நன்றிகள்
"இளையநிலா " இளமதி அவருடைய பிளாக்கில் அறிமுகப்
படுத்தியிருக்கிறார்கள்.
இந்த அதிர்வலைகள் நீங்க முன்னமே "சமைத்து அசத்தலாம்" ஆசியா அவர்கள் என்னை எதிர்பாராத வகையில் "வலைச்சரத்தில்"அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் .
இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் .
இத்தகவலை அறியத்தந்த திரு .தனபாலன் சார் அவர்கட்கும்,
ஆசியா ,கோபு அண்ணா, இளமதி ஆகியோருக்கும் என் இதயபூர்வமான நன்றிகள் .நன்றிகள்
. **************************************************
சமீபத்தில் வந்தபாடலில் எனக்கு பிடித்த பாடல் :
"இளையநிலா " இளமதி அவருடைய பிளாக்கில் அறிமுகப்
படுத்தியிருக்கிறார்கள்.
இந்த அதிர்வலைகள் நீங்க முன்னமே "சமைத்து அசத்தலாம்" ஆசியா அவர்கள் என்னை எதிர்பாராத வகையில் "வலைச்சரத்தில்"அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் .
இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் .
இத்தகவலை அறியத்தந்த திரு .தனபாலன் சார் அவர்கட்கும்,
ஆசியா ,கோபு அண்ணா, இளமதி ஆகியோருக்கும் என் இதயபூர்வமான நன்றிகள் .நன்றிகள்
. **************************************************
சமீபத்தில் வந்தபாடலில் எனக்கு பிடித்த பாடல் :
இன்று திக்கெட்டும் புகழ்பெற்று வளரும் கலைஞரான கவிதாயினி இளமதி அவர்களால் அம்முலு அறிமுகம் செய்யப்பட்டது அருமையோ அருமை தான்.
ReplyDeleteஅதற்கு முதலில் என் பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
>>>>>
வணக்கம் ஐயா!...
Deleteபதிவோடு ஒரு அறிமுகம் என்னும் தலைப்பில் என் வலைப்பூவில் இம்முறை தூங்கிகிடக்கும் தோழியை தட்டி எழுப்பிவிட எண்ணினேன். அவ்வளவுதான் என் பங்கு.
தங்கள் பாராட்டிற்கு என் இனிய நன்றிகள் ஐயா!.
அன்புச்சகோதரி அம்முலு அவர்களை, தன் வலைத்தளத்தில், ’இளயநிலா’ என்ற பெயருடன் திகழும் முழுப் பெளர்ணமி நிலாவான கவிதாயினி இளமதி அவர்கள், அறிமுகம் செய்து பெருமைப்படுத்தியதற்கு, அவர்களுக்கு என் அன்பான இனிய நன்றிகள்.
ReplyDelete>>>>>
மிக்க நன்றி ஐயா!
Deleteஉங்க வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள் அண்ணா.
Deleteபதிலளித்தமைக்கு இளமதி உங்களுக்கும் மிக்க நன்றிகள்.
பிரியமான வாழ்த்துக்கள் சகோதரி...
ReplyDeleteவாங்க தனபாலன் சார்.வாழ்த்துக்களுக்கு ரெம்ப நன்றிகள்.
Delete//இந்த அதிர்வலைகள் நீங்க முன்னமே "சமைத்து அசத்தலாம்" ஆசியா அவர்கள் என்னை எதிர்பாராத வகையில் ”வலைச்சரத்தில்"அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் .//
ReplyDeleteநீங்கள் வேண்டுமானால் இதை எதிர்பார்க்காமல் இருந்திருக்கலாம். நாங்கள் எல்லோருமே இதை எதிர்பார்த்தோம் தான்.
”நல்லார் ஒருவர் உள்ரே அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை” என்பது போல உங்களைத் தேர்ந்தெடுத்துப்போட்டுள்ளார்கள். ;)))))
அறிமுகம் செய்து வைத்து பெருமைப்படுத்திய வலைச்சர ஆசிரியர் திருமதி ஆசியா உமர் அவர்களுக்கு என் அன்பான இனிய நன்றிகள்.
உங்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
>>>>>
மிகவும் சந்தோஷமாக இருக்கு கோபு அண்ணா. நான் ஏதோ எனக்கு தெரிந்ததைப்பதிவிடுகிறேன். இளமதிக்கும்,ஆசியாவிற்கும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள் அண்ணா.
Delete//இத்தகவலை அறியத்தந்த திரு .தனபாலன் சார் அவர்கட்கும், ஆசியா ,கோபு அண்ணா, இளமதி ஆகியோருக்கும் என் இதயபூர்வமான நன்றிகள் .நன்றிகள் //
ReplyDeleteஏதோ என் கண்களில் பட்டது, நம்ம அம்முலுவாச்சே என மிகுந்த மகிழ்ச்சியில் தகவல் கொடுத்திருந்தேன். அவ்வளவு தான்.
ஆனால் எல்லோருக்கும், முதல் தகவல் கொடுக்கும் உரிமை [பட்டா] திண்டுக்கல்லுக்கு மட்டுமே உண்டு. ;)))))
>>>>>
பாடல் அருமை. பதிவும் அருமை. நன்றிக்கு நன்றிகள்.
ReplyDeleteபாராட்டுக்கள் + வாழ்த்துகள் அம்முலூஊஊஊஊஊஊ.! ;)
.
வருகைக்கும்,கருத்துக்களுக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள் அண்ணா.
Deleteஅடடா... அம்மு... வந்திட்டீங்களோ...:).
ReplyDeleteச்சா.. சொல்லலைக் காப்பாத்தீட்டிங்கள். பிறகென்ன... மிக்க சந்தோஷம். அருமையாக இருக்கு எல்லாம். எல்லாமே... சூப்பர்! சூப்பர்!
வாழ்த்துக்கள்! அம்மு!
இப்பதான் நானும் வெளியேபோய் வந்தேன். நிறைய வேலை இருக்கு. முடித்திட்டு மீண்டும் வருவேன்.
நன்றிக்கு நன்றிகள் ஆயிரம் தோழி!...
மீண்டு(ம்) இங்கு வந்தேன்...:)
Deleteநன்றி கூறியமைக்கு முதற்கண் என் நன்றிகளும் அம்மு!.
என் வலைப்பூ அறிமுகத்திற்கே அவ்வளவு யோசித்தீங்கள் இப்ப வலச்சர அறிமுகத்திலும்... அதுதான் உங்களை இப்பவாவது இங்கு புதுப்பதிவுடன் வரவைத்துள்ளது.
எது எப்படியோ ஒருவாறாக உங்கலை வெளியே கொண்டுவந்தாச்சு...
இனி உங்கள் வெற்றி உங்களதே...:)
என் கணனியில் கோளாறு,வேறு சில காரணங்களால்தான் பதிவிடத் தாமதமாயிற்று. வராமல் இருக்கவில்லைத்தானே.
Deleteநன்றி மறப்பது நன்றன்று. அதுதான் உடனேயே கார்ட் செய்து, பதிவிடவேண்டும்மென நினைத்து செயல்படுத்தினேன்.
உங்க ஊக்கத்திற்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள் இளமதி.
நன்றி கூறுவதற்காகச் செய்த க்விலிங் மிக அழகு.
ReplyDeleteநல்ல கலர் தெரிவுகள். நேர்த்தி அபாரம்.
உள்ளுக்குள் Thanks எழுத்துக்களும் அழகாக இருக்கின்றன.
எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது க்விலிங் வேலைப்பாடும் கார்டும். அழகோ அழகு.
சிறப்பு வாழ்த்துக்கள் அம்முலு.
பாடல் நான் இப்பொழுதான் கேட்கின்றேன். நன்றாகத்தானிருக்கின்றது. நல்ல ரசனை.
எல்லாமே நன்றாக இருக்கின்றன அம்முலு!
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
இதோடு நின்றுவிடாமல் பதிவுகளை தொடருங்கள்.
முயற்சி திருவினையாக்கும்...
திடங்கொண்டு முன்னேறு தடைகள் பொருட்டல்ல
புடம்போட்டால் தங்கம் புதுநகையாம் இடமில்லை
என்பது வெறும்பேச்சு என்நாளும் முயற்சிதான்
இன்நாள் போல்வாராது இன்னொருநாளே!...
//திடங்கொண்டு முன்னேறு தடைகள் பொருட்டல்ல
Deleteபுடம்போட்டால் தங்கம் புதுநகையாம் இடமில்லை
என்பது வெறும்பேச்சு என்நாளும் முயற்சிதான்
இன்நாள் போல்வாராது இன்னொருநாளே!...//
மிகவும் அழகான தன்னம்பிக்கையூட்டும் வரிகள்! ;)))))
கவிதாயினி இப்போதெல்லாம் எல்லோருடைய பதிவுகளிலும் கவிதை மழையாகப் பொழிந்து வருவது மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.
[இருப்பினும், என்னைப்பொறுத்தவரை அந்நாட்கள் போல வராது இந்நாட்கள். ;((((((]
[“அந்த நாளும் வந்திடாதோ!!! என என் மனம் அங்கலாய்க்கத்தான் செய்கிறது]
http://gopu1949.blogspot.in/2011/04/blog-post.html
அந்த சுகானுபவம் மீளக்கிட்டிடாதோ???
அவசரமா செய்த கார்ட். அழகாக இருக்கு என்பது எனக்கு சந்தோஷமாக உள்ளது.உங்க பாராட்டுக்களுக்கும் , ஊக்கத்திற்கும்,வாழ்த்துக்களுக்கும், கவிதைக்கும் மீண்டும் நன்றிகள் இளமதி.
Deleteவாழ்த்துக்கள் அம்முலு! க்வில்ட் கார்டும் அழகாய் இருக்குது. உங்க புண்ணியத்தில முதன் முதலா இந்தப் பாடலையும் கேட்டுவிட்டேன்! :)
ReplyDeleteவாங்க மகி.இந்த படத்தில இந்தப்பாட்டு ஏனோ பிடித்திருந்தது.படம் இன்னமும் பார்க்கவில்லை. அதனால் பதிந்தேன். வாழ்த்துக்கும் ,வருகைக்கும் ரெம்ப நன்றி மகி.
Deleteவாழ்த்துகள்...
ReplyDeleteதோழி, இளமதி தளம் வழியாக வந்தேன்... உங்கள் பிளாக்கும், கை வண்ண க்விளிங்கும் மிக அழகாக நேர்த்தியாக உள்ளது...
வாங்க இரவின் புன்னகை.உங்க வருகைக்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றி.
Deleteஆஹா ! மிக அருமையான் பகிர்வு.நன்றிக்கு மனமார்ந்த நன்றி.தொடர்ந்து அசத்துங்க அம்முலு(அம்முலு பெயர் நல்லாயிருக்கு.)
ReplyDeleteவாங்க ஆசியா.பாராட்டுக்கும், வருகைக்கும் மீண்டும் என் நன்றிகள் ஆசியா.
Deleteவாழ்த்துக்கள்,பிளாக்கின் வடிவமைப்பு மிக நன்றாக இருக்கிறது.
ReplyDeleteவாங்க விமலன்.தங்களது முதல்வருகைக்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்.
Deleteஇளையநிலாவிலும் வலைச்சரத்திலும் அறிமுகமானதியிட்டு என் பாராட்டுகள் அம்முலு.
ReplyDeleteவாழ்த்திதழ் வெகு அருமை. அழகான வர்ணச் சேர்க்கையுடன் வெகு நேர்த்தியாக இருக்கிறது.
ஆகா டீச்சர் வந்திருக்கிறாக. நல(இ)மா? வருகைக்கும், பாராட்டுக்கும் என் நன்றிகள் இமா.
Deleteஅடடா சொன்னபடி புளொக்கை தூசு தட்டிட்டீங்க அம்முலு... குயிலிங் வேர்க் சூப்பர்ர்.. அழகழகா.. கலர் கலரா இருக்கு ஒவ்வொரு பூவும்.
ReplyDeleteஅடடா சொன்னபடி புளொக்கை தூசு தட்டிட்டீங்க அம்முலு... /// ஏன் இதுக்கு முன்னாடி டஸ்டா இருந்திச்சா? :))))))
Deleteநீங்க சொன்னதால தூசு தட்டீட்டன் அதிரா.பிறகு நீங்க எந்தாட்டிக்கா போய்விடுவீங்களெல்லோ. அதுதான் கெதியில செய்து போட்டன்.
Deleteமனீக்கு தெரியேல்லை டஸ்டா இருந்தபடியால்தான் தட்டினன் என்று.
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி அதிரா.
ஆசியாவினதும் இளமதியினதும் அறிமுகப் படுத்தலுக்கு வாழ்த்துக்கள்... நீங்களும் குறைந்தது மாதம் இருமுறையாவது பதிவு போட்டிடுங்கோ.
ReplyDeleteஅழகிய பாடல்..
//நீங்களும் குறைந்தது மாதம் இருமுறையாவது பதிவு போட்டிடுங்கோ//2 பதிவென்றால் போடலாம்.
Deleteஉங்க வருகை எனக்கு மிக்க சந்தோஷமாயிருக்கு. வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி அதிரா.
இரண்டு இடங்களிலும் அறிமுகமாகியிருக்கின்றமைக்கு வாழ்த்துக்கள் ப்ரியசகி! மறக்காமல் நன்றி சொல்லி போஸ்ட் தந்தமைக்கும் நன்றி - டாங்கி என்றால் என?
ReplyDeleteஓ அதுதான் நன்றியா? அட ஒரு டச்சு சொல்லு படிச்சிட்டேன்!!!
வாங்கோ மாட்ஜிஜோஜ்ஜி மனீமனீ. நன்றி மறக்ககூடாதெல்லோ அதுதான் சொல்லிட்டேன். அதில் எனக்கும் சந்தோஷமே. நீங்க வந்து கருத்திட்டதும், வாழ்த்தியதும் கூட மிக்க மகிழ்ச்சியே.மிக்க நன்றி மனீமனீ.
Deleteடங்க.(டாங்கி இல்லை.ஒருவேளை பீரங்கி வண்டியைச்சொல்றாரோஓ.)
Ammulu, thanks very much for your wishes! Saw them in several places, thanks a lot for your thoughtfulness! :)
ReplyDeleteThis comment is just let you know that I received your comment and wishes in my blog! :):)))
இளையநிலாவிலும் வலைச்சரத்திலும்
ReplyDeleteஅறிமுகமானதற்கு இனிய வாழ்த்துகள்..
குயிலிங் அருமை..பாராட்டுக்கள்..!
வருகை,வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள் அனைத்துக்கும் மிக்க நன்றிகள் அக்கா.
Delete
ReplyDeleteவணக்கம்!
போற்றும் வண்ணம் பிரியசகி
புனைந்த வலையைக் கண்ணுற்றேன்!
மாற்றம் ஒன்றே மாறாது!
மனத்தைக் கவ்வும் இச்சொற்கள்!
காற்றும் மழையும் என்கவியில்
கைகால் முளைத்து விளையாடும்!
ஆற்றும் கடமை நன்குணா்ந்தே
அமைக்கும் வாழ்வு உயா்ந்திடுமே!
கவிஞா் கி.பாரதிதாசன்
வருகைக்கும்,கவிக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ஐயா
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிகள் ஐயா.
Deleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/4.html) சென்று பார்க்கவும்... நன்றி...
தங்களின் வாழ்த்துக்களுக்கும்,விடயத்தினை தெரிவித்தமைக்கும் மிக்க நன்றிகள் தனபாலன் சார்.
Deleteஅன்புள்ள அம்முலு,
ReplyDeleteவணக்கம்மா, நலம் நலமறிய ஆவல்.
தங்களை ஆடி வெள்ளிக்கிழமையாகிய இன்று Ms. அம்பாள் அடியாள் அவர்கள் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி சிறப்பித்துள்ளார்கள். மனமார்ந்த பாராட்டுக்கள். இனிய நல்வாழ்த்துகள்.
அன்புடன் கோபு அண்ணா
தங்களின் வாழ்த்துக்களுக்கும்,விடயத்தினை தெரிவித்தமைக்கும் மிக்க நன்றிகள் அண்ணா.
Delete