ஜேர்மனியில் ஹம் (HAMM) எனும் நகரத்தில் ஸ்ரீகாமாட்சி அம்பாள் ஆலயம் இருக்கின்றது. அங்கு வருடாந்த மகோற்சவம் நடைபெற்று கடந்த ஞாயிறு 06.07.14 அன்று தேர்திருவிழா நடைபெற்றது. அத்திருவிழாவின் புகைப்படத் தொகுப்பு. அனேகமான ஐரோப்பிய நாடுகளிலிருந்தும், அதிக மக்கள் வருகை தரும் கோவிலாகும்.இவ்வருடம் 04.05.2014ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கருவறையிலிருக்கும் காமாட்சி அம்மன்
கோபுரத்திற்கு வர்ணவேலைப்பாடு நடைபெறுகிறது.
_()_()_()_()_()_
கருவறையிலிருக்கும் காமாட்சி அம்மன்
கோபுரத்திற்கு வர்ணவேலைப்பாடு நடைபெறுகிறது.
சாமிக்கான படையல், தேங்காய். சிதறு தேங்காய் உடைப்பார்கள்.
_()_()_()_()_()_
Photoக்கள் அருமை நம்மூர் தேங்காய்க்கடை.
ReplyDeleteஎனது பதிவு தற்போது ‘’எனக்குள் ஒருவன்’’ படிக்க வேண்டுகிறேன்
தேங்காய்கள் சாமிக்கு உடைப்பதற்கு வைத்திருக்கிறார்கள்.
Deleteவருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.
நீங்கள் சொல்வதால் தான் இது ஜெர்மனி. நம் ஊர் போலவே இருக்கிறது. அம்மன் அழகு. தேர்...இவ்வளவு பெரிதாக இருக்கிறதே....!!! அருமையாக எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்து இருக்கிறீர்கள். திரு விழாவுக்கு கூட்டிச் சென்றதற்கு நன்றி.
ReplyDeleteஉண்மைதான்.அங்கு நிற்கும்போது எங்க ஊரில் இருக்கும் நினைவுதான். இம்முறை நல்ல வெயில்.நிறைய கூட்டம்.
Deleteகடைகள் எல்லாம் இருந்தன. நான் படங்கள் எடுக்க முடியவில்லை. அவ்வளவுக்கு வெப்பமாக இருந்தது. இங்கு தேர் புதிது. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிகள்.
அன்பு அம்மு!...
ReplyDeleteஅன்னை..ஹம் காமாட்சி! ஆனந்தக் கண்காட்சி!
வண்ணப் படமாய் வரம்!
நேரில் பார்க்கக் கிட்டாத பாவி எனக்கு
உங்களால், உங்கள் மூலமாய்
அருள் பாலித்திருக்கின்றாள் அன்னை!..
பேரருளை எண்ணிக் கண்கள் குளமாயின அம்மு!
அருமையான படங்கள்!
பகிர்விற்கு உளமார்ந்த நன்றியுடன்
இனிய வாழ்த்துக்களும் உங்களுக்கு!
வாங்க இளமதி. உங்களுக்கு மகிழ்ச்சி என்பதில் எனக்கு மிக சந்தோஷம். நிச்சயம் விடிவு பிறக்கும் கவலைவேண்டாம். வாழ்த்துக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி இளமதி.
Deleteபடங்கள் அனைத்தும் அருமை அம்மு. ஸ்விஸ்ஸில் எல்லாம் கோபுரம் கூட கட்டமுடியாது. ஜெர்மனியில் கோபுரம் தேருடன் அம்மன் ஜொலிக்கிறாள். அழகோ அழகு. மிக நன்றி அம்மா.
ReplyDeleteவாங்க அம்மா.மிகவும் மகிழ்ச்சி உங்க வரவு கண்டு. இங்கு இக்கோவில் தனிதான். மக்கள் அதிகமாக வரும் கோவில்.அம்பாளும் மிக அழகும்,அருளும் உடையவர். அன்று அம்பாளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்திருந்தார்கள்.கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. படம் எடுக்க அனுமதிக்கவில்லை.உங்க
Deleteவருகைக்கும், கருத்துக்களுக்கும் ரெம்ப நன்றி அம்மா.
அழகான படங்களுடன் அற்புதமான பதிவு. அன்னை காமாக்ஷி எங்கும் நிறைந்து இருப்பவள் என்று சொல்லுவார்கள். இப்போ ஜெர்மனியிலுமா ! மிக்க சந்தோஷம் அம்முலு, பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஹம்ம் நல்ல இடம் .... நமது இடம். ஹிந்தியில் ஹம் / ஹமாரா என்றால் நாம் நம்முடைய என பொருள் தருமே. சந்தோஷம். ;)
இங்கு நிறையகோவில்கள் இருக்கின்றன. நாகபூஷனி அம்மன்,சிவன் கோவில்,பிள்ளையார்,முருகன்,ஆஞ்சநேய
Deleteர் என்று இருகின்றன. கொஞ்சம் தூரம்தான் அதிகம்.இங்கு இம்மாதம் திருவிழாக்காலம். வருகை தந்து கருத்திட்டமைக்கு ரெம்ப நன்றிகள் அண்ணா.
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று அன்று சொன்னார்கள். இனிமேல், கோயில் இல்லா நாட்டில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நம் தமிழர்கள், தாங்கள் வாழுகின்ற அந்நிய நாட்டில் கோயில்களை கட்டி நம்முடைய சமயத்தை பரப்புகிறார்கள்.
ReplyDeleteஅந்த தேங்காய் பழக்கடை நம் ஊரை அப்படியே பிரதிபலிக்கிறது.
பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி சகோதரி.
உண்மைதான் சகோ. அனேக நாடுகளில் கோவில்கள் இருக்கின்றன. அது தேங்காய் கடை இல்லை. சாமிக்கு நேர்த்தி செய்து வைத்திருக்கிறார்கள். கல்லில் எறிந்து உடைப்பார்கள். அப்படி உடைப்பதை சிதறு தேங்காய் என்போம்.ரெம்ப நன்றி சகோ வருகைக்கும்,கருத்திற்கும்.
Deleteஅருமையான படங்களுடன் சிறப்பான கோவில் பற்றிய
ReplyDeleteஅழ்கான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.!
வாங்க அக்கா. உங்க பாராட்டுக்கும்,கருத்துக்கும்
Deleteரெம்ப நன்றிகள்.
நான்காவது படத்திற்கு... சிறு குறிப்பு தருக.
ReplyDeleteநுங்கு, கரும்பு, தென்னம்பூ, தோரணம்... அடடா!
அங்க வளருதோ இல்லாட்டில் எடுப்பிக்கிறவங்களோ பிரியா!
வாங்கோ வாங்கோ உங்களைதான் தேடிட்டு இருக்கேன்.கடன் பாக்கி ஞாபகமிருக்கோ!!!!!!!!!
Deleteஇவைகளை நாட்டிலிருந்து எடுப்பிக்கிறார்கள் இமா. இம்போர்ட்.
சிறுகுறிப்பு> அந்த குழந்தை சிலையிலிருந்து தருவிக்கப்படும் மாலை,அதை அம்மனின் கழுத்தில் போடுவார்கள். இக்காட்சிதான் நடைபெற்றது.
வருகை தந்து, கருத்து கேட்டமைக்கு மிக்க நன்றி இமா.
//கடன் பாக்கி ஞாபகமிருக்கோ!!!!!!!!!// அவ்வ்! ;))) அந்த லிங்க் தடித் தட்டிப் பார்க்கிறேன். சிதம்பர சக்கரத்தை என்னவோ பார்த்த மாதிரியே இருக்கிறது. ;) நீங்களே கடைசி வரை தட்டித் திறந்து பிறகு லிங்க் எடுத்து அனுப்புங்கோ.
Delete//குழந்தை சிலை// அவ்வ்! எனக்கு என்னவோ கொக்கு பறபற மாதிரி தெரிஞ்சு வைச்சுது. இப்ப பார்க்க குழந்தையாகத் தெரியுது. தாங்ஸ் ப்ரியா.
படங்கள் அனைத்தும் பிரமாதம்... நன்றி...
ReplyDeleteவருகை தந்து கருத்திட்டமைக்கு ரெம்ப நன்றிகள் அண்ணா.
Deleteஅழகான கோயில், தெளிவான புகைப்படங்கள்! பகிர்வுக்கு நன்றி அம்முலு!
ReplyDeleteஉங்க வருகக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி மகி.
Deleteஅப்பபோ இப்படி தோழி தயவால் ஜெர்மனி சுத்தி பார்த்துக்கிறேன் .
ReplyDeleteநன்றி தோழி!
வாங்க தோழி. கண்டிப்பா. நன்றாகப்பார்த்தீர்களா.
Deleteரெம்ப நன்றி தோழி.
படங்கள் அத்தனையும் அருமை !! அந்த மாம்பழம் மட்டும் கண்ணை விட்டு அகலவில்லை
ReplyDeleteவாங்க அஞ்சு. இப்பொழுது இங்கு மாம்பழம் கிடைக்கிறா சீஸன். இக்கோவில் திருவிழாவின் போதுதான் வரும். நாங்க 2பாக்ஸ் வாங்கினோம்.நீங்க கேள்விப்பட்டிரு ப்பீங்க தானே இக்கோவில் பற்றி. ரெம்ப நன்றி அஞ்சு வருகைக்கும்,கருத்துக்கும்.
Deleteநான் கேட்ட கேள்விக்கு பதில் இங்கே இருக்குபோல. இப்போதான் தெரியுது அது நறுக்கி வச்சிருக்கிற மாம்பழம்னு. ஹி ஹி
Deleteஇதுக்குத்தான் பின்னூட்டங்களையும் சேர்த்து படிக்கணும்ங்கிறது !
அழகான கோவில்! படங்களுடன் பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteவருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி சகோ.
Deleteபடத்தோட அங்கு சென்று வந்த அனுபவத்தை எழுதி வெளியிட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் அல்லவா?
ReplyDeleteவாங்க சகோ. அதுதான் நான் விட்ட தவறு. இதையேதான் வூட்டுக்காரரும் பதிவை பார்த்துவிட்டு சொல்லியிருந்தார் இனிமேல் முயற்சிக்கிறேன். உங்க கருத்துக்கு ரெம்ப நன்றிங்க.
Deleteஅந்த காலத்துல சாமியை அருகில் பார்க்கும் போது எல்லோரும் கையை தலைக்கு மேல் தூக்கி வணங்குவார்கள் ஆனால் இந்த காலத்தில் கேமராவை தூக்கி படம் பிடிக்கிறார்கள் (படம் 12 யை பார்க்க)
ReplyDeleteஉண்மைதான் சகோ. கையில் கமரா இல்லாவிட்டால்தான்
Deleteஆச்சரியம். நீங்க சொல்வது முற்றிலும் சரி.
உங்க வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றிகள்.
ஆஹா, உங்கள் ஊரில் நடக்கும் தேர்த் திருவிழாவை நேரில் பார்த்தது போலவே படங்கள் உள்ளன. மனதுக்கு சந்தோஷமாக உள்ளது. நன்றி.
ReplyDeleteமுறுக்கு, வடைக்குப் பக்கத்தில் இடது புறமாக மஞ்சள் நிறத்தில் ஏதோ ஒரு திண்பண்டம் உள்ளதே, அதை மட்டும் என்னன்னு, நேரம் கிடைக்கும்போது வந்து சொல்லுங்க ப்ரியசகி.
வாங்க சித்ரா. மாம்பழம்தான் இருக்கு.இன்னொன்று பால்ரொட்டி எனச்சொல்வார்கள்.இதைவிட வேறு இல்லை.
Deleteஹாலிடே ஊருலாத்த சென்றதனால் பதில் தாமதம் மன்னிக்க. வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றிகள்.
வலைச்சரத்தில் மைதிலி கஸ்தூரி ரெங்கன் தங்களைப் பற்றி விவாதிக்கிறார்.வாழ்த்துக்கள்.
ReplyDeletewww.ponnibuddha.blogspot.in
www.drbjambulingam.blogspot.in
தகவலுக்கு தாமதமான நன்றிகள்.
Deleteமன்னிக்க.
உங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளனர்!..
ReplyDeleteவாழ்த்துக்கள் அம்மு!
அடுத்த சுற்றுலாப் படங்களையும் விரைவில் இங்கு பதிவிடுங்கள். ஆவலுடன் உள்ளோம்!..:)
தாமதமான நன்றிகள் இளமதி மன்னிக்க.
Deleteமிக அழகான புகைப்படங்கள்! தேரின் அழகு பிரமிக்க வைக்கிறது!
ReplyDeleteவாங்க அக்கா. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிகள்.
Deleteதாமதத்திற்கு மன்னிக்க.
வரவுக்கும்,கருத்துக்கும் நன்றிகள். மன்னிக்க தாமதத்திற்கு.
ReplyDeleteஇறையன்பு நாளும் இதயத்தில் சேர்ந்தால்
ReplyDeleteநிறைவாகும் வாழ்வு நிலைத்து !
அருமையா இருக்கு படங்கள்
வாழ்த்துக்கள் அம்முலு
வாழ்கவளமுடன்
வாங்க சீராளன், வருகைக்கும்,வாழ்த்துக்கும் ரெம்ப நன்றி.
Deleteகாமாட்சி அம்மன், தேர், படையல் தேங்காய்களை பார்க்கும் போது நம்ம ஊர் மாதிரியே இருக்கு. நீங்கள் சொன்னால் தான் ஜெர்மனி. மிக அருமை பிரியசகி.
ReplyDelete