RSS

27/02/2014

வருமா???வராதா!!!

மார்கழியில் வந்ததோடு சரி. இனிமேலும் வரக்கூடும் என்றோர் மனமும், வராது என்றொரு மனமும் முரண்படுகின்றன. ஆனாலும் மாற்றங்கள் மாறத்தான் செய்கின்றன.

இப்படி இருந்ததை............
  இப்படியாக சில வேலை செய்து ................
  மாற்றியமைத்த பின் .........
 2013 டிசம்பரில் வந்தபோது ...........
ஸ்னோ கொட்டும்போது வாசலில் எக்ஸ்ராவா கூரையிலிருந்தும்   விழுவதால், ((இங்கு ஓடுகளில் ஸ்னோ தங்காமல் இருப்பதற்கு, வழுக்கும் தன்மையாக  ஓடுகள் செய்யப்பட்டிருக்கும். ஸ்னோ மேலே இருந்தால் கூரை உடைந்துவிடும் அபாயம் இருக்கு.))கராஜிலிருந்து காரை அதிகாலையில் எடுப்பது சிரமமாக இருக்கும். அதனால் கடந்த வருடம் நவம்பரில் வீட்டின் முன்னால் சின்னதாக  கூரை ஒன்று  போட்டோம்.இல்லாவிட்டால் நிறைய அள்ளிக்கொட்டவேண்டும்.நடைபாதை கண்டிப்பாக துப்பரவு செய்யவேண்டும்.யாராவது போகும்போது வழுக்கி விழுந்தால் நாம்தான் பணம் கட்டவேண்டும் . நாமும் இதற்கு விதிவிலக்கல்ல.விழுவதற்கு. இது போட்டதற்காக ஒரே ஒருதரம்(டிசம்பரில்) கொட்டியதோடு சரி. இவ்வருடம் இன்னமும் கொட்டவில்லை.!!!??? ஆனாலும் குளிர் குறையவேயில்லை 
 
************************************************************ 
வருமா வராதா
வரும் ஆனா வராது 
வந்தால் கஷ்டம்
வராவிட்டால் சந்தோஷம்
வந்திட்டால் வாடிவிடும்   
வராவிட்டால் பூத்திடும்..
இங்கு வெயிலைக்கண்டவுடன் மரங்கள் சில இலைகள் வைத்து மொட்டுடன் பூக்க ஆயத்தமாகின்றன. அவைகளை ஒவ்வொரு நாளும் பார்ப்பது வேலையாகிவிட்டது. 
அவைகளை பார்க்கும்போது இவ்வரிகள் மனதில் எழுந்தது. 
இன்னும் குளிர் காலம் முடியவில்லை.
***********************************************************



          
         

 

20 comments:

  1. படங்கள் பார்த்தாலே குளிருகிறது...

    எப்படித்தான் சமாளிக்கிறீர்களோ...?

    ReplyDelete
    Replies
    1. குளிர்கால உடைகளால்தான் குளிரை சமாளிக்கின்றோம். வெயில் எறிக்கிறதே என்று சாதாரணமாக செல்ல முடியாது இந்நேரம். வந்து கருத்திட்டமைக்கு நன்றிகள் சகோ.

      Delete
  2. ஆஹா! சூப்பர் போஸ்ட் & படங்கள் அம்முலு.
    நான் அங்க வரட்டா??

    ReplyDelete
    Replies
    1. எப்பவாறீங்க?.பக்கமாவந்தும் வரவேயில்லை.
      மிக்கநன்றி இமா.

      Delete
  3. அம்முலு, இதை எல்லாம் பார்க்கும் பொழுது உங்க இடத்திற்கே வந்த , மாதிரி ஃபீலிங்.பகிர்வுக்கு மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி & நன்றிகள் ஆசியா.

      Delete
  4. பனி விழும் மலர் வனம்..அழகு..பார்வைக்கு..!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அக்கா.

      Delete
  5. பார்க்க அட்டகாசமா இருக்கு ஆன தாங்க முடியதில்ல குளிர் ?!

    ReplyDelete
    Replies
    1. சிலவேளைகளில் தான். ஆனா பழகிவிட்டது. பார்க்க அழகா இருக்கும். நன்றி மைதிலி.

      Delete
  6. கவலையுடன் கூடிய அழகான பதிவு. பாராட்டுக்கள் அம்முலு.

    அந்தக்குளிரைக் கொஞ்சம் இங்கு திருச்சிக்கு அனுப்புங்கோ.

    அதற்குள்ளேயே இங்கு வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது.

    ஏப்ரல் மே யிலே பசுமையே இல்லை என்ற பாட்டை இப்போதே பாட வேண்டியதாக உள்ளது ;)))))

    அன்புடன் கோபு அண்ணா

    ReplyDelete
    Replies
    1. அனுப்ப முடிந்தால் அனுப்புகிறேன். மிக்க நன்றி அண்ணா.

      Delete
  7. Feeling cold by seeing the pictures ammu! :) snow and winter is always nice to watch! ;)

    ReplyDelete
    Replies
    1. Watching is nice.But experience is very nice. Thanks Mahi.

      Delete
  8. Btw, your house looks beautiful ammulu!:) forgot to say this in my previous comment.

    ReplyDelete
  9. அழகிய இல்லம் அடக்கியாளும் குளிர்

    அருமை கவிதை உட்பட

    இனிய வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  10. சகோதரிக்கு வணக்கம்
    அழகான இல்லம் ஆனாலும் குளிர் தான் பயமுறுத்துகிறதோ! நாங்க எல்லாம் படங்களில் தான் பனிமலையைப் பார்த்துக்கொள்கிறோம். சீதோசன நிலை உங்களுக்கு பழகியிருக்கும் இருந்தாலும் உங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நலன் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லத் தோன்றுகிறது. பகிர்வுக்கு நன்றி சகோதரி.
    ----------
    வந்தால் கஷ்டம்
    வராவிட்டால் சந்தோஷம்
    வந்திட்டால் வாடிவிடும்
    வராவிட்டால் பூத்திடும்...
    மிக அழகாக உண்மையான எதார்த்தத்தைப் பதிந்துள்ளீர்கள். வாழ்த்துகள்!

    ReplyDelete
  11. பனியை பார்க்கும் போது அழகாக இருக்கிறது. ஆனால் குளிர் அம்மாடியோவ்...! புகைப்படங்கள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. குளிர் எல்லாம் பழகிவிட்டது. அழகு.ரெம்ப நன்றி.

      Delete

 
Copyright பிரியசகி