டிசம்பர் 6
December 6 நிக்கோலவுஸ் நாள். நிக்கோலவுஸ் துருக்கியில் இருந்தவர். பணக்காரர். பெற்றோர் இறந்தபின் தன் சொத்துக்களை ஏழை எளியவர், பெண்கள், முக்கியமாக சிறுவர்களுக்கு கொடுத்தவர். அவர் டிசம்பர் 6ந் திகதி இறந்தார். அத்தினத்தையே ஜேர்மனியில்- நிக்கோலவுஸ் டாக் (Nikolaus tag), ஆஸ்திரியாவில்- நிக்கோலோ(Nikolo), இங்கிலாந்து, அயர்லாந்தில்- பாதர் க்றிஸ்மஸ்(Father Christmas),வட அமெரிக்கா-சண்டா க்ளவுஸ்(Santa claus) என கொண்டாடுகிறார்கள்.
கூடுதலான இடங்களில் வீட்டு வாசலில் சின்னப்பிள்ளைகள் ஷுக்களை(Shoes) துடைத்து,துப்பரவாக வைத்திருப்பார்கள். 5ம் திகதி இரவு நிக்கோலவுஸ் வந்து பரிசுகளை வைப்பார் என்னும் நம்பிக்கையில்."நீங்க அன்பாக எல்லோரிடமும் இருக்கவேண்டும் அப்போதான் நிக்கோலவுஸ் வருவார்,பரிசுகள் தருவார் என", இது அவர்களுக்கு பெற்றோர் அன்பை வெளிப்படுத்துமுகமாக சிறுவயதிலிருந்து சொல்லிவருவதால் இச்செயலை செய்வார்கள்.
இங்கு கிறிஸ்மஸ் ஐ விட அதற்கு முதல்நாளான 24ந் திகதியே பெரிய கொண்டாட்டமாக இருக்கும். கிறிஸ்மஸ் மரம்(Chirstmas Tree) வீட்டில் வைத்து, அதற்கு அலங்காரங்கள் செய்து, பரிசுபொதிகள் அதனடியில் வைக்கப்பட்டிருக்கும். அனைவருக்கும் பரிசுகள் வழங்கும் தினமாக 24ந்திகதி இருக்கும்.
ஆவலுடன் எல்லாரும் எதிர்பார்த்திருக்கும் நாள். மாலையில் பரிசுகள் வழங்கி, இரவு விருந்து என களை கட்டும். அந்நாள் இங்கு Heiliger Abend (ஹைலிகர் ஆபெண்ட்) Christmas Eve எனப்படும்.
படங்கள்--நன்றி கூகுள்.
*******************************************************
இன்று எங்கள் மகனுக்கு நிகோலவுஸ் பரிசாக, வரும் புது வருடம் ஜனவரியில் பாடசாலையிலிருந்து Snowboarding க்குகாக ஆஸ்திரியா செல்லவிருக்கிறார். அதற்காக Ski dress set எடுத்து கொடுத்திருந்தோம்.
*******************************************************
இது என் கமராவிலிருந்து.......

ஆஹா நிகோலஸ் tag ஸ்பெஷலா:) அங்கே இன்னிக்கு நிறைய நிகோலஸ்மான்கள் ஸ்வீட்ஸ் ஆரஞ்சு போட்ட சிறு பரிசு பைகளை கொடுத்திருப்பாங்களே .. ஷாரனுக்கு ரொம்ப பிடிக்கும் :)
ReplyDeleteவாங்க அஞ்சு. இங்கு இன்று நிக்கோலவுஸ்டாக். எங்க கிராமத்தில் உள்ள வீடுகளை மொத்தமா கண்கிட்டு 4பேர் நிக்கோலவுஸ் வேடம்போட்டு வருவாங்க.அவங்க முதலிலேயே கணக்கெடுத்து எத்தனை வீடுகளில் சின்னப்பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று பார்த்து பரிசுபொதிகளை வைத்துவிட்டுச்செல்வார்கள். நேற்றிரவும் அப்படித்தான். அபிக்கு ஒரு book ,கொஞ்ச சொக்லேட்ஸ் கிடைத்தது.
Deleteஹைலிகர் ஆபென்ட் அன்று நாடே அமைதியா மெழுகுவத்தி கொளுத்தி மிக அமைதியாக வரவேப்பார்கள் கிறிஸ்து பிறப்பை ..இப்பவும் அப்படிதானா ?
ReplyDeleteஇந்த கிறிஸ்மசுக்கு ஷாரன் அங்கே ஜெர்மனி வருவதாக இருந்தது ..லாஸ்ட் மினிட்டில் கான்சல் பண்ணிட்டா ..அவ தோழி போகல்லைன்னு ..
இப்பவும் அப்படித்தான். 24 ந்திகதியுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் முடிந்திடும். அன்று உறவுகள் எல்லாரும் ஒன்று கூடும் நாள் இங்கு.
Delete//மெழுகுவத்தி கொளுத்தி மிக அமைதியாக வரவேப்பார்கள் கிறிஸ்து பிறப்பை//கிறிஸ்மஸ் அன்று.
//இந்த கிறிஸ்மசுக்கு ஷாரன் அங்கே ஜெர்மனி வருவதாக இருந்தது ..லாஸ்ட் மினிட்டில் கான்சல் பண்ணிட்டா ..அவ தோழி போகல்லைன்னு .// ஓ.. அப்படியா. schade
Deleteஅந்த சாக்லேட்ஸ் எந்த கடை :) இங்கேயும் அள்ளி குமிச்சிருக்கு சாப்பிட ஆசைதான் இல்லை :)
ReplyDeleteஇங்கே பிரசண்ட்ஸ் எல்லாரும் கொடுத்திடுவாங்க ஆனா கிறிஸ்மஸ் அன்றுதான் பிரிப்போம் :)ஜெசிக்கு எனக்கு அவங்கப்பாக்குன்னு ஷாரன் தயார் செய்து வச்சிருக்கா ..மரம் வைத்ததும் பிரசன்ட்சை அதனடியில் வைப்போம் :)
இந்த சொக்லேட்ஸ் எல்லா கடையிலும் இருக்கு.ஆனா இது Müller கடையில் அடுக்கியிருந்தாங்க. எடுத்து விட்டேன். உண்மையில் படம் எடுக்ககூடாது. நான் எடுத்துவிட்டேன்.
Deleteஇங்கும் மகனும் ஏதோ தயார் செய்கிறார். என்னவென்று பார்க்க we r waiting. அவர் இப்போதான் தன் விருப்பத்தினை லிஸ்ட் ல் எழுதி கொடுத்திருக்கார். அதில் ஏதாவது 2தான் வாங்குவோம்.
ரெம்ப நன்றி அஞ்சு வருகைக்கும், கருத்துக்கும்.
அருமையான கொண்டாட்டம்..
ReplyDeleteவருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி அக்கா.
Deleteநிக்கோலவுஸ் பற்றி செய்திகள் பதிவு அருமை.
ReplyDeleteஆகா..உங்க பையனுக்கு புக்கும் சாக்லேட்டுமா..சூப்பர்
ஆம் உமையாள்.இங்கு கொடுக்கும்போது எந்த வீட்டில் எத்தனை வயது குழந்தைங்க,பிள்ளைகள் இருக்கிறார்கள் என தெரிந்து அவங்களுக்கு ஏற்றவாறு பரிசு வைப்பாங்க, எங்க இடத்து ஆளுங்கதான் வேஷம் போட்டுவந்து கொடுப்பது. இவர் பாடசாலை செல்வதால் bookகிடைத்தது.
Deleteரெம்ப நன்றி வருகைக்கும்,கருத்துக்கும் உமையாள்.
ஆஹா..! நிக்கோலவுஸ் நாள் மற்றும் ஹைலிக்கர் ஆபெண்ட் பற்றி நல்ல பதிவு அம்மு!.. மகனுக்கு வழங்கிய பரிசும் அருமை!
ReplyDeleteஇங்கு கிறிஸ்மஸ்ஸிற்கு வழங்கும் பரிசு முறை எனக்கு மிகவும் பிடித்தமானது!.
குடும்ப அங்கத்தவருக்கு, நெருங்கிய உறவு, சினேகிதருக்கு பரிசு கொடுக்கும் போது உனக்கு எத்தகைய பரிசு வேண்டுமெனக் கேட்டு அதற்கேற்ப அதனையோ அதற்கீடாகவோ வாங்கிப் பரிசளிப்பார்கள்!.
பரிசு கொடுக்க வேண்டும் என்பதற்காக ஏனோதானோ என
அகப்பட்டதை வாங்கி கொடுக்காமல் பார்த்துப் பார்த்து
அது அவருக்கு உபயோகமாக இருக்க வேண்டுமென
அதிக சிரத்தை எடுத்துச் செய்வது உண்மையில் மெச்சத்தக்கது!
இதுபோல நல்ல பல விடயங்கள் அவர்களிடமிருந்து
நாம் கற்க வேண்டியவை நிறையவே உண்டு!
சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள் அம்மு!
//இங்கு கிறிஸ்மஸ்ஸிற்கு வழங்கும் பரிசு முறை எனக்கு மிகவும் பிடித்தமானது!// எனக்கும் இவங்களோட இந்த முறை பிடிக்கும். ரசீதோட கொடுப்பாங்க. பிடிக்காவிடில் மாற்றும் வசதிக்காக.
Delete//இதுபோல நல்ல பல விடயங்கள் அவர்களிடமிருந்து
நாம் கற்க வேண்டியவை நிறையவே உண்டு// மிக உண்மை.
ரெம்ப நன்றி இளமதி வருகைக்கும், தங்களின் கருத்துக்களுக்கும்.
happy Christmas!!! தோழி ரொம்ப அழகான பதிவு!
ReplyDeleteரெம்ப நன்றி தோழி தங்கள் கருத்துக்கும்,வருகைக்கும்.
Deleteப்ரியசகி,
ReplyDeleteநிக்கோலவுஸ் நாள் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பெயரா! இங்கெல்லாம் பரிசுப்பொருளை 24ந் தேதி இரவு மரத்தினடியில் வைத்துவிட்டு 25ந் தேதி அதிகாலைதான் பிரித்துப் பார்ப்பார்கள். கொண்டாட்டங்களும், விடுமுறைகளும் மனதிற்கு ஒரு உற்சாகத்தைக் கொடுப்பதால் ரொம்பவே பிடிக்கும்.
நான் படித்த பள்ளியில் நவ 24ந் தேதியில் சப்போஸ் கிறிஸ்மஸ் என்று கொண்டாடுவார்கள். ஏனென்றால் கிறிஸ்மஸுக்கு மாணவிகள் அவரவர் வீட்டில் இருப்பார்கள் என்பதால்.
உங்க காமிராவுடன் கடை காமிராவில் விழுந்திருக்கப் போகிறீர்கள் :) இங்கும் சாக்லேட் குவித்து வைக்கப்பட்டிருக்கும்.
ஆஸ்திரியா என்றதும் எங்களின் வரலாற்று ஆசிரியர்தான் நினைவுக்கு வந்தார். மகன் போட்டியில் கலந்துகொள்கிறாரா ?
வாங்க சித்ரா, இங்கு 24ந் திகதி மாலையில்தான் பெரிய கொண்டாட்டம். அன்று கடைகள் மதியத்துடன் பூட்டிவிடுவார்கள். 25 திகதி க்றிஸ்மஸ் நாள் அமைதியாக இருக்கும்.
Deleteஅக்கடையில் கமரா இல்லை.அந்த துணிவில்தான் எடுத்தேன்.அழகாக (எல்லாமே சண்டா க்ளவுஸ்) அடுக்கிவைத்திருந்தார்கள். மற்றைய கடைகளில் box ல் தான் வைத்திருந்தார்கள்.
போட்டிக்காக மகன் செல்லவில்லை.இது பாடசாலை சுற்றுலா. அவரின் ஸ்போர்ட்ஸ் டேபிள் டென்னிஸ்.
ரெம்ப நன்றி சித்ரா. வருகைக்கும்,கருத்துக்கும்.
நிக்கொலவுஸ் பற்றி கற்றுகிட்டேன் .அருமையான பதிவு . கிறிஸ்மஸ் இனிமையாக கொண்டாட வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்களுக்கும் வாழ்த்துக்கள். வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி சங்கீதா.
Deleteநல்ல தகவல்கள்.வாழ்த்துக்கள்/
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றிகள் சகோ.
Deleteதெரியாத விஷயங்கள். தொகுத்து தந்தமைக்கு நன்றி
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றிகள் சகோ.
Deleteஆஹா விளக்கமான பதிவு... கிரிஸ்மஸ் மட்டும்தான் இன மத பேதமின்றி அனைவராலும் கொண்டாடப்படுது.. ஏதோ வெடிங் நடக்கப் போகுதுபோல ஒரு ஃபீலிங்ஸாக இருக்கு இப்பவே... அதிலும் எல்லோருக்கும் விடுமுறை என்பதால் மட்டட்ட மகிழ்ச்சி...
ReplyDeleteமகன் ஸ்கீயிங்க்காக ஒஸ்ரேலியா போய்வரப்போறாரோ? சந்தோசம்... வாழ்த்துக்கள்.
வாங்க அதிரா. //இன மத பேதமின்றி அனைவராலும் கொண்டாடப்படுது..// உண்மைதான் அதிரா. க்றிஸ்மஸ், நியூஇயர் என்றால் இங்கு பெரிய கொண்டாட்டம். இம்முறை வியாழன் வருவதால் 4நாட்கள் தொடர் விடுமுறை.
ReplyDeleteஓம் அதிரா . பாடசாலையிலிருந்து கூட்டிச்
செல்கிறார்கள். //ஒஸ்ரேலியா// ஓஸ்ரேலியா இல்லை. Austria வுக்கு. பக்கத்து நாடு. ஆல்ப்ஸ் மலைத்தொடர் உள்ள அழகான நாடு. டொச் தான் பேசுவார்கள். பேசும்தொனி மட்டும் வித்தியாசம்.
உங்க கருத்துக்கும்,வருகைக்கும் ரெம்ப நன்றிகள் அதிரா.
பாரம்பரியமிக்க கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைப் பார்த்து ரசிப்பதே அவ்வளவு மகிழ்ச்சியாய் உள்ளது. நிக்கோலஸ் தினம் பற்றி அறிய வியப்பு. மகன் நல்லபடியாக ஆஸ்ட்ரியா சென்றுவர என் வாழ்த்துகள் ப்ரியசகி.
ReplyDeleteவாங்க கீதா. மிக்க மகிழ்ச்சியினை உங்க வருகை தருகிறது.
Deleteஉண்மைதான் கீதா. அவர்களின் மகிழ்ச்சி,உற்சாகம் எங்களையும் தொற்றிக்கொள்கிறது. வருகைக்கும், கருத்துக்களுக்கும் ரெம்ப நன்றிகள்.
எனக்குப் புதிய தகவல்களுடன் பதிவு..நன்றாக இருக்கு அம்முலு.
ReplyDeleteஆஸ்திரியா செல்கிறாரா மகன்..ஸ்கியிங்-ல் நிறைய ஆர்வமோ? :) வாழ்த்துக்கள்..ஹேப்பி ஹாலிடேஸ்!!
வாங்க மகி. நலமா. மகனுக்கு டேபிள் டெனிஸ் தான் விருப்பம். அதில் சாம்பியன். இது அவர்கள் ஸ்கூலால் அழைத்து செல்கிறார்கள். ரெம்ப நன்றி உங்க வாழ்த்துக்களுக்கும், வருகைக்கும்.
Delete