RSS

12/12/2014

க்றிஸ்மஸ் சந்தை Chirstmas Market

க்றிஸ்மஸ் வருகிறது என்றால் ஜேர்மனியில் எங்க ஊர் தீபாவளி மாதிரி ஒரு மாதத்திற்கு முன்னரே களைகட்டத்தொடங்கிவிடும். September மாதக்கடைசியில் சுப்பர் மார்க்கெட்டில் க்றிஸ்மஸ்க்கான சொக்லேட்ஸ், அலங்காரப்பொருட்கள், கேக் செய்வதற்கான பொருட்கள், உபகரணங்கள் வந்துவிட்டன. இங்கு அதைவிட  க்றிஸ்மஸ்சந்தை மிகவும் பிரபல்யம் வாய்ந்தது. வாரயிறுதி நாளில் நகரம் ஒன்றில் க்றிஸ்மஸ் சந்தை நடைபெற்றது. அங்கு சென்றபோது எடுத்த படங்கள்..
இதுதான் எங்க மாநிலத்தில் பொது இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் உயர்ந்த க்றிஸ்மஸ் மரம். 42 அடி. இங்கு ஆரம்பித்த அன்றே சென்றபடியால் நிறைய அலங்காரங்கள் முடிக்கப்படவில்லை.

ஆனால் அலங்காரங்கள் முடிவுற்று லைட்ஸ் போட்டபின்னால் இப்படி!!!
                                    Danke-Thomas Winkler.
சிறுவர்களுக்கும் க்றிஸ்மஸ் சந்தை  மிக பிடிக்கும். நிறைய  பொழுது போக்கின்ற விடயங்கள்  இருக்கும்.
   நட்ஸ் வகைகள். (rosted)Almond, Walnut, Hazelnut, Macadamia
          பலவித வண்ணமயமான வடிவங்களில் மெழுகுதிரிகள்.
          இது கூட (பீர்,வைன் வடிவிலான) மெழுகுதிரிதான்.
                                    உருவ பொம்மைகள்.
                        மரத்தாலான கைவேலைப்பாடுகள்.
                                    Coconut with Chocolate
குளிர்காலமெனில் விற்றமின் சி தேவை. அதற்கேற்ப நிறைய Orange இப்போ கிடைக்கிறது. அத்துடன் பேரீச்சை.
                                      *************
ஜேர்மனியில் க்றிஸ்மஸ் சந்தையில் இந்த சூடாக்கப்பட்ட வைன்(Mulled wine) மிக பிரபல்யம். டொச்சில் க்ளூவைன்(Glüh wein) எனச்சொல்வார்கள். இது இல்லாமல் க்றிஸ்மஸ் சந்தை இருக்காது. இதில் Alcohol சேர்ந்ததும், சேராததும் இருக்கு.
Glühwein is usually prepared from red wine, heated and spiced with cinnamon sticks, cloves, star aniseed, citrus, sugar and at times vanilla pods.இது பற்றி இங்கு                               
                                    உணவகங்கள்
                                  இது என்ன????
Pretzel(க்ளிக்).இது பேக் செய்யப்பட்ட உப்பு சுவைமிக்க ஒருவகை Bread
  இது யாருக்கோ மிக விருப்பமாம். பூனைக்கா,??தேவதைக்கா(இப்ப மீனில்லை!!!!)
 - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 
இச்சந்தையின் சிறப்பு என்னவென்றால், தாங்களே தயாரித்த
பொருட்களை விற்பதுதான். கைவேலைப்பொருட்கள், மெழுகுதிரி,  குளிர்கால பாதுகாப்பு பொருட்கள்(ஸ்வெட்டர், மப்ளர்)என ஒருவருடகால உழைப்பு இதில் இருக்கும். ஒரு சிலர் தவிர்க்கமுடியாமல் வாங்கியதை விற்பார்கள். ஆனால் அதில் சிறியதாக குறிப்பிட்டிருப்பார்கள்.

அதற்கான விடை:_ சொக்லேட்டில் செய்யப்பட்ட Spanner
              *****************************************
கார்த்திகை பிறை பார்ப்பது அபூர்வம். ஊரிலேயே பார்க்கமுடிவதில்லை. மழைக்காலம். பார்க்கமுடியாது என்பதை விட கஷ்டம். இங்கு சொல்லவேவேண்டாம். ஆனா இம்முறை எங்களுக்கு பார்க்க கிடைத்தது. வானம் மிகத்தெளிவாக இருந்து பிறையும் அழகாக, மெல்லிய கீறாகத்தான் தெரிந்தது. ஆனா கமராவில் எடுத்தபின் இப்படி!!!!!ஆ..க..
-------------------------------------------------------------------------      43 comments:

 1. அழகிய படங்கள்! விரிவான சுவாரஸ்யமான தகவல்கள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ரெம்ப நன்றி சகோ.

   Delete
 2. christmas சில் தொடங்கிகிருத்திகைக்கு முடித்திருகிறீர்கள்!! கண்கள் கொள்ளை போகுதே!!

  ReplyDelete
  Replies
  1. ரெம்ப நன்றி தோழி..

   Delete
 3. நத்தார் சந்தை அருமை!..
  விதவிதமாகப் பொருட்கள் வேடிக்கை விநோதமென
  அசத்தல் படங்கள்!

  கார்த்திகைப் பிறையையும் (கண்டு) பிடிச்சிட்டீங்கள்..:)
  கெட்டிக்காரிதான்! ம். ம்...:)
  உயரமான பகுதியில் நீங்கள் இருப்பதால் இத்தனை
  அழகாகக் காணக் கிடைத்து கிளிக் பண்ணியிருக்கின்றீங்கள்..:)

  அத்தனையும் அருமை! வாழ்த்துக்கள் பிரியசகி!

  ReplyDelete
  Replies
  1. நிறைய படங்களோ என யோசித்துதான் போட்டேன். இப்போ இங்கு இதுதானே கொண்டாட்டமாக இருக்கு.
   உண்மையில் நான் காண்பது கனவோ என இருந்தேன் கார்த்திகைபிறையை பார்த்தபோது. சின்ன ஒரு கீறு.ஆனா அழகா தெரிந்தது. அதுதான் ஒரு க்ளிக். படத்தில பெரிதா தெரிகிறது.! ரெம்ப நன்றி இளமதி.

   Delete
 4. எல்லாமே அழகு ! எங்க சிட்டி கிறிஸ்மஸ் மரம் எடுத்தேன் .காலை 10 ஆஅனா இருட்ட இருக்கு .உங்க ஏரியாவில் சூர்யா நல்லா விசிட் பண்றார் .அந்த ஸ்பானர் சூப்பர் ஆனா அதிகம் சாப்ட்டா நிஜ ஸ்பானர் வைப்பார் பல் artz :)

  ReplyDelete
  Replies
  1. இந்த கிழமைதான் அஞ்சு மழை,காற்று மோசமான காலநிலை. அன்று சூப்ப்ப்பரா இருந்தது. வெயில்தான். நிறைய ஸ்வீட் வகைகள்தான். எல்லாமே பார்த்ததோடு சரி. பல் டாக்டரிடம் போவதென்றாலே ஜேர்மன்காரர்கள் கூட தயக்கம் காட்டுவார்கள் .
   ரெம்ப நன்றி அஞ்சு.

   Delete
 5. சுவாரஸ்யமான தகவல்கள் ,
  அருமையான படங்கள்.பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ரெம்ப நன்றிகள் அக்கா.

   Delete
 6. வணக்கம்
  அழகிய படங்களுடன் அருமையான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன்.. பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ. மிக்க நன்றிகள்.

   Delete
 7. Replies
  1. ரெம்ப நன்றிகள் அண்ணா.

   Delete
 8. வணக்கம் சகோதரி
  வண்ணமிகு படங்கள் மனதிற்கு மகிழ்ச்சி. ரசித்து படம் எடுத்து பகிர்ந்தது அழகு. நன்றிகள் அக்கா.

  ReplyDelete
  Replies
  1. ரெம்ப நன்றிகள் சகோ.

   Delete
 9. ஆகா ......மரத்தால் ஆன பொம்மைகள்... .chocolates .. ..சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. ரெம்ப நன்றி நண்பி.

   Delete
 10. ஆஹா அழகான வண்ணமிகு படங்கள். அதற்கேற்ற தகவல்கள் எல்லாமே அருமை.

  ReplyDelete
  Replies
  1. ரெம்ப நன்றிகள் சகோ.

   Delete
 11. புகைப்படங்கள் அருமை,

  ReplyDelete
  Replies
  1. ரெம்ப நன்றிகள் சகோ.

   Delete
 12. படங்கள் எங்களை அவ்விடத்திற்கே கொண்டுசென்றுவிட்டன.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் ஐயா.

   Delete
 13. ஆஹா சூப்பர் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கு... என்னை விட்டால் அந்த சாப்பாட்டுக் கடைப் பக்கம்தான் சுத்துவேனாக்கும்:)

  ReplyDelete
  Replies
  1. அந்த இடத்தில் தான் கூட்டம் அதிகம் அதிரா. மார்கெட் என்றால் சாப்பாடுதான் மெயின்.

   Delete
 14. அடடா கார்த்திகைப் பிறையை நான் மறந்தே போயிட்டேன்ன்ன்.. மிஸ் பண்ணிட்டனே.. அன்று காரில் போகும்போது அழகா முன்னால முன்னால தெரிஞ்சார்ர்... அட இப்பூடி தெரியுதே என நினைத்தபின் பார்த்தால் அன்று சதுர்த்தி:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சதுர்த்தியில் பிறை பார்க்கக்கூடாது எனச் சொல்லுவினம் எல்லோ:) எல்லாம் ஏழரையின் திட்டமிட்ட சதி:).. ஹா..ஹா..ஹா...

  ReplyDelete
  Replies
  1. அடடாஆ நான் சொல்லியிருப்பேனே. நான் 3ம்பிறையை மிஸ் பண்ணினாலும் அக்கா ஞாபகப்படுத்திவிடுவா. இம்முறை நான் எதேச்சையா பார்த்தேன். உடனே காலண்டரைப்பார்த்தால் 3ம்பிறை. எல்லாரையும் கூப்பிட்டு காட்டியாச்சு. சரி பரவாயில்லை.நீங்க வி.அகவல் படியுங்கோ. நல்லதே நடக்கும்.வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி அதிரா.

   Delete
 15. ப்ரியசகி,

  உங்க ஊர் க்றிஸ்மஸ் சந்தை பற்றிய பதிவு படங்களுடன் சூப்பர்.

  மெழுகுதிரியில்கூட வித்தியாசம் காட்டுகிறார்கள் :) மரத்தாலான வேலைப்பாடு கவர்ந்துவிட்டது. ஸ்பேனரைக் காட்டி திடீரென, "இது என்ன ?" என்றதும், ஹா ஹா கண்டுபிடிச்சிட்டேனே !

  ப்ரெட்ஸல் பார்க்க அழகாடிருக்கு. ஆனா எனக்கு இதன் சுவை பிடிப்பதேயில்லை. ஒரு வருட கடின உழைப்பு எனும்போது விலை கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கணும். இருந்தாலும் வாங்கும்போது ஒரு திருப்தி வரும்.

  இயற்கை படம் மற்ற எல்லா படங்களையும் தூக்கி சாப்பிட்டுவிட்டது. உங்க வீட்டைச் சுற்றிலும் மரங்கள் இருப்பதுபோல் உள்ளது. அப்படின்னா .... சூரிய உதயம் & சூரிய அஸ்தமனம் எடுத்து போடுங்க ப்ரியசகி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சித்ரா, எனக்கும் அவ்வளவா பிடிக்காது. மகந்தான் விரும்பி சாப்பிடுவார். ஆனா விலையெல்லாம் அவ்வளவு இல்லை. நியாய விலைதான். ஆனா சில உழைப்புகள் மாற்றுத்திறனாளிகளோடது. அந்த மெழுகு திரிகள் அவைகளோடது.இது பின்புதான் கணவர் சொன்னார். குறிப்பிடமறந்துவிட்டேன்.ஆனால் நான் தெரியாமலே அதில் 3,4 மெழுகுதிரி வாங்கியிருந்தேன்.
   இயற்கை சூழல்தான் அதிகம் சித்ரா. மலையும், மலை சார்ந்த இடம் எங்க இடம்.கடல் மட்டத்திலிருந்து 400 மீற்றர் உயரம். எடுத்து போடவேண்டும்..சம்மர் வரட்டும்.ரெம்ப நன்றிகள் சித்ரா.

   Delete
  2. ப்ரியசகி,

   "ஆனால் நான் தெரியாமலே அதில் 3,4 மெழுகுதிரி வாங்கியிருந்தேன்" ______ :) இதைப் படித்ததும் இங்கு வந்த புதுசுல கடையில குவித்து வைக்கப்பட்டிருக்கும் பலவித பாட்டில்களைப் பார்த்து "இதெல்லாம் என்ன பாட்டில்கள்? எனக் கேட்டது நினைவுக்கு வருகிறது.

   உள்ளூர் விமானத்தில் போனால் சிறுசிறு பாக்கெட்டுகளில் வறுத்த வேர்க்கடலை & குட்டிகுட்டி ப்ரெட்ஸல் தருவாங்க. வேர்க்கடலை அப்போதே காலியாயிடும். ஆனால் ப்ரெட்ஸல் ? அடுத்த முறை அந்த ஹேண்ட் பேக்கை எடுக்கும்போதுதான் நினைவுக்கே வரும்.

   "சம்மர் வரட்டும்" ____ அதுவரைக்கும் சூரியனைப் பார்க்க முடியாதா ? இன்னுமொரு சந்தேகம். 'வைட்டமின் டி'க்கு என்ன செய்வீங்க ?

   Delete
  3. "இதெல்லாம் என்ன பாட்டில்கள்? எனக் கேட்டது நினைவுக்கு வருகிறது. // ஆ நீங்களுமா.
   இதில் கொஞ்சம் ஸ்வீட் கலந்தது இருக்கு.ஆனா வேறு பெயரில். நிறைய வெரைட்டீஸ் இருக்கு. அதிகம் ஸ்வீட்தான்.
   சம்மர் என்றால் அழகாக எடுக்கலாம். இப்போ சூரியன் வரும் ஆனா வெளியில் -3,-4 எனக்குளிர்.அதிலும் சூரியன் வருவதும்,போவதும் எடுக்க முடியாது. நீங்க சொன்னீங்களே என அன்று சூரியன் வந்ததை படம் எடுத்தேன்.ஆனா மறைவது தெரியாது இருட்டிவிடும். சம்மர் எனில் இந்த பிரச்சனையில்லை அதைச் சொன்னேன்.நன்றி சித்ரா.

   Delete
 16. அப்ப்ப்ப்ப்ப்ப்பா... எல்லா போட்டோக்களையும் ரசித்தேன் கொஞ்சம் பொறாமையுடன்.

  ReplyDelete
  Replies
  1. ரெம்ப நன்றிகள்.

   Delete
  2. பீர், ஒயின் வடிவிலான மெழுகுதிரி, மரவேலைப்பாடு, ரெட் ஒயின் ,நட்ஸ் இம்புட்டும் அழகழகா பார்த்தா பொறாமை வராதா..! கார்த்திகை பிறை சூப்பரா இருக்கு...ம்ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்...

   Delete
  3. கண்டிப்பாக வரும். பொறாமையை சொன்னேன்.!!!! நல்லகாலம் இதோடு நிறுத்தியது.இல்லாவிட்டால்.....நிறைய பொறாமைப்பட்டுருப்பீங்க. மிக்க நன்றிகள்.

   Delete
 17. கிறிஸ்துமஸ் சந்தை படங்களும் பகிர்வுகளும் அழகுடா செல்லம். மிகவும் ரசித்துப் பார்த்தேன். கிறிஸ்மஸ் கொண்டாட்ட மனநிலை வந்துவிட்டது.

  இதில் சில ஐட்டங்களை வெளிநாடுகளில் இருக்கும் உறவினர் கொண்டு வந்ததுண்டு,

  ஜெர்மனியில் இருக்கும் என் பையனும் கொண்டு வந்திருக்கிறான். :) நன்றிடா பகிர்வுக்கு. :)

  ReplyDelete
  Replies
  1. ஆ..தேனக்கா.வாங்க மிக்க மகிழ்ச்சி உங்க வருகை கண்டு. ரெம்ப சந்தோஷமாக இருக்கு நல்லா கொண்டாடுங்க. ரெம்ப நன்றியக்கா உங்க வருகைக்கும்,அன்பான கருத்துக்கும்.

   Delete

 18. வண்ணமிகு வலைச் சரத்தில்

  வாசமிகு பூ வானீர்!
  அருந்தேன் அமுதமென அற்புத
  படைப்பினை படைத்தமைக்கு!

  வாழ்த்தும் நெஞ்சம்;
  புதுவை வேலு
  WWW.KUZHALINNISAI.BLOGSPOT.FR

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும்,வாழ்த்துக்கும் ரெம்ப நன்றிகள்.

   Delete
 19. முதன் முறையாக தங்களின் தளத்திற்கு வருகின்றேன்
  அருமை

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றிகள் சகோ.

   Delete
 20. உங்களூர் சந்தைக்கு நானும் வந்து சுற்றிப் பார்த்து ரசித்தேன். ஸ்பேனர் வடிவ சாக்லேட்? இப்படி கூடவா? ஆச்சர்யம்தான். ப்ரட்ஸல் எனக்கு avocado dip உடன் சாப்பிடப் பிடிக்கும்.

  ReplyDelete

 
Copyright பிரியசகி