RSS

09/01/2020

அரசர் வருகையும், கோமதிஅக்கா நண்பர்களும்....

அடுத்த நாள் நகரத்தினுள் இருக்கும்  சில முக்கிய இடங்கள் இருக்கின்றன, நீங்கள் விரும்பினால் பார்க்கலாம் என ஹோட்டல்  ரிசப்ஷன் பெண் கூறி, சில லிஸ்ட் தந்தார். இங்கு முக்கியமான விடயம் எதனையும் வற்புறுத்தமாட்டார்கள். எல்லாமே எங்க விருப்பம்தான். இதனை நாங்க உணர்ந்தோம். அதில் அரசமாளிகை (King Palace), Wat phnom Historical site, Combodian genoside  இப்படி இன்னும் வேறு இருந்தது. இவை முக்கியமானவை நீங்கள் பார்க்கலாம் என சொன்னார் அப்பெண்.

இதில் நான் ஒரு விடயம் குறிப்பிடவேண்டும், என்னவெனில் என்னவருக்கு கம்போடியா நாட்டுக்கு போகனும் என முன்னாடியே விருப்பம்.ஆனா சரிவரல்ல. இப்போ முழுக்க அந்நாட்டுக்கான பயணமாக அமைத்தார்,ஏனெனில் அங்கோர்வாட் கோவில், அடுத்து அதன் வரலாறு அறியும் ஆவல். கொஞ்ச நாட்களா ஒரு மார்க்கமா தெரியுறார். தமிழின்தொன்மை, வரலாறு என தேடி தேடி படிக்கிறார். கீழடி எனும் புக் வாங்கியிருக்கிறார். இந்த கம்போடியாவின் வரலாறு அங்கு நடந்த இனபடுகொலை என மிகுந்த ஆர்வதோடு படித்துவைத்திருந்தார். அங்கு போய் இவைகளை பார்க்கனுமென இருந்தார். பார்த்தாச்சு. உண்மையில் பிரமிப்பாகதான் இருக்கு.

அந்த லிஸ்ட்  ல  தேவையானதை மட்டும்தெரிவு செய்து, நேரத்தினையும் கணக்கிட்டு 3 இடங்களுக்கு போக திட்டமிட்டோம்.

இந்நாட்டில் 90% கிமர்(Khmer) எனும் இனத்தவர்கள்தான். மொழியும் கிமர் மொழி.2 வது மொழி பிரெஞ்ச். பணம் என்னவோ Riel ரியல். ஆனால் டொலர் கொடுத்துதான் பொருட்கள் வாங்குவது.



முதலில் அரசமாளிகைக்கு போனோம். அங்கு போனால் எங்க Badluck அரசர் வருகையால் 9 மணிக்கு திறக்கப்படும் கதவு 2 மணிக்குதான் பார்வைக்கு திறப்போம் என காவலர் சொல்லிவிட்டார்.

                      இது வெளியில் இருந்து எடுத்தபடங்கள்......


                 

                          அரசர் மாளிகைக்கு போகிறார்...........
                       
எங்க நாட்டில் அரசரோ, பிரதமரோ, ஏன் மந்திரியோ வந்தால் TikTok பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? அந்நாட்டு பொலிஸ்காரர்கள்.


என்ன செய்வது என யோசித்து, அருகில்  கம்போடியாவின் பிரபலமான ஆறு Mekong ஓடிக்கொண்டிருக்கிறது.  அந்த சூழலே ஒரு பீச் மாதிரி இருந்தது. கொஞ்சநேரம் அதில் கழித்துவிட்டு அடுத்த ப்ளான் செய்த இடத்துக்கு போனோம். இந்த இடத்தில் சில படங்கள் பார்வைக்கு......நாங்க திரும்ப 2 மணியளவில் வந்து அரசமாளிகையை சுற்றிபார்த்தோம்.

இதுதான் மேகொங் (Mekong)ஆறு. இந்த ஆறினால் அங்கு தண்ணீர் கஷ்டம் இல்லை. கிராமபுறம் போனால் பார்க்க நன்றாக இருக்கிறது. எல்லா இடமும் வாய்க்கால், சின்னஓடைகள் ஊடாக இத்தண்ணீர் போகிறதாம். அங்குள்ளவர்கள் சொன்ன தகவல்கள். அதனால் அங்கு பசுமையாக இருக்கு.
இந்த இடத்தில் புறாக்களுக்கு அளவே இல்லை. எவ்வளவு புறாக்கள். எங்கிருந்துதான் வருகிறார்களோ தெரியாது. அங்கு ஹோட்டல் பக்கம் நான் ஒரு பறவையையும் காணவே இல்லை. ஆனா இங்கு ஒரே புறா மயம். ஆட்களுக்கு சரிசமமாக இருக்கிறார்கள். துளி பயமே இல்லை.காலை வந்து கொத்துவது , தலை சரித்து பார்ப்பது என உணவு கேட்கும் விதம் அலாதி.. பார்த்துக்கொண்டேயிருக்கலாம் சேட்டைகளை. கூடவே சிட்டுக்குருவிகளும். இவங்களை பார்க்க கோமதி அக்காதான் என் நினைவில் வந்தாங்க.











______________________________________________________

      நான் எடுத்ததிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் . நல்லாயிருக்கா
______________________________________________________

அரசமாளிகை உள்ளே.........

இந்த மாளிகைக்குள் அப்படி என்னதான் இருக்கோ..... பெரியஹால், புத்தர்சிலை. அவ்வளவுதான். ஆனா இதற்கு வாயில் காவலாளி பெரிய பில்டப் கொடுத்து கமரா, மொபைல் கொண்டு போககூடாது. படம் எடுக்ககூடாது என ஒரே சத்தம் போட்டார் அவர்கள் பாஷையில். ஆனால் அவர் கையில் வைத்துக்கொண்டு பேஸ்புக் பார்க்கிறார் கர்ர்ர்ர்ர்ர்ர்.... நான் விடுவேனோ, எப்படியோ அவர்களுக்கு தெரியாமல் எடுத்துவிட்டேன் படம். கீழே இருப்பதுதான்....


அரசர் வேறோர் இடத்தில் இருக்கிறார். இங்கு வந்து போவாராம். ஏன் ,எதற்கு வாறார் என்று கேட்டால் விபரம் இல்லை. ஒருவேளை சொல்லக்கூடாதோ என்னவோ. ஆனால் அழகாக கட்டியிருக்கிறாங்க. பெரிய மாளிகையா, கோவிலா என தெரியாத அளவு கட்டியிருக்காங்க. வளவுக்குள் புத்த கோவில்கள் இருக்கின்றன. அங்கே ஓதுதல்களும், பாட்டும், மணியோசையும் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்குமாம்.

                              இதுதான் அந்த மாளிகை.



                               நல்ல அழகாக பராமரிக்கிறார்கள்.




இப்படி சின்ன சின்ன கோவில்கள் கட்டியிருக்கிறாங்க. என்ன அங்கு அடிக்கிற வெயிலுக்கு களைப்பு போக்க இருக்கலாம்.


படம் பார்த்து களைத்து போன உங்களுக்கு க்ரில் வாழைப்பழம் சாப்பிட்டுபோங்க. இது அங்கு அனேக இடங்களில் பார்க்கமுடியும். வாழைப்பழத்தை சுட்டுதருகிறாங்க. பிழைப்புக்காக என்னவோ புதுசுபுதுசா கண்டுபிடித்து விற்கிறாங்க. எனக்கு டேஸ்ட் பிடிக்கேல்லை.

இங்கு சிலவற்றை பார்க்கையில் பசும்பொன், அஞ்சு அடிக்கடி ஞாபகம் வந்தார்கள்.அதுவும் அஞ்சு சிலதை பார்த்தால் மயங்கியே விழுந்திடுவா. அப்படி இருக்கு .
ஹலோ....பசும்பொன் மெயின் பிக்சர் வர லேட்டாகும். பொயிங்ககூடாது. சரியா.

54 comments:

  1. ஆஆஆ மீ மீ மீயேதான் 1ஸ்ட்டூஊஊஊ:)

    ReplyDelete
    Replies
    1. ஆ......வாங்கோ உங்களுக்கே க்ரில் வாழைப்பழம்..1ஸ்ட்டூஊஊஊ எல்லோ

      Delete
  2. படங்கள் சூப்பராக வந்திருக்கு, பனை, வாழை பார்த்ததும் யாழ்ப்பாணமோ என நினைச்சிட்டேன்ன் ஹா ஹா ஹா . சுத்தத்தில சூப்பராக இருக்கிறார்கள், வசதியான நாடுபோலவே தெரியுது.

    ReplyDelete
    Replies
    1. இதைபார்த்து யாழ் என்றால் இன்னொரு இடம் போட்டால் என்ன சொல்வீங்க உங்க ஊர் என சொல்வீங்க போல அப்படியே எங்க இடம் மாதிரிதான். வசதியான நாடோஓ....இப்பத்தன் முன்னேறிவருகிறார்கள். என்னை இப்பவே இதிலே எழுத வைத்துவிடுவீங்க போல... அதெல்லாம் போஸ்டா தான் வருமாக்கும்.

      Delete
  3. எனக்கும் பறவைகள் பார்த்தால் கோமதி அக்கா நினைவுதான் வரும்.
    அந்த மஞ்சள் பூக்கள் மகியை நினைவுபடுத்துகின்றன.
    இனி மசுக்குட்டியைப் பார்க்கும்போதெல்லாம் அம்முலு நினைவு வரப்போகுதே:)... ஏன் அம்முலு அங்கு பூஸ் இல்லையோ:)...

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்..அங்கு கோவில்களில்தான் பூசார் இருக்கினம். அவை சாமிபூசாராம். பார்க்கிர இடமெல்லாம் அங்க உங்க விருப்பமானதுதான் இருக்கு. ஹா..ஹா..இதால உங்க ஞாபகம். அதிராட பேவரிட் என சொல்வேனே அடிக்கடி..

      Delete
  4. ///TikTok பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? ///
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது எப்படி ரிக்ரொக் தான் என உங்களுக்கு தெரியும்:)... அம்முலு வந்திருக்கிறாக அதிராவை விட்டிட்டு என பிரதமருக்கு மெசேஜ் போடுறாராக்கும்:).... யும்மா யும்மா பேசக்குடா கர்ர்ர்ர்ர்ர்ர்:)

    ReplyDelete
    Replies
    1. ஹலோ பசும்பொன் அங்கு எட்டிபார்த்தால் கூட ஏன் என்று கேட்கமாட்டினம். அப்ப்டி நான் எட்டிபார்த்துவிட்டுதான் போனேன்.அதனாலதான் வாசல் காவலாளி பேஸ்புக் பார்த்தார், இவர் டிக்டாக் பார்த்தார் என எழுதினேன் சும்மா எழுதலையாக்கும். கர்ர்ர்ர்ர்ர்.
      2வத் படத்தில இருப்பவர் மெசேஜ் அனுப்புறார்.

      Delete
  5. ///தமிழின்தொன்மை, வரலாறு என தேடி தேடி படிக்கிறார். ///
    ஏதும் யெல்ப் வேணுமெண்டால் அதிராவை வட்ஸப்ல கொன்ரக் பண்ண சொல்லுங்கோ அம்முலு பிக்கோஸ் அதிராக்கு டமில்ல டி எல்லோ....:).

    மாளிகைப் படங்கள் சூப்பராக வந்திருக்குது.
    அஞ்சு நேற்றுக்கூட மயங்கி விழுந்தாவே என் கொமெண்ட் பார்த்து:).
    ஆலமரத்துக்காக மீ வெயிட்டிங்:).. ஆலமரப் படம் ஒழுங்கா இல்லை எனில் பிளைட் எடுத்து வருவேன் ஜேர்மனிக்கு:).

    ReplyDelete
    Replies
    1. ஆலமரம் வருதோ,அரசமரம் வருதோ நீங்க கேட்ட மரம் வரும். ஆனா வெயிட். எல்லாத்துக்கும் அவசரம்.
      ஆ..ஜேர்மனி வாறீங்களோ வாங்கோ,வாங்கோ.அப்ப மரம் படம் கட்.

      Delete
  6. தலைப்பில் கோமதி அக்காவும் அக்காவின் நண்பரும் இடம் பெற்றது மகிழ்ச்சி, நன்றி அம்மு.

    படங்கள் எல்லாம் அழகு. பயண விவரம் மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. அக்கா இந்த புறாக்களை பார்த்ததும் இப்படித்தான் நினைத்து கணவரிடம் சொன்னேன்.கோமதிஅக்கான்ர ப்ர்ண்ட்ச் என, அதே நினைப்பில இருந்துச்சா அப்படியே போட்டேன். கொப்பிரைட் அதுதான் எடுத்தேன்.

      Delete
  7. உங்களுக்கு பிடித்த படம் எனக்கும் படித்து இருக்கிறது.
    சீகல் பறவைதானே! அது?

    ReplyDelete
    Replies
    1. நன்றி அக்கா. அக்காஆஆ அது வெள்லை புறா.குச்சி கொண்டு போகுது.ஸும் செய்து பாருங்கோ. எதிர்பாராமல் எடுத்த படம்.

      Delete
    2. சீகல் பற்வைகளில் இறக்கை போல் இருந்தது. ஜூம் செய்து பார்த்தேன் குச்சி எடுத்து போவது தெரிகிறது.

      Delete
    3. அதிராவிற்கும் பற்வைகளை பார்த்ததும் அந்த நினைவு வந்தது மகிழ்ச்சி. சிறு வயதில் "அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்" என்ற பாடலை எங்கள் பள்ளியில் அப்புறம் பக்கத்து பள்ளியில் நடந்த விழாவில் ஆடினோம். அதிலிருந்து பறவை காதலி ஆகி விட்டேன்.

      Delete
    4. நல்ல friendly யா பயமில்லாமல் கிட்ட வந்தாங்க. எனக்கும் மிகவும் பிடிக்கும்.இங்கு இப்ப வின்டர் டைம் பாவங்க உணவுக்கு அலைகிறாங்க. நான் போடுவதால் வந்து சாப்பிட்டு போறாங்க.

      Delete
  8. க்ரில் வாழைப்பழம் நன்றக இல்லை சுவை என்றீர்களே சுற்றிப்பாஅர்த்த களைப்பு நீங்க என்று சொல்லி விட்டீர்கள் அதனால் அக்கா கொஞ்சம் சுவைத்துப் பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு என்னமோ பிடிக்கல அக்கா. ஆனா கணவர் சாப்பிட்டார். எனக்கு ஒருவேளை சுட்ட கருகலினாலோ தெரியல. தாராளமா எடுங்க.
      நான் இங்கு செய்துபார்க்க் இருக்கேன். பார்ப்போம் எப்படி என்று.

      Delete
  9. படங்களை பெரிது செய்து பார்த்தேன், அனைத்தும் அழகு.செடிகள், புற்கள் எல்லாம் அழகாய் வெட்டப்பட்டு இருப்பது பார்க்க அழகு.
    மலர் அழகு.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அக்கா அங்கு செடிகள் எல்லாம் அழகா வைத்திருக்கிறாங்க. ஆனா முன்னால் மட்டுமே. பின்பக்கம் கொஞ்சம் அழகில்லை. கொஞ்சம் ப்ற்றைகளாக இருக்கு. துப்பரவா இல்லை. வாறவங்களை முன்னாலேயே அனுப்பிவிடுவார் போல அரசர். ஹா..ஹா..

      Delete
  10. கரில் வாழைப்பழம் நன்றக இல்லை சுவை என்றீர்களே சுற்றிப்பாஅர்த்த களைப்பு நீங்க என்று சொல்லி விட்டீர்கள் அதனால் அக்கா கொஞ்சம் சுவைத்துப் பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பின்பு நான் உப்பு,மிளகாய்,மாங்காய் வாங்கிசாப்பிட்டேன். மாங்காய் தாராளமாய் கிடைத்தது.

      Delete
    2. புளிக்காமல் இருந்ததா மாங்காய்? சிறு வயதில் அவ்வளவு புளிப்பும் கண் சிமிடாமல் சாப்ப்டுவேன் இப்போது புளிப்பு சாப்பிட முடிவது இல்லை.

      Delete
    3. கண்ட உடனே வாங்கிடுவேன். ஷாப்பிங் விட அங்கு கிடைக்கும் பழங்கள் வாங்கி சாப்பிட விருப்பம். சாதாரண புளி. தனியவும் விறகிறாங்க. வேறு விதமான மாங்காயும் , அம்பிறலங்காய் சேர்த்தும் விற்றாங்க. விற்கிறவங்கள் எல்லாருமே ஏழைங்க. அதனால் பேரம் பேசாமல் சொன்ன விலைக்கே வாங்குவது. 1 டொலர் தான் வரும். நான் சாப்பிட்டது கொஞ்சம் கண்சிமிட்டியே சாப்பிட்டேன். ஹா..ஹா..ஹா..

      Delete
  11. அரண்மனை, விசிறி வாழை, மற்றும் அழகாய் வெட்டப்பட்டு இருக்கும் புற்கள் , செடிகள் எல்லாம் அழகு.

    ReplyDelete
    Replies
    1. அது விசிறிவாழை இல்லை அக்கா.சாதாரண வாழைதான். வெளியில் இருந்து பார்க்க கிட்டதட்ட அப்படி இருக்கு.

      Delete
    2. சாதா வழை இல்லை அம்மு நன்றாக பாருங்கள் பக்க கிளைகள் மேல் நோக்கி இருக்கே அரண்மனை முன்

      Delete
    3. ஆவ்வ்வ்வ்... மன்னிக்கவும். நான் முன்பக்க வாழையை சொல்றீங்க என நினைத்து பதில் சொல்லிவிட்டேன். Sorry🙏
      மீண்டும் வந்து கருத்திட்டமைக்கு நன்றி அக்கா

      Delete
  12. //இங்கு ஒரே புறா மயம். ஆட்களுக்கு சரிசமமாக இருக்கிறார்கள். துளி பயமே இல்லை.காலை வந்து கொத்துவது , தலை சரித்து பார்ப்பது என உணவு கேட்கும் விதம் அலாதி.. பார்த்துக்கொண்டேயிருக்கலாம் சேட்டைகளை. கூடவே சிட்டுக்குருவிகளும். இவங்களை பார்க்க கோமதி அக்காதான் என் நினைவில் வந்தாங்க//

    ஒவ்வொன்றும் அழகு. பயணத்திலும் அக்காவின் நினைவு தங்கைக்கு. மகிழ்ச்சியாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களையும்,தங்கள் மகிழ்ச்சியையும் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி அக்கா.

      Delete
  13. //கொஞ்ச நாட்களா ஒரு மார்க்கமா தெரியுறார். தமிழின்தொன்மை, வரலாறு என தேடி தேடி படிக்கிறார். //

    ஒரு வரலாற்று பதிவர் உருவாகின்றார் :) அவரையும் எழுத ஊக்குவியுங்க :)

    ReplyDelete
    Replies
    1. ஆவ்.......... எனக்கு பரவாயில்லை கொஞ்சமா இன்ரஸ்ட் இருக்கு. ஆனா நான் வரலாறு விரும்பி படித்ததில்லை. ப்ளாக் எழுதுறதோ அவங்களா.. பிறகு நாந்தான் அதையும் நடத்தோனும்....கர்ர்ர்ர்ர்

      Delete
  14. //ஆனால் அவர் கையில் வைத்துக்கொண்டு பேஸ்புக் பார்க்கிறார் கர்ர்ர்ர்ர்ர்ர்.... நான் விடுவேனோ, எப்படியோ அவர்களுக்கு தெரியாமல் எடுத்துவிட்டேன் படம். கீழே இருப்பதுதான்....//

    கர்ர்ர்ர் :) பூனையோடு சேர்ந்த புறாவும் கதையா இருக்கு .நீங்க இப்படி செய்ற ஆலிலையே :) ஒளிஞ்சி படமெடுக்கறதை பூனைதான் சொல்லித்தந்திருப்பாங்க 

    ReplyDelete
    Replies
    1. //ஆலிலையே :)//

      ஆளில்லையே 

      Delete
    2. ஆவ்வ்வ்வ்வ்.. எப்படி கண்டுபிடிச்சீங்க.ஹா..ஹா..ஹா.. உண்மையா அஞ்சு இதை எடுத்துவிட்டு எழுதும்போது நீங்க ஏதாவது சொல்வீங்கன்னு தெரியும். நான் நினைச்சமாதிரியே எழுதிட்டீங்க. எல்லாம் அதுக்குள் என்ன இருக்கு என்ற ஆர்வக்கோளாறுதான். பசும்பொன்னை பிடிங்க..

      Delete
  15. படங்கள் சூப்பரா இருக்கு .அரண்மனை  அழகா இருக்கு .எவ்ளோ க்ளீன் பார்க்கா சூப்பர் .புறாக்களும் அழகு .வாழைப்பழத்தை சுட்டு தரங்களா ??.அதுகுப்பதில் மாங்காய்மிளகாய் ,அன்னாசி மிளகாய்த்தூள் சேல்ஸ் போட்டிருந்தா செமையா இருந்திருக்கும் :)

    ReplyDelete
    Replies
    1. ஸ்..ஸ்,, மாங்காய் மிளகாய்+உப்பு எவ்வளவு திகட்ட, திகட்ட சாப்பிட்டாச்சு. அதெல்லாம் வருது...வருது.. வெயிட் அண்ட் சீ

      Delete
  16. டிக்ட்டோக் பார்க்கிறார்களா சோல்ஜர்ஸ் அவ்வ்வ் :) அப்போ அரசுக்கு பாதுகாப்பு கவலை இல்லை போல :))

    ReplyDelete
    Replies
    1. உண்மையா அஞ்சு. அங்க மொபைல் இல்லைன்னா வாழ்க்கையே இல்லை எனுமாப்போல எல்லாருமே இருக்காங்க. நான் கிட்டபோய் எட்டிபார்க்க, அந்த பொலிஸ் don't care. பேசாமல் என்னை பார்த்துவிட்டு கண்டினியூ போன். அவ்வ்வ்வ்வ்.. இப்படிதான் அனேக இடங்களில், ஒன்று சாப்பிட்டுக்கொண்டிருப்பினம், அல்லது மொபைல் பார்ப்பது.

      Delete
  17. பயண அனுபவங்களும், புகைப்படங்களும் அழகு மிகவும் தெளிவு.

    மேகொங் ஆறு தேவகோட்டை தேனம்மை ஊரணி போலவே அழகாக இருக்கிறது.

    புறா பறக்கும் படம் அருமை.
    படங்கள் தொடர்ந்து வரட்டும்...

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்.... தேவகோட்டை ஊரணி மாதிரியா.. அதை ஒருக்கா படம் எடுத்து போடுங்கோ அண்ணா ஜீ. அழகான ஆறுதான் ஆனா தண்ணீர் மட்டும் கலங்களாகவே இருக்கு. புறா படத்தினை ரசித்தமைக்கு நன்றி.
      மிக்க நன்றி அண்ணா ஜீ உங்க வருகைக்கும்,கருத்துக்கும்.

      Delete
  18. படங்கள் ஒவ்வொன்றும் மிகவும் அழகு...

    புறா : ஆகா...!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி டிடி அண்ணா வருகைக்கும், படத்தினை ரசித்து கருத்திட்டமைக்கும்

      Delete
  19. புகைப்படங்களும் தகவல்களும் அருமை!
    2018ம் வருட இறுதியில் கம்போடியாவையும் வியட்னாமையும் சுற்றிபார்த்தது நினைவுக்கு வந்தது. கம்போடியா கோவில்கள் பற்றி எழுத பக்கங்கள் போதாது. அதற்கு நிறைய பதிவுகள் தேவைப்படும்.

    ReplyDelete
    Replies
    1. நானும் உங்க கட்டுரை படித்தேன் அக்கா. நீங்க பார்த்த அப்சரா நடனம் பார்த்தேயாகனும் என பார்த்தேன். எனக்கு பிடித்திருந்தது.
      உண்மைதான் எழுத பக்கங்கள் போதாதுதான் .ஆனா கண்ட,கேட்ட,பார்த்த அனுபவங்களை எழுதுகிறேன். மிக்க நன்றி அக்கா வருகைக்கும்,கருத்துக்கும்.

      Delete
  20. நிழற்படங்கள் தகவல்கள் என அனைத்தும் சிறப்பு. பல இடங்களில் நிழற்படங்கள் எடுக்க இருக்கும் தடை வருத்தம் தருவது தான். நான் பல இடங்களில் இதை அனுபவித்து இருக்கிறேன்.

    க்ரில் செய்த வாழைக்கனி! அடடா... இப்படியுமா - படிக்கும்போதே பிடிக்காது என்று தோன்றிவிட்டது! ஹாஹா...

    ReplyDelete
    Replies
    1. பல இடங்களில் தடை. ஆனா கண்காணிப்பு அவ்வளவா இல்லை. அதனால் சில இடத்தில் எடுத்தேன்.
      ஹா..ஹா.. தெரிந்துவிட்டதா.. வருகை தந்து கருதிட்டமைக்கு மிக்க நன்றி

      Delete
  21. அட...வித்தியாசமான மாளிகையாக இருக்கே.. அரசர் ஏன் வந்துபோகிறார் என்று அறிந்துகொள்ளும் ஆவல் உண்டாகிறது. உள்ளே ஏதாவது ரகசிய நிலவறை இருக்குமோ? படங்கள் எல்லாமே அழகு.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கீதா. வித்தியாசமான மாளிகைதான். அழகாகவும் இருக்கு. ஆவலில் தான் கேட்டேன். தெரியாது என்றார்கள்.

      Delete
  22. க்ரில் செய்த வாழைப்பழம் கேரளாவின் பழம்பொரியை நினைவுபடுத்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஓ..அங்கு இப்படி ஒன்று இருக்கிறதா? இப்போதான் கேள்விபடுகிறேன். மிக்க நன்றி கீதா வரவுக்கும்,கருத்துக்கும்.

      Delete
  23. படங்கள் அருமை!, கம்போடியா செல்ல வேண்டும் என நினைக்க தூண்டுகிறது. நன்றி!..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி உங்க கருத்துக்கும்,முதல் வருகைக்கும்.

      Delete

 
Copyright பிரியசகி