RSS

02/06/2015

அசத்தலாமே சமையலில்....3


நட்புகளின் சமையல் குறிப்பினை செய்துபார்த்து ருசித்ததை இங்கே பகிர்கின்றேன்.

இது சித்ராசுந்தரின் கைப்பக்குவம்
                                   பீர்க்கங்காய் துவையல்..
சாதத்திற்கு பருப்புத்துவையல், பீர்க்கங்காய் துவையல் இப்படி
ஏதாவது ஒன்று இருக்கனும். இத்துவையல் நன்றாக இருந்தது.  

 உமையாள் காயத்ரியின் குறிப்பிலிருந்து..........
                     வீட்டிலேயே பனீர் தயாரிக்கலாம்.
பனீர்  செய்து பார்த்திருக்கேன். சரியாகவரவில்லை. இறுக்கமாகவராமல் உதிர்த்தாற்போல் வந்தது. உமையாளின் குறிப்பின்படி பார்த்துச்செய்து நன்றாக வந்திருந்தது. பின்னர் 2,3 தடவை செய்தாயிற்று. மகனுக்கு மிக பிடித்தமான ஒன்று.
                                      பாகற்காய் பகோடா..
                                          மசால் இட்லி

                                       பீன்ஸ் பொரியல்

 மகியின் குறிப்பிலிருந்து..................
                  புழுங்கல் அரிசி with பொட்டுக்கடலை முறுக்கு
                     வெண்ணெய் முறுக்கு/ Butter Murukku
          இரண்டு விதமான முறுக்கும் செம டேஸ்ட். வித்தியாசமாகவும் இருந்தது.

சாரதா அக்காவின் குறிப்பிலிருந்து................
                                          இட்லி
     இந்த இட்லியைதான் உமையாளின் குறிப்பான மசால் இட்லி செய்திருந்தேன்.
                                   அரைத்துவிட்ட சாம்பார்.....
                       இதற்கு நான் முள்ளங்கி போட்டு சாம்பார் செய்திருந்தேன்.
                                     
                                  அவல்பாயசம்
இப்பாயசத்தில் ஜவ்வரிசி + அவல் + வெல்லம் மூன்றும் சேர்த்திருப்பது வித்தியாசமான சுவையாக இருந்தது.                                     
 *************************************************                                 
நல்ல குறிப்புகளை தந்திருக்கும்  நட்புகளுக்கு அன்பான நன்றிகள்.
*************************************************
இது நான் பயன்படுத்தும் சின்ன குறிப்பு.. Tips
வீட்டில் இப்படி டைல்ஸ் பதித்திருந்தால், இரண்டு டைல்ஸ் ஐ ஒட்டுவதற்கு ஒரு பேஸ்ட் பயன்படுத்துவார்கள். முதலில் அது நல்ல அழகாக இருக்கும். பின் நாங்கள் புழங்க அந்த இடைப்பட்ட பேஸ்ட்டில் அழுக்கு அல்லது கறுப்பாகிவிடும். அதை நீக்கமுடியும். பேக்கிங் பவுடர் Backing Powder எடுத்து ஒரு பவுலில் போட்டு கொஞ்சதண்ணீர் விட்டு கரைத்து பேஸ்ட் ஆக்கி, அதை ஒரு பிரஷினால் அந்த இடத்தில் பூசி, பிரஷ் ஆல் தேய்த்துவிட்டு பின்னர் ஒரு துணி கொண்டு துடைத்துவிட்டு மொப் செய்தால் உங்க வீட்டு டைல்ஸ் புதிதாக காட்சி தரும்.
                                     துடைக்க முன்....

                                           துடைத்தபின்.....
*******************************************************
பீர்க்கங்காய் துவையலுக்கான இணைப்பை இணைக்க முடியவில்லை.
இணையத்தளம்.:-- https://chitrasundar5.wordpress.com/2010/08/04
 *******************************************************
இந்த மெசின்தான் அழகாக புற்களை வெட்டுவது..

                              ******************************************************


 

21 comments:

  1. நீங்கள் செய்து பார்த்த குறிப்புகளின் படங்கள் அத்தனையும் அருமை. என்னுடைய இட்லி பதிவையும் நீங்கள் செய்து பார்த்த போட்டாவும் மிக அருமை. இன்று என் மனதில் ஒரே சந்தோஷம் தான். மிக்க நன்றி பிரியசகி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அக்கா!.நான் உங்க இட்லி மிக ஸாப்ட் ஆ இருந்தது. இன்னைக்கும் போட்டிருக்கேன். அவல்பாயசம், அ.வி.சாம்பார் என நன்றாக 3ம் இருந்தது. நேரம் இருக்கும்போது மற்றவைகளையும் செய்கிறேன். நன்றி அக்கா.

      Delete
  2. அசத்தி விட்டீர்கள்...பிரியசகி...பொறுமையாக செய்ததை படம் பிடித்து போட்டு இருக்கிறீர்கள். எனது குறிப்பையும் செய்து பார்த்து போட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    டைல்ஸ் குறிப்பு பயனுள்ள தகவல் சகோ. நாள் ஆக ஆக அவ்வாறு ஆகிவிடுகிறது. இனி உங்கள் செயல் முறையில் இறங்கி விட வேண்டியது தான். நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்க உமையாள்.பனீர் 2,3டைம் செய்தாச்சு. நான் சேர்த்து வைத்துபோடுவதால், கொஞ்சம் லேட்டா வருகிறது. புதிதா செய்வதால் வீட்டில் எதிர்பார்ப்பும் கூடுது. அதற்கெல்லாம் உங்க குறிப்புகள் மிகவும் உதவியாக இருக்கு.
      பொறுமையா இருந்து எல்லா டைல்ஸ் க்கும் தேய்க்கவேணும். ரெம்ப நன்றி உமையாள் வருகைக்கும் ,கருத்துக்கும்.

      Delete
  3. அருமை சகோ இதுவொரு குட்டி வலைச்சரம் போல் தொகுத்து வழங்கி இருக்கின்றீர்கள் தொடர்க.... புகைப்படங்கள் ஸூப்பர் எனது பதிவுக்கு வந்து சிரிக்க முடியுமா என்று பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. யாருடைய குறிப்பாக இருந்தாலும் செய்துபார்த்தால் படம் எடுத்து இங்கு பதிவு செய்தால் அவங்களுக்கு உற்சாகமாகவும், சந்தோஷமாக இருக்கும்தானே. அதனால் அப்படி செய்கிறேன். கண்டிப்பா வாசிக்கிறேன்.
      ரெம்ப நன்றி உங்க கருத்துக்களுக்கு.

      Delete
  4. அரைத்து விட்ட சாம்பார், அவல் பாயசம், இட்லி என மூன்று recipes செய்து பார்த்து நன்றாக இருந்த்ததாக சொல்லி இருக்கீங்க. நீங்கள் விருப்பப்பட்டால் உங்கள் போட்டோஸ் ம் என் பிளாக்கில் நீங்கள் கொடுக்கும் கருத்தோடு இணையுங்கள். மீண்டும் நன்றி பிரியசகி

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா அக்கா ,இணைக்கின்றேன். ரெம்ப நன்றிகள்.

      Delete
  5. வணக்கம்
    பார்த்தவுடன் பசி எடுத்து விட்டது.. மிக சுவையான உணவுகள். பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ. ஆமா எல்லாமே சுவையாக இருந்தது. நான் இங்கு பதிவு போடுவதற்குள் 2,3 தரம் செய்தாச்சு.
      ரெம்ப நன்றி வருகைக்கும்,கருத்துக்கும்.

      Delete
  6. ம்ம்ம் லன்ச்சுக்கு வெயிட் பன்னிட்டிருக்கிற நேரத்துல உங்க வீட்டு சமையலைப் பார்க்கவே பசி எடுக்க ஆரம்பிச்சாச்சு. கதவு தட்டும் சத்தமும் கேக்குது. போய் சாப்பிட்டுவிட்டு வரேன் ப்ரியா.

    ReplyDelete
    Replies
    1. நல்லா சாப்பிட்டு வாங்க. பசி எடுக்கனும்ன்னுதானே படம் போட்டிருக்கேன். உங்களுக்கு....ஹி.ஹி

      Delete
  7. ரெண்டாவதா இருக்குற முறுக்குல கொஞ்சம் பார்சல் பண்ணிடுங்க. பன்னீர், பாவக்கா பகோடா என எல்லாமும் களைகட்டுது. சமையலும் செய்து, இணைப்பையும் கொடுத்து ....... நன்றி ப்ரியா.

    டிப்ஸ் நல்லாருக்கு. மைக்ரோ அவன், ஃப்ரிட்ஜ் என எல்லாவற்றுக்கும் நானும் இதையேதான் செய்வேன். லான்மோவர் போடுவது கஷ்டம் என கேள்விப்பட்டிருக்கேன். ஆனாலும் அதைப் போடுபவர்களைப் பார்த்தால் கொஞ்சம் பொறாமையாக இருக்கும். எனக்கென்னமோ அது குட்டிப் பிள்ளைங்களுக்கான விளையாட்டுப் பொருள்போல தோணும்.

    ReplyDelete
    Replies
    1. பார்சல்தானே அனுப்பிட்டா போச்சு.அது உங்க ஊர் முறுக்குதான். அனுப்ப செலவு இல்லை. செய்து பார்த்துவிட்டு சிலவேளை போட்டோ எடுக்கமுடியாமல் போய்விடும். இப்ப மகன் புதிசா என கேட்டுவிட்டு, படம் எடுத்தாச்சா என கேட்டுவிடுவார்....அவ்வ்.
      நான் மைக்ரோஅவன், ஃப்ரிட்ஜ் எல்லாவற்றிக்கும் வினிகர்தான் பாவிப்பேன். அது பாவியுங்க சித்ரா. சூப்பரா இருக்கும்.இதையும் குறிப்பிடநினைத்தேன். பதிவு பெரிதா போய்ட்டுது. அடுத்த பதிவிலெழுத்த நினைத்தேன். என்னிடம் நிறைய க்ளீனர் இல்லை. எல்லாவற்றிக்கும் வினிகர்தான். கொஞ்சம் தண்ணீர் கலந்து துடைத்தால் சுத்தமாக இருக்கும். ஃப்ரிட்ஜ் சூப்பரா இருக்கும். சிலபேருக்கு மணம் பிடிப்பதில்லை.
      லான்மோவர் பார்த்தால் அப்படித்தோணும்.ஆனா ஸ்டெடியா பிடிக்கலன்னா,அவ்வளவுதான் இழுத்துக்கொண்டோடிடும். நான் ஓரேஒரு தடவைதான் பிடித்துப்பார்த்தேன். எனக்கு சரிவரல்ல. அந்தபக்கம் போறதே இல்லை. ரெம்ப நன்றி சித்ரா. சாப்பிட்டு வந்து தெம்பா கருத்து பதிவு செய்தமைக்கு...

      Delete
  8. ஆகா...! அனைவரின் தொகுப்பும்... துணைவிக்கு ரொம்பவும் சந்தோசம்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றிகள் தனபாலன் அண்ணா..!

      Delete
  9. ஆஹா ! அருமையான பகிர்வு.அசத்தலாக செய்து பரிமாறியிருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஆசியா. ரெம்ப நன்றிகள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  10. அடேயப்பா... சமையல் குறிப்புகளைக் கொண்டு மிக அழகாக செய்து அசத்திதான் இருக்கீங்க.. பாராட்டுகள் ப்ரியா. டைல்ஸ் சுத்தம் செய்ய நல்ல டிப்ஸ் சொல்லியிருக்கீங்க. மிக மிக உபயோகமாக உள்ளது. நன்றிப்பா.

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றி கீதா. அவங்களுக்கும் சந்தோஷமாக இருக்கும் அல்லவா. நன்றியறிவிப்பு அவங்களுக்கு.

      Delete
  11. சமையல் குறிப்புகள் அருமை.
    டைல்ஸ் சுத்தம் செய்ய குறிப்பு உதவியாக இருக்கும்.

    ReplyDelete

 
Copyright பிரியசகி