாழும் பதிவர்கள் கலந்துகொள்ளமுடியாது போகின்றதே என்ற வருத்தம் இருந்தாலும், மனம் முழுதும் அங்குதான் இருக்கின்றது.

விழா நடைபெற 3நாட்கள் இருக்கின்ற இத்ததருணத்தில் அவ்விழாவினை சிறப்பாக நடாத்த‌வேண்டும் என இரவுபகல் பாராது உழைக்கும் அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
விழா சிறப்பாக நடைபெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
இம்முறை பதிவர்விழாவில் தமிழ்வலைப்பதிவர் கையேடு2015 ஒன்றும் வெளியிட்டு விழாவுக்கு வருபவர்களுக்கு இலவசமாக (விழாவுக்கு வருபவர்களுக்கு மட்டுமே இலவசம்.) கொடுக்க இருக்கிறார்கள்.

இவ்வலைப்பதிவர் விழாவில் பதிவர்களை மேலும் உற்சாகமூட்ட போட்டிகள் இருக்கின்றன. பரிசுகளும் உண்டு. போட்டிகள் முடிவடைந்துவிட்டபோதிலும், அப்போட்டிக்கு வந்த‌ படைப்புகளை வாசித்து, உங்களுக்கு பிடித்தமானதை தர வரிசையில் தேர்வு செய்து அனுப்பி பரிசில்களை வெல்லலாம்.

9.10.2015 நாளே அனுப்பவேண்டிய இறுதிநாளாகும்.

வாசியுங்கள்.!! அனுப்புங்கள்..!! பரிசினைத் தட்டிச் செல்லுங்கள்..!!

24 comments:

 1. நன்றி...

  நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

  இணைப்பு : →பதிவர்களின் பார்வையில் "பதிவர் திருவிழா-2015"

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  ReplyDelete
  Replies
  1. ரெம்ப நன்றிகள் அண்ணா.!!

   Delete
 2. அடடே நல்லவேளை ஞாபகப்படுத்துனீங்க... எனக்கு ஜலதோஷம் புடிச்சுருக்கு அதனாலே சுடுதண்ணியிலே ஆவி புடிச்சுட்டு கிளம்புறேன்...

  ReplyDelete
  Replies
  1. ஆ.ஆ ஆவி யை கெதியா பிடிச்சிட்டு ஓடுங்க. சுடுநீர் ஆவியை சொன்னேன். ..!!! ஹா.ஹா உங்க நிலமை இப்படியாகிப் போச்சே.
   நன்றி அண்ணா ஜி.

   Delete
 3. பதிவில் அசத்தீட்டீங்க பதிவர் விழாவை!
  நல்ல தொகுப்பு பிரியா!

  பார்க்கவே மிக மகிழ்ச்சியாக இருக்கு.
  நாமும் இப்படியான விழாவுக்குப் போவோம்
  ஒருமுறை அங்கு!

  வாழ்த்துக்கள் பிரியா!

  ReplyDelete
  Replies
  1. வாங்க வாங்க பாவலரே!! கண்டிப்பா ஒருமுறை போவோம். ரெம்ப நன்றிகள் .

   Delete
 4. புதுகை செல்ல அம்மா வீட்டிலிருந்து 1 மணி நேரம் கூட ஆகாது.மதுரையில் நடந்த போதே சென்றால் எல்லோரையும் பார்க்கலாம் என நினைத்தேன். ஆனால் அப்பொழுது கமெண்ட் யாருக்கும் போட மாட்டேன் அதனால் என்னை தெரியாது யாருக்கும். இப்பொழுது தெரியும் ஆனால் விடுமுறை முடிந்து வந்தாச்சு அதனால் ஆசை இருந்தாலும் போக முடியலை.

  ReplyDelete
  Replies
  1. அடகடவுளே! பாருங்க எங்க மனசே அங்கேதான். ஏன் போகமுடிந்தால் செல்லுங்கள் அபிநயா. இப்போ இருக்கும் இடத்திலிருந்து தூரமா.
   ரெம்ப நன்றிகள் அபிநயா.

   Delete
  2. ரொம்ப தூரம் என சொல்ல முடியாது அக்கா 4 மணி நேரம் ஆகும். ஆனாலும் மறுநாள் மகளுக்கு பள்ளி இருக்கும் அன்றே அரக்க பரக்க திரும்ப வேணும். அம்மா வீட்டிலானால் ஈசியாக போய் வந்திடலாம்

   Delete
  3. ஓ..அப்படியா !! ம்.சரி பரவாயில்லை. அடுத்தமுறை நடைபெறும் பதிவர்களின் விழாவில் கலந்துகொள்ளுங்கள் மறக்காமல்..!!
   மிக்க நன்றி அபிநயா.

   Delete
 5. ஆமாம் பிரியசகி..மனமெல்லாம் புதுகையில்தான்!

  பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துகளும்

  ReplyDelete
  Replies
  1. நாட்கள் நகர, மனமெனும் பறவை சிறகடிக்கிறது..!!
   வருகைக்கும்,வாழ்த்துக்கும் ரெம்ப நன்றி கிரேஸ்

   Delete
 6. வணக்கம்
  ஐயா

  நினைவு படுத்தியமைக்கு நன்றி. விழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ..!!

   Delete
 7. மிக்க நன்றி சகோதரி..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றிகள் தோழி..!

   Delete
 8. எங்கள் விழா!!! இந்த சொல்லுக்கு சிலிர்த்துப் போகிறது தோழி!! புதுகை பதிவர் விழாக்குழு சார்பாக என் நன்றிகள் பல! அடுத்த பதிவர் சந்திப்பில் உங்களுக்கு விடுமுறை கிடைத்தால் பார்க்கலாம் என ஆசை தோழி!!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் தோழி.! நினைத்தாலே மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. எனக்கும் உங்களை எல்லாம் பார்க்க ரெம்ப ஆசைதான்.சந்தரப்பம் கிடைத்தால் கண்டிப்பா பார்க்கலாம் தோழி.!
   வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றிகள்.

   Delete
 9. ம்... ம்...ம் களைகட்ட ஆரம்பிச்சாச்சு ! கலந்துகொள்ள ஆசைதான், முடியலையே :( இப்படி பதிவுகள் வரும்போது ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளத்தான் செய்கிறது.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா தொற்றிக்கொள்ளும் சித்ரா. எல்லா இடங்களிலும் (வலைப்பக்கத்தில்) இதேதான் பேச்சு.
   போகமுடியாவிட்டாலும் மனதார வாழ்த்துவோம் நன்றாக நடைபெற. மிக்க நன்றி சித்ரா வருகைக்கும்,கருத்துக்கும்.

   Delete

 10. பதிவர் விழா பற்றிய பதிவு மிக அருமை பிரியசகி. விழா சிறக்க வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. ரெம்ப நன்றி அக்கா வருகைக்கும்,வாழ்த்துக்கும்.

   Delete
 11. ரொம்பவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள் பிரியசகி!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மனோக்கா கன நாளைக்கு பின்பு. ரெம்ப நன்றிகள் அக்கா

   Delete

 
Copyright பிரியசகி