பதிவு ஒன்று போட்டாலும் போட்டார் சகோ.மதுரை தமிழன். அப்பப்பா அப்படியே சாட்டிலைட் வலம் வந்த மாதிரி வலம் வருகிறது.
என்னையும் இத்தொடருக்கு அழைத்திருக்கிறார்கள். அழைத்த அனைவருக்கும் என் நன்றிகள்.
படிக்கும்போதும் வகுப்பில் கேள்விக்கு விடை தெரிந்தாலும் கை உயர்த்தமாட்டேன்.கடைசியாகதான் எல்லாமே.அதுபோல்தான் இக்கேள்விக்கு பதிலும் வருகிறது போலும். ஒருவரைபோல 7பேர் என்பார்கள். ஒத்த எண்ணங்கள் இருப்போரும் உண்டு.
1.உங்கள் 100 வது பிறந்த நாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?
இன்று வரை பிறந்த நாளில் என்ன செய்கிறேனோ, அதையே
அப்போதும் செய்வேன். எங்களுக்கு பிறந்ததிகதியில் ஒன்றுமில்லை.பிறந்த நட்சத்திரம் அன்றுதான் புதுச்சட்டை அணிந்து கோவில் போய் வந்து, பாடசாலை நாள் எனில் பாடசாலைக்கு மிட்டாய், இனிப்புகள் கொண்டு போய் கொடுப்பது.வார இறுதி என்றால் வழமைபோல கோவில்,வீடு, வாழ்த்துக்கள். எல்லாமே 10,12 வயதுடன் சரி.பின்னர் பிரச்சனையில் பிறந்தநாளிலும் ஓடிஒளிந்து உயிரைக்காப்பதே பெரும்பாடு.இங்கு வந்தபின்னும் சாதாரணமான நாளாகவே இருக்கும். வீட்டில் இருப்பவர்களின் சந்தோஷத்திற்காக ஏதாவது ஸ்நாக்ஸ் செய்வேன். நண்பர்கள் யாராவது வருகிறோம் எனச்சொன்னால் நல்லுணவு சமைத்து பரிமாறுவேன். இதுபோல்தான் 100வது பிறந்த தினமும் இருக்கும்.
2.என்ன கற்றுக்கொள்ள விரும்புறீர்கள்?
மனித மனங்களை கற்றுக்கொள்ள.
3. கடைசியாக சிரித்தது எப்போ? எதற்காக?
நாகேஷ், கவுண்டமணி, வடிவேலு இவர்களின் மொத்த
உருவமாக பக்கத்தில் ஒருவர் இருக்கும்போது சிரிப்புக்கு
பஞ்சமில்லை.இப்போ இதை பப்ளிஷ் செய்யமுன் ஒரு
மாதாந்த பத்திரிகையில் படித்து சிரித்தேன்,சிந்தித்தேன்.
இந்த குட்டீஸ் என்னமா யோசிக்கிறாங்க. அந்த ஜோக்...
குட்டீஸ்:- தோசைக்கும்,இட்லிக்கும் என்ன வித்தியாசம்.
பெண்மணி:- இரண்டும் மாவில் தானே செய்யிறோம்.
அதற்கு அந்த குட்டீஸின் பதில்:-
இல்லை இட்லி கூட்டமா வரும். தோசை சிங்கிளா வரும்.
அதில் வந்த குறும்புகள் அத்தனையுமே சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.
4. 24 மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
24 மணி நேரம் நடக்க சான்ஸே இல்லை. ஆனால் எங்களுக்கு
இங்கு அப்படி ஒரு சூழ்நிலை 2008ல் இயற்கையின் சீற்றத்தால்
ஏற்பட்டது. இவ்வீட்டிற்கு குடிவந்த புதிதில். அதுவும் குளிர்காலமான தைமாதத்தில்.ஆனால் அரை மணிநேரம்தான். பின்னர் வந்து விட்டது.
அப்படி ஏற்பட்டால்!!!!
படித்து முடிக்காமல் இருக்கும் பத்திரிகை,புத்தங்கள் வாசிப்பது.
காலார நடந்து மலைராணியின் இயற்கையை ரசிப்பது. கணவர்,
மகனுடன் சேர்ந்து அரட்டை அடிப்பது.
5.உங்களுடைய குழந்தையின் திருமணநாள் அன்று
அவர்களிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
இந்த காலத்து, இங்கு வளரும் பிள்ளைங்க நல்ல பார்வோர்ட்.இரு சூழலிலும் வளருகின்றார்கள். எதையும் முன்னின்று நடத்தவும்,சமாளிக்கவும் கற்றுக்கொள்கிறார்கள். அஸ்திவாரம் நல்லதாக போட்டால் கட்டிடம் உறுதியாக இருக்கும். என் மகனிடம் நல்லபிள்ளையாக எப்போதும்
இருக்கவேண்டும் என்பதை அடிக்கடி வலியுறுத்துகிறேன்.
அவர் என்னிடம் பேசும் விடயங்களை வைத்து நானே
ஆச்சரியப்படுகிறேன்.சின்ன வயதில் இவ்வளவு பக்குவமா என. சூழல்கள் பக்குவப்படுத்தவும் செய்கிறது, பாதை தவறவும் செய்கிறது. அமைவது அவரவர் அதிர்ஷ்டம்.
6.உலகத்தில் நடக்கும் பிரச்சனைகளை உங்களால் தீர்க்க
முடியுமென்றால் எந்த பிரச்சனையை நீங்கள் தீர்க்க விரும்புவீர்கள்.?
பிரச்சனை என்பதே பிரச்சனையாக இருக்கு!!!!!. ஒவ்வொருத்
தருக்கும் ஒவ்வொரு பிரச்சனைகள் இருக்கு. அவரவர்
பிரச்சனை தீர்ந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை.
அடிப்படையான பிரச்சனை பசி. எல்லாருக்கும் வயிறாற
நல்ல உணவு கிடைத்தால்....
7.உங்களுக்கு ஒரு பிரச்சனை அதை தீர்க்க யாரிடம் அட்வைஸ்
கேட்க விரும்புவீர்கள்.?
நானே தீர்ப்பேன். சுயபுத்தி விஷேசம் என அப்பா அடிக்கடி சொல்வார்.
8.உங்களைப் பற்றி ஒருவர் தவறான செய்தியைப் பரப்புகிறார்.
அதைக் கேள்விப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
தவறான செய்திதானே.அதை பெரிதுபடுத்தமாட்டேன். இதுவும் கடந்து போகும்.
9.உங்கள் நண்பரின் மனைவி இறந்துவிட்டால்,அவரிடம் என்ன சொல்வீர்கள்?
ஆறுதல் வார்த்தைகளால் இழப்பை ஈடுசெய்யமுடியாது.
காலம்தான் அவரின் காயங்களுக்கு மருந்தாக முடியும்.
10.உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருந்தால் என்ன செய்வீங்க.?
சாதாரண நடைமுறையே இதுதான். ஏதாவது உடற்பயிற்சி
செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லாதவள்.
நண்பி அனாவுடன்anna சேர்ந்து ஒரு மெதுஓட்டம், ஊரில் இருக்கும் என் சகோதரிகளுடன் தொலைபேசுதல். தோட்டத்தில் எல்லாரையும்(வேறு யாருங்க செடி,கொடிதான்) நலம் விசாரித்து, உணவு, தண்ணீர் பறவைகளுக்கும், செடி கொடிகளுக்கு அளித்து, நெட்டில் கருத்துப் பகிர்வு, வீட்டு வேலைகள், கைவேலைகள் மீதம் இருந்தால் அதனை முடித்து, ஒரு sudoku செய்து முடித்து,இன்றைய நாட்டு நடப்புகளை,வானிலை அறிக்கையை தொலைக்காட்சியில் பார்த்து, பயிற்சியாக கீதம்....சங்கீ...தம் !!!!!!!
********************************************
சகோ.மதுரைத்தமிழனுக்கு நன்றிகள். நல்ல கனவு.
அதிகாலையில் கண்டீர்களோ என்னவோ.நன்றாக
பலித்துவிட்டது. ரெம்ப நன்றிகள்.
********************
"யாரப்பா பலமா குறட்டை விட்டு தூங்கிறது!!!.
ஆவ்வ்வ் கனவுமட்டும் இப்போதைக்கு காணாதீங்க. ப்ளீஸ்ஸ்ஸ். இங்கெல்லாம் இனி சம்மர் ஹொலிடே ஆரம்பமாக போகுதூஊஊ"""
________()________()_________()__________
ஹைய்யோ... தத்துவ முத்துக்களாக கொட்டிக் குவிச்சிருக்கிங்க அம்மு!..:)
ReplyDeleteகவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள் நினைவோடு நிறையத் தத்துவங்கள் உங்களிடம் வந்து சேர்ந்துட்டுதோ..:)
அருமையான பதில்கள்!
அனைத்தையும் நினைத்துப் பார்க்க எனக்கும் ஆவலாக இருக்கிறது. என் பதில்களும் சில உங்களினதோடு பொருந்தியிருக்கிறது.
மகிழ்வாயிருக்கு உங்கள் பதில்கள்!
அருமை! பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்களும் அம்மு!
அவ்வ்வ்வ்வ். உண்மையில் கண்ணதாசனின் பி.நாள் என்பது தெரியவில்லை.எல்லாமே அனுபவ மொழிகள் தான்.என் தனிப்பட்ட கருத்துக்கள். மேலே சொன்னது போல் தான் ஒத்த எண்ணங்கள் உள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
Deleteமுன் வருகை தந்து, கருத்திட்டமைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் இளமதி.
வணக்கம் சகோதரி
ReplyDeleteதங்களின் பதில்கள் அனைத்தும் மிக அழகு. எதார்த்தமான நடை. பேசுவது போன்ற உணர்வு உங்கள் பதிவில் தெரிகிறது. இயல்பான பதில்கள் ஆங்காங்கே தத்துவ முத்துக்களும் சிதறியுள்ளன. பகிர்வுக்கு நன்றிகள் சகோதரி. வலைப்பக்கம் ஆரோக்கியமான எண்ணங்களை வளர்ப்பதைக் காணும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி சகோதரி...
பரபரபான தங்கள் நேரத்திலும் வருகை தந்து, அன்பான கருத்துக்களை பதிவிட்டமைக்கு ரெம்ப நன்றிகள் சகோ.
Deleteஆவ்வ்வ்வ் இங்கயுமா.. நான் இதைக் காணல்லியே.. நேரமாச்சு கொஞ்சத்தால வாறேன்ன்ன்..
ReplyDeleteஆ அதிரா.வாங்க. என்ன வந்ததும் ஓடிட்டீங்க.
Deleteமெதுவாய், நிதானமாய் அழகாய் பேசுவது போல் உங்கள் பதில்கள் நடை போடுகின்றன.
ReplyDeleteரசித்து எழுதியுள்ளீர்கள் அம்மு.
வாழ்த்துக்கள்.
ப்ளாக் பிரச்சனைக்கிடையில் எழுதியது. உங்க கருத்துக்கள் மிக்க மகிழ்ச்சியை தருகிறது. வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.
Deleteஅடடா இப்போதான் படிச்சு முடிச்சேன்ன்... உடல்பயிற்சி எல்லாம் செய்யிறீங்க .. சூப்பர் கீப் இட் மேல...
ReplyDeleteஅட்டகாசமாகவும் அமைதியாகவும் பதில் சொல்லி முடிச்சிட்டீங்க... அழகு..
திரும்ப வந்து படித்தது சந்தோஷம். இங்கு கேள்விப்படுகிற
Deleteசில விடயங்கள் யோசிக்கவே செய்கிறது.சரி இருக்கும் மட்டும் ஆரோக்கியமா இருந்திடுவம் என்பதாலதான்.
உங்க கருத்துக்களுக்கு மிக்க நன்றி அதிரா.
கார்ட் சூப்பர்...
ReplyDeleteஇது ஏற்கனவே செய்து பப்ளிஷ் செய்ததுதான். நன்றி அதிரா.
Delete/// இதுவும் கடந்து போகும் ///
ReplyDeleteபாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
ரெம்ப நன்றிகள் டிடி அண்ணா.
Deleteபதிவு ஒன்று போட்டாலும் போட்டார் சகோ.மதுரை தமிழன். அப்பப்பா அப்படியே சாட்டிலைட் வலம் வந்த மாதிரி வலம் வருகிறது.//
ReplyDeleteரொம்ப சரியா சொன்னீங்க ..அவர் ஆரம்பிச்சு வச்சது இப்போ எல்லா கண்டமும் பரவிடுச்சி :)
உண்மைதான் அஞ்சு. அனேகமானோர் போட்டாச்சு. ஒருவர் எஸ்கேப்ப்ப்ப்.
Deleteஎல்லா கேள்விகளுக்கும் அழகாக பொறுமையாக பதில் தந்திருக்கீங்க :) வாழ்த்துக்கள்
ReplyDeleteரெம்ப நன்றி அஞ்சு.
Delete100 வது பிறந்த நாள் விஷயத்தில் நாம் அனைவரும் பாசிட்டிவாக இருக்கோம் ..
ReplyDelete@ அதிரா ..நோட் திஸ் பாயிண்ட் ...இப்பவே பணம் சேக்க ஆரம்பிங்க
ஏன் நெகட்டிவ் ஆ திங்க் செய்யனும். நல்லதையே நினைப்போமே. எனக்கு பக்கத்து வீட்டுத்தாத்தாவைப் பார்த்தால் ஆச்சரியம். 84வயது என்ன சுறுசுறுப்பு. எந்நேரமும் ஏதாவது வேலை செய்வார்.மது,புகையிலை 2ம் இல்லாமல் இருக்கமாட்டார். ஆனா ஆரோக்கியமா தெம்பா இருக்கார்.இன்னும் கண்ணாடி அணியவில்லை
Deleteமற்றவர்களுக்கு கஷ்டமில்லாமல்,ஆரோக்கியமா இருந்தா இருக்கலாம்.
அதிராஆஆ/// அவ்வ்வ்வ்
பிரச்சினைகள் விஷயத்திலும் நாம் ஒரு கொள்கை :) நம் மனம்தான் எல்லாத்தக்கும் ஆசான்
ReplyDelete//இங்க என்ன சொல்லுது மாதிரி // ஹா ஹா
உண்மைதான் அஞ்சு. /உலகம் ஆயிரம் சொல்லட்டுமே,உனக்கு நீதான் நீதிபதி.// இப்பாடல்தாம் ஞாபகத்துக்கு வருகிறது.
Deleteபிள்ளைகள் பற்றிய உங்கள் கருத்தும் சூப்பர் ..இக்கால பிள்ளைகளின் பேச்சும் செயலும்
ReplyDeleteஅவர்கள் நமக்கு நிறைய கற்றுதறாங்க :)
அவங்க வளர,வளர மெச்சூர்டாகி வாராங்க. நான் நினைப்பேன் எங்களுக்கு பின் எப்படி இருக்கப்போறாங்க.
Deleteஅப்படின்னு. ஆனா இப்ப அந்த பயமே போய்ட்டுது.
//அவர்கள் நமக்கு நிறைய கற்றுதறாங்க :)//
நிறைய்ய்ய்ய்ய.
வந்து நிறைய கருத்துப்பகிர்வுக்கு ரெம்ப நன்றிகள் அஞ்சு.
அட நீங்க ரொம்ப நல்லவங்க போல இருக்கு......அவனவன் கொலைவெறியில் அலையுறாங்க என்னை அடித்து நொறுக்குவதற்கு.....நீங்க என்னென்னா எனக்கு நன்றி சொல்லுறீங்க.. என்னை ஆனந்த கண்ணிரில் மூழ்க வைச்சிட்டீங்களே.....எல்லோரும் உங்க கையை காலா நினைச்சு கும்புடுகிரேன் என்று சொல்வது போல உங்கள் வலைதளத்தை காலாக நினைச்சு கும்பிட்டு எனது நன்றியை தெரிவிச்சுகிறேன்
ReplyDeleteவாங்க சகோ. உங்களுக்கு இந்த சினிமா வசனம் சொல்லனும் என நினைக்கிறேன். தப்பாயின் மன்னிக்க.
Delete""பத்த வைச்சுட்டியே பரட்டை.""
நல்ல விடயமெனில் பாராட்டுவதில் தப்பில்லை தானே. //அவனவன் கொலைவெறியில் அலையுறாங்க/// ஐய்யயோ அப்ப கொஞ்ச நாளைக்கு வெளியில தலைகாட்டதீங்க.
//உங்கள் வலைதளத்தை காலாக நினைச்சு கும்பிட்டு எனது நன்றியை தெரிவிச்சுகிறேன்// அவ்வ்வ்வ்!!!!!!!!!!
வந்து தங்கள் கருத்தினை பகிர்ந்தமை ரெம்ப மகிழ்ச்சி.
நன்றிகள் சகோ.
ReplyDeleteஉங்கள் தளத்தின் வடிவமைப்பு அருமை பாராட்டுக்கள்
ரெம்ப நன்றிகள்.
Deleteமிக நிதானமாகவும் எதார்த்தமாகவும் இருக்கிறது உங்கள் பதில்கள். குட்டீஸ் பதில் நல்ல சிரிப்பு
ReplyDeleteவருகைக்கும்,கருத்துக்கும் நன்றிகள் சகோ.
Deleteஅழகான பதில்கள்..பாராட்டுக்கள்.!
ReplyDeleteவருகைக்கும்,பாராட்டுக்கும் ரெம்ப நன்றிகள் அக்கா.
Deleteஎல்லாபதிலுமே அருமை சகோதரி 3 வது சிரிப்பு & சிறப்பு உண்மையிலேயே அருமை 9 வது மனதை தொ(சு)ட்டது... நானும் இதில் சிக்கி சிதறி சீரழிந்து சின்னாபின்னமாகி வந்திருக்கிறேன்.
ReplyDeleteகருத்துக்கு நன்றிகள்.
Deleteஎல்லா கேள்விகளுக்கும் அழகா பதில் சொல்லியிருக்கீங்க.
ReplyDeleteவாங்க சித்ரா. வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றிகள்.
Delete
ReplyDeleteஎல்லா விடையும் எழில்பூக்கும் நெஞ்சத்தின்
சொல்லாட்சி உண்டேல் சுவையாக - பொல்லாத
வார்த்தையிலும் புன்னகை பூத்திருக்கும் நற்றமிழை
சேர்ந்தாரைப் போல செழித்து !
அருமை அருமை வாழ்த்துக்கள் அம்முலு
வாழ்க வளமுடன்
எனக்கு உங்க மாதிரி கவியில் பதில் சொல்ல தெரியாது சகோ. வாழ்த்துக்களுக்கு ரெம்ப நன்றி.
Deleteபதில்கள் அனைத்தும் அருமை! இருந்தாலும் ' இட்லி கூட்டமாக வரும், தோசை சிங்கிளாக வரும்' என்ற அந்தக் குழந்தையின் பேச்சை நானும் மிகவும் ரசித்தேன்!!
ReplyDeleteஉங்கள் குழந்தையின் திருமண நாளுக்கு என்ன சொல்ல விரும்புவீர்கள் என்ற் கேள்விக்கு பதிலாகத் தந்த உங்களின் விளக்கம் அருமை! உங்களின் மனப்பக்குவமும் உலகளாவிய பார்வையும் அனுபவம் தந்திருக்கும் முதிர்ச்சியும் அதில் வெளிப்படுகிறது!
இனிய வாழ்த்துக்கள்!! பாராட்டுக்கள்!!
வாங்க மனோ அக்கா. உங்க வருகை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்களுக்கும்,பாராட்டுக்கும் ரெம்ப நன்றி அக்கா.
Deleteஅனைத்து பதில்களும் அருமை குறிப்பாக 2,5 மற்றும் 7
ReplyDeleteரெம்ப நன்றி ப்ரியா.
Delete