RSS

15/05/2015

பூப்பூவா பூத்திருக்கு.......

வசந்த காலம் வந்து, (அது வந்து மாதம் 2ஆகுதே என நினைபவர்களுக்கு பதில் கடேஏஏசியில்) மரத்தில் இலைகள் துளிர்விட,  நானும் இனி பூச்செடிகள் புதிதா வாங்கி வைக்கலாமே என எண்ணினேன்.!!!
ஒருநாள் காலையில் மார்க்கெட் போய் இந்த பூச்செடிகளை 
                                  எல்லாம்
                             ஒவ்வொன்றாக
                                   
                  பார்த்து வாங்கிக்கொண்டு


வந்து வளர்க்க ஆசைதான்.ஆனால் எல்லா வகை பூச்செடிகளும் வாங்க அனுமதியில்லை. வாங்கினாலும் அவைகளை தொட்டியில்தான் வைக்கவேணும். என் கணவருக்கு தோட்டத்தில் புல் வளர்த்து, அதை வெட்டவேணும். இங்கு அதிகமானோர்  காணியிருந்தா புல் வளர்த்து வெட்டுவது ஒரு பொழுதுபோக்கு. அதுவும் ஒரு அழகுதான். பாருங்க வெட்டினபின் (நேற்று வெட்டியபின் எடுத்தது) தோட்டம் எவ்வளவு அழகாயிருக்கு. பறவைகளும் வருவாங்க.
ஒரு சில பூச்செடிகள் மட்டுமே வாங்கி வைச்சிருக்கேன்.  விரும்பிய செடிகளை படம் மட்டுமே எடுத்து வந்தேன்.
      **  **  **  **  **  **  **  **  **  **  **  **  **  **  **
இந்த ஆர்க்கிட்  பூக்கள் ஏற்கனவே என் வீட்டில் இருப்பவை.  
இவைகளை பராமரிப்பது சுலபம். அதிகம் மெனக்கெட
தேவையில்லை. சரியான முறையில் பராமரித்தால் பூக்கள் நிறையப்பூக்கும்.
   இவை என் வீட்டு வாசமில்லா மலர்கள் (காகிதப்பூக்கள்.)


**  **  **  **  **  **  **  **  **  **  **  **  **  **  **  **  **  **
இங்கு ஏப்ரல் மாதம் இரவில் குளிர். அடுத்து அடைமழை. காலநிலை சரியில்லாததால் சில செடிகள்,மரங்கள் பட்டுவிட்டது வேறு. மே மாதம் ஆரம்பித்தபின்பு தான் மரங்களில் இலைகள், பூக்கள் பார்க்க அழகாக இருக்கு. இப்போ இந்த வாரம் நல்ல காலநிலை. ஆனாலும் அப்பவே பூச்செடிகளை வாங்கி வந்து, வீட்டினுள் வைத்து பாதுகாத்து, இப்போ வெளியில் வைத்தாயிற்று. ஆனா இவையல்ல. வேறு செடிகள்.....!!!!
                                                                         

25 comments:

 1. ஆஹா பூக்கள் அனைத்தும் அழகு பூக்களை ரசிப்பதற்க்கும், வளர்ப்பதற்க்கும் அழகிய மனம் வேண்டும் என்று சொல்வார்கள் பெரியோர்கள் வாழ்த்துகள் சகோ.

  ReplyDelete
  Replies
  1. எனக்கு ரெம்ப பிடித்தமானதொன்று. ஓரளவு வாங்கி வளர்த்து வருகிறேன். திடீரென காலநிலை மாறுவதால் தான் பிரச்சனை. ஊரில் விரும்பியளவு வளர்த்திருக்கேன். ரெம்ப நன்றிகள் சகோ.

   Delete
 2. ஒருநாள் காலையில் மார்க்கெட் போய் இந்த பூச்செடிகளை வந்து வளர்க்க ஆசைதான்.ஆனால் எல்லா வகை பூச்செடிகளும் வாங்க அனுமதியில்லை.//

  ஆஹா....

  பாருங்க வெட்டினபின் (நேற்று வெட்டியபின் எடுத்தது) தோட்டம் எவ்வளவு அழகாயிருக்கு. பறவைகளும் வருவாங்க.//

  மிக அழகா இருக்கிறது உங்கள் தோட்டம். நன்றாக பராமரிக்கிறீர்கள்...

  பூக்கள் புகைப்படம் அழகோ அழகு...

  இந்த ஆர்க்கிட் பூக்கள் ஏற்கனவே என் வீட்டில் இருப்பவை.
  இவைகளை பராமரிப்பது சுலபம். அதிகம் மெனக்கெட
  தேவையில்லை. சரியான முறையில் பராமரித்தால் பூக்கள் நிறையப்பூக்கும்//

  நல்ல விபரம் கொடுத்து இருக்கிறீர்கள்......

  பூக்கள் என்றால் எவ்வளவு பிரியம் இல்லையா...எனக்கும் அப்படித்தான் பூக்களும் தோட்டமும்....சந்தோஷமான நிம்மதி...நன்றி சகோ.

  ReplyDelete
  Replies
  1. கடைசியில் சொல்லியிருக்கிறீங்க உமையாள் 100% உண்மை. ஆர்க்கிட் சுலபம் உண்மையில் நீண்டநாட்கள் பூக்கள் அப்படியே இருக்கும். நெட் ல் நிறைய டிப்ஸ் இருக்கு. விதவிதமான பூக்கள். கொஞ்சம் விலைதான் இங்கு. மலிவுவிலையில் போடும்போது வாங்கிடுவேன்.
   நல்லதொரு ரிலாக்ஸ் கார்டினிங். நாங்க மாலையில் terrace வில் இருந்தால் மனம் சொல்லமுடியாத மகிழ்ச்சியாகவிருக்கும். ரெம்ப நன்றி உமையாள் பாராட்டுக்கும் கருத்துக்கும்.

   Delete
 3. பூச்செடிகள் மிக அழகு. எனக்கும் பூசெடிகள் மிகவும் பிடிக்கும். சில பூசெடிகள் எனக்கு சரியாக வராது. செம்பருத்தி பூசெடி இரண்டு இருக்கு. இன்னொன்று வாங்கி போன ஆண்டு வைத்தேன். முதலில் வரவே இல்லை. பிறகு தீடிரென்று இரண்டு பூக்கள் பூத்தது. சந்தோஷத்தில் அதையே எங்கள் வீட்டு தோட்டத்தில் செம்பருத்திப்பூ என்ற பதிவு கொடுத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. என்னிடம் ஒழுங்காக இருப்பது இந்த செம்பருத்திதான். சம்மர் டைமில் வெளியிலும்,விண்டரில் உள்ளேயுமாக வைத்து பராமரித்து வருகிறேன். ஊரில் அடுக்கில், தனித்தனி இதழ்களில் என 5 வகை இருந்தது. இப்போவும் இருக்கு. இங்கு கொண்டுவந்தேன்.ஆனா வரவில்லை. உங்க பதிவை பார்க்கிறேன் அக்கா. உங்க கருத்துக்களுக்கு ரெம்ப நன்றி.

   Delete
 4. தோட்டமும் பூக்களும் அழகோ அழகு. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. அங்கிருந்த பூக்கள் எல்லாமே அழகு. அதனால் போட்டோ மட்டும் எடுத்து வந்தேன். ரெம்ப நன்றிகள் அண்ணா.

   Delete
 5. lawn moving - உங்க கணவருக்குப் பொழுதுபோக்கா? :) இங்கே பலருக்கு அது ஒரு பெரிய வேலை ப்ரியா! எல்லாரும் வீடு வாங்கிய உடனே பிரியமா சிலநாட்கள் செய்வாங்க, பிறகு அலுத்துப்போயி தோட்ட வேலைகளுக்கு ஆள் போட்டுடறாங்க. ;) புல் வெட்டும் மெஷினில் ஆட்கள் புல் வெட்டுவதைப் பார்க்க எனக்கும் பிடிக்கும்.

  //ஆர்க்கிட் பூக்கள் ஏற்கனவே என் வீட்டில் இருப்பவை.
  இவைகளை பராமரிப்பது சுலபம். அதிகம் மெனக்கெட
  தேவையில்லை. சரியான முறையில் பராமரித்தால் பூக்கள் நிறையப்பூக்கும்.// நிஜமாவா?? எப்படி பராமரிப்பு என்பது பற்றி (நேரமிருந்தால்) ஒரு பதிவு போடுங்களேன். இந்தப் பூக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், சில சிநேகிதிகள் வீட்டில வாங்கி வைச்சிருக்காங்க..அதுக்கு பார்க் வாங்குவதும், உரம் வாங்குவதுமா ஏகப்பட்ட டாலர்கள் செலவும் செய்வாங்க, வெயில்ல வைக்கிறேன், நிழல்ல வைக்கிறேன் என்று இடமாற்றம் வேறு செய்வாங்க.. ஆனால் கடையில் இருந்து வாங்கிவரும்போது இருக்கும் பூக்களுக்குப் பிறகு மறுபடி அவை பூ பூப்பதை நான் பார்த்ததே இல்லை.
  அதனால் கடையில் அவற்றை ரசிப்பதோடு சரி..ஹிஹி..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் மகி. அவருக்கு மட்டுமல்ல இங்கு பக்கத்தில் இருப்பவங்க எல்லாருமே இதை அலுத்து சலித்து செய்யமாட்டாங்க. மிக ஆர்வமும்,விருப்பமும் கொண்டேதான் செய்வாங்க. பக்கத்து வீட்டில் பெண்மணிதான் புல் வெட்டுவார். எனக்கு இதனால்தான் பூசெடிகள் வைக்க அனுமதியில்லை. இங்கு ஒருவர் வீட்டில் புல் வெட்டினால், அடுத்தடுத்து புல் வெட்டும் மெசின் சத்தம் கேட்கும். தொற்றுவியாதிமாதிரி.ஒரே புல் வாசனைதான். இங்கு இது மனசந்தோஷம் எனச்சொல்வார்கள்.

   Delete
  2. ஆர்க்கிட் செடி இங்கு easy to clean எனச்சொல்வாங்க. வீட்டின் உள்ளே ஜன்னல் பக்கமா வைத்திருப்பாங்க மகி.
   இங்கு மார்கெட்டிலேயே சொல்லித்தருவாங்க. நீங்க இதற்கு மண் போடக்கூடாது. ஆர்க்கிட் கான உரம்,மற்றும் மிக்ஸ் உண்மையில் விலைதான். இது ரிச் & பிரஸ்டீஜ் செடியாகும். நான் பதிவு போட முயற்சிக்கிறேன் மகி.படத்தில் இருப்பது 3வருடமாக இருக்கு. எல்லாப்பூக்களும் உதிர்ந்தபின் 1 மாதத்தின் பின் புதிதாக தண்டு வைத்து பூக்கள் பூக்கும்.எனக்கு இப்படித்தான் இம்மரம் பூக்கின்றது.

   Delete
 6. எல்லாப் படங்களும் அழகு! காலைல எழுந்ததும் நிதானமா பார்த்து கமெண்ட்டும் போட முடிந்தது சந்தோஷம்..தேங்க்ஸ் டு "வீல்ஸ் ஆன் த பஸ்...!!" ;) :)

  ReplyDelete
  Replies
  1. வந்து கருத்துச்சொல்ல உங்களுக்கு நேரமிருந்ததையிட்டு
   ரெம்ப மகிழ்ச்சியும்,நன்றிகளும் மகி.

   Delete
 7. கதையில ட்விஸ்ட் வச்சி பார்த்திருக்கேன், ஆனால் இப்படி பூச் செடியில்கூட ட்விஸ்ட் வச்சது ப்ரியாவாதான் இருக்கும். முதலில் ஏமாற்றம், பிறகு சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

  புல்தரை சூப்பர், அழகா இருக்கு. ப்ரியா வீட்டு காகிதப் பூக்களும் அழகா இருக்கு. இப்போதைக்கு பூ இல்லாட்டியும் பரவால்ல, அந்த வேறு செடிகளையாவது சீக்கிரம் கண்ணுல காட்டுங்க.

  ReplyDelete
  Replies
  1. இதெல்லாம் உங்களோட எபெக்ட்தான். ட்விஸ்ட் ஐ சொன்னேன்.
   அங்கிருக்கும் பூச்செடிகளை பார்த்திட்டு வரவே மனமில்லை. எல்லாமே அழகா இருந்தது.
   எனக்கென்னவோ எங்க வீட்டில குறைவாகதான் செடிகள் இருக்கு. பக்கத்துவீட்டில் எல்லாம் நிறைய செடிகள். இதுவே போதும் என விட்டாச்சு. ஹொலிடேக்கு எங்காவது போவதென்றால்தான் கஷ்டம்.
   கண்டிப்பா காட்டுகிறேன். வருகைக்கும்,கருத்துக்களுக்கும் ரெம்ப நன்றிகள் சித்ரா.

   Delete
 8. Replies
  1. ரெம்ப நன்றிகள் அண்ணா.

   Delete
 9. உங்கள் வீட்டுத்தோட்டம் எத்தனை பசுமையாக அழகாக இருக்கிறது பிரியசகி! அனைத்து பூக்களும் கொள்ளை அழகு!

  ReplyDelete
  Replies
  1. வந்து ரசித்தமைக்கு ரெம்ப நன்றிகள் அக்கா.

   Delete
 10. பூக்கள் அழகு :) எனக்கு wild flowers ,, patch போல போட ஆசை .போட்டு வச்சி இருக்கு .அப்போதான் பட்டாம்பூச்சி வரும் ..வீட்டு உள்ள செடி வளர்த்தேன் அடிக்கடி வேர் தெரியும் ..ஜெஸி தோண்டரா :) எங்க வீட்டுக்கு நிறைய பறவைங்க அணில் எல்லாம் வராங்க ..

  ReplyDelete
  Replies
  1. பட்டாம்பூச்சி, சிட்டு,காகம், பெயர்தெரியாத பறவைகள் எல்லாம் வருகிறார்கள். இப்ப கொஞ்சம் பொழுது போகுது இவர்களால்.
   உங்க வீட்டுக்கும் வாராங்களா!! நல்லது அஞ்சு. நாட்டி ஜெஸி!!
   ரெம்ப நன்றி அஞ்சு.

   Delete
 11. அடிக்கடி வலைப்பக்கம் வராமல் இருப்பதால் அம்முவின் அழகிய மலர்களை தவற விட்டுவிட்டேன் பொருத்தருள வேண்டுகிறேன் அம்மு

  வாங்கிய மலர்களை விரைவில் படத்தில் காட்டுங்க நன்றி
  வாழ்க வளமுடன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க சீராலன் அவை சீக்கிரம் பதிவில் இடம்பெறும். நன்றி வருகைக்கும்,கருத்துக்கும்.

   Delete
 12. பூந்தோட்டம் ஒருவித அழகு என்றால் புல்தரை இன்னொரு வித அழகு. உங்க வீட்டுப் புல்தரை பார்த்தால் படுத்து உருளலாம் போல அவ்வளவு அழகாகவும் ஆசை தூண்டும் விதமாகவும் இருக்கு. புல்தரையை மிக அழகாகப் பேணும் உங்க கணவருக்குப் பாராட்டுகள் ப்ரியா. விரைவில் பூச்செடிகளைப் படமெடுத்துப் போடுங்க. ரசிக்கக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. கீதா நலம்தானே. கண்டிப்பாக நிறைய இல்லை. ஆனாலும் பதிவில் போடுகிறேன். வந்து ரசித்து பாராட்டியமைக்கு நன்றி கீதா.

   Delete

 
Copyright பிரியசகி