RSS

12/02/2016

கடற்கரை.


K.K.S (kankesanthurai) என சுருக்கமாக அழைக்கப்படும் காங்கேசன்துறை யாழ்ப்பாண மாவட்டத்தில் மிக பிரபல்யமான ஊர். கடற்கரை ஊர். இலங்கையின் பெரிய சீமெந்து(Cement) பாக்டரி இருந்த இடம். கொழும்பில் இருந்து புறப்படும் ரெயின் கடைசியாக நிற்பதும், முதலில் புறப்படுவதுமான ஸ்டேசன் இருக்கும் ஊர். வடபகுதிக்கான பெரிய துறைமுகம்  உள்ள ஊர். இதன் அருகில் இருக்கும் ஊர்கள் பலாலி, கீரிமலை. பலாலியில்தான் வடபகுதிக்கான விமான நிலையம் இருக்கின்றது.

மிக நீண்ட காலமாக போகமுடியாமல், கடுமையான இராணுவ கட்டுப்பாட்டுடன் இருந்த ஊர். இங்கு இருந்த சீமெந்து பாக்டரியை பார்க்க  பாடசாலையிலிருந்து சின்ன வகுப்பில் அழைத்துச்சென்றார்கள். அப்படி சென்றதுதான். அதன்பின் போகமுடியாதபடி சூழ்நிலை அமைந்துவிட்டது.


கடந்த வருடம் ஊருக்கு சென்றபொழுது, நீண்ட காலத்துக்குபின் கே.கே.எஸ் க்கு போக சந்தர்ப்பம் கிடைத்தது.  அங்கு இப்போ நிறைய சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.







                               



                                     அடம்பன் கொடி
 

போகும்வழியில் மாவிட்டபுரம் எனும் ஊர் கழிந்து ஓர் இடத்தில் செல்லும் வாகனங்களை மட்டும் இராணுவத்தினரிடம் பதிந்துவிட்டு செல்லவேண்டும். அதிலிருந்து கே.கே.எஸ் கடற்கரை செல்லும் வரை பாதை இருமருங்கும் இராணுவத்தினர்தான் இருக்கிறார்கள். ஆனாலும் செல்லமுடிகிறது.

இங்கு இருந்த சீமெந்து பாக்டரி இலங்கையில் மிகப்பெரிய பாக்டரி. அது இப்போ இருக்கும் நிலையை பார்த்தால் கண்களில் கண்ணீர் தழும்புகிறது. எத்தனைபேருக்கு வாழ்வளித்த தொழிற்சாலை. இப்போ அது வாழ்விழந்து நிற்கின்றது.
என்னதான் அங்கு செல்ல கிடைத்தாலும்,  எனக்குள் ஏதோ இனம்புரியாத வேதனை ஏற்பட்டது உண்மை. சந்தோஷம், மகிழ்ச்சி இல்லை. அது திரும்ப கிடைக்கப்போவதுமில்லை.
******************************************************
     
                    

26 comments:

  1. உண்மைதான் சகோ இழந்ததை மீண்டும் கிடைக்காது என்பது உறுதியாக தெரியும் பொழுது அதன் வலி கொடுமையானதே...

    ReplyDelete
    Replies
    1. அங்கு சென்றதும் மனதில் ஏற்பட்ட வலி. கடந்து சென்ற காலங்கள். நினைக்காமலிருக்க முடியவில்லை.அதுவும் அந்த பாக்டரி. எத்தனை பேர் வேலை செய்த இடம். அதிக வருவாய் கிடைத்த தொழிற்சாலை. உங்க கருத்துக்கு நன்றி.

      Delete
  2. படங்கள் எல்லாம் சூப்பர்ப் ப்ரியா !1
    எவ்வளவு அழகான இடம் ..இதை பார்த்திட்டிருக்கும்போது மகள் லேட்டா அம்மா எந்த இடம் இஸ் இட் இந்தியா ? என்றாள் நான் சொன்னேன் இல்லை இது ஸ்ரீலங்கா ..மகளுக்கு போகனுமாம அந்த பீச்சுக்கு !
    ஏனென்றால் மெரினா பீச் ரொம்ப கூட்டம் அவளுக்கு அவ்ளோ பிடிக்கலை :)

    ReplyDelete
    Replies
    1. மகள் //லேட்டா ////
      மகள் கேட்டா

      Delete
    2. உண்மையில் அழகான இடம் அஞ்சு. நான் அங்கு போயிருந்த போது பார்த்து ஆச்சர்யபட்டேன். அழகா இருந்தது. இப்பொழுது நிறையபேர் செல்கிறார்கள். அழகான இடம்,அமைதியான கடல்,ஆரவாரமில்லா அலை. அந்த ஊரும்,கடலும் நிறைய சோகங்களை புதைத்ததினாலோ என்னவோ...!!
      நல்ல அழகா பராமரித்து இருக்கிறாங்க. டூரிஸ்ட் நிறைய பேர் வருகிறார்கள்.
      ஆஹா அப்போ ஒருதரம் போய்விட்டு வரவேண்டியதுதான் மகளுக்காக..!! ம்..எனக்கும் உண்மையிலே மெரீனா பீச் பிடிக்கலதான் அஞ்சு.
      ரெம்ப நன்றி அஞ்சு உங்க கருத்துக்களுக்கு.

      Delete
  3. ஆமாம் ப்ரியா :( அங்கு வாழ்ந்தவர்களுக்கே அந்த வலியும்
    வேதனையும் தெரியும் ..படத்தில் பார்க்கும் எனக்கே கஷ்டமா இருக்கு ..

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அஞ்சு. அந்த வலியும் வேதனையும் அந்த ஊர்ல கால் வைத்ததுமே உணர்ந்தேன் அஞ்சு. மனதை விட்டகலாத நினைவுகள். ரெம்ப நன்றி அஞ்சு.

      Delete
  4. படங்கள் ரொம்ப அழகு அக்கா.. வார்த்தையில்லை சொல்ல.

    ReplyDelete
  5. காங்கேசன் துறைமுகம் ! கேள்விப்பட்ட பெயராதான் இருக்கு.

    என்ன ப்ரியா ?? அலை, ஆரவாரம் என எதுவுமில்லாமல் ரொம்ப அமைதியான கடலா இருக்கே !

    ஆமாம், அந்நாளில் அப்போது உங்களுடன் இவ்விடம் வந்த உறவுகளின் நினைவும் வரும்போது ஒரு வெறுமைதான் வரும். பார்க்கும் எனக்குமே ஏதோ ஒன்று அங்கே இல்லாததுபோல்தான் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. கேள்விப்பட்டிருக்கீங்களா? இருக்கலாம் சித்ரா.ஏனெனில் பிரபல்யமான இடம்.காரணம் Port. ஆமாம் அலைகள் எதுவுமில்லாமல்தான் அப்போ இருந்தது. எப்பவும் இப்படியிருக்குமென சொல்லமுடியாது.
      அங்கு நிறைய சோகங்களே எஞ்சியிருக்கு..
      நன்றி சித்ரா.

      Delete
  6. இலங்கையில் தமிழர் வாழும் ஒவ்வொரு இடமும் வாழ்ந்த ஒவ்வொரு இடமும் இனம் புரியா ஒரு சோகத்தை கொண்டு வருகிறது என்பது சரி தான்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஐயா. ரெம்பவே சரியா சொல்லியிருக்கீங்க. யாருமே மறக்கமாட்டாங்க.எல்லார் மனதிலும் வாழ்நாள் வரைக்கும் இருந்துகொண்டிருக்கும் சோகங்கள்.
      ரெம்ப நன்றி ஐயா உங்க வருகைக்கும்,கருத்துக்கும்.

      Delete
  7. அழகான இடம். அதன் பின்னால் ஒரு சோகம்.. இரண்டும் கலந்த உங்கள் மனத்தின் ஆதங்கம் புரிகிறது ப்ரியா.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கீதா. பிரச்சனை என்று ஒன்று இல்லாமலிருந்திருந்தா இன்னும் நன்றாக இருந்திருக்கும். ம்..என்ன செய்வது. ரெம்ப நன்றி கீதா வருகை தந்து கருத்தளித்தமைக்கு.

      Delete
  8. படங்கள் மிக அழகு பிரியசகி.

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றி அக்கா.!

      Delete
  9. அழகான கடற்கரை..படங்களும் நல்லா இருக்கு.
    உங்க மனதில் உறைந்த சோகம் எழுத்துக்களின் வழியாக எங்கள் இதயத்திலும் ஏறிவிட்டது! :(

    ReplyDelete
    Replies
    1. நான் இன்னும் ஒரு சில வரிகள் அங்கே கண்ட காட்சியை எழுதிட்டு டெலீட் செய்தாச்சு மகி. அது இன்னமும் சோகமாக்கிவிட்டிருக்கும் எல்லோரையும். நல்லகாலம்.
      உண்மையில் அழகான இடம். படங்கள்தான் நான் மொபைலிலும்,கமாராவிலுமா எடுத்ததை பகிர்ந்தேன். நல்லா இன்னும் வந்திருக்கலாம்..!
      ரெம்ப நன்றி மகி.

      Delete
  10. அழகான இடம் ...ஆனாலும் வலிகள் நிறைந்த இடம் ..

    ReplyDelete
  11. படங்களையும் பெயர்களையும் பார்க்க நெஞ்சுக்குள் என்னமோ செய்யுது, நான் இதுவரை அங்கு போனதில்லை, போகக் கிடைக்கவில்லை நாட்டுப் பிரச்சனையால்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அதிரா.சந்தோஷமா இருக்கு உங்களை பார்க்க.
      உண்மைதான் அதிரா. இப்ப போனதும் எனக்குள் என்னவோ மாதிரியிருந்தது. ஆனால் நிறைய பேர் செல்கிறார்கள்.
      மிக்க நன்றி அதிரா.

      Delete
  12. நான் ஒரு நாளும் அங்க போனதில்லை.

    கந்தளாய் சீனித் தொழிற்சாலை இப்பிடித்தான் திடீரென்று இயக்கம் நின்று போச்சு.
    நான் கூட மிஸ் பண்ணுறது... எங்கட ஊரில கண்ணாடித் தொழிற்சாலை ஒன்று இருந்தது. சின்னனில கன தரம் போயிருக்கிறன். கண்ணாடி செய்யுறது மஜிக் மாதிரி இருக்கும் எனக்கு. அதிலயும் blown glass செய்யுற விதம் பார்க்க விருப்பம். என்ட சின்னாக்களுக்கு இது ஒன்றுமே தெரியாது. ;(

    ReplyDelete

 
Copyright பிரியசகி