வாழ்த்துக்கள்:
இன்று கலைக்கவியரசி இளமதியின் பிறந்த நாள்.
இளமதி இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். நோய்நொடியின்றி,
நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடனும் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன்.

*******************************************************
இங்கு குளிர்காலம் தொடங்கி, இருட்டு சீக்கிரமாக வரத் தொடங்கிவிட்டது. மரங்களில் இலைகள் மஞ்சள் நிறமாகி உதிரத்தொடங்கிவிட்டன.
பெட்டியில் வைத்திருந்த (புதிதாக வேறு வாங்கினது உட்பட) விண்டர் உடுப்புகள்(dresses) வெளியில் எடுத்தாகிவிட்டது. இது வழமையாக நடக்கும் நிகழ்வுதான். வெயிலைச் சமாளித்தாலும்,குளிரை சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம். ஸ்னோ பார்க்க அழகாயிருக்கும். ஆனால் ஆபத்துக்கள் இருக்கின்றன. குளிர்காலமாதலால் இங்கு இனி ஹீட்டர் போடவேண்டும்.
ஹீட்டர்கள் இங்கு காஸ்,எண்ணெய்மூலம் இயங்குபவை.
எங்கள் வீட்டில்இயங்கும் ஹீட்டர் காஸினால் இயங்குகின்றது.
வருடத்தில் இரு தடவை டாங்கில் காஸ் நிரப்பிவிடுவார்கள்.
Gas Tank
ஆனால் காஸ்,எண்ணெயால் இயங்கும் ஹீட்டர்கள் அதிக செலவானது என நாங்கள் வீடுகட்டும் போது அறிந்தமையால், முன்னேற்பாடாக சிமினியைக் (Chimney) கட்டிவிட்டோம். அனேகமாக புதிதாக கட்டப்படும் வீடுகளில் இவை இப்போ கட்டுகிறார்கள். இதனால ஏற்படும் செலவு குறைவாக இருக்கிறது. அதற்கு வேண்டியவை விறகு மட்டுமே.குளிர் ஆரம்பித்தவுடன் இதை எரித்தால் வீட்டின் எல்லா இடமும் நல்ல ஹீட்டாக இருக்கும். காலையில் ஜன்னலையோ அல்லது கதவையோ 5நிமிடங்கள் நன்றாக திறந்து வைத்திருந்து பின் மூடினால் நல்லது . வருடத்தில் 2 தடவை வந்து க்ளீனிங்(cleaning) கொன்ரோல்(control) செய்வார்கள். எனக்கு விண்டரில்கூட தோசை,இட்லி மா பொங்கிவரும்.
******************************************
இதுதான் எங்கள் Garden Haus
இதில் வெயில்காலங்களில் விறகுகளை வாங்கி அடுக்கி விடுவோம். வெளியில் மூடியிருப்பது வெட்டப்படாத சின்ன மரங்கள்.
சிமினியினுள் வைக்கும் அளவுகளில் வெட்டிய விறகுகளை வாங்கி அடுக்கியிருக்கிறோம்.
ஆரம்பத்தில் விறகை எரிக்க பயன்படுத்தும் கற்பூரம்
மரத்தூள்
கவுன்சிலில் அனுமதி பெற்றால் நாங்களே காடுகளில்
வெட்டுவதற்காக கவுன்சிலால் முத்திரை குத்தப்பட்ட மரங்களை
வெட்டி எடுத்து வரலாம்.கீழ் படத்தில் விற்பனைக்கும்,சொந்த
தேவைக்குமாக பக்கத்துக்காணியில் காடுகளில் வெட்டி எடுத்து வரப்பட்ட மரங்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள்.
Chimney or Fireplace
இப்படித்தான் எரியும். தேவையான விறகுகளை எடுத்து வந்துஅருகில் வைத்து இருக்கிறோம். வலது பக்கம் இருப்பது அதனை சுத்தப்படுத்தும் ஆயுதங்கள். இதனை ஜேர்மன் மொழியில் கமின் என்பர்.(der kamin)
*******************************************
எங்கட வீட்டுக்கு கடந்த ஞாயிறு அன்று வந்த விருந்தாளி.
முள்ளெலி(க்குட்டி)
"லேட்டஸ்ட் தகவல் இவர் முள்ளெலி(hedgehog ) என்று எங்கள் டீச்சரும்,நண்பியுமான "இமா" கூறியிருக்கிறார். எனக்கு இப்பிராணியைத் தெரியாது. நான் முள்ளம்பன்றி என நினைத்து எழுதியிருந்தேன்.
*****************************************
எனக்குப் பிடித்த பாடல்:_
இப்பாடலையும் கேட்டுவிட்டுச் செல்லுங்கள்.
<><><><><><><><><><><><><><><><><>