டிசம்பர் 6
December 6 நிக்கோலவுஸ் நாள். நிக்கோலவுஸ் துருக்கியில் இருந்தவர். பணக்காரர். பெற்றோர் இறந்தபின் தன் சொத்துக்களை ஏழை எளியவர், பெண்கள், முக்கியமாக சிறுவர்களுக்கு கொடுத்தவர். அவர் டிசம்பர் 6ந் திகதி இறந்தார். அத்தினத்தையே ஜேர்மனியில்- நிக்கோலவுஸ் டாக் (Nikolaus tag), ஆஸ்திரியாவில்- நிக்கோலோ(Nikolo), இங்கிலாந்து, அயர்லாந்தில்- பாதர் க்றிஸ்மஸ்(Father Christmas),வட அமெரிக்கா-சண்டா க்ளவுஸ்(Santa claus) என கொண்டாடுகிறார்கள்.
கூடுதலான இடங்களில் வீட்டு வாசலில் சின்னப்பிள்ளைகள் ஷுக்களை(Shoes) துடைத்து,துப்பரவாக வைத்திருப்பார்கள். 5ம் திகதி இரவு நிக்கோலவுஸ் வந்து பரிசுகளை வைப்பார் என்னும் நம்பிக்கையில்."நீங்க அன்பாக எல்லோரிடமும் இருக்கவேண்டும் அப்போதான் நிக்கோலவுஸ் வருவார்,பரிசுகள் தருவார் என", இது அவர்களுக்கு பெற்றோர் அன்பை வெளிப்படுத்துமுகமாக சிறுவயதிலிருந்து சொல்லிவருவதால் இச்செயலை செய்வார்கள்.
இங்கு கிறிஸ்மஸ் ஐ விட அதற்கு முதல்நாளான 24ந் திகதியே பெரிய கொண்டாட்டமாக இருக்கும். கிறிஸ்மஸ் மரம்(Chirstmas Tree) வீட்டில் வைத்து, அதற்கு அலங்காரங்கள் செய்து, பரிசுபொதிகள் அதனடியில் வைக்கப்பட்டிருக்கும். அனைவருக்கும் பரிசுகள் வழங்கும் தினமாக 24ந்திகதி இருக்கும்.
ஆவலுடன் எல்லாரும் எதிர்பார்த்திருக்கும் நாள். மாலையில் பரிசுகள் வழங்கி, இரவு விருந்து என களை கட்டும். அந்நாள் இங்கு Heiliger Abend (ஹைலிகர் ஆபெண்ட்) Christmas Eve எனப்படும்.
படங்கள்--நன்றி கூகுள்.
*******************************************************
இன்று எங்கள் மகனுக்கு நிகோலவுஸ் பரிசாக, வரும் புது வருடம் ஜனவரியில் பாடசாலையிலிருந்து Snowboarding க்குகாக ஆஸ்திரியா செல்லவிருக்கிறார். அதற்காக Ski dress set எடுத்து கொடுத்திருந்தோம்.

இது என் கமராவிலிருந்து.......