இம்முறை ருசித்து ரசித்ததில் உமையாள்காயத்ரி, மேனகாவின் குறிப்புகள்.
உமையாள் காயத்ரி
குழிப்பணியாரம் - காரம், இனிப்பு
சோயாகுழம்பு
பீட்ரூட் சூப்
இந்த சூப் மிக நல்ல ருசி. கராம்பு,பட்டையின் வாசமும்,பாசிப்பருப்பு இடையில் கடிபடும்போது நன்றாக இருக்கு. பார்த்த அன்றே பீட்ரூட் இருந்தது உடனேயே செய்துவிட்டிருந்தேன்.காய்ச்சலின் (பீவர்.குளிர் ஆரம்பித்திருக்கும் நிலையில் வைரஸ்பீவர் தாக்கம். அதற்கு நாங்களும் தப்பவில்லை.) போது நான் காரட் சூப் சாப்பிட்டேன். சூப்பரா இருந்தது அந்நேரம். மன்னிக்க உமையாள் போட்டோ எடுக்கல. மீண்டும் செய்து எடுத்துப்போடுகிறேன்.
மேனகாசத்யாவின் குறிப்புகள்:--
அம்மினிகொழுக்கட்டை
குடமிளகாய் சீஸ்பராத்தா. paratha
சாம்பார்
நான் மேனகா கொடுத்த சாம்பார் பொடி குறிப்பினை எடுத்து சாம்பார் செய்திருக்கேன்.
அம்மினிகொழுக்கட்டை என் கணவருக்கு பிடித்தமானது.
அடிக்கடி கேட்பார். 'செய்யத்தெரியுமா', என. மாமியார் ஊருக்கு செல்லும்போது செய்து தருவார். மேனகா குறிப்பில் பார்த்ததும் சதுர்த்தியன்று செய்திருந்தேன்.நன்றாக வந்தது. நல்ல டேஸ்ட் கூடவே. இப்போ 2,3 தரம் செய்தாயிற்று.
உமையாளின் குறிப்புகளும் செய்வதற்கு சுலபமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கு.
நல்ல குறிப்புகள் தந்த உமையாள் & மேனகாவுக்கு நன்றிகள்.
நேரமிருப்பின் செய்துபாருங்க தோழிகளே!!!
******************************************************
இங்குள்ள supermarket ல் விற்கும் மாம்பழத்தை பெரும்பாலும் நான் வாங்குவதில்லை. 1.விலை அதிகம். 2. எங்க ஊர் பழம் சாப்பிட்ட ருசிக்கு இவை ஏதோ எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. ஆனால் கடந்த மாதம் ஒரு super market ல் வந்த மாம்பழம் விலை 0.99cent என மலிவாக விற்றார்கள். பார்க்க வாங்க வேணும் போல இருந்தது. சரி வாங்கித்தான் பார்ப்போம் என வாங்கினேன். சாப்பிட்டால் ரெம்ப நல்ல taste. ஆனால் விலைகுறைப்பு எல்லாம் ஒரு வாரம்தான். இப்போ விலை கூடிவிட்டது.
பிட்டு, பொரித்தகுழம்பு, மாம்பழம்!!!
சாதாரணமா பிட்டும்,மாம்பழமுமே சாப்பிடலாம்.அன்று திடீர் வரவு மாம்பழம்.
*******************************************************
வாங்கி வந்திருந்த தக்காளி ஒன்று இப்படியாக!!!!!!
****************************************************
உமையாள் காயத்ரி
குழிப்பணியாரம் - காரம், இனிப்பு
சோயாகுழம்பு
பீட்ரூட் சூப்
இந்த சூப் மிக நல்ல ருசி. கராம்பு,பட்டையின் வாசமும்,பாசிப்பருப்பு இடையில் கடிபடும்போது நன்றாக இருக்கு. பார்த்த அன்றே பீட்ரூட் இருந்தது உடனேயே செய்துவிட்டிருந்தேன்.காய்ச்சலின் (பீவர்.குளிர் ஆரம்பித்திருக்கும் நிலையில் வைரஸ்பீவர் தாக்கம். அதற்கு நாங்களும் தப்பவில்லை.) போது நான் காரட் சூப் சாப்பிட்டேன். சூப்பரா இருந்தது அந்நேரம். மன்னிக்க உமையாள் போட்டோ எடுக்கல. மீண்டும் செய்து எடுத்துப்போடுகிறேன்.
மேனகாசத்யாவின் குறிப்புகள்:--
அம்மினிகொழுக்கட்டை
குடமிளகாய் சீஸ்பராத்தா. paratha
சாம்பார்
நான் மேனகா கொடுத்த சாம்பார் பொடி குறிப்பினை எடுத்து சாம்பார் செய்திருக்கேன்.
அம்மினிகொழுக்கட்டை என் கணவருக்கு பிடித்தமானது.
அடிக்கடி கேட்பார். 'செய்யத்தெரியுமா', என. மாமியார் ஊருக்கு செல்லும்போது செய்து தருவார். மேனகா குறிப்பில் பார்த்ததும் சதுர்த்தியன்று செய்திருந்தேன்.நன்றாக வந்தது. நல்ல டேஸ்ட் கூடவே. இப்போ 2,3 தரம் செய்தாயிற்று.
உமையாளின் குறிப்புகளும் செய்வதற்கு சுலபமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கு.
நல்ல குறிப்புகள் தந்த உமையாள் & மேனகாவுக்கு நன்றிகள்.
நேரமிருப்பின் செய்துபாருங்க தோழிகளே!!!
******************************************************
இங்குள்ள supermarket ல் விற்கும் மாம்பழத்தை பெரும்பாலும் நான் வாங்குவதில்லை. 1.விலை அதிகம். 2. எங்க ஊர் பழம் சாப்பிட்ட ருசிக்கு இவை ஏதோ எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. ஆனால் கடந்த மாதம் ஒரு super market ல் வந்த மாம்பழம் விலை 0.99cent என மலிவாக விற்றார்கள். பார்க்க வாங்க வேணும் போல இருந்தது. சரி வாங்கித்தான் பார்ப்போம் என வாங்கினேன். சாப்பிட்டால் ரெம்ப நல்ல taste. ஆனால் விலைகுறைப்பு எல்லாம் ஒரு வாரம்தான். இப்போ விலை கூடிவிட்டது.
பிட்டு, பொரித்தகுழம்பு, மாம்பழம்!!!
சாதாரணமா பிட்டும்,மாம்பழமுமே சாப்பிடலாம்.அன்று திடீர் வரவு மாம்பழம்.
*******************************************************
வாங்கி வந்திருந்த தக்காளி ஒன்று இப்படியாக!!!!!!
****************************************************
தக்காளிக்கு மூக்கு வளர்ந்தால் போல பார்க்க ஜோராக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteவருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றிகள் அண்ணா.
Deleteஎன்ன சொல்வது என்று...எனக்கு தெரியவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
ReplyDeleteகாய்ச்சலின் (பீவர்.குளிர் ஆரம்பித்திருக்கும் நிலையில் வைரஸ்பீவர் தாக்கம். அதற்கு நாங்களும் தப்பவில்லை.) போது நான் காரட் சூப் சாப்பிட்டேன். சூப்பரா இருந்தது அந்நேரம். மன்னிக்க உமையாள் போட்டோ எடுக்கல. //
காய்சலின் போது கேரட் சூப் சாப்பிட்டேன் சூப்பராக இருந்ததுன்னு நீங்க சொன்னதே போதும். உடல் நிலையை பார்த்துக் கொள்ளுங்கள்.
உமையாளின் குறிப்புகளும் செய்வதற்கு சுலபமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கு.//
இதுபோதும் எனக்கு இவ்வளவு நாட்கள் செய்தது மற்றவர்களுக்கு உபயோகப்படும் போது தான் உண்மையான மனதிருப்தி கிடைக்கும். அன்புடன் வெளிப்படுத்திய தங்களுக்கு நன்றி நன்றி.
நன்றி
வாழ்க வளர்க
உமையாள் காயத்ரி.
வாங்க உமையாள். நாங்க தான் நன்றி சொல்லனும். இப்படியான நல்ல குறிப்புகளை தருவதற்கு. தீபாவளி முதல்வாரம்தான் சுகயீனங்கள்.இப்போ நலம். எனக்கு நான் பார்க்கும் குறிப்புகளுக்கு என்னிடம் பொருட்கள் இருந்தால் உடன் செய்திடுவேன். உங்களது சிம்பிள்&ஈசி.
Deleteரெம்ப நன்றி உமையாள்.
ஹையோ..! அசத்தல் பதிவு அம்மு!.. பார்க்கவே கண்ணைப் பறிக்கிறது எல்லா உணவுகளுமே!..
ReplyDeleteபீற்றூட் எனது ஃபேவறிட்டுங்கூட..:)
அதில் என்ன செய்தாலும் ரொம்பவே பிடிக்கும்!
பார்த்துப் பார்த்து ரசித்துச் செய்திருக்கிறீங்க அம்மு!
படங்களே சாட்சி சொல்லுது..:) மிக அருமை! நல்ல கலைநய உணர்வும் சேர்ந்திருப்பதை பாசிப்பருப்புக் கோலத்தில் கண்டேன்..! சூப்பர்!
அதென்ன அம்மணின்னு என்னவோ சொல்லுறீங்க அம்மணீ..:)
புதிசா இருக்கு..!
நிச்சயம் இவர்களின் குறிப்பைப் பார்க்கணும். உமையாளின் பீட்றூட் சூப் என் கண்ணில் படவில்லையே..:(
பார்த்துவிடுவோம்!
நல்ல படங்களுடன் அசத்தல் பதிவும் பகிர்வும்! நன்றி அம்மு!
பதிவிட்ட உங்களுக்கும் சகோதரிகள் உமையாள்,
மேனகாவிற்கும் இனிய வாழ்த்துக்கள்!
வாங்க இளமதி.அது அம்மினிகொழுக்கட்டை.அந்த லிங்க் ல் இருக்கு பாருங்க. பீட்ரூட் சூப் சூப்பர்.நிச்சயம் செய்து பாருங்க. வீட்டில் நல்லா பிடித்துவிட்டது. அந்த மசாலாவை நாங்க மற்ற சூப்புக்கும் பாவிக்கலாம் போல. செலரி சூப்புக்கு சேர்த்தேன். நல்லா இருந்தது. பாசிப்பருப்பை சும்மா வைக்காமல் உமையாள் என்றதில் u வாக வைத்தேன். ரெம்ப நன்றி இளமதி வருகைக்கும்,கருத்துக்கும்.
Deleteதங்களின் பிட்டு காண்கையில் தான் ஊரில் இருந்து கொண்டுவந்த பிட்டு மாவு நினைவுக்கு வருகிறது. செய்ய வேண்டும். மாம்பழம், பிட்டு, பொரித்த குழம்பு பார்க்கையில் ஆசையாக இருக்கிறது சாப்பிட.
ReplyDeleteசமைத்துவிட்டபின் மாம்பழம் வாங்கி கொண்டு வந்துவிட்டார். டேஸ்ட் பார்ப்பதற்கு வெட்டியது. கத்தரிக்காயை பொரித்து வைத்த குழம்பு அது. நன்றி
Deleteசமையலை செய்து பார்த்து,படமும் எடுத்து பொட்டிருக்கீங்களே,இதைவிட சந்தோஷம் வேற என்ன வேணும்,மிக்க நன்றிப்பா..உமையாளின் குறிப்புகளையும் பார்க்கிறேன்..
ReplyDeleteஇப்போ உடல்நிலை சரியாகிவிட்டதா??
நீங்க நல்ல குறிப்புகளை தரும்போது நான் செய்து பார்க்காமல் இருந்துவிடமுடியுமா. உங்க குறிப்புகளில் இன்னமும் இருக்கு மேனகா. பொடிவகைகள் எல்லாமே ஈஸி.அவைகள் நான் அடிக்கடி பாவிப்பது. செய்து படம் எடுத்து இதில் பகிர்கிறேன். இப்போ உடல்நிலை சரியாகிவிட்டது. ரெம்ப நன்றிகள் மேனகா. வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றிகள்.
Deleteசமையல் அருமை.தக்காளி ஆச்சரியம்..!
ReplyDeleteவாங்க அக்கா. ரெம்ப சந்தோஷம் உங்க வரவு. எனக்கும் ஆச்சரியம்தான். அதுதான் உடனே படம் எடுத்தேன். உங்க வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றிகள்.
Deleteவாவ் எல்லாமே அருமை !! நான் ஏற்கனவே உமையாளின் காரட் சூப் செய்து( கிட்டத்தட்ட 7 )சாப்பிட்டோம் ..நல்ல ருசி பீட்ரூட் சூப் நாளைக்கு செய்யணும் .மேனகாவின் சீஸ் பராத்தா தான் என் பொண்ணு ஸ்கூலுக்கு தினமும் கொண்டு போறா :).பகிர்வுக்கு நன்றி ..அந்த தக்காளிக்கு மூக்கு முளைச்சிருக்கு :) அதனால் அது DUCK :) டக் :) காளி :)))
ReplyDeleteவாங்க அஞ்சு. எல்லாமே நல்ல ருசி.நல்ல குறிப்புகள் தருபவர்களை ஊக்குவிப்பதற்கும், நாம் செய்து நல்லா இருந்ததை இதில் பகிர்ந்தால் அவர்கள் மகிழ்ச்சி யடைவார்களே என்ற எண்ணம்தான்.
Deleteபராத்தா சூப்பர்தான் முதலில் பிழை விட்டிட்டேன். 2தரம் சரியாகிவந்தது.
ஆகாஆஆ!!!!!! நான் சொன்னேந்தானே நீங்க வரவர எழுதுவதில் ரெம்ப முன்னேறிவிட்டீங்க. பூஸார் பார்க்கேல்லை.நல்லகாலம். உண்மையில் அது நீங்க சொன்னமாதிரியேதான் DUCKகாளி. மகன் தலையில் தொப்பி வைத்து எடுக்கச்சொன்னார். நான் இப்படியே எடுத்துவிட்டேன். ரெம்ப நன்றிகள் அஞ்சு வருகைக்கும், கருத்துப்பகிர்விற்கும்.
வாவ்வ்வ்வ்வ் சமையலில் அசத்துறீங்க அம்முலு.... ஒரே பதிவில் பல குறிபுச் செய்து போட்டு அசத்திட்டீங்க...
ReplyDeleteதக்காழிப் பழம் பார்க்க சுட்டி விளக்கைப் போல இருக்கு.. நம் நாட்டில் பழுத்திருந்தால் சுட்டி விளக்கென பேப்பரிலும் படம் வந்திருக்கும்:).
வாங்க அதிரா. தோழிகளின் குறிப்புகள் செய்து பார்த்திருந்தேன்.செய்ததை படம் எடுத்து பகிர்ந்தால் அவர்களும் சந்தோஷமடைவார்களெல்லோ.அதுதான் இப்பதிவு. ""தக்காழி"" நேரே பார்த்தால் பிள்ளையாரின் துதிக்கைமாதிரி.சைட்ல வேறுமாதிரி. வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி அதிரா
Deleteஎல்லா குறிப்புகளும் ரொம்ப சூப்பராக இருக்கு. படத்துடன் போடட்டு பசிய கிளப்பிட்டீங்க
ReplyDeleteவாங்க ஜலீலாக்கா. நீங்க எல்லாம் தரும் குறிப்புகளுக்கு நன்றிதான்,உங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது. கருத்துக்களுக்கு ரெம்ப நன்றிகள்.
Deleteப்ரியசகி,
ReplyDeleteமுதலில் தக்காளி படம்தான் கண்ணில் பட்டது. உண்மையில் நீங்கதன் ஏதோ செய்வினை ஸாரி கைவினை செஞ்சு வச்சிருக்கீங்களோன்னு நெனச்சிட்டேன்.
வாங்க சித்ரா!! கைவினை சரி தக்காளியிலும் செய்வினையா,நான் இப்போதான் கேள்விப்படுகிறேன். அதுவும் ஒரு செய்வினை ஸாரி கைவினை மாதிரிதான் இருந்திச்சு.
Deleteஜுரம் இப்போ தேவலையா? இவ்வளவு சமையலையும் செஞ்சு ஒரே பதிவில் போட்டு அசத்திட்டீங்க. வேறு வழியில்லாம இங்குள்ள மாம்பழங்களை சுவைக்க ஆரம்பிச்சாச்சு.
ReplyDeleteகாலநிலை மாறும்போது இப்படி நடக்கும்.எல்லாரும் கையில் ரிஷு வுடந்தான் திரிவார்கள். தும்மல், இருமல், ஜுரம் என யாரைப்பார்த்தாலும். சரி வந்ததுக்கு மாம்பழத்தையாவது சுவையுங்கள்.
Deleteரெம்ப நன்றி சித்ரா உங்க வருகைக்கும்,கருத்துக்கும்.
இப்படி மத்தவங்ககிட்டேயிருந்து கற்றுக்கொண்டு நீங்கள் மட்டும் செய்து சாப்பிடுவது தர்மம் இல்லை. அதனால அந்த மாதிரி செய்யும்போது, எனக்கும் கொஞ்சம் பார்சல் அனுப்பினால் அது தர்மமாகிவிடும். கண்டிப்பாக அனுப்புங்கள் சகோ.
ReplyDeleteஅப்புறம் அந்த தக்காளி பார்க்க ரொம்ப அழகா இருக்கு.
வாங்க சகோ. பார்சல்தானே அனுப்பிவிட்டால் போச்சு.
Deleteஎனக்கும் தக்காளி பார்க்க அழகாதான் இருந்தது. அதனாலதான் நான் சமைக்கல. என்னவர்தான் சமையலிற்கு எடுத்தார்.ரெம்ப நன்றிகள் சகோ உங்க வருகைக்கும்,கருத்துக்கும்.
அனைத்து ரெசிபிக்களும் அருமை ..அருமை
ReplyDeleteபீட்ரூட்சூப் பார்க்கவே பிரமாதம் ... (முக்கியமா பாசிபருப்பை u வடிவத்தில் வைத்து அலங்கரித்தது பிரமாதம் போங்கோ )
தக்காளி மூக்குத்தி போட்டால் இன்னும் அழகாய் இருக்கும் ;) :p
வாங்க சங்கீதா. உண்மையிலே நல்ல டேஸ்ட் ம் கூட. அவங்க பெயர் முதல் எழுத்தை ஆக்கினேன். வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி சங்கீதா.
Deleteபார்த்த உடனே சமைக்க தோன்றுகிறது..........அருமை
ReplyDeleteவாங்க தோழி. நேரம்,சந்தர்ப்பம் கிடைத்தால் செய்து பாருங்க. வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றிகள்.
Deleteஆஹா ! மிக அருமை.ருசிக்க தோணுது.
ReplyDeleteவாங்க ஆசியா. ரெம்ப மகிழ்ச்சி. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றியும் கூடவே.
Deleteபிட்டும் மாம்பழமும்.. ஏங்க வைக்கிறீங்கள். வீட்டில விதம்விதமா வளர்த்துச் சாப்பிட்டுவிட்டு ஊரில கடையில் கிடைக்கிறதும் கூட ரசிக்க முடியேல்ல. ;(
ReplyDeleteஎல்லாம் சரிதான்.. இமாட குறிப்பு ஒன்றையும் காணேல்லயே
!
அவ்வ்வ்வ்.. வாங்க இமா.காண்பது அரிது. நீங்க சொல்வது 100வீத உண்மை. அதனால்தான் சுப்பர்மார்கெட்டில் வாங்குவதில்லை.
ReplyDeleteஆவ்வ்வ் இமாட குறிப்பா!!!!! // சத்தியமா நான் எடுக்கேல்லை.
இமாட குறிப்பை ஏன் நீங்க எடுக்கேல்ல என்றுதான் கேட்கிறா. ;)
ReplyDeleteஅந்த பீட்ரூட் சூப் சூப்பரா தெரியுது அம்முலு.
ஆ.ஆ இப்படி விளக்கமா எழுதவேணும். அவா சமையல் குறிப்பு எழுதினவாவோ?? தேடிபார்த்து செய்யிறன்.
Deleteபீட்ரூட் சூப் சூப்பர் டேஸ்ட்.அதுவும் இந்த குளிருக்கு ஸ்..ஸ்.ப்பா.
செய்துபாருங்கோ ஒருக்கா. நன்றி புனிதா வருகைக்கும், விளக்கத்துக்கும்.
சகோதரிக்கு வணக்கம்
ReplyDeleteநலமாக உள்ளீர்களா! கனவில் வந்த காந்தி எனும் தொடர் பதிவில் கேட்கப்படும் பத்து கேள்விகளுக்கு விடையளிக்க தங்களை இன்முகத்தோடு அழைக்கிறேன் வாருங்கள்
http://pandianpandi.blogspot.com/2014/11/gandhi-in-dream.html
நலம் சகோ.மிக்க நன்றி.
Deleteபுகைப்படங்கள், குறிப்புகள், பதிவு எல்லாமே அருமை!!
ReplyDeleteவாங்க மனோக்கா. வருகைக்கும், கருத்துக்கும்ரெம்ப நன்றி அக்கா.
Deleteநல்வணக்கம்!
ReplyDeleteதிருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
"வலை - வழி - கைகுலுக்கல் - 1"
இன்றைய வலைச் சரத்தின்
சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துகளுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
http://youtu.be/KBsMu1m2xaE
(எனது இன்றைய பதிவு
("கவி ஒளி" அருட்பெருஞ்சோதி வள்ளலார் / "தென்னகத்து தென்றல்" கண்டு இன்புற்று
படித்தது கருத்திட வேண்டுகிறேன் வேண்டுகிறேன். நன்றி!)
நன்றிகள்.!
Deleteதோழிகளின் குறிப்பை பார்த்து செய்து அசத்திய பதிவு மிக அருமை.
ReplyDeleteமிக்க நன்றி அக்கா.!
Delete