RSS

11/03/2016

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி.

இளையநிலா தளத்தில்  மரபுகவிதை,வெண்பா புனைந்து குறுகிய காலத்தில் நிறைய நட்புகளின் அன்பையும், நட்பையும் சம்பாதித்தவர் இளமதி. பிரான்ஸ் பாட்டரசர் கி. பாரதிதாசன் ஐயாவின் மாணவியாவார்.

இவரின் வாழ்வில் ஏற்பட்ட பெரும் துயரம் அவரது கணவர் விபத்தொன்றில் சிக்கி கடந்த 14 வருடமாக கோமா நிலையிலிருந்தமை. இந்நிலையில் இளமதியின் கணவர் கடந்த திங்கட்கிழமை சிவராத்திரி அன்று இறையடி சேர்ந்தார். 
அன்பு நண்பி இளமதியின் கணவரது ஆன்ம சாந்திக்காகவும், நண்பி இளமதி மீளாதுயரத்தில் இருந்து விடுபட்டு மீண்டு வரவேண்டும் என  எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்... அன்னாரின் அஞ்சலி நிகழ்வுகள் வெள்ளி(இன்று) 11.03.16 அன்று நடைபெறுகின்றது.

14 comments:

 1. மனத்திற்கு மிகவும் வருத்தமான செய்தி ...அவர் மீண்டும் உறுதியோடு மீண்டு வர கடவுள் அருள் புரியடும் ...

  ReplyDelete
 2. மிகவும் வருத்தம் தரும் செய்தியாக உள்ளது. என் வருத்தங்களையும் தங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

  ஸ்ரீராமரின்/சீதையின், வன வாஸம் போல 14 வருடங்கள் ! 14 வருடங்கள் அவரைப் பராமரித்துப் பாதுகாக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் !! பொறுமையின் சிகரம் அவர்கள் !!!

  சிவனுக்கு உகந்த திங்கட்கிழமை அதுவும் மஹா சிவராத்திரியன்று சிவனடி சேர்ந்துள்ளது மிகவும் விசேஷமாகத் தோன்றுகிறது.

  காலம் மட்டுமே ஒருவரின் மனக்காயங்களை ஆற்ற முடியும்.

  நாளடைவில் அவர்கள் சகஜ நிலைக்குத் திரும்ப நாம் பிரார்த்திப்போம்.

  ReplyDelete
 3. அவரது ஆன்ம சாந்திக்காகவும்,சகோதரி இளமதி இத்துயரத்தில் இருந்து மீண்டு வரவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம் ..

  ReplyDelete
 4. வணக்கம்
  மனதுக்கு வருத்தமான செய்தி ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 5. My wholehearted condolence. Let us pray for his soul and his family.

  ReplyDelete
 6. இளமதி சொல்லுக்கடங்காத இந்தத் துயரத்திலிருந்து விரைவில் மீண்டு வர என் பிரார்த்தனைகள்!

  ReplyDelete
 7. சகோதரி இந்த இன்னலிலிருந்து மீண்டு வர இறைவனிடம் மனப்பூர்வமாய் பிரார்த்திக்கின்றேன்

  ReplyDelete
 8. வருத்தமான செய்தி. இந்தத் துன்பத்திலிருந்து சீக்கிரம் சகோதரி மீண்டு எழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 9. பிரியசகி, மாற்ரம் ஒன்றே மாறாதது என்று நீங்கள் சொல்லி இருப்பது போல் இளம்தி மனதில் மாற்றம் ஏற்பட்டு மீண்டும் பதிவுலகத்திற்கு வந்தால் அவருக்கு ஆறுதல் கிடைக்கலாம்.
  நீங்கள் இளமதியிடம் பேசினால் நான் மிகவும் கேட்டதாகச் சொல்லவும். தந்தையின் உடல் நலத்தோடு தன் நலத்தையும் பார்த்துக் கொள்ள சொல்லுங்கள்.

  ReplyDelete
 10. எனது அஞ்சலிகளும்.இந்த வருத்தத்தில் இருந்து மீண்டு வர எனது பிரார்த்தனைகளும்.

  ReplyDelete
 11. varuthamana seithi. aazntha irangkalhal. :(

  ReplyDelete
 12. சகோதரி இளமதி துயரில் இருந்து மீள என் பிரார்த்தனைகள்.

  ReplyDelete
 13. அன்புப் பிரியா!..
  என்வாழ்வில் நடந்தேறிய சோகம்தன்னை இரங்கற்பதிவாக
  நீங்கள் இட்டதைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்தேன்.
  என்ன கூறுவது என்று தெரியவில்லை...
  காலங்கடந்ததெனினும் என் உளமார்ந்த நன்றி பிரியா!

  கரங்கூப்பி நன்றி சொன்னேன்
  கரைந்தோடும் கண்ணீர் நீக்கி!
  இரங்கலாக இட்டீர் நானும்
  இழந்திட்ட சோகச் செய்தி!
  வரமாக வாழ்வில் வந்து
  வலியுற்ற வேளை தன்னில்
  அரணாக அன்பால் காத்தீர்!
  அனைத்திற்கும் நன்றி! நன்றி!

  இங்கு என் துன்பதிற் பங்குகொண்டு அஞ்சலித்தும்
  துவளவிடாமல் ஆதரவுச் செய்தி கூறித் தேற்றிய அன்புள்ளங்கள்
  அனைவருக்கும் என் இதயபூர்வமான நன்றிகள் பல!

  பிரியா! அன்போடு ஒரு வேண்டுகோள் உங்களிடம் வைக்கின்றேன்.
  சோகப் பதிவோடு உங்கள் தளத்தை இப்படிவிடுவது நல்லதல்ல.
  எனக்கும் அதனைப் பார்க்கும்போதெல்லாம் மீளவும் அந்நினைவுகளே
  இறுகப் பற்றிக்கொள்கிறது.
  ஆகவே விரைந்து வழமையான வேறு மகிழ்வான பதிவிடுங்கள்!
  அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்துங்கள்!!!
  செயற்படுத்துவீர்கள் என நம்புகிறேன். மீண்டும் என் நன்றிகள் உங்களுக்கு!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் வாருங்கள் கா தங்கள் வரவோடு அம்மு புதிய பதிவினைப் புரட்டிப் போடும் இனி என்றும் மகிழ்வே அழகான விருத்தம் இத்தமிழ் தொடர என் வாழ்த்துகள் கோடி கா நன்றி நன்றி தங்கள் வரவுக்கும் கவிதைக்கும் !

   Delete

 
Copyright பிரியசகி